அத்தியாயம்-4
“கேதரீன் அவரை விடு.”
சூர்யாவின் குரல் கட்டளையாக ஒலித்தது. அவன் குரல் கேட்டதும் திரும்பிய கேதரீன் அவனைப் பார்த்தாள்.
“என்னைப் பார்த்து..” அவள் மேலும் அவன் சட்டையை இறுக்க சூர்யா பின்னாலிருந்து அவள் இடையைப் பிடித்து குழந்தையைத் தூக்கிச் செல்வது போல் தூக்க அவள் கரங்கள் தானாக கடைக்காரனின் சட்டையை விடுவித்தது.
அவளை விடுவித்த சூர்யா கேதரீனை கூர்மையாக நோக்க, அவளுக்கு தான் செய்யவிருந்த செயலின் வீரியம் புரிந்தது.
கண்களில் தானாக கண்ணீர் வர, “ஐம் சாரி” என்றபடி வெளியே ஓட ஆரம்பித்தாள்.
“இதோ வந்தறேன்.”
கேதரீன் பின்னால் ஓடிய சூர்யா சில அடிகளில் அவளைப் பிடித்து விட, அவனை நோக்கித் திரும்பினாள். இப்போது அவள் விழிகளில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
“கேதரீன்..”
“நான் ஏன் சூர்யா இப்படி செஞ்சேன்? யார்கிட்டேயும் நான் கோபப்பட்டது இல்லை. ஆர்கியூ கூட செஞ்சது இல்லை. நான் ஏன் இப்படி நடந்துக்கிறேன்.”
“இட்ஸ் ஓகே கேதரீன்.” அவள் தோளைத் தட்டிக் கொடுத்தான்.
தேம்மிக் கொண்டே சூர்யாவின் மார்பில் தலையை வைத்துக் கொண்டாள்.
பெருமூச்சு விட்டபடி, அவள் தலையைத் தடவிக்
கொடுத்தான் சூர்யா.
“பரவால்லை கேதரீன். கோபப்படறது தப்பில்லை. அதை வெளிப்படுத்துன விதம் தான் தப்பு.”
“என்னோட பணம் எங்க தொலைச்சேனு கூட எனக்கு நினைவில்லை. இப்படி எல்லாம் நான் பிகேவ் செஞ்சது இல்லை. என்னோட அப்பா, அம்மாவைப் பத்தி யோசிக்காமல் ஓடி வந்துட்டேன். அவங்களுக்கு என்னாச்சுனு தெரியலை. ரொம்ப சுயநலமாக யோசிச்சுட்டேன்.
ஜோசப்புக்கும் எனக்கும் ஒத்து வராதுனு எனக்கு முன்னாடியே தோணிருக்கு. ஆனால் அப்பா, அம்மா, அங்கிள் எல்லாரும் ரொம்ப ஹேப்பியாக இருந்தாங்க. ஜோசப் என் கசினோட என்னை சீட் பண்ணதும் என்னால் தாங்க முடியலை. எல்லாத்தையும் மறந்துட்டு வெட்டிங்க் ஐயில்ல நடக்க முடியலை. ஒடி வந்துட்டேன். எனக்கு கோபம் வருது. இல்லைனா எதுவும் செய்யத் தோணலை. என்ன சாப்பிட்டேனு கூட நினைவில்லை.”
“உன்னோட வாழ்க்கையில் ஷாக்கிங்கான விஷயம் நடந்திருக்கு. இப்படி ரியாக்சன் எல்லாம் நார்மல். இட்ஸ் ஒகே.”
சில நிமிடங்கள் கழிய,
“தேங்க்ஸ்.,” விழிகளைத் துடைத்தப்படி அவனை விட்டு விலகி அவனை ஏறிட்டாள்.
“சரி இங்கேயே உட்காரு. வரேன்.”
மீண்டும் கடைக்குச் சென்ற சூர்யா கேதரீன் வாங்கிய பொருட்களுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவனுக்குத் தேவையான பொருளையும் வாங்கியபின், அவள் அங்கே தவறவிட்ட பர்சையும் எடுத்துக் கொண்டு அங்குள்ள பெஞ்சில் அமர்ந்திருந்த கேதரீனிடம் வந்தான்.
தூரத்தில் மலையை வெறித்தப்படி அமர்ந்திருந்தாள். அவள் முகம் அழுததில் சிவந்து, விழிகள் வீக்கத்துடன் இருந்தது.
அவளிடம் பைகளை நீட்டினான்.
“தேங்க்ஸ். மார்னிங்க் வந்ததில் இருந்தே உங்களுக்கு தொல்லை கொடுத்துட்டே இருக்கேன். சாரி.”
“பரவால்லை கேதரீன்.”
“இதுக்கு அமவுண்ட்?”
“போகும் போது கொடுத்துட்டுப் போங்க.”
“ஓகே.”
“கேதரீன் உன்னோட வாழ்க்கையில் பெரிய சேஞ்ச் நடந்திருக்கு. இதுக்கு முன்னாடி எடுக்காத, எந்தப் பொண்ணும் செய்ய ரொம்பவே யோசிக்கற முடிவை நீ எடுத்திருக்க. உனக்குத் தகுதி இல்லாத எதையும் நீ ஏத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னோட சந்தோஷத்தையும் பார்க்கனும். உன்னோட கசின் கூட சீட் பண்ண ஆள் கூட நீ வாழனும் அவசியம் இல்லை. இப்ப நீ அன்ஹேப்பியாக இருக்கலாம். ஆனால் பின்னாடி நிச்சயமாக சந்தோஷமாக இருப்ப.”
“தேங்க்ஸ். நான் இங்க வந்துட்டேன். இப்ப வரைக்கும் நான் எடுத்த முடிவு சரியானு தெரியலை. அப்பா, அம்மாவுக்கு எல்லாருக்கும் ஷேமா இருக்கும். அப்பா, அம்மா ரெண்டு பேரும் சென்ட்ரல் கவர்மெண்ட் எம்பிளாயிஸ். டிரான்ஸ்பர் அதுனு எங்கூட அதிகம் இருந்தது இல்லை. ஆனால் ரொம்ப பாசம். ஹாஸ்டலில் இருந்தாலும் எப்பவும் கால் பண்ணிட்டே இருப்பாங்க. கரக்டா ஹாலிடேவுக்கு வந்துருவாங்க. அவங்ககூட இல்லைங்கறதைத் தவிர எந்தக் குறையும் எனக்கு இருந்தது இல்லை. அவங்களோட பிரண்ட் பையன் தான் ஜோசப். நான் பிஜி முடிச்சதும் எங்கேஜ்மெண்ட் நடந்திருச்சு. ஜோசப் ஆன்சைட் போகறதால் நானும் இரண்டு வருஷம் வொர்க் பண்ணேன். சில மாசமாகத்தான் ஜோசப் எங்கிட்ட நடந்துக்கறது சரியில்லைனு தோணுச்சு. எல்லாம் சரியாகிடும்னு நினைச்சேன். நானும் மத்த பொண்ணுங்க மாதிரி ஒரு நார்மல் லைஃப் குடும்பத்தோட வாழனும்னு நினைச்சேன்.””
“உன்னோட அப்பா, அம்மாவுக்கு நிச்சயம் உன்னோட முடிவு புரியும். நீ ரொம்ப ஷெல்ட்ர்ட்னா வாழ்க்கை வாழ்ந்திருக்க கேதரீன். இதுதான் உன்னோட வாழ்க்கைனு சொன்னாங்க. நீயும் அதுபடி வாழ்ந்திருக்க. இந்த டென் டேஸ். உனக்கு என்ன வேணும்? எது உனக்குப் பிடிக்கும்? எது உனக்கு சரியாக இருக்கும்? எல்லாத்தையும் யோசி. சீட்டிங்க் ஹஸ்பண்ட் இருக்கறது நார்மல் வாழ்க்கை கிடையாது கேதரீன். நிச்சயம் உனக்கு ஏத்த ஒருத்தனை மீட் செய்வேனு என்னால் சொல்ல முடியாது. ஆனால் பாசிட்டிவாக திங்க் பண்ணு. ஒரு வாழ்க்கை கேதரீன். உனக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கோ.”
சூர்யாவை விழிகளை விரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ரீனா மாதிரியே பேசறீங்க. எனக்கு அவ இங்க இருக்கற மாதிரியே இருக்கு.”
“அது யாருமா?”
“என்னோட பெஸ்டி. சிஸ்டர் எல்லாமே அவதான். எனக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் சால்வ் பண்ணுவா. என்னை இங்க பஸ் ஏத்தி விட்டு அனுப்பி வச்சதும் ரீனாதான்.”
“ம்ம்ம்.. உன்னோட பிரச்சினையை நீயே சால்வ் செய்யனும் யோசிச்சு இருக்கியா கேதரீன்? ரீனா பிராபளம் எதாவது நீ சால்வ் செஞ்சுருக்கியா?”
அவன் கேட்ட கேள்வியில் விழித்தாள் கேதரீன்.
“இல்லை.. யோசிச்சது இல்லை.”
“நம்ம பிரச்சினையை முடிஞ்ச அளவுக்கு நாமதான் தீர்க்க டிரை பண்ணனும் கேதரீன். ரீனா எல்லா நேரமும் உன்னோட இருக்க முடியாது. இங்க புதுசா சில விஷயங்களை டிரை பண்ணு. உனக்கும் ஒரு பர்ஸ்ப்பெக்டிவ் கிடைக்கும். புரியுதா?”
“ம்ம்ம்.. ரீனா எப்போதும் எந்தப் பிரச்சினையும் வந்து சொன்னது இல்லை. நான் தான் சொல்லி இருக்கேன்.”
அவள் முகத்தில் மீண்டும் குற்ற உணர்வு வந்து போனது.
“ரீனாவுக்கு உன் மேல் ரொம்ப அன்பு. உன்னோட அப்பா, அம்மா மாதிரி உன்கூட இருந்திருக்காங்க. அவங்க உனக்காக யோசிக்கற மாதிரி நீயும் யோசிக்கனும்.”
“புரியுது. இனி யோசிக்கிறேன்.”
“குட் லிட்டில் ரோஸ்.”
அவளுடைய நட்பில் புதிய கோணம் ஒன்றைக் காட்டி விட்டு, தன்னை அறையில் விட்டு விட்டு சென்ற சூர்யாவின் முதுகை வெறித்தாள் கேதரீன்.
அவள் பார்ப்பது தெரிந்தது போல் அவளை நோக்கித் திரும்பியவன் உள்ளே போ என்று சைகை செய்ய கேதரீனும் கதவை மூடிவிட்டு உள்ளே சென்றாள்.
அவனிடம் தூக்க மாத்திரை கூட கேட்கவில்லை. அவள் படுத்து இரவு விளக்கைப் போட்டதும் அறையில் JPMR (Jacobson’s Progressive Muscle Relaxation) என்ற மனதையும், உடலையும் ஒன்றாக ஒய்வெடுக்க வைக்கும் தசைகளுக்கான பயிற்சி செயல் முறையை ஒரு பெண் மென்மையான குரலில் கூற அவள் முயற்சிக்க உறக்கம் தழுவியது.
அடுத்த நாள் காலை ஐந்தே கால் மணிக்கே, இண்டர்காம் அவளை எழுப்பி விட எழுந்து குளித்து மைண்ட்ஃபுல்நஸ் மற்றும் யோகா வகுப்பிற்குப் சென்றாள். நகரத்திலேயே வளர்ந்தவளுக்கு, மலைகளின் நடுவே அதிகாலை கண் விழிப்பது இதுவே முதல் முறை.
ஆழ்ந்த அமைதியை காற்றுடன் சேர்த்து சுவாசித்துக் கொண்டவளாக யோகா வகுப்பு நடக்கும் இடத்தை அடைந்தாள். ஒரு சிலர் மட்டும் வந்திருந்தனர். ஒரு மேட்டை எடுத்துப் போட்டு அவள் அமர, அவள் அருகில் இருக்கும் ஒருவன் புன்னகைக்க, கேதரீனும் சிரித்தான்.
“குட் மார்னிங்க் ”
“குட் மார்னிங்க்.”
அவர்கள் அருகில் ஒரு வயதான பெண்மணியும் அவளைப் பார்த்து புன்னகைக்க கேதரீனும் புன்னகைத்தாள்.
“விச் கன்ட்ரி?”
“தமிழ். பியூர் தமிழ்.”
“தமிழ்நாட்டில் எங்கமா?”
“சென்னை. நீங்க?”
“சொந்த ஊர் கும்பகோணம், இப்ப இருக்கறது பெங்களூர்மா.”
“உன் பேர் என்னம்மா?”
“கேதரீன்.”
“என் பேர் நீலா.”
அப்போது வெள்ளுடை அணிந்து யோக மாஸ்டர் வர அனைவரும் அங்கு அமைதியாகினர். கேதரீன் வந்தவனை ஆச்சரியத்துடன் பார்த்தான். நேற்று இரவு சந்தித்த வாசீம் யோகா உடையில் வந்து கொண்டிருந்தான். கேதரீன் அவனை, தன்னைப் போல் என நினைத்திருக்க அவன் இங்கு பணிபுரிபவன் என்று சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“ஹாய் நான் வாசீம். குட் மார்னிங்க். இப்போதைக்கு உங்க யோகா மாஸ்டர், மைண்ட்புல்னஸ் மெண்டர் எல்லாமே நான் தான். ஆரம்பிக்கலாமா?”
பேசி முடித்தவன் முதலில் மூச்சுப் பயிற்சியை ஆரம்பித்தான். கேதரீனும் அவன் கூறுவது போல் கவனத்தைக் குவிக்க முயன்றாள். அவள் மனம் தானாக நடந்தவற்றை யோசிக்க ஆரம்பித்தது.
கண்களை விழித்து அமர்ந்தாள். வாசீம் அவளைக் கவனித்து விட்டு, அருகில் வந்து விழிகளை மூடும்படி கண்களைச் சிமிட்ட, அவள் தலையசைத்து மறுக்க, அவன் எதுவும் கூறவில்லை.
அதற்குப் பிறகு சூர்ய நமஸ்காரம் ஆரம்பித்தது. நான்காவது ஆசனத்திலேயே சம நிலை தடுமாறியது கேதரீனுக்கு. இருந்தாலும் வயதானவர்கள் எல்லாம் அழகாகச் செய்து கொண்டிருக்க அவளும் முயற்சி செய்தாள். செய்யும் போது ஓரிடத்தில் விழுந்து விட்டு, தப்பு செய்து மாட்டிய குழந்தை போல் விழித்தாள்.
“என்ன கேதரீன் யோகா பழக்கம் இல்லையா?”
“இல்லை. வாக்கிங்க் மட்டும்தான் நான் போவேன். இதெல்லாம் பழக்கம் இல்லை. கஷ்டமாக இருக்கு.”
“ஈசிதான் பழகிக்கலாம்.”
ஒரு வழியாக மைண்ட்புல்நஸ் பயிற்சி ஆரம்பிக்க நிம்மதி பெருமூச்சு விட்டாள் கேதரீன். இதில் நம் உடலின் செயல்பாடுகளையும், சுற்றுச் சூழலையும் கவனிக்கும் விழிப்புணர்வு பயிற்சி. இப்படி செய்ய முயற்சிக்கும் போது என்ணங்கள் கட்டற்று பாயும். கேதரீனுக்கு சொல்லவே வேண்டாம். அது முடித்தவுடன் நேர்மறை வாசகங்களை மனதிற்குள் சொல்லும் பயிற்சி ஆரம்பித்தது.
ஆங்கிலத்தில் வீடியோவில் ஒரு பெண் அதைச் சொல்ல, மனதிற்குள் அதை உச்சரிக்க வேண்டும்.
ஒரு வழியாக ஏழரை மணிக்கு முடிய வெளியே வந்தாள் கேதரீன். அவளுடன் நீலாவும் இணைந்து கொள்ள, அந்தப் பையனும் இணைந்து கொண்டான்.
“ஹாய் அக்கா, என்னோட பேரு சாய் சிவனேஷ்.”
“சாய் சிவனேஷ். என்ன படிக்கற?”
“காலேஜ் செகண்ட் இயர்.”
“நீங்க அக்கா?”
“நான் டீச்சர்.”
“நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்டா?”
“ஸ்ட்ரிக்கா நானா?” கேதரீன் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
“எல்லா டீச்சரும் அப்படி இருக்க மாட்டாங்க தம்பி.” நீலா அவளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
“இல்லை இவங்களைப் பார்த்தால் டீச்சர் மாதிரியும் இல்லை, தமிழ் மாதிரியும் இல்லை. ஆனால் நல்லா தமிழ் பேசறாங்க.”
“நான் ஒரு பச்சை தமிழ் பொண்ணு. அல்பினிசத்தால் இப்படி வெள்ளைப்புறா மாதிரி பொறந்துட்டேன். டீச்சர் மாதிரி இல்லைனா எப்படி இருக்கு?”
“ஒரு மாடல் மாதிரி இருக்கீங்க.”
“மாடலா? நானா?” கேதரீன் சத்தமாக சிரித்தே விட்டாள்.
“அக்கா நான் படிக்கறது பேசன் டிசைனிங்க். நீங்க நல்லா மாடலிங்குனு சூட் ஆவிங்க.”
நீலாவும் மேலிருந்து கீழே அவளை அளந்தவர், “ஆமா கேதரீன் நிச்சயம் உனக்கு சூட் ஆகும்” என்றார்.
“சும்மா இருங்க ஆண்ட்டி.”
“அட நிஜமாச் சொல்றேன்.”
“இப்ப இந்த டிஸ்கசனை நிப்பாட்டிட்டு சாப்பிடலாமா? ரொம்ப பசிக்குது” சாய் கேட்கவும் இரு பெண்களும் தலையாட்டினர்.
“அப்புறம் இங்க இருக்கற பத்து நாளும் நாம பிரண்ட்ஸ்.”
கையை முன்னே நீட்ட சபதம் போடுவது போல் இரண்டு பெண்களும் பிரண்ட்ஸ் எனக் கூறி கையை நீட்டினர். மூவரும் ஒரே மாதிரி பொழுது போக்கைத் தேர்வு செய்திருந்ததில் மிகவும் மகிழ்ச்சி. மூவரும் பேசியபடி உண்டுவிட்டு அடுத்து ஆர்ட் கிளாசுக்குச் சென்றனர். ஆர்ட் வகுப்பில் சன்ஃபிளவர் இன்னின் சரித்திரத்தில் இல்லாத சம்பவத்தை செய்து வைத்திருந்தனர் மூன்று நண்பர்களும். சூர்யாவே வாயடைத்துப் போயிருந்தான்.
-மலரும்.
கருத்துகளை தெரிவித்தவர்களுக்கு நன்றிகள்