• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சன்பிஃளவர் இன்-5

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
அத்தியாயம்-5


ஆர்ட் வகுப்பில் ஆப்ரானைக் கட்டிக் கொண்டு பிரஷ்ஷும் கையுமாக அமர்ந்திருந்தாள் கேதரீன். அவள் முன்னே வெண்ணிறத் தாள் ஒன்று மரச் சட்டகத்தில் மாட்டிவிடப்பட்டிருக்க அதைப் பார்த்து வெறித்துக் கொண்டிருந்தாள்.
அருகில் அமர்ந்திருந்த நீலாவைப் பார்த்தாள்.

“ஆண்ட்டி..”

“கேத்தி நீ ஆண்ட்டினு கூப்பிட்டா ரொம்ப வயசான மாதிரி இருக்கு.”

“அப்ப நீல்ஸ்னு கூப்பிடட்டுமா? என்ன சாய் ஓகே வா?”

“எனக்கு ஓகே. உங்களை கூட கேத்தினு கூப்பிடட்டுமா?”

“டன். நானும் கால்மணி நேரமா இந்த போர்டை உத்து பார்த்துட்டே இருக்கேன். என்ன வரையுறதுனு தெரியலை நீல்ஸ்? ஸ்ட்க் ஆகிட்டேன்.”

“நீங்க என்னவோ பிகோசே ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கிற கேத்தி.”

“என்ன இப்படி கேட்டுட்ட? பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே நான் டிராயிங்க் காம்படிசனில் வின் பண்ணியிருக்கேன்.”
சாய் ஏதோ ஒரு பெண்ணை வரைந்து கொண்டிருந்தான்.

“அக்கா தோழானு ஒரு படம் இருக்கு. அதில் கார்த்தியண்ணா பெயிண்டிங்க் சிவப்பு பெயிண்டை தெளிச்சு விடுவாரு. அதே மாதிரி நீங்களும் பண்ணுங்க.”

“நான் வரைஞ்சுட்டு காட்டறேன். சரி நாம ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்படி டிராயிங்க் கிளாஸில் இருக்கோம். இதுக்கும் நம்ம மனக்கஷ்டத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“அது எனக்குத் தெரியுமே?” சாய் இடையிட்டான்.

“சொல்லு சாய் கேட்போம்.” நீல்ஸ் ஆர்வத்துடன் கேட்டார்.

“இந்த மனவியாதி முத்திப் போனவங்க பயங்கரமாக ஆர்டிஸ்டா இருப்பாங்களாம். அதைக் கண்டுபிடிக்கத்தான் இந்த கிளாஸ்.”

“டேய் உண்மையாவா?” கேதரீன் ஆவலுடன் கேட்டாள்.

“சைலன்ஸ் பிளீஸ்.”
ஆர்ட் டீச்சர் அருகே வந்து மூவரும் கூறிவிட்டு, “ஆர்ட் நம்ம மனசை வெளிக்காட்டும் ஒரு வழி. நம்ம கவனத்தை ஓரிடத்தில் குவிக்க உதவும். ரிலாக்ஸா இருக்கும். இங்க நீங்க என்ன வேணாலும் வரையலாம். மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணாமல் கொயட்டா செய்யுங்க.”

நீல்ஸ், கேத்தி, சாய் மூவரும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்து சிரித்துக் கொண்டனர். தவறு செய்து விட்டு மாட்டிய குழந்தையைப் போல் இருந்ததது அவர்களது செய்கை.

ஆர்ட் கிளாஸ் ஒரு மணி நேரத்தில் முடிவடைய சாய் அழகான ஒரு உடையணிந்த பெண்ணை வரைந்து முடித்திருந்தான். நீல்ஸ் மலை, சூரியன் வானம் என பெயிண்டால் ஏதோ வரைந்து வைத்திருந்தார்.

ஆர்ட் டீச்சர் வெளியே சென்றிருக்க மூவரும் மீண்டும் பேச ஆரம்பித்தனர்.
கேத்தி வரைந்த பின்னர் ஒரு துணியைப் போட்டு மூடி வைத்திருந்தாள். அப்படி என்ன அவள் வரைந்திருக்கிறாள் என ஆவலுடன் இருவரும் திறந்து பார்க்க, சிவப்பு, பச்சை, நீலம், ரோஸ் வண்ணத்தில் நான்கு மூலைகளிலும் கோடிட்டு, அதில் நடுவில் கருப்பு நிறத்தில் ஒரு புள்ளியை வைத்து விட்டிருந்தாள்.
சாய், நீல்ஸ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“நீல்ஸ் நாம எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் கூட பிரண்டாகிருக்கோம் பார்த்தியா? என்ன ஒரு ஆர்ட்!! எப்பேற்பட்ட ஆர்ட் இது!!”

“ஆமா சாய். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன். இப்பத்தான் கேத்தி ஒன்னாம் வகுப்புல மட்டும் ஏன் பிரைஸ் வாங்கி இருக்கானு புரிஞ்சுது.”
இருவரும் கலாய்க்க கேதரீனுக்கு முகம் மலர்ந்து விட்டது.

“நல்லாயிருக்கா? நான் ரொம்ப யோசிச்சு வரைஞ்சேன். எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா?”

“கேத்தி உன்னோட இந்த அரிய திறமை எல்லாம் வெளி உலகத்துக்குக் காட்டாமல் இருக்கறே நல்லது. இல்லைனா சுட்டுட்டுப் போயிருவாங்க.” சாய் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கூற கேதரீனும் தலையாட்டினாள்.

“எனக்குத் தெரியும்டா. அதான் நான் வரையறதே இல்லை.”

சாய் தன்னுடைய பிரஷ்ஷை எடுத்து கேத்தியின் முகத்தில் ஒரு கோடிழுத்து விட்டான்.

“கண்ணு பட்ற போகுது கேத்தி.”

“டேய் என்னோட மூஞ்சில பெயிண்டால கிறுக்கி விட்டுட்டியா?” அவளும் பிரஷ்ஷை எடுத்துப் அவன் முகத்தில் கிறுக்கிவிட்டான்.
உடனே நீலாவும் பிரஷ்ஷை எடுத்து இருவரின் முகத்திலும் கிறுக்கிவிட்டார்.

மூவரும் மாற்றி மாற்றி பூசியவர்கள் கடைசியில் பெயிண்ட் பாட்டில்களைக் கொட்டில் கலரை மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் கொட்ட ஆரம்பித்தனர்.

இவர்கள் சேட்டை அங்கிருந்த மற்றொரு ஆளின் மீது பட அவரும் பெயிண்டை எடுத்து அவர்கள் மீது கொட்ட, சங்கிலி போல் ஒருவரின் மீது ஒருவர் பெயிண்டைக் கொட்ட ஆரம்பித்தனர். சில நிமிடங்களில் அங்கிருந்த அனைவரும் ஹோலி போல் விளையாட ஆரம்பித்தனர்,
கேதரீனும், நீல்ஸ் மற்றும் சாய் மூவரும் சிரித்தப்படி ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டிருந்தனர்.

பல வகை வண்ணங்கள் தரையெல்லாம் கொட்டிக் கிடந்தது. கேதரீன் இரண்டு கைகளையும் வண்ணத்தில் முக்கிக் கொண்டு விரித்து சாயின் மீது பூச ஓடிக் கொண்டிருந்தவள், அந்த அறையின் கதவருகில் வந்து விட்டிருந்தாள்.
அப்போது சரியாக கதவுத் திறக்கப்பட கதவருகே ஓடிய சாய் நழுவி ஓட, அவனைப் பிடிக்க வேகமாகத் திரும்பிய கேதரீனுக்கு வழுக்க அவளுடையை கைகள் இரண்டும் ஆகாய நீல வண்ணத்தில் சட்டை அணிந்திருந்த சூர்யாவின் மீதும், ஆர்ட் டீச்சரின் சட்டையின் மீதும் படிந்திருந்திருந்தது.

இருவருக்கும் கைச்சின்னத்தைப் பதித்து விட்டிருக்க, வழுக்கிச் சென்றவளை ஒரு கை பிடித்து நிறுத்தி இருந்தான் சூர்யா. அவள் முகம் முழுக்கவும், உடை முழுக்கவும் வண்ணங்கள் கொட்டி இருந்தது புன்னகையில் இருந்த அவள் முகம், சூர்யாவைப் பார்த்ததும் அப்படியே உறைந்தது.


அந்த அறையைச் சுற்றிலும் சூர்யா பார்க்க, அந்த இடமே சிரிப்பும், வண்ணங்களும் கொட்டிக் கிடந்தது. ஆர்ட் டீச்சர் அதிர்ச்சியில் விழிகளை விரித்தப்படி நின்றிருந்தார்.

இதுவரை இவரது வகுப்பில் இப்படி ஒரு கோளாறு நடந்ததில்லை. அவர் உடையின் மீது லேசாக பெயிண்ட் கொட்டிவிட, அதைக் கழுவச் சென்றிருந்தார். சூர்யாவும் அப்போது சேர்ந்து வர, இக்காட்சியை அவனும் காண நேரிட்டது.

சாய் ஓடியவன் கேதரீன் தன் பின்னே வரவில்லையா எனத் திரும்பிப் பார்க்க, சூர்யாவின் வருகையை அவனும் பார்த்து அப்படியே நின்றுவிட்டான். ஓடி வந்த நீல்ஸூம், மற்றொருவரும் சாயின் மீது வண்ணத்தைப் பூச அவனிடம் எதிர்வினை இல்லாததால் இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
ஒவ்வொருவராகக் கவனிக்க அந்த அறையே அமைதியைத் தத்தெடுத்தது. அனைவரும் தவறு செய்து மாட்டிக் கொண்ட பள்ளி மாணவர்களைப் போல் விழித்தனர்.

“வாட்ஸ் ஹேப்பனிங்க் ஹியர்?”

ஆர்ட் டீச்சர் சற்று கோபமாகக் கேட்டார்.
கீழுதட்டைப் பற்களால் கடித்த கேதரீன், “நீங்கதான் எங்க வேணாலும் டிராயிங்க் பண்ணலாம் சொன்னீங்க மாஸ்டர். அதான் இந்த ரூமையும், எங்களையும் பெயிண்ட் பண்ணிட்டோம்.” என அசட்டு சிரிப்பு சிரித்தாளே பார்க்கலாம்.

அங்கிருந்த அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது. சூர்யா இன்னும் சிரிக்கவில்லை. கேதரீனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையில் விழிகளைத் திருப்பிய கேதரீன் சாயையும், நீல்ஸையும் தன் அருகே வரச் சொல்லி கண்களைக் காட்ட, அவர்கள் இருவரும் மறுத்து தலை அசைத்தனர்.

“எவ்ரிபடி அவுட்.”
சூர்யா இரண்டு வார்த்தைகளை மட்டும் கூறியவன், அங்கிருந்து வேகமாக நகர ஆரம்பித்தான்.

ஆர்ட் டீச்சரும், “போங்க எல்லாரும் வாஷ் பண்ணிட்டு கிளம்புங்க” என்று கூற பதினாறு பேரும் சிரித்தப்படியே வெளியேறினர்.

சாய் நீல்ஸ் மற்றும் கேத்தியின் நடுவில் நின்று இருவரின் தோள் மீதும் கைகளைப் போட்டுக் கொண்டான்.

“கேத்திக்கா நீ பெரிய ஆர்ட்டிஸ்டு நிரூபிச்சுட்ட. எப்படி இந்த ரூமையே பெயிண்ட் பண்ண வச்சுட்ட. ரொம்ப பெருமையாக இருக்கு. சூர்யா சாருக்கே சம்பவம் செஞ்ச பார்த்தியா அங்க நிக்கிற நீ! அவருதான் இங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஸ்டாப்ஸ் பேசி கேட்ருக்கேன். அப்புறம் நீ ஒரு பதில் கொடுத்த பாரேன். அதெல்லாம் சன்ஃபிளவர் இன்னிலேயே பெரிய சம்பவம்.”

“இதெல்லாம் என்ன பிரமாதம்? சரி இப்ப போய் வாஷ் பண்ணிடலாம்.”
சாய் ஆண்கள் பக்கம் கழிவறைக்கு செல்ல, பெண்கள் இருவரும் அவர்கள் பகுதிக்குச் சென்று வண்ணங்களைக் கழுவிக் கொண்டு மீண்டும் தங்கள் அறைக்குச் சென்று குளித்து தயாராகினர்.

சூர்யா அவனது அறையில் சட்டையைக் கழற்றிக் கொண்டிருந்தான். அவன் முகம் இறுகித்தான் போயிருந்தது. சட்டையைக் கழற்றியவன் அதில் ஒட்டியிருந்த சிவப்பு நிற கையின் அச்சை உற்றுப் பார்த்தவன், பின்பு வேறு ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான்.

சுத்தம் செய்பவர்களுக்கு அழைத்து அந்த அறையைச் சுத்தம் செய்யச் சொல்லி இருந்தான். அடுத்து நடக்க விருக்கும் வகுப்பை தள்ளிப் போட வேண்டியிருக்க, அவன் செட்யூலை மாற்ற வேண்டி இருந்தது. அன்றைய நாளில் மொத்த வகுப்புகளின் அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையை கேத்தி, சாய் மற்றும் நீல்ஸ் ஏற்படுத்தி இருந்தனர். பத்து நாட்கள் இங்கு இருப்பவர்கள் இருக்க, இருபத்தி ஒரு நாட்கள் இருப்பவர்களும் இருக்கின்றனர். இப்போது அவர்கள் வகுப்பிலும் மாற்றம் செய்ய வேண்டும்.


சூர்யா நெற்றியில் விரல்களால் நீவிக் கொண்டவன் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தான். அப்போது அவனைக் கதவைத் தட்டி விட்டு வாசீம் உள்ளே வந்தான்.

“சூர்யா கேதரீன் உனக்குப் பெரிய சம்பவமாக செஞ்சாங்களாம்.”

“டேய் அமைதியா போயிரு.”

“எப்படி உனக்கே ஒரு கும்பல் ஸ்கெட்ச்..இல்லை பெயிண்ட் போட்ருக்கும் போது.. எனக்கு அப்பவே தெரியும், கேதரீன் ரொம்ப ஸ்பெஷல், பார்த்தவுடனே எனக்கு கிரஷ் தெரியுமா?”
சூர்யா வாசீமைப் பார்த்து முறைத்தான்.

“வாசீம் இங்க இருக்க ரூல்சை மறந்துதிடாத.”

“பார்க்கலாம் யாரு ரூல்சை உடைக்கிறாங்கனு.”

“வேலை இல்லைனா கிளம்புடா. இம்சை பண்ணாத.”

“ரைட் விடு. ஆனால் கேதரீனை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த டென் டேஸ் முடிஞ்சதும் நான் நேராகப் போய் டேட்டிங்க் கேட்கப் போறேன்.”

நண்பனின் முகத்தில் எதாவது தென்படுகிறதா எனத் தேட சூர்யாவின் முகத்தில் எதுவும் தென்படவில்லை. முகத்தை இயல்பாக வைத்திருந்தான்.

“கிளம்புடா எனக்கு வொர்க் இருக்கு. டென் டேஸ்க்கு அப்புறம் நீ என்ன வேணா செஞ்சுக்கோ. அது உன்னோட பிராபளம்.”

நமுட்டுச் சிரிப்பு சிரித்த வாசீம் இடத்தைக் காலி செய்தான். போனவன் கதவைத் திறந்து மீண்டும், “ஹார்ஸ் ரைடிங்கில் அந்த மூணு பேரும் இருக்காங்களாம்” என்று தகவலைக் கூறியவனுக்கு சூர்யா முறைப்பை வழங்க தோள்களைக் குலுக்கியபடி அந்த இடத்தைக் காலி செய்தான்.

வகுப்புகளின் அட்டவணை மாற்றப்பட்டிருக்க, கேதரீன் சைலண்ட் ரூம் நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.
நீல்ஸ், சாய், கேத்தி வரவும் மூவரும் அதன் முன்னே நிற்க ஹைபை கொடுத்துக் கொண்டனர்.

“அதென்னடா சைலன்ட் ரூம் சாய்? உனக்கு எதாவது தெரியுமா?”

“தெரியாது கேத்தி. அவங்களே இன்ஸ்ட்ரக்சன் கொடுப்பாங்க. பார்த்துக்கலாம் வா.”
பணியாளர்கள் அவர்களை தனித்தனியாக ஒரு கேபினில் அமர வைத்து கதவை மூடினர்.

அறையில் இருக்க முடியவில்லை எனில் சிவப்பு பட்டனை அழுத்தச் சொல்லியும் கூறிச் சென்றனர்.


இயற்கைக் காட்சிகள் ஒட்டப்பட்ட அந்த சிறிய அறையில் ஒரு டைரி, ஸ்கெட்ச்சுடன் அமர்ந்திருந்தாள் கேதரீன்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆர்ட் ரூமையே ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் சேர்ந்து கலர்ஃபுல்லா மாத்திட்டாங்க 🤣🤣

கடைசியில முத்திரை வேற 🤣🤣🤣 ஆர்ட் டீச்சர் & சூர்யா சட்டையில 🤣🤣
 
  • Love
Reactions: MK4

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
ஆர்ட் ரூமையே ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் சேர்ந்து கலர்ஃபுல்லா மாத்திட்டாங்க 🤣🤣

கடைசியில முத்திரை வேற 🤣🤣🤣 ஆர்ட் டீச்சர் & சூர்யா சட்டையில 🤣🤣
எதாவது செய்யனும் இல்லை😍😍😍
 

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu