• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிலுக்கு மிட்டாய்

MK17

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
8
3
43
Tamil nadu
மிட்டாய் 3

அதிகாலை மின்சாரம் தாக்கியது போல்"அய்யோ அம்மா" என்று சத்தம் போட்டவாறு எழுந்து அமர்ந்தான் மாறன்.

மின்சாரம் எல்லாம் தாக்கவில்லை
நம்ம மயிலு தான் தாக்கியிருந்தார்..

"இப்ப மட்டும் அம்மா,ஆத்தானு சொல்லு மத்த நேரம் மயிலு, கல்லு, லெல்லுனுட்டு பட்ட பேர்ல கூப்படறது" என்ற மயிலை
மாறன் முறைக்க

மயிலோ "துரை நேரத்துகே பள்ளிகூடத்துக்கு போகனும்னு சொன்ன மணி 8, இன்னும் தூங்கிட்டு இருக்கறனு எழுப்புனா என்னடா முறைக்கற" என்று அவரும் பதிலுக்கு முறைக்க

"இப்படிதா உங்க ஊருல எழுப்பி விடுவாங்களா என்று கேட்டவனோ
ஏதோ நியாபகம் வந்தவனாக "என்ன மணி 8 ஆகிருச்சா" என்று அடித்து பிடித்து எழுந்தவனோ "கல்லு, கல்லு" என்று கத்தி கொண்டே அவனின் அன்னையை அழைத்தபடி செல்ல

கல்பனாவோ "காலையில இவனுக்கு என்ன ஆச்சு" என்று யேசித்தபடி அப்போது தான் எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு பின் பக்கமிருந்து வீட்டின் நுழைந்தவரே, "நான் இங்கதான்டா இருக்கேன் , இப்ப எதுக்கு என் பேர ஏலம் போடற" என்று திட்ட...

தன் தாயின் முன் வந்து நின்றவானோ முறைத்து கொண்டே "உன்கிட்ட என்ன நேரத்தோட எழுப்ப சொன்னேன்ல, இப்ப பாரு மணி 8 ஆச்சு மயிலு வேற அடிச்சு எழுப்பது" என்றான் சினுங்களாக

கல்பனா சிரித்தவாரே "அடேய் மணி 5 தான் டா ஆகுது, டீ போட்டு வந்து எழுப்பலாம்னு பார்த்தேன்,
ஆனா உங்க ஆத்தா சந்தைக்கு போறதுக்குள்ள உன்ன எழுப்பி விட்டு போயிருக்கங்க போல" என்று உள்ளே செல்ல

"ஆமா நீ டீ போட்டு எழுப்புறதுக்குள்ள மயிலு என்னை அடி போட்டு எழுப்பி இருக்கு " என்றவனோ.

"என்ன மணி 5 தானா இந்ந மயில" என்று தேட

மயிலு எப்போதும் போல் மாறனிடன் வம்பு இழுத்துவிட்டு அன்று வியாழக்கிழமை என்பதால் கீரை, காய்களை விற்க சந்தைக்கு கிளம்பி இருந்தார்..

மாறனுக்கு டீ போட்டுக் கொடுத்துவிட்டு, சமையலை செய்து கொண்டிருந்தாள் கல்பனா..

மாறனோ கல்பனா குடுத்த டீயை குடித்து விட்டு மயிலு இல்லாதால் நாலு பாக்கேட் கிளினிக் ப்ளஸ் ஷாம்பு போட்டு தலை குளித்து, திருநீறு பட்டை இட்டு, 6 மணிக்கே கிளம்பி வாசலை பார்த்தவாறே பிரவீனுக்காக காத்து கொண்டு இருந்தான்..

ப்ரவீன் வீட்டில்

ப்ரவீனோ"இந்த வீட்டில கடைசி பையன பொறந்துட்டு நான் படுற பாடு இருக்கே" என்று மனதிற்குள் நினைத்து தலையில் அடித்து கொண்டே அவர்களின் பால் பண்ணையில் பால் வாங்க வருபவர்களுக்கு அவர்கள் கேட்ட அளவுக்கு பாலை அளந்து ஊற்றி கொண்டு இருந்தான்.


ப்ரவின் வீட்டில் பால் பண்ணை வைத்திருக்கிறார்கள்.அதனால் அவர்களுக்கு எப்போதும் ஏதும் வேலை இருந்து கொண்டே இருக்கும்.

இன்று அவனின் தந்தை ஈஸ்வரன் ஏதோ வேலையாக வெளிய சென்றதால் அவனின் தாய் மேகலையினால் பாலையும் கறந்து கொண்டு பால் வாங்க வருபவர்களுக்கு
பாலை கறந்த எண்ணை கையோடு பாலை அளந்து ஊற்ற முடியாது என்பதால் நன்றாக உறங்கி கொண்டு இருந்த ப்ராவினை நாலு தட்டு தட்டி பாலை ஊற்ற நிற்க வைத்திருந்தாள் மேகலை..

"இன்னைக்கு ஸ்கூல்கு நேரமே வரசெல்லிருக்காங்க,
உன் பெரிய பையனா எழுப்பி பால் ஊத்த சொன்னா மாடு பால் கறக்காதா" என்று தன் அன்னையிடம் கடுப்பில் கேட்க

"அவனே ஸ்கூல்ல இருந்து வரவே எட்டாகுதுடா, பாவம் பத்தாவது பரிட்சை முடியட்டும்டா" என்றவரிடம்

"பிரவீனோ அவன் எதுக்கு எட்டு மணிக்கு வரான்னு தெரிஞ்ச நீ பேச மாட்ட, நல்ல தேசை சுடுவ முதுகுல என்று மனதில் நினைத்து கொண்டே..

"அவன் தான முதல்ல பரிட்சைல பாஸ் ஆகறானானு பாக்கலாம்" என்றான்.

"அண்ணா தம்பி மாறியடா நடந்துகுரறீங்க ஏதோ பாங்காளி வீட்டு பசங்க போல எப்ப பாத்தாலும் அடிச்சுக்கிறீங்க " என்ற மேகலை

" சரி நீ போய் சுகன்யவ வர செல்லிட்டு நீ ஸ்கூல்க்கு கிளம்பி போடா ஏதாது சாப்பிடு போ பிரவீனு நைட்டும் சாப்பிடல" என்றார்

அவன் காதில் எங்கு அதுலாம் விழுந்தது மேகலை " நீ போ" என்றதும் "பிரவீன் எஸ்கேப்" என்று தப்பித்தோம் பிழைத்தோம் ஓடி வந்து,
வாசலில் கோலம் போட்டு கொண்டுயிருந்த அவனின் அக்கா சுகன்யவிடம் தாய் அவளை வர சொல்வதாக சொல்லிவிட்டு

உள்ளே வந்தவனே "நாங்க மட்டும் வேலை செய்யனும் நீ மட்டும் நல்லா தூங்கறய" என்று இன்னும் உறங்கி கொண்டு இருந்தவன் காலில் ஓங்கி வேண்டும் என்றே மிதித்து விட்டு ஒட

அவன் அண்ணன் நவினே "லுசு ஏன்டா கால மிதிச்சுட்டு போற"என்று கத்தா

"அவனே கண்ணாடி போடல அத பாக்கல நீ ஓரமா படுக்க வேண்டியது தானா நடுவுல பப்பரப்பான படுத்திட்டு " என்றபடி அங்கிருந்து ஓடியிருந்தான்..

நின்றால் அவன் அண்ணனிடம் யார் கொட்டு வாங்குவது என்று தான்.

" அடிங்க,நீ தனிய மாட்டமா போவ அப்ப இருக்கு" என்று அவனை திட்டியவாறே விட்ட தூக்கத்தை தொடர்ந்தான் நவின்.

பிரவீனும் குளித்து விட்டு டிப்டாப் ஆகா கிளம்பி ஏழு மணிக்கு மாறனின் வீட்டின் வாசலில் நின்று"ஆயில் டேய் ஆயில்" என்று அழைக்க

"எந்த பதிலும் வரவில்லை ப்ரவீனோ என்ன யாரும் இல்லையா? உள்ள போனா இந்ந தாய்கிழவி வேற இருக்குமே.
இவன் என்ன பண்ணிட்டு இருக்கான்?
ஒருவேளை நம்மல விட்டுட்டு போய்ட்டனோ" என்று சற்று உள்ளே வந்து எட்டி பார்க்க..

மாறனே திண்ணையில் அமர்ந்தவரே தூங்கி கொண்டு இருந்தான்..

"ஒரு டீ டிகஸன் இல்லாம தூங்கறத பாரு இவனை" என்று ஏதாவது அவனை அடிக்க கிடைக்குமா என்று கீழே தேட அவன் அருகில் எக்ஸல் வண்டி வந்து நின்றது திடிர் என்று தனக்கு பின்னால் வண்டி வரவும் பயந்து கால் இடறி விழ பார்க்க அதற்குள் ஒரு வழிய கரம் அவனை பிடித்து இருந்து

திரும்பி பார்த்த ப்ராவினுக்கோ தூக்கி வாரி போட்டது.

பழனி தான் நைட் ஷிப்ட் முடித்து வந்திருந்தான்.

"ஏன்டா உள்ள போகம வாசல்ல ஏத தேடிட்டு இருக்க?
மணி எழு தான ஆச்சு அதுக்குள்ள என்னடா ஸ்கூல்க்கு கிளம்பிட்ட? என்று கேட்டு கொண்டு இருக்க

மாறனே "இன்னைக்கு ஸ்கூல்ல பங்ஷன்பா அத எல்லாரையும் 7 மணிக்கு வர சொல்லி இருக்காங்க" என்று வந்தான்.

"நல்ல வேலை அவர் பையன அடிக்கிறதுக்கு முன்னால வந்தாரு இல்லைனா இன்னைக்கு என் நிலைமை எப்படியோ நான் காப்பாத்திட்ட முருகா" என்று நினைத்துக் கொண்டிருந்தவன்

அப்பொழுது தான் சுயநினைவுக்கு வந்த பிரவினோ "ஆமாங்க மாமா இன்னைக்கு ஸ்கூலுக்கு நேரத்திலேயே வர சொல்லி இருக்காங்க" என்றான்.


"சரி சரி,கிளம்பிட்டீங்களா இருங்க நானே கொண்டு வந்து விடுறேன்" என்ற பழனியிடம்

மாறனோ "இல்லப்பா நாங்க நடந்தே போய்கிறோம்" என்பதற்குள்

"பிரவீனோ சரிங்க மாமா" என்றான்.

பிரவீனை முறைத்துப் பார்த்த மாறனோ "அவர் இப்பதான்டா நைட் வேலை முடிச்சுட்டு வந்து இருக்காரு தூங்க வேணாமா" என்க

பிரவீனோ "அட ஆமால மாமா நீங்க போய் தூங்குங்க நாங்க நடந்து போயிக்குறோம்"என்றான்

"பரவால்ல வாங்க நான் கொண்டு வந்து விட்டுட்டு வரேன்" என்றவாரே பழனி தன் எக்ஸலை திருப்ப

மறுபடியும் மாறன் பிரவீன் முறைத்து விட்டு தன் தந்தையின் வண்டியில் ஏறிக்கொண்டான்.
"இவன் எதுக்கு அடிக்கடி நம்மள முறைக்கிறான் பயபுள்ள இன்னைக்கு தலை குளிச்சா அழகா இருக்கே ஆனா எதுக்கு இவ்வளவு பெரிய பட்டை " என்று நினைத்துக் கொண்டே அவனின் பின்னால் பிரவினும் ஏறிக்கொண்டான்

போகும் வழியில் ஒரு பேக்கரியில் நிறுத்திய பழனியே "ஏதாவது சாப்பிட வாங்கிக்கங்கடா" என்க

அதற்கும் மாறனும் "இல்லப்பா வேணாம்" என்று சொல்லும் முன்னரே

பிரவீன் "சரிங்க மாமா" என்று வண்டியில் இருந்து முதலாவதாக இறங்கினான்.

மாறனும் பிரவினை "இவன் ஒருத்தன்" என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே வண்டியிலிருந்து அவனும் இறங்கினான்.

பழனியோ வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்குள் இருவரையும் கூட்டி சென்று "என்ன வேணும்" என்க

இப்பொழுதும் "பிரவீன் பிஸ்கட் மட்டும் போதும் மாமா" என்க மாறன் வாயை திறக்கவில்லை..

"உனக்கு என்ன வேணும் டா" என்று பழனி மாறனை பார்த்து கேட்க

மாறனும் "எனக்கும் பிஸ்கட்டே போதும் பா"

ஆளுக்கு ஒரு பிஸ்கட்டை வாங்கி கொடுத்துவிட்டு, இருவரையும் பள்ளி வாசலில் இறக்கிவிட்டு சென்றுயிருந்தான் பழனி.

பழனி போனதும் மாறன் "டேய் கண்ணாடி நீ வாய வெச்சுட்டு சும்மாவே மாட்டியா டா"என்ற அவனை வசைபாட

"இப்ப என்னடா அவரா தானே கேட்டாரு ஸ்கூலுக்கு கொண்டு வந்து விடுறேன்னு ,அப்புறம் அவரா தான் ஏதாவது வேணுமான்னு பேக்கரியில் நின்னு கேட்டாரு நீ வாய தொறக்கல அதனால தான் நான் பதில் சொன்னேன் நான் பெரியவங்களை மதிக்கிறவன் டா "

"உங்க வீட்டு வாசலில் நின்னு அந்த கத்து கத்திட்டு நிக்குறேன் அப்பலா நல்லா தூங்கிட்டு,உங்க அப்பா வந்த உடனே நல்லவன் மாதிரி எந்திரிச்சு வந்துட்டா இல்ல அவ்வளவு பயம் " என்று சிரிக்க

"அவர பத்தி உனக்கு தெரியாதுடா" என்ற மாறனிடம்

"உங்க அப்பா எவ்வளவு நல்லவர் அவர பார்த்து பயப்படுறியேடா
நீ எங்க வீட்ல இருந்திருக்கனும் அப்ப தெரியும் உனக்கு உங்க வீட்டு அருமை" என்று பேசிக்கொண்டே பள்ளினுள் சென்றபடி

"ஆமா இன்னைக்கு என்ன தலைக்கு குளிச்சிட்டு வந்துருக்க கொஞ்சம் அழகா இருக்க ஆனா அது என்ன நடுவில் வெள்ளையாக ஒரு ரோடு போட்டுருக்க "என்று பிரவீன் மாறனை கலாய்க்க

"ம் இன்னிக்கு மயிலு சந்தைக்கு போயிடுச்சு" என்ற மாறனிடம்

" ஆமால இன்னைக்கு வியாழக்கிழமையா அந்த தாய்க்கிழவி இருக்கணும்னு நினைச்சேன் அதான்டா வாசல்ல நின்னன்னு கத்திட்டு இருந்தேன்...

நீ எந்திரிகலைன்னு உனக்கு அடிக்க கல் எல்லாம் தேடினேன் அதுக்குள்ள உன் எம்டன் வந்து உன்ன காப்பாத்திட்டாரு,

ஆனா தாய்க்கிழவி மட்டும் நான் இப்படி அழகா வந்து இருந்தத பார்த்து இருந்தா பொறாமை பட்டு இருக்கும்ல" என்ற பிரவீனிடம்.

மாறனோ " ஆமா ரொம்ப பொறாமை பட்டு எண்ண அபிஷேகம் பண்ணிவிட்டு இருக்கும் தப்பிச்சுட்டே" என்று சொல்ல

"அதுக்கு நா உன்ன விட அழகா இருக்கேன்னு பொறாமை டா" என்றான் பிரவீன்.

"அஹான் சொல்லிக்கிட்டாங்க நீ தான் அழகன்னு" என்று கலாய்த்த மாறனை பார்த்து

"உனக்கும் என் அழகு பார்த்து பொறாமைடா"என்று சிரித்த பிரவீனிடம்

மாறன் "ஊர் உலகத்துல எப்படியெல்லாம் பிரண்ட்ஸ் இருக்காங்க, எனக்கு எனக்கு மட்டும் இவன் வந்து அமைஞ்சிருக்கான் " என்றவாறு தலையில் அடித்துக் கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு செல்ல

திடீரென்று பிரவீன் "டேய் ஆயில் அங்க பாருடா அனுஷ்காஸ்" என்றான் வாயெல்லாம் பல்லாக..
 
  • Haha
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
199
43
Tirupur
🤣🤣மயிலுக்கு மாறன்கிட்ட வம்பிழுக்காம விடியாது போல🤣🤣

பிரவீன் மாறன் ஃப்ரென்ட்ஷிப் அவங்க மாத்தி கலாய்ச்சிகிறதும் சூப்பர் 🤣🤣🤣👌

அது யாரடா அனுஷ்காஸ் 🤩🤔

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ❤️
 
  • Love
Reactions: MK17

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
142
66
28
Tamilnadu
Maran mayil adithadi super ❤ maran praveen friendship nalla irruku
 
  • Love
Reactions: MK17