• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிக்கன் சூப்

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
977
494
93
Tirupur
சிக்கன் சூப்



பரிமாறும் அளவு - 2 நபருக்கு

1628073706556.png



தேவையான பொருள்கள் -

சிக்கன் - 100 கிராம்

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மல்லித் தூள் + சீரகத் தூள் - 1/2 மேஜைக்கரண்டி

மிளகுத் தூள் - 1 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க -

தக்காளி - 1

பெரிய வெங்காயம் - 1/4

பூண்டு - 2 பல்

செய்முறை -

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுத்தவற்றை மிக்சியில் அரைத்து கொள்ளவும்.

குக்கரில் அரைத்த விழுது, சிக்கன், மஞ்சள் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், உப்பு மற்றும் 3 கப் தண்ணிர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும். சிக்கன் சூப் ரெடி.

பின்னர் பரிமாறும் போது தேவைகேற்ப உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பரிமாறவும்.