மிட்டாய் 1
புதுப்பாளையம். கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஊர்.
அங்கு இருக்கும் ஒரு பஞ்சாலை மில்லில் தறியோட்டும் கூலித்தொழிலாளி தான் பழனி.
அவனது மனைவி கல்பனா மத்திய அரசு வேலை திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றுகிறாள்.
இவர்களுக்கு நீதிமாறன் என்று ஐந்தாவது படிக்கும் மகன் உள்ளான்.
மேலும் இவர்களின் வீட்டில் பழனியின் தாய் மயிலாத்தாளும் வசித்து வருகிறார்கள்.
பழனியின் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் என்றே சொல்லலாம்.
பணத்திற்க்கு குறைவிருந்தாலும் மகிழ்ச்சியான, அழகான குடும்பம்.
பழனி கொஞ்சம் முரட்டு சுபாவம் உடையவன் ,ஆனால் அமைதியானவன், குடும்பத்தின் மேல் மிகவும் பாசமாக இருப்பவன். நல்ல மகன், நல்ல கணவன், நல்ல தந்தை என்று தான் அவனை சொல்ல வேண்டும். தன் கடமைகளை கஷ்டப்பட்டாலும் சரியாக செய்பவன்.
சிறு வயதிலேயே தன் தந்தை இறந்துவிட மூத்தமகனான பழனியின் மேல் குடும்ப சுமை வைக்கப்பட்டது .அதனால் பள்ளிப்படிப்பை பாதிலேயே நிறுத்திவிட்டு வருமானத்திற்காக கூலி வேலைக்கு சென்றான்.
அவனுக்கு இரு தங்கைகள் அவர்களை தன் தகுதிக்கு ஏற்ற போல் நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தான்.
ஏதோ அவனுக்கு சொந்தமாக ஓட்டு வீடு மட்டும் இருந்தது.
பழனியின் உறவுக்கார பெண் தான் கல்பனா ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள். தன் 20 வயதில் தந்தையும் இறந்துவிட அவளின் வீட்டில் அடுத்த சில மாதங்களிலே பழனியை பேசி முடித்து திருமணம் செய்து வைத்தனர். கல்பனா அமைதியான சுபாவம் என்பதால் பழனி விழியசைவுகே அவனை புரிந்து கொள்வாள்.
இதோ திருமணம் ஆகி 11 வருடங்கள் ஓடிவிட்டது இருவரும் நல்ல மனமொற்ற தம்பதிகளாக சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இன்னும் சில மாதங்களில் பழனிக்கு நாற்பது வயதை தொடப்போகிறது ஆனாலும் சொல்லும்படியாக வாழ்க்கையில் எந்த முன்னேற்றம் இல்லை.
மகன் நீதிமாறன் என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும் . 'நீதிமாறன்' என்னும் பெயர் பழனிக்கு பிடித்த ஆசிரியர் ஒருவரின் பெயர் அதனாலேயே அவனுக்கு அந்த பெயரை வைத்தான்.
மகன் தன்னை போல் படிப்பில்லாமல் கஷ்டப்படக்கூடாது
அதனால் தன் மகனை நன்றாக படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்த வேண்டும் அது மட்டுமே அவனது ஆசை.
பழனியின் தாய் மயிலாத்தவும் வீட்டிற்கு பின் இருக்கும் நிலத்தில் காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிட்டு அதை சந்தைக்கு சென்று விற்று வருவார் கல்பனாவும் தனக்கு வேலை இல்லாத சமயத்தில் அவருக்கு உதவி செய்வாள்.
ஆனால் நம் மயிலாத்தா என்கின்ற மயிலு வேலை வந்துட்டா ரொம்ப சின்சியார்ட்டி
மத்த நேரத்தில் பண்ணுவது எல்லாம் அட்ராசிட்டி.
அவ்வப்போது நம்ம மயிலு தான் நாடகத்தை பார்த்துவிட்டு மருமகளிடம் எதாவது வான்டட் ஆகா வம்பு இழுக்கும்.
அதே நாடகத்தில் வரும் மருமகளை போல மயிலு 'எள் என்றால் எண்ணெயாக நிற்கும்' நம் கல்லு.
அதனால் மாமியார் மருமகள் சண்டைக்கு பதிலாக
அப்பத்தா பேரன் சண்டை தான் அந்த வீட்டில் ஹைய்லைட்.
நம்ம ஹீரோ நீதிமாறன் பத்து வயது சுட்டிக்காரன், சேட்டைக்காரன், குறும்புக்காரன் சரியான அறுந்தவால்.ஆனா படிப்பினு வந்துட்டா மட்டும் வொள்ளைக்காரன்.
சிறுவயதாக இருந்தாலும் தன் குடும்ப சூழ்நிலையை ஏற்றவாறு அவனின் வயதிற்கு சற்று முதிர்ச்சியாகவே நடப்பான்.
மாறனுக்கு அவனது தந்தை என்றால் மட்டுமே பயம் பயப்புள்ள வேற யாருக்குமே பயப்படாது.அவனோ வாயிலேயே வடை சுட்டு வித்துட்டு வந்துருவான் அப்படியே தன் அப்பத்தா மயிலு போல.
காலை 7 மணி
"மாறா மாறா டைம் ஆகிருச்சுடா எந்திரி ஸ்கூல்க்கு போகனும்ல" என்று தனது ஆறு மாத மேடிட்ட வயிற்றுடன் மகனை பள்ளிக்கு கிளப்பும் பொருட்டு எழுப்பி கொண்டு இருந்தாள் கல்பனா.
அவனே , "அதுக்குள்ள காலைல ஆகிருச்சா , கல்லு அஞ்சு நிமிஷம் கல்லு தூக்க தூக்கமா வருது' என்று உருண்டு உருண்டு படுத்து கொண்டு இருந்தான் மாறன்
"நைட்டு நேரத்துல தூங்குனு சொன்னா கேக்காம இப்ப தூங்கிட்டு இரு அம்மாக்கு வேலைக்கு வேற போனும் சீக்கிரமா எந்திரிடா" என்று கல்பனா ஒரு பக்கம் புலம்ப
"அந்த ரோகினி இரண்டு லட்சத்த திருடிட்டு பாவம் மீனா மேல பழி விழுந்துருச்சு" என்ன ஆச்சோ ??
நைட்டு பூரா தூக்கமே வரல
பாவிப்பய மீனா நாடகத்த( சிறகடிக்க ஆசை ) பாக்கவிடாம,
எங்குட சண்டப் போட்டு
பொம்ம டிவிய பாத்தூட்டு இப்ப தூக்கம் வருதுனு உருண்டுட்டு இருக்கான் பாரு அவன கொஞ்சிட்டு இருக்கமா நாலு போட்டு எழுப்பு புள்ள நீதா அவன செல்லம் தந்து கெடுத்து வைச்சுருக்க"
என்று மயிலாத்தாளும் நாடகம் பார்க்க முடியாத கடுப்பில் ஒரு பக்கம் திட்டி கொண்டு இருந்தார்.
"மயிலு அதான் மதியானம் நைட்டு போட்டா நாடகத்த ஒன்னு விடாம போடராங்கல நீ அப்ப பாக்கலாம்ல" என்று படுத்தப்படி அப்பாத்தவுடன் வாயடித்து கொண்டுயிருந்தான்.
அதற்கு மயிலோ "ஆமா ஒரு நாளைக்கு மூப்பது தடவ கரன்ட் ஆஃப் பண்ணி வைச்சுகுறங்க எங்க நிம்மதியா டிவிய பாக்கறது" என்று புலம்பி கொண்டு இருக்கும் போதே
வீட்டு வாசலில் எக்ஸல் வண்டி உள்ளே வரும் சத்தம் கேட்டதும்.
மயிலுவின் பேசிக்கொண்டு இருந்த வாய் கப்பேன்று மூடிக் கொண்டது.
மாறனோ "அய்யோ எம்டன் வந்தாச்சு " என்று அடித்து பிடித்து வீட்டிற்கு பின் இருக்கும் குளியல் அறைக்குள் ஓடியிருந்தான் .
ஓடும் மாறனை பார்த்த கல்பனா, மயிலாத்தாவும் தங்களுக்குள் சிரித்து கொண்டே நைசாக அவ்விடத்தில் இருந்து இருவரும் நழுவினர்.
நைட்ஷீப்டு முடித்து கொண்ட வந்த பழனி
"இந்தா புள்ள வடை சூடா இருக்கு மாறனுக்கும் அம்மாக்கும் குடுத்துட்டு நீயும் சாப்புடு , டீ இருந்தா கொண்டு வா குடுச்சுட்டு துங்கனும்" என்றவாறே திண்ணையில் அமர்ந்தான்
"உனக்கு இன்னைக்கு வேல இருக்கா" என்று கேட்க
"ஆமாங்க அடுத்த வீதில இருக்க குளத்துல தாங்க மதியம் வந்துடுவேன்" என்றவாறே டீயை பழனியிடம் நீட்டி இருந்தாள்.
அப்போ சரி குளத்துல பாத்து கால் வைச்சு வேலை செய்புள்ள மழை பெய்ஞ்சு படில பாசிப் படிஞ்சு கிடக்கும்" என்றான் அவளின் மேடிட்ட வயிற்றை பார்த்துக்கொண்டே
அவளுக்கு அவன் சொல்லவருவது புரியாதா என்ன?
"சரிங்க" என்று சொல்லிக் கொண்டு வேலைக்கு ஆயுத்தமாக உள்ளே சென்று விட்டாள்.
மாலை திரும்பவும் வேலைக்கு செல்ல வேண்டும் என்பதால் பழனி வெளியே இருந்த கயிற்று கட்டிலில் கல்பனா கொண்டு வந்து கொடுத்த டீயை குடித்து விட்டு உறங்க சென்று விட்டான்.
இரவு வேலைக்கு சென்றால் சிறிது கூலி சேர்த்து கிடைக்கும் என்பதால் பழனி நைட்டு ஷிப்ட்க்கே அதிகம் செல்வான்.
பத்து நிமிடத்தில் காலை கடன்களை முடித்து குளித்து பள்ளி சீரூடையை மாற்றி கொண்டு சாப்பிடுவதற்காக "கல்லு இன்னைக்கு என்ன ஸ்பெஷல்??" என்று கேட்டு கொண்டு சமையலறைக்குள் வந்திருந்தான் மாறன்.
கல்பனாவும் அவசரமாக காலை உணவை தட்டில் வைத்து "புளிச்சோறு டா" என்றவாரே அவனுக்கும் ஊட்டிவிட வர
"என்ன கல்லு இன்னைக்கும் சோறு தானா, பூரி வேணும்னு எவ்வளவு நாளா கேக்குறேன்" என்று தன் தாய் தரும் சோற்று உருண்டைகளை
'ஆ 'வாங்கி கொண்டே கேட்டான்.
கல்பனாவோ "சனிக்கிழமை கண்டிப்பா பூரி சுட்டு தரேன் மாறா அம்மாக்கு இந்த வாரம் முழுக்க குளத்து வேலை அதா ஒரே கலைப்பா இருக்குடா
இந்த அப்பா வடை வாங்கிட்டு வந்தாரு" என்று பழனி வாங்கி வந்த வடை கவரை அவனிடம் தர
" சரி உனக்கு வேலை கம்மிய இருக்குறப்ப செய்யு கல்லு வடையை ஸ்கூலுக்குகொண்டு போய் சாப்பிட்டுக்கரேன் என்று வடை கவரை தனது ஸ்கூல் பேக்கில் வைத்தவாறே அப்பறம் அடுத்த வாரத்தில இருந்து காலைல ஸ்கூல்ல சாப்பாடு போடுவாங்களாம் கல்லு மிஸ்ஸு சொன்னாங்க" என்றான்.
"பரவால்லேயே என்ன சாப்பாடு போடுவாங்க" என்று கேட்டாள்
தெரியல கல்லு ஆனா இட்லி,பூரி பொங்கல்னு போடுவாங்கன்னு மிஸ் சொல்லிட்டு இருந்தாங்க என்று
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே...
"ஏ புள்ள கல்பனா சட்டுனு வாடி இன்னைக்கு மண்வெட்டியும் ,சட்டியும் கொண்டு வரனும்னு போன்ல சென்னாங்களாம் டி, மழை வரபோல இருக்கிறதுனால நேரத்தோட போட்டோ புடுச்சுடுவாங்களாம்னு கலா சொன்னா" என்று வாசலில் நின்று பக்கத்து வீட்டு 'சரோஜா,'
வேறு காலில் சூடு தண்ணீர் ஊற்றியது போல கத்தி கொண்டு இருந்தார்.
மாறனே 'கல்லு ஒத்தரோசா அனெஸ்மென்ட் ஓட வந்துருச்சு சீக்கிரமா போ நம்ம எம்டன் வேற இப்பதா தூங்க போயிருக்காரு ஸ்பிகர போட்டு எழுப்பி விட்டர போகுது'என்றதும்.
" எல்லாருக்கும் பட்ட பேரு வைக்காதனு சென்னா கேட்க மாட்டியடா " என்று மாறன் தலையில் கொட்டிவிட
"ஆ ஆ கல்லு வலிக்குது" என்று கொட்டு வாங்கி தலையை தடவ"
"இதோ வரேன்கா இந்தா நீயே சாப்பிட்டு ஸ்கூலுக்கு பாத்து போ " என்றவாரே தட்டை அவனிடம் தந்துவிட்டு வெளியே இருந்த மண்வெட்டியும், சட்டியும் எடுத்துக்கொண்டே
"மாறா ஸ்கூல்ல இருந்து நேரத்தில வந்துடேன குடிக்க தண்ணீ மட்டும் இரண்டு குடம் கொண்டு வந்து வைச்சுட்டு அப்புறம் விளையாட போ சாமி " என்று சொல்லிவிட்டு மாறனின் கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்து விட்டு கல்பனாவும் வேலைக்கு கிளம்ப...
"கொட்டிடு போறல தண்ணி எடுத்துட்டு வந்து வைக்க மாட்டேன் போ" என்று தன் தாயை திட்டி கொண்டு இருந்தான்.
சிறிது நேரம் கழித்து
"கோல்டன் ஸ்பார்ரோ என் நெஞ்சுல ஏரோ
நீ இல்லாத லைப்பே ரொம்ப சாரோ
மாஸ்க் ஆப் ஸாரோ நம்ம பையன் தான் ஹீரோ
சிங்கிங் டூயட் வேற யாரோ"
என்று ஸ்டைலாக தலையை கோதியப் படியே பாடிக்கொண்டே பள்ளிக்கு செல்வதற்க்காக ஸ்கூல்பேக்குடன் வெளியே வந்த மாறனை குறுகுறு வென்று பார்த்து கொண்டு இருந்தார் மயிலு.
"ஆ!!! சுனாப்பனா அலர்ட் ஆகிக்கோ மயிலு நோட் பண்ணிருச்சே எப்படியாவது இன்னைக்கு எஸ் ஆகிறனும்" என்று மனதில் நினைத்தவாறே
அவனும் மயிலை பார்த்தும் பார்க்காதது போல " போய்டு வரேன் மயிலு பாய்" என்று ஓடப்பார்க்க
அதற்குள் மயிலு " என்கிட்டேயே உன் வேலைய காட்டுறியா நில்லு டா" என்று ஜாக்கிசானில் வரும் ஜூலிப்போல எட்டி மாறனின் தலைமூடி கொத்தாக பிடித்துவிட்டு
"யாருக்கிட்ட " என்று மாறனை பார்த்து நக்கலாக சிரித்தார்...