• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாதியில்லா தீபாவளி 🌺🌺🌺 9

சக்திமீனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 27, 2021
Messages
92
பயணக்களைப்பில் கண்ணயர்ந்த எழில் அன்று வெகுநேரம் கழித்தே கண்விழித்தாள்..அன்னத்தின் அறையில் குழந்தைகள் நிம்மதியாக தூங்கி கொண்டிருக்க, அறையில் வேறு எவரும் இல்லை..மாறனை தேடிய மனம், வேகமாக அறையை விட்டு வெளியேற தூண்டியது...வேகமாக வெளியே வந்தவளின் எதிரில் வந்தாள் கெளரி..

தயங்கி நின்ற எழிலிடம்,

யாரை எழில் தேடுற?...மாறன் தம்பியையா? தம்பி மேல அவரு ரூம்ல இருக்காரு..............என்றாள் கெளரி..

மேலே பார்த்து பிரமித்து நின்றாள் எழில்..தீபாவளி தோறும் பணியாட்களுக்கு அன்னம் வழங்கும் புத்தாடை வாங்க மட்டுமே இந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் எழில்..அதுவும் வாசல் வரை மட்டுமே..சொக்க நாதனின் வீட்டுக்குள் நுழைய எழிலின் இனத்தவருக்கு அனுமதி இல்லை..

எழில் முதல்முறை புகுந்தகம் காண்கிறாள்..எந்த அறை எங்கு உள்ளது என்பதை அறியாள்..

மாறன் தம்பி ரூம் மேலே வலது பக்கம் இருக்கு எழில், போய் பாரு.........சொல்லி சென்றாள் சமையல் வேலை செய்யும் கெளரி..

தயங்கிய படி மாடிப்படி ஏறியவளின் இதயம், அவனை காண வேகமாக விசைந்தது..வலப்புறம் இருந்த முதல் அறை தாழிடப்பட்டிருந்தது..அதை தாண்டி இரண்டாம் அறை, திறந்திருக்க உள்ளே தலை நீட்டி பார்த்தாள்..அறையில் எவரும் இருப்பதாக தெரியவில்லை..பயந்து போனாள் எழில்..மெதுவாக நடந்து அறையின் பின்னால் இருந்த பால்கனி பகுதியை அடைந்தாள்..கூட்டத்தில் தாயை தொலைத்த சிறுபிள்ளையாய் அவனை தேடி பரிதவித்தது உள்ளம்..கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்த நேரம்,

ஏய்,...எழில்..............என்ற அவனின் குரல் கேட்டு திரும்ப, அங்குதான் நின்றிருந்தான் அவளின் உயிரில் உறைந்தவன்...ஒரு நொடியும் யோசிக்காது ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்..கண்கள் தாண்டியே விட்டது ஈரம்...

ஏய்,....என்ன ஆச்சி எழில்..............அவளின் முகம் பார்த்து, அதில் தெரிந்த பதட்டம் கண்டு துடித்தான் மாறன்..ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள் எழில்..

என்னை காணாமல் பயந்துட்டியா..........அவன் கேட்க,

ஆம் என்று தலையாட்டினாள்...

உன்னை விட்டு நான் எங்கே போயிட போறேன் எழில்..நான் முழிச்சு பார்க்கும் போது அசந்து தூங்கிட்டு இருந்த..எவ்வளவு நேரம் ரூம்லயே இருக்கிறது..அதான் எங்க அப்பா என் ஞாபகம் எதையாவது இந்த வீட்ல விட்டு வச்சிருக்காரான்னு பார்க்கலாம்னு வந்தேன்....................என்றான் மாறன்..புரியாமல் கண்களால் சந்தேகம் கேட்டாள் எழில்.. பத்து வருடங்களுக்கு பிறகு தன் மனையாளை அவளின் கைபிடித்து முதன் முறையாக தனக்கே சொந்தமான தன் படுக்கை அறைக்கு அழைத்து சென்றான் மாறன்...அந்த அறையே துடைத்து வைத்தது போல் இருந்தது...இரண்டு மரபீரோக்களும் ஒரு கட்டிலும் மட்டுமே இப்போது அந்த அறையின் உறுப்பினர்கள்...என்ன நடந்திருக்கும் என்பதை மாறன் யூகித்திருந்தான்... எழிலுக்குதான் புரியவில்லை...

சுற்றிப் பார்த்தவள் கேட்டாள்,
இது யாரோட ரூம்...........

புன்னகை சிந்தி, அவளை இழுத்தணைத்து சொன்னான் மாறன்,
நம்ம பெட் ரூம்............

திகைத்து பார்த்தாள்..
உங்க ரூமா?..வெறும் கட்டில் மட்டும் தான் இருக்கு..............

கூடவே ரெண்டு அலமாரியும் இருக்கே..............சொல்லி சிரித்தான் மாறன்..

இன்னும் விளங்கவில்லை எழிலுக்கு...அலமாரிகளை திறந்து பார்த்த எழிலுக்கு ஆச்சரியம்..

இதுல எதுவுமே இல்லை..உங்க டிரஸ் எல்லாம் எங்கே வச்சுக்குவீங்க?.........

ஏய் மக்கு எழில், நான் வீட்டை விட்டு போனபிறகு எங்க அப்பா என் திங்க்ஸ் எல்லாம் விட்டு வச்சிருப்பாரா?.. கொளுத்தியிருக்க மாட்டாரு..............மாறன் சொல்ல அதிர்ந்த எழில் அசையாமல் ஏதோ சிந்தித்து கொண்டிருந்தாள்..

எழில், என்ன யோசிச்சிட்டு இருக்க?.............கேட்டான் மாறன்..

எங்க அப்பாவும் என் ஞாபகத்தை எல்லாம் கொளுத்தியிருப்பார் இல்ல..............பாவமாய் கேட்டாள் எழில்..

அவளின் கன்னங்கள் பற்றி கேட்டான்,

அப்பா, அம்மாவை பார்க்கணுமா?..............

அவள் பதில் சொல்லவில்லை..

ஏய், உன் மாறன்கிட்ட உன் மனசுல இருக்கிறதை சொல்ல மாட்டியா?..........மீண்டும் அவன் கேட்க,

பெரியவர் இன்னும் வீட்டுக்கு வரலைங்க..அவரு வந்தா என்ன சொல்வாரோ..............தன் பயத்தை சொன்னாள்..

பெரியவரா?..எழில், அவரு உன் மாமனாரு...............என்று அவன் சொல்ல,

சத்தமாக பேசாதீங்க, அவர் காதுல விழுந்திட போகுது..........என்றாள் அவள்..சிரித்தான் மாறன்..

எதுக்கு சிரிக்குறீங்க........

மாமனார் மேல உனக்கு இருக்கிற மரியாதையை பார்த்து சிரிச்சேன்................மீண்டும் சிரிப்புடன் சொன்னான்..சிணுங்கினாள் அவள்..தன் தோள் சேர்த்து தைரியம் தந்தான் அவன்...

மாறா,....மாறா.......என்றழைத்து கொண்டே மாறனின் அறைக்குள் வந்தாள் அன்னம்..

இந்தா மாறா,..காஃபி குடிய்யா..........சொல்லி அந்த வெண்கல தம்ளரை மாறனிடம் நீட்ட வாங்கி கொண்டான் மாறன்..

ஏய் புள்ள எழில்,..என்ன நீ இன்னும் குளிக்காமல் இருக்க...இந்தா பாரு, மாத்து சேலை கொண்டாந்துருக்கேன்..குளிச்சிட்டு சீக்கிரமா வா..ஆமா, புள்ளைங்க இப்படிதேன் ரொம்ப நேரம் தூங்குவாய்ங்களா?...............அன்னம் கேட்க,

இல்லை பெரிய வீட்..........என்று சொல்லி நாக்கை கடித்துக் கொண்டாள் எழில்..

ஏய்...........சொல்லி முறைத்தாள் அன்னம்..தாயை சலனமின்றி பார்த்தபடி, வெகுநாளுக்கு பிறகு, அன்னம் கையால் போட்ட காஃபியை ருசி பார்த்துக் கொண்டிருந்தான் மாறன்..

இல்ல அத்தை, இன்னிக்கி ட்ரெயின்ல வந்த களைப்பு இருக்கும்ல...அதான் அசந்து தூங்குறாங்க...........அமைதியான குரலில் சொன்னாள் எழில்..

அப்படியா.... அடியேய் எழிலு, அந்த பையன் அமுதன் என்னமா பேசுறான்டி...ஊருக்கெல்லாம் நியாயம் சொல்ற மனுசனுக்கே ஆட்டம் காட்டிட்டான் பார்த்தியா?..அப்படியே அவுக தாத்தாதேன்..அந்த பேச்சு..நடை,...அவன் அந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த அழகை பார்க்கணுமே,..அப்படியே அவுகதாண்டி............பேரனை மெச்சி கொண்டாள் அன்னம்..

அம்மா............அழகாய் அழைத்தான் மாறன்..

என்னய்யா............புன்னகையுடன் கேட்டாள் அன்னம்..

நேத்து அமுதன் அப்படியே அப்பா பேசுற தோரணையிலயே பேசினான்...இல்லம்மா..............மாறன் கேட்க,

ஆமாய்யா மாறா, அமுதன் அப்படியே உங்க அப்பாதேன்..............சொல்லி சந்தோஷ உற்சாகம் கொண்டாள் அன்னம்..

ஆமாம்மா,....... நீங்கதேன் நேத்து மயக்கத்துல இருந்தீகளே...அப்போ நேத்து அமுதன் பேசினது உங்களுக்கு எப்படி தெரியும்?............மாறன் கேட்க எச்சில் விழுங்கினாள் அன்னம்..

அது....அது வந்து.... நான்தேன் மயக்கத்திலே கிடந்தேன்ல...மாரியம்மா சித்திதான்யா சொன்னா.................

ம்ம்...அப்படியா,.....ஏய் எழில் ஃபோன் எங்கே?.........மாறன் கேட்க,

கீழே ரூம்ல...........எழில்..

போய் ஃபோனை எடுத்துட்டு வா..அந்த பையன் வேலுகிட்ட பெங்களூருக்கு அடுத்த டிரெயின்லயே டிக்கட் போட சொல்லு..............

ஏலேய்...இப்போ எதுக்கு டிக்கட்டு போடணும்?..........துடித்தாள் அன்னம்..

அம்மா, உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு அங்கே போட்டது போட்டபடி போட்டுட்டு வந்தோம்..ஆஃபீஸ்ல வேற நிறைய லீவ் ஆயிடும்..இப்போதேன் நீங்க சரியாயிட்டீங்கல்ல, அதான் நாங்க கிளம்புறோம்..........என்று அன்னத்தின் சொன்னவன், எழிலிடம் சொன்னான்,

போ எழிலு போய் ஃபோனை எடுத்துட்டு வா................

எழில் ரூமை விட்டு வெளியேற எத்தனிக்க,

ஏய், எழில் நில்லுடி, இந்தாடி, தலையை சுத்துதுடி, என்னய புடி எழிலு............சொல்லிக் கொண்டே அன்னம் கீழே சரிய, வேகமாக அவளை தாங்கி பிடித்த எழில், அன்னத்தை சுமக்க முடியாமல் தடுமாறினாள்..சிரித்தான் மாறன்..

அம்மா, போதும்மா...எழில் பாவம்..உங்க வெயிட்டை அவளால தாங்க முடியாது...எழுந்துருங்க..உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்லன்னு எனக்கு தெரியும்................புன்னகைத்தபடி மாறன் சொல்ல, வியந்தாள் எழில்..
கண்விழித்து அசடு வழிந்தாள் அன்னம்..

உங்களுக்கு யார் இந்த ஐடியா கொடுத்தது?..மாரியம்மா பாட்டிதானே.............மாறன் கேட்க திருதிருவென விழித்தாள் அன்னம்..

எனக்கு தெரியும், இந்த மாதிரி கிரிமினல் ஐடியா எல்லாம் உன் சித்திக்குதான் வரும்...........சொன்னான் மாறன்...

எப்ப்படிலே கண்டுபிடிச்ச?...........

இந்தா நேத்து வரை சாப்பாடு தண்ணி இல்லாம கிடந்தவக, இப்போ என்னய தேடி மாடி ஏறி வந்துருக்கீக..இது ஒண்ணு போதாதா, நான் தெரிஞ்சிகிட..இதுல உங்க திட்டத்துக்கு என் பொண்டாட்டியையும் கூட்டு சேர்த்தீங்க பாருங்க, அங்கதேன் இருக்கு உங்க சாமர்த்தியம்.............மாறன் சொல்ல எழிலை முறைத்தாள் அன்னம்..

அய்யோ, அத்தை நான் எதுவும் சொல்லல..............பயந்தாள் எழில்..

அவ சொல்லல, நேத்து நீங்க அவளை மிரட்டும் போது நான் முழிச்சிதேன் இருந்தேன்..கடைசியில என் பொண்டாட்டியையும் கிரிமினல் ஆக்கிபுட்டீகல்ல.............மாறன் சொல்ல, எச்சில் விழுங்கியபடி அமைதியாக நின்றாள் அன்னம்..

ஏன்மா...இப்படி பண்ணீங்க?..அப்பாவுக்கு தெரிஞ்சா வீட்டையே ரெண்டாக்கிபுடுவாக..நீங்க நடிச்சிதேன் என்னை வர வச்சீங்கன்னு தெரிஞ்சா அடுத்து அருவாளைதேன் தூக்குவாக.............. சொன்னான் மாறன்,

தூக்கட்டும்யா,...நீ இந்த வீட்ல இருக்கும் போதே என்னய வெட்டி போடட்டும்..அப்பவாச்சும் நீ எனக்கு கொள்ளி வைப்பங்குற நிம்மதியோட கண்ணை மூடிருவேன்................அன்னம் சொல்ல,

ஏன்மா, இப்படி பேசி என்னை காயப்படுத்துறீக............கலங்கினான் மாறன்..

பொரவு என்னய்யா, நீபாட்டுக்கு எங்கேயோ கண்காணாத இடத்தில போய் கெடக்குற...இங்கே நான் உசுர விட்டுட்டா, இந்த ஊர்க்கார பயலுக, சொத்துக்காக என்னை அனாதை பொணமா ஆக்கிபுடுவானுக..இந்த நினைப்புல நான் நிம்மதியா தூங்கி பத்து வருஷம் ஆச்சியா..இந்தா பாருய்யா மாறா, ரொம்ப நாள் வேண்டாம், இந்த அடுத்த வாரம் தீபாவளி வருது..அதுவரைக்கும் அம்மா கூட இருக்கலாம்ல............ அன்னம் கெஞ்சி கேட்க, எழில் முகம் பார்த்தான் மாறன்..அவள் முகத்தில் பயத்தை தவிர வேறொன்றும் காண முடியவில்லை..
மகன் முகத்தையும் மருமகள் முகத்தையும் மாறி மாறி ஏக்கமாக பார்த்தாள் அன்னம்..

அம்மா, வர்ற தீபாவளி வரை இருக்கேன்...ஆனா, அப்பா.........என்று இழுத்தான் மாறன்..

இந்தா, அவுகளை பத்தி பயப்படாதே,..நான் பார்த்துகிடுறேன்...............என்று சொன்னாள் அன்னம்..புன்னகைத்தான் மாறன்...

மெல்லிய குரலில்,
எய்யா, அப்பாவை நான் பார்த்துகிடுறேன்னு சொல்லிட்டேன்ல..நீ வேலை செய்ற ஆப்பீஸ் இங்கே மதுரையில் கூட ஒண்ணு இருக்குதுல்ல..உன் வேலையை மதுரைக்கு மாத்துதல் வாங்கிட்டு இங்கேயே வந்துடலாம்ல.................என்று அன்னம் தன் அடுத்த கட்ட திட்டத்துக்கு உடனே அடிக்கல் நாட்டினாள்... தாயின் தந்திரம் புரிந்து மர்மமாய் சிரித்தான் மாறன்..

இங்கே பிராஞ்ச் இருக்குன்னு அந்த வேலு பையன் சொன்னானா.........விசாரித்தான் மாறன்..

ஏன், இந்த மதுரை சில்லாவுலயே (ஜில்லா) பொறந்து வளர்ந்தவ இந்த அன்னம்..எனக்கு தெரியாதா மதுரையில் எது எது எங்கே இருக்குன்னு................வேலுவை காட்டிக் கொடுக்கவில்லை அன்னம்.. காட்டிக்கொடுக்கா விட்டாலும் உண்மை நானறிவேன் என்று பொருள்படும்படி சிரித்தான் மாறன்..

என்னய்யா, மாத்துதல் வாங்கிடலாம்ல...........ஏக்கமாய் கேட்ட தாய்க்கு சமாதானம் சொல்ல, மனைவிக்கு கண்ஜாடை செய்தான் மாறன்..கணவனின் பார்வையின் அர்த்தம் கண்டு மாமியாரை சமாளிக்க முயன்றாள் எழில்..

இப்போ எவ்வளவு தொலைவில் இருந்தாலும் எல்லோரும் பக்கத்துல இருக்கிற மாதிரி பழகத்தான் ஃபோன் வந்துடுச்சில்ல அத்தை..நான் உங்களுக்கு ஒரு ஃபோன் வாங்கி கொடுக்கிறேன்..நீங்க தினம் எங்ககிட்ட வீடியோ கால் போட்டு எங்க கூட பேசலாம்................என்றாள் எழில்.

அடி போடி கூறு கெட்டவளே, அந்த ஃபோன்ல தெரியுற உருவத்துக்கு நான் கறி சோறாக்கி ஊட்டி விட முடியுமா?..இல்ல என் புள்ளைக்கு தலைவலி, காய்ச்சல்ன்னா அந்த ஃபோன்ல தெரியுற பிம்பத்துக்கு நான் கஞ்சி காய்ச்சிதேன் குடுக்க முடியுமா?...............கண்ணீர் கொண்ட அன்னத்தை, சமாதானம் செய்ய இருவருக்கும் தெரியவில்லை...

வேறு வழியின்றி மாறன் சொன்னான்,
"சரிம்மா, வர்ற தீபாவளி வரை நாங்க இங்கே இருக்கோம்..அப்பா மனசுல நல்ல மாற்றம் ஏற்பட்டால் நீங்க சொல்ற மாதிரி நான் மதுரை பிராஞ்ச்க்கு டிரான்ஸ்வர் வாங்கிட்டு வந்துடுறேன்..இப்போ உங்களுக்கு சந்தோஷமா?",........என்று..முகம் மலர்ந்தாள் அன்னம்..

இந்தா, ரெண்டு பேரும் சீக்கிரம் குளிச்சுட்டு கீழே வாங்க,..கோழி குழம்பு அடுப்புல கொதிக்குது..சாப்பிடலாம்..நான் பிள்ளைகளை எழுப்பி குளிப்பாட்டுறேன்................ உற்சாகமாக சொல்லி சென்றாள் அன்னம்..

தனிமையான தன்னறையில் தன் மனையாளை இழுத்தணைத்து, காதல் பார்வை வீசினான் மாறன்..வெட்கத்தில் சிவந்தாள் எழில்..மீசை முறுக்கினான் மாறன்..

என்ன இது? புதுசா மீசை எல்லாம் முறுக்குறாரு மாறன்..............கேலியாய் அவள் கேட்க,

இது என் ஊரு, என் வீடு, நான் காட்டூர் காளை இளமாறன், தெரியும்ல............மனிதனுக்கே உரித்தான தாய்மண்ணின் கர்வம் சொல்லி இறுமார்ந்தான் இளமாறன்..
இளமாறன் இசைக்க இன்னிசையானாள் இளமாறனின் எழிலரசி....

~~~~~~~~~~~~~~

காலை உணவை முடித்த மாறன், பல ஆண்டுகளுக்கு பிறகு தாய் பூமியை சுவாசித்த சந்தோஷத்தில் தன் நண்பர்களை பார்க்கும் ஆவலில் வெளியே சென்றுவிட, மதிய உணவை தயார் செய்து முடித்து, குழந்தைகளை சாப்பிட வைத்து இளைப்பாறினர் அன்னமும், எழிலும்..

அமுதன் துருதுருவென உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்ததை, ரசித்த அன்னம் ஆனந்தி முகம் களையிழந்து இருப்பதையும் கவனிக்க தவறவில்லை...எப்போதும் எழிலையே ஒட்டிக் கொண்டிருந்தாள் ஆனந்தி...அன்பால் தகப்பனையும் தமையனையும் கட்டளையிட்டு கட்டிப் போடும், பெண் குழந்தையின் மென்மையான மனம் சொக்கநாதரின் கர்வத்தால் மிரண்டு போய் கிடந்தது...

எழில்,......நம்ம ஆனந்தி, ஃபோன்ல பேசும் போது எம்புட்டு தைரியமா பேசினா..இப்போ ஏன் புள்ள உன்னையே ஒட்டி கிட்டு விலக மாட்டேங்குறா.................அன்னம் கேட்டாள்..எழிலுக்கு பதில் தெரிந்த கேள்விதான்...மாமனாரை குறை கூற முடியாதவள்,

புது இடம்ல்ல அத்தை, அதான்,.. போக போக சரியாயிடும்.........என்று மழுப்பலான பதில் ஒன்றை உரைத்தாள்..

இவர்களின் பேச்சுக்கு நடுவே,

அம்மா, நம்ம வீட்டுக்கு போகலாம்மா.........என்று நொடிக்கு ஒருமுறை ஆனந்தி சொல்லிக் கொண்டிருந்தது அன்னத்துக்கு கிலியை ஏற்படுத்தியது...

இந்தா ஆனந்தி, வாடி செல்லம்...என் கண்ணுல்ல........கொஞ்சி பேத்தியை அருகில் அழைத்தாள் அன்னம்..முதலில் வரமறுத்த குழந்தை தாயின் வற்புறுத்தலில் பாட்டியிடம் செல்ல, கிராமத்துக்கே சொந்தமான இயற்கை எழில் காட்டி, பேத்தியை சந்தோஷப்படுத்தினாள் அன்னம்...

வீட்டு புழக்கடையில் சுற்றித்திரிந்த கோழிகளும், வாத்துகளும், துள்ளி குதித்தோடும் முயல்களும் , தொழுவத்தில் குதித்து தாய்ப்பசுவின் மார் முட்டும் கன்றுகுட்டியும், குறும்பாடுகளின் குறுகுறு துள்ளலும் குழந்தையின் பயத்தை மறக்க செய்து இயல்பாக்கி கொண்டிருக்க, மருமகளிடம் சொன்னாள் அன்னம்,

இந்தாடி எழில் நம்ம வீட்டு பூசையறையில் நம்ம குலசாமி துண்ணூறு இருக்கும்..எடுத்துட்டு வா..புள்ளைக்கு பூசி விட்டா, பழையமாதிரி சுறுசுறுப்பா ஆயிடுவா..........அன்னம் சொல்ல,

ஹாலின் ஒரு பகுதியில் இருந்த பூஜையறைக்குள் நுழைந்தாள் எழில்..

நேற்று இரவு, கோபம் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிய சொக்கநாதன் அந்நேரம் சரியாக வீட்டுக்குள் வந்தார்..வந்தவர் அன்னத்தின் அறைக்கு சென்று பார்க்க, படுக்கையில் அன்னம் இல்லை,...

அன்னம்......அன்னம்....... என்று அழைத்துக் கொண்டு சொக்க நாதன் அறையிலிருந்து வெளியே வரவும், விபூதி தட்டுடன் எழில் பூஜை அறையில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது...பூஜை அறையிலிருந்து வெளிவந்த எழிலை கண்ட சொக்க நாதன்,

ஏலே......ய்,......பாண்டி..............என்று கண்கள் சிவக்க வீடே அதிரும் படி கத்த, கையில் இருந்த விபூதி தட்டை கீழே தவறவிட்டாள் எழில்..புழக்கடையில் இருந்து ஓடி வந்தாள் அன்னம்...அன்னத்தின் கையில் இருந்த ஆனந்தி சொக்க நாதனை பார்த்த பயத்தில் அன்னத்தை இறுக பற்ற, பேத்தியின் பயத்தின் காரணம் அறிந்தாள் அன்னம்...சற்றே நிதானமாகவே ஓடி வந்தான் அமுதன்..பிறகே அலறியடித்து கொண்டு ஓடி வந்தான் வேலையாள் பாண்டி..

ஏலேய், நீங்கல்லாம் என்னலே செஞ்சிட்டு இருக்கீக..தெருவில இருக்க வேண்டியதெல்லாம் என் வூட்டு பூசை அறைக்குள்ள போகுது..என் சாமியே தீட்டு பட்டு போச்சுல..உடனே அவ நின்ன இடத்தை கழுவி விடுலே...............சொக்கநாதன் கொட்டிய அமிலம் தோய்ந்த வார்த்தைகளில் எழிலின் கண்களும் அமிலம் சுரந்தன..

என்னாங்க இது, அவ நம்ம மருமொவ பொண்ணு..அவளை போயி.............என்று ஆரம்பித்த அன்னத்தின் வார்த்தைகள் சொக்கநாதனின் தீப்பார்வையில் மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டன..

யாருடி?..யாருக்கு யாரு மருமொவ?..உன் மொவன் உல்லாசத்துக்கு அவன் கூட இருந்தவல்லாம் எனக்கு மருமொவளா..................கொன்று கூறு போடும் வார்த்தைகளை நிதானமின்றி சொக்கநாதன் வீசி எறிய,

மூச்சை உள்ளிழுத்து ஏங்கி நின்றாள் அன்னம்...

தன் மன்னவனுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல் வாழ்வை கொச்சைப்படுத்திய வார்த்தைகளை கேட்டு சுக்கல் சுக்கலாக இதயம் நொறுங்கி போனாள் எழில்...இவ்வார்த்தைகளை தன் மாறன் கேட்டிருந்தால் அவன் எத்தனை வேதனைக்கு ஆளாவான்? என்று இந்த சூழ்நிலையிலும் தன் கணவனுக்காக வருந்திய எழில், இவ்வார்த்தைகள் அவன் காதில் விழாமல் காத்த தெய்வத்துக்கு மனதால் நன்றி உரைத்தாள்..

ஆனால் உண்மையில் மாறன் இங்கு இருந்திருந்தால், சொக்கநாதனின் வாய் இக்கொடுஞ்சொற்களை உமிழாமல் தடுத்திருப்பான் என்பதே உண்மை....
அவமானம் தன்னை தீயாய் சுட்டெரிக்க, வீட்டின் புழக்கடைக்கு சென்று விட்டாள் எழில்..

அப்பத்தா,.......இந்த ஓல்ட் மேன் என்ன சொல்றாரு?..அம்மா ஏன் அழுறாங்க?..அவர் சொல்றது எனக்கு புரியல...என்ன சொல்றாரு...............என்று தனக்கே உரித்தான மழலை மொழியில் சொக்கநாதனின் சாயலில் மிடுக்காக கேட்டான் அமுதன்......

"எதையும் சாதித்து விடும் திறன் கொண்டவன் நான்", என்ற அகங்காரத்தில் இதுவரை வாழ்ந்து தீர்த்த சொக்கநாதன் பேரன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல இயலாது ஸ்தம்பித்து வெட்கி நின்றார்..அவரை தீயாய் முறைத்த அன்னம், கணவன் முகம் பார்க்கவும் கூசி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்..மீண்டும் வீட்டில் இருக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினார் சொக்கநாதன்....

பரந்து விரிந்திருந்த புழக்கடையில் இருந்த மாட்டுத் தொழுவத்தின் அருகே கண்ணீர் தாங்கி நின்றாள் எழில்..என் மாறனை உடனே பார்க்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாய் அடம்பிடித்தது எழிலின் இதயம்...அன்னம் எழிலின் தோள் தொட, திரும்பினாள் எழில்..

ஏதோ அறிவு கெட்டத்தனமா இப்படி பேசிப்புட்டாக..அவுகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன் எழில்...இவுக இப்படி பேசினதை மாறன்கிட்ட.................என்று வாக்கியத்தை முடிக்க முடியாமல் தடுமாறினாள் அன்னம்..

இல்ல அத்தை, நான் அவங்க கிட்ட சொல்ல மாட்டேன்..உங்களுக்காக இல்லை..பெரியவக பேசுன வார்த்தைகளை அவங்க தெரிஞ்சுகிட்டா ரொம்ப வேதனை படுவாங்க..அவங்களை வேதனை படுத்துற எதையும் நான் செய்யமாட்டேன்.................சொல்லிய எழிலின் விழிகளில் வெள்ளப்பெருக்கு நிற்கவில்லை...எதுவும் புரியாத குழந்தைகள், அன்னையின் துயர் கண்டு கபடின்றி கவலை கொண்டன..


மனிதத்துக்கும்
சாதிக்கும் நடக்கும் போர்.........
தொடரும்......


உயிர் கொல்லி சாதி தொட்டு
உன்னத சாமியும் தீட்டாகி
போகுமோ..............

சக்தி......
 
Top