சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகு - 22
' என்னை வைத்தே என்னைப் பற்றிக் கவிதை எழுத வைக்கும் கேடி கில்லாடி அம்மணி!' என்று கரைந்து வரும் அவளின் கோபத்தில் வசீகரன் உறைந்து உருகினான்.
ஜிவ்வென்ற உணர்வில் ஜேபிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தான்.
" உங்கள் அன்பனாய் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஒரு நண்பனாய் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி! இதோ நீங்கள் கேட்ட கவிதை!" என்று எழுதி விட்டு கவிதையைத் தொடர்ந்தான்.
" ஒரு வானம்! இரு சிறகு!
கோபத்தின் நிறம் சிகப்பாம்!
என் சிறகுகள் உன் வானத்தில் தீட்டும் வண்ணம் சிகப்பு!"
குறுஞ்செய்தியை வாசித்த ஜேபியின் விழிகள் பளபளத்து ஒளிர்ந்தது. தனது மன உணர்வுகளை துல்லிதமாய் பிரதிபலிக்கும் அந்தக் கவியாளனை ஏனோ மீண்டும் ரசிக்கத் தோன்றியது.
ஒரு வானம்! இரு சிறகு! என்ற வரி, வசீகரன் மீது அன்பும் கோபமும் மாறி மாறி வருவதை கோடிட்டுக் காட்டியது. ஏனோ இறுதியில் அவன் மீது கோபமே மேலிடுவதை அடுத்த வார்த்தைகள் பிரதிபலித்தது.
தனக்கு கவிதை எழுதித்தந்த அந்த முகம் தெரியாத நட்பிற்கு நன்றி சொல்லிவிட்டு, அந்தக் கவிதையை வசீகரனுக்கு வேகமாக அனுப்பி வைத்தாள்.
தான் அனுப்பிய கவிதை சென்ற வேகத்தில் தன்னை மீண்டும் வந்தடைந்ததைக் கண்டதும் வசீகரனின் உதட்டோரம் இளநகை பூத்தது
தனது ஒற்றை வானம் முழுவதும் அவளளின் சிறகுகள் வானவில் வண்ணங்களை வாரி இறைக்கும் காட்சியைக் கற்பனையில் நிறைத்துக் கொண்டான்.
மனம் கொண்ட மகிழ்ச்சியில் ஜேபிக்கு அழைப்பெடுத்தான். அவனின் நீண்ட அழைப்புகள் அவளால் எடுக்கப்படாமல் போனது.
மனதில் தோன்றிய சிறு சோர்வுடன் தனது அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் வசீகரன்.
சிறிது நேரத்தில் மங்கி பிரதர்ஸ் டீம் அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஜேபியின் வீட்டிற்கு விரைந்தது.
புதிதாக உருவாக்கும் செயலியின் செயல்பாடுகளைச் சோதிக்கும் நோக்குடன் மதுவை வரச் சொன்னான் வசீகரன். மது, யாதவ், கிருஷ் மூவரும் விடுப்பெடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டார்கள் என்று அவனுக்கு செய்தி வந்தது.
அவனது நெற்றியில் யோசனை கோடுகள் படர்ந்தன. மூவருக்கும் பொதுவான விஷயம் என்று ஒன்று இருந்தால் அது நிச்சயம் ஜேபியாகத்தான் இருக்கும் என்று சரியாகக் கணித்தவன் மதுவிற்கு அழைப்பினை எடுத்தான்.
அழைப்பினை ஏற்ற மது, "ஹலோ!" என்றான்.
" திடீரென்று மூவரும் விடுமுறை எடுக்கும் அளவிற்கு என்ன நடந்தது? " என்றான் வசீகரன்.
" அது நம் ஜேபிக்கு அடிபட்டுவிட்டது... " என்றவன் அடுத்த வார்த்தை பேசுவதற்குள் அவனுடைய அலைபேசியை வாங்கி, அதனை கட் செய்து விட்டு, தன் முன்னே வைத்து விட்டாள் ஜேபி. மூவரின் அலைபேசியும் அவள் முன் வைக்கப்பட்டிருக்க, அவர்களோ ஜேபியைக் கோபமாகப் பார்த்தனர்.
" என்ன எல்லோருடைய பார்வையிலும் இவ்வளவு பாசம் பொங்கி வழியுது? என்றாள் ஜேபி.
" நீ செய்வது சரி இல்லை ஜேபி. பாஸ் உனக்கு என்னவோ ஏதோவென்று நிச்சயம் பதறிக் கொண்டு வருவார். இப்படி அவரை பதட்டப்பட வைக்காதே!" என்று அதட்டினான் கிருஷ்.
"ஆஹான்..." என்றாள் ஜேபி.
அடுத்தடுத்து வசீகரன் மூவரின் அலைபேசிக்கும் அழைப்பு எடுக்க எந்த அழைப்பும் ஏற்கப்படாமல் இருந்தது.
" ப்ளீஸ் ஜேபி... பாஸ் உன் மீது வைத்திருக்கும் பாசத்தை பந்தாக உருட்டி விளையாடாதே!" என்றான் யாதவ்.
" நாங்கள் உனக்கு கெட்டதா சொல்லுவோம் ஜேபி. உனக்கு ஏன் இந்த பிடிவாதம்?" என்றான் மதுசூதனன்.
" இது மிஸ்டர் வசீகரனுக்கு வைத்த பரீட்சை. பார்ப்போம் ரிசல்ட் என்ன வருகிறது என்று!" என்றாள் ஜேபி.
அனைவரும் குடிப்பதற்கு குளிர்பானம் எடுத்துக் கொண்டு வந்த அன்னம்மாள் காதில் ஜேபியின், 'ரிசல்ட்' என்ற வார்த்தை விழுந்ததும், "ரிசல்ட்டா? அது பாசிட்டிவ் தான்" என்றார்.
" அது எப்படி ரைஸா பேபி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்? " என்றான் கிருஷ்.
" டிவி நாடகத்துல நம்ம கண்ணம்மா உண்டாயிருக்கு. அப்ப ரிசல்ட் பாசிட்டிவ் தானா? " என்று ஒற்றைப் புருவத்தை ஸ்டைலாக உயர்த்தி அனைவரையும் பார்த்தார்.
" தெய்வமே! நீங்க எங்கேயோ போயிட்டீங்க!" என்று தலைக்கு மீது கையை உயர்த்தி வணக்கம் வைத்தான் கிருஷ்.
சிறிது நேரத்தில் வசீகரனின் அழுத்தமான காலடி ஓசைகள், அவன் மாடிப்படி ஏறுவதைப் பறைசாற்றியது.
மங்கி பிரதர்ஸ் மூவரும் தயக்கத்துடன் எழுந்து நிற்க, கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு, கால்களை நீட்டி, அதனை ஆட்டிக் கொண்டு, அவன் வரவை எதிர்பார்த்து இருந்தாள் ஜேபி.
வசீகரன் அறைக்குள் நுழைந்ததும் அவனது பார்வை ஜேபியின் நலத்தை ஆராய்ந்தது. அவளுக்கு ஒன்றும் இல்லை என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
" ஜேபி உனக்கு அடிபட்டு இருக்கிறது என்று இந்த மூவரும், இன்று விடுமுறை எடுத்துக் கொண்டு வந்தார்கள். உனக்கு எங்கே காயம் ஏற்பட்டிருக்கிறது?" என்றான்.
சிறு பிளாஸ்டர் சுற்றப்பட்டிருந்த வலது கை சுண்டுவிரலை உயர்த்திக் காட்டினாள்.
சிரிப்பு வந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு கிருஷ் மெதுவாக வசீகரனைப் பார்த்தான்.
அவன் முகத்தில் ஜேபியின் மீதான கோபத்தின் சாயல் சிறிதும் இல்லை. தன் மழலையை ரசிக்கும் தாயின் ரசனையே அதில் இருந்தது.
தன்னைத் தேடி வசீகரன் வந்துவிட்டதும், தவறு செய்துவிட்ட சிறு குறுகுறுப்பு ஜேபியின் அடிமனதில் வந்தது. அவளது மனமோ, அவன் தனக்குத் தந்த அன்பையும், அதீத உதாசீனத்தையும் திருப்பித் தரவே முனைந்தது.
" சாரி வசீ! உங்களிடம் சொல்லக் கூடாது என்று தான் இவர்களிடம் சொன்னேன். இவர்கள் இப்படி உங்களிடம் சொல்லி உங்களை அலைய வைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று தோளினைக் குலுக்கினாள்.
" ஆதியில் வந்தவ வீதியில் நிற்க, அந்தியில் வந்தவ பந்தியில இருக்கிற கதையாலடா இருக்கு. கடைசியில் இந்த ஜேபி பழியை தூக்கி நம்ம மேல போட்டு விட்டுட்டா" என்று யாதவின் காதைக் கடித்தான் கிருஷ்.
"சும்மா இருடா.." என்று நெளிந்தான் யாதவ்.
"இட்ஸ் ஓகே" என்று சோர்வுடன் அமர்ந்தான் வசீகரன். ஜேபிக்கு ஒன்றும் இல்லை என்பதை மனதிற்குள் பதிய வைத்து விட்டு, நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி தலையினைப் பின்பக்கமாய் சரித்துக் கொண்டான். மனதிற்குள் பெரிய பிரவாகம் ஒன்று பொங்கி எழுந்தது அவனுக்கு. மூடிய இமைகளுக்குள் ஜேபியின் சிரித்த முகம் தெரிய, பொங்கிய வெள்ளம், பொங்கிய வேகத்தில் வடிந்தது.
அடுத்த நொடி சட்டென்று நிமிர்ந்து எழுந்தவன் " நான் கிளம்புகிறேன்... " என்று தன் வேக நடையுடன் வெளியேறினான்.
"ஒருவருடைய அன்பை ஆயுதமாய் பயன்படுத்தினால் அந்த ஆயுதத்தில் பலியாகப் போவதும் நாம் தான் ஜேபி" என்றான் மது.
" அவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் ரகசியத் தேடல் விளையாட்டில் நமக்கு இடமில்லை நண்பா!" என்ற கிருஷ், மதுவின் தோளைத் தட்டிக் கொண்டே யாதவையும் அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
'ரகசியம்! தேடல்!!' கிருஷ் கூறிய வார்த்தைகளை ஜேபியின் மனது அடிக்கோடிட ஆரம்பித்தது.
சட்டென்று முடிவு செய்தவள் பெருமாள் முன் வந்து நின்றாள்.
"அப்பா மும்பைக்கு அருகில் இருக்கும் எலிஃபெண்டா தீவில் நடைபெற இருக்கும் மணற்சிற்பம் செய்யும் போட்டியில் கலந்து கொள்ளப் போகிறேன். வெற்றியோ, தோல்வியோ அதனை ருசித்து விட்டு வர எனக்கு அனுமதி தாருங்கள் அப்பா" என்றாள்.
" நீ மாப்பிள்ளையுடன் கலந்தாலோசித்து விட்டு, அவருடன் செல்லலாமே பாப்பா!" என்றார் பெருமாள்.
" தன் மனைவியின் திறமையினை உலகிற்கு வெளிப்படுத்துவதற்கு உங்கள் மாப்பிள்ளை தடை சொல்வாரா? "
"அது..." என்று ராகமாக இழுத்தார் பெருமாள்.
"நீங்கள் தடை சொல்வீர்களா?"
'இல்லை' என்பது போல் அவர் தலை அசைந்தது.
" நான் போட்டியில் கலந்து கொள்ளப் போவதை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. முக்கியமாக உங்கள் மாப்பிள்ளையிடம்... ஏனென்றால் இது எங்கள் இருவருக்குமான ரகசியம். அதனை அவர் தான் கண்டுபிடிக்க வேண்டும் " என்றாள் கண்ணைச் சிமிட்டி.
" அது என்ன எனக்குத் தெரியாத ரகசியம்? " குறுக்கே கௌசிக்காக வந்து நின்றார் அன்னம்மாள்.
"ம்... உங்கள் பேரன் உங்களிடம் வந்து என்னைப் பற்றி கேட்டால் இதை மட்டும் கொடுங்கள் " என்று கூறிவிட்டு தான் கையில் வைத்திருந்த சிறிய பரிசுப் பெட்டியை அன்னம்மாளின் கைகளில் கொடுத்தாள் ஜேபி.
தன் மகளின் குறும்புத்தனமான விளையாட்டுகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் பெருமாள்.
தன் கணவன் தன்னைத் தேடி வர வேண்டும் என்று நினைக்கும் தன் மகளின் ஆசைக்கு தானும் பச்சைக்கொடி அசைத்து சம்மதம் தெரிவித்தார்.
தன்னுடைய அலுவலகத்திற்கு ஒரு வார விடுமுறை விண்ணப்பம் மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, தனது பயணப் பொதிகளைச் சுமந்து கொண்டு எலிஃபெண்டா தீவிற்கு புறப்பட்டாள் ஜேபி.
யானைத் திருவிழா நடைபெறும் இடமான எலிஃபெண்டா தீவு மும்பையில் இருந்து சுமார் ஒரு மணி நேரத் தொலைவில் உள்ளது, இது இந்தியாவின் மிகச் சிறந்த இடங்களில் ஒன்றாகும்.
எலிஃபெண்டா திருவிழா இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய நடனம், ஓவியம் மற்றும் இசை வடிவங்களை காட்சிப்படுத்துகிறது. கலாச்சாரம் சார்ந்த பயணங்களில் அதிக விருப்பம் உள்ளவர்களுக்கு, இந்த விழா ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த இடம் சிற்பக்கலையின் சிறப்புப் பாரம்பரியத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.
யானை திருவிழாவில் 'அடுத்த தலைமுறைக்கான சிற்பிகள்' என்ற இளம் கைவினைஞர்களுக்கான மணற்சிற்ப போட்டி நடைபெற இருந்தது.
உலகெங்கும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் ஜேபியும் ஆர்வத்துடன் கலந்து கொண்டாள்.
மணற்சிற்பம் செய்வதற்கு அவர்கள் கொடுத்த கால அவகாசம் ஒரு வார காலம். அந்த நேரத்திற்குள் சிற்பத்தை உருவாக்குவதுடன், தமது தனித்தன்மையையும் அதில் காட்டவேண்டும்.
கடற்கரை பகுதிகளில் மணல் சிற்பங்கள் அமைப்பது ஒரு சவாலான விஷயமாகும். பலமான அலைகள் அல்லது வேகமான காற்றினால் அவை பாதிக்கப்படுவதுண்டு.
இந்த மணல் சிற்பங்களை உருவாக்க ஒரு குறிப்பிட்ட உயரம் மணலைக் கொட்டி, தேவையான அளவு தண்ணீரை கலந்து கெட்டியாக்கிய பின்னரே சிற்பங்களை உருவாக்கமுடியும். உருவங்களை அமைக்கும் பணியை மேலிருந்து துவங்க வேண்டும். ஏதாவது குறை இருப்பது தெரிந்தால் மீண்டும் மேலே ஏறி சீர்படுத்த முடியாதல்லவா? கட்டிட வேலைகளில் பயன்படுத்தும் சிறு கருவிகளைக் கொண்டு சிற்பங்களை உருவாக்குவார்கள்.
தான் எலிஃபெண்டா தீவிற்கு கிளம்பும் முன், " நான் ஓடிப் போகிறேன் யாரும் என்னை தேட வேண்டாம்.." என்று மங்கி பிரதர்ஸ்க்கு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு தன் அலைபேசியை அணைத்து விட்டாள்.
முதலில் இந்த செய்தியினை விளையாட்டாக எடுத்துக் கொண்ட மங்கி பிரதர்ஸ், மாலையில் ஜேபி நிஜமாகவே வீட்டில் இல்லாததைக் கண்டு குழம்பி நின்றனர்.
பெருமாளிடம் கேட்க, "ஒரு வாரம் சென்ற பிறகு நிச்சயம் வருவாள். என்னிடம் அதற்கு மேல் எதுவும் கேட்க வேண்டாம் " என்று முடித்துக் கொண்டார்.
" ரைஸா பேபி நீ சொல்லுடா செல்லோ... ஜேபி எங்க போயிருக்கா? " என்றான் யாதவ்.
" நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதனால ஒரு மிஸ்டு கால் கூட கொடுக்க முடியாது " என்றார் உதட்டை கோணி முகத்தை சுளித்து.
"பே..." என்று முழித்தனர் மூவரும்.
" இதனால் தாங்கள் சொல்ல வருவது? " என்றான் கிருஷ்.
" இந்த வீட்டிலேயே இருந்தாலும், எனக்கு ஒன்னும் தெரியாது..." என்றார்.
" இது என்னடா மச்சி புதுசா இருக்கு? ஜேபி நம்மிடம் சொல்லாமல் எங்கேயும் இதுவரை சென்றதில்லையே? " என்றான் யாதவ் யோசனையுடன்.
" கிளிக்கு றெக்க முளைச்சுடுத்து... பறந்து போயிடுத்து..." என்றான் கிருஷ் வானத்தை நோக்கி கையைக் காட்டி.
மறுநாள் மங்கி பிரதர்ஸ் மூவரும் அலுவலகத்திற்கு வந்தபோது அலுவலகமே மிகுந்த அமைதியாக இருந்தது. யாரும் யாருடனும் பேசவில்லை. அனைவர் முகத்திலும் சோகம் அப்பிக்கிடந்தது.
நிலைமை ஏதோ சரி இல்லை என்பதை உணர்ந்த மதுசூதனன், தனது மேலதிகாரியிடமிருந்து விசாரித்த தகவலில் அதிர்ந்தான்.
வெளிநாட்டு நிறுவனங்களுடனான நேரடி இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தையின் போது ஜேபிக்காக இடையில் எழுந்து வந்ததால், அந்தப் பேச்சுவார்த்தை முற்றுப்பெறாமல், தங்களை அவமதித்து விட்டதாக வெளிநாட்டு நிறுவனங்கள் கோபம் கொண்டு சென்று விட்டதாகத் கூறினார். இரவு முழுவதும் அவர்களோடு தொடர்பு கொள்ள தொடர்ந்து வசீகரன் முயன்று கொண்டிருந்ததாகவும், வசீகரனுடைய அழைப்பை அவர்கள் ஏற்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இது நாள் வரை அனைவரும் உழைத்த உழைப்பு கேள்விக்குறியாகி விட்டதை வருத்தத்துடன் தெரிவித்தார். இதில் வசீகரனுக்கு பல கோடி நட்டம் ஏற்பட்டதாகவும் கூறினார்.
அதிர்ந்து போன மது, வசீகரனின் அறைக்கு விரைந்து முன்னேறினான். "பாஸ்..." என்றான் பரிதவிப்பான குரலில்.
கனத்த இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்த வசீகரன், "எஸ்" என்றான்.
தன் தோழி செய்த குளறுபடியால், அனைவரின் உழைப்பும் கேள்விக்குறியானதில் தோன்றிய உண்மையான வருத்தத்துடன், "சாரி" என்றான்.
" எனக்கு என் தொழிலை மிகவும் பிடிக்கும் மது. ஆனால் அதைவிட எனக்கு என் மனைவி ஜேபியை பிடிக்கும்" என்றான் அர்த்தம் பொதிந்த குரலில்.
சிறகுகள் நீளும்...