சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகு - 17
தன்னுடைய வீட்டில், தன்னுடைய அறையில், தன் கட்டிலில் தூக்கம் வராமல் தான் விழித்திருக்க, தனதருகில் சற்று இடைவெளி விட்டு முதுகை காட்டிக்கொண்டு படுத்திருக்கும் வசீகரன் கொண்ட உறக்கத்தில், விட்டுப்போன கோபம் மீண்டும் பற்றிக் கொண்டது ஜேபிக்கு.
காற்றில்லா தேசத்தில் அடைபட்டது போல் சுவாசத்திற்கு தவிக்க ஆரம்பித்தாள்.
தன்னைச் சுற்றி இருந்த போர்வையை தூர வீசிவிட்டு எழுந்தவள், அறையின் இருளில் எதனையோ தேடிக் கண்டுபிடித்து கைகளில் பத்திரப்படுத்திக் கொண்டு மீண்டும் கட்டிலில் வந்து படுத்துக் கொண்டாள்.
மெல்ல விரல்களை விரித்து, தன்னுள்ளங்கைக்குள் சிறை எடுத்திருந்த சோப்பு உருவச் சிலையை, தன் முகத்தருகே கொண்டு வந்து, இருளில் பார்க்க நினைத்தாள்.
கும்மிருட்டில் ஒன்றும் தெரியாமல் இருக்க, நடுங்கிய விரல்களுடன் தன்நாசியின் அருகே கொண்டு வந்தாள்.
இளம் ரோஜாவின் வாசனைத் திரவியத்தை சுமந்திருந்த அந்த சோப்பு உருவம், தன் நறுமணத்தை அவள் நாசியின் வழியே காற்றுப்பைக்கு அனுப்பியது.
சீரற்ற தன் சுவாசம் சீரானதைப் போல் உணர்ந்தவள், அந்த சோப்பு உருவத்தை பார்த்து, "மிஸ்டர் வசீகரன்! என்ன தைரியம்? என் சொந்தங்களை எல்லாம் அபகரிக்க பார்க்கிறீர்களா? என்னை தனிமைப்படுத்தி, உங்கள் பக்கம் சாய்த்துக்கொள்ள திட்டமிடுகிறீர்களா? அன்பு தான் என் பலம் என்று தெரிந்து கொண்டு, அதே ஆயுதத்தால் என்னை வீழ்த்தப் பார்க்கிறீர்களா?
என் வீட்டிற்குள் நுழைந்ததால் என் இதயத்திற்குள்ளும் நுழையலாம் என்ற எண்ணமா? என் மனம் உறுதியாய் இருக்கும் வரை என்னை உங்களால் வெற்றி கொள்ள முடியாது. என்னை கரைக்கலாம் என்று நினைத்தால், உங்களை கரைத்து விடுவேன் ஜாக்கிரதை! " என்று காற்றோடு கலந்த கிசுகிசுப்பான குரலில் பேசினாள்.
எவனுடைய காதுகளில் இந்த வார்த்தைகள் எல்லாம் விழக்கூடாது என்று மெதுவாக பேசினாளோ, அந்த வசீகரனுடைய செவிகள் திவ்யமாக அவள் பேசியதைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்தது.
அவனுடைய விரல்கள் அலைபேசியில் வழக்கம்போல் அவளுக்கு கவிதையை அனுப்பும் தன் வேலையைச் செய்தது.
குறுஞ்செய்தி வந்த ஒலி கேட்டதும், ஜேபி தன் அலைபேசியை உயிர்பித்து, அந்த உருவமற்றவனின் கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்.
" விழிகள் உறங்கிக் கொண்டு இருக்க,
இதயம் உன் பெயரைச் சொல்லி விழித்திருக்க,
உன் வழித்தடம் கண்டு
உன் கால் தடம் சேர்ந்தேன்.
என் காதல் துணைசேர முடியாமல் தடுமாறினாலும்,
நம் இருவரின் கால் தடங்கலாவது
இணை சேரட்டுமே..."
-ஜேகே
அவளின் ஒரு கையில் வசீகரனின் உருவம் இருக்க, மறு கையில் உருவம் இல்லாதவனின் கவிதை இருக்க, எதனையும் ரசிக்க முடியாமல் அவளின் மனம் தத்தளித்தது.
சோகம் இழையோடும் அந்தக் கவிதையில், எழுதியவனின் தவிப்பை உணர்ந்தாள். இனியும் இதனை தொடர விடக்கூடாது என்று நினைத்தவள் முதன் முறையாக அந்த கவிதைக்கு பதில் அனுப்ப நினைத்தாள்.
"உங்கள் கவிதையின் முகவரி இடம் மாறியது! இதயத்தை இடம் மாற்ற முயற்சி வேண்டாம்! முற்றும் போதுமே" என்று பதில் அனுப்பினாள்.
ஜேபியின் பதிலைக் கண்டதும் வசீகரனின் உள்ளம் குத்தாட்டம் போட்டது.
'அம்மணி! ம்... ஹூம்... உங்களை என்னில் முற்றும் தொலைய வைக்கப் போகிறேன். உங்களுடைய அனுதாப ஓட்டு ஒரு பக்கமும், ஆனந்த ஓட்டு ஒரு பக்கமும் வாங்கி வெற்றி அடையப் போகிறேன்' என்றவன்,
"நிலவினை ரசிப்பதற்கு, நிலவிடம் அனுமதி கேட்பதுண்டோ?" என்று பதில் அனுப்பினான்.
வசீகரன் அனுப்பிய பதிலில் அசட்டையாக தன் தோள்களை குலுக்கிக் கொண்டவள், கண்களை இறுக்க மூடி உறங்க முற்பட்டாள்.
சிறிது நேரம் கடந்ததும், ஜேபி ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் என்பதை அறிந்து கொண்ட வசீகரன், நீல ஒளியைக் கசியும், அறையின் விடிவிளக்கை உயிர்ப்பித்தான்.
இளக்கம் இல்லா இறுகிய முகத்துடன் உறங்கும் ஒரு முரட்டு குழந்தையைக் கண்டவனின் இதழ்கள் மெல்லப் பிரிந்து சிரித்தது.
அவளை ஆசையுடன் அணைத்து முத்தமிட்டு கொண்டாடத் துடித்த தன் உணர்வுகளை கட்டுப்படுத்துவது பெரும் சவாலாக இருந்தது வசீகரனுக்கு.
தன் ஆசை, கனவு, காதல் எல்லாம் கண் முன்னே துயில் கொண்டிருந்தும், சொந்தம் கொண்டாட முடியாத விரக்தியில், அவனின் உஷ்ணக்காற்று, உதட்டுக் குவியலிலிருந்து வெளியேறி, அவள் முகத்தை தாக்கியதும், "ம்..." என்று முகத்தை சுருக்கி, தூக்கத்தில் மிரட்டினாள் அவனின் செல்ல ராட்சசி.
'அம்மணி எப்பவும் உஷார் தான்' என்று புருவம் உயர்த்தி அவளைப் பாராட்டியவன், ஒற்றைக் கையை பத்திரப்படுத்தி உறங்கும் அவளை ஆச்சரியமாய் பார்த்தான்.
நீல ஒளியில், நித்திரை கொண்டு, சந்திரகாந்தமாய் தன்னை ஈர்க்கும், இந்திர நீலத்தின் தளிர் விரல்களைப் பற்றினான்.
மருதாணி இட்டு சிவந்திருந்த விரல்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டு, உள்ளங்கையில் எதனையோ பொத்திவைத்து மறைத்திருந்தன .
பூட்டிக் கொண்ட விரல்களுக்கு, முத்த சாவியிட்டு திறக்கலாம் என்று தன் உதட்டருகே கொண்டு சென்றவனின், மீசை முட்கள் குத்திய வேகத்தில், அவளின் சிவந்த விரல்கள் தாமரை இதழ்கள் போல் மலர்ந்தது.
அவளின் உள்ளங்கையில் நடு நாயகமாக வீற்றிருந்த அந்த சோப்பு உருவச் சிலையை கையில் எடுத்தான். அது வித்யாசமாக இருந்ததும், அலைபேசியின் ஒளி வெள்ளத்தில் அதனைப் பார்த்தவனின் விழிகள் வியப்பில் விரிந்தது.
தத்ரூபமாக இருக்கும் தன்னுடைய பிரதியை தன்னுடன் பத்திரப்படுத்திக் கொண்டான்.
அவள் மனதில் மண்டி இருக்கும் வெறுப்பை எல்லாம் அகற்றிவிட்டு தன் காதலை நிறைக்கும் நாள் விரைவில் வந்தே தீரும் என்று நம்பிக்கை கொண்டான்.
அவளிடம் தனக்குப் பிடித்ததே அவளது அதிரடியும், அடாவடியும் தான் எனும்போது, அவளின் கோபம் கூட அழகுதான் என்று எண்ணினான்.
' ரொம்ப நாள் என்னால் தாங்க முடியாது விரைவில் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடு இறைவா!' என்று இறைவனுக்கு அவசரமாய் ஒரு விண்ணப்பத்தை போட்டு விட்டு உறங்க முற்பட்டான்.
அழகான காலைப் பொழுது மலர்ந்ததும், தன் முதுகுக்கு கீழே ஏதோ ஊர்வது போல் உணர்ந்த வசீகரன் மெல்ல கண்விழித்துப் பார்த்தான்.
ஜேபியின் கரங்கள் எதனையும் கண்டுகொள்ளாமல் தீவிரமாகத் தேடியது.
அந்தக் காலை அவனுக்கு அத்தனை ஆச்சரியத்தை சுமந்து கொண்டு மலர்ந்திருந்தது. அவனின் முகத்திற்கு நேராக ஜேபியின் முகம் தெரிந்ததும், "தேங்க்ஸ் கடவுளே!" என்று சத்தமாக கத்தியவன் ஜேபியை அணைக்க முற்பட்டான்.
"ஹேய்..." என்ற ஜேபியின் சத்தத்தில், காதை குடைந்து கொண்டு, தலையை இருபுறமும் அசைத்து தன்னை சமன் செய்ய முயன்றான்.
அவனின் முதுகை இயல்பாய் பற்றி இருபுறமும் மாறி மாறி திருப்பி படுக்கையில் எதையோ தேடினாள் அவசரமாக.
படுக்கையில் கால் மீது கால் போட்டு லேசாக ஆட்டிக்கொண்டு, "மேடம் எதை தேடுகிறீர்கள் என்று சொன்னால் நானும் கொஞ்சம் தேடி கண்டுபிடித்து தருவேன்" என்றான்.
"நோ தேங்க்ஸ்..." என்று வெடுக்கென்று சொன்ன ஜேபி, கட்டிலுக்கு அடியில் குனிந்து தேடினாள்.
தனக்கான அவளின் தேடலை சுகமாய் ரசித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
யோசனையுடன் அறையை விட்டு வெளியேற நினைத்தவளின் முன் தன் இரு கைகளையும் நீட்டி, "என்னங்க அம்மணி?" என்றான் பரிவாக.
"அது..." என்று ஆரம்பித்தவள், பின் தலையை மறுப்பாக அசைத்து, "ஒன்றும் இல்லை" என்று கூறி விட்டு குழப்பத்துடன் வெளியேறினாள்.
'என்னடா வசீ! உனக்கு வந்த சோதனை! உயிர் இல்லாத ஒன்றினை உருகி உருகி தேடுபவள், அவளையே உயிராக நினைக்கும் உன்னை கண்டுகொள்ளக் கூட இல்லையே!' என்று தனக்குத்தானே பேசிக் கொண்டவன், கையில் வைத்திருந்த சோப்பு உருவச் சிலையை காற்றில் பறக்க விட்டு பிடித்து விளையாட ஆரம்பித்தான்.
ஒரு கட்டத்தில், அவன் மிகவும் உயரமாக தூக்கிப் போடவே, அந்த சிறிய சோப்பு உருவம் தவறி தரையில் கீழே விழ இருந்த கடைசி நிமிடம், மெத்தென்ற ஓர் மென் கரத்தில் சேர்ந்தது.
வசீகரன் மேலிருந்து குனிந்து கீழே பார்க்க, ஜேபியோ கீழிருந்து மேலே அவனை முறைத்துப் பார்த்தாள்.
" என்னங்க அம்மணி முறைப்பெல்லாம் பலமா இருக்கு?" என்று கிண்டல் குரலில் கேட்டான்.
" மிஸ்டர் வசீகரன்! நீங்கள் உங்கள் எல்லைக்குள்ளே நிற்பது தான் உங்களுக்கு நல்லது" என்றாள் சூடாக.
"ம்... நான் உங்க மனசுல இருக்கறதுனால தானே, என்னை மாதிரியே உருவம் செஞ்சு வச்சு ரசிக்கிறீங்க. நான் பார்த்து விட்டேன் என்றதும் நடிக்கிறீங்க. நீங்க பலே ஆளு தான் அம்மணி" என்றான்.
" வீண் கற்பனை. என் வாழ்க்கைப் பயணத்தில், என்னோடு பயணிப்பவர்களுக்கு உருவம் கொடுப்பது என் வழக்கம். என் கற்பனைகளை சிதற விடுவது எனக்குப் பிடிக்காது. அதற்குப் பிடித்தம் தான் பதிலாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களைப் பற்றிய என் நிலைப்பாட்டை நான் என்றோ விளக்கிக் கூறி விட்டேன்" என்று அவன் பதிலை எதிர்பாராமல் வெளியேறிச் சென்றாள்.
' காற்றை விழுங்கிக் கொண்டு நீரின் அடியில் அமிழும் நீர்க் குமிழி, நீரின் மேல் வந்தே தீரும். அடைக்கப்பட்ட காற்றை உடைத்தே தீரும். அதுபோல் நம் காதலும் வெளிவந்தே தீரும் ஏனென்றால் என் காதல் உண்மையானது. அது உறங்கும் உன் காதலையும் தட்டி எழுப்பும்' என்றான்.
வசீகரனின் சோப்பு உருவம் உடைவதற்குள் பிடித்துக்கொண்டவளின் உள்ளம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது. சற்று தாமதித்திருந்தாலும் இரண்டாய் உடைந்திருக்கும். ஏனோ அவனின் பிரதிபலிப்பு அழிவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை ஜேபியால்.
'ஹே ஜேபி! உன் படைப்பு அழிவதைத் தான் நீ விரும்பவில்லை. மற்றபடி வசீகரன் மேல் உனக்கு எந்த உணர்வும் இல்லை' என்றவளின் மனம் அவளை சமாதானம் செய்தது.
" ஆமாம் அப்படித்தான்!" என்று அவளின் உதடுகளும் அழுத்தமாய் சொன்னது.
மறுநாள் அவர்கள் அலுவலகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. காலையிலேயே மங்கி பிரதர்ஸ் டீம் ஜேபியின் வீட்டில் களம் இறங்கியது.
காலையிலிருந்து விருந்து, கேலி கிண்டல் என்று கலகலப்பாக இருந்தது. ஜேபியும் தன் நண்பர்களின் இயல்பான பேச்சில் தன்னிலையை மீட்டெடுத்துக் கொண்டாள்.
மாலை வந்ததும் பீச் செல்லலாம் என்று முடிவு செய்தனர். வசீகரனுடைய காரில் மங்கி பிரதர்ஸ் டீம் பின்னால் ஏறிக்கொள்ள, ஜேபியும் அவர்கள் அருகில் ஆரவாரமாய் அமர்ந்து கொண்டாள்.
தனக்கு ஏசி ஒத்துக் கொள்ளாது என்று அன்னம்மாள் பாட்டியும் பின்னால் அவர்களுடன் அமர்ந்து கொள்ள, " மாமா என்னுடன் அமர்ந்து கொள்ளுங்கள்!" என்ற வசீகரனின் அழைப்பில் மனம் குளிர்ந்து பெருமை பொங்க, மருமகன் அருகில் அமர்ந்து கொண்டார் பெருமாள்.
சீட் பெல்ட் போட தடுமாறியவருக்கு, வசீகரன் பொறுமையாக சீட் பெல்ட்டை மாட்டி விட்டான்.
அவனுடைய ஒவ்வொரு செயலிலும், கவனிப்பிலும் மனம் நிறைந்தார்.
பீச்சில், சற்று கூட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினான் வசீகரன்.
வருடங்கள் பல கடந்து பீச்சிற்கு வந்திருந்தனர் பெருமாளும், அன்னம்மாளும். இளம் மாலை நேரக் கடற்காற்று இதமாய் தீண்டி, அனைவரின் அகத்தையும், புறத்தையும் குளுமையால் நிறைந்தது.
அந்த ரம்மியமான சூழ்நிலையில் கடல் அலைகளோடு கால் விரல்களை விளையாட விட்டு, கற்றை கூந்தல் காற்றில் களைந்தாட அடிவானத்தை பரவசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் ஜேபி.
அவளின் பின்னால் தன் கைகளை மார்பில் குறுக்கே கட்டிக்கொண்டு, தன்னை அடியோடு சாய்த்த அவளை ரசித்துக் கொண்டிருந்தான் வசீகரன்.
இவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு, மற்றவர்கள் சற்று தூரமாகவே தள்ளி இருந்தனர்.
இளம் பெண்கள் கூட்டம் ஒன்று அவர்களை கடந்து சென்றது. மங்கி பிரதர்ஸ் டீம் அந்தப் பெண்களை ஆவலாக பார்த்தது.
அந்த இளம் பெண்கள் கூட்டம் வசீகரனின் அதிநவீன காரைக் கண்டு, "வாவ்!" என்று ஆச்சரியப்பட்டது.
உடனே அன்னம்மாள் அந்தக் காரின் அருகே சென்று, அதன் கதவில் ஒயிலாக சாய்ந்து கொண்டு, கிருஷ்ணாவை பார்த்து, "கீதா" என்று சத்தமாக அழைத்தார்.
கிருஷ் திருதிருவென முழிக்க, மீண்டும் அன்னம்மாள் அவனைப் பார்த்து, விரல்களால் சொடுக்கிட்டு, ஒற்றை விரலை அவன் புறம் நீட்டி, "உன்னைத்தான் கீதா!" என்றார்.
அந்த இளம் பெண்கள் கூட்டம் கிருஷ்ணாவை பார்த்து கலகலவென நகைத்து, "நான் கூட ஸ்மார்ட்டா இருந்ததும் பையன் என்று நினைத்தேன். பேரு கீதா என்றால், அப்போ..!" என்று கிருஷ்ணாவின் காது படவே குறும்பாக பேசி, கேலி செய்தது.
"ரைஸா... பேபி....!" என்று சற்று கோபமாகவே கிருஷ்ணா அழைத்தான்.
"கீதா!" சற்றும் மிடுக்கு குறையாமல் அன்னம்மாள் மீண்டும் அழைத்தார்.
"யோவ் பாட்டி!" கோபம் தாறுமாறாக வந்தது கிருஷ்ணாவிற்கு. மதுவும், யாதவும் சமாதானம் செய்தும், அவர்களின் பிடியிலிருந்து நழுவி அன்னம்மாள் பாட்டி அருகில் வேகமாக வந்தான்.
"ம்... கீதா" என்றார்.
"நெஜமாவே நான் அழுதுடுவேன். சத்தியமா முடியல. யாரு அந்த கீதா? " என்று கோபமாக வந்த கிருஷ்ணா பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
அவனுக்கு பதிலளிக்காத அன்னம்மாள், அவன் சட்டையின் காலரை பிடித்து இழுத்து, சட்டை பைக்குள் வைத்திருந்த வசீகரன் கார் சாவியை எடுத்தார்.
" எவ்வளவு நேரமா நானும் கேட்டுகிட்டே இருப்பேன். நீ தரவில்லை என்றால் என்ன? நான் எடுத்துக் கொள்வேன்" என்றவர் கார் சாவியை தன் விரலில் மாட்டிக் கொண்டு, படு ஸ்டைலாக சுற்றிக் காட்டி அந்த இளம் பெண்கள் கூட்டத்தை பார்த்து, " மீ ஓனர்" என்றார்.
"வாவ் சூப்பர்!" என்று பாட்டியை பாராட்டி விட்டு அந்தக் கூட்டம் நகர்ந்து சென்றது.
"கார்.... சாவி... ஓ... கீ... தா...." என்று குழறிய படியே மயக்கம் வருவது போல் விழப்போன கிருஷ்ணாவை, யாதவும் மதுவும் தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.
"காரை நிறுத்துவதற்காக நீ தானே என் பேரனிடமிருந்து சாவியை வாங்கினாய்! அப்போ நான் உன்கிட்ட தான கேட்க முடியும். அந்தக் கார் சாவியை நான் வைத்திருந்தால் என்னை தானே காரின் ஓனர் என்று நினைப்பார்கள். எப்படி என் ராஜ தந்திரம் " என்று சிரித்தார் அவர்களின் செல்ல ரைஸா பேபி.
"ஆத்தா இங்கிலீஷ் மகமாயி"! என்று மூவரும் அவரின் பாதம் பணிந்தனர்.
சிறகுகள் நீளும்...