“நீ அவளைக் கல்யாணம் பண்ணித் தான்டா ஆகனும்!”என்று அவனிடம் உறுதியாக உரைத்தார் சற்குணம்.
“ம்மா! நாஞ்சொல்றது உங்களுக்குப் புரியலையா? அவளை என்னால் பொண்டாட்டியா ஏத்துக்க முடியாது!”என்று முரண்டு பிடித்தான் ராஜன்.
“இங்கே பாருடா! நான் சொல்றதை முதல்ல முழுசாக கேளு. அப்பறம் உன் முடிவைச் சொல்லு. எங்க அண்ணனோட சொத்து முழுசும் நம்ம கைக்கு வரனும்னா நீ அவளைக் கல்யாணம் செஞ்சிக்கத் தான் வேணும்! புரியுதா?”என்று அவனைத் தன்னுடைய வழிக்குக் கொண்டு வர முயற்சிக்க,
“சொத்து வர்றது சரி தான்ம்மா. அதுக்காக அவளைப் போய்க் கட்டிக்க முடியுமா?”என்று இரைந்தவனிடம்,
“கட்டிக்கிட்டுத் தான் ஆகனும்டா. எங்கண்ணே அவன் சொத்தை சும்மா தூக்கிக் கொடுத்துடுவானா என்ன? அவம் பொண்ணை நம்ம வீட்டு மருமகளாக ஆக்கிக்கிட்டா தான் அதெல்லாம் நம்ம கைக்கு வரும். அதுக்காக நீ காலம் முச்சூடும் அவளைக் கட்டிக்கிட்டு அழுகத் தேவையில்லை. அதுக்கு எங்கிட்ட ஒரு வழி இருக்கு. அதைக் கேட்டுட்டு மேலே பேசு”என்று வலியுறுத்தி விட்டு,
“இப்போ அவளைக் கல்யாணம் பண்ணிட்டுக் கொஞ்ச நாள் குடும்பம் நடத்து. அதுக்குள்ளே சீர்வரிசைன்னு சொல்லி எங்கண்ணனோட பாதிச் சொத்தை எழுதி வாங்கிப்போம்! அப்பறம் போகப், போக அவளைக் கொடுமைப்படுத்தி மீதிச் சொத்தையும் வாங்கிக்கலாம். அவனோட எல்லா சொத்தும் நம்ம கைக்கு வந்ததுக்கு அப்பறம் ஜாதகத்தில் தோஷம்ன்னு ஏதாவது காரணத்தைச் சொல்லி அவளை வெட்டி விட்ரலாம்! சரி தானா?”என்று விவரித்து முடித்து அவனது பதிலிற்காக காத்திருந்தாள் சற்குணம்.
“அப்போ அவளோட சொத்து முழுசும் நம்ம கிட்டே வந்ததும் அவளை இங்கேயிருந்து துரத்திடலாம் தானேம்மா?”எனத் தன் விஷயத்திலேயே குறியாக இருந்தான் ராஜன்.
“உன் மேலே சத்தியம் பண்ணித் தந்தா நம்புவியா?”என்றதுமே,
“கண்டிப்பாக நம்புவேன்ம்மா”என்றான் தன் கண்கள் பளபளக்க,
“அப்படின்னா சரி. உன் மேலே சத்தியமா எங்க அண்ணனோட சொத்து நம்ம கைக்கு வந்ததும் அவளை அடிச்சுப் பத்தி விட்டுட்றேன்”என்று அவனது தலையில் அடித்துச் சத்தியம் செய்தார் சற்குணம்.
உடனே,”நானும் அந்த தங்கபுஷ்பத்தைக் கட்டிக்க சம்மதிக்கிறேன்!”அவரது திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்து விட்டான் ராஜன்.
இதை அமைதியாகப் பாய்த்துக கொண்டிருந்த வளையாபதி,”அப்படி சொல்லுடா சிங்கக் குட்டி!”என்று பெருமிதமாக கூறினார்.
அதற்குப் பிறகுப் பட்டன் செல்லில் தமையனுக்கு அழைத்து, தங்கள் மகன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டான் என்பதை அவரிடம் தெரிவித்தார் சற்குணம்.
அதைக் கேட்ட காளிமுத்துவோ,”அப்படியா? சரிம்மா. நான் வள்ளி காதுலே இப்போ தான் விஷயத்தைப் போட்டேன். நானும், அவளும் பேசிட்டு இருக்கோம். அப்படியே புஷ்பா கிட்டேயும் பேசிட்டுச் சொல்றோம்”எனத் தங்கைக்குப் பதிலளிக்க,
“ஹாங்! சரிண்ணே!”என்று சிரித்த முகமாகப் பேசி விட்டு வைத்தவரோ,
“ஆமாம். அந்தக் கொல்லையில் போறவ கிட்ட ஒப்புதல் வாங்குறது ஒன்னு தான் கொறை!”என்று நொடித்துக் கொண்டு அதை தன் கணவர் மற்றும் மகனிடம் கூறினார் சற்குணம்.
“சரி விடும்மா. அதான் மச்சானும், தங்கச்சியும் ஒத்துக்கிட்டாங்களே? இனி மகளையும் அவுகளே ஒத்துக்க வச்சிடுவாங்க!”என்று மனைவிக்குத் தெம்பூட்டினார் வளையாபதி.
“நீ ஏற்கனவே உன் சம்மதத்தை சொல்லிட்டாலும் இன்னொரு தடவை கேட்கிறேன். உனக்கு இதில் எதுவும் மறுப்பு இருக்கா வள்ளி?”எனத் தன்னிடம் கேட்ட காளிமுத்துவிடம்,
“உங்க தங்கச்சி மகனுக்கே புஷ்பத்தைக் கட்டி வச்சிடலாம்ங்க. கல்யாணத்துக்கு அப்புறமும் நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா”என்று அவரிடம் தனது எண்ணத்தைக் கூறினார் மனைவி.
“ஆமாம். நீஞ்சொல்றதும் சரி தான்”என்றவரோ,
“இதைப் பத்திப் புஷ்பத்துக்கிட்டே சொல்லி வச்சிரு வள்ளி. அப்பறம் பரிசம் போட்றப்போ முரண்டு பிடிச்சிட போறா”என அவரிடம் அறிவுறுத்தினார் காளிமுத்து.
“சரிங்க”என்றவரோ தனது மகளிடம் என்ன சொல்லி அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினார்.
அப்போது தன்னறையில் இருந்து வந்த தங்கபுஷ்பத்திடம்,”முகத்தைக் கழுவிட்டு வாடி. சோறு எடுத்து வைக்கிறேன். அதை முழுங்கிட்டுத் தெம்பா அழு”என்று கூறி விட்டு அவளுக்காக உணவை எடுத்து வரச் சென்றார் வள்ளி.
அதில் நொடித்துக் கொண்டாலும், வெகு நேரமாகப் பசித்ததால் தான் அவளுமே அறையை விட்டு வெளியே வந்து சமையலறைக்குச் செல்ல முனைந்தாள். ஆனால் அதற்குள்ளாகத் தாயே உணவைப் போட்டுக் கொண்டு வருவதாக கூறி விட்டதால் எதுவும் பேசாமல் அமைதியாகத் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.
அவளது செய்கையைப் பார்த்து முறுவல் வந்தது காளிமுத்துவிற்கு.
“இந்தாடி! சாப்பிடு”என்று மகளுக்கு முன்னால் சாப்பாட்டுத் தட்டை வைத்தார் வள்ளி.
அவரை முறைத்துப் பார்த்து விட்டு உண்ணத் தொடங்கி விட்டாள் தங்கபுஷ்பம்.
“எவ்வளவு கொழுப்பு பாருங்க!”என்று அவளைப் பற்றிக் கணவரிடம் புகார் சொன்னார்.
அதைக் கேட்டவளோ,”ம்ஹூம்!”என்று கழுத்தை வெட்டிக் கொள்ளவும்,
“ரொம்பவும் சிலுப்பிட்டுத் திரியாதடி!”என அதற்கும் அவளை அதட்டினார் வள்ளி.
“புள்ளைய சாப்புட விடும்மா”என்று கூறி மனைவியை அமைதிப்படுத்தினார் காளிமுத்து.
அதில் தலையைச் சிலுப்பிக் கொண்டு உண்டு முடித்து விட்டதால் தட்டைக் கழுவச் சென்று விட்டாள் தங்கபுஷ்பம்.
“நான் எப்படிங்க இந்த ராங்கியை கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கப் போறேன்?”என்று கலக்கத்துடன் வினவினார் வள்ளி.
“அதெல்லாம் புள்ளை சம்மதிச்சிடும். எனக்கு நம்பிக்கை இருக்கு”என்று தன் மகள் மேலிருந்த நம்பிக்கையில் உரைத்தார் காளிமுத்து.
அந்த ஊரில் வசிக்கும் ஒருவரின் நிலத்தைத் தாங்கள் வாங்கிக் கொண்ட திருப்தியில்,”பத்திரத்தில் எல்லாம் சரியாக இருக்கான்னுப் பார்த்துக்கோங்க”என்று தங்களுக்கு நிலத்தை விற்றவரிடம் கூறினார் தர்மராஜ்.
அதற்கு அவரோ,“அதெல்லாம் பக்காவாக இருக்கும்ன்னு எனக்குத் தெரியும்ங்க. இருந்தாலும் உங்க திருப்திக்காக ஒரு தடவை பாத்துக்கிறேன்”என்று பத்திரத்தைச் சரி பார்த்து விட்டு,
“எல்லாம் சரியாகத் தான் இருக்குங்க!” என்றதும்,
“அப்போ சரிங்க. இந்தாங்க பணம்”என்று அவரது கையில் நிலத்திற்கானப் பணத்தை ஒப்படைத்தார் தர்மராஜ்.
அவருக்கு அருகில் தான் நின்றிருந்தான் அவரது தவப்புதல்வன் வீரபத்திரன். ஆனால் அவன் தன் வாயைத் திறந்து ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை.
ஏனென்றால் அந்த ஊர்ப் பஞ்சாயத்தில் ஒரு அபலைப் பெண்ணிற்கு நடந்த அநீதியை அவனால் மறக்கவே முடியவில்லை.
அதனாலேயே இவ்விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டான் வீரபத்திரன்.
அவனுடைய தந்தை தான், நில உரிமையாளரிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்த பின்னர்,”அப்போ நாங்க எங்க ஊருக்குப் போயிட்டு வர்றோம் கன்னியப்பா”என்று அவரிடம் விடைபெற்றுக் கொள்ள யத்தனித்தார்கள் தர்மராஜூம், வீரபத்திரனும்.
“அட இன்னைக்குத் தங்கிட்டு நாளைக்குக் கிளம்பலாம்ல?”என்று அவர்களிடம் சொன்னார் கன்னியப்பன்.
வீரபத்திரனோ,“இல்லைங்க. நாங்க கிளம்பறோம்”என்று கூறிக் கொண்டிருக்கும் போதே,
“ஏய் கன்னியப்பா! அந்தப் புள்ள செவ்வழகி இருக்குல்ல? அது வீட்டுக் கிணத்துல விழுந்து செத்துப் போச்சாம்! ஊரே அங்கன தான் இருக்கு. உன்னைக் காணோமேன்னு தேடிட்டு வந்தேன்”என்று ஒருவர் மூச்சு வாங்க கூறியதைக் கேட்டு,
“ஐயையோ! என்னய்யா சொல்ற?”என்றவரிடம்,
“சிவநேசனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சலம்புச்சாம். அவங்க அப்பா, அம்மா அதை எப்படியோ மிரட்டி ஒத்துக்க வைக்கப் பாத்தாங்களாம். ஆனால் முடியவே முடியாதுன்னு மறுத்து ஓடிப் போய்க் கிணத்துல குதிச்சிருச்சு! எவ்வளவோ முதலுதவி பண்ணிக் காப்பாத்தப் பாத்தாங்க! ஆனால் முடியலை!”என்று கூறவும்,
“அச்சோ! உடனேயா கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவாக? அந்தப் புள்ளைக்குக் கொஞ்சம் அவகாசம் தந்திருக்கலாம்!”என்றவரோ, தர்மராஜ் மற்றும் வீரபத்திரனிடம்,
“நான் அங்கே போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வரேனுங்க”என்க,
“ஐயா! நாங்களும் உங்க கூட வர்றோம்ங்க”என்று தந்தையை முந்திக் கொண்டு சொன்னான் வீரபத்திரன்.
“சரி வாங்க”என்றுரைத்து விட்டுச் செவ்வழகியின் வீட்டை நோக்கி அவர் நடக்கத் தொடங்க,
“டேய்! நமக்கு எதுக்குடா இதெல்லாம்? நாம ஊருக்குப் போகலாம். வா”என்று மகனை அதட்டினார் தர்மராஜ்.
“பேசாமல் என் கூட வாங்கப்பா”என அவரை இழுத்துக் கொண்டுக் கன்னியப்பனைப் பின் தொடர்ந்தான் வீரபத்திரன்.
அங்கே ஏற்கனவே விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்திருந்தனர் தங்கபுஷ்பமும், அவரது பெற்றோரும்.
அப்போது அவ்விடத்தை அடைந்த லோகேஸ்வரியோ தோழியைத் தன்னுடன் இருத்திக் கொண்டாள்.
அவர்கள் இருவருக்கும் செவ்வழகியின் முகத்தைப் பார்த்ததும் அழுகைப் பீறிட்டு வந்தது.
“என்னடி இப்படி பண்ணிப்புட்டா?”என்று தங்களுக்குள் பேசிக் கொள்ள,
அங்கே தன் தந்தையுடன் பிரசன்னம் ஆகிய வீரபத்திரனுக்கோ, அந்தப் பால் வடியும் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் கண்கள் கலங்கி விட்டது.
“பாவி மகளே! எங்க காலம் போறதுக்குள்ளே உன்னை ஒருத்தங் கையிலே புடிச்சுக் குடுக்கனும்னு நினைச்சது தப்பா? ஏன்டி இப்படி செஞ்ச?”என்று தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார்கள் அவளது பெற்றோர்.
“ஆமாம். அப்படியே ஊரே அசர்றா மாதிரி ஒரு மாப்பிள்ளையைத் தேடிப் பிடிச்சு உங்க மகளுக்குக் கட்டி வைக்கப் பார்த்தீங்க பாருங்க! அது பிடிக்காமல் திமிர் பிடிச்சு நாண்டுக்கிட்டளாக்கும்? உங்களுக்குக் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? இப்போ கூட இவளைத் தான் குத்தம் சொல்றீக? இவளை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவன் அந்தா எகத்தாளமாக நிக்குறானே! அவனைக் கேட்கத் துப்பு இருக்கா உங்களுக்கு?”என்று அவர்களிடம் செவ்வழகிக்காக நியாயம் கேட்டாள் தங்கபுஷ்பம்.
அதைக் கேட்டு இப்போதும் அலட்டிக் கொள்ளாமல் நின்றிருந்தான் சிவநேசன்.
“ஏட்டி! உங்கப்பா கிட்டே வாங்குன அடி காணாதா? வாயாடி சிறுக்கி! உன் வயசுல இருக்கிற மத்தப் புள்ளைங்க எல்லாம் அமைதியாகத் தானே நிக்குதுக? நீ மட்டும் ஏன் ஏறிக்கிட்டு வர்றவ? சும்மா கெட!”என்று அவளை அதட்டி ஒடுக்கப் பார்த்தார் வள்ளி.
“அவளுக எப்படியோ நின்னுட்டுப் போறாளுக! அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லம்மா! இதோ தன் உசிரை மாய்ச்சிட்டு இப்போ பொணமா இருக்காளே! இவளுக்கு என்னப் பதிலைச் சொல்லப் போறீங்க?”என்று செவ்வழகியின் சவத்தைக் காட்டி வினவினாள்.
அவளது கேள்வி அர்த்தமுள்ளதாக இருந்ததால் அதற்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தான் வீரபத்திரன்.
ஆனால் அடுத்த நிமிடமே அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்த வள்ளியோ,”நீ இப்போ வீட்டுக்குப் போகல. என்னைப் பொணமா பார்க்க வேண்டியது வரும்!”என்றதும்,
அவரை முறைத்தவளோ,”இப்படியே என்ன அடக்கி வச்சிட்டு இருங்க. இன்னும் கொஞ்ச நாள்ல நான் பொணமாகப் போறேன். பார்த்துட்டே இருங்க”என்று சத்தமாக மொழிந்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றவளைப் பரிதவிப்புடன் பார்த்தான் வீரபத்திரன்.
- தொடரும்