• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 7

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 7

"ஏன்டி நீ போய் உங்களை நான் காதலிக்குறேன்னு அவருகிட்ட உன்னால சொல்ல முடியுமா.. அப்படி நீ சொன்னா அவரு என்ன நினைப்பாரு தெரியுமா.. ஒன்னு நீ அவரோட சொத்துக்காக காதலிக்கிறதா நினைப்பாரு.. இல்லையா உன்னோட கேர்க்டரை தப்பா நினைப்பாரு.. ஆனா உன்னோட காதலை தப்பா நினைச்சா உன்னால தாங்க முடியுமா..

இன்னும் ஒன்னு சொல்லவா.. என் மேல கோபப்படாத.. உன்னோட இந்த காதல் வெறும் இனக்கவர்ச்சி. அழகா கம்பீரமா ஒரு ஆண் இருந்த அவங்களை நாம விரும்பி பார்ப்போம்.. ஏன் நமக்கு பிடிக்கவும் செய்யும்.

ஆனா அவங்களோட காலம் முழுவதும் நம்மளால வாழ முடியாது.. இதுவும் அது போல தான்.

ஏன்டி ஒரு நடிகரை நமக்கு எவ்வளவு பிடிக்கும்.. ஏன் சினிமால அவங்க செய்யற நல்லதை பாக்குறதால அவங்களை நமக்கு ரொம்பவே புடிக்கும்.. அதுக்காக அவங்களை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா.. தூர இருந்து ரசிக்க தான் முடியும்.

சரி இதெல்லாம் விடு அவரோட இடத்துல இருந்து நீ எப்பவாது யோசிச்சிருக்கியா..

அவருக்கு இருக்க அந்தஸ்து கௌரவம் பணம் இதுக்குலாம் மயங்கி எத்தனை பெரிய பணக்காரங்க அவருக்கு பொண்ணை கொடுக்க முன்வந்துருப்பாங்க..

ஆனா அவரு கல்யாணம் செஞ்சுக்கலையே.. ஒருவேளை அவரு யாரையாவது காதலிச்சிருந்தா.. அந்த காதல் நிறைவேறாம இருந்தா.. அந்த காதலிக்கு அவரோட மனசுல இடமிருந்தா நிச்சயம் இன்னொரு கல்யாணத்தை செஞ்சுக்கமாட்டாங்க.. அதுவும் நாம யோசிக்கனும் இல்லை.. வேணாம் டி உனக்குன்னு நிச்சயம் ஒருத்தன் வருவான்.

சந்தோஷமா காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கோ.. இவ்வளவு வயசு வித்தியாசத்துல உனக்கு ஒரு வாழ்க்கை வேணாம் டி.." என்று தன் தோழிக்கு ஆறுதல் தந்தவள் அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் அவள் யோசிக்கட்டும் என்று அமைதியாய் எழுந்து சென்றாள்.

"அன்னைக்கு தான் சார் நான் தப்பு பண்ணிட்டேன்.. அவ உங்களை பத்தி புரிஞ்சிகிட்டு விலகிடுவான்னு நினைச்சேன்.. ஆனா நான் நினைச்சது தப்பா போயிடுச்சி சார்.. அவ உங்களை மறக்கவும் இல்லை.. விலக்கவும் இல்லை.. ஆனா நீங்க எனக்கு ஒரு சந்தோஷத்தை கொடுத்தீங்க..

அது என்ன தெரியுமா.. அலெக்ஸ் அவளை காதலிக்கிறான்னு தெரிஞ்சி அவளோட கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சீங்க..

உங்களோட வார்த்தையை மீற முடியாம தான் அவ கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா.. நானும் இனி அவளோட வாழ்க்கை நல்லாருக்கும்னு நினைச்சேன்..

ஆனா உங்களை நினைச்ச மனசால வேற யாரையும் நினைக்கவும் முடியாம அந்த கல்யாணத்தை ஏத்துக்கவும் முடியாம தான் அவளையும் உங்களையும் பத்தி தப்பா இணைச்சி வதந்தி பறப்பினா.. ஆனா நீங்களே அவ கழுத்துல தாலி கட்டுவீங்கன்னு நாங்க யாருமே நினைச்சி பாக்கலை.." என்றாள் கலங்கிய கண்களை துடைத்தபடி.

ஆனால் இதை கேட்ட ஆடவனின் மனம் தான் துடியாய் துடித்தது. தன் மேல் இத்தனை நேசம் வைத்துள்ளாளா..? எனக்காக தன் வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கி கொண்டாளா..? நான் அந்தளவுக்கு அவள் வாழ்வில் முக்கியமானவனா..? ஏனோ ஆடவனின் மனம் கடலில் பொங்கிய அலையாய் துடித்து கொண்டிருந்தது.

தன்னை மெதுவாய் மீட்டு கொண்டவன், "இப்போ அவ எங்கே நேத்ரா.." என்றவனின் குரல் வலியை தாங்கியிருந்தது.

"ஹாஸ்பிடல்ல இருக்கா சார்.." என்றவளின் குரலில் அழுகை கலந்திருந்தது.

"வாட் என்னாச்சி என்ன சொல்ற நேத்ரா.. அவ நல்லாதானே இருந்தா.. எப்படி.. எந்த ஹாஸ்பிடல்.." என்றவனுக்கு அடுத்த வார்த்தை வரவில்லை.

தன்னவளுக்கு என்னானதோ என்று மனம் பரிதவித்தது.

"எனக்கு தெரியலை சார்.. திடீர்னு யாரோ ஒருத்தர் கால் பண்ணி உங்க பிரண்ட் இங்கே ஆக்ஸிடென்ட் ஆகி படுத்துருக்காங்க.. அவங்க கண் விழிச்சி உங்களோட நம்பர் தான் கொடுத்தாங்கன்னு சொன்னாங்க..

அவ முழுசா இன்னும் குணமாகலை.. என்ன நடந்துச்சின்னு தெளிவா சொல்ல மாட்றா.. உங்களை பாக்கனும்னு ஒரே அழுகை.. அது தான் உங்களை கூப்பிட வந்தேன்.." என்றவளுக்கு இன்னும் தன் தோழி மீது கோபம் இருந்தது.. அவளை பெரிதாய் கொண்டு கொள்ளாமல் விட்டவனின் மேலும் அந்த கோபம் இருந்தது.

தன் ஸ்டிக்கை அழுத்து பிடித்து கொண்டவன், "போலாம் நேத்ரா.." என்றவன் அவளுக்கு முன்னே சென்றான்.

ஏனோ இப்பொழுதே அவளை காண அவன் விழியும் மனமும் தவித்து துடித்தது.

அந்த நடுத்தர மருத்துவமனையின் உள்ளே இருவரும் வேகமாய் சென்றனர்.

தலையிலும் கையிலும் கட்டுடன் படுத்திருந்தவளை கண்டவனுக்கு உள்ளம் ஊமையாய் அழுது வடிந்தது.

அவளருகில் சென்றவன் அவளருகில் அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

மருந்தின் வீரியத்தில் உறங்கி கொண்டிருந்தாள் போலும்.. அவன் வந்ததை துளியும் உணரவில்லை.

அவளையே கண்டவன் மெதுவாய் அவளருகில் அமர்ந்து அவள் கரங்களை தன் கரத்துடன் இணைத்து கொண்டான்.

கணவன் மனைவி இருவருக்கும் தனிமை கொடுத்து அங்கிருந்து சென்றுவிட்டாள் நேத்ரா.

ஆடவனின் கண்கள் அவளையே பார்த்திருந்தது.. அவள் எப்பொழுதும் அழகி தான்.. ஆனால் இன்று அவனின் கண்களுக்கு பேரழகியாய் ஜொலித்தாள்.

"அதி மா.." என்றான் மென்மையாய் அவளின் தலையை தடவியபடி.

அவனின் மென்மை இதுவரை யாரிடமும் வெளிப்பட்டதில்லை.. ஆனால் அதுவே பெண்ணவளுக்கு போதுமோ என்னவோ இல்லை அவனின் குரலில் தான் அத்தனை காந்த சக்தியோ அவளின் கண்ணோரம் கண்ணீர் வழிந்தது.

அதை கண்டவனின் உள்ளம் வலிக்க அதை தன் கையால் துடைத்து விட்டவன்,

"அதி மா கண்ணை திறடா.. நான் உன் முன்னாடி இருக்கேன்.." என்றான் அவளின் காதோரம்.

அந்த குரலுக்கு அத்தனை சக்தியா..? இல்லை அவளின் காதலுக்கு அந்த சக்தியா..? என்று தான் புரியவில்லை. அடுத்த நொடியே பிரிக்க முடியாமல் தன் இமை இரண்டையும் வலுக்கட்டாயமாய் பிரித்தாள்.

எதிரே தன்னவனை கண்டதும் வலியை தாண்டிய மகிழ்ச்சி நிறைந்திருந்தது.

" என்னங்க.." என்றவளின் கண்கள் கலங்கியது.

"ஏய் என்னம்மா என்னாச்சி டா.. எதுக்கு இந்த அழுகை.." என்றபடி அவளின் கண்களை துடைத்து சமாதானம் செய்தான்.

"வலிக்குதுங்க.." என்றவளை கண்டவனுக்குள் இந்த சிறு பெண்ணுக்குள்ளா என் மீது இத்தனை காதல்.

"ஒன்னமில்லை டா சரியாகிடும்.. இரு நான் டாக்டரை பாத்துட்டு வரேன்.." என்றவன் எழும் போது அவனின் கரத்தை இறுக்கமாய் பற்றி கொண்டவள்,

"இல்லைங்க என்னை விட்டு போகாதீங்க.. எனக்கு பயமா இருக்கு.." என்றவளின் கண்களில் வலியை மீறிய பயம் இருந்தது.

"சரிடா ஒன்னுமில்லை உன்னைவிட்டு எங்கேயும் நான் போகலை மா.. இரு உன் பிரண்ட் நேத்ரா வெளியே இருக்கா வர சொல்றேன்.." என்றவனின் சமாதானம் எதுவும் அவள் காதுகளில் ஏறவில்லை.

அவளின் சத்தம் கேட்டு வந்த நர்ஸ், "சார் அவங்களுக்கு நிறைய அடிபட்டிருக்கு.. அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கனும் சார்.. அதுக்கு நல்ல தூக்கமும் வேணும் சார்.. நான் இந்த ஊசியை மட்டும் போட்டுறேன்.." என்றவள் ஊசியை செலுத்த அதில் ஆழ்ந்த தூக்கத்தில் நுழைந்தாள் பெண்ணவள்.

மெதுவாய் அவளை படுத்து தூங்க வைத்தவன் மெல்லமாய் அவளின் தலையை வருடி கொடுத்தான்.

"நான் உனக்கு என்னடி செஞ்சேன்.. எதுக்குடி என் மேல இத்தனை நேசம்.. உன்னோட இந்த நிலைக்கு காரணமான யாரையும் நான் சும்மா விடப் போறதில்லை டி.." என்று அவளிடம் பேசியவன் எழுந்து வேகமாய் வெளியே வர அங்கே நேத்ரா அமர்ந்திருந்தாள்.

அவன் வரவும் வேகமாய் எழுந்தவள், "சார்.." என்றாள் அவனிடம்.

"அவளை கொஞ்சம் பாத்துக்கோங்க நேத்ரா.. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு.. என்னோட பேமிலி ல இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துருவாங்க. நான் வந்துர்றேன்.. ஆமா அவ இங்கே இருக்கான்னு உங்களுக்கு யாரு தகவல் சொன்னாங்க.." என்றான் கேள்வியாய்.

" அது தெரியலை சார்.. ஆனா இந்த ஹாஸ்பிடல் நிர்வாகத்துல இருந்து தான் கால் பண்ணாங்க.." என்றவள் அன்று வந்த நம்பரையும் அவனிடம் காட்டினாள்.

அதை வாங்கியவன் அங்கிருந்து வேகமாய் சென்றான்.

அங்கிருந்த ரிசப்ஷனில் அந்த நம்பர் யாருடையது என்று விசாரித்தவனுக்கு விடையாய் அங்கே ஒருத்தன் வந்தான்.

"எஸ் சார் அது என்னோட நம்பர் தான்.. நானும் என்னோட வைபும் இங்கே தான் ஓர்க் பன்றோம்.. நைட் நானும் என்னோட வைப்பும் வெளியே போயிட்டு வரும் போது இவங்க இந்த ஹாஸ்பிடலுக்கு கொஞ்ச தூரத்துல அடிபட்டு இருந்தாங்க..

என் மனைவி தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தாங்க.. அவங்க கண் விழிச்சதும் தான் ஒரு நம்பர் கொடுத்தாங்க.. அதுக்கு நாங்க தகவல் சொன்னோம்.. நீங்க யாரு.." என்று எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட்டு அவனிடம் கேட்டான்.

"அவங்க என்னோட ஓய்ப் சார்.." என்றான் அமர்நாத்.

"ஹோ ஓகே சார்.. இனி நீங்க அவங்களை பாத்துக்குவீங்க தானே.." என்றபடி அவனும் அங்கிருந்து கிளம்பி சென்றான்.


வந்தவன் யார் எது என்று எதுவும் தெரியவில்லை என்றாலும் அவனை தவறாக நினைக்க தோன்றவில்லை.

ஒருவேளை இதற்கெல்லாம் காரணம் அவனாக இருக்க கூடுமோ..? என்று நினைத்தவன் அடுத்து அவன் சென்ற இடம் அலெக்ஸ் ஜீவாவை நோக்கி தான்.

அந்த நேரத்தில் அங்கே அமர்நாத்தை எதிர்பார்க்காத அலெக்ஸ்க்கோ உடல் எங்கும் உதறி தள்ளியது.

ஆனால் அதை வெளியே தெரியாமல் பார்த்தவன், "வாங்க சார்.. என்னோட நிலமையை பாருங்க சார்.. அன்னைக்கு உங்க வீட்டுக்கு வந்துட்டு வந்ததுக்கு அப்புறம் இப்படி ஆகிடுச்சி சார்.." என்றான் போலியாய்.

தன் ஸ்டிக்கை அழுத்தமாய் ஊன்றி கொண்டு வந்தவன் அவனின் அருகே வந்து, "அதிதியை என்ன பண்ணே.. உன்கிட்ட நான் அன்னைக்கே சொன்னேன்.. அவ பக்கம் உன்னோட மூச்சு காத்து கூட போக கூடாதுன்னு.. ஆனா நீ அதை தாண்டி அவகிட்ட போயிருக்க.. உன்னை என்ன பண்ணலாம்னு சொல்லு.." என்றான் கோபமாய்.

"சார் நான் அப்புறம் அவ பக்கமே போகலை சார்.." என்றான் படபடத்தபடி.

"ஏய் நீ யாருன்னு சரியா விசாரிக்காம தான் நான் அதிதிக்கு உன்னை கல்யாணம் செய்ய சம்மதிச்சேன்.. ஆனா உன்னை பத்தி உங்க கல்யாண நாள் போது தான் தெரிஞ்சிது..

ஆனா சூழ்நிலை எங்களோட கல்யாணம் நடந்துச்சி.. அப்பவும் நான் வருத்தப்பட்டேன்.. ஆனா அடுத்த நொடி தான் உன்னை பத்தின அத்தனை தகவலும் எனக்கு வந்துச்சி..

அந்த பொண்ணோட வாழ்க்கையில நான் தீர விசாரிக்காம ஒரு முடிவெடுத்தேன்னு தான் நான் அமைதியா அப்போ உன்னை விட்டேன்.. ஆனா நீ அடுத்த நாளே என் வீட்டை தேடி வந்த உன்னை சும்மா விடுவேன்னு நீ நினைச்சியா அலெக்ஸ்.. நான் யாருன்னு தெரியாம என் கூட நீ மோதிட்ட.. அவளை என்ன பண்ண நீ.." என்றவனின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவனை பளீரென அறைந்தான்.

அதில் நிலைகுலைந்தவன் அதே ஆத்திரத்தோடு எழுந்து அமர்நாத்தை அடிக்க பாய லாவகமாய் அவனை விலகி வந்தவன் தன் கையில் இருந்த ஸ்டிக்கை வைத்து அவனை கீழே தள்ளியவன் அவனின் கழுத்தில் தன் பூட்ஸ் காலால் அழுத்தி சிறைப்படுத்தினான்.

அதில் மிரண்ட அலெக்ஸை பார்த்தவன், "என்னடா கால் இல்லாதவன் வயசாயிடுச்சி இவனை சாய்ச்சிடலாம்னு கனவு கான்டியா.. இடியட் அடிபட்டாலும் சிங்கம் எப்போதும் சிங்கம் தாண்டா..

இந்த உடம்பு அடிவாங்கி மறத்து போன உடம்பு டா.. எத்தனையோ போர் எதிரிநாட்டுல சிறைபட்டு அடி உதை வாங்கி அதிலிருந்து மரணத்தையே தாண்டி வந்தவன் டா.. என்னை ஈசியா நினைச்சிட்டியோ.." அதே ஸ்டிக்கால் அவனை அடித்து துவைத்தான்.

அதே நேரம் போலிசுடன் அங்கே வந்த மகேந்திரன் இவனை கண்டு, "மச்சான் போலிஸ் வந்துட்டாங்க.." என்றபடி வேகமாய் இவனிடம் வந்தான்.

"இன்ஸ்பெக்டர் என்னோட மனைவியை இவன் என்ன செஞ்சான்னு எனக்கு தெரியனும்.. இந்த பென்டிரைவ் ல இவனோட எல்லா குற்றத்துக்குமான ஆதாரம் இருக்குது.." என்றவன் தன் கையில் வைத்திருந்த பென்டிரைவை அவனிடம் ஒப்படைத்தான்.

போலிஸை கண்டதும் நடுங்கியவன், "சார் ப்ளீஸ் என்னை விட்ருங்க.. நான் எதுவும் பண்ணலை.." என்றான் பயந்தபடி.

அதை கேட்டதும் ஆடவனுக்கு வந்த கோபம் அவனை அடித்து துவைக்க துடித்தது.

அதை கண்ட அலெக்ஸ், "சார் ப்ளீஸ் நான் உண்மையை சொல்லிடறேன் சார்.. அதிதி வீட்டை விட்டு வெளியே வந்ததும் என் நண்பன் ஜீவாவை விட்டு கடத்திட்டு வர சொன்னேன்.. எனக்கு கல்யாணம் பேசினவ இவரை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியா இருக்க கூடாதுன்னு பண்ணேன்.. அதுமட்டுமில்லாம.." என்று மேற்கொண்டு பேச தயங்கியவன் அமர்நாத்தை பார்த்து பயந்தான்.

அதை கண்ட இன்ஸ்பெக்டர், "சொல்லுடா இன்னும் என்ன பண்ண.." என்றார் கோபமாய்.

சார் அது வந்து அவளுக்கு ஒரு பெரிய விலை பேசியிருந்தேன்.. ஒரு பெரிய பார்ட்டிகிட்டே.. எங்க கல்யாணம் முடிஞ்சதும் அந்த ஆளுக்கு இவளை நாங்க கொடுக்கனும்.. எங்க கல்யாணம் நின்னதால அது நடக்காம போயிடுச்சி.. அந்த பார்ட்டி வேற என்னை நெருக்க ஆரம்பிச்சான்.. அது தான் இவளை கடத்தி கொண்டு போய் அவன்கிட்ட விட்ரலாம்னு நினைச்சேன்.. ஆனா அதுக்குள்ள அவ ஜீவாகிட்ட இருந்து தப்பிச்சிட்டா.." என்றான் அமர்நாத்தின் முகத்தை பார்த்து கொண்டே.

அதில் ஆத்திரம் கோபம் ஆக்ரோஷம் என அனைத்தும் கொட்டி கிடந்தது


"இன்ஸ்பெக்டர் இன்னும் ஒரு நிமிஷம் இவன் இங்கே நின்னாலும் என் கையால நான் கொன்னுடுவேன்.." என்றான் கண்ணங்கள் இரண்டும் துடிக்க.

வேகமாக அவனை அழைத்து கொண்டு சென்றனர்.

அவர்கள் சென்றதும் மகேந்திரன் அமர்நாத்தின் அருகே வந்து அவனின் தோளை தட்டியவர்,

"உனக்கு இவனை பத்தி முன்னவே தெரியுமா அமர்.." என்றவனின் கேள்விக்கு அமர் சொன்ன பதில் நிலைகுழைய வைத்தது.


தொடரும்..
✍️
 

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
68
40
18
Tamilnadu
Amar ku athi oda love understand pannitaru i think.. Alex paeriya kedi pola 😡 ella detail um pendrive la vaychutu y silent ah iruntharu these days?
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
எப்படியோ அதிதியோட காதலை புரிஞ்சிக்கிட்டான் 😍