• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சக்கரையின் உதிரம் - 7

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
அன்று தினேஷ் விடுதியில் மித்ராவின் பேக்கரியை திறக்கும் தினம்.

தினேஷ் காலையிலேயே கிளம்பி டிப் டாப்பான உடையுடன் சென்று விட்டான். இந்த ஒரு ஓரிரு மாதங்களில் அடிக்கடி மித்ராவை சந்திப்பது வாடிக்கையாக தான் இருந்தது. முக்கியமாக ஆது குட்டியின் காரணமாக.

இதற்கு இடையில் அவள் அவளுக்கு அவ்வப்போது ருத்ரமிடம் அழைப்பு வருவதும் அதை ஏற்று அவள் சென்று பேசி வருவதும் அவன் பார்த்துக் கொண்டிருப்பது தான். ஆனால் எதுவும் செய்ய முடிவதில்லை. செய்யத் தோன்றவும் இல்லை. அவள் சந்தோஷம்தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தான் இருந்தானே.

காலை 10 மணிக்கு திறப்பதாக முடிவு செய்திருந்தனர். எட்டரை மணி அளவில் மித்ரா அவளது காரில் வந்து இறங்கினாள். காரை ஓட்டியபடி வந்து அவளை விடுதியின் வாசலில் இறக்கிவிட்டு சென்று உரிய இடத்தில் நிறுத்திவிட்டு ஓர் ஆடவன் இறங்கினான். பார்த்தவுடனே அது தான் ருத்ரன் என்று தெரிந்து விட்டது தினேஷிற்கு. புகைப்படங்கள் எதுவும் அவனது உடல் கட்டமைப்புக்கு நியாயம் செய்திருக்கவில்லை. ஆணழகன் ஆக இருந்தான். லண்டனின் சீதோசன நிலையின் காரணமாக மேலும் மெருகேறியும் இருந்தான்.

புன்னகை முகமாக மித்ராவுடன் நடந்து படி ஏறி வந்தான் ருத்ரன். "ஹாய் தினேஷ். உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி உங்களது இந்த புதிய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்."

"எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எங்களது புதிய முயற்சியா? உங்களதும் தானே ருத்ரன்" என்று முகமனாக சொன்னான் தினேஷ்.

"இருக்கலாம் ஆனால் என்னுடைய பங்கு இதில் வெறும் பெயரில் மட்டும்தான். உழைப்பு அனைத்தும் மித்ராவினுடையதுதான்." என்று ருத்ரன் மித்ராவை பார்த்த பார்வையில் தான் எத்தனை கனிவு. மிகவும் கொடுத்து வைத்தவள் தான். அவள் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் கணவன அமைவது கடினமே. எந்த ஒரு பெண்ணிற்கும் அது ஒரு பெருமையே. அந்த அளவில் தான் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். தான் இல்லாவிட்டாலும் மித்ராவின் கணவன் அவளை மிகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்வான் என்பது சந்தோஷம்தான் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு ஆக வேண்டிய வேலைகளை பார்க்க சென்றான் தினேஷ்.

திறப்பு விழாவின் நேரத்திற்கு சீதாவும் ஆதவனும் கூட அங்கே வந்திருந்தனர். ஆதவன் மித்ராவை பார்த்தவுடன் அவளிடம் தாவி சென்று விட்டான். இதைப் பார்த்து ருத்ரன் சிரித்தான் "நீ சரியான பேபி மேக்னட் மித்ரா. உன்னிடம் மயங்காத குழந்தைகளே இல்லை. இவர் தான் நீ சொன்ன குட்டி மாஸ்டரா?" என்று சொல்லிவிட்டு அவளை மலர்ச்சியாக பார்த்தான். மித்ராவின் கண்களில் ஒரு சிறு வலி வந்து சென்றது.

"ஹே மித்து ஏன் அப்படி? கேரலும் கிரனும் உன்னை சுற்றி வருவதைக் கொண்டுதான் அப்படி சொன்னேன். ஏன் இப்படி ஏதோ ஒரு எண்ணத்தை வைத்துக் கொண்டு கலங்குகிறாய்? நான் தப்பாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடு மித்து." இன்று ரகசிய குரலில் மன்னிப்பு வேண்டினான் ருத்ரன்.

கண் கொத்தி பாம்பாய் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த தினேஷின் பார்வையில் இந்த சம்பாஷனை விழுந்தது. அவனது கூர்க்காதுகளில் கேட்கவும் செய்தது. யார் இந்த கேரல்? யார் இந்த கிரண்? அவர்களுக்கும் இவர்கள் இருவருக்கும் என்ன சம்பந்தம்?

சரி யாரோ பக்கத்து வீட்டு பிள்ளைகளாக இருப்பார்கள். இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் மித்ராவின் முகத்தில் அந்த வலி? ஒருவேளை சமீபத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருக்குமோ? பாவம் மித்ரா. ஆண்டவன் ஒருவருக்கு எல்லாவற்றையும் கொடுத்து விடுவதில்லை. என்ன தான் சந்தோஷமான குடும்பத்தை கொடுத்தவன் பிள்ளை வரத்தை ஏன் தள்ளிப் போடுகிறான்? விரைவில் அதுவும் அவளுக்கு கிடைத்துவிடும்.

எல்லோருமே ஒவ்வொரு விதமான நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். முதல் வியாபாரமாக தினேஷ் பணம் செலுத்தி ஒரு கப் கேக்கை வாங்கி ஆதவனிடம் கொடுத்தான். அந்த ஓரிரு மாதங்களில் மித்ராவின் கைப்பக்குவத்திற்கு மிகவும் பழக்கப்பட்டு விட்டிருந்த குழந்தை அதை கபளீகரம் செய்தான். புன்னகை முகத்துடன் அதை பார்த்திருந்து விட்டு பெரியவர்களும் ஆளுக்கு ஒரு உணவை கையில் எடுத்துக் கொண்டு அங்கே அமர இருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். மித்ரா எல்லாவற்றையும் ஒரு முறை மேற்பார்வை பார்த்துவிட்டு இவர்களுடன் வந்து சேர்ந்த அமர்ந்தாள்.

அப்போதுதான் அங்கிருந்து மெனு கார்டு உற்றுப் பார்த்தான் தினேஷ். அதில் புதிதாக ஒரு விவரம் சேர்க்கப்பட்டு இருந்தது.

"இது என்ன மித்ரா மினி மீ அப்படி என்று போட்டிருக்கிறது?"

"அதுவா? அது ஒரு மினி மீல்ஸ்."

"மினி மீல்ஸ்???? நீங்க என்ன சாப்பாடா போட போகிறாய்?" என்று கேட்டார் சீதா ஒரு வித குழப்பத்துடன்.

"இல்லை ஆண்ட்டி. மினி மீ என்பது இங்கே நம் கடையை பொருத்தவரையில் ஒரு காரப்பலகாரம் ஒரு இனிப்பு பலகாரம் குடிக்க ஒரு பானம் அனைத்தும் சிறிய அளவில் குட்டி குட்டியாய் கொடுக்கப்படும். அனைத்தையும் ருசி பார்த்த அனுபவம் இருக்கும் வயிறும் குட்டிப் பசிக்களுக்கு அதில் நிரம்பியும் விடும். இது பலவகை உணவுகளை நம் உணவகத்தில் முயன்று பார்க்க மக்களை தூண்டும் என்ற எண்ணத்தில் சென்ற வாரம் தான் சேர்த்தேன். இந்த ஹாப்பி மீல் என்றெல்லாம் சொல்லுவார்களே அதுபோல." என்று விளக்கம் தந்தாள் மித்ரா.

" நல்ல உத்தி தான் மித்ரா. பார்ப்போம் இதற்கு எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்று" என்று சொன்னான் தினேஷ்.

முதல் நாள் காம்ப்ளிமென்ட்ரியாக அந்த விடுதியில் தங்கி இருந்த அனைத்து மக்களுக்கும் ஒரு சிறிய உணவு பெட்டி கொடுக்கப்பட்டது. அதை கவனித்துக் கொண்டிருந்த தினேஷ் திடீரென்று ஒரு யோசனை உடன் மித்ராவை பார்த்தான்.

"நம் விடுதியில் தங்க வருபவருக்கு வரவேற்கும் விதமாக முதல் நாள் அறையில் பழம் மற்றும் சாக்லேட்டுகள் வைப்போம் இப்போது அதற்கு பதிலாக உங்களது உணவகத்தில் பிரெஷ் ஆக தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒன்றை ஏன் இந்த மினி மீ போல ஒன்றை வைத்தோமானால் வித்தியாசமாகவும் இருக்கும் அதே சமயம் உங்கள் வியாபாரத்தை பெருக்கவும் உதவும்."

"எங்கள் வியாபாரம் மட்டுமா பெருகும் அதன் மூலமாக உங்களுக்கு நாங்கள் கொடுக்க வேண்டிய பங்கின் அளவும் தானே அது அதிகரிக்கும் தினேஷ்?" என்று பரிகாசமாக கேட்டான் ருத்ரன்.


"ஆமாம் ருத்ரன் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் நல்லது தானே?"

"இப்படியே ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்ன நான்கு மாங்காய் கூட அடிங்களேன். அனைவருக்கும் நல்லது என்றால் சந்தோஷம் தானே!! எல்லோருமே தொழிலில் வளர்ந்து ஒருவரை ஒருவர் வளர்த்துக் கொள்வோம் அவ்வளவு தானே."

ருத்ரனுடன் பழகுவது இலகுவாகத்தான் இருந்தது. அவன் மித்ராவுடன் பழகிய விதமும் கரிசனையுடன் பாசத்துடன் தான் இருந்தது. ஆனாலும் பார்க்க பார்க்க தினேஷிற்கு ஏதோ ஒன்று உறுத்தியது. அவர்கள் இருவருக்கும் இருந்த பழக்கம் ஒரு கணவன் மனைவிக்குள் அதிலும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னியோன்யத்தையோ பாசத்தையோ வெளிப்படுத்தியது போல தெரியவில்லை. நீண்ட நாட்களாக பழகும் தோழர்கள் போல தான் இருந்தது. அட இது என்னப்பா எப்போது பார்த்தாலும் சந்தேகம். பாதி நேரம் மனதில் இருப்பது ஆசை கொண்ட மனதின் எண்ணங்களா இல்லை இத்தனை நாள் தொழில் செய்த பழக்கத்தில் கூர்மையுடன் கவனிக்கும் திறன் அதில் தெரியும் குறியீடுகளா?

இல்லை இப்படியே ஈரேட்டில் இருக்க முடியாது. ருத்ரனை பற்றி மேலும் விசாரித்து தான் ஆக வேண்டும். அதை விசாரிக்க தான் விஜய் லண்டனில் இருந்தபோது அவனது நண்பர்கள் பலரை தினேஷிற்கு அறிமுகம் செய்து வைத்திருந்தானே. அவர்களில் ஒருவர் மூலம் ருத்ரனை பற்றி விசாரிக்கலாம். அவனும் பல்கலைக்கழகத்தில் தான் வேலை செய்கிறான் என்பதால் அது சுலபமாகவும் இருக்கும். அப்படி விசாரித்து பார்த்து விட்டால் ருத்ரன் எப்படிப்பட்டவன் அவனுக்கு மித்ராவிற்குமான உறவு எப்படிப்பட்டது என்று இன்னும் ஓரளவு விவரம் கிடைத்துவிடும். அந்த விவரங்கள் கைகளுக்கு வந்த பின்னர் தினேஷின் இந்த குழப்பத்திற்கு விடையும் கிடைத்துவிடும்.

அப்படி எண்ணி தான் விசாரணையில் இறங்கினான் தினேஷ். ஆனால் அப்படி தினேஷ் அறிந்து தெரிந்து கொண்ட விவரங்கள் அவனை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

என்னது இது ருத்திரன் இப்படிப்பட்டவனா? இப்படி ஒரு ஏமாற்றுக் காரனிடம் மித்ரா மாட்டிக் கொண்டிருக்கிறாள். இதில் எதையுமே அறியாமல் ருத்ரன் என்னவோ மிகவும் நல்லவன் என்று நம்பி அவனோடு சேர்ந்து வாழ்க்கையை பிணைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் அவளது தொழிலையும் முழுமையாக முடக்கி வைத்திருக்கிறாளே ?

இப்படி ஒரு ஏமாற்றுக்காரன் அவள் வாழ்வையும் கபளீகரம் செய்து விட்டு அவள் தொழிலையும் கபளீகரம் செய்து விடுவான் போல இருக்கிறதே. இதெயெல்லாம் கவனிக்காமல் மித்ராவின் பெற்றோர் என்ன தான் செய்து கொண்டு இருக்கிறார்கள்?

இதிலிருந்து மித்ராவை காப்பது எப்படி? ஒன்றுக்கு இரண்டு முறை அந்த விவரங்களை சரி பார்த்துக் கொண்டான் தினேஷ்.

எத்தனை முறை எத்தனை பேரிடம் விசாரித்தாலும் அதே தான் வந்தது. எப்படி ஏமாற்றி இருக்கிறான் இந்த ருத்திரன். பாவம் மித்ரா அவளை காப்பது தினேஷின் கடமையோ இல்லையோ அவன் மனதால் நினைத்த பெண்ணின் சந்தோஷம் அவனது பொறுப்பு. கண்டிப்பாக!! அவள் சந்தோஷமாக இல்லை என்றாலும் ஒரு ஏமாற்றுக் காரனிடம் மேலும் மேலும் ஏமாறக்கூடாது என்பதில் தினேஷ் உறுதியாக இருந்தான்.

கையில் கிடைத்த விவரங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு நேரே ருத்ரனை சந்திக்க சென்றான்.

அங்கே அவர்கள் பேச்சு கைகலப்பாக மாறி தினேஷ் ருத்ரனை அடி வெளுத்து வாங்கி விட்டான். அடி வாங்கிய ருத்ரன் நேராக மித்ராவிடம் சென்று அனைத்தையும் சொல்லிவிட்டான்.

மித்ராவிடம் எப்படி விளக்குவது? ருத்ரன் எந்த அளவுக்கு மயக்கி வைத்திருந்தால் தினேஷ் சொல்ல வரும் எந்த உண்மையில் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் இல்லை இதிலிருந்து இந்த மயக்கத்தில் இருந்து எப்படியாவது மித்ராவை அவன் காத்துதான் ஆக வேண்டும்.

இதன் முடிவில் மித்ரா அவனை வெறுத்து விட்டால் கூட பரவாயில்லை. அது இப்போது முக்கியமில்லை. மித்ரா. அவளது நிம்மதி அவளது சந்தோஷம்தான் முக்கியம். அதற்காக தினேஷ் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தான்.

மித்ரா அடிபட்டு வந்திருக்கும் ருத்திரனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ருத்ரன் தடுக்க தடுக்க தினேஷிற்கு அழைத்து வெளுத்து வாங்கி விட்டாள். தினேஷிற்கு ஒன்றுமே புரியவில்லை. இதில் தான் செய்த தவறுதான் என்ன. நல்லது செய்யப்போய் இப்படி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டான்.

அப்படி என்ன ஏமாற்றினான் ருத்ரன்? தினேஷ் எதற்காக இவ்வளவு தவிக்கிறான். இதெல்லாம் தெரிந்தால் மித்ரா என்ன செய்வாள்?இனி நடக்கப் போவது என்ன?
 
Last edited:
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ருத்ரன் மித்ரா உறவு சஸ்பென்ஸ்ஸா தான் இருக்கு 🧐🤔

பார்ப்போம் என்ன நடக்குதுன்னு 🤔
 

MK8

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
20
10
18
Tamil nadu
ருத்ரன் மித்ரா உறவு சஸ்பென்ஸ்ஸா தான் இருக்கு 🧐🤔

பார்ப்போம் என்ன நடக்குதுன்னு 🤔
Parthuteengala