• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம்

MEKALA THEVARAJAN

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2021
Messages
38
இந்த பாடக்கு முன்னாடி வர ஹம்மிங் செம்ம

“சின்னஞ் சிறு வயதில் எனக்கோர்”

பொதுவாக பெண் பார்க்கும் நிகழ்ச்சியில், பெண், கடவுள் பாட்டை பாடுவது வழக்கம். ஆனால் இந்த பாடலை காதல் பாடலாக அதுவும்
“காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்”
என்று வரிகளை வைத்து பாடலை அமைக்கும் துணிச்சல் கமலஹாசனுக்கு மட்டுமே வரும்.

வீணை, குழல், மிருதங்கம் இவற்றோடு உரலில் வெற்றிலை இடிக்கும் ஓசை, வெற்றிலை மெல்லும் ஒலி, இவற்றைக்கூட இசையாக்கி இருப்பார் இசைஞானி.

கணவனையே உயிராக நினைக்கும் வெளி உலகம் அறியாத மனைவி. கணவனோ ஒரு நடிகை மீது சபலம் கொண்டு திரிகிறான். இதில் மனைவி கேரக்டரில் ஸ்ரீதேவி நடித்திருப்பார். “மாமி” மேக்கப் அவருக்கு பாந்தமாக பொருந்தியது.

இந்தப் படத்தில் வரும் நடிகை கேரக்டரில், பிரபல இந்தி நடிகை ரேகாவை வைத்து மூன்றாயிரம் அடி வரை காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், ரேகா தொடர்ந்து நடிக்க வராமல் இருந்து விட பின்னர் `தீபா’வை வைத்து எடுக்கப் பட்டதாம்.

கண்களை `சட் சட்’டென இமைப்பது, வெகுளித்தனமான உடல் மொழி போன்ற மேனரிசங்களை கமல் தன் கேரக்டரில் சேர்த்து மெருகேற்றி இருப்பார்.

அச்சம்,மடம், நாணம் போன்ற (கடந்த நூற்றாண்டுக்கு சொந்தமான) குணங்களை தன் நடிப்பில் ஸ்ரீதேவி வெளிப்படுத்த அவற்றை தன் குரலிலேயே பிரதி எடுத்திருப்பார் ஷைலஜா.

“உள்ளத்தில் வைத்திருந்தும்
நானோர் ஊமையைப்
போலிருந்தேன்…”

என்ற இடத்தில் அடுத்த வரிக்கு செல்லாமல் அவர் தடுமாற,

“கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு
என்றான்” என்று இலாவகமாக தன் குரலை இணைப்பார் ஜேசுதாஸ்.

அத்தனை இயல்பாக ஜேசுதாசின் குரலோடு உடனியைந்து ஒலித்திருக்கும் ஷைலஜாவின் குரல் கேட்கவே பரவசமூட்டும்.

இந்த பாடலின் இறுதியில் ஜேசுதாஸ் பாடும் ம் …ம் …..ம் …ம்…. என்ற சங்கதிகள், பாடல் ராகத்தின் (ஆபேரியாம்) கம்பீரத்தையும் , ஜேசுதாசின் குரல் திறனையும் காட்டி நிற்கும்.
—————————-
படம்: மீண்டும் கோகிலா (1981)
இசை: இளையராஜா
வரிகள்: கண்ணதாசன்
குரல்: கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா
—————————-
பாடல் வரிகள்:

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான்
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்
ஆ ஆ ஆ

கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான்

சபாஷ், பலே

வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன்
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன்
காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா…

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
881
:love::love::love:
 
Top