கோபுரக் கலசத்தில் அமர்ந்திருந்த மணிப்புறாக்கள் படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டு வான் நோக்கிப் பறக்கும் காட்சியை, அண்ணாந்து பார்த்துக் கமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்த வானதியை, வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் அருண்மொழிவர்மன்.
வானதிக்கு அவன் அருணாகிப் போக, அருண்மொழிவர்மனுக்கு அவள் வானம் ஆகிப் போனாள். இருவருமே இரண்டு கிழமைகளுக்குள் நல்ல நண்பர்களாகி விட்டிருந்தார்கள்.
வானதிக்கு இயற்கையழகுகளைப் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்ட அருண்மொழி, தனது கமராவைத் தூக்கி அவளிடம் கொடுத்து விட்டிருந்தான்.
கையில் கமரா கிடைத்த சந்தோஷத்தில் காணும் யாவற்றையும் படம் பிடித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள் வானதி. அவளது சந்தோஷத் துள்ளலைத் தான் இமை கொட்டாமல் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான் அருண்மொழிவர்மன்.
வானதியோடு அவன் பழகியது குறுகிய காலம் என்றாலும் கூட, அவளுடன் பழகிய ஒரு நாளிலேயே அவளை அருணுக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டிருந்தது.
தன் அன்னையும் வானதியும் சேர்ந்து கொண்டு அடிக்கும் அரட்டைகளை, எந்தத் தொந்தரவும் செய்யாமல் தள்ளியிருந்து பார்த்துக் கொண்டிருப்பான்.
நாள் செல்லச் செல்ல வானதியின் மீது அருணுக்கு அன்பும் மரியாதையும் அதிகரித்துக் கொண்டு போனதேயன்றி இம்மியளவு கூடக் குறையவே இல்லை.
இதோ இப்போது கூட நல்லூர்க் கோவிலின் வெளி வீதியில் தெரிந்த அத்தனை காட்சிகளையும் வானதி படம் பிடித்துக் கொண்டிருக்க, அவளுக்குப் பின்னாலேயே பேச்சுக் கொடுத்தபடி சுத்திக் கொண்டிருந்த அருண்மொழிக்கு நேரம் போவதே தெரியவில்லை.
"வானம் முடிஞ்சுதா.. இல்லாட்டிக்கு இன்னும் இருக்கா.."
"இருக்கு இருக்கு நிறைய இருக்கு.. இங்க பாருங்கோவன் விதம் விதமா பறவையள்.. எல்லாத்தையும் முடிஞ்ச மட்டும் தனித் தனியா எடுக்கோணும் எண்டு ஆசையாக் கிடக்குது.."
"சரி சரி எடுங்கோ எடுங்கோ.. எல்லாத்தையும் கழுவி எடுத்து ஆல்பமாக் கட்டுவம்.."
"அச்சோ அப்புடி எல்லாம் வேண்டாம்.. படம் மட்டும் எடுத்தாப் போதும்.."
என்று கொண்டே மேலே பறந்து பறந்து வந்தமர்ந்த பறவைகளை வளைத்து வளைத்துப் படம் பிடித்துக் கொண்டிருந்த வானதியை நோக்கி வந்தார் அந்தப் பெண்மணி.
"எடி பிள்ளை.. கொக்காவோட கதைக்கிறனியோ.."
"ஓம்.."
"ஏதும் விஷேசம் இருக்கோ.."
"என்ன விசேஷம் அக்கா.."
"அது தான்டி வயித்துல புழு பூச்சி ஏதாவது இருக்கோ.."
"வயித்துல புழு பூச்சியோ.. அக்கா நல்லாத்தான் இருக்கிறாள் அவளுக்கு ஒரு வியாதியும் இல்லை.."
"மண்டு மண்டு.. விளக்கங் கெட்ட மண்டு.."
"நான் ஒண்டும் மண்டு இல்லை.. நீங்கள் விளக்கமாக் கேக்காமல் என்னைய விளக்கம் கெட்டவள் எண்டு சொல்லுறியளே.."
"உன்ரை கொக்காக்கு பிள்ளை ஏதும் பிறக்கப் போகுதா.. வயித்தில பிள்ளை ஏதும் தங்கி இருக்குதா எண்டு கேக்க வந்தன்டீ.."
"இப்ப விளக்கம் இல்லாமல் கதைக்கிறது நீங்கள் தான்.. அவளுக்கு கலியாணம் முடிஞ்சு முழுசா மூண்டு கிழமை கூட ஆகேல்லை.. அதுக்குள்ள வயித்துக்குள்ள புள்ளை இருக்குதோ நொள்ளை இருக்குதோனு.. ஏன் தான் இப்புடி எல்லாம் கேக்குறீங்களோ.."
"நான் அப்புடி என்ன தப்பாக் கேட்டுப் போட்டன் எண்டு நீ இப்ப வெடிக்கிறாய்.."
"நீங்கள் கேட்டதே தப்பு.. பிறகு அப்புடி என்ன தப்பாக் கேட்டுப் போட்டன் எண்டு கேள்வி வேறை.."
"உனக்குச் சரியான வாய் தான் என்ன.."
"என்னங்கோ நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதில் சொன்னால் எனக்கு வாயோ.. அதுவும் கலியாணம் ஆகி ஒழுங்கா மூண்டு கிழமையே ஆகாத பிள்ளைக்கு பிள்ளை இல்லையோ தொல்லை இல்லையோண்டு.. உங்களுக்கு உது தான் வேலை.."
என்ற வானதிக்கு உண்மையிலும் கடுப்பாகிப் போய் விட்டது.
இந்தம்மா இப்படித் தான் பக்கத்தில் யார் எவர் நிற்கிறார்கள் என்பதைக் கூடப் பார்க்காமல், விடுப்புப் பிடுங்குவதற்கு என்றே வருவார். இதற்கு முன்னரும் இப்படித் தான் வானதியைக் கேள்வி கேட்கிறேன் பேர்வழி என்ற பெயரில் அடிக்கடி சங்கடத்துக்கு ஆளாக்கி இருக்கிறார்.
இன்றும் அது போல வந்து கேள்வி கேட்டதும், சந்தோஷமான மனநிலையில் இருந்த வானதிக்கு கடுப்பாகி விட்டது. அதனால் தான் அவள் அப்படிப் பதில் கொடுத்தாள்.
வானதியும் பக்கத்தில் நின்றிருந்த பெண்மணியும் பேசிக் கொள்வதையே பார்த்திருந்த அருண்மொழிக்கு, வானதியின் முகமே அங்கு நடந்த சம்பாஷணையில் அவளுக்கு லவலேசமும் விருப்பம் இல்லை என்பதனை அப்பட்டமாகக் காட்டிக் கொடுத்தது.
"என்ன வானம்.. என்னாச்சு.."
என்றபடி அவன் அருகில் வர
"இங்க பாருடி கூத்தை.. இது ஆருடி வெள்ளைக்காரத்துரையோட எல்லாம் ஊர் சுத்துறியோ.."
என்று மீண்டும் நொடித்தார் அந்தப் பெண்மணி.
அவ்வளவு தான் வானதிக்கு சுருசுருவெனக் கோபம் ஏறவே
"அப்ப நேத்து அந்த முக்கில இருக்கிற பெரிய ஐயாவோட நீங்கள் நீளமாக் கதை அளந்து கொண்டு நிண்டியளே அது என்ன சங்கதி.. அதுக்கு என்ன பேரு.."
என முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு வானதி கேட்க, அவளது கோபத்தைப் பார்த்த அருண்மொழிக்குச் சிரிப்புத் தான் வந்தது.
"வானம் வா நீ.. அந்த லேடிக்கு வேறை வேலை இல்லைப் பாரு.."
என்று மெல்ல அவளுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்துக் கொண்டு, அவளை இழுத்துக் கொண்டு தங்கள் வீடிருந்த பக்கம் நடக்கத் தொடங்கினான்.
இருந்த கோபத்தில் எகிறிக் கொண்டு நின்றவளோ, அவனது இழுப்பில் அவனோடு போக, அவர்களையே பார்த்திருந்த அந்தப் பெண்மணியோ
"விட்டால் இழுத்துப் போட்டு அடிச்சிருப்பாள் போலயே.. நல்ல காலம் அந்த வெள்ளைக்காரத்துரை தான் காப்பாத்திச்சுது.."
என்று கொண்டே அங்கிருந்து வேகமாகப் போய் விட்டார்.
"என்ன வானம் ரொம்பக் கோபம் வருது உனக்கு.."
"வராமல் பின்னே.. என்ரை வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பன் அந்த நேரத்தில இவா ஏதாச்சும் துரும்பையாச்சும் கிள்ளிப் போட்டாவோ இல்லை.. உவாந்தை மகள் என்னோட தான் படிச்சவள்.. அவள் ஆரையுமே மதிக்க மாட்டாள்.. அவ்வளவு ஏன் உவாவையே மதிக்க மாட்டாள்.. அதை எல்லாம் அவா திருத்த மாட்டா பிழையும் எண்டு சொல்ல மாட்டா.. ஆனாச் சிவனேண்டு நிண்டிருந்த என்னட்டைத் தேவையில்லாத கதை கதைச்சுக் கொண்டு நிக்கிறா.. எனக்கு வாய் எண்டால் அவாந்தை பிள்ளைக்குக் காவாயோ.."
"சரி கூல் கூல்.. அது தான் ரெண்டு பேச்சுப் பேசினியே.."
"இருந்தாலும் மனம் ஆற மாட்டன் எண்டுது.. இண்டு நேத்து இல்லை பாக்கிற நாள் எல்லாம் விடுப்புக் கதையள் தான்.. நானும் எவ்வளவு நாள் தான் நல்ல பிள்ளை மாதிரியே நடிக்கிறது.. எனக்கும் கோபம் வரும் தானே.. அது தான் இண்டைக்குச் செம கடுப்பு ஆயிட்டுது.. பாக்கிற ஆக்கள் அந்தம்மா சும்மா கேள்வி தானே கேட்டது அதுக்கேன் இந்தப் பிள்ளை இப்புடிச் சிடுசிடுக்குது எண்டு நினைப்பினம்.. ஆனா இதுக்கு முதல் எல்லாம் உவா கதைச்ச விதங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும்.."
"சரி சரி வா வா.. சுண்டல் வாங்கித் தாறன்.."
"சுண்டல் வாங்கித் தந்தாப் போலக் கோபம் போயிடுமோ.."
எனச் சொன்னவள், சற்றே தள்ளி நின்றிருந்த சுண்டல் வண்டிலைப் பார்த்ததும்
"கொஞ்சம் நல்ல மாங்காயா வெட்டிப் போடச் சொல்லோணும்.. அப்பத்தான் டேஸ்ட் வேறை லெவல்ல இருக்கும்.."
எனச் சட்டென்று சொல்லவும், பக்கென்று சிரித்து விட்டான் அருண்மொழி.
"உன்னைய என்னவோண்டு நினைச்சனே வானம்.. கோபக்காரி அப்புடி இப்புடி எண்டு.. ஒரு சுண்டலைப் பத்திச் சொன்னதும் உன்ரை கோபம் சுண்டல் சுண்டலாப் போச்சே.."
"உங்களை ஆரு தப்புத் தப்பா நினைக்கச் சொன்னது.. அந்தா அந்தச் சுண்டலுக்கு நான் அடிமை.. கோபமாவது மண்ணாங்கட்டியாவது.. அதை ஆறுதலாப் பட்டுக் கொள்ளுவம்.. முதல்ல சுண்டலை வாங்கிக் குடுங்கோ.."
"அப்போ அவ்வளவு தானா உன்னோட கோபம் எல்லாம்.."
"இப்போதைக்கு அவ்வளவு தான்.. ஆனாச் சுண்டல் வண்டியைக் கண்ணுல காட்டி இருக்காட்டிக்கு கொஞ்சம் உக்கிரமாகி அந்தம்மா சம்பல் ஆகியிருப்பா.."
"வானம்.. வட் டூ யூ மீன் பை சம்பல்.."
"சம்பல்.. அம்மியில போட்டு அரைப்பாங்களே ஒரு டிஷ் அது.."
"ஓ அதுவா.."
"ஓம் அது தான்.."
"அப்போ அந்த லேடியை அம்மில போட்டு அரைச்சிருப்பாய் எண்டு சொல்ல வாறியோ.."
"அப்கோசு.."
"வானம்.. ஆங்கிலத்தைக் கொல்லாதேடி.."
"உங்கப்பா மட்டும் தமிழைக் கொல்லோ கொல்லெண்டு கொல்லலாம்.. நாங்கள் மட்டும் அப்பப்போ கொல்லக் கூடாதோ.."
"டாடியோட கதைய விடு.. நான் கொல்லுறேனா பாரு.. நம்ம ஜெனரேசன்ல நீயும் நானும் தான் விசியமே.. நான் கொல்லலையே.."
"ம்ம்.. நீங்கள் கொல்லலை தான்.."
"அதென்ன கொல்லலை எண்டு ஒரு இழுவை.. ஸ்டோங்கா சொல்லு.."
"நானும் கொல்லாமல் கதைக்க முயற்சி செய்றேன்.."
"ரொம்ப சந்தோஷம்.. கிளாஸ் வேணும்னா நான் குடுக்கவா.."
"நீங்களா.."
"நான் தான்.. அதுக்கு ஏன் இப்புடி ஷாக் ஆகுறாய்.."
"நீங்கள் ரொம்ப ஸ்டைலா இங்கிலீஷ் கதைப்பீங்கள்.. உங்கடை உச்சரிப்பு எனக்கு விளங்காது.. பிறகு எப்புடி நான் உங்களிட்டை இங்கிலீஷ் படிக்க முடியும்.."
"அதெல்லாம் படிக்கலாம்.. இப்போ பாரு தமிழ்ல உனக்கு விளங்கிற மாதிரி தானே கதைக்கிறன்.. அதே மாதிரி உனக்கு விளங்குற மாதிரி இங்கிலீஷ்ல கதைச்சுச் சொல்லிக் குடுக்கிறன்.."
"என்ன நீங்கள்.. எனக்கு இங்கிலீஷ் கத்துக் குடுக்க இவ்வளவு மும்முரமா இருக்கிறியள்.. எனக்கு இங்கிலீஷும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்.."
"ஏன் இங்கிலீஷ் கத்துக்கிறதுல உனக்கு என்ன பிரச்சினை.. உனக்கு அது நல்ல ஹெல்பா இருக்கும்.."
"எங்கடை வீட்டுல மஞ்சுளாச் சித்தி ஏதாவது சொல்லுவா.. அதுவும் உங்களிட்டைப் படிக்கப் போறேன் எண்டு சொன்னால் அவ்வளவு தான்.. உதெல்லாம் சரிப்பட்டு வராது விடுங்கோ.."
"வானம்.. நீ தைரியமான பொண்ணு தானே.. அப்புறம் எப்புடி அவவுக்குப் பயப்படுறாய்.."
"என்ன செய்ய ஒண்ட வீடு வேணுமே.. பிறகு அவாவோட எதிர்த்துக் கதைச்சிட்டு நடு ரோட்ல தான் நிக்கோணும்.. என்னோட சேந்து ரோட்ல நிக்க ஆளும் இல்லை.. ஏற்கனவே அவா எப்படா வாய்ப்புக் கிடைக்கும் எப்போ உவளைத் துரத்தலாம் எண்டு கொண்டு நிக்கிறா.."
"அவ்வளவு கஷ்டப் பட்டுக் கொண்டு அங்க ஏன் நீ இருக்கோணும்.."
"அப்போ வேறை எங்க இருக்கிறது.."
"நீ எங்களோட வந்திடேன்.. உன்னைய நான் நல்லாப் பாத்துப்பேன்.."
"என்னது.."
"நிஜமாத் தான் வானம்.. நீ எங்களோட வந்திடு.. மம்மியும் ரொம்பச் சந்தோஷப் படுவாங்கள்.."
என்று சொன்ன அருண்மொழியின் முகத்தையே பார்த்திருந்த வானதிக்கு, லேசாகக் கண்கள் கலங்குவது போல இருக்கவே, சட்டென்று திரும்பி நின்று கொண்டு கோபுர உச்சியில் இருந்த பறவைகளை நோட்டம் விட்டாள்.
அந்த நொடியில் அவளுக்கு மனதில் சந்தோஷம் மட்டுமே வியாபித்திருந்தது. இது எப்படிப் பட்ட அன்பு, என்ன விதமான அன்பு, நேற்று வரை யார் எவர் என்றே தெரியாத ஒருவன் இன்று தனக்காய் பேசுவதெல்லாம் என்ன மாதிரியான அன்பு, இவை மட்டுமே வானதியின் அப்போதைய கேள்வி.