அத்தியாயம்-7
மூக்கில் ஐஸ் கட்டியை வைத்தப்படி அமர்ந்திருந்தான் வாசீம்.
“சாரி. வெரி சாரி.”
கேதரீன் அவன் அருகில் முகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்தாள். அருகில் சாயும், நீல்ஸூம் கூட கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாக்சிங்க் தேர்வு செய்தவர்கள் ஏழு பேர் இருக்க, வாசீம் அவர்களை ஜோடி ஜோடியாக எதிர் எதிராக நிற்க வைத்திருந்தான்.
கேதரீனை வேண்டுமென்றே தனக்கு எதிரே பயிற்சியை டெமோ செய்து காட்ட நிற்க வைத்திருக்க, கிளவுஸ் அணிந்து கொண்டு கேதரீனும் நின்றாள்.
முதலில் கையில் குத்தும் பயிற்சி. அதற்குத் தகுந்தப்படி காலை சரியாக வைத்து அனைவரையும் நிற்கும்படி செய்தவன் எப்படி குத்த வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்தான். கேதரீனும் காற்றில் அங்கும் இங்கும் குத்திக் கொண்டிருந்தாளே தவிர சரியாகச் செய்யவில்லை. அவளுக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்க முயல, ஒரு குத்து தவறாக வாசீமின் முக்கில் விழ, அவன் மூக்கில் இருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்து, அதோடு மூக்கும் சிவந்து வீங்கியது.
கேதரீனே இதை எதிர்பார்க்கவில்லை.
“என்னோட பஞ்சுக்கு இவ்ளோ பவரா? எனக்கெல்லாம் சப்பாத்தி மாவையே ஒழுங்க குத்த வராது. எப்படறா?” என சத்தமாகப் பேசியபடியே வாசீமின் அருகில் வந்தவள். அவனுக்கு முதலுதவி செய்ய ஆரம்பித்தாள். பள்ளியில் குழந்தைகளுக்குச் செய்து பழக்கம்.
அங்கிருந்த அனைவரும் கவலையுடன் நோக்க, இன்னொரு பணியாளர் அவர்களை பஞ்சிங்க் பேக்கின் மீது குத்த அழைத்துச் சென்றார்.
மூவர் படையும் செல்லவில்லை. அத்தோடு நீல்ஸ் வெளியில் சென்று ஐஸ்பேக்கையும் எடுத்துக் கொண்டு வந்தார்.
அதை முகத்தில் வைத்தப்படி அமர்ந்திருந்தான் வாசீம். அவன் பார்வை, ‘என்ன சிம்ரன் இதெல்லாம்?’ என்பதற்குப் பதிலாக,
“என்ன கேட்டி இதெல்லாம்?” என்பது போல் இருந்தது.
மற்ற இருவரையும் பயிற்சிக்குச் செல்ல கூறவும், நீல்ஸூம், சாயும் எதிரில் இருந்த இருவரையும் பார்த்தபடி சென்றனர்.
“சாரி வாசீம். ரியலி சாரி.”
“பரவால்லை கேதரீன். இந்த சாரியை நான் ஏத்துக்கனும்னா நான் ஒன்னு கேட்கட்டுமா? நீ ஓகே சொல்லனும்.”
“அப்படி என்ன கேட்கப் போறீங்க? நான் முடிஞ்சால் செய்யறேன்.”
“இந்த பத்து நாள் முடிஞ்சதும் நீ என்னை டேட் பண்ணுவியா? ஐ ரியலி லைக் யூ. பார்த்தவுடனே விழுந்துட்டேன்.”
“வாட்?”
'அடேய் நீ பார்க்கும் போது எனக்குத்தான் மீசையில் மண்ணு ஒட்டியிருக்கும். மண்டை உடைஞ்சுருக்கும். ஏதோ உன் புண்ணியத்தில் தப்பிச்சா! இப்படி கேட்கறியே நீ?’ என எண்ணியவள் அவனை முறைத்தாள்.
“இதுக்கு பதிலாக நீங்க வேணா என்னோட மூக்கை பஞ்ச் பண்ணிக்கோங்க. சரியாகப் போயிடும்.”
“இல்லை கேதரீன் எனக்கு நிஜமாகவே உன்னைப் பிடிச்சுருக்கு.”
அப்போது சரியாக உள்ளே வந்தான் சூர்யா. நண்பனின் நிலை பற்றி அவனுக்கும் தெரிந்துதான் இருந்தது. சூர்யாவை சில நொடிகள் பார்த்த கேதரீன் தன் பார்வையை வாசீம் பக்கம் திருப்பினாள்.
“வேற ஒரு இடம். வேற ஒரு சூழ்நிலைனா நீங்க கேட்டதுக்கு நான் ஓகே சொல்லி இருக்க வாய்ப்பிருக்கு. யோசிச்சு இங்க இருந்து போகும் சொல்றேன் வாசீம். ஆனால் ஓகே சொல்ல வாய்ப்பு ரொம்ப குறைவு.”
அவள் யோசித்துச் சொல்கிறேன் என்றதும் வாசீமின் முகம் மலர்ந்தது. மாறாக சூர்யாவின் முகம் சுருங்கியது.
“வாசீம் நான் என்ன சொன்னேன்? ரூல்ஸ் பாஃலோ செய்யனும். உனக்கும்தான் கேதரீன்.”
“நான் எந்த ரூலையும் பிரேக் பண்ணல இவரோட மூக்கைத் தவிர. அதுமட்டுமில்லாமல் நான் டென் டேஸ் கழிச்சுதான் சொல்றேனு சொல்லி இருக்கேன்.”
கேதரீன் குரல் மென்மையாக ஆனால் உறுதியுடன் ஒலித்தது.
“வாசீம் நீங்க புஃட்பால் பிளேயரா?”
“நான் பார்மர் இண்டர்நேஷனல் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட்.”
“ஓ..” இப்படி ஒருவனையா தான் தாக்கிவிட்டோம் என்ற அதிர்ச்சியானாள் கேதரீன்.
“ஷாக்காக வேண்டாம். உன்னை மாதிரி ஒரு பொண்ணு இருக்கும் போது கான்சட்ரேட் செய்யறது கஷ்டம்.” வாசீம் இயல்பாகவே கூறினான்.
“வாசீம் நோ பிளர்ட்டிங்க்.” சூர்யா கைகளைக் கட்டிக் கொண்டு தன் நண்பனுக்கு எச்சரிக்கைக் கொடுத்தான்.
“சூர்யா அவர் மனசில் நினைக்கறத சொல்றாரு. இதில் பிளர்ட் பண்ணறதுக்கு எதுவும் இல்லை. வாசீம் டேக் கேர்.” என்ற கேதரீன் எழுந்து பயிற்சிக்குச் சென்றாள்.
செல்லுபவளைப் பார்த்த நண்பர்கள் இருவரும் பின் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
“என்ன சூர்யா ஜெலசா?”
“எதை வச்சு அப்படி சொல்ற வாசீம்? என்ன ரீசன்?”
“உன்னோட குதிரை அலெக்சியை இதுவரைக்கும் யாரைவது தொட விட்டுருக்கியா? இல்லை அது மேலதான் யாரவது ஏறி இருக்காங்களா? பெஸ்ட் பிரண்ட் எனக்கே நீ கொடுத்தது கிடையாது. ஆனால் கேதரீன்? உன்னோட ரோசியை வேற கட்டிப் போட்டுருக்க. அதை வச்சுதான்.”
“ரோசியால் கீழ விழுந்துட்டாங்க. அதனால் மலை ஏறக் கஷ்டம்னு கூட்டிட்டு வந்தேன். ரோசி ஓடி வந்துருச்சு. கட்டிப் போட்டிருக்கேன். அவ்வளவுதான்.”
"இப்படியே சொல்லிட்டு நீ இரு. கேதரீன் அப்புறம் எனக்குத்தான்.”
“ரூல்ஸ் நியாபகத்தில் இருக்கட்டும்,” என்று கூறிய சூர்யா வெளியே சென்றுவிட்டான்.
பாக்ஸிங்க் வகுப்பு முடிந்ததும் குதிரை ஏற்றப் பயிற்சி தொடங்கியது. அங்கு குதிரை ஜாக்கி உடையில் நின்று கொண்டிருந்தான் சூர்யா. அவன் அருகே பின்னங்கால்களை மடக்கி அமர்ந்திருந்தது ரோசி.
மூவர் படை குதிரை ரேஸ் பீல்டிற்கு வந்து சேர்ந்தனர். பசுமையான இடத்தில் ஆங்காங்கே குதிரை தாண்ட தடுப்புகள் இருந்தன.
“கேத்தி, நீல்ஸ் குதிரை ஏறது எல்லாம் ஓகே. ஆனால் குப்புற விழுந்தால் என்ன செய்யறது?” சாய் கவலையுடன் கேட்டான்.
“மீசையில் ஒட்டுன மண்ணைத் துடைச்சுட்டு கிளம்ப வேண்டியதுதான்.” கேத்தி கலாய்க்க நீல்ஸ் ஹை பைவ் கொடுத்து சிரித்தார்.
“கேத்தி வாசீம் மூக்கை உடைச்ச மாதிரி சூர்யா சாரை குதிரையில் இருந்து தள்ளி விடாம இரு நீ.”
நண்பர்கள் பேசியபடி குதிரையின் அருகே நின்றனர். கேதரீன் சூர்யாவைக் கவனித்தாள்.
அவன் முகம் லேசாக இறுகிப் போயிருந்தது.
அருகில் இருந்த ரோசியைப் பார்த்ததும் அவள் முகம் வெளிறியது.
சூர்யாவின் அருகில் இன்னொரு ஜாக்கியும் நின்றிருந்தான்.
மூவர் படையோடு மொத்தம் சேர்த்து ஐந்து பேர் பயிற்சிக்கு இருக்க, கேதரீனுக்கு பயிற்சி கொடுக்க இன்னொரு ஜாக்கி அழைத்துச் சென்றார். சூர்யாவைப் பார்த்தப்படி கேதரீன் குதிரையின் மீது பயந்தப்படி ஏறி அமர்ந்தாள். ஜாக்கி சொன்னப்படி செய்தாலும் குதிரை சற்று வேகம் எடுத்து ஓட ஆரம்பித்தது.
ஆனால் கேதரீனின் பயம் அவளை ஆட்கொள்ள, ஓடும் குதிரையில் இருந்து இறங்க முயல விளைவு கீழே விழுந்து மூர்ச்சை அடைந்தாள்.
அவளுக்குப் பயிற்சி கொடுக்கும் ஜாக்கி அவளைப் பரிசோதிக்க ஆரம்பிக்கும் முன்னே, சூர்யா அவளை நோக்கி ஓடி வந்திருந்தான்.
கேதரீனை கன்னத்தில் அடித்து தட்டி எழுப்பியும், அவள் எழவில்லை.
அவளைப் பரிசோதித்தால் எதுவும் பெரிதாக இருப்பது போல் தோன்றவில்லை.
இருந்தாலும் உடனே அவளைத் தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தான் சூர்யா.
அவன் பின்னாலேயே சாயும், நீல்ஸூம் பதட்டத்துடன் ஓடினர்.
கேதரீன் மெல்ல கண் விழித்தவள் அந்த அறையைச் சுற்றி விழிகளைச் சுழற்றினாள்.
தான் இருந்த அறையைப் போல் ஒரு வேறு இடம் எனப் புரிந்தது. அவள் எதிரே கைகளைக் கட்டியபடி சாய் சுவற்றில் சாய்ந்து நின்றிருக்க, நீல்ஸ் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.
சூர்யா ஜன்னலில் வெளியே வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
மெல்ல எழுந்து அமர்ந்தாள் கேதரீன். அவள் அசைவை முதலில் கவனித்தது சாய் சிவனேஷ்,
“கேத்தி” ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“நான் ரொம்ப பயந்து போயிட்டேன். ரெண்டு மணி நேரம் நீ கண் விழிக்கலை.”
“எனக்கு ஒன்னும் இல்லை சாய்.”
நீல்ஸூம் உடனே எழுந்து வந்து கட்டிக் கொண்டார். சூர்யா கைகளைக் கட்டியபடி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஜஸ்ட் மிஸ். குதிரையில் இருந்து விழுந்தும் உனக்கு எந்த அடியும் இல்லை. நீ நல்லாயிருக்கேனு சொன்னதும்தான் நிம்மதியாக இருந்துச்சு.”
தன் நண்பர்களை புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள்.
“எனக்கு ஒன்னும் இல்லை. இந்த அனிமல்ஸ்னா எனக்கு கொஞ்சம் அலர்ஜி. பயந்துட்டேன்.”
“நீங்க ஹோர்ஸ் ரைடிங்க் பதிலாக வேற சூஸ் பண்ணிக்கலாம்.” சூர்யாவின் குரல் அமைதியாக ஒலித்தது.
“நோ.. நோ..” உடனே எழுந்து நின்றாள் கேதரீன்.
“குதிரையில் இருந்து விழுந்தால் கழுத்து கூட உடைஞ்சுருக்கலாம். நீங்க ஓடற குதிரையில் இருந்து இறங்க டிரை பண்ணி இருக்கீங்க. ரிஸ்க்.”
“பிளீஸ்.” என்றவள் சூர்யாவின் முன்னங்கையைப் பிடித்தாள்.
“இனி பயப்பட மாட்டேன். நீங்களே வாங்க. நான் ஹோர்ஸ் ரைடிங்க் செய்யனும். பிளீஸ் சூர்யா.”
“நோ கேதரீன்.”
“சூர்யா நீங்கதான் இதுக்கு முன்னாடி டிரை பண்ணாத எல்லாம் டிரை செய்யனும்னு சொன்னது. முதல் அட்டம்பிட்டில் தோத்துட்டா உடனே அதை விடக் கூடாது. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்கனும். நீங்களே வாங்க. இப்பவே போலாம்.”
தன் சொல்லைக் கொண்டே தன்னை மடக்கியவளை எதிர்க்க முடியாமல் நின்றாள் சூர்யா. அவன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்தாள் கேதரீன்.
“சூர்யா கேத்திக்கு ஒரு சான்ஸ் குடுங்க.” நீல்ஸூம் கேட்டார்.
“ஒரு சான்ஸ் மட்டும்தான்.” வாய்ப்பு சூர்யா கொடுக்கவும், மீண்டும் குதிரை பயிற்சிக்கு சென்றனர் நால்வரும். இப்போது இருட்டி இருந்தது.
ஒரு வெண்ணிறக் குதிரையின் மீது சூர்யா உதவ ஏறி அமர்ந்தாள் கேதரீன்.
முதலில் மெதுவாக குதிரையை நடத்திக் கொண்டே சூர்யா சொல்லிக் கொடுத்தான். அதன் பிறகு மெல்ல குதிரை வேகம் எடுக்க கேதரீன் முகத்தில் பயம் தெரிந்தாலும் அவன் கூறியபடி சரியாகச் செய்தாள்.
குதிரை நின்றதும் இறங்கி மகிழ்ச்சியில் சூர்யாவை அணைத்து விட்டு, தன் நண்பர்களையும் அணைத்து குதித்தாள். நீல்ஸூக்கும், சாயுக்கும் மகிழ்ச்சியே.
“கேத்தி எனக்குப் பதிலாக குப்புற விழுந்துட்ட நீ.”
“விடறா விடறா சூனா பானா.”
நண்பர்கள் மூவரும் நடக்க ஆரம்பித்து இருந்தனர். அவர்களைப் பின் தொடர்ந்தான் சூர்யா.
“இப்ப நான் பிராக்டிஸ் செய்யலாம் ஓகேவா சூர்யா?”
“குட் டூ கோ.”
கேதரீன் சூர்யாவைப் பார்த்து புன்னகைத்தாள்.
“சூர்யா இன்னிக்கு எங்களோட சாப்பிடுங்க?” நீல்ஸ் அழைத்தார்.
“இல்லை பரவால்லை.”
“அண்ணா எங்களோட சாப்பிடுங்க.”
சாயும் அழைத்தான்.
“ஓகே.”
சூர்யா சம்மதம் கொடுக்கவும் நால்வரும் இப்போது ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர். டைனிங்க் ஹாலை அடையும் போது அதன் முன்னே நின்ற மூவரைப் பார்த்ததும் கேதரீன் அதிர்ந்தாள்.