• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 6

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 6

மனமெங்கும் வலி பரவ அலுவலகத்தில் அவள் அமர்ந்திருந்த அறையை பார்த்து கொண்டிருந்தான் அமர்நாத்.

இன்றோடு அவள் போய் வாரம் ஒன்றாகிவிட்டது.

அவன் தான் அவளை போக சொன்னான்.. ஆனால் இப்படி வாழ்வே சூன்யமான நிலையை அனுபவிப்பான் என்று தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கமாட்டானோ என்னவோ.

அன்று தான் கூறிய வார்த்தை எந்தளவு பாதித்திருந்தால் இப்படி விலகி சென்றிருப்பாள்.

வாழ்வே வெறுமையாய் இருந்தது.. இத்தனை நாளும் இதே தனிமை தான் ஆனால் இனிமையாய் இருந்தது.

ஆனால் அவள் வந்த சில நாட்களில் எல்லாமே மாறி போனது. அவளுடன் பெரிதாய் பேசவில்லை என்றாலும் ஏனோ அவளின் கொலுசு சத்தம் ஆடவனின் மனதில் நிலையாய் நின்று போனது.

' எங்கே போன அதி மா.. எப்படி டி இருக்க.. எல்லாத்துக்கும் காரணம் நான் தானாமா.. அப்படின்னு அபிதா பூவிழி ரெண்டு சண்டை போட்டுட்டு போயிட்டாங்க.. அதுவும் மகேந்திரன் என்கிட்ட பேசவும் இல்லை சொல்லவும் இல்லை..

ஆனா ஒரு விஷயம் தாண்டி.. என் தங்கச்சியவையே மாத்திட்டு போயிட்ட.. எப்படி டி.. எல்லாருக்கும் உன் மேல அதிக பாசம் இல்லை..

ஆனா நான் உன் மேல உயிரையே வச்சிருந்தேனே டி..' என்றவனுக்குள் அதற்கு மேல் யோசிக்க முடியாமல் அவளின் நினைவுகள் கொன்று குவித்தன.

அதே நேரம் அவளை காண ஒரு பெண் வந்திருப்பதாக அவனின் பி ஏ அனுமதி வாங்கினான்.

அவளை வர சொல்லிவிட்டு இவன் தன் கண்களை துடைத்து கொண்டவன் வருவது யார் என்று யோசித்தான்.

அங்கே வந்தது நேத்ரா. அதிதியின் தோழி.

அவளை கண்டவன், "சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்.." என்றான் கம்பீரமாய்.

அவளோ அவனிடம் பேசாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் பார்வையில் ஒன்றும் புரியாமல் இருந்தவன்,

"நீங்க யார பாக்கம்மா வந்தீங்க.." என்றான்.

"உங்களைத்தான் சார்.. என் பேரு நேத்ரா.. நான் அதிதியோட பிரண்ட்.. ரூம்மேட்.." என்றாள் கோபமாய்.

அதிதி என்றதும் அவனின் கண்களில் புது வெளிச்சம் பரவியது.

" நீங்க அதிதியோட பிரண்டா.. அவ எங்கேயிருக்கான்னு தெரியுமா மா.." என்றான் பதட்டமாய்.

"தெரியும் சார் ஆனா உங்ககிட்ட ஏன் சொல்லனும்.. அவளை தான் உயிரோட கொன்னுட்டீங்களே.. இன்னும் அவளுக்கு என்ன இருக்கு.." என்றாள் கோபமாய்.

"நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்கன்னு நினைக்கிறேன் மா.. நான் எப்பவும் அவளோட நல்லதை மட்டும் தான்மா யோசிப்பேன்.. எனக்கு நீங்க என்ன சொல்றீங்கன்னு சுத்தமா புரியலை.." என்றான் புரியாமல்.

"அது எப்படி உங்களுக்கு புரியும்.. நீங்க ஆர்மில இருந்து இரும்போட பழகி பழகி நீங்களும் இரும்பா தான் மாறிட்டிங்களே.. உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா.. ஒரு பொண்ணோட மனசை கொன்ன கொலைகாரன் நீங்க.." என்றவளுக்கு ஆத்திரம் தான் தீருவேனா என்றது.

அவளின் கோபத்தில் ஆடவன் வாயடைத்து தான் போனான்.

"எனக்கு இப்பவும் நீங்க என்ன சொல்றீங்கன்னு தெரியலை மா.. நான் செஞ்ச தப்பு அதிதியோட சம்மதம் இல்லாம அவ கழுத்துல தாலி கட்டனது.. அதுமட்டும் இல்லாம அவளுக்கும் எனக்கும் இருந்த வயசு வித்தியாசம்.. நான் தப்பு பண்ணிட்டேன்.. இப்போ அவ எங்கேம்மா.. நான் அவளை பாக்கனும்.." என்றான் கரகரப்பான குரலில்.

" எதுக்கு அவளை சாகடிக்கவா.." என்றாள் அமர்த்தலாய்.

ஏனோ அவளிடம் பேசியவனுக்கு கண்கள் கட்டி கொண்டது.

எப்படி பேசினாலும் கோபத்தை மட்டுமே ஆயுதமாய் கொண்டு பேசுபவளிடம் எதுவும் புரியாது என்று நினைத்தவன்,

"என்னோட அதி எங்க.. எனக்கு அவ வேணும் நேத்ரா.." என்றான் கம்பீரமான குரலில்.

"எது உங்களோட அதியா.. இது எப்போ இருந்து.. அவ வேணாம்னு தானே வீட்டை விட்டு அனுப்புனீங்க.. இப்போ என்ன புதுசா என்னோட அதி.." என்றான் இடக்காக.

தன் கண்களை மூடி திறந்தவன், "நான் என்ன பண்ணா உன் கோபம் குறையும் நேத்ரா.." என்றான் அடங்கிய குரலில்.

" என்னோட அதிதி வாழனும் அது உங்களோட உங்க மனைவியா.." என்றால் அழுத்தமான குரலில்.

அவளின் பதிலில் புரியாமல் அவளை பார்த்தவன், "புரியலை.." என்றான் இறுக்கமாக.

"அவ உங்களை தன் உயிரா நேசிக்குறா.. எப்போ இருந்து தெரியுமா.. உங்ககிட்ட வேலைக்கு சேரரதுக்கு முன்னால இருந்து.." என்றவளுக்கு தோழியின் காதல் எப்போதும் போல் இப்போதும் ஆச்சரியத்தை தான் கொடுத்தது.

"என்ன சொல்ற நீ.. ஆனா அவளுக்கும் எனக்கும் உள்ள வயசு வித்தியாசம்.." என்றவனுக்கு அதற்கு மேலும் பேச்சு வராமல் சதி செய்தது.

" நானும் அதைதான் சொன்னேன் அந்த பைத்தியகாரிகிட்ட.. ஆனா அவ உங்களை பார்த்ததுல இருந்து ஏதோ காவிய காதலாம்.." என்றாள் தோழியின் நினைவில்.

அவளின் அந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்து எழுந்து நின்றவன், "நீ என்ன சொல்ற.. காதலா என்னையவா.." என்றவறுக்கு அதை நம்புவதா வேண்டாமா என்றெல்லாம் தெரியவில்லை.

"ஆமா அவ உங்களை காதலிச்சா.. ஆனா கல்யாணம் செய்துக்கனும்னு அவ நினைக்கலை.. ஆனா எதிர்பாராத விதமாக அது நடந்துடுச்சி.." என்றாள் வருத்தமாக.

"எனக்கு புரியலை.. ஆனா ஏன்.." என்றான் பெண்ணவளின் மனம் புரியாமல்.

"அவ அப்போ தான் டிகிரி முடிச்சிட்டு உங்க கம்பெனில வேலைல ஜாயின் பண்ண வந்தா.. அப்போ தான் உங்களை வெளில பார்த்தா.." என்றவளுக்கு முதல் முறையாக அவனை இருவரும் சந்தித்த நாள் நினைவினில் வந்தது.

"ஏய் நேது சீக்கிரம் என்னை கம்பெனில கொண்டு வந்து விடுடி.. டைம் ஆச்சி.. நாளைக்கு நானே சீக்கிரம் போயிடுறேன்.." என்றபடி நேத்ராவின் வண்டியில் அமர்ந்திருந்தாள்.

அவளின் சத்தம் கேட்டு வேகமாய் வந்த நேத்ராவும், "அடியே ரொம்ப படுத்தாத டி.. வரதுக்குள்ள காட்டு கத்தல் கத்துற.." என்றவள் வேகமாய் வந்து வண்டியை எடுத்தாள்.

போகும் வழியில் டிராபிக் வேறு அவளை படுத்த அந்த சிக்னலில் வண்டியில் நின்றிருந்தனர் இருவரும்.

அதே நேரத்தில் அவளருகில் ஒரு கருப்பு நிற ஸ்கார்பியோ வண்டி வந்து நின்றது.

அந்த வண்டியின் அழகில் மனம் பறி கொடுத்த அதிதியோ, "ஏய் நேது இது மாதிரி எதிர்காலத்துல வண்டி வாங்கனும் டி.. எவ்வளவு அழகா இருக்கு பாரோன்.." என்றாள் ஆசையில் முறுவலித்தபடி.

" ம்ம் வாங்கலாம் டி.. இப்போ தானே வேலைக்கு போற.. யார் கண்டா உன்னோட வருங்கால புருஷன் கூட உனக்கு காரு வாங்கி வச்சி காத்திருக்கலாம்.." என்றாள் கிண்டலாய்.

"ஏய் போடி எனக்குலாம் எப்படி டி கல்யாணம் நடக்கும்.. நானே யாருமில்லாத அனாதை.. என்னைய யாருடி கட்டிப்பா.." என்றாள் வருத்தமாய்.

"ஏய் ஏன்டி இப்படி பேசுற.. உனக்கு என்னடி குறைச்சல்.. நீ அழகி டி.." என்றாள் வலியாய்.

"ஏய் நேது விடுடி பாத்துக்கலாம்.." என்றவளின் கண்கள் அந்த ஸ்கார்பியோவையே வட்டமிட்டது.

அதே நேரம் அங்கே சிக்னலில் நின்றிருந்த ஒரு இளைஞனிடம் ஒரு வயதான பெண்மணி பேனா விற்று கொண்டிருக்க அவனோ சிக்னல் விழுந்த எரிச்சலில் இருந்தவன் தன்னருகில் நின்றிருந்தவரை,

"ச்சீய் போமா உனக்கு வேற வேலையே இல்லையா.. நீங்கலாம் பூமிக்கு பாராமா இருக்கறதே வேஸ்ட்.. இதுல தொந்தரவு வேற.." என்று திட்டியபடி பிடித்து தள்ளிவிட்டான்.

அதை கண்ட கருப்பு நிற ஸ்கார்பியோவில் இருந்து இறங்கிய அமர்நாத் வேகமாய் வந்தவன் அந்த முதியவரை தூக்கிவிட்டு அவரிடம் இருந்து பேனாவை வாங்கி கொண்டவன் அவருக்கு தேவையான பணத்தை கொடுத்து அனுப்பியவன் அந்த இளைஞனிடம் தன் ஸ்டிக்கின் உதவியுடன் வந்தவன் வேகமாய் பளாரென அறைந்தான்.

"உன்னை சுமந்தவ ஒரு தாய் தானே.. அவங்களுக்கும் வயசான இப்படி தான் தள்ளுவியா இடியட்.. இந்த வயசுலயும் சம்பாதிச்சி சாப்பிடனும்னு நினைக்கிறாங்க.. ஆனா நீ அவங்களை இவ்வளவு அலட்சியமா தள்ளிவிடுற.. அஞ்சு நிமிஷ வெயில்ல உன்னால நிக்க முடியலை.. ஆனா இந்த வெயில்ல வேர்வை சிந்தி உழைக்கறவங்களோட கஷ்டம் உனக்கு எங்கே தெரிய போகுது.. இனி ஒரு முறை இதே போல எங்கேயாவது நடக்குறதை பார்த்தேன்.. அது தான் நீ உயிரோட இருக்கற கடைசி நிமிடம் பாத்துக்கோ.." என்றவன் இன்னொரு அறையை பரிசாக கொடுத்து விட்டு வந்து தன் காரில் அமர்ந்து கொண்டான்.

அதை கண்ட அதிதிக்கு ஏனோ அந்த விநாடியில் அமரை மிகவும் பிடித்துவிட்டது.

"ஏன் நேது பேசாம நான் இவரையே கல்யாணம் செஞ்சுகிட்ட என்ன டி.. எவ்வளவு அழகா இருக்காரு.. எத்தனை கம்பீரமா இருக்காரு.. நீ என்னடி சொல்ற.." என்றாள் புன்னகைத்தபடி.

"அடியே உனக்கு எதுவும் மூளை குழம்பி போகலை தானே.. அவரோட வயசு என்ன.. உன் வயசு என்னடி.. பைத்தியம் மாறி பண்ணாதே அதிதி.. வா போலாம் சிக்னல் விழ போகுது.." என்றபடி அவளை அந்த அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டவள் தன் அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள்.

அந்த அலுவலகத்தை பார்த்து பிரமித்து போனவள் உள்ளே நுழைய முற்படும் போது தான் மீண்டும் அந்த கருப்பு நிற ஸ்கார்பியோ போர்டிகோவில் வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கியவன் காலையில் பார்த்தவனே.. ஏனோ அவனை அங்கே கண்டதும் மனதில் புதிதாய் முளைத்த சந்தோஷத்துடன் அங்கே சென்று தன் ஆர்டர் காபியை தந்து வேலையில் சேர்ந்து விட்டாள் பெண்ணவள்.

அதன் பின்பு தான் தெரிந்தது அந்த கருப்பு நிற ஸ்கார்பியோகாரன் தான் இந்த நிறுவனத்தின் முதலாளி என்பதை அறிந்ததும் மனம் விதிர்க்க நின்றுவிட்டாள்.

ஆனால் அவனின் அலுவலக தோரணையும் கம்பீரமும் அழகிய ஆண்மகனாய் பெண்ணவளிடம் காட்டிட அவனின் ஆணழகில் மயங்கி தான் போனாள் பெண்ணவள்.


அலுவலகத்தில் தன் இயல்பான உத்வேகத்துடன் வேலை செய்ய அது அவனே அழைத்து நேரடியாய் பாரட்டை பெற்றாள்.

அதன் பின்பு அவனின் பாராட்டுதலுக்காவே இன்னும் அதிகமாய் அந்த கம்பெனிக்காய் உழைத்தாள்.

வேலையில் இருந்த விருப்பம் ஒருபுறம் இருந்தாலும் ஆடவனின் மேல் வந்த விருப்பமும் அதில் இணைந்தே இருந்தது.

இது அத்தனையும் நேத்ராவிடம் சொல்லியவள் அவனின் மேல் உள்ள விருப்பத்தையும் கூறிவிட்டாள்.

இது தெரிந்ததும் நேத்ரா கூட அவளை அடித்துவிட்டாள்.

" ஏய் என்னடி இது ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சேன்.. ஆனா நீ உண்மையாவே அவரை விரும்புவேன்னு நான் நினைக்கவே இல்லை.. உனக்கும் அவருக்கும் உள்ள வயசு வித்தியாசத்தை யோசனை பண்ணியா..

சரி அதை விடு.. இத்தனை வயசுக்கு அப்புறம் அவருக்கு இன்னமுமா கல்யாணம் நடந்துருக்காது..

அதிதிமா இங்கே பாரு.. நீ போய் இப்போ உன் காதலை சொன்னா உன்னோடது உண்மையான காதல்னு யாரும் நம்பமாட்டாங்க.. ஆனா நீ பணத்துக்காக தான் அவரை நேசிச்சதா சொல்வாங்க.. ஏன் அவரே அப்படி தாண்டி யோசிப்பாரு..

அவருக்கே ஏற்கனவே கல்யாணம் நடந்துருச்சின்னா அவரோட மனைவியை என்ன பண்றது.. கொஞ்சமாச்சும் யோசிச்சியா நீ..

ஏய் லூசு அவருக்கு முன்னவே கல்யாணம் ஆகி உன்னைவிட ரெண்டு மூனு வயசு வித்தியாசத்துல குழந்தை கூட இருக்கும் டி.. உன்னோட இந்த பைத்தியகார தனத்தை தூக்கி போட்டுட்டு வேலையை பாரு..

உனக்கேத்த ராஜகுமாரன் நிச்சயமா வருவான்டி.." என்றாள் கோபமும் ஆதங்கமுமாய்.

நேத்ரா சொன்ன பின்பு தான் அப்படியும் இருக்குமோ..? அவருக்கு முன்பே திருமணம் ஆகியிருக்குமோ.. நேது சொல்வது சரிதானே.. இன்னமுமா அவருக்கு கல்யாணம் ஆகியிருக்காது..

நாம தான் காதல்னு தப்பா நினைச்சிட்டோமா..' என்று நிறைய யோசித்தவள் அதற்கு மேலும் அதை பற்றி யோசிக்க முடியாமல் நெஞ்சமெங்கும் ஒரு வலி பரவியது.

அதன் பின்பும் கூட அவனை பார்க்க கூடாது.. நினைக்க கூடாது என்று மனதிற்கு எத்தனையோ முறை கடிவாளம் போட்டாலும் அவன் மற்றவர்களிடம் காட்டும் அக்கறையும் பெண்ணவளின் உள்ளத்தில் நிறைந்து போனது.

அவனின் மேல் விழுந்த நேச விதை செடியாகி மரமாகி வளர்ந்து கிளைபரப்பி வாசம் வீசி கொண்டிருந்தது மங்கையவளின் மனதில்.

அன்று நேத்ரா கண்டித்த பின்பு அவனை பற்றி அதிகம் அவளிடம் பேசவில்லை.. நேத்ராவும் கூட அவள் மறந்துவிடுவாள் என்று நினைத்து அதற்கு பின்பு அதை பற்றி பேசவில்லை.


அன்று அவனை காண ஒரு பெண் வந்ததை கண்டவள் இருவரும் இயல்பாய் பேசி சிரிக்கவும் அவள் அவனின் பெண் என்றே நினைத்துவிட்டாள்.

வந்தது வேறு யாருமில்லை.. அபிதா தான் தன் தாய் மாமனை காண வந்திருந்தாள்.

அவன் மீட்டிங் சென்ற சமயம் அதிதியை அழைத்து அபிதாவுடன் இருக்க சொல்லிவிட்டு சென்றான்.

அதிதியும் அவளிடம் அமர்ந்து இயல்பாய் பேசி கொண்டிருக்க அபிதாவோ நொடியில் அவளிடம் ஒட்டி கொண்டு அக்கா அக்கா என அழைத்து பாசத்தை காமித்தாள்.

" ஏன் அபி உனக்கு உங்க அப்பாவை ரொம்ப பிடிக்குமா.." என்றாள் பொதுவாய்.

"அய்யோ என்னக்கா இப்படி கேட்டுட்டீங்க.. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவளோட அப்பா தானே ரோல்மாடல்.. எனக்கு என்னோட அப்பா தான் கா ஹீரோ.." என்றாள் குழந்தையாய்.

"உங்க அம்மாவுக்கும் உங்க அப்பாவை ரொம்ப பிடிக்கும் இல்லை.." என்றவளின் குரலில் இருந்த வெறுமை அபிதாவிற்கு புரியவில்லை.

" ஆமா கா.. அப்பா அம்மாவை ரொம்பவே லவ் பண்றாரு.. அம்மா தான் கா அப்பாவோட உயிரே.. ஆனா அம்மா தான் கொஞ்சம் முசுடு.. ஆனா அப்பா மாறி ஒரு கணவர் கிடைக்க அம்மா குடுத்து வச்சிருக்கணும் கா.." என்றவளுக்கு தன் தந்தையை பற்றி அதிகம் பேச பிடித்தது. எங்கோ பார்த்து பேசி கொண்டிருந்தவள் ஒரு திசையை பார்த்ததும்,

"ஹய் அக்கா அதோ பாருங்க அப்பாவும் அம்மாவும் வர்றாங்க.." என்றபடி ஒரு திசையை காட்டினாள்.

அங்கே வந்தது பூவிழியும் மகேந்திரனும். அவர்களை கண்ட அதிதிக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

அந்த அதிர்ச்சி மாறாமலே, "அபி அவங்க யாருன்னு சொன்னே.." என்றாள் கேள்வியாய்.

"அக்கா அது என்னோட அப்பா மகேந்திரன்.. அது என்னோட அம்மா பூவிழி.. அப்புறம் கூட வர்றது என்னோட தம்பி ஆத்விக்.." என்றாள் சிரித்தபடி.

"அப்போ அமர்நாத் சார்.." என்றவள் கேள்வியை முடிக்கவில்லை.

"அவரு என்னோட தாய் மாமா க்கா.. எங்க அம்மாவோட அண்ணன்.." என்றாள் புன்சிரிப்புடன்.

"அவரோட பேமிலி எங்கே இருக்காங்க.." என்றாள் அவளுக்கு அவனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன்.

" அவரோட பேமிலி நாங்க தான் கா.. எங்க மாமா எக்ஸ் கர்னல் .. ஆர்மில இருந்தவரு.. இந்த நாட்டுக்காக உழைச்சதுல ஒரு போர்ல அவரோட கால் போயிடுச்சி.. அதுனால அவரு கல்யாணமே செஞ்சிக்கலை கா.." என்று அவள் கேட்காத கேள்விக்கும் பதில் கூறினாள்.

ஏனோ அந்த பதில் பெண்ணவளின் தலையில் பூவாரி தெளித்தது போல் இருந்தது.

அதை சந்தோஷமாய் தன் தோழியிடம் பகிர்ந்தவளை ஏதோ விநோதமாய் பார்த்த நேத்ரா அவளிடம் கேட்ட கேள்வியில் அவளின் முகம் சுருங்கி போனது.


தொடரும்..
✍️

 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அதிதி இல்லாதப்போ தான் தன்னோட அதி... உயிருன்னு இந்த அமருக்கு புரியுது 🙄

அதிதி Love @ first sight 😍
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அதிதி இல்லாதப்போ தான் தன்னோட அதி... உயிருன்னு இந்த அமருக்கு புரியுது 🙄

அதிதி Love @ first sight 😍
thanks akka
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵அதிதி அமரை ரெம்பவே அவன் குணத்துக்காண்டி விரும்பி இருக்கா 😍😍😍😍😍😍😍😍😍
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அதிதி இல்லாதப்போ தான் தன்னோட அதி... உயிருன்னு இந்த அமருக்கு புரியுது 🙄

அதிதி Love @ first sight 😍
thanks sis