• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 2

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 2

கண்ணாடி மாளிகையாய் ஒளிர்ந்தது அந்த கட்டிடம். அதன் முகப்பில் அமர் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயருடன் கம்பீரமாய் இருந்தது.

அவனின் உழைப்பில் உயர்ந்து நின்றிருந்தது.. அமர் இண்டஸ்ட்ரீஸ் தெரியாதவர் யாரும் இல்லை இந்த சென்னையில். அமர்நாத் எல்லோராலும் மதிக்க கூடிய கர்னல்.

அமர் இண்டஸ்ட்ரீஸில் தான் அதிதி அக்கவுண்ட்ஸ் ஆபிசராக வேலை பார்த்து வந்தாள். ஒரு நிறுவனம் தங்கு தடையின்றி நடைபெறவும் அதன் கணக்கு வழக்குகளை சரிவர கவனிக்கவும் உண்மையான விசுவாசமான ஒரு ஊழியர் கிடைத்தால் போதும் அந்த நிறுவனம் வெற்றி பெற்றதாகும்.


அமர்நாத் அவ்வளவு எளிதில் யாரின் மேலும் நம்பிக்கை வைக்க மாட்டான். ஆனால் அப்படி அவன் நம்பிக்கை வைத்த நபர்களில் முக்கியமானவர்களில் அதிதியும் ஒருத்தி.

அவள் கல்லூரியின் கேம்பஸ் இண்டர்வியூவில் தான் செலக்ட் ஆனாள். அவளிடம் அசாத்திய திறமை இருந்தது. அதை அவள் வெளிக்காட்டிய கம்பெனியில் ஒன்று அமர் இண்டஸ்ட்ரீஸ்.

அவளின் திறமையை வைத்து அவளுக்கு வேலையை வழங்கினான் அமர்நாத்.

அவள் வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே அங்கே நடக்கு வரவு செலவு விவரங்களை துல்லியமாய் கணக்கிட்டு தேவையில்லாததை ஒதுக்கி தேவையான செலவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அமர்நாத்தின் பார்வைக்கும் எடுத்து சென்றாள்.

முன்பே அவனின் திறமையில் தான் கம்பெனி நன்றாக போய் கொண்டிருந்தது. கூடவே இவளின் ஒத்துழைப்பும் கிடைக்க நிறைய வேண்டாத செலவுகளை தவிர்க்கபட்டதன் விளைவு அந்த கம்பெனிக்கு ஒரு லாபமாகவும் கிடைத்தது.

அதுமட்டுமில்லாமல் தன் வேலையை மட்டும் செய்தால் போதும் என்று இல்லாமல் கிடப்பில் இருந்த வேலைகளையும் அவளின் மிகுதி நேரங்களில் செய்ய ஆரம்பிக்க அவனுக்கு பெண்டிங் கிடந்த வேலைகள் அனைத்தும் ஓரளவுக்கு முடித்து வைத்தாள்.

சிறு பெண் இருந்தால் இருபது வயதிற்குள்ளாக இருக்கும் பெண்ணிற்கு இத்தனை மெச்சூரிட்டியா என அமர்நாத்தே வியக்கும் வண்ணம் அவளின் வேலைகளில் சரியாக இருந்தால்.

ஏன் சில சமயம் அமர்நாத்தே அவளை நேரடியாக அழைத்து பாராட்டியிருக்கிறான்.

அப்படி ஒரு முறை அழைத்து அவளிடம் பேசி கொண்டிருந்த சமயம்,

"ஏன்மா அதிதி உன்னோட பேமிலி எங்கிருக்காங்க.. உன்னோட செந்த ஊரு எது..?" என்றான் அவளை பார்த்து கொண்டே.

அலுவலக சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் சொன்னவள் தன்னை பற்றிய கேள்வி வரவும் அமைதியாய் இருந்தாள்.

அவளின் அமைதி ஏனோ ஆடவனுக்கு சங்கடமாய் போனது.. தேவையில்லாமல் கேட்டுவிட்டோமோ என்று யோசித்தான்.


"சாரிம்மா உனக்கு சொல்ல விருப்பம் இல்லைன்னா நான் கேட்கலை.. இதுவரைக்கும் நான் யாருகிட்டேயும் கேட்டதில்லை அவங்களோட பர்சனல் உள்ளே போனதில்லை.. ஆனா எதுவோ உன்கிட்டே கேட்டுட்டேன்.. தப்பிருந்தா மன்னிச்சிடுமா.." என்றான் அழுத்தமாய்.

"அய்யோ அதெல்லாம் இல்லைங்க சார்.. உங்ககிட்டே சொல்றதுல ஒரு பிரச்சனையும் இல்லை சார்.. எனக்கு யாருமில்லை சார்.. நான் அனாதை ஆசிரமத்துல தான் வளர்ந்தேன்.. படிப்பு முடிஞ்சதும் அங்கிருந்து விரட்டிட்டாங்க.. படிப்பு முடியற வரைக்கும் தான் அங்கிருக்க முடியும்.. அதனால நான் இப்போ லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்கேன் சார்.." என்றாள் புன்னகைத்தபடி.

அவளின் அந்த புன்னகையில் இருந்த வருத்தம் ஆடவனுக்குள் நுழைந்து எதுவோ செய்தது.

அன்றிலிருந்து அவளிடம் இயல்பாய் பேசி பழக ஆரம்பித்தான். முன்பு யாரிடமும் அதிகம் வேலையை தவிர்த்து பேசாதவன் ஏனோ அவளிடம் அதிகமாய் பேசி பழக ஆரம்பித்தான்.

அலுவலக விஷயத்திலிருந்து அரசியல் வரை இருவரும் விவாதிப்பார்கள்.. ஆனால் அதிலும் ஒரு எல்லைக்கோடு வகுத்து கொள்வான்.

அலுவலக சம்பந்தமாய் அவளிடம் கலந்து பேசி ஒரு முடிவு எடுக்கும் வரைக்கும் இருவருக்கும் பிணைப்பு இறுகியது.

ஏன் சில நேரம் அவனே யோசித்ததுண்டு.. இந்த சின்ன பெண்ணிடம் நாம் ஆலோசனை கேட்க வேண்டுமா என்று. ஆனால் அவனே அறியாமல் அவளிடம் எதையும் மறைக்க முடியாமல் அனைத்தையும் பேசிவிடுவான்.

இந்த பந்தம் எப்படி வந்தது என்று இருவரும் அறியவில்லை. ஆனால் எங்கிருந்தோ வந்த உரிமையுணர்வு.

ஒரு அளவுக்கு மேல் அவன் யாரிடமும் நெருங்கி பேசி பழகியதில்லை. சிறு வயதிலேயே மனதில் ஆழமாய் பதிந்து போன நாட்டுப்பற்று. இந்த தேசத்தை காக்க வீட்டுக்கு ஒரு ஆண் மகனை கேட்டார் சுபாஷ் சந்திரபோஸை போல் நவீன சுபாஷ் சந்திரபோஸ் தான் இந்த அமர்நாத்.

பரந்து விரிந்த இந்திய பாரத தேசத்தை காக்க தன்னையே முழுதாய் அர்ப்பணித்து அதில் முழுமனதாய் பணியாற்றியவன் அமர்நாத்.

இரும்பு துப்பாக்கி எல்லையில் போர் ரத்தம் என அனைத்தும் பார்த்து பழகி போனதாலோ என்னவோ மனதில் இரக்கம் சற்று காணாமல் தான் போயிருந்தது.

அனைவரையும் ஒரு அடி எட்டி நிறுத்தி பழகும் வீதம்.. எல்லோருக்கும் வரையறை வைத்தவன் அவனறியாமல் அவனின் எல்லையை அதிதியை தாண்ட வைத்துவிட்டான்.

அவனிடம் ராணுவ கதைகளை கேட்டு அங்கே நடக்கும் யுத்தங்களை பற்றியும் தெரிந்து கொள்வாள் பெண்ணவள்.

ஏன் தனக்கு அடிபட்டு காலை இழந்த நிலையில் மற்றவர்களின் பரிதாபமான பார்வையை கண்டு தன்னை மூர்க்கனாக மாற்றி கொண்டவனை அவனே அறியாமல் அவன் ஆழ்மனதில் படிந்து போன துயரங்களை அழித்து கொண்டிருந்தாள் அவளே அறியாமல்.

அன்றும் அப்படி பேசி கொண்டிருந்த சமயம்,

"ஏங்க சார் நீங்க ராணுவத்துல இருந்து வந்ததை நினைச்சி வருத்தமே படலியா ஒரு நாளும்.." என்றாள் புன்னகைத்தபடி.

அதை கேட்டவன் விரக்தியாக புன்னகைத்தபடி, "எனக்கு சுத்தமா வருத்தம் இல்லைன்னு நினைக்குறியா அதி.. மனசு முழுக்க இருக்கு.. சின்ன வயசுல இருந்து மனசுல ஊறப்போட்டு ரத்தத்தோட ஊறிப்போன விஷயம்.. ஆனா என்ன செய்ய முடியும் ராணுவத்துக்குனு ஒரு கட்டுபாடு ரூல்ஸ் இருக்கே.. இனி என்னால முன்ன போல இயங்கமுடியாது.. அது தான் வந்துட்டேன்..

மனசு முழுக்க வலி.. நான் ஆசைபட்டு காதலிச்ச என்னோட வேலை.. உனக்கு ஒன்னு தெரியுமா அதி.. எல்லாரும் எனக்கு கல்யாணம் ஆகலைன்னு நினைக்குறாங்க.. ஆனா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி.. என்னோட மனைவி ராணுவம்.. இப்போ அவளை டைவர்ஸ் பண்ணிட்டு இருக்கற நிலை.. அவ்வளவு தான் சரி விடு.. எனக்காக நேரமாகுது.. நான் கிளம்புறேன் நீ ஹாஸ்டல் கிளம்பு.." என்று அவளை அனுப்பி வைத்தவன் தானும் தன் வீட்டிற்கு கிளம்பினான்.

கிட்டதிட்ட அவளும் அங்கே வந்து ஒரு வருடம் முடியும் தருணத்தில் தான் அது நடந்தது.

அவளை காதலிப்பதாக வந்தான் அலெக்ஸ்.. அதுவும் நேரடியாக அமர்நாத்திடம் பேசியவன் யாருமில்லாத அவளுக்கு தானும் தன் குடும்பமும் எல்லாமாகவும் இருப்பேன் என்று கூறி அமரிடம் கூறினான்.

அதை கேட்ட அமர்நாத்தும் அவன் கூறுவது உண்மை என நம்பி அதியிடம் பேசினான்.

முதலில் அதிர்ந்த அவள் அவனை இதுவரை கண்டதே இல்லை என்று கூறினாள்.

ஒரு பெண்ணை காதலித்து அவளின் பின்னால் சுற்றி அவளின் பேரை கெடுக்காமல் திருமணம் பேச வந்தவன் நிச்சயம் நல்லவன்.. அவனை திருமணம் செய்தால் உனக்கும் ஒரு குடும்பம் கிடைக்கும்.

இதுவரை நீ அனாதையாய் இருந்ததை போதும். உனக்கென ஒரு குடும்பம் அமையும்.. கணவன் பிள்ளை மாமனார் மாமியார் என ஒரு குடும்பம் கிடைக்கும் என்று பேசினான்.

அவளும் அவனிடம், "சார் எனக்கு பெரிசா ஒன்னும் வயசாகலையே.. இருபத்தி இரண்டு தானே.. நான் யூ ஜீ வேற பண்ணனும்.. இன்னும் பெரிய போஸ்ட்டுக்கு படிக்கனும் சார்.. எனக்கு யாரும் இல்லாததால தான் ஒரு டிகிரி முடிச்சதும் நான் வேலைக்கு வந்தேன்.. இப்பவே கல்யாணம் தேவையா சார்..?" என்றாள் கேள்வியாய்.

"நிச்சயம் தேவை தான் அதி மா.. இதோ பாரு குடும்பத்தோட இருக்கற வயசு பொண்ணுங்களுக்கே இங்கே பாதுகாப்பு இல்லை.. அப்படி இருக்கறப்போ உன்னோட நிலையை யோசிச்ச பாரு.. கல்யாணம் செய்துகிட்டு படி.. அலெக்ஸ் அதுக்கும் சரின்னு சொல்லிட்டான்..

"கல்யாணம் செஞ்சுகிட்டு படி வேலைக்கு போ.. பெரிய ஆளா வா.. யாரு உன்னை தடுக்க போறா.. பையன் நல்ல பையன்.. சரின்னு சொல்லுமா.." என்று அவளிடம் மெல்ல பேசி சம்மதம் வாங்கி விட்டவன் அவளின் கல்யாண ஏற்பாடுகளை அவனே முன்னின்று நடத்த எதிர்பாராத சூழ்நிலையில் அவன் செய்த மாங்கல்யத்தை அவனே அவளின் கழுத்தில் சூட்ட வேண்டிய கட்டாயத்தை விதி எற்படுத்திவிட்டது.

அந்த தனியார் விடுதிக்கு வந்த அதிதியின் மனமோ சொல்லெனா உணர்வில் ஆட்கொண்டிருந்தது.

அதே நேரம் அங்கே வந்த அவளின் அறைத்தோழி நேத்ரா,

"ஹேய் அதிதி எப்போ வந்த.. வாட் எ பிளசன்ட் சர்ப்ரைஸ் பேபி.." என்றபடி வந்து கட்டியணைத்தாள்.

"இப்போ தான் நேது வந்தேன்.." என்றாள் புன்னகையுடன்.

"அப்புறம் எப்படி போகுது நீயூ மேரேஜ்.. உன்னோட ஹஸ்பண்ட் என்ன சொல்றாரு.. எல்லாத்தையும் அவருகிட்ட சொல்லிட்டியாடி.." என்றாள் எதிர்பார்த்த குரலில்.

"இல்லை நேது.. நான் எதுவும் சொல்லலை.. ஆனா அவரு இன்னைக்கு என்கிட்டே பேசினாரு டி.. சீக்கிரமே எனக்கு டைவர்ஸ் வாங்கி தர்றதா சொன்னாரு.. ஆனா உடனே கிடைக்காது இல்லை.. இப்போதைக்கு தள்ளி வச்சிருக்கேன்.. ஆனா எனக்கு பயமா இருக்கு நேது.. அவருக்கு மட்டும் உண்மை தெரிஞ்சா என்னை மன்னிக்கவே மாட்டாரு டி.. எனக்கு பயமா இருக்கு நேது.." என்றாள் உடல் நடுங்க.

" சரி டி விடு அதை அப்போதைக்கு பாத்துக்கலாம்.. நீ ஆசைப்பட்டு செஞ்ச விஷயம் தானே.. இங்கிருந்து நீ போறதுக்குள்ள நீ ஆசைப்பட்டதை நடத்திக்கோ அதிதி.. எனக்கு உன்மேல ரொம்பவே கோபம் இருந்துச்சி தான்.. ஆனா உன்னோட ஆசையும் ஏக்கமும் தெரிஞ்சதால தான் அமைதியா விட்டேன்.. இப்போவும் எனக்கு இந்த விஷயத்துல முழுசா விருப்பம் இல்லை.. ஆனா உனக்காக தான் நான் அமைதியா இருக்கேன்.." என்றாள் நேத்ரா.

"சரி விடு நேது.. எதுவும் தப்பா ஆகாது.. என்மேல உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லை.. நான் பாத்துக்குறேன்.. சரி டி எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு.. நான் என்னோட திங்க்ஸ் அந்த வீட்டுக்கு எடுத்துட்டு போறதுக்கு.. அவருகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்.." என்றவள் மளமளவென தனக்கு தேவையான உடமைகளை எடுத்தவள் சற்று நேரம் அமர்ந்து நேத்ராவுடன் பேசிவிட்டு தன் உடமைகளுடன் அமர்நாத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

இங்கே தன் கம்பெனிக்கு வந்த அமர்நாத்திற்கு ஏனோ மனம் முழுவதும் அதிதியின் நினைவு தான்.

தேவையில்லாமல் அவளின் விஷயத்தில் தலையிட்டு விட்டோமோ என்ற எண்ணம் தான் அவனின் மனதை அரித்து கொண்டிருந்தது.

அதே நேரம் வேலை ஒன்றும் செய்ய தோன்றாமல் அமர்ந்திருந்தவன் வெளியே செல்லலாம் என்று வெளியே வரும் போது அவன் காதுகளில் விழுந்த வார்த்தையில் கோபத்தில் முகம் சிவந்து கண்கள் ரத்தத்தில் ஜொலித்தன.

அங்கே அவனது அலுவலக ஊழியர்கள் பேசி கொண்டிருந்தது தான் அவனை கோபத்தில் ஆழ்த்தியது.

" இந்த வயசுலயும் நம்ம பாஸ் யங் மேன் ஆ தான்டி இருக்காரு.. ஆனாலும் இந்த அதிதி தாண்டி பாவம்.. வயசான ஒருத்தரை கட்டிட்டு அதுவும் கால் வேற ஊனம்.. எப்படி தான் அவரோட மனசு ஒப்பி வாழறாளோ.. இல்லை இவரு தான் சபலப்பட்டு அவகிட்ட விழுந்து கிடக்கறாரோ.." என்றாள் ஒருத்தி.

உடன் இருந்த மற்றொரு ஆணோ, "ஏய் அந்த அதிதி ஒன்னும் உத்தமி மாறி பேசுற.. ஒரு வேளை நம்ம பாஸோட சொத்துக்காக அவரை வளைச்சி போட்டிருப்பா.." என்றான் வன்மமாய்.

"ஆமா ரவி நீ சொல்றதும் சரி தான்.. இத்தனை நாளா இங்கே வேலை செஞ்சிட்டு இருந்தா.. இனிமே இங்கே அவ தானே முதலாளி.. இத்தனை நாளை போல வேலை செய்ய முடியுமா.. என்ன தான் வயசானாலும் நம்ப பாஸிம் ஆம்பிளை தானே.. அதுமட்டுமில்லாம இத்தனை நாளா பிரம்மச்சர்யம் காத்தவரு.. இனிமே அப்படி இருக்க முடியுமா.. சரியோ தப்பா இப்போ தான் அவருக்குன்னு அழகா அம்சமா பொண்டாட்டி வந்துட்டாளே.. கல்யாணம் ஆகி ரெண்டு நாள் ஆச்சி.. இன்னமுமா அவங்களுக்குள்ள எதுவும் நடக்காம இருக்கும்.. எல்லாம் இந்நேரம் மேட்டரை முடிச்சிருப்பாரு.. ஒரு வேளை இதுக்கு முன்னாடியே கூட முடிச்சிருக்கலாம்.. நாம தான் ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் அதிகம் அதுனால தப்பு எதுவும் நடக்காதுன்னு தப்பு கணக்கு போட்டுட்டோம் போல.. ஆன மனுசன் நல்லா அனுபவிக்கிறாரு டா.." என்றான் மற்றொருவன்.

அதற்கு மேலும் காதுகளை கூச வைக்கும் அந்தரங்க வார்த்தைகள்.

கொஞ்சமும் வெட்கம் மானம் இல்லாமல் அடுத்தவரின் அந்தரங்கத்திற்குள்ளாக நுழைந்து கற்பனை செய்து கொள்ளும் இது போல மனிதர்கள் இங்கே இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

அதை கேட்டவனுக்கு மனமெங்கும் வலித்தது.. இத்தனை நாள் தான் சேர்த்து வைத்த பெயர் புகழ் மானம் மரியாதை என அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போனதில் மனதிற்குள்ளாக இன்னும் இறுகி போய் நின்றான். ஆனாலும் எப்பொழுதும் இதில் பெரிதாய் எடுக்காதவன் அதை தூசி போல் தட்டிவிட்டான்.

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகம்.. நிம்மதியாய் நம்மை என்றும் வாழவிடாது என்ற நிதர்சனம் புரிந்தவன் அவர்களின் முன்னே வந்து நிற்க அவனை அந்த நேரத்தில் எதிர்பார்க்காதவர்கள் அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டனர்.

"ஸார் அது... அது.. வந்து.." என்று ஒருவன் இழுக்க அதை கைநீட்டி தடுத்தவன்,

"இங்கே நீங்க வந்தது வேலை பார்க்க தான்.. வீண் அரட்டை அடிக்க இல்லை.. நெக்ஸ்ட் அடுத்தவங்க அந்தரங்கத்துல நீங்க தலையிடறது அநாகரீகம்.. ஒழுங்கா உங்க வேலையை மட்டும் பார்த்தா அத்தனை பேரோட தலையும் தப்பிக்கும்.. இல்லை.." என்று கைநீட்டி மிரட்டியவன் அத்தனை பேருக்கும் இரண்டு நாள் வேலையை ஓரே நாளில் செய்ய சொல்லிவிட்டு வெளியேறினான்.

அவனின் தண்டனை எப்போதும் இப்படித்தான் வித்தியாசமாய் இருக்கும். தன் வேலையும் முடித்து கொள்வான் அவர்களுக்கும் தண்டனை கிடைத்துவிடும்.

இங்கே அதிதி தன் உடமைகளை தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் வைத்தவள் அங்கேயே அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

அதே நேரம் அவளின் அலைபேசிக்கு ஒரு கால் வர அதை ஆன்செய்து பேசியவளின் உடலில் வேர்வை முத்துக்கள் தோன்றி நடுங்க வைத்தன.

அப்படி அந்த அலைபேசியில் யாரோ..?


தொடரும்...
✍️


 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
பேசணும்னு நினைக்கிறவங்க எப்படி வேணாலும் பேசுவாங்க அதுக்கு வரையறை கிடையாது. நம்ம சமூகத்தோட டிசைன் அப்படி 😢

அதிதி என்ன மறைக்கிறா? 🧐
யாரோட அழைப்பு அது? 🧐

சூப்பர் எபி❤️👌
 

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
இவ ஏதோ பண்ணிருக்காளா?
யார் அந்த போன் கால்?
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
பேசணும்னு நினைக்கிறவங்க எப்படி வேணாலும் பேசுவாங்க அதுக்கு வரையறை கிடையாது. நம்ம சமூகத்தோட டிசைன் அப்படி 😢

அதிதி என்ன மறைக்கிறா? 🧐
யாரோட அழைப்பு அது? 🧐

சூப்பர் எபி❤️👌
thank you sis
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵அதிதி அப்படி என்ன செஞ்சிருப்பா அமர்கு தெரிஞ்சா பிரச்னை ஆகுறதுக்கு 🤔🤔🤔🤔🤔நேத்ரா நல்ல தோழி ஏதோ பாவம் பார்த்து அதிதிக்கு சப்போர்ட் ஆ இருக்கா 🙄🙄🙄🙄
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵அதிதி அப்படி என்ன செஞ்சிருப்பா அமர்கு தெரிஞ்சா பிரச்னை ஆகுறதுக்கு 🤔🤔🤔🤔🤔நேத்ரா நல்ல தோழி ஏதோ பாவம் பார்த்து அதிதிக்கு சப்போர்ட் ஆ இருக்கா 🙄🙄🙄🙄
thanks sis