• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி🌺🌺🌺12

சக்திமீனா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 27, 2021
92
62
18
Tamilnadu
உலகாளும் சொக்கநாதர் சன்னதியில் மாறன் தன் தகப்பனை தாங்கி பிடித்த காட்சி கண்ட சொக்க நாதனின் பங்காளிகளின் முகம் சற்றே இல்லை மிகவும் வாடி போனது..வாரிசில்லா சொத்தை பங்கிட்டு கொள்ள நினைத்த பங்காளிகள் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.. அப்பங்காளிகளின் கூட்டத்தில் இருந்த முதன்மையான ஒருவனின் குறுக்கு மூளை உடன் திட்டம் ஒன்றை தீட்டியது..

மகன் தன்னை அழைத்த அப்பா என்ற ஒற்றை சொல்லில் உயிரின் ஆணிவேரும் உருகி தான் போனது சொக்கநாதனுக்கு...சாதி ஆளும் பஞ்சாயத்து தலைவர், கோயில் தர்மகர்த்தா, பங்காளிகளின் தலைவன் சொக்கநாதன் தன் கம்பீரத்தை, முறுக்கை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டு கொடுத்து விடுவாரா என்ன?..தன் பாச உணர்வை உள்ளுக்குள் புதைத்து திமிர்ந்தது போல் நிமிர்ந்து நின்றார்..தந்தையின் உணர்வை அறியாதவனா மாறன்?..அவர் தன்னை மறைக்க படும் பாட்டை கண்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்..

குழந்தைகள் இருவரும் மாறன் அருகில் ஓடி வந்தனர்..ஆனந்தி மாறனின் காலை இறுக பற்றிக் கொள்ள, மகளின் பய உணர்வை புரிந்து கொண்ட மாறன் உடனே அவளை தூக்கி கொண்டான்..

அமுதன் சொன்னான்,
"ஹலோ ஓல்ட் மேன், வெறும் பேச்சு மட்டும் தானா?..உங்களை சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க மாட்டீங்களா?..இப்போ ஸ்லிப் ஆகி விழுந்திருந்தா உங்க நிலைமை என்ன ஆகியிருக்கும்..இப்போவாது எங்க அப்பாவை பத்தி புரிஞ்சிகோங்க.",.............

கேவலம் ஒரு பொடிபையன் நீ, எவ்வளவு துணிச்சல் இருந்தால் எங்க தலைவரை எல்லார் மத்தியிலும் இப்படி பேசுவ?...............பங்காளிகளில் ஒருவன் பதமாக ஊசி ஏற்றினான் சொக்கநாதனுக்கு..

அவனா பேசலண்ணே, சொல்லி கொடுத்து பேசுறான்..தேவையான டிரெய்னிங் கொடுத்துதானே கூட்டிட்டு வந்துருப்பாய்ங்க...............அடுத்த ஊசியை அதே இடத்தில் ஏற்றினான் இன்னொருவன்..

மாறன் பதில் ஏதும் பேசவில்லை..இந்த அல்ப புத்திக்காரர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை என்று நினைத்து விட்டான் போலும்..

ஹலோ, ஹூ ஆர் யூ ஆல்?............பங்காளிகளிடம் கை நீட்டி கேட்டான் அமுதன்..

புரியாமல் விழித்தது ஜால்ரா கோஷ்டி..

ஓ மை காட், இந்த வில்லேஜ்ல இது ஒரு பெரிய பிராப்ளம்..யாருக்குமே கம்யூனிகேஷன் ஸ்கில்லே இல்லை.......என்று சலித்து கொண்ட அமுதன் சொன்னான்,

நீங்க எல்லாம் யாருன்னு கேட்டேன்.........என்று..

நாங்க எல்லாம் அண்ணனோட பங்காளிங்க..அவுகளுக்கு எல்லாமே நாங்கதேன்..பத்து வருஷமா அவுகளுக்கு நாங்கதேன் தோளோடு தோள் நிக்குறோம்................தங்கள் பெருமையை பட்டியலிட்டான் ஒருவன்..

பங்காளி மீன்ஸ், ஓ... பங்காளின்னா என்ன?..............

பங்காளின்னா அவரோட கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் பங்கு போட்டுக்கிறவன்னு அர்த்தம்................சொன்னான் ஒருவன்...

அப்படியா? அப்படின்னா அவரு இப்போ வழிக்கு விழ பார்த்தாருல்ல..அப்போ நீங்க யாரும் ஏன் அவரை பிடிக்கலை?.. ஒருவேளை அவரு வழுக்கி விழுந்திருந்தா அவரோட வலியையும் நீங்க பங்கு போட்டுருப்பீங்களா..........அமுதன் கேட்க திரு திருவென விழித்தனர் பங்காளிகள்..

துர்க்கை அம்மனுக்கு விளக்கு போட்டு முடித்த எழில் மாறனையும் குழந்தைகளையும் தேடி அவ்விடம் வந்தாள்..வந்தவள் தூரத்தில் வரும்போதே சொக்கநாதரை பார்த்து தயங்கி நின்று விட்டாள்..

என்ன ஓல்ட் மேன், இந்த மாதிரி ஆளுங்களை கூட வச்சிருக்கீங்க.. சிம்பிளி வேஸ்ட்...............அமுதன் சொல்ல,

அடேய் பொடிப்பயலே.........கொதித்தான் ஒருவன்..

ஏலேய்...பேசாம இருங்கல, நீங்களும் சின்ன பையனுக்கு சரிசமமா பேசிக்கிட்டு...............பங்காளிகளை அடக்கினார் சொக்கநாதன்..

லேய், உனக்கு இதெல்லாம் யாருலே சொல்லி கொடுத்தது?..உங்க அம்மா சொல்லி கொடுத்தாளா?..........அமுதனிடம் கேட்டார் சொக்கநாதன்..அவரின் சொற்கள் எழிலின் காதில் தெளிவாக விழுந்தன..பிறர் சொல் கேட்டு தடுமாறும், தன் தந்தையின் சொல்புத்தி கண்டு தனக்குள் சிரித்தான் மாறன்..

வாட், எங்க அம்மாவா?..எங்க அம்மா நீங்க என் தாத்தான்னு மட்டும்தான் சொல்லி கொடுத்தாங்க..பட் உங்ககிட்ட பேசின பிறகு, நீங்க தான் எனக்கு நிறைய சொல்லி கொடுத்துருக்கீங்க............சொன்னான் அமுதன்..

நானா?..நான் என்னலே சொல்லி கொடுத்தேன்?............

ம்ம்..அதான்...அன்னிக்கு சொன்னீங்களே,... ஹான்...சாதி....சாதின்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன்.............அமுதன் சொல்ல வியந்தார் சொக்கநாதன்..மாறனும் வியப்புடன் நின்றான்..

ஆக்சுவலி,..சாதின்னு ஒண்ணு இல்லவே இல்ல... நிறைய வருஷத்துக்கு முன்னாடி பியூப்பிள்ஸ் செய்ற வேலைய வச்சி ஜஸ்ட் ஒரு ஐடெண்டிபிகேஷனுக்காக ஒவ்வொரு பேர் வச்சி கூப்பிட்டுருக்காங்க..அப்புறம் வந்த செல்ஃபிஷ் பியூப்பிள், அவங்க அடையாளத்துக்காக வச்ச பேரை ஜாதின்னு சொல்லி மக்களை பிரிச்சிட்டாங்க..அதை மக்களையும் நம்ப வச்சுட்டாங்க..எங்க அப்பா அம்மாகிட்ட அடிக்கடி சொல்வாரு, இங்கே எல்லோரும் மனுஷ ஜாதின்னு..அது தான் கரெக்ட்..............ஆயிரம் காலத்து அரசியல் சூழ்ச்சியை அமுதன் நான்கே வரிகளில் சொல்லி முடிக்க, அடுத்தும் அர்த்தமற்ற கேள்வியைத் தான் கேட்டார் சொக்க நாதன்..

இதையும் உங்க அம்மாதானே சொல்லி கொடுத்தா?................ சொக்கநாதன்..

ஓ நோ...இதை சொல்லி கொடுக்க எங்க அம்மா எதுக்கு?..இருக்கவே இருக்கே கூகுள்..............சொன்னான் அமுதன்..
சொக்கநாதனுக்கு தான் கூகுள் என்றால் என்ன என்று புரியவில்லை..

ஓகே ஓல்ட் மேன், எனக்கு இதெல்லாம் புரியுது..பட் ரெண்டு நாள் முன்னாடி எங்க அம்மாவை ஏதோ சொல்லி திட்டுனீங்களே, அதுக்கு தான் எனக்கு அர்த்தம் புரியல..அம்மாகிட்ட கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாங்க..யு நோ எங்க அம்மா வெரி போல்ட் பெர்சன்...அவங்களே அழுதுருக்காங்கன்னா நீங்க ஏதோ பேட் வேர்டு யூஸ் பண்ணியிருக்கணும்..சொல்லுங்க எங்க அம்மாவை என்ன சொல்லி திட்டுனீங்க..அம்மா ஏன் அப்படி அழுதாங்க...........பட படவென்று அமுதன் கேட்டு விட, சட்டென கோபம் உருவானது மாறனுக்கு...இதை கேட்டுக் கொண்டிருந்த எழில் பயப்பட தொடங்கியிருந்தாள்.. சொக்கநாதனும் விக்கித்து போனார்..

தன் வாய் உதிர்த்த அசிங்கமான அர்த்தமுடைய வார்த்தைகளை மகன் அறிந்து விட்டால் என்ன நிகழுமோ என்ற பதட்டம் அவருக்குள்ளும் இல்லாமல் இல்லை...சற்றே தடுமாறிதான் போனார்..

அம்மாவை தாத்தா திட்டுனாகளா?...அம்மா அழுதாளா?...என்ன சொல்லி திட்டுனாக?.............. அமுதனிடம் படபடப்புடன் கேட்டான் மாறன்..

ஆமா, இவரு அம்மாவை திட்டுனாரு... ம்ம்..என்னவோ சொன்னாரே,. ம்ம்..ஹா...ன்,...என் மொவன்கூட.........என்று அமுதன் ஆரம்பிக்கும் முன்,

அமுதா,............சத்தமாக அழைத்தாள் எழில்..வேகமாக வந்தவள் அமுதனை அடிக்க கை ஓங்க, அவளின் கையை பிடித்தான் மாறன்..

விடுங்க, இவனுக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியா போச்சி...உதைச்சாதான் திருந்துவான்................சற்றே கோபமாக சொன்னாள் எழில்..பேசாமல், பேச முடியாமல் நின்றார் சொக்கநாதன்..

ஏய் எழில்..இப்போ நீ ஏன் இவ்வளவு கோபப்படுறே...அமுதன் பொய் சொல்ல மாட்டான்...நான் இல்லாத நேரத்துல வீட்ல என்ன நடந்துச்சு?..நீ என்கிட்ட எதையாவது மறைக்கிறியா?............கோபம் உள்ளூர தொனிக்க வெளிவந்தது சொற்கள்..

மாறனின் கோபம் எழில் அறியாதது இல்லை.. கடுஞ்சொற்களையும் தவறான வார்த்தைகளையும் மாறன் பொறுத்துக் கொள்ள மாட்டான் என்பதை நன்கு அறிந்தவள்தானே எழில்..சொக்கநாதன் உதிர்த்த வார்த்தைகளின் வீரியத்தை மாறன் அறிந்தால் கோபம் கண்ணை மறைக்க, தந்தையை எதிர்த்து நிற்பான் என்பதை கணிக்க எழிலுக்கு பெரிய சிந்தனை எதுவும் தேவையில்லை..

உன்கிட்டதான் கேட்டுகிட்டு இருக்கேன்.. பதில் சொல்லு எழில்,.. நான் வீட்டில் இல்லாத நேரம் என்ன நடந்துச்சு?............... அழுத்தமாக கேட்டான் மாறன்..

ஒண்ணும் இல்லங்க..இவன் ஏதோ உளறுறான்.........சொன்னாள் எழில்..

இல்ல எழில்..நீ என்கிட்ட எதையோ மறைக்கிற..மரியாதையா உண்மைய சொல்லு..அப்பா உன்னை திட்டுனாகளா............

ஆமா திட்டினாக..அதனால் என்ன இப்போ?, என்னை திட்டுறதுதுக்கு அவங்களுக்கு உரிமை இல்லையா?..நான் ஏதாவது தப்பு செய்தா எங்க அப்பா என்னை திட்ட மாட்டாங்களா?..அப்படித்தானே இதுவும்,.....ரெண்டு வார்த்தை திட்டுனா நான் தேய்ஞ்சி போயிடுவேனா.............சாமர்த்தியமாக பேசி வழக்கை திசை மாற்றினாள் எழில்..

உங்க அப்பா திட்டினா நீ அழுவியா?..நீ அழுற மாதிரி அப்பா ஏதோ தப்பான வார்த்தை பேசியிருக்காக..என்ன பேசுனாக சொல்லு..............எழிலை மிரட்டி கேட்டான் மாறன்..

தந்தை கோபம் வந்தால் பல்வேறு அர்த்தமுள்ள பல பாஷை வார்த்தைகள் பேசுவார் என்றுதான் மாறன் அறிவானே!..

சற்று சிந்தித்த எழில் சொன்னாள் "அப்படி எல்லாம் ஒண்ணுமில்லங்க..அன்னிக்கு அத்தை பிள்ளைகளை கவனிச்சிட்டு இருந்தாக..பெரியவக குடிக்க தண்ணி கேட்டாக..அத்தைக்கு உடனே எழுந்திரிக்க செளகரியம் இல்லாததால், என்னை தண்ணி கொடுக்க சொன்னாக..நான்தான் பெரியவங்க முன்னால வர பயந்துட்டேன்..பயத்துல கை நடுங்க ஆரம்பிச்சிடுச்சு..பெரியவங்களை கிட்டக்க பார்த்ததும் பயத்துல தண்ணியை கீழே கொட்டிட்டேன்..ஒரு சின்ன வேலையை கூட உன்னால உருப்படியா செய்ய முடியாதான்னு கோபத்துல ரெண்டு வார்த்தை திட்டிபுட்டாங்க..அதை போய் இவன் பெருசா இங்கே பேசிட்டு இருக்கான்.............சொன்ன எழில் அமுதனை அடித்தே விட்டாள்..அமுதன் அழ தொடங்கினான்..

அதுக்கு பிறகும் பெரியவங்க என்கிட்ட தண்ணி வாங்கி குடிச்சிட்டுதான் வெளியே கிளம்பினாங்க..அது தெரியாம இவன் பேச்சை கேட்டுட்டு கோபப்படுறீகளே........சொன்ன எழில் மீண்டும் அமுதனை அடிக்க அமுதன் சத்தமாக அழுதான்..

பங்காளிகளின் வயிற்றில் இருந்து லேசான புகைச்சல் மேலெழும்பியது..(அட,..அது வேற ஒண்ணுமில்லங்க, எழில் பேசினதை கேட்டு வயித்தெரிச்சல்)

பதிலின்றி விக்கித்து போனார் சொக்கநாதன்..பேரனின் அழுகை ஏனோ சுயத்துக்குள் வலித்தது..பெற்ற பிள்ளையை அடித்து வளர்க்கும் தந்தை, தாத்தாவாகிவிட்டால், பேரப்பிள்ளைகள் அடிவாங்குவதை ஏனோ ஏற்றுக் கொள்வதில்லை..இயற்கையின் விந்தையில் இதுவும் ஒன்று...அமுதனை சமாதானம் செய்ய துடித்த கைகளை அடக்கிக் கொண்ட சொக்கநாதன் எதுவும் பேசாமல் தன் மகனை கடந்து சென்றார்..

ஏய் விடு எழிலு..அவன் சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும்?..ஏதோ தாத்தாங்கிற உரிமையில் பேசியிருப்பான்......... மனைவியின் கைபிடித்து தடுத்தான் மாறன்..

தெரியலன்னா தெரிஞ்சுக்கணும்..பெரியவங்களுக்கு ஊருக்குள்ள எம்புட்டு மரியாதை இருக்கு..இப்படி அடுத்தவங்க முன்னாடி இவனை பேசவிட்டு வேடிக்கை பார்க்குறீக..இவன் அவுகளுக்கு எதிரா வாய் திறந்த உடனே இவனை ரெண்டு அடி போட்டிருந்தா இப்படி பேசுவானா?............... மாறனிடம் கோபமாக பேசினாள் எழில்..அவளையே அசையாது பார்த்து நின்றான் மாறன்..

இப்போ எதுக்கு இப்படி பார்க்கிறீங்க..........

எழில்,..உனக்கு இவ்வளவு கோபம் வருமா?..உன்னை கோபப்படுத்தணும்ன்னு எத்தனை நாள் உன்னை சீண்டியிருக்கேன்..அப்போலாம் நீ கோபப்பட்டதே இல்ல..இப்போ மாம்னாருக்காக இப்படி கோபப்படுற..அடேங்கப்பா, மாமனார் மேல எவ்வளவு பாசம் உனக்கு?..சும்மா சொல்ல கூடாது எழில்..கோபத்துல கூட அழகாகத்தான் இருக்கே............சொல்லி நயமாய் சிரித்தான் மாறன்..

தலையில் அடித்து கொண்டாள் எழில்..
உங்களையும் திருத்த முடியாது..உங்க மகனையும் திருத்த முடியாது.............சொன்ன எழில் ஆனந்தியை தூக்கி கொண்டு உமையாளும் சொக்கநாதனின் சன்னிதானத்திற்குள் நுழைந்தாள்..

மாறன் தூரத்தில் நவக்கிரக சிலைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒருவனை பார்த்து,

ஏலேய் வேலப்பா....இங்கே வா............என்று சற்றே சத்தமாக அழைத்தான்..

வேலப்பன் ஓடி வந்து,
என்ன அண்ணே...........மரியாதை குறையாமல் கேட்டான்..

இங்கே பாரு,.. யாரோ எண்ணெயை சிந்தியிருக்காக..இதை கூட கவனிக்காம என்னல வேலை பாக்குறீக...........என்றான் மாறன்..

கவனிக்கல அண்ணே, இதோ இப்போ துடைச்சிடுறேன்..........சொன்ன வேலாயுதம் வேக வேகமாக எண்ணெய் கரையை துடைத்தான்..

அதன் பிறகே அமுதனை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நீங்கினான் மாறன்..

இங்கு மாறனுக்கும் எழிலுக்கும் இடையில் நடந்த உரையாடல் அனைத்தும் கோயிலின் இடப்புறம் இருந்த துர்கை அம்மன் சன்னதி முன், கண்கள் மூடி, கைகள் கூப்பி நின்ற சொக்கநாதனின் செவிகளில் வார்த்தை சிதறாமல் விழுந்தது..

சாமி தரிசனம் முடிந்து நடந்தே வீடு வந்து சேர்ந்தது மாறன் குடும்பம்..வீட்டு வாசலிலேயே காத்திருந்த அன்னம், மாறன் தெருவில் வரும் போதே ஓடிவந்து ஆனந்தியை தூக்கி கொண்டாள்..

அம்மா, அவ நடந்து வருவா..கீழே விடுங்கம்மா...........மாறன் சொல் அந்த அப்பத்தாவின் காதுகளில் விழவில்லை..

வீட்டிற்குள் வந்தவுடன் மாறன் கேட்டான்,

என்னம்மா இது?..ஏன் இப்படி கெடந்து பரிதவிக்குறீக..நாங்க வெளியே போனா வரமாட்டோமா?............

உனக்கு என்ன? இன்னும் ரெண்டு நாளில் தீபாவளி முடிஞ்சதும் பெங்களூருக்கு கிளம்பி போயிடுவ..நீ இங்கே இருக்கிற வரைக்குமாச்சும் என் பேரப்பிள்ளைகளை ஆசைதீர கொஞ்சிக்குறேன்............. மீண்டும் ஏக்கம் மேலிட ஆரம்பித்தது அன்னத்துக்கு..

அம்மா...அப்பா நெசமாவே மாறிட்டாகளாம்மா...............ஆச்சரியம் கலந்த குரலில் கேட்டான் மாறன்..புரியாமல் பார்த்தாள் அன்னம்..

ஏய் எழில், உண்மையாவா சொல்ற...அப்பா உன்கிட்ட தண்ணி வாங்கி குடிச்சாகளா............மாறன் கேட்க, தயங்கி நின்றாள் எழில்..மருமகளிடம் கண்களால் கேள்வி கேட்டாள் அன்னம்..அமுதனை கண்காட்டினாள் எழில்..நடந்ததை துல்லியமாக கணிக்க முடியாவிட்டாலும், தவறுதலாக வாய் திறந்து விடக்கூடாது என்னும் உத்தரவை தன் மூளைக்கு பிறப்பித்து கொண்டாள் அன்னம்..மாறனை பேசவிட்டு அமைதி காத்தாள்..

கோயிலில் நடந்த சம்பவம் முழுவதையும் அச்சு பிசகாமல் தாயிடம் கூறிய மாறனின் முகத்தில் அத்தனை சந்தோஷ வெளிச்சம்..முகமே புன்னகை பூவாய் பூத்து நின்றான் மாறன்..அவனின் தாயும் தாரமும் அவனின் இந்த சந்தோஷம் கண்டு வியந்ததோடு, ஒருவரையொருவர் அறியாமல் இருவருமே, "இந்த சந்தோஷம் நிலைக்க வேண்டும்", என்று குல தெய்வத்திடம் வேண்டுதல் வைத்தனர்..மாறன் சொன்னதிலிருந்து நடந்ததை துல்லியமாக கணித்து கொண்டாள் அன்னம்..

நான் அப்பாவை பிடிச்சதும் என் கையை உதறிட்டு கோபமா திட்டுவாகன்னு நினைச்சேன்..ஆனால் அப்பா ஒண்ணுமே பேசலம்மா..அப்புறம் எழிலை கூட, கோபமா ஒரு வார்த்தை கூட பேசல..உங்களை எழில் அத்தன்னு பேசும் போது கூட அமைதியாதேன் இருந்தாக..எப்படிம்மா?..அப்பா எப்படி இம்புட்டு மாறுனாக?.............ஆச்சரியமும் சந்தோஷமும் துள்ளி குதித்தது மாறனின் குரலில்...

சட்டென யோசித்து பதிலை தயார் செய்தாள் அன்னம்..(கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை விட்டு விடுவாளா என்ன?)
இந்தா அப்பாவுக்கு மட்டும் உன் மேல பாசம் இல்லாமல் போகுமா?..மேலுக்கு ஊர்க்கார பயலுகளுக்காக கோபமா பேசுவாக..அதுக்காக உன்னய ஒரேயடியா வெறுத்துருவாகளா..பெத்த பிள்ளைய பிரிஞ்ச ஏக்கம் அவுகளுக்கும் இல்லாம போயிடுமாய்யா................அன்னத்தின் பேச்சில் அன்பாய் கரைந்தான் மாறன்..பலமாக யோசித்து நின்றான்..

என்னய்யா யோசிக்கிற?..அப்பாதான் கொஞ்சம் கொஞ்சம் மாறிட்டு வாராகல்ல..உன் வேலைய மதுரைக்கு மாத்துதல் வாங்கிடலாம்ல...........கிடைத்த சிறு இடைவெளியை தன் ஆசையால் நிரப்பினாள் அன்னம்..

ஏய் எழிலு...உண்மையா சொல்லு... நெசமா அப்பா உன் கையால தண்ணி வாங்கி குடிச்சாகளா?.............மாறன் கேட்க, எழில் அன்னம் முகம் பார்க்க, ஆமா என்று சொல்லும் படி தன் தலையாட்டி சைகை செய்தாள் மாறனின் பின்னால் நின்ற அன்னம்..

ஆமா,....உண்மையா குடிச்சாக...........என்று தன் மாறனிடம் அவள் சொன்ன முதல் பொய்யை உறுதி செய்தாள் எழில்...

தண்ணி என்னய்யா,..இந்தா நேத்து மத்தியானம் நம்ம எழில்தானே அப்பாவுக்கு சாப்பாடு பரிமாறினாள்...........எழில் சொன்ன பொய்யை மேலும் வலுவாக்கினாள் அன்னம்..

எழில் தன்னிடம் பொய் உரைக்க மாட்டாள் என்ற வலுவான மாறனின் நம்பிக்கை, சொக்கநாதன் மேல் நம்பிக்கையை விதைத்தது மாறனின் இதயத்தில்....

~~~~~~~~~~~~~~~~

மாறன் அரிசி ஆலையில்,

அரிசி மூட்டை கணக்குகளை சரிபார்த்து கொண்டிருந்தார் சொக்கநாதன்....உடன் இருந்த பங்காளிகளில் முதன்மையான பங்காளியின் தூண்டுதலில் அரிசி ஆலைக்குள் வந்தது அந்த கூட்டம்..கிட்டத்தட்ட இருபது முதல் முப்பது பேர் இருந்தனர்..அந்த கூட்டத்தில் பெண்களுக்கும் சம உரிமை இருந்தது குறிப்பிடத்தக்கது..பெண்கள் கூட்டத்துக்கு தலைமை தாங்கினாள் ராஜேஸ்வரி....

அவர்களை வரவேற்று அமர செய்தார் சொக்கநாதன்..

என்ன ஊர் பெரியவக எல்லாம் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கீக..ஏதாவது விசேஷமா?............. வினயம் இன்றி கேட்டார் சொக்க நாதன்..சிறிது நேர மெளனம்...

என்ன இது?..இப்படி பேசாம இருந்தா என்ன அர்த்தம்?..ஊருக்கு பெரிய மனுஷன்தேன்..அதுக்காக ஊரையே பாதிக்கிற விஷயத்த பேசாம இருக்க முடியுமா?..வந்த விஷயத்தை பேசுங்கய்யா..............சத்தமாக உரைத்தார் அந்த பெரிய மீசைக்காரர்..

அவுக என்ன விவரம் தெரியாதவகளா?..இந்தா அரசன் கோயில் பஞ்சாயத்தில் சாதிதேன் பெருசுன்னு ஊரறிய பெத்த மொவனையே தலை முழுகி, நம்ம சாதியை தலை தூக்கி நிறுத்துனவுக..நாம சொல்ல வாரதை கண்டிப்பா புரிஞ்சிகிடுவாக..பேச்சை ஆரம்பிங்க................சொன்னார் அந்த வெள்ளை வேட்டிக்காரர்..அதன் பிறகே எல்லோருக்கும் முன்வரிசையில் கம்பீரமாக அமர்ந்திருந்த வயதான பெரியவர் பேச்சை ஆரம்பித்தார்..

இந்தா பாரு சொக்கநாதா,..உனக்கு தெரியாதது இல்ல..நம்ம சாதிக்குன்னு ஒரு கெளரவம் இருக்கு..மரியாதை இருக்கு..அதை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது...நம்ம சாதிக்குள்ள இன்னொரு சாதி ரத்தம் கலக்குறது அவமானம்ன்னு நினைக்கிற கூட்டம் நம்ம கூட்டம்..உன் மொவன் ஒரு தாழ்ந்த சாதி பொண்ணை கட்டிகிட்டு வந்த போது மொவனை விட சாதிதேன் பெருசுன்னு மொவனை தலை முழுகிட்டு நின்ன..பெருமையா இருந்துச்சி..ஆனா இன்னிக்கு அவனையும் அந்த கீழ் சாதிக்காரியையும் நடு வீட்ல கொண்டு வந்து வச்சிருக்க...ஊருக்கெல்லாம் நியாயம் சொல்றவன் நீ..உனக்கொரு நியாயம் ஊருக்கொரு நியாயம்ன்னு இருக்க கூடாதுப்பா.............தன் சாதி உரையை முடித்தார் அந்த பெரியவர்..

பெண்கள் கூட்டத்தின் தலைவி ராஜேஸ்வரி பேசினாள்,
"இந்தா மாமா, நம்ம குடும்பத்துக்குள்ள ஒரு கீழ்சாதிக்காரி வந்து ஆட்சி பண்றது நமக்கு கேவலம்..நியாயமா மாறன் மச்சானை கட்டிக்க உரிமை உள்ளவ நான்தேன்..இந்தா அந்த ஆதங்கத்தில் பேசுறேன்னு நினைக்காதீக..மச்சான் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறவதேன் இந்த ராஜேஸ்வரி..ஆனா மாறன் மச்சான் கூட, அந்த சாணி அள்ளுறவளை நினைச்சி பார்த்தாலே எனக்கு வயிறு எரியுது...நம்ம குடும்ப பெருமைக்கு தகுதியில்லாதவ மாமா அவ..ஒண்ணு அவளை மச்சான் கிட்ட இருந்து வெட்டி விடுங்க..அது முடியலைன்னா மாறன் மச்சானை ஊரை விட்டு விலக்கி வைக்கிறதை தவிர வேற வழியில்லை.............சோகமாக பேசுவது போல் நடித்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றினாள் ராஜேஸ்வரி..மெளனம் சாதித்தார் சொக்க நாதன்..

பங்காளி முதல்வன் கண் காட்ட வெள்ளை வேட்டிக்காரர் பேசினார்..

என்ன சொக்கநாதா இப்படி பேசாம இருந்தா எப்படி?..ஒரு முடிவை சொல்லு...............

இந்தாங்கய்யா, இந்த சொக்கநாதன் அன்னிக்கு சொன்னதுதான் இன்னிக்கு, இன்னிக்கு சொல்றதுதான் என்னிக்கும்..என் மொவனை நான் எப்போவோ தலை முழுகிட்டேன்..இப்போ என் வீட்டுக்கு வந்துருக்கிறது என் பொஞ்சாதியை பார்க்க வந்துருக்கிற விருந்தாளி அம்புட்டுதேன்..இந்த தீபாவளி முடிஞ்சதும் அவன் ஊரை பார்க்க போயிடுவான்...இப்போ நீங்க உங்க சோலியை போய் பாருங்க...............சொல்லி தோளின் துண்டை உதறி எழுந்தார் சொக்க நாதன்..

அது எப்படி சொக்கநாதா,..உயர் சாதியில் பொறந்த உனக்கு ஒரு கீழ்சாதிக்காரி விருந்தாளி ஆக முடியும்..நம்ம வீட்டுக்கு விருந்தாளியாக வரக்கூட ஒரு தகுதி வேணும்யா...........உரக்க சொன்னார் அந்த மீசைக்காரார்..

போன வருஷம் திருவிழாவுக்கு, ஒம்ம (உங்கள்) மொவன் கூட படிச்சவன்னு சொல்லி உங்க வீட்ல வந்து தங்கியிருந்துட்டு போனானே, அவன் ஃப்ரெண்ட், அவன் எந்த சாதி..அவன்கிட்ட சாதியை விசாரிச்சுதேன் தங்க வச்சிருந்தீகளா..இந்தாங்கயா உடம்பு சரியில்லாத என் பொஞ்சாதியை பார்க்கதேன் அவன் வந்துருக்கான்..இன்னும் ரெண்டு நாள்ல கெளம்பிருவான்..அதுக்குள்ள பஞ்சாயத்தை கூட்டிறாதீக..............சொன்ன சொக்கநாதன் பதிலை எதிர்பாராது விரைந்து வெளியேறினார்..வந்திருந்த கூட்டத்தினர் விழி பிதுங்கி நின்றனர்..

பங்காளி முதல்வனிடம் இன்னொரு பங்காளி கேட்டான்..

அண்ணே, ஒரு வேளை சொக்கநாதன் மருமொவளை ஒதுக்கி வச்சிட்டு மொவனை சேர்த்துக்கிட்டாருன்னா நம்ம கதி..........

அந்த மாறன் ரோஷக்காரன்ல,..அவன் பொஞ்சாதியை விட்டுக்கொடுக்க மாட்டான்..இவரு மருமொவளை மொவன்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா மாறன் தானா இவரை விட்டு போயிருவான்..........என்றான் பங்காளி முதல்வன்..

பலே கில்லாடி அண்ணே நீங்க.........

பொறவு என்னலே, பத்து வருஷமா இந்த ஆளு பின்னால நாயா சுத்தி மாடா உழைச்சிருக்கோம்..திடீர்னு அந்த மாறன் பையன் வந்ததும் இவரு அவனை சேர்த்துகிட்டு சொத்தை தூக்கி கொடுப்பாரு..அதை பார்த்துட்டு நான் சும்மா இருப்பேனா?............. வன்மமாய் சிரித்தான் அவன்..


தொடரும்......
சுயநலக்காரர்களின்
சா(ச)தி வலையும்
சுத்தமான பாசத்தின்
(சு)தந்திர போராட்டமும்......


சாதியை சொல்லி
சமூகத்து மக்களை
சல்லடை சல்லடையாய்
பிரித்து துளைத்த
பித்து பிடித்த மானிடா

உயிர் தேசத்து
மக்களோடு
உன்னையும் காக்க

போர் முனையில்
உயிர் கொடுக்கும்
உயர் சாதி வீரனின்
உண்மை சாதியை
கேட்கும் நெஞ்சுரம்
உண்டோ உனக்கு.........


சக்திமீனா என்கிற M.மீனாம்பிகை