• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 3

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 3

காரை போர்டிகோவில் நிறுத்திய அமர்நாத் ஏதோ யோசனையுடனே கையில் இருந்த ஸ்டிக்கை அழுத்தமாய் ஊன்றி செல்ல அந்த சத்தத்தில் சமையல் பெண்மணி வெளியே வந்தவர் அவரின் முன்னே கைகளை பிசைந்தபடி நின்றார்.

" என்னாச்சி வசந்தா அக்கா.." என்றான் அழுத்தமாய்.

"தம்பி அந்த பொண்ணு மதியமே ரூமுக்கு போச்சி.. இன்னும் சாப்பிட கூட வரலை.. நானும் ரெண்டு தடவை கதவை தட்டினேன்.. ஆனா கதவு திறக்கலை.. அதுதான் உங்களுக்கு போன் பண்ணலாம்னு வந்தேன்.. அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.." என்றார் வேகமாய்.

"என்ன சொல்றீங்க.. சரி நீங்க தான் திரும்பவும் கதவை தட்டி பாக்குறது.. இல்லைன்னா டூப்ளிகேட் சாவி இருக்கு இல்லை.. அதை வச்சி திறக்க வேண்டியது தானே.." என்றான் படபடப்பாய்.

" இல்லை தம்பி உங்களோட அனுமதி இல்லாம நான் எப்படி தம்பி.." என்றார் தயக்கமாய்.

"அய்யோ அக்கா முதல்ல போய் அவளை பாருங்க.." என்று அவரை அனுப்பியவன் சோர்ந்து போய் அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

அதே நேரம் கதவை திறந்து கொண்டு பெண்ணவள் வந்தாள்.

அவளை கண்டதும் தான் இருவருக்கும் மனம் அமைதியடைந்தது.

அவளிடம் வேகமாய் சென்ற வசந்தாவோ, "ஏம்மா கதவை தட்டினேன் ஏன் திறக்கலை இவ்வளவு நேரமும்.." என்றார் வேகமாய்.

"அம்மா அது வந்து என்னையறியாம நான் தூங்கிட்டேன்.. எனக்கு நீங்க வந்து கதவை தட்டுன சத்தம் கேட்கலை அது தான் மா திறக்கலை.. சாரி மா.." என்றாள் தவறு செய்த குழந்தையாய்.

பதில் என்னவோ வசந்தாவுக்கானதாய் இருந்தாலும் அவளின் பார்வை மொத்தமும் அவனிடம் தான் இருந்தது.

அவனோ அவளை அழுத்தமாய் பார்த்திருந்தான். அந்த பார்வையில் இருந்த பொருள் நங்கையவளுக்கு சத்தமாய் விளங்கவில்லை.

அவளிடம் எதுவும் பேசாது எழுந்து தனதறை நோக்கி சென்றுவிட்டான் ஆடவன்.

வசந்தாவோ அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல், "நல்ல பொண்ணு மா நீ.. கதவை திறக்கலைன்னு சொன்னதும் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா.. ஆனா நீ எவ்வளவு சுலபமா சொல்றே தூங்கிட்டேன்னு.. தம்பியே கொஞ்ச நேரத்துல பதட்டமடைஞ்சிட்டாரு நீ பண்ண வேலைக்கு.. சரி நீ வா சாப்பிட.." என்றவரோ அவளின் கையை பிடித்து அழைத்து செல்ல பெண்ணவளோ சாத்திய அறைக்கதவையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவளை அமர வைத்து பரிமாறியவர் அவளை சாப்பிட சொல்லிவிட்டு வேலைக்காக அறைபக்கம் சென்றுவிட்டார்.

சாப்பாட்டை முழுதாய் சாப்பிட முடியாமல் பிசைந்து கொண்டிருந்தாள்.

அதே நேரம் அங்கே வந்த அமர்நாத்தோ, "இப்போ எதுக்கு இப்படி சாப்பாட்டுல கோலம் போட்டுட்டு இருக்கே.. சாப்பாட்டை இப்படி அவமானப்படுத்தனுமா என்ன.. அதுக்கு வேணாம்னு சொல்லிட்டு போகலாம் இல்லை.." என்றான் முறைத்தபடி.

"அது இல்லை சார் அது வந்து.." என்று தடுமாறினாள் முடிக்க முடியாமல்.

"முதல்ல சாப்பிடு அப்புறம் பேசலாம்.." என்றவன் அவளருகே அமர்ந்து தனக்கு தட்டு வைத்து தானே பரிமாறி சாப்பிட ஆரம்பித்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி சாப்பிட்டு கொண்டிருந்தாள் அதிதி.

தலையில் ஆங்காங்கே வெள்ளை கம்பிகளாய் நரைத்த முடி இருக்க அதிலும் அழகாய் கம்பீரமாய் இருந்தான் அமர்நாத்.

ஏன் இத்தனை வயதில் எத்தனையோ பெண்கள் அவனின் பணத்துக்காகவும் அவன் ஆண்மைக்காகவும் அவனிடம் இழைந்தது உண்டு.

ஆனால் இதுவரை யாரிடமும் எதற்காகவும் தடுமாறாமல் தடம் மாறாமல் நின்றிருந்தவன்.

வீட்டில் மனைவியிருக்க பார்க்கும் பெண்களை பார்வையால் துகிலுரியும் எத்தனையோ ஆண்களுக்கு மத்தியிலும் ஒரு பெண்ணின் முகத்தையும் கண்களையும் நேருக்கு நேராய் பார்த்து பேசும் ஆண்கள் மிகவும் குறைவு.

அந்த வகையில் அமர்நாத் மிகவும் கண்யமானவன். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் ஆண்மகன்.

அவனை பற்றி சிந்தித்து படியே சாப்பிட்டு முடித்தார்கள் இருவரும்.

" அதிதி.." என்றழைத்தான் அழுத்தமாய்.

"சொல்லுங்க சார்.." என்றாள் தலையை குணிந்தபடி.

"உனக்கு இங்கே இருக்கறதுல மனப்பூர்வமான விருப்பம் தானே.. இல்லை கட்டாயத்தின் பேர்ல இருக்குறியா.." என்றான் எங்கோ பார்வையை பதித்தபடி.

"அப்படிலாம் இல்லைங்க சார்.. என்னால உங்க பேரு தான் கெட்டு போச்சு.. அது தான் மனசு கஷ்டமா இருக்கு சார்.. நீங்க எந்த தப்பும் செய்யலை.. ஆனா தண்டனை உங்களுக்கு.. என்னைய காலம் முச்சூடும் வச்சி கஷ்டப்பட உங்களுக்கு என்ன தலையெழுத்தா..

அன்னைக்கு யாரோ எதுவோ சொன்னாங்கன்னு நீங்க என் கழுத்துல தாலி கட்டியிருக்க வேண்டாம் சார்.. உங்களோட அந்தஸ்துல நான் ஒரு படி கூட இல்லை.. என்னை மனைவியா வெளி உலகத்துக்கு உங்களால அறிமுகப்படுத்த முடியாது.. அது அசிங்கம்..

நானே கொஞ்ச நாள்ல இங்கேயிருந்து போயிடுறேன் சார்.." என்றாள் கரகரப்பான குரலில்.

"அதிதி என்ன பேசுற.. உனக்கு என்ன குறை.. அழகு படிப்பு அந்தஸ்தான வேலை இதெல்லாம் இருக்கும் போது நீ ஏன் அப்படி நினைக்குறேன்..

ஆனா எனக்கு தான் எந்த தகுதியும் இல்லை.. உனக்கும் எனக்கும் இருக்கற பெரிய வித்தியாசம் எது தெரியுமா.. நம்மோட வயசு.. கிட்டதிட்ட இருபது வருட வித்தியாசம்.. நான் வாழ்ந்து முடிச்சவன்.. ஆனா நீ வாழப்போற இளந்தளிர்.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை நான் ஏற்படுத்தி தருவேன் என்னை நம்பு.. மனசை விடறாதா..

என் உயிரை கொடுத்தாவது உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தருவேன்.. ஆனா தயவு செஞ்சு நீ இப்படி பேசாத.. எனக்கு கஷ்டமா இருக்கு.. அன்னைக்கு நடந்ததுக்கு நான் இப்பவும் வருத்தபடுறேன்.. ஆனா அவங்க பேசுனதை என்னை மட்டும்னா நான் கண்டுக்கமாட்டேன்.. ஆனா உன்னோட ஒழுக்கத்துல அவங்க சேத்தை வாறி இறைச்சாங்க.. அது தாங்க முடியாம தான் நான் என்னவோ பண்ண போய் கடைசியில நானே கோபத்துல உன் கழுத்துல தாலி கட்டுற மாறி சூழ்நிலை உருவாகி போச்சு..

சரி இனி பேசி பிரயோஜனமில்லை.. ஆனா அந்த அலெக்ஸ் இப்படி மோசமானவனா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை.. சரி விடு நடந்து முடிஞ்சதை பத்தி இனி பேச வேணாம்..

இந்த வீட்ல நீ உரிமையோட இருக்கலாம்.. உனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. அன்னைக்கு நான் ஏதோ கோபத்துல பேசிட்டேன்.. அதை மனசுல வச்சிக்காத..

நீ பழைய படி ஆபிஸ் வா.. உன்னோட வேலையை பாரு.. அது போல உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைச்சா இந்த வீட்டை விட்டு நீ போற வரைக்கும் உனக்கு நான் பாதுகாப்பா தான் இருப்பேன்..

இங்கே இருக்கற வரைக்கும் ஒரு ரூம் மேட்டாவது என்னை நினைச்சிக்கோ.. எல்லாத்தையும் ஷேர் பண்ணிக்கலாம் சரியா.. உனக்கு யாருமில்லைன்னு கவவைபடாத நான் இருக்கேன்..

அப்புறம் என் தங்கச்சி குடும்பம் அப்பப்போ வந்துட்டு போவாங்க.. சோ நம்மோட விஷயம் எதுவும் அவங்களுக்கு தெரியனும்னு இல்லை சரியா.. நீ நீயா இரு.. இந்த வீட்ல நீ சுதந்திரமா இருக்கலாம் சரியா.." என்று அவளிடம் அவன் பேசி முடியும் தருணம் வாசலில் செக்யூரிட்டி வந்து நின்றார்.

" சார்.." என்றான் மரியாதையாக.

"சொல்லுங்க யாசின்.." என்றான் கம்பீரமாய்.

"சார் உங்களை பார்க்க அலெக்ஸ் வந்துருக்காரு சார்.." என்றான் தகவலாய்.

அதை கேட்டு யோசித்த அமர்நாத் நிமிர்ந்து அதிதியின் முகத்தை பார்க்க அதில் இருந்த இறுக்கத்தில் எதுவும் கண்டுபிடிக்க முடியாமல் தனக்கு முன்னே இருந்த செக்யூரிட்டியிடம் திரும்பியவன்,

"வர சொல்லுங்க யாசின்.." என்றான் அழுத்தமாய்.

"அதிதி.." என்று மெதுவாய் அவளை அழைத்தான்.

அவளோ அவன் அழைப்பதை கூட உணராமல் அழுத்தமாய் நின்றிருந்தாள்.

"அதிதி.." என்றான் கர்ஜனையாய்.

அதில் உடல் நடுங்க நிமிர்ந்தவள், "சார்.." என்றாள் மெதுவாய்.

"இங்கே வந்து உட்காரு.." என்று தன் அருகில் இருந்த இடத்தை காட்டினான்.

அவளோ ஒன்றும் புரியாமல் அவன் சொன்னதை செய்யும் கிள்ளையாய் அவனருகில் சென்று அமர்ந்தாள்.

அதே நேரம் அங்கே வந்த அலெக்ஸ் அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்ததை பார்த்து கோபம் கொண்டவன் அதை வெளிப்படுத்தாமல் சாதுர்யமாய் தடுத்தவன்,

"வணக்கம் அமர்நாத் சார்.." என்றவனின் பார்வை அதிதியின் மேல் இருந்தது.

அவனின் பார்வை போன திசையை அறிந்த அமர்நாத், "சொல்லு அலெக்ஸ் எதுக்காக இங்கே வந்துருக்க.." என்றான் பட்டு கத்தரித்தார் போல்.

அவனின் வார்த்தையில் அவனின் பக்கம் திரும்பிய அலெக்ஸ், "சாரி சார் அன்னைக்கு நான் ரொம்ப தப்பா நடந்துகிட்டேன்.. என் மேல தான் சார் தப்பு.. என்னை மன்னிச்சிருங்க சார்.. அதிதிகிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டு போகத்தான் சார் வந்தேன்.." என்றவனின் வார்த்தையில் துளியும் உண்மை தன்மை இல்லை.

அதை அறிந்தாலும் தெரிந்தாற் போல காட்டி கொள்ளாமல், "தேவையில்லை அலெக்ஸ் உன்னோட வார்த்தையில உண்மை இருக்கும்னு நம்பி தான் நான் எல்லா ஏற்பாடும் செஞ்சேன்.. ஆனா நீ அதுக்கு தகுதி இல்லைன்னு நிருபிச்சிட்டே.. இனி நீ அதிதி கிட்ட பேச தேவையில்லை.. அவ என்னோட ஒய்ப்.. நீ மன்னிப்பு கேட்டு எதுவும் இங்கே மாறப்போறதில்லை.. இனி நான் பாத்துக்குறேன் நீ போலாம்.." என்றவன் அதிதி புறம் திரும்பி,

"நீ போய் உன்னோட வேலையை பாரு அதிதி.." என்று அவளை அனுப்பி வைத்தான்.

அவளோ அங்கே ஒரு வார்த்தையும் பேசாமல் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து எழுந்து சென்றாள்.

தன்னை திரும்பியும் பார்க்காமல் சென்றவளின் மேல் அலை அலையாய் கோபம் பொங்கியது.

ஆனால் அதை இப்பொழுது காட்டினால் நிச்சயம் அமர்நாத் தன்னை விடமாட்டான் என்று உணர்ந்தவன் ஒரு பகையோடு அங்கிருந்து சென்றான்.

உள்ளே வந்த அதிதியை கண்ட வசந்தாவோ,

"அதிதிம்மா இங்கே கொஞ்சம் வாங்களேன்.." என்று சமையல் கட்டிலிருந்து அழைத்தார்.

அவரின் குரலுக்கு அங்கே சென்றவர், "அம்மா சொல்லுங்க மா கூப்பிட்டீங்களா.." என்றாள் சற்று புன்னகைத்தபடி.

" மெதுவா வாங்கம்மா.. இன்னைக்கு என்ன சமைக்கலாம்னு கேட்க தான் கூப்பிட்டேன்.. " என்றார் சிரித்தபடி.

"இது என்ன புதுசா என்னை கேட்குறீங்க மா.." என்றால் எதுவும் புரியாமல்.

அது இல்லைம்மா இத்தனை நாளா என்னோட விருப்பத்துக்கு சமைச்சேன்.. இப்போ தாண்ட நீங்க வந்துட்டீங்களே.. உங்ககிட்ட கேட்டு சமைக்க சொல்லி அய்யாவோட உத்தரவு மா.." என்றார் தன் வேலையை பார்த்து கொண்டே.

அதை கேட்டவளுக்கு தான் ஒன்றும் விளங்கவில்லை.

'எதற்காக அப்படி சொன்னார்..' என்றவளின் கேள்விக்கு விடைதான் சொல்ல ஆளில்லை.

" அதிதிம்மா.." என்றபடி அவளின் தோளில் கை வைத்து உலுக்கினார் வசந்தா.

அதில் நினைவுக்கு வந்தவள், "ம்ம் சொல்லுங்க மா.." என்றாள் முழித்தபடி.

" நான் கூப்பிட்டுட்டே இருக்கேன்.. நீங்க என்ன நினைவுல இருக்கீங்க.. என்ன சமைக்கட்டும் மா.." என்றார் அவளின் முகத்தை பார்த்தபடி.

"அதெல்லாம் எப்பவும் போல உங்க விருப்பபடியே செய்ங்க மா.. எனக்குன்னு எந்த தனி விருப்பமும் இல்லை.. எதுவும் வேணாம்னு இல்லை.." என்றாள் சிரித்தபடி.

அதை கேட்ட வசந்தா, "உங்களுக்கு என்னலாம் சாப்பிடனும்னு தோனுதோ அதெல்லாம் சொல்லுங்க சமைச்சு தரேன்.." என்றார் புன்னகை முகத்துடன்.

அதை கேட்டவள் சரி என்று தலையசைத்தவள், "அம்மா ஒரு விஷயம்.." என்றாள் சற்று தயங்கியபடி.

" சொல்லுங்க மா.." என்றார் அவளின் முகத்தை பார்த்தபடி.

" இல்லை நான் உங்களை விட வயசுல ரொம்ப சின்னவ.. கிட்டதிட்ட உங்க பொண்ணோட வயசு.. என்னை பேரு சொல்லியே கூப்பிடுங்களேன்.. இந்த வாங்க போங்க மரியாதை வேணாமே.." என்றாள் புன்னகை சிந்திய முகத்துடன்.

அதை கேட்டவர், "நீங்க எங்க முதலாளி சம்சாரம்மா.. உங்களை போய் எப்படி மரியாதை இல்லாம வா போன்னு கூப்பிட முடியும்.." என்றார் வாயை பிளந்தபடி.

" அதெல்லாம் அப்புறம் தான்.. நானும் உங்களை மாறி ஒரு ஓர்க்கர் தான்.. நான் படிச்சிருக்கேன்.. நீங்க படிக்கலை அவ்வளவு தான்.. ப்ளீஸ் மா.. எனக்கு உங்களை அம்மான்னு கூப்பிட பிடிச்சிருக்கு.. என்னோட அம்மா முகத்தை நான் பார்த்ததில்லை.. ஆனா உங்களோட இருக்கற வரைக்கும் உங்களை என் அம்மாவா நினைச்சிக்குறேனே.." என்றவளின் குரலில் ஏக்கம் ஏகத்துக்கும் வழிந்தோடியது.

அதே நேரம் அந்த பக்கம் ஏதோ வேலையாக வந்த அமர்நாத்தின் காதுகளிலும் அவளின் ஏக்கம் நிறைந்த வார்த்தை விழுந்தன.

அதே நேரம் அங்கே அலெக்ஸ் வண்டியில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தான்.


தொடரும்..
✍️







Add reaction
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆஹா புள்ள சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டா போல 🤩

உரிமையா இரு சொன்னவன் நீ எனக்கானவள்னு உரிமையா சொல்ற நாள் எப்பவோ😍

மன்னிப்பு கேக்குற மாதிரி வந்து வேவு பாக்குறானோ இந்த அலெக்ஸ் 🧐

அட யாருடா அது அலெக்ஸை அடிச்சி தூக்கினது? 🤔

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
ஆஹா புள்ள சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டா போல 🤩

உரிமையா இரு சொன்னவன் நீ எனக்கானவள்னு உரிமையா சொல்ற நாள் எப்பவோ😍

மன்னிப்பு கேக்குற மாதிரி வந்து வேவு பாக்குறானோ இந்த அலெக்ஸ் 🧐

அட யாருடா அது அலெக்ஸை அடிச்சி தூக்கினது? 🤔

அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️
thank you so much sis
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஒருவேளை அதிதிக்கு அமரை பிடிச்சிருக்கோ 🤔🤔🤔🤔🤔🤔🤔வயசை விட அவன் நடந்துகிற விதம் அதிதிய ஈர்திருக்குமோ, இருக்கலாம் ஆனால் அவள் அன்னைக்கு அழுதது 🤔🤔🤔வேற ஏதோ மனச பாதிச்சிருக்கும்
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஒருவேளை அதிதிக்கு அமரை பிடிச்சிருக்கோ 🤔🤔🤔🤔🤔🤔🤔வயசை விட அவன் நடந்துகிற விதம் அதிதிய ஈர்திருக்குமோ, இருக்கலாம் ஆனால் அவள் அன்னைக்கு அழுதது 🤔🤔🤔வேற ஏதோ மனச பாதிச்சிருக்கும்
thanks sis