• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிற்பியில் பூத்த நித்திலமே 9

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அத்தியாயம் 9

" உனக்கே நல்லா தெரியும் குணா.. நான் ஆர்மில இருந்த போது நடந்த ஆக்ஸிடென்ட்.. என்னோட நிலை சுய கழிவிரக்கம் இதெல்லாம் தான் என்னால கல்யாணத்துக்கு ஒத்துக்க முடியலை.. அதுமட்டும் இல்லாம நல்லா இருக்க ஒருத்தனையே இந்த காலத்துல பிடிக்காது.. என்னை போல கால் இழந்த ஒருத்தனை வயசான ஒருத்தனை எந்த பெண்ணும் கல்யாணம் செய்துக்க யோசிப்பா..

அதுமட்டுமில்லாம எனக்கு கல்யாண வாழ்க்கையில பெருசா எந்த ஈடுபாடும் இல்லை.. அதுனால தான் நான் கல்யாணத்துல இஷ்டமும் இல்லை..

ஆனா இன்னைக்கு எனக்கே தெரியாம என்னை ஒருத்தி ஆழமா காதலிச்சி ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில கல்யாணமும் செய்துகிட்டா.. அதுக்காக அவ மேல நான் தப்பு சொல்லலை..

நான் அவளுக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லைன்னு தான் டைவர்ஸ் பண்ணிட்டு வேற கல்யாணம் செஞ்சு வைக்க நினைச்சேன்.. ஆனா அவளோட காதலை உணர்ந்தப்புறம் என்னால அப்படி யோசிக்க முடியலை..

ஏன் எனக்கே இப்போ அவளோட வாழனும்னு ஆசை இருக்கு.. இது சரியா தப்பா எனக்கு புரியலை.. இத்தனை வயசுக்கு மேல செக்ஸ் ஆர்வமான்னு மனசு யோசிக்குது.. ஆனா தாம்பத்யம் இல்லாத கணவன் மனைவி இந்த உலகத்துல இல்லை..

என்னோட ஆக்ஸிடென்ட் அப்புறமும் நான் பிட் ஆ தான் இருக்கேன்.. ஆனா என்னால ஒரு பொண்ணை முழுமையா சந்தோஷப்படுத்த முடியுமா.. இது என் முன்னாடி இருக்கற மில்லியன் டாலர் கேள்வி..

அவளோட அன்பை தெரிஞ்சதுக்குப்புறம் தான் நான் இதை யோசிக்குறேன்.. சப்போஸ் அப்படி இல்லைன்னா இப்பவே அவளை என் வாழ்க்கையில இருந்து விலக்கிடுவேன்.. அவ வாழ வேண்டிய குணா..

அதுக்கு நானும் என்னோட காதலும் தடையா இருக்க கூடாது.. அதுக்காக தான் இந்த செக்கப்.." என்றபடி தன் நிலையை முழுதாய் விலக்கினான் அமர்.

எப்போதும் போல் இப்பவும் தன் நண்பனை பெருமையாய் பார்த்த குணசீலனுக்கு தன் நண்பனின் மேல் பெருமதிப்பு ஏற்பட்டது.

"அமர் எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு டா.. உன்னை தேடி வந்த அன்பை போதும்னு சொல்லி எடுத்துக்காத அதுக்கு நீ தகுதியான்னு யோசிக்குற பார்த்தியா இதுவே சொல்லும் டா உன் உயரத்தை..

உனக்காகவே வந்து பொண்ணை ஏத்துகிட்டு நீ வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இப்படி ஒரு நினைவு வந்து அது உன் மனசை ஆக்கிரமிச்சி பின்னாடி ஏதோ ஒரு பிரச்சனை வர்றதை தடுக்க தான் இப்போ உனக்கு இந்த பரிசோதனை அவசியம்.. ஐ ஆம் ஏ ரைட்.." என்றான் நண்பனை தெரிந்து கொண்ட பாணியில்.

அதை உணர்ந்த அமரும் மென்சிரிப்பினில் ஆம் என்று தலையசைத்தான்.

இவர்கள் இருவரும் பேசி முடிக்கும் சமயம் அவனின் ரிப்போர்டும் வந்துவிட அதை படிக்க ஆரம்பித்தான் குணசீலன்.

ஏனோ மனம் தடுமாற அதை பார்த்து கொண்டிருந்த அமர்நாத்தின் முகத்தில் பல வித பாவங்கள் வந்து போயின.

சற்று நேரம் பொறுத்து அந்த ரிப்போர்டை மூடி வைத்த குணசீலன் தன் நண்பனை சீரியஸாய் நிமிர்ந்து பார்த்தான்.

அதை கண்ட அமருக்கு மேற்கொண்டு பேச்சு வராமல் நாவு மேலன்னத்துடன் ஒட்டிக் கொண்டது.

" குணா என்ன பிரச்சனை சொல்லு.." என்றவனின் குரலில் எப்போதும் இருந்த கம்பீரம் கூட குறைந்தது போல் இருந்தது.

அதை கண்ட குணாவின் முகம் மெல்ல மெல்ல சிரிப்பை பூசியிருந்தது.

" அமர் ரிலாக்ஸ் மேன்.. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. உன்னால பரிபூரணமா ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியும்.. உன்னோட தாம்பத்யத்துல எந்த பிரச்சனையும் இல்லை.. சந்தோஷமா உன் வாழ்க்கையை ஆரம்பி.. அதுக்கு என்னோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.. இதுலேயும் உனக்கு சந்தேகம் இருந்தா உன் மனைவியோட வந்து சாரதாகிட்ட பேசு.. எல்லாமே மகிழ்ச்சியா தான் முடியும்.." என்று தன் நண்பனின் வார்த்தையில் முகமதில் சந்தோஷம் மிளிர நிமிர்ந்தவன்,

"தேங்க்யூ டா.. தேங்க்ஸ் லாட்.. சரி டா ஆச்சி நான் கிளம்புறேன்.." என்றவன் தன் கைகடிகாரத்தில் நேரத்தை பார்க்க அதுவோ இரவு பதினொன்று எனக் காட்டியது.

"சரிடா நான் நாளைக்கு அதியோட வர்றேன்.." என்றவனின் மனது வரும்போது இருந்ததை விட இப்பொழுது நிறைவாய் இருந்தது.

வாசலில் தன் காரை நிறுத்தியவன் இறங்கி வீட்டிற்கு வருவதற்குள்ளாகவே வண்டியின் சத்தத்தில் கதவை திறந்து வெளியே வந்த அதிதியை கண்டவனுக்குள் ஏதோ மனமெங்கும் உற்சாகம் பிறந்தது.

தன்னவனை கண்டதும் சந்தோஷமாய் அவனை பார்த்தபடி நின்றவளின் அருகே வந்தவன்,

"நீ இன்னும் தூங்கலையா.." என்றான் கேள்வியாய்.

" நீங்க வரணும்னு காத்திருந்தேன் வாங்க சாப்பிடலாம்.." என்றபடி அவனை உள்ளே விட்டு கதவை சாத்தியவளின் உடன் நடந்தவன் மெதுவாய் அவளின் கைகளை தன் முரட்டு கரத்துடன் அழுத்தமாய் பற்றி கொண்டான்.

அவளின் வென்பஞ்சு விரல்களின் ஸ்பரிசம் ஏனோ ஆடவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தன் கரத்தை அழுத்தமாய் பற்றியிருந்த தன்னவனை கேள்வியாய் பார்க்க அவனோ அவளின் பார்வையை பெரிதாய் பொருட்படுத்தாமல்,

"உனக்கு ஏற்கனவே உடம்பு முடியலை.. இதுல இவ்வளவு நேரம் எனக்காக சாப்பிடாம காத்திருக்கனுமா என்ன.. இதோ பாரு முதல்ல உன் உடம்பை பார்த்துக்கோ சரியா.. சரி இப்போ வா சாப்பிடலாம்.." என்று அவளை அழைத்து கொண்டு டைனிங் டேபிள் சென்றான்.

ஏனோ தன்னவனின் புரிதலில் மகிழ்ச்சி பொங்க அமர்ந்திருந்தவளுக்கு அவனே தன் கையால் பரிமாறினான்.

அவளோ சாப்பிடாமல் அவனையே பார்த்திருக்க அவனோ அவள் பார்வையை உணர்ந்தவன், "அதி என்னோட மூஞ்சியிலா சாப்பாடு இருக்கு.. தட்டை பார்த்து சாப்பிடு.." என்றான் தானும் சாப்பிட்டு கொண்டே.

அதில் மெலிதாய் வெட்கம் தோன்ற அவன் பரிமாறியதை சாப்பிட ஆரம்பித்தாள்.

இருவரும் சாப்பிட்டு விட்டு எழுந்து அவர்களுக்கான அறைக்குள் செல்லும் போது மௌனமாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

அவனும் அவளை தான் பார்த்தான். ஏனோ அவளின் பார்வை ஆடவனை அசைத்து பார்க்க தன் அறைக்கு சென்றவன் அடுத்த ஐந்து நிமிடத்தில் தன் உடையை மாற்றி கொண்டு மீண்டும் கீழே வந்தான். எங்கே அவளை விட்டு சென்றானோ அங்கேயே நிற்க அவளுக்கு முன்னே அவளின் அறைக்கு வந்துவிட்டான்.

கேள்வியாய் அவள் பார்க்க அவனோ அவளின் மாத்திரையை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

அவனையே பார்த்து கொண்டிருந்தவளை பார்த்தவன், "இப்போ எதுக்கு இப்படி பாத்துட்டு இருக்க.. முதல்ல மாத்திரையை போடு.. ஆ அப்புறம் நாளைக்கு ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்.. இப்போ மாத்திரையை போட்டுட்டு படு முதல்ல.." என்றவன் தன் ஸ்டிக்கை அங்கேயே வைத்து விட்டு அவளின் கட்டிலிலே படுத்து கொண்டான்.

பெண்ணவளும் மாத்திரையை போட்டு விட்டு அவனருகில் படுத்து கொண்டாள்.. ஆனால் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு தான் படுத்திருந்தாள்.

வாய் விட்டு சொன்னால் தான் காதலா..? இதோ பார்வையிலே தன் காதலை உணர்த்தும் பெண்மையை எந்த ஆண்மகனுக்கு தான் பிடிக்காது.

தன் ஒரு கையை தலைக்கு கொடுத்து மற்றொரு கரத்தை நெஞ்சில் வைத்து படுத்திருந்தவன் ஒரு பெருமூச்சுடன் தலையில் வைத்த கரத்தை எடுத்து விரித்தவன் பார்வையால் அவளை தன்னருகே அழைத்தான்.

அவனின் கரத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள் சந்தோஷத்தில் கலங்கிய கண்களுடன் ஓடி வந்து அவனின் நெஞ்சத்தை மஞ்சமாக்கி கொண்டாள் பேதையவள்.

தன்னை தேடி வந்து சரணடைந்தவளை இறுக்கமாய் அணைத்து கொண்டவன் அவளின் முன்னுச்சியில் தன் இதழ் பதித்தான்.

அவனின் அன்பை உணர்த்தும் அச்சாரமாய் விளைந்த முத்தத்தில் மெய் மறந்தவள் தானும் அவனுக்கு சளைத்தவள் இல்லை என்பதை அவனின் வெற்று நெஞ்சில் இதழ் பதித்து நிருபித்தாள்.

இருவருமே அதற்கு மேல் பேசவில்லை.. அவளை இறுக்கமாய் அணைத்து கொண்டு நிம்மதியாய் உறங்கி போனான்.

தன் தேவதை தன்னை வந்து சேர்ந்ததை உணர்ந்த ஆண் மனமும் அவளை அணைத்து கொண்டு உறங்கினான்.

எத்தனை நாளைய தூக்கமோ இன்று தான் நிம்மதியாய் உறங்கினான்.

ஆதவனின் தூதுவன் ஒளிர்விடும் நேரம் பெண்ணவள் மென்மையாய் துயில் கலைந்தாள்.

அவள் படுத்திருந்த தலையணை மெத்தையை இன்னும் இறுக்கமாய் அணைத்து கொண்டாள். இனி அது அவளுக்கு மட்டுமேயான உடமை என்பதை உணர்த்தியது அந்த அணைப்பு.

"மேடம் கொஞ்சம் போய் கிளம்புனா வெளியே போலாம்.. மிச்சம் மீதியை சாயந்திரம் பாத்துக்கலாம்.." என்ற ஆடவனின் குறும்பு கொப்பளிக்கும் குரலில் வெட்கம் சுமந்த முகத்துடன் எழுந்தவள் அங்கிருந்து ஓடி குளியலைறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் போனதும் சிரித்தபடி எழுந்தவன் வெளியே வர அங்கே அவனின் தங்கை குடும்பம் அமர்ந்திருந்தனர்.

அதை பார்த்து கேள்வியாய் அவர்களின் அருகே வர அபிதாவோ, "அப்புறம் மாமா நாங்க கிளம்பவா.. நாங்க வந்த வேலை முடிஞ்சி போச்சி.." என்றபடி நின்றாள்.

அவளை புரியாமல் பார்த்தவனின் பார்வை தங்கையின் மேல் பதிந்தது.

" மாமா இங்கே நாங்க வந்ததுக்கு காரணம் நீங்களும் அக்காவும் சேரணும்னு தான்.. ஆனா உங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு மாமா.. அப்பா நேத்து தான் சொன்னாங்க.. நீங்க அக்காவை கல்யாணம் செஞ்ச சூழ்நிலையை..

ஆனா உங்களை விட எங்க அக்காவோட காதல் தான் உங்ககிட்ட சேர்த்துருக்கு.. சரி இப்போ சொல்லுங்க.. உண்மையா என்ன நடந்துச்சி மாமா.." என்றாள் அபிதா.

எல்லோரின் பார்வையும் அதே கேள்வி தொனிக்க மெல்ல நிதானித்தவன்,

"அலெக்ஸ் அதியை கல்யாணம் செஞ்சுக்க கேட்கும் போது எனக்கு அவளோட வாழ்க்கை தான் பெருசா தெரிஞ்சிது.. நானே கல்யாணம் செய்து வைக்கலாம்னு தான் எல்லா ஏற்பாடும் பண்ணேன்..

ஆனா அன்னைக்கு கல்யாண மேடையில அவளை உட்கார வச்சிட்டு யாரோ எனக்கும் அவளுக்கும் அபேர் இருக்குன்னு சொல்லவும் இவனும் அதை உண்மைன்னு நம்பினாலும் இவளை வச்சி வாழ அவன் கல்யாணம் செஞ்சுக்கலையே.. அதுனால பெரிய மனசு பண்ணி அவளை ஏத்துக்குறதா சொல்லிட்டான்.

ஆனா அவனோட அம்மா தான் ரொம்பவே குதிச்சாங்க.. அப்பவே எனக்கு கொஞ்சம் சந்தேகம்.. ஆனா அது முழுமையடைஞ்சது அன்னைக்கு மதியமே..

அவன் லவ் பண்ண பொண்ணு.. ஆனா எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி பேசுனதும் அவ அழுததும் தாங்காம நானே அவ கழுத்துல தாலி கட்டிட்டேன்.. அப்போ என்னோட கோபத்துல தான் அப்படி பண்ணேன்.. அதை அவன்கிட்ட சொல்லி புரிய வச்சா அவன் அதியை ஏத்துப்பான்னு நினைச்சி அவனை பாக்க போனேன்..

அப்போ தான் அவனோட நண்பன்கிட்ட பேசுனதை கேட்டேன்..

ச்சீய் எவ்வளவு பெரிய ஆப்பர்சூனட்டி எங்க அம்மா பேசியே கெடுத்துட்டா டா.. அவளை மட்டும் அப்படியே முழுசா குடுத்தா இந்நேரம் நாம லட்சாதிபதி.. ஆனா ஒரு சின்ன விஷயத்துல கோட்டை விட்டுட்டேன்..

அவன் அப்படின்னு சொல்லவும் எனக்கு பெரிய அதிர்ச்சி தான்.. ஆனா அதுக்கப்புறம் அவனை பத்தி டிடெயிலா விசாரிக்கவும் தான் அவனோட தொழிலே இதுதான்னு புரிஞ்சுது..

அழகா இருக்கற பொண்ணுங்களை லவ் பண்ற மாறி பண்ணி கல்யாணமும் பண்ணி அவளை வித்துடுவான்.. ஆனா அதை அவங்க அம்மாக்கு தெரியாம பாத்துகிட்டான்.. நான் அவனை விசாரிச்சதுல வேற வழி இல்லாம அவனோட அம்மாவை அறிமுகபடுத்துற மாறி ஆயிடுச்சி.. ஆனா அதுனால தான் அதிதியை அப்போ என்னால காப்பாத்த முடிஞ்சது..

அதுக்கு அப்புறம் தான் அவனை பத்தின டீடெயில் கலெக்ட் பண்ணி போலிஸ்கிட்ட சொல்றதுக்குள்ள அவன் திரும்பவும் அதிதியை பார்த்தான்.

அவனோட காலை ஒடைச்சி போட்டும் அவன் அதி மேல கை வைக்கவும் தான் இனிமே யோசிக்கவே கூடாதுன்னு போலிஸ்ல ஹேண்ட்ஓவர் பண்ணிட்டேன்.." என்றான் அழுத்தமாய்.

அங்கிருந்த அனைவருக்குமே தோன்றியது ஒன்று தான்.. இப்படியுமா சதை வெறி பிடித்த மிருகங்கள் இங்கே வாழ்கின்றனர்.

எங்கெங்கோ நடக்கும் நிகழ்வுகளை நம் வீட்டிற்கு அருகிலோ இல்லை நம் குடும்பத்திலோ கானும் வரை அதை பெரிதாய் இங்கே யாரும் எடுத்துக் கொள்வதில்லை.

அது தான் இங்கே அதிதியின் விஷயத்திலும் நடந்தது. என்ன ஒன்று அவளை சரியான நேரத்தில் காப்பாற்ற அமர்நாத் இருந்தான்.

இதை கேட்ட பெண்ணவளுக்குமே கொஞ்சமே உடல் நடுங்கி தான் போனது.

" சரிங்க அண்ணா அது தான் எல்லாம் முடிஞ்சது இல்லை.. இனிமே நீங்க தான் அதிதியை பாத்துக்கனும்.. எப்படியோ உங்களுக்குன்னு ஒருத்தி வந்துட்டா.. நாங்க கிளம்புறோம் அண்ணா.." என்றாள் பூவிழி சிரித்தபடி.

"எனக்கும் சந்தோஷமா இருக்கு மா உன்னோட இந்த மாற்றம்.. கவலைபடாதே என்னோட சொத்துக்களில் பாதி அபி ஆத்விக்கும் தான்.. நான் அதை எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.. இனி அது எப்பவும் மாறாது.." என்றான் சந்தோஷமாய்.

தன் தமையனே இதை சொல்லவும் அதில் தலைகுணிந்த,

"அண்ணே என்னை மன்னிச்சிரு.. நானும் சொந்தத்தை விட சொத்து தான் பெரிசுன்னு நினைச்சிட்டேன்.. ஆனா என்னோட பொண்ணு தான் எனக்கு சொத்தை விட சொந்தம் பெருசுன்னு புரியவைச்சா.. ரொம்பவே சந்தோஷமா கிளம்புறேன் அண்ணா.." என்றாள் சந்தோஷமாய்.

அதே நேரம் அங்கே வந்த அதிதியை பார்த்தவள் அவளின் அருகே சென்று,

"அதிதி என் அண்ணாக்கு இத்தனை நாளா பக்கத்துல இருந்து பாத்துக்க யாருமில்லை.. ஆனா இப்போ நீ வந்துட்ட.. என் அண்ணாவை பாத்துக்கோ.. அபிதா எங்களுக்கு எப்படியோ அதே மாதிரி தான் நீயும்.. இனி உன்னோட பொறந்த வீடு நாங்க தான் சரியா.. நீ எதுனாலும் எங்களை தேடி வரலாம் கேட்கலாம் சரியா மா.." என்றவள் பாசமாய் அவளை அணைத்து கொண்டாள்.

மனைவியின் மாற்றத்தில் சந்தோஷமாய் வந்த மகேந்திரன், "ஆமா டா அதிதி.. அவ சொன்னது போல அபிதாவை போலத்தான் நீயும்.. அன்னைக்கு மாறி நமக்கு யாரும் இல்லைன்னு நீ நினைச்சி வெளியே போகக்கூடாது.. அன்னைக்கு என்ன நடந்துச்சின்னு நாங்க கேட்க வரலை.. இனிமே உனக்கு அப்பா அம்மா எல்லாமே நாங்க தான்.. இனி உன் பிறந்த வீடும் அது தான்.. சரியா மா நாங்க கிளம்பவா.. அமர் இவ என்னோட பொண்ணு.. நீ நல்லா பாத்துக்கவேன்னு உன்கிட்ட விட்டுட்டு போறேன்.. அபிதா விழி மா கிளம்புங்க.. ஆத்விக் ஈவ்னிங் அப்படியே வந்துடுவான் என்ன.." என்றபடி சந்தோஷமாய் தன் குடும்பத்தை அழைத்து கொண்டு சென்றார்.

சற்றே சுயநலமாய் இருந்த பூவிழியும் மகளின் அறிவுறையில் திருந்தி தன் தமையனுக்கு குடும்பம் அமைந்த சந்தோஷத்துடன் கிளம்பினாள்.

தம்பதிகள் இருவர் மட்டுமே நிற்க அவளை பார்த்தவன்,

"போய் கிளம்பி வா ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும்.." என்றவன் ஹால் சோபாவில் அமர்ந்து தன் லேப்டாப்பை எடுத்து வேலை பார்க்க ஆரம்பித்தான் அமர்நாத்.

மனைவி கிளம்பியதும் இருவரும் சேர்ந்து குணசீலன் சாராதவை சந்திக்க சென்றனர்.

இந்த சந்திப்பு இருவரையும் இணைக்குமா..? என்பதை அடுத்த முடிவுடன் தெரிந்து கொள்ளலாம் வாசக மக்களே.


தொடரும்..
✍️


 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அபி நேத்ரா ரெண்டு பேருமே அதிதிக்கு நல்ல துணையாக நட்பாக இருந்து அவளோட வாழ்க்கையை சரி செய்திருக்காங்க 😍
 

MK10

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
46
44
18
Tamil nadu
அபி நேத்ரா ரெண்டு பேருமே அதிதிக்கு நல்ல துணையாக நட்பாக இருந்து அவளோட வாழ்க்கையை சரி செய்திருக்காங்க 😍
thanks akka