அத்தியாயம் 1
இரவின் குளுமை பூமியில் உள்ள மனிதர்களை தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்த நிலவு மகள் மென்மையாய் வீசிடும் இரவில் தன் வீட்டு தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தான் அமர்நாத்.
அமர்நாத் ராணுவத்தில் கர்னல் ஆக பணிபுரிந்தவன். ஒரு தாக்குதலில் தனது இடது காலை இழந்ததும் ராணுவத்தில் அதற்கு மேலும் பணிபுரிய முடியாது என்பதை உணர்ந்தவன் விருப்ப ஓய்வு வாங்கி கொண்டு சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் இல்லாமல் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டான்.
தாய் தந்தை இருவரும் தற்போது உயிருடன் இல்லை.. ஒரே ஒரு தங்கை மட்டும். அவளும் திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டில் ஆகி விட யாருக்கும் தொந்தரவு தராமல் தனியாக விலகி வந்தவன் கையில் இருக்கும் இருப்பை வைத்து ஒரு ஏற்றுமதி இறக்குமதி கம்பெனி ஆரம்பித்து அதை வெற்றிகரமாய் நடத்தி கொண்டிருக்கிறான்.
42 வயதான அமர்நாத்திற்கு இன்று தான் திருமணம் ஆனது.. ஆனால் அது நடந்த சூழல் அவனின் தன்மானம் அங்கே அடிவாங்கியது.
ஏனோ இத்தனை வயதுக்கு பின்பு திருமணத்தின் மேல் நாட்டமில்லாமல் இருந்தவனை விதியோ சதியோ இன்று நடந்தேறியது..
அவனின் தங்கையான பூவிழிக்கோ தன் தமையனுக்கு தமையனின் திருமணம் நடந்தேறிய விதம் தெரியாது.. ஆனால் இன்று அவனுக்கு ஒரு குடும்பம் என்று சந்தோஷம் இருந்தாலும் இத்தனை நாளாய் அவனின் சொத்துக்கள் தன் பிள்ளைகளுக்கு என்ற நினைப்பில் மண் விழுந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஆனால் அவனின் கணவன் மகேந்திரனுக்கோ தன் மச்சானின் மேல் அதீத பாசம் இருந்தது.
பூவிழி மகேந்திரன் பிள்ளைகளான ஆத்விக், அபிதா என்று இருபிள்ளைகள். இருவருக்குமே தாய்மாமன் அமர்நாத்தின் மேல் கொள்ளை பாசம்.
தங்கையின் சுயநலம் தெரிந்தாலும் மற்ற மூவரின் அன்பிலும் அதை மறந்தவன் சற்று விலகியே வாழ்ந்தான்.
ஏனோ மனம் வெறுமையாய் இருந்தது. காரணம் எதுவும் விளங்கவில்லை. ஆனால் தனக்கென்று ஏதேனும் உறவு இருந்தாலும் இதை பேசி தெளிவுபடுத்தலாம் என்றாலும் கூட அப்படி யாரும் இல்லை.
நண்பன் என்று கூட யாரும் இல்லை.. பார்ப்பவர்களிடம் பேசுவானே ஒழிய தன் தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் அனுமதிக்கமாட்டான்.
ராணுவத்தில் ஒரு காலை இழந்த பின்பு யாரும் தன் மேல் பரிதாபம் காட்ட தேவையில்லை என்று தனக்குள்ளே ஒரு வட்டம் போட்டு வாழ்பவன்.
அந்த வட்டத்திற்குள் அவ்வளவு எளிதில் யாரும் நுழைய முடியாது. ஏன் ஆத்விக் அபிதா கூட ஒரு எல்லை வரை தான்.
ஓய்வு பெற்ற பின்பு செயற்கை கால்களை பொருத்திக் கொண்டாலும் சற்று தாங்கி தான் அவனால் நடக்க முடியும். அதனாலே தன்னிடமிருந்து அனைவரையும் சற்று தள்ளித்தான் வைத்தான்.
ஆனால் அந்த வட்டத்தையும் தாண்டி அவன் வாழ்வில் கட்டாய சூழலில் வந்துவிட்டாள்.
இன்று நடந்ததை நினைத்து பார்ததவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது தான் தாலி கட்டியவளை பற்றி.
ஆனால் நேரில் சென்று அவளை பார்க்கவும் அவனுக்கு விருப்பமில்லை. அவளின் மேல் இருந்த மதிப்பு சரிந்ததை ஏனோ ஆடவனின் மனம் ஏற்கவில்லை. ஆனால் நடந்த எதையும் மாற்ற முடியாதே.
அறையின் விளக்கை கூட போடாமல் இருட்டில் கால்களை கட்டியபடி அமர்ந்திருந்தாள் அவள். 21 வயது ஆன பெண். கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு வந்தவள் பட்டாம் பூச்சியாய் சுற்றியவளை இன்றைய சம்பவம் அடியோடு அடித்து போட்டுவிட்டது.
அவள் அதிதி. இளங்கலை வணிகவியல் படித்தவள். அமர்நாத்தின் கம்பெனிக்கு அக்கவுண்ட்ஸ் பிரிவில் வேலைக்கு சேர்ந்து மாதம் இரண்டு ஆகிவிட்டது.
ஆனால் இன்று அவளே எதிர்பார்க்காமல் அமர்நாத்தின் மனைவியாக வேண்டிய கட்டாய சூழல் உருவாகிவிட்டது.
அவளும் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.. ஏன் அவனும் தான்.
அவனைப் பொருத்தவரை அவள் நல்ல தோழி.. ஆனால் இன்று நிர்பந்தமாய் அவனுக்கு மனைவியாக வேண்டிய சூழல்.
தோட்டத்தில் நடந்தது கால் வலிக்க மனதை ஒருநிலைப்படுத்தி கொண்டு உள்ளே சென்றான்.
அங்கே அறையின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த பெண்ணவளை பார்த்தவனுக்கு ஏனோ மனம் வலித்தது.
அவளுக்கும் இது பெரும் அதிர்ச்சி தானே.. அவளை நோவதில் என்ன மாறிவிடப்போகிறது என்று நினைத்தவனுக்கு ஏனோ சொல்லெனா வலி தான் தோன்றியது.
இவளின் வயது என்ன..? என் வயது என்ன..? இத்தனை வருட வித்தியாசத்தில் ஒரு திருமணமா..? இல்லை வேண்டாம் என்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கை வீணாக கூடாது.
கிட்டதிட்ட இருபது வருட வித்தியாசம்.. தங்கையின் மகளுக்கு இதைவிட ஒன்றோ இரண்டோ வயது குறைவு தான்.
ஏன் எனக்கு சரியான வயதில் திருமணம் செய்திருந்தால் இந்த வயதில் ஒரு மகளும் கூட இருந்திருக்குமே.
விதியின் கட்டாயத்தில் ஏற்கப்பட்ட பந்தம் இதை தொடர வேண்டாமே.. ஏனோ இப்போது அவளின் மீது கோபம் கூட இல்லை.
தன் வாழ்க்கையை விட்டு அவளை விலக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு அவளுடன் ஒரே அறையில் இருப்பது சரிப்படாது என்ற எண்ணத்தில் அந்த அறையை விட்டு சென்றான்.
அவன் வந்து போனதை அறிந்தும் அவனை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
நேற்று வரை அவனுடன் சகஜமாய் பேசி பழகி இருந்தவள் தான் ஆனால் இன்று ஒரே நாளில் எல்லாம் மாறிப்போனது.
ஏன் இந்த வாழ்க்கை.. எதற்காக இப்படி நடக்க வேண்டும்.. இல்லை இது தான் தன் விதியோ..? ஆனால் அவரை எப்படி நான் கணவராக நினைக்க முடியும்.
விடிய விடிய அழுதபடியே யோசித்தவளுக்கு விடிந்ததும் தெரியவில்லை.
ஆதவனின் பொற்கரங்கள் பொன்னொளி வீசிட இரவில் தன்னை அறியாமல் உறங்கிவிட்ட அமர்நாத் கண்களை கசக்கியபடி எழுந்தமர்ந்தான்.
நேற்று நடந்தது நினைவு வந்ததும் ஆடவனின் நினைவு பெண்ணவளை தான் தேடியது.
வேகமாய் எழுந்து சென்றவன் அவள் இருந்த அறைக்குள் வந்து பார்க்க நேற்று எப்படி அமர்நதிருந்தாளோ அதே இடத்தில் தான் அமர்ந்திருந்தாள்.
மெல்ல அவளருகே சென்றவன், "அதிதி.." என்றவைத்தவன் குரல் எப்போதும் போல் கம்பீரமாய் தான் இருந்தது.
அவனின் குரலில் தலைநிமிர்ந்தவள் புரியாத பார்வை பார்க்க,
"எழுந்து குளிச்சிட்டு வா.. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்.." என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றான்.
போகும் அவனை புரியாமல் பார்த்தவள் அவனின் சொல்லி மீற முடியாமல் தன் கண்களை துடைத்தவள் மெல்ல எழுந்து அங்கிருந்த குளியலறை நோக்கி சென்றாள்.
தன் காலை கடன்களை முடித்து விட்டு குளித்து விட்டு வெளியே வந்தவள் அப்பொழுது தான் யோசித்தாள் மாற்று உடை இல்லை என்பதை.
என்ன செய்வது என்று புரியாமல் உடலில் கட்டிய டவலுடன் சற்று நேரம் நின்றவள் மீண்டும் தன் பழைய புடவையை கட்டி கொள்ளலாம் என்று நினைக்கும் போது அவளின் அறைக்கதவு தட்டப்பட்டது.
யாராக இருக்கும் அவர் இப்போது தானே சென்றார். இந்த நிலையில் எப்படி சென்று கதவை திறப்பது என்று புரியாமல் இருந்தவளின் காதுகளில்,
"சின்னம்மா கொஞ்சமா கதவை திறங்க..." என்று பெண் குரல் கேட்கவும் சென்று கதவை கொஞ்சமே திறக்க அந்த இடைவெளியில்,
"சின்னம்மா அய்யா இந்த கவரை உங்ககிட்ட கொடுக்க சொன்னாரு மா.." என்றபடி ஒரு கவரை கொடுத்தார்.
அதை வாங்கி கொண்டு மீண்டும் கதவை சாத்தியவள் அந்த கவரில் என்ன இருக்கிறது என்று பார்த்தாள் அதில் அவளுக்கு தேவையான உடைகள் இருந்தது.
அதில் இருந்த ஒரு புடவையை எடுத்தவளுக்கு அப்பொழுது தான் நினைவு வந்தது அதற்கு ஜாக்கெட் இல்லையென்று. என்ன செய்வது என்று முழித்தவளுக்கு கை கொடுத்தது அவளின் பழைய ஜாக்கெட்.
அதை எடுத்து வந்தவள் அலசி பேன் போட்டு உலர்த்தி போட்டு கொண்டு புடவை உடுத்தி கொண்டவள் சட்டென்று தலைமுடியை காயவைத்து அதற்கு ஒரு கேட்ச் கிளிப்பை போட்டு கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே ஹாலில் அவனின் தலை தெரிய மெதுவாய் அவனருகே சென்றாள். லாப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன் அருகே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தவன் அவளை கண்டதும்,
"போய் சாப்பிட்டு வா.. நான் இந்த வேலையை முடிச்சிட்டு வர்றேன்.." என்றவன் மீண்டும் தன் வேலைக்குள் புகுந்து கொண்டான்.
அவன் பேச்சை தட்ட முடியாமலும் நேற்று காலை சாப்பிட்ட உணவு அதற்கு பின்பு நடந்த நிகழ்வுகளில் தாக்கமும் பிரச்சனையும் அவளை சாப்பிட யோசிக்காமல் செய்தது.
இப்போது அவன் கூறவும் தான் பசி என்ற உணர்வே தோன்றியது.
அவனை பார்த்து கொண்டு நின்றவள் அவன் தன்னை திரும்பி பாராததை கண்டு மனதில் எழுந்த வலியுடன் அங்கே இருந்த உணவு மேசையில் அமர்ந்தாள்.
அதே நேரம் அங்கே வந்த வேலைக்கார பெண்மணி அவளுக்கு தட்டை வைத்து பரிமாற உண்டு முடித்தவள் எழுந்து மீண்டும் ஹாலுக்கு வரவும் அமர்நாத் தன் வேலையை முடித்து லேப்டாப்பை ஷட்டவுன் செய்யவும் சரியாக இருந்தது.
தன் முன்னே வந்து நின்றவளை பார்த்தவன்,
"உட்காரு அதிதி.." என்றான் அழுத்தமாய்.
எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தவள் தலையை குணிந்தபடி அமர அவன் தன் குரலை செருகி கொண்டு,
"நேத்து நடந்த சம்பவம் நாமளே எதிர்பார்க்காதது.. நடந்துருக்கவே கூடாத விஷயம் தான்.. ஆனா நடந்துடுச்சி.. இந்த கல்யாணத்துல உனக்கும் விருப்பம் இல்லை.. எனக்கு விருப்பம் இல்லை..
ஆனா எதிர்பாராத பந்தம் உன்னோட எனக்கு இணைஞ்சாச்சி.. பொருந்தாத இந்த திருமணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை.. இன்னும் கொஞ்ச நேரத்துல வக்கீல் வந்துருவாங்க.. டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டு நீ எங்க போகனும்னு நினைக்கிறியோ அங்கே போகலாம்.. நான் தடுக்கமாட்டேன்.. நீ என்ன சொல்ற.." என்றான் அவளை பார்ததபடியே.
அவளோ அவனிடம் பேச தயங்கியபடி இருந்தவள் தன் பதிலுக்காக அவன் காத்திருப்பதை அறிந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்,
"ஆனா உடனே நமக்கு டைவர்ஸ் கிடைக்காது ஸார்.. அதுமட்டும் இல்லாமல் இப்போ எனக்கு வெளியே பாதுகாப்பும் இல்லை.. நான் கொஞ்ச நாள்ல வெளியே ஒரு பாதுகாப்பான இடம் பாத்துட்டு கிளம்பிடறேன் சார்.. இதை எனக்கு உதவியா தான் சார் கேட்குறேன்.." என்றாள் கலங்கிய குரலில்.
அவளின் குரலில் இருந்த எதுவோ ஒன்று அவனின் உள்ளத்தை பாதித்தது.
அவள் கூறியதும் உண்மை தானே..? தனியே ஒரு இளம்பெண்ணை இங்கே வாழவிடுவார்களா என்ன..? தற்சமயம் அவளுக்கு தேவை ஒரு பாதுகாப்பு.. அது இங்கே இருந்தால் அவளுக்கு கிடைக்கும் என்றால் இருந்துவிட்டு போகட்டுமே.
ஆனால் சிறு பெண்.. வாழ்வில் நெளிவு சுளிவுகளை இன்னும் அறியாமல் இருப்பவள் தான்.. ஆனால் இந்த வயதில் யாருமில்லாத அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு பாதுகாப்பு எங்கே கிடைக்குமோ..? வேண்டாம் அவளுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தரும் வரை அவள் இங்கேயே இருக்கட்டும் என்று முடிவெடுத்தவன் அவளிடம் திரும்பி,
"ம்ம் சரி நீ இங்கேயே இரு உனக்குன்னு ஒரு வாழ்க்கை வரும் வரைக்கும்.. அதுவரைக்கும் நீ தனியா இங்கே கீழே இருந்துக்கோ.. அப்புறம் உனக்கு டிரஸ் வேணும்னா இதுல பணம் இருக்கு.. டிரைவர் கூட வண்டி எடுத்துட்டு போய் வாங்கிட்டு வந்துடு.." என்றவன் அங்கிருந்து டேபிளில் கொஞ்சம் பணத்தாளை வைத்தான்.
அதையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள், "இல்லை சார் என்கிட்ட கொஞ்சம் அமவுண்ட் இருக்கு.. நான் ஆட்டோவுல போய் எடுத்துட்டு வந்துர்றேன் சார்.. எனக்கு பாதுகாப்புக்கு மட்டும் இந்த வீடு போதும் சார்.. மத்தபடி இங்கிருந்து எந்த உரிமையும் நான் எடுத்துக்கலை.. நான் பழைய படி ஆபிஸ்க்கு வர்றேன் சார்.. என்னோட அதே வேலையை பாக்குறேன்.." என்றாள் தன்னம்பிக்கையாய்.
ஏனோ அந்த நிமிடத்தில் அவளின் தன்னம்பிக்கை ஆடவனுக்கு மிகவும் பிடித்து போனது.. அவளின் பேச்சில் தெரிந்த தன்மானம் ஆடவனை அசைத்து பார்த்தது.
அவள் சொல்லியதற்கு மறுபேச்சு பேசாமல் தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தவன் எழுந்து தன்னறைக்கு சென்றுவிட்டான்.
அவன் சென்றதை உறுதி படுத்தி கொண்டவள் மெல்ல புன்னகை சிந்தினாள்.
தன் கைப்பையை எடுத்து கொண்டவள் அவனின் அறைக்கதவின் முன்னே நின்று கதவை தட்டினாள்.
சற்று நேரத்தில் கையில் ஸ்டிக்குடன் கதவை திறந்தவன் கேள்வியாய் அவளை பார்க்க அவளோ,
"நான் கொஞ்சம் என்னோட பழைய ரூம்க்கு போயிட்டு என்னோட திங்க்ஸ் கொஞ்சம் எடுத்துட்டு வந்துர்றேன் சார்.." என்றாள் அவனின் பதிலை எதிர்பார்த்தபடி.
இதுக்கு ஏன் என்கிட்ட சொல்லனும்.. அது தேவையில்லையே.. நீ எப்பவும் போல இருக்கலாம்.. இந்த வீட்ல உனக்கு எந்த விதமான கட்டுபாடும் இல்லை.. அதே போல நீ இங்கே ஒரு பேயிங் கெஸ்ட் தான்.. சோ என் வரைக்கும் வரணும்னு அவசியம் இல்லை.." என்றவன் கதவை சாத்த போகும் போது,
"ஒரு நிமிஷம் சார்.." அழைத்தாள் அவனை.
கேள்வியாய் அவளை பார்க்க, "சார் நீங்க சொல்றது சரிதான்.. நான் இப்போ இங்கே கெஸ்ட் தான்.. ஆனா வீட்டோட உரிமையாளர்கிட்ட உரிய அனுமதி வாங்காம நானா ஒரு உரிமையை எடுத்துக்க கூடாது இல்லையா.. ஏனா நான் இப்போ இங்கே இருக்கறது உங்களோட காவல்ல.. சோ நான் எங்கே போறேன் என்ன செய்யறேன்னு முழுசா இல்லைன்னாலும் ஓரளவுக்கு உங்களுக்கு தெரியனும் இல்லை.. அது தான் சொல்லிட்டு போக வந்தேன்.." என்றபடி அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து சென்றாள் மங்கையவள்.
அவள் சொல்லியது புரிந்தும் புரியாத நிலையில் ஆடவன் நின்றிருந்தான்.
"ச்சீய் இப்படி அருமையான சந்தர்ப்பம் அதை அந்த அமர்நாத் கெடுத்துட்டானே டா.. " என்றபடி கையில் இருந்த மது டம்ளரை ஓரே மூச்சில் குடித்தான் அவன்.
அவனின் எதிரிலிருந்தவனோ, "ஏன்டா அலெக்ஸ் அவ தப்பிச்சிட்டாளே டா.. அவளை நம்பி எவ்வளவு பெரிய பிளான் பண்ணி வச்சிருந்தோம்.. எப்படி டா அந்த அமர்நாத் அவ கழுத்துல தாலி கட்டுனான்.. எல்லாம் உங்க அம்மாவை சொல்லனும் டா.. காரியத்தை சுத்தமா கெடுத்துட்டாங்க.." என்றான் மற்றொருவன்.
அலெக்ஸ் என்பவனோ, "இல்லை ஜீவா அம்மாகிட்ட இதை முன்னவே சொல்லிருக்கனும் இதெல்லாம் ஒரு நாடகம்னு.. அது தெரிஞ்சிருந்தா அம்மா அடக்கி வாசிச்சிருப்பாங்க.. நான் இயல்பா இருக்கட்டுமேன்னு விட்டது என்னோட தப்பு.. அது தான் ஈசியா அந்த அதிதி என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டா.. ஆனா விடமாட்டேன் டா.. எனக்கு கிடைக்காத அவ யாருக்கும் கிடைக்க கூடாது..
அந்த அமர்நாத் வயசானவன் டா.. இன்னும் அஞ்சு வருஷம் போனா மண்டையை போட்டுடுவான்.. இல்லை அடுத்த வருஷம் நான் அவன தூக்குறேன்.." என்றான் அலெக்ஸ் என்பவன்.
யார் இந்த அலெக்ஸ், ஜீவா..? இவர்களுக்கும் அதிதிக்கும் என்ன சம்பந்தம்..? பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்தடுத்த பாகத்தில்.
தொடரும்..