அத்தியாயம் 10
தம்பதிகளாய் வந்த இருவரையும் பார்த்த சாரதாவிற்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.. அதுவும் அதிதியின் முகத்தை பார்த்ததுமே கண்டு கொண்டார் அமரின் மேல் உண்மையான காதல் கொண்டு தான் அவள் அவனை திருமணம் செய்துருக்கிறாள் என்று.
" அதிதி ரைட் உங்களோட பேரு.." என்றார் கேள்வியாய் சாரதா.
"எஸ் மேம்.." என்றாள் தன்னவனை பார்த்து கொண்டே.
அதை கேட்ட சாரதா சிரித்து கொண்டே, "ஏன்மா இங்கே என்ன இன்டர்வியூ வா நடக்குது.. மேம்ன்னு சொல்ல.."என்றார் மென்மையாய்.
"அது வந்து இல்லை மே.. மா எனக்கு எப்படி கூப்பிடறதுன்னு தெரியலை.. அது தான்.." என்றாள் மென்மையாய்.
"அமர் அண்ணாவை உனக்கு புடிக்குமா அதிதி.." என்றாள் சிரித்தபடி.
"இதை நீங்க எப்படி எந்த விதத்துல கேட்குறீங்கன்னு தெரியலை மா.." என்றாள் பதிலாய் அதிதியும்.
அமரும் குணாவும் பார்வையாளராய் மட்டுமே அமர்ந்திருந்தனர். அதுவும் அமரின் மனநிலை வார்த்தைகளால் வடிக்க இயலவில்லை.
என்ன தான் அவளின் காதல் புரிந்து ஏற்று கொண்டாலும் அவனின் மனமோ கொஞ்சமும் பொருந்தாத வயது வித்தியாசத்திலே நின்றது.
" சாதரணமா தான்மா கேட்குறேன்.. அண்ணனோட வயசுக்கும் உன்னோட வயசுக்கும் உள்ள வித்தியாசம் நிறைய.. ஒரு வேளை நாளைக்கு இதுவே உனக்கு பெரிய இடைவெளியா தெரிய கூடாது இல்லை.. அது தான் கேட்குறேன்.. அதுமட்டுமில்லாம அவரு எங்களோட குடும்ப நண்பர்.. அவரோட வாழாக்கையிலும் உன்னோட வாழ்க்கையிலும் எங்களுக்கு நிறைய அக்கறை இருக்கு.. அது தான் கேட்டேன்.. சொல்ல இஷ்டம் இருந்தா தாரளமா சொல்லலாம்.. இல்லையா கண்டிப்பா அவசியம் இல்லை.." என்றாள் மெதுவாய் சாரதா.
அதை கேட்டு சிரித்தவள், "பரவாயில்லைமா நான் சொல்றேன்.. எனக்கு அவரை ரொம்பவே புடிக்கும்.. அதுக்கு காரணம் எனக்கு தெரியலை.. நான் சின்ன வயசுல இருந்து அப்பா அம்மா முகத்தை பார்த்து வளரலை.. எனக்கு அடைக்கலம் கொடுத்தது ஆசிரமம்..அதுல எத்தனையோ பிள்ளைகள்ல நானும் ஒருத்தி..
அங்கே எல்லோருக்கும் அன்பு பெருசா கிடைக்காது.. அவங்களை நான் தப்பும் சொல்ல முடியாது.. அத்தனை குழந்தைகளுக்கு அவங்களால பாசத்தை கொடுக்க முடியாது.. அது கஷ்டமும் கூட..
அப்படி வளர்ந்த எனக்கு முதல் முறை இவரை பார்த்ததும் ஒரு பிரமிப்பு.. யாரோ எப்படியோ போகட்டும்னு நினைக்காம அந்த அம்மாக்காக சண்டை போட்டாரு.. அதுனால இவரு ஹீரோவா இருந்துட்டாரா தெரியலை..
ஆனா இவரை பார்த்ததும் என்னோட மனசை பறிகொடுத்தேன்.. நானும் அது வெறும் இனக்கவர்ச்சின்னு தான் நினைச்சேன்.
ஆனா இவரோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது இவரை பத்தி தெரிஞ்சதும் என் நேசத்துக்கு புதிய பாதை தொடங்குச்சி..
நீங்க சொல்றபடி இந்த வயசு வித்தியாசம் எம்மனசுக்கு பெரிசு தோணலை.. அவரை எப்படி பிடிச்சிருக்கோ அப்படியே ஏத்துக்க ஆசைப்படறேன்..
உண்மையான காதல் நிறை குறைகளோட அப்படியே ஏத்துக்கும்.. நான் அவரு மேல வச்ச அன்பும் அப்படித்தான்.. நான் இந்த பூமியில வாழற நாள் வரைக்கும் அவரோட அன்புலேயும் அரவணைப்புலேயும் வாழ ஆசைப்படறேன் மா.. இதுக்கு மேல எனக்கு பெருசா சொல்ல தெரியலை.." என்றவளின் விளக்கத்தில் சந்தோஷமாய் நிமிர்ந்த சாரதா அமரிடம் திரும்பி,
"அண்ணா நான் நேத்து சொன்ன மாறி உனக்கு ஏத்து பொண்ணு இவ தாண்ணா.. நீ இவளை பத்தி சொல்லும் போதே எனக்கு புரிஞ்சிடுச்சி.. ஆனா நீயும் இவளை புரிஞ்சிக்கனும்னு தான் இவளை அழைச்சிட்டு வர சொன்னேன்.. சந்தோஷமா இவளோட நீ வாழ்க்கையை தொடங்கலாம் அண்ணா.." என்றார் நிம்மதியாய்.
அவனோ அதற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் மௌனமாய் ஒரு சிரிப்பையே பதிலாய் தந்தான்.
" சாரதா போதும் போய் இவங்களுக்கு சாப்பாடு ரெடி பண்ணு.. அதிதி மா நீயும் போய் ஹெல்ப் பண்ணுடா.. நான் இவன்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வர்றேன்.." என்று மனைவிக்கும் அதிதிக்கும் சொன்னவன் நண்பனிடம் திரும்பி,
"அமர் வா கொஞ்சம் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வரலாம்.." என்று நண்பனை அழைத்தபடி முன்னே சென்றான்.
தன் அறைக்கு வந்த குணா அமரை அவனுக்கு எதிரே இருந்த சேரில் அமர சொல்ல அவனும் அமர,
"இன்னும் உனக்கு என்ன டா குழப்பம்.. அந்த பொண்ணு உன்னை உண்மையா நேசிக்குறா டா.. உன்னோட பைத்தியகாரதனத்தை அவகிட்ட காட்டாத அமரா..
உன் முகம் இன்னும் முழுசா தெளியலை.. முதல்ல என்னோட விஷயம்னு சொல்லு டா.." என்றான் நண்பனை அறிந்து கொண்ட பாணியில்.
இல்லை குணா என்னோட வயசு இப்போ நாற்பத்தி இரண்டு.. அவளுக்கு இருபத்தி இரண்டு..அவளுக்கு இதுவே கல்யாண வயசு இல்லை.. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி..
கல்யணாத்தோட தொடக்கம் தாம்பத்யம்.. அதுக்கு முடிவு நிச்சயம் குழந்தை.. எனக்கு லேட் மேரேஜ்.. ஆனா அந்த குழந்தைக்கு அப்பா நான் தான்னு அவளால வெளியே சொல்ல முடியுமா.. இது பின்னாடி குழந்தையோட மனசை பாதிக்காத.. எனக்கு புரியலை குணா..
அவளை முழுசா ஏத்துகிட்டாலும் மனசு என்னவோ இன்னும் தெளிவடையலை டா.." என்றான் குழப்பமாய்.
தன் நண்பனின் வருத்தம் உணர்ந்தவன் இதற்கு மேலும் அதிகம் பேச தேவையில்லை.. இதற்கு மேல் அது எதிர்காலம்.. அதை அவ்வப்போது தான் எதிர்கொள்ள முடியும்.
" அமர் இப்போ நடந்ததை மட்டும் யோசி.. உனக்கே தெரியும் இது நிரந்தரம் இல்லாத வாழ்க்கை.. இப்பவே சந்தோஷமா இருந்துக்கனும்.. பின்னாடி நடக்குறதை அப்புறம் பாத்துக்கலாம்.. சரியா.. இப்போ போய் அந்த பொண்ணோட சந்தோஷமா வாழ்க்கையை ஆரம்பி.. போக போக உன்னோட குழப்பத்துக்கு விளக்கம் காலமே கொடுக்கும் சரியா.. காலத்தை விட சரியான ஆசான் யாருமில்லை.. சரியா.." என்றான் அழுத்தமாய்.
அதை கேட்டு அமரும் தன் மனதின் உள்ள குழப்பத்தை விட்டு வெளியே வந்தவன் சந்தோஷமாய் சிரித்தான்.
பின்பு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு கணவன் மனைவி இருவரையும் சந்தோஷமாய் அனுப்பி வைத்தனர் குணா சாரதா தம்பதியர்கள்.
வண்டி ஓட்டி கொண்டிருந்தவன் அருகில் அமர்ந்திருந்த பெண்ணவள் மெல்ல அவனை பார்க்க அவள் பார்வை உணர்ந்தவன் அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.
அதில் வெட்கம் கொண்டவள் மெல்ல தைரியத்தை வரவைத்து கொண்டு அவனின் அருகில் நெருங்கி அமர்ந்து அவனின் ஒரு கரத்தோடு தன் கரத்தை அணைத்து கொண்டவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அதில் முதலில் உடல் சிலிர்த்தவன் மெல்ல அவனின் கையை உயர்த்தி அவளின் கண்ணத்தில் மெதுவாய் தட்டி கொடுத்து அவளை அணைத்து கொண்டே வண்டியை ஓட்டினான்.
இங்கு வீட்டிற்கு வரும்போதே நேத்ரா உள்ளே அமர்ந்திருந்தாள்.
அவளை கண்டதும் பட்டாம் பூச்சியாய் ஓடிய மனைவியை எண்ணி சிரித்து கொண்டவன் வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே வரும் போது சிரித்தபடி பேசி கொண்டிருந்தனர். அவளை கண்டதும்,
"வாம்மா நல்லாருக்கியா.." என்றவன் மெதுவாய் தன்னவள் அருகில் சென்று இயல்பாய் அமர்ந்து கொண்டான்.
அதை கண்ட நேத்ராவும் சந்தோஷமான முகத்துடன்,
"நான் நல்லாருக்கேன் அண்ணா.. இனிமே எனக்கு என்ன சந்தோஷமா இருப்பேன்.. அதே போல எனக்கு கனடால வேலை கிடைச்சிருக்கு அண்ணா.. அது தான் இவகிட்டேயும் சொல்லிட்டு உங்ககிட்டேயும் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் அண்ணா.." என்றவளுக்கு தன் தோழியின் வாழ்க்கை நேரானதில் சந்தோஷமாகவும் இருந்தது.
அவள் மனதில் இருந்த குறையும் இருவரையும் ஜோடியாய் கண்டதில் விலகி இருந்தது.
"ஹேய் அப்படியாடி.. அப்போ இனி உன்னை அதிகமா பாக்க முடியாது நேது.." என்றாள் அதிதி குரலடைக்க.
"ஹேய் பைத்தியம் அது தான் இப்போ வீடியோ கால் இருக்கு இல்லை.. இன்னும் நிறைய பேசலாம்.. அப்புறம் உன்கிட்ட ஒரு விஷயத்தை கேட்கனும்னு நினைச்சேன்.. அப்போ உனக்கு அடிபட்டதால விட்டுட்டேன்.. அது தான் இப்போ கேட்குறேன்..
நீ அண்ணனை நேசிச்சி தானே கல்யாணம் செய்துகிட்டே.. அப்புறம் ஏன் அன்னைக்கு யாருகிட்டேயும் சொல்லாத வீட்டை விட்டு போன.." என்றாள் கோபமாய்.
அமரின் கண்களும் அவளின் பதிலுக்காய் காத்திருக்க ஆரம்பித்தன.
"அது வந்து.. " என்று முழுதாய் சொல்ல முடியாமல் தடுமாறியவள் தன்னவனை காண அவனும் தன் பதிலுக்காய் காத்திருப்பதை உணர்ந்தவள் ஒரு பெருமூச்சுடன்,
"அது இல்லைடி அன்னைக்கு மகேன் அப்பா கேட்கும் போது வேற வழியில்வாம தான் என் கழுத்துல தாலி கட்டுனேன்.. எங்களுக்கு உள்ள வயசு வித்தியாசம் நிச்சயம் எங்களை ஒன்னு சேர்க்காது.. நான் அவளை டைவர்ஸ் பண்றது தான் அவளுக்கு நல்லதுன்னு சொன்னாரு..
அவரோட மனசு கொஞ்சமும் மாறலை.. இதே போல என்கிட்டேயும் சொன்னா என்னால தாங்க முடியாதுன்னு தான் நான் வீட்டை விட்டு போகனும்னு நினைச்சேன்.. ஆனா அது எப்படி எப்படியோ நடந்துடுச்சி.." என்றாள் கண்களில் வழியும் கண்ணீருடன்.
அதை கேட்ட ஆடவனுக்கே தான் வார்த்தையால் சொன்னதுக்கே தாங்க முடியாதவள் அதை செயல்படுத்தியிருந்தாள் தாங்கியிருப்பாளா என்ன..? என்ற கேள்வி உள்ளே நுழைந்து மனதை நடுங்க செய்தது.
நேத்ராவிற்கும் இது கோபத்தை கொடுத்தாலும் கூட இது கணவன் மனைவி விவகாரம் இதில் இனி நாம் தலையிட கூடாது என்ற எண்ணத்துடன் எழுந்தவள்,
"சரி டி இனி இப்படி முட்டாள் தனமா நடந்துக்காத சரியா.. அப்புறம் நான் கிளம்புறேன்.. எனக்கு சன்டே ஈவ்னிங் பிளைட்.. நீயும் அண்ணாவும் வந்துடுங்க ஏர்போர்ட்டுக்கு.. நான் கிளம்புறேன் அண்ணா.. கிளம்புறேன் டி.." என்று கிளம்பியவளை,
"இரும்மா சாப்பிட்டு போலாம்.." என்றான் அமர்.
" இல்லைங்க அண்ணா நான் சாப்பிட்டு தான் வந்தேன்..எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.. கிளம்புறேன்.." என்றபடி நேத்ரா கிளம்பியதும் இருவரும் தனித்து விடப்பட்டனர்.
அங்கே வந்த வசந்தாவும், "அய்யா அதிதி மா நைட் என்னோட சமைக்கட்டும்.." என்று கேட்டபடி வந்தார்.
அதை கேட்ட முதலில் தன் நினைவு வந்த அமர்,
"வசந்தா அக்கா நீங்க கிராமத்துக்கு போயிட்டு வர்றேன்னு சொன்னீங்க இல்லை.. இந்தாங்க பணம் போயிட்டு ஒரு வாரத்துல வந்துடுங்க.." என்றபடி அவரிடம் பணம் கொடுத்தான்.
அதை சந்தோஷமாய் வாங்கியவர், "சரிங்க தம்பி நான் போயிட்டு வர்றேன்.. நைட் இட்லி மட்டும் ஊத்தி வச்சிட்டு போறேன் தம்பி.." என்றபடி சந்தோஷமாய் கிளம்பினார்.
அதிதியோ அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்.
பொறுமையாய் அவளிடம் திரும்பியவன், "என்ன மேடம் பாத்து முடிச்சிட்டீங்களா.." என்றான் கிண்டலாய்.
" உங்களை எப்பவும் பாத்துட்டே இருக்கனும் போல இருக்கு மாமூ.." என்றாள் புன்சிரிப்புடன்.
அவளின் மாமூ என்ற அந்த அழைப்பு புதிதாய் இருந்தது ஆடவனுக்கு. அவளின் வார்த்தையும் ஆடவனுக்கு வெட்கத்தை தோற்றுவித்தது.
"போதும் டா.. எதுக்கு இத்தனை புகழ்ச்சி.." என்றான் அவளை நெருங்கியபடி.
"இது புகழ்ச்சி இல்லை.. என்னோட காதல் மாமூ.. என்னோட காதல் ஜெயிச்சிடுச்சி.." என்றாள் புதிதாய் பூத்த மலராய்.
அவளை கைப்பிடித்தவன் தன்னை நோக்கி இழுத்தவன் இறுக்கமாய் அவளை அணைத்து கொண்டான்.
"மாமூ இது ஹால்.." என்று சிணுங்கியபடி அவனை விலக்கினாள்.
"இருக்கட்டும் அதனால என்ன.. என் மனைவியை நான் கட்டி பிடிக்குறேன்.. இதுக்கு நான் யாருகிட்டியாவது அனுமதி வாங்கனுமா என்ன.." என்றான் திறந்த மனதுடன்.
" மாமூ உங்க மனசு தெளிவடைஞ்சிடுச்சா.. என்னை முழுசா ஏத்துகிட்டீங்களா.." என்றவளுக்கு அந்த வார்த்தையை முடிப்பதற்குள்ளாகவே கண்களில் கண்ணீர் வழிந்தது.
அவளின் விழிநீரை துடைத்தவன், "ஷீ எதுக்கு இந்த அழுகை.. என்னோட மனசுல இருந்த குழப்பம் நீங்க கொஞ்ச நாளாகும்.. ஆனா உன்னோட காதல் நீ எனக்குள்ளே ஆத்மார்த்தமா நுழைஞ்சிருக்கீங்க.. காலப்போக்கில எல்லாமே மாறும்.. சரியா இனி உன்னோட கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீரும் வெளியே வரக்கூடாது புரியுதா.." என்றான் அவளின் கண்ணீரை துடைத்தபடி.
அவனின் மார்பில் அழுத்தமாய் புதைந்து கொண்டாள் பெண்ணவள்.
அவளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டவனின் மனமும் அவளை முழுதாய் ஏற்று கொண்டிருந்தது.
"மாமூ விடுங்க நான் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன்.." என்றவள் வெட்கத்துடன் அவனை விட்டு எழுந்தாள்.
சிறு சிரிப்புடன் அவளை விட்டவன், "போய் மாத்திட்டு வாடா சாப்பிடலாம் பசிக்குது.." என்றவனின் பார்வையில் என்ன இருந்ததோ.
அவளின் அறைக்கு முன்னே செல்ல இவனும் அவளின் அறைக்கு செல்லலாம் எனும் நேரம் அங்கே வந்த வசந்தியோ,
"தம்பி இட்லி சுட்டு ஹாட்பாக்ஸில வச்சிட்டேன்.. நான் கிளம்புறேன் தம்பி.. அதிதிகிட்டேயும் சொல்லிடுங்க.. இப்போ நீங்க வந்து கதவை சாத்திக்கோங்க தம்பி.." என்று சந்தோஷமாய் அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் இவனும் கதவை சாத்தி வந்தவன் மனைவியின் அறைக்குள் இயல்பாய் நுழைந்தான்.
அவளோ அப்பொழுது தான் குளித்துவிட்டு இரவு உடை எடுக்கும் சமயம் இவன் உள்ளே வந்து கதவை சாத்தி விட,
"மாமூ.." என்றவளின் உடல் படபடத்தது.
அவளை காதலுடன் பார்த்தவன் மெல்ல அவளருகில் வந்து அவளின் தோளை தொட்டு திருப்பினான்.
" மா.. மூ.." என்று வார்த்தைகளும் வராமல் சதி செய்தது.
" ஏன் அதி மா.. உன்னை இந்த கோலத்துல நான் பார்க்க கூடாதா டி.." என்றவனின் குரலில் ஏகத்துக்கும் ஏக்கம் நிறைந்திருந்தது.
தன் கையில் இருந்த ஸ்டிக்கை ஒரு ஓரமாய் வைத்தவன் அவளை தன் கையனிப்பிலே கொண்டு வந்து கட்டிலில் அமர வைத்தான்.
அவனின் பார்வையை சந்திக்க முடியாமல் அவளின் விழிகள் நிலத்தை நோக்கி படர்ந்திருந்தது.
" ஏன் அதி மா உன்னை நான் எடுத்துக்க எனக்கு உரிமை இருக்கா.." என்றான் மென்மையாய்.
அவளோ வெட்கம் சிந்திய முகத்துடன், "ம்ம்.." என்றாள் தலையசைப்புடன்.
"ஆனா மாமூ.. முதல்ல சாப்பிட்டு வந்துரலாமே.." என்றாள் தன் குரலில் இனிமையை வைத்து கொண்டு.
" ம்ம் சரி.. நீ டிரஸ் பண்ணி வா.. நாம போய் முதல்ல சாப்பிட்டு வரலாம்.." என்றவன் தன் ஸ்டிக்கை எடுக்கும் சமயம், "மாமூ இனிமே வீட்டுல அது உங்களுக்கு தேவை இல்லை.. நான் இருக்கேனே உங்களுக்கு.." என்றாள் சந்தோஷமாய்.
"சரி டா நீ போய் டிரஸ் மாத்திட்டு வா.. ம்ம் அப்புறம் புடவை கட்டுறியா.. ஒரு நிமிஷம் இரு.." என்றவன் அவளின் துணி ரேக்குகளின் இடையில் இருந்த ஒரு கவரை எடுத்து அவளிடம் கொடுத்தவன், " இதை கட்டிட்டு வர்றியா அம்மு.." என்றான் புன்னகையுடன்.
அதை சந்தோஷமாய் வாங்கி கொண்டவள், "ம்ம் சரிங்க மாமூ.." என்றவள் அந்த கவரை எடுத்து கொண்டு டிரஸ் மாற்றும் அறைக்கு சென்றாள்.
அதில் அழகான வெந்தய கலரும் கீரின் கவரும் இணைந்து மெல்லிய ஷிபான் புடவையும் அதற்கு ஏற்றவாறு ரெடிமேட் பிளவுஸிம் இருந்தது.
அதை கண்டவள் சந்தோஷமாய் அதை எடுத்து அணிந்து கொண்டாள்.
தன் மன்னவன் தனக்காய் முதல் முதலாய் வாங்கி கொடுத்த பரிசு.
அதை சந்தோஷமாய் கட்டி கொண்டவள் எளிமையாய் தன்னை அலங்கரித்து கொண்டவள் கண்ணாடியில் பார்க்க தேவதையை போல் இருந்தாள்.
அவளை அந்த உடையில் பார்த்தவன் சந்தோஷமாய் விசில் அடித்து கொண்டு தானும் சென்று குளித்து வேறு உடை மாற்றி வந்தான்.
"வா சாப்பிடலாம்.." என்றபடி அவளை சாப்பிட அழைத்து சென்றான்.
இருவருக்கும் மனது நிறைந்து போனதால் வயிற்று பசி தெரியவில்லை. இருந்தும் பெயருக்கு உணவை கொறித்து விட்டு தங்களின் அறைக்கு சென்றனர்.
"அதி மா உனக்கு எந்த விதமான குழப்பமும் இல்லையே என்னோட வாழ்க்கையை தொடங்க.. உனக்கு சம்மதம் தானே.." என்றவனின் வார்த்தையில் அளவு கடந்த காதல் கொட்டி கிடந்தது.
அவளும் சந்தோஷமாய் ம்ம் என்று தலையசைக்க இத்தனை வருடங்களாய் சிந்தாமல் சிதறாமல் தேக்கி வைத்திருந்த தன் காதலை எல்லாம் அவளுக்கு காண்பிக்க ஆரம்பித்திருந்தான் ஆடவன்.
அழகான ஆழமான சந்தோஷமான தாம்பத்யம் அங்கே தொடங்கியிருந்தது.
எல்லாம் முடிந்து அவர்கள் இருவரும் விலக ஒரு மணி நேரம் ஆனது.
சந்தோஷமாய் தன் மன்னவனின் மார்பில் தலை சார்ந்திருந்தாள் அதிதி.
அவனும் கூட சந்தோஷமாய் தான் இருந்தான்.. இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை இன்று தான் முழுமையடைந்தது போல் இருந்தது ஆடவனுக்கு.
"அதி மா ரொம்ப ஹார்ட் பண்ணிட்டேனா டா.. கொஞ்ச நேரம் பால்கனி ஊஞ்சல்ல இருக்கலாம் வர்றியா மா.." என்றான் பாசமாய்.
அவனுக்கு நன்றாய் தெரியும் அவளை பூப்போல் தான் ஆண்டான்.. ஆனாலும் ஒரு பெண்ணிற்கு தொடங்கும் முதல் தாம்பத்யம் வலியும் நிறைந்ததாக இருக்குமென்று.
"மாமூ டிரஸ் பண்ணிட்டு வர்றேன்.." என்றபடி தன் புடவையை தேடி எடுத்து உடலில் சுத்தி கொண்டாள்.
இருவரும் பௌர்னமி தெரிய ஊஞ்சலில் அமர்ந்தனர்.
முதல் உறவு அவர்களுக்குள் இன்னும் அதிகமாய் நெருக்கம் தந்திருக்க அவளை தன்னுடனே அணைத்து கொண்டவன்,
"வலிக்குதா டா.." என்றான் மென்மையாய்.
பதில் பேசாமல் அவனின் முகத்தை பார்த்தவள், "நான் ரொம்பவே கொடுத்து வச்சிருக்கேன் மாமூ.. உங்களை போல ஒரு புருஷன் கிடைச்சதுக்கு.. ரொம்பவே சந்தோஷமா இருக்கேன் மாமூ.. இந்த உலகத்துலேயே சந்நோஷமான ஒருத்தி னா அது நான் தான் மாமூ.." என்றாள் அவனை அணைத்து அவன் கண்ணத்தில் இதழ் பதித்தபடி.
அதை கேட்டு சந்தோஷமானவன், "நான் தாண்டி லக்கி பர்சன்.. என் வாழ்க்கையில கிடைச்ச அற்புதம் டி நீ.. முத்தெடுக்குனும்னா கடலுக்கு ஆழத்துல தான் போகனும்னு சொல்வாங்க.. ஆனா தான் என் கை சேர்ந்த முத்து என்னோட நித்திலம் நீதாண்டி.." என்றான் அவளின் நெற்றிமுட்டி.
"ஆமா மாமூ.. என்னை அழகா வடிச்ச சிற்பி நீங்க தான்.. இந்த சிற்பியால பூத்த நித்திலம் நான் தான் மாமூ.." என்று சந்தோஷமாய் அவன் மார்பில் சாய்ந்து துயில் கொண்டாள் பெண்ணவள்.
அவன் மனதில் சஞ்சலங்கள் நிறைந்து இருந்தாலும் அது வானத்தில் தோன்றும் மேகங்கள் போல்.. அவ்வப்போது தோன்றி மறைந்து விடும்.. அது போல் இனி அவனின் வாழ்வு முழுமைக்கும் அவளின் காதல் வழி கொடுக்கும்.
முடிந்தது...