• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..13

Oct 31, 2021
297
11
63
29
Sri Lanka Jaffna
"வானம்.. நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லேல்லையே.."
என்று கொண்டு தன் அருகில் வந்தமர்ந்த அருணைப் பார்த்ததும் வானதிக்குச் சட்டென்று என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.

அவள் பக்கத்தில் அமர்ந்திருந்த அம்புஜத்தைப் பார்த்துச் சங்கடமாக நெளிய, வானதியையும் தன் மகனையும் பார்த்தவரோ ஒரு சிறு முறுவலோடு எழுந்து போய் விட்டார்.

அம்புஜம் அந்தப் பக்கம் போனதும், அருண்மொழியோடு சண்டைக்குப் போனாள் வானதி.

"என்ன நீங்கள்.."

"என்ன நான்.."

"அம்மா இருக்கிறா எண்டுற பயமே இல்லாமல் வந்து கேள்வி கேட்டுக் கொண்டு நிக்கிறியள்.."

"அம்மா இருக்கிறா எண்டு நான் ஏன் வானம் பயப்பிடோணும்.. அதோட இதுல பயப்பிட என்ன இருக்குது சொல்லு.."

"நான் என்னத்தைச் சொல்லுறது.."

"நீ தான் சொல்லோணும் வேறை யாரு சொல்லுறது.."

"நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் இங்க அப்புடி வந்து இருக்க ஏலாது.."

"அது தான் ஏன்.."

"அருண்.. ஒவ்வொரு இடத்துல ஒவ்வொரு மாதிரியான கலாச்சாரம்.. இங்க நான் உங்களோட வந்து இருந்தால் ஊர் தப்பாப் பேசும்.."

"நீ என்னோட வந்து இருக்கிறதுக்கும் ஊருக்கும் என்ன சம்மந்தம் சொல்லு.."

"அச்சோ உங்களுக்கு எப்புடிப் புரிய வைக்கிறதுனே எனக்குத் தெரியேல்லை.."

"எனக்கு நீ புரிய வைக்கத் தேவையில்லை.. நாம இதைப் பத்தி மம்மிக்கிட்டே பேசிப்போம்.."

"அச்சோ வேண்டாம்.."

"ஏன் இப்ப பதறுறாய்.."

"அவங்க என்ன நினைப்பாங்க.."

"அவங்க என்ன நினைப்பாங்க என்றதை அவங்க கிட்டே தானே கேட்டுத் தெரிஞ்சுக்கணும்.."

"உங்களுக்கு எல்லாமே விளையாட்டா இருக்குது அருண்.. எனக்கு எப்புடிச் சொல்லிப் புரிய வைக்கிறது எண்டே தெரியேல்லை.."

"அதே நிலைமை தான் வானம் எனக்கும்.. எனக்கு கூட உன்னைய எப்புடிச் சம்மதம் சொல்ல வைக்கிறதுனே தெரியேல்லை.."
என அருணும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டு இருக்கும் போதே, அருணின் தந்தை விக்டர் அங்கே தரிசனம் கொடுத்தார்.

"எனா சம்மாதம் மை சன்.."

"டாடீ.. நீங்களே சொல்லுங்கோ வானத்தை எங்கடை வீட்டை வந்து இரு எண்டு சொன்னால் அது தப்போ.."

"நோ நோ.. அத்து எப்பூடி தப்பாக்கும்.."

"ஆ இது கரெக்டு.. ஆனா இவ தான் ரொம்ப அலட்டிக்குறா.."

"வை வானம் அலாட்டிக்குறே.."

"நல்லா கேளுங்கோ டாடி.."
என அருண்மொழி எடுத்துக் கொடுக்க, வானதி வேகமாக உள்ளே போய் அம்புஜத்தை இழுக்காத குறையாக அழைத்து வந்தாள்.

"அம்மா இங்கினை வாங்கோ.. உங்கடை மகனுக்குக் கொஞ்சம் விளங்கப் படுத்துங்கோ.. எனக்கு விளக்கம் சொல்லிச் சொல்லி முழி பிதுங்கினது தான் மிச்சம்.."

"என்ன பிள்ளை என்ன சங்கதி.. என்ன விளங்கப் படுத்தோணும்.."

"எங்கடை இடத்துல.. ஒரு வயசு வந்த பொம்பிளைப் பிள்ளை.. ஒரு வயசு வந்த ஆம்பிளைப் பிள்ளை இருக்கிற வீட்டுல போய்த் தங்கி இருக்கலாமோ சொல்லுங்கோ.."

"ம்ம் ம்ம் இருக்க ஏலாது தான்.."

"அதை உவருக்குத் தெளிவாச் சொல்லுங்கோ.."

"ஏன் மொழி என்னவாம்.."

"என்னைய இங்கை உங்களோட வந்து இருக்கட்டுக்காமாம்.."

"ஓ அதுக்கென்ன.."

"ஓ அதுக்கென்னவோ.. நீங்களும் விளங்காமல் கதைக்காதேங்கோ அம்மா.."

"நான் விளங்கித் தான் கதைக்கிறன் பிள்ளை.. அவன் கதைச்சுக் கொண்டு இருந்ததை நானும் உள்ள கேட்டுக் கொண்டு தான் இருந்தனான்.. யோசிச்சும் பாத்தன்.. அதுல தப்பு இருக்கிறதா எனக்கும் தோணேல்லை.."

"என்னம்மா நீங்கள்.."

"இங்க பாரு பிள்ளை.. கதைக்கிறவை கதைச்சுக் கொண்டு தான் இருப்பினம்.. நாங்கள் தான் எங்கடை வாழ்க்கையைப் பாத்துக் கொண்டு போகோணும்.. நீ எங்களோட வந்தால் இன்னும் மேல படிக்கலாம் இல்லாட்டிக்கு உனக்குப் பிடிச்ச மாதிரி ஏதாவது சமையல் டான்ஸ் மியூசிக் அப்புடினு எடுத்துப் படிக்கலாம்.. உனக்குப் பிடிச்ச இடங்களைச் சுத்திப் பாக்கலாம்.."

"அம்மா.. எனக்குச் சத்தியமா என்ன சொல்லுறது எண்டே தெரியேல்லை.."

"நீ தனியா இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாரு பிள்ளை.. உன்னில உண்மையான அக்கறையோ பாசமோ இருக்கிறவை உன்னைக் கஷ்டப் பட விடவும் மாட்டினம்.. உன்ரை மனம் கோணுற மாதிரிக் கதைக்கவும் மாட்டினம்.. அதோட அந்த வீட்டுல நீ நிம்மதியாவே இருக்கிறாய் சொல்லு.."

"................"

"என்னடி பிள்ளை அமைதியாயிட்டாய்.."

"நீங்கள் இவ்வளவு நாளும் எங்கேம்மா இருந்தீங்கள்.. நான் ஏன் உங்களை வெள்ளெனச் சந்திக்கேல்லை.."

"அதான் இப்ப சந்திச்சிட்டமே.. எல்லாத்தையும் தூக்கிப் போட்டிட்டு எங்களோட வந்திரு.. அது உனக்கு உண்மையாவே சங்கடம் எண்டால் நான் உன்ரை உணர்வுகளை மதிப்பன்.. உன்னைய வெளியால வீடு எடுத்துத் தங்க வைக்கிறன்.. நீ அங்க நிம்மதியா சுதந்திரமா இருக்கலாம்.. எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு நல்ல முடிவாச் சொல்லு பிள்ளை.."
என்ற அம்புஜம்,
"மொழி.. அவள் நல்லா யோசிச்சு நல்ல முடிவா எடுப்பள்.. நீ அவளை டிஸ்டொப் செய்யாதே சரியோ.. டார்லிங் நீங்களும் தான் உங்கடை தலைகீழ் தமிழைக் கேட்டு அவள் தெறிச்சு ஓடாததே பெரிய விசியம்.. அதனால பேசாமலே இருங்கோ.."
என மகனுக்கும் கணவனுக்கும் சொல்லி விட்டுப் போய் விட, அருணும் கூட வானதிக்குத் தனிமை கொடுத்து விட்டுத் தந்தையை அழைத்துக் கொண்டு வெளியே போய் விட்டான்.

புத்தம் புது மலர்களை மலர விட்டுக் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த செவ்வந்திப் பூக்களுக்கு நடுவே கிடந்த கல்லாசனத்தில் அமர்ந்து வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வானதி, சரியாகப் பத்து நிமிடத்துக்குள் ஒரு முடிவான முடிவுக்கு வந்திருந்தாள்.

முடிவு எடுத்த பின்னர் கூடச் சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தவளுக்கு, அதன் பின்னர் தான் மனது லேசானதை உணரவே முடிந்தது. சரியாக அரை மணி நேரத்தில் அவளுக்கென ஏலக்காய் தட்டிப் போட்டுத் தயாரித்த பசும் பாலோடு வந்து சேர்ந்தார் அம்புஜம்.

"அம்மா.."

"ஓம் நான் தான்.."

"நான் உங்களோடயே வந்திடுறன்.."

"கொஞ்சம் சத்தமாத் தான் சொல்லேன்.. ஏதவோ சத்துக் கெட்டதுகள் போலச் சத்தமே வருகுதில்லை.."

"பசுப்பாலைக் குடுங்கோ குடிச்சு முடிக்கவும் சத்துக் கூடீடும் பிறகு சத்தமாச் சொல்லுறன்.."

"அது சரி இந்தா பிடி.. ஆனா ஒண்டடி பிள்ளை நீ எங்களோட வாரதில யாருக்குச் சந்தோஷமோ இல்லையோ எனக்கு அவ்வளவு சந்தோஷமாக் கிடக்குது தெரியுமோ.. மனசு விட்டே சொல்லுறன் எனக்கு உன்னைய அவ்வளவு பிடிக்கும்.."

"உண்மையாவோ.."

"நல்லூர் முருகன் மேல சத்தியமாடி பிள்ளை.. உன்னைய மாதிரி ஒரு பிள்ளையைச் சந்திப்பன் எண்டு நான் கனவுல கூட நினைக்கேல்லை.. கடவுள் பாரன் எங்களை எப்புடிக் கொண்டு வந்து இணைச்சு இருக்கிறார்.."

"ஏனம்மா ஏன் உங்களுக்கு என்னையப் பிடிக்குது.."

"ஒன்றா ரெண்டா விசியங்கள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா.."

"நீங்களாப் பாத்து ஒரு ரெண்டைச் சொல்லுங்கோவன்.."

"உன்ரை தன்னம்பிக்கை.. நீ மற்றவையோட பழகிற விதம்.. அந்தக் கலகலப்பான குணம் எண்டு சொல்லிக் கொண்டே போகலாம்.. நான் உன்னைய எங்கையாவது நல்ல பாதுகாப்பான இடத்துல தங்க வைக்கலாம் எண்டு தான் முதல்ல யோசிச்சனான்.. பிறகு மொழி கதைக்கேக்க தான் எனக்கும் உன்னை எங்களோடயே வைச்சிக்கிற எண்ணமே வந்தது.."

"ஓ.. ஆனாம்மா இது பின்னால பிரச்சினையா முடியாதா.."

"என்ன பிரச்சினை எண்டு நினைக்கிறாய்.."

"அது அவருக்கு நாளைக்குப் பின்ன கலியாணம் அது இதெண்டு வரும் போது.. என்னைய ஆர் எண்டு கேப்பினம் எல்லோ.."

"இதுக்கு நான் இப்ப டக்கெண்டு ஒரு பதில் சொல்லீடுவன்.. பிறகு நீ பயந்து போடுவாய் அதனால ஒரே ஒரு பதில் மட்டும் சொல்லிக் கொள்ளுறன்.. அதெல்லாம் நடக்கும் போது பாத்துக் கொள்ளுவம்.."

"நான் ஒண்டும் பயப்பிட மாட்டன் சொல்லுங்கோ.."

"இல்லைப் பிள்ளை இப்போதைக்கு அதைப் பத்திப் பேச வேண்டாமே.."

"சரி சரி விடுங்கோ.."
என இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போதே அருணும் விக்டரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.

"ரெண்டு பேரும் கதைச்சுச் சிரிக்கிறதைப் பாத்தால்.. ஏதவோ நல்ல முடிவு எடுக்கப் பட்டு விட்டது போல இருக்கிறதே.."

"ஆமாம் மகனே நல்ல முடிவு தான் எடுக்கப் பட்டுள்ளது.."

"எங்களிடமும் அதனைக் கூறினால் நாமும் சந்தோஷம் அடைந்து கொள்ளுவோம் அல்லவா.."

"அதாவது வானதி மகாராணி அவர்கள் பெரிய மனது செய்து எங்களுடன் எங்களின் இல்லத்தில் தங்குவதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்.."

"நிசமாவா.. ஐ ஜாலி ஜாலி.. நான் இதை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடப் போறேன்.. நீங்களும் வாறீங்களா டாடீ.."
என அருண் விக்டரைப் பிடித்திழுக்க
"வாவ் ஸ்வீட் விசியாம் சொல்லீ இருக்கூ.. நானு ரொம்போ மகீள்ச்சி.."
எனத் தன் பங்குக்குத் துள்ளிக் குதித்துக் கொண்டு மகனோடு இணைந்து கொண்டார் விக்டர்.

தன்னைச் சுற்றி நின்றிருந்த மூவரதும் அந்தக் கள்ளங்கபடம் இல்லாத அன்பைப் பார்த்ததும் வானதிக்கு மீண்டும் கண்கள் கலங்கத் தொடங்கவே, அவளுக்குத் தன் பாட்டில் கண்ணீர் வழியத் தொடங்கியது, அது அருணின் நீல விழிகளுக்குத் தப்பவில்லை.

"மம்மீ.."
என அவன் போட்ட சத்தத்தில் அம்புஜமும் வானதியும் திடுக்கிட்டுப் போய் அவனைப் பார்த்தார்கள்.

"என்ன மொழி என்னாச்சு.. அதுக்குள்ள என்ன நடந்தது.."

"அவ அழுறாம்மா.. எனக்கு அது பாக்கக் கோபமா வருது.."

"அது ஆனந்தக் கண்ணீர்டா.."

"எதுவா இருந்தாலும் எனக்குப் பிடிக்கேலை.."

"சரி சரி உடன டென்ஷன் ஆகாத.. நான் பாத்துக்குறேன்.."

"அழ வேண்டாம்னு சொல்லுங்கோ.."

"சரிடா சொல்லுறேன்.."
என்று கொண்டு அம்புஜம் வானதியின் கண்களைத் துடைத்து விட, அவளது கண்ணீரோ நான் அவ்வளவு எளிதில் நிற்பேனா என்பது போலப் பெருகிக் கொண்டே இருக்க, அருகில் கிடந்த பூச்சாடி ஒன்று வேகமாகப் போய் எதிரே இருந்த மதில் சுவரில் மோதிக் கொண்டு மல்லாக்க விழுந்து கிடந்தது. பக்கத்தில் கிடந்த பூச்சாடியை அருண்மொழி தான் தூக்கி வீசி இருந்தான்.

அதைச் சற்றும் எதிர்பாராத வானதி விக்கித்துப் போய் நிற்க, விக்டரோ மகனை இழுத்துக் கொண்டு உள்ளே போய் விட்டார்.

"என்னம்மா.. உவருக்கு உப்புடிக் கோபம் வருகுது.. அழுறது ஒரு குத்தமா.."

"அதை எப்புடிச் சொல்லுறது பிள்ளை.. மொழிக்கு லேசில கோபம் வராது.. வந்தால் அவ்வளவு தான் கிடக்கிற பொருள் எல்லாம் சும்மா சுழண்டு சுழண்டு பறக்கும்.."

"ஓ.. ஆனா இப்ப ஏன் கோபப் பட்டவர்.."

"அந்தச் சோகத்தை ஏன் கேக்கிறாய்.. அவனுக்கு ரொம்பப் பிடிச்ச யாருமே அழக்கூடாது.. அப்புடி அழுறதைக் கண்டுட்டானோ அவ்வளவு தான் ஒண்டு இருக்கிற பொருளாத் தூக்கி எறிவான் இல்லாட்டிக்குத் தன்னைக் காயப் படுத்துவான்.. அதனால முடிஞ்சவரை நான் அவனுக்கு முன்னால அழ மாட்டன்.."

"ஓ.."

"நீயும் அவனுக்கு ரொம்ப பிடிச்ச நபர்கள் லிஸ்ட்ல சேந்திட்டாய் பிள்ளை.. அதனால கொஞ்சம் அவனுக்கு முன்னால அழும் போது கவனம்.."

"உங்கடை மகன் நாளுக்கு நாள் டிசைன் டிசைனாத் தெரியுறாரு.."

"போகப் போகப் பாரன் இன்னும் டிசைனாத் தெரிவான்.."
எனச் சிரித்த அம்புஜம், வானதியை நிரந்தரமாகத் தங்களோடு அழைத்து வர வேண்டி, மஞ்சுளாவுடன் பேசுவதற்கு மஞ்சுளாவின் வீடு செல்ல ஆயத்தமானார்.