• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிலுக்கு மிட்டாய்

MK17

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
8
3
43
Tamil nadu
மிட்டாய் 2

தன் தலை முடியை பிடித்து வைத்திருந்த மயிலிடம் மாறன்

"மயிலு முடிய‌ விட்டுறு வலிக்குது" என்று பாவம் கத்த முடியாமல் வலியில் செய்கை காட்டி கதறி கொண்டு இருந்தான் மாறன்..

அவனின் முடியை பிடித்து ஆட்டிக் கொண்டே "ஏன் ராசா மௌன விரதமா வாய திறந்து பேசு ராசா" என்றார் நக்கலாக....

பாவம் அவன் எப்படி பேசுவான் அவனது எம்டன் வெளியே தானே கட்டிலில் மல்லாக்க படுத்து தூங்கி கொண்டு இருக்கிறார்..

அவனே " ப்ளிஸ் மயிலு ஸ்கூல்க்கு டைமாச்சு" என்று பாவமாக கெஞ்ச..



"உன்கிட்ட எத்தன தடவ சொல்றது இந்த மாதிரி பரட்டை தலையோட ஸ்கூலுக்கு போக கூடாதுன்னு" என்ற மயிலிடம்

" இன்னைக்கு வெள்ளிக்கிழமை இல்லையா" என்று கேட்டான் மாறன்

"பொச கெட்டவனே! இன்னைக்கு புதன்கிழமை பள்ளிக்கூடத்துக்கு போறவனுக்கு கிழமை கூட, தெரியல ஒழுங்கா போ போய் அந்த எண்ணெய் கிண்ணத்தை எடுத்துட்டு வா "என்ற வாரே அவன் தலையை உலுக்க

" மயிலு இன்னைக்கு ஒரு நாள் மட்டும்" என்றான் அழும் குரலில்..

அவன் நடிப்புக்கு ஏமாறும் ஆளா நம்ம மயிலு...

"போ அழுதுட்டே போய் எண்ணெய் கிண்ணத்த எடுத்துட்டு வா" என்ற மயிலை முறைத்தவாரே

"போ,மயிலு உன்னால தான் எல்லாரும் என்ன ஸ்கூல்ல கிண்டல் பண்றாங்க தெரியுமா? என்றான் மாறன்

"என்னனு கிண்டல் பண்றாங்க" மயிலு கேட்க

"எல்லாரும் எண்ணை சட்டி, ஆயில் டப்பானு கலாய்க்கிறாங்க மயிலு" என்றான்

"கூறு கெட்ட அந்தப் பரட்ட தலையன் பிரவீன் பய தானே, அவன் கூட சேராதனா நீயும் கேட்க மாட்ட, வீட்டுக்கு வராதடானா அவனும் கேட்கிறதில்லை இன்னைக்கு அவன் வரட்டும்" என்று பிரவீனை திட்டிக்கொண்டு இருந்தார் மயிலு...


பிரவீன் மாறனின் நண்பன் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர் இருவரும் ஒன்றாக தான் பள்ளிக்கு செல்வர். அவன் தான் மாறனுக்கு ஆயில் டப்பா என்ற பட்டப் பெயரை வைத்தான்.

மாறன் ஒன்றும் லேசுப்பட்ட ஆளில்லை பிரவீன் கண்ணாடி அணிந்திருப்பதால் அவனுக்கு"கண்ணாடி" என்று முதலில் பட்டப்பெயர் வைத்தான் , அதனால் தான் பிரவீன் அவனுக்கு பட்டப் பெயரை வைத்தான்.

இது தெரியாமல் "அந்த பய வரட்டும்" என்று மயிலு பிரவீனை அட்டாக் பண்ண எதிர் பார்த்துக்கொண்டிருந்தது...

இங்கு மாறனோ

"ஐயோ, பாவம் பிரவீனு மயில்கிட்ட என்ன ஆகப் போறானோ" என்று எண்ணியவாறு நிற்க..

"நீ போய் எடுத்துட்டு வரியா இல்ல உங்க அப்பன எழுப்பட்டா" என்ற மயிலின் சத்தத்தில் சுய நினைவிற்கு வந்த மாறன்

" ஐயோ எம்டன் கிட்ட அடி வாங்குறதுக்கு பேசாம எண்ணெயே வச்சுட்டே போயிடலாம்" என்று மனதில் நினைத்த வாறே எண்ணெய் கிண்ணத்தை எடுத்து வந்து மயிலிடம் வேண்டா வெறுப்பாக கொடுத்தான் மாறன்...

"சின்ன வயசு பசங்களுக்கே முடி கொட்டுது ஆனா உங்க அப்பனுக்கு பாத்தியா முடி எப்படி இருக்குன்னு 40 வயசு ஆக போது அவனுக்கு இன்னும் ஒரு முடி கூட நரைக்கல்ல அவனுக்கு தேங்காய் எண்ணெயோட விளக்கெண்ணெயும் சேர்த்து வைச்சு விடுவேன் அதான். இப்ப தெரியாதுடா உங்களுக்கு" என்றவாறே கொண்டு வந்து கொடுத்த எண்ணெய்யை மாறனின் தலையில் வலிய வலிய வைத்துவிடவும்...

"டேய் ஆயில்” என்றவாறே பிரவீன் வாசலில் வரவும் சரியாக இருந்தது

"போச்சு போ, பலியாடு தானா வந்து மாட்டிருச்சு" என்று மாறன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் போதே..

மயிலு, "பிரவீனை வா ராசா வா சாப்டியா கொஞ்சம் திண்ணையில வந்து உட்காரு, மாறன் இப்ப கிளம்பி வந்துடுவான்" என்று வான்டட் ஆக பேசிவிட்டு

"போய் கொஞ்சம் விபூதி வச்சுட்டு கிளம்பு மாறா"என்றார் மயிலு

மாறனும், தலையாட்டி விட்டு உள்ளே செல்ல..

பிரவினோ," மயிலிடம் சாப்பிட்டேன் ஆத்தா' என்றவாரே திண்ணையில் உட்கார்ந்து கொண்டே மனதிற்குள் என்னடா தாய்க்கிழவி பாசமா பேசுது, சரி இல்லையே! வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு சொல்ற ஆளாச்சே, எதுக்கும் உஷாரா இருக்கனும்" என்று நினைத்து கொண்டிருக்கையிலேயே எண்ணை கிண்ணத்தை பிரவீன் தலையில் கவிழ்த்திருந்தது மயிலு...

"சக்சஸ்" என்று மயிலு மனதிற்குள் குத்தாட்டம் போட்டவாரே

வெளியே"அச்சச்சோ பிரவீனு தெரியாம திண்டு மேல வைக்க வந்தனா கைத் தவறி உன் மேல கொட்டிருச்சு" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு மயிலு உடான்ஸ் விட..

வீட்டிற்குள் இருந்த மாறனுக்கு சத்தம் கேட்டு ஓடி வந்து பார்க்க...

பாவம் பிரவீன் நிலைமையோ, " ஐ எம் சிங் இந்த ஆயில், ஐ அம் ஸ்வைங் இந்த ஆயில்" என்பது போல் தலை மற்றும் கண்ணாடியிலும் எண்ணெய் வலிய அதிர்ச்சியாக மயிலை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..

அந்த நிலைமையில் பிரவீனை பார்த்த மாறனுக்கோ சிரிப்பு வர அடக்க முடியாமல் சிரித்து விட்டான்..

மாறன் சிரிப்பதை பார்த்து அவனை முறைத்துவிட்டு கோபத்தோடு, பிரவீன் ஸ்கூல் பேக்கை தூக்கிக்கொண்டு வெளியே சென்று விட

"இரு உன்னை சாயந்திரம் வந்து வச்சிக்கிறேன்" என்று மயிலை திட்டிவிட்டு

மாறன் "டேய் நில்லுடா கண்ணாடி நில்லு" என்று பிரவீன் பின்னாலேயே ஓடினான்..

"அட போடா" என்றவரே மயிலு தனது வேலையை பார்க்க சென்று விட்டார்.

"டேய் கண்ணாடி, நில்லுடா சாரிடா மயிலு பண்ணதுக்கு நான் என்னடா பண்றது. ப்ளீஸ் டா" என்ற வாரே
ஷர்டின் நுனியில் தன் கண்ணாடி லென்ஸ்சில் வழிந்த எண்ணையை துடைத்து வாரே நடந்து சென்று கொண்டிருந்த பிரவினை பின் தொடர்ந்து ஓடி வந்தான் மாறன்.

"டேய் கண்ணாடி இப்ப மட்டும் நீ நிக்கலனா நான் உன் கூட பேசவே மாட்டேன் டா" என்று மாறன் சொன்னவுடன்
அப்படியே நின்ற பிரவீன் திரும்பி பார்த்து அங்கும் இன்னும் தேடி கீழே இருந்த கல்லை எடுத்து மாறனின் மேல் எறிய "ஐயோ கொலைகாரா" என்ற வாரே மாறன் பதற
"இன்னும் எரியவே இல்ல டா எருமை என்னமா நடிக்கிற பின்ன ட்ரெய்னிங் யாரு தாய்க்கிழவி ஆச்சே"
என்றவரே பிரவீன் மீண்டும் நடக்க..

"அப்பாடா நீ அடிக்கலையா நண்பேண்டா" என்றவாறு ஓடி சென்று பிரவீன் தோளில் தாவ பார்க்க பிரவீன், " ஓடிரு கிட்ட வராத
நானே சளி புடிச்சிருச்சுன்னு எங்க அம்மா கிட்ட கெஞ்சி ஒரு வாரம் கழிச்சு இன்னைக்கு தான்டா தலை குளிச்சேன்" என்ற பிரவீனிடம்

"டேய் எண்ணெய் வெச்சா கண்ணுக்கு நல்லதாம் அப்புறம் வயசானாலும் முடி கொட்டாதாம்
நீ எண்ணெய் வைக்காம தான் இந்த வயசிலேயே கண்ணாடி போட்டுட்டேன்னு மயிலு சொல்லுச்சு டா" என்ற மாறனை முறைத்த பிரவீன்..

"ஆமா மயிலு தான் கண் டாக்டர் பாரு" என்றான் பிரவீன் நக்கலாக

இப்படியே சண்டை போட்டுக் கொண்டே இருவரும் பள்ளியை அடைந்தனர்.

வகுப்பறைக்குள் நுழைந்த இருவரையும் பார்த்த அவர்களது நண்பன் குமரன் " என்னடா இன்னைக்கு ரெண்டு பேரு எண்ணை அபிஷேகம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க" என்று சிரித்துக் கொண்டே கேட்க...

அதற்குப் பிரவீனோ, " ஆமாண்டா இது நம்ம மாறன் வீட்டுல ஸ்பெஷலா அவங்க ஆத்தா மயிலு தயாரிக்குற எண்ணெய் இதை இப்படி தலையில் வலிய வலிய வச்சுட்டா நம்மளும் மாறன் மாறி மாதிரி எல்லா பாடத்திலும் முதல் மார்க் எடுப்போம்டா" என்று சிரிக்காமல் சொல்ல

"அப்படியா" என்று குமரன், மாறனை பார்த்து கேட்க..

"இங்க சொல்லிட்டு இருக்கேன் அவன் கிட்ட என்னடா கேக்குற
உனக்கு வேணும்னா சொல்லு நாளைக்கு நான் வாங்கிட்டு வந்து தரேன், இவன் ஆத்தா மயிலு எனக்கு பிரண்ட் தான் டிஸ்கவுண்ட்ல தரும்" என்று பேசிக்கொண்டிருந்த
பிரவீனை, இடைமறித்து மாறனும் "நீ சும்மா இருடா அதெல்லாம் ஒன்னும் இல்ல குமரா நீ போ என்றவாறு பிரவீனிடம் நீ கணக்கு பாடத்துல எல்லாம் கணக்கையும் செஞ்சுட்டு வந்துட்டியா" என்று கேட்க

"அய்யய்யோ இல்லடா மாறா நோட்ட குடுடா கணக்கு வாத்தியார் வரதுக்குள்ள முடிக்கணும் இல்லனா வந்தா மண்டையிலே கொட்டுவாருடா" என்று அவசரமாக பிரவீன் மாறனின் கணக்கு நோட்டை வாங்கி கணக்குப் பாடத்தை காப்பியடிக்க தூங்கி விட்டான்.

"இப்படி பார்த்து காப்பி அடிக்கிறியே உனக்கு ஏதாவது புரியுதா? என்று பிரவீன் அமர்ந்த பெஞ்சில் அவனின் அருகே மாறனும் அமர "இல்லை" என்ற பிரவீன்,தன் தலையை இடமும் வலமுமாக ஆட்ட மாறனோ "நீ திருந்த மாட்ட" தன் தலையில் அடித்தவாறே அவனது அறிவியல் புத்தகத்தை எடுத்து வைத்து படிக்க துவங்கி விட்டான்.

மாலையில் பள்ளி முடிவடையும் வேளையில் அவர்களது வகுப்பு ஆசிரியர் வகுப்பை முடித்துவிட்டு நாளை பள்ளியில் விழா நடக்க இருப்பதால் காலையில் அனைவரும் சீக்கிரம் வருமாறு மாணவர்களிடம் அறிவித்துவிட்டு சென்றார் .

மாணவர்களுக்கும் என்ன விழா என்று ஏற்கனவே தெரியும் என்பதால் அவர்களுக்குள்ளே பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

மாறனோ "ப்ராவினிடம் நாளைக்கு காலைல 8 மணிக்கு ஸ்கூலுக்கு வரலாம் " என்க.

பிரவினோ மாறனிடம் "டேய் 7 வந்துடனும் " என்றான்.

"ஆமாண்டா அதுவும் கரெக்ட் தான் சீக்கிரமா வந்துடலாம்" என்றான் மாறன்.

பிரவீன் மாறனிடம் "டேய் ஆயிலு காலைல ஏழு மணிக்கு கரெக்ட்டா உங்க வீட்டு வாசல்ல நிப்பேன் வந்துரு" என்றான்

'ரொம்ப ஓவரா பண்ணாத டா "என்ற மாறனிடம்

பிரவீனோ "எதுக்கு உள்ள வந்து இன்னைக்கு மாதிரி எண்ணெய் அபிஷேகம் பண்ணவா" என்று பேசியவாறு வீட்டை அடைந்தனர்.

"ஆயிலு ஏழு மணி கரெக்ட்டா ரெடியா இரு" என்ற பிரவீனிடம் "சரிடா" என்று விட்டு அவரவர்களது வீட்டிற்கு சென்றனர்.

பள்ளியிலிருந்து மாறன் வருவதற்குள்ளே பழனி வேலைக்கு கிளம்பி விட்டான்.

மயிலும் நாளை சந்தைக்கு செல்ல வேண்டும் என்பதால் கீரைகளை பறித்து சுத்தம் செய்து தனித்தனியாக கட்டிக் கொண்டிருந்தார்.

தனது தாய் சொன்னது போல் குடிநீர் இரண்டு குடம் எடுத்து வைத்து விட்டு வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டு தன் பக்கத்து வீட்டு நண்பர்களுடன் விளையாடச் சென்று விட்டான் மாறன்.

வேலையை முடித்து விட்டு வந்த கல்பனா சிறிது நேரம் ஓய்விற்கும் பின் இரவு உணவு சமைப்பதற்காக சென்றுவிட்டார்.

சிறிது நேரம் விளையாடி விட்டு வந்த மாறனோ கல்பனாவிடம் "சாப்பாடு போடு கல்லு சீக்கிரமா தூங்கணும்" என்று அவசரப்பட

"ஏன் சாமி பசிக்குதா " என்று கல்பனா மாறனின் தலையை வருட

"இல்ல கல்லு நாளைக்கு நேரத்திலேயே ஸ்கூலுக்கு போனும்"
என்க

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட மயிலோ "என்னடி பையனுக்கு திடீர்னு நல்ல புத்தி எல்லாம் வந்துருச்சு" என்று கிண்டல் பண்ண

மயிலு "நீ சும்மா இரு நாளைக்கு ஸ்கூல்ல பங்க்ஷன் அதனால நேரத்துல போகணும் கல்லு நீ சாப்பாட்ட போடு" என்றவிட்டு கல்பனா போட்டு கொடுத்த சாப்பாட்டை அவசரமாக சாப்பிட்டுவிட்டு

தனது தாயிடமும் மயிலிடமும், "காலையில் நேரத்தில் எழுப்பி விடுமாறு நூறு தடவை சொல்லிவிட்டு"

பாயை விரித்து தலகாணியை எடுத்து போட்டு பெட்ஷீட்டைத் தலைவரை மூடி நாளை பள்ளியில் நடக்கும் விழானை எண்ணி பல பல கனவோடு இரவு 7 மணிக்கே படுத்து விட்டான் மாறன்

பாவம் பிரவீனின் வீட்டில் பிரவீன் நிலைமை????
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
மயிலு மாறனோட தான் மல்லுக்கட்டுதுன்னு பாத்தா பிரவீனையும் விடல 🤣🤣🤣

பாவம் பிரவீனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே 🧐🤔

ப்ளான் பண்ணின மாதிரி காலைல ஏழு மணிக்கு ஸ்கூலுக்கு போவாங்களா 🙄🤔

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️