• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிந்தித்து செயல்பட ஒரு நொடி

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,396
591
113
44
Ariyalur
கூப்பிடும் தூரம் வைகுண்டம்

ஓர் அரசருடைய சபையில் பாகவத உபந்யாசம் நடந்தது. அன்றைய தினம் உபந்யாஸத்தில் கஜேந்திர மோட்சம் பகுதி பற்றி பாகவதர் கூறிக்கொண்டிருந்தார்.
பாகவதர் உணர்ச்சி பொங்கத் தத்ரூபமாய் கதை சொன்னார்.

'முதலையின் வாயில் சிக்கித் துன்பப்பட்ட யானை ''நாராயணா....... நாராயணா ''என்று உரத்த குரலில் ஓலமிட்டது. அதை கேட்ட வைகுண்டத்தில் இருந்த நாராயணன் அங்கிருந்து ஓடோடி வந்தான் ' என்று பாகவதர் கூரிய போது அரசன் குறுக்கிட்டார்.

பண்டிதரே !! சற்று நிறுத்துங்கள். அந்த வைகுண்டம் எவ்வளவு தூரம்?? தயவு செய்து சொல்ல முடியுமா உங்களால் !! என்றார் அரசர்.

அரசரின் இந்த கேள்வியால் அந்த உபந்யாசர் சற்று தடுமாறி போனார். அவருடைய படிப்பறிவு சட்டென்று அவருக்கு கைகொடுக்க வில்லை. அவர் மட்டும்மின்றி அந்த சபையில் இருந்த ஏராளமான அவைப் புலவர்களின் நிலையும் அதேதான்.
அப்பொழுது அரசருக்கு வெண்சாமரம் வீசிக்கொண்டு இருந்த ஓர் ஏவலாளி, நடப்படத்தை பார்த்தும் கேட்டுக்கொண்டும் இருந்த அவன் சட்டென்று அரசரிடம்
""அரசரே !!!குறிக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும், தாங்கள் அனுமதி கொடுத்தால் நான் உங்களது இந்தக் கேள்விக்கு பதில் கூறுகிறேன்.... "" என்றான்.
அதற்கு அரசர் ""எனக்கு வேண்டியது சரியான பதில், அதை யார் கூறினால் என்ன, எங்கே சொல் பார்க்கலாம்.... ""என்றார் மகிழ்ச்சியுடன்.

அந்த பணியாளன் சொன்ன பதில் இதுதான்.....
""அரசரே !!!துன்பப்படும் யானையின் கூக்குரல் எத்தனை தூரம் எட்டியதோ, அத்தனை தூரத்தில் தான் உள்ளது வைகுண்டம் ""என்றான்
அந்த ஏவலாளி.
இந்த பதில் அவையில் இருந்த அத்தனை பேரையும் ஆச்சர்யம் அடைய செய்தது.
நன்றி 💐💐💐💐💐🤔