• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

(சீசன் 2) அசுரனின் குறிஞ்சி மலரே..14

Oct 31, 2021
295
160
63
29
Sri Lanka Jaffna
குளத்தங்கரையின் படிக்கட்டில் அமர்ந்திருந்து, குளத்தினுள் மலர்ந்திருந்த தாமரை மலர்களையும், தாமரை இலைகளில் கிடந்த நீர்த்துளிகளையும், இலைகளில் தாவிக் குதித்துக் கொண்டிருந்த தவளைகளையுமே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி.

அவளால் நடந்து முடிந்தவற்றை நம்பவே முடியவில்லை. அம்புஜம் அன்று மஞ்சுளா வீட்டிற்கு வந்து, வானதியைத் தங்களோடு அனுப்புமாறு கேட்ட போது அவர் ஆடிய கூத்தை அவளால் லேசில் மறக்கத் தான் முடியுமா.

எப்படியாவது வானதியை அம்புஜத்தோடு அனுப்பவே கூடாது என்கிற வஞ்சகமான எண்ணத்தில், அவர் ஊரையே கூட்டி விட்டார்.

ஒரு வயசுப் பெண்ணை எப்படி ஒரு வயசுப் பையன் இருக்கும் வீட்டில் தங்க அனுமதிக்க முடியும், எங்களுடைய குடும்பக் கௌரவம் என்னத்துக்கு ஆகிறது என அவர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய, அம்புஜம் சட்டென்று சுதாரித்துக் கொண்டு விட்டார்.

அதன் படி வானதியைத் தங்கள் வீட்டுக்கு வேலை செய்வதற்காகத் தான் அழைக்கிறோம் என்றும், அருண்மொழி தங்களோடு இருக்க மாட்டான் அவன் அநுராதபுரம் போய் விடுவான் என்றும் சொல்ல, அதற்குப் பலன் இருந்தது. அந்தம்மா பையன் இல்லாத நேரத்தில் ஒத்தாசைக்குத் தானே அழைக்கிறார் என்று சொல்லிக் கொண்டு ஊரார் விலகிப் போய் விட, மஞ்சுளாவால் அதன் பின்னர் எதையும் செய்ய முடியவில்லை.

அதோடு மஞ்சுளா பேசிய கேவலமான வார்த்தைகளில், அது நாள் வரை வானதிக்கு அவரிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பாசமும் பாயிசன் குடித்துக் கொண்டு இறந்து போய் விட, தன் பொருட்கள் அத்தனையையும் ஒன்றும் விடாமல் மூட்டை கட்டிக் கொண்டு அம்புஜத்தின் பின்னால் வந்து விட்டாள் வானதி.

அவள் அம்புஜத்தின் பின்னால் வந்து இதோ இரண்டு கிழமைகள் ஆகி விட்டிருந்தன. சந்தோஷம் என்றால் என்ன நிம்மதி என்றால் என்ன என்பதை அவள் அவரோடு இருந்த இந்த நாட்களில் தான் உணர்ந்தே இருக்கிறாள்.

குளத்து மலர்களையே பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தவள் அருகில் வந்து, சத்தம் செய்யாமல் அமர்ந்து கொண்டான் அருண்மொழி.

சில நிமிடங்கள் அப்படியே கரைய, வானதியிடம் எந்த அசைவுமே இல்லை. அவள் இப்போதைக்கு இந்த உலகத்துக்கு வரப் போவதில்லை என்பதை உணர்ந்தவன், மெல்ல அவளது கவனத்தைத் திருப்ப முயன்றான்.

"வானம் என்ன வானம் வென்று விடலாம்.."

"ம்ம் ம்ம்.."

"வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா.."

"ம்ம் ம்ம்.."

"வானம்பாடியின் வாழ்விலே சூர்யோதயம்.."

"ம்ம் ம்ம்.."

"என்னடி ம்ம் ம்ம்.. நான் ஒருத்தன் வந்து எவ்வளவு நேரம் ஆச்சுது.."

"எவ்வளவு நேரம் ஆச்சுது.."

"அரைமணி நேரம் வரும்.."

"பொய்.."

"என்ன பொய்.."

"வந்து அரைமணி நேரம் எண்டது பொய்.. அஞ்சு நிமிஷம் தான் ஆகுது.."

"அப்போ நான் வந்தது உனக்குத் தெரியுமா.."

"ம்ம் ம்ம்.."

"தெரிஞ்சுமோ அமைதியா இருந்தே.."

"ம்ம் ம்ம்.."

"ஏன் என்ன கோபம்.."

"மூண்டு நாளா எங்க போனீங்கள்.. என்னட்டை ஒரு வார்த்தை கூடச் சொல்லேல்லை.."

"அதுவா.. அம்மா தான் அடிக்கடி இப்போதைக்கு இங்க நிக்க வேண்டாம்னு சொன்னாங்க.."

"ஏனாம்.."

"அது உனக்கு நல்லது இல்லையாம்.."

"அதுக்காகச் சொல்லாமல் கொள்ளாமல் போவீங்களோ நீங்கள்.."

"அது.."

"என்ன அது.."

"சொன்னால் நீ போக விட்டிருக்க மாட்டாயேனு தான் சொல்லலை.."

"எப்போ இந்த வீட்டுல இருந்து அநுராதபுரம் போறது.. எனக்கு இங்கினை இருக்கவே பிடிக்கேல்லை.."

"இன்னும் மூண்டு கிழமை தான் போயிடுவம்.."

"நிசமாவா.."

"நிசமா.."

"சரி எனக்கு என்ன வாங்கி வந்தனீங்கள்.."

"உனக்குத் தான் றம்புட்டான் புடிக்குமே.. ஒரு மூட்டையே வாங்கி வந்திருக்கிறன் வைச்சு வைச்சுச் சாப்பிடு.."

"ஐ.. ஜாலீ.."
என்றவள் வேகமாக எழவும், படிக்கட்டின் ஓரம் இருந்த பாசி வழுக்கி அருண்மொழி மீதே விழுந்தாள் வானதி.

கீழே விழப் போகிறோம் என்கிற பயத்தில் அவள் அவனை இறுக்கப் பிடிக்க, அவனோ அவள் கீழே விழாமல் இருக்க வேண்டி, அவளது இடையை இறுக்கப் பற்றிக் கொள்ள வானதி லேசாகக் கூச்சத்தில் நெளிந்தாள்.

"ஹேய் நெளியாதடி.. கீழ விழுந்து வைக்கப் போறாய்.."
என்று கொண்டு அருண்மொழி அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டு எழுந்து நடக்க, இப்போது வானதிக்கு ஐயோடா என்று உண்மையிலே கூச்சமாகிப் போகவே, அவனிடம் இருந்து விலகிக் கீழே குதிக்க முயன்றாள்.

ஆனால் முயற்சி மட்டும் தான் செய்ய முடிந்ததே தவிர, அவனிடம் இருந்து இம்மியளவு கூட அவளால் அசைய முடியவில்லை.

"அருண்.. என்னைய கீழ விடுங்கோ.."
என்றவளது குரல் அவளுக்கே கேட்கவில்லை.

அவனோ எந்த விதமான அலட்டலும் இல்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு நடக்கவே தொடங்கி விட, அவன் கன்னம் பற்றித் தன் பக்கம் திருப்பினாள் அவள்.

"என்னடி.."

"எங்க கொண்டு போறீங்கள்.."

"வீட்டை தான்.."

"ஐயோ கீழ இறக்கி விடுங்கோ.."

"ஏன்.."

"ஏனோ ஆரும் பாத்தால் என்ன நினைப்பினம்.."

"என்ன நினைப்பினம்.."

"ஐயோ உங்களோட மனுஷன் கதைப்பானா.."

"மனுஷன் கதைக்க வேண்டாம் நீ கதை.."

"இப்ப இறக்கி விடப் போறீங்களோ இல்லையோ.."

"முடியாது.."

"முடியாதா.."

"யெஸ்"

"கத்துவன்.."

"கத்து.."
என அவன் அசால்ட்டாக சொல்லவும், அவன் முகத்தைப் பார்த்தாள் வானதி. அவன் முகத்தில் தெரிந்த குறும்பில் அவளுக்குக் கடுப்பு வருவதற்குப் பதிலாக ஏனோ சிரிப்புத் தான் வந்தது.

அதோடு அவனிடம் கெஞ்சினால் மட்டுமே காரியம் ஆகும் என்பதனை இத்தனை நாட்களில் கண்டு கொண்டவள் சட்டென்று அவன் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு
"அச்சாப் பிள்ளை எல்லே.. கீழ இறக்கி விடுங்கோவன்.. இடுப்பு லேசா நோகுது இறங்கி நடந்தால் தான் சரியா இருக்கும்.."
எனக் கெஞ்சலாகக் கேட்க, அதற்குப் பலன் இருந்தது.

ஒரு நொடி அவள் முகம் பார்த்தவன், அருகில் இருந்த ஆலமரத்து மேடையில் அவளை உட்கார வைத்தான்.

அப்பாடா என அதில் அமர்ந்து கொண்டவளது, நாடியைப் பிடித்துத் தன் பக்கம் திருப்பியவன்
"வானம்.. நான் உன்னட்டை ஒரு விசியம் சொல்லோணும்.. உனக்கு எப்ப நேரம் கிடைக்கும்னு சொல்லு.. ரொம்ப முக்கியமான விசியம்.."
என்று சொல்ல, அன்றைய அவனது வித்தியாசமான அணுகுமுறையில் ஏற்கனவே ஒரு வகையாக உணர்ந்து கொண்டு இருந்தவள்
"இப்பவே சொல்லுங்கோவன்.."
என்று எழும்பாத குரலில் சொன்னாள்.

"நோ.. இப்போ வேண்டாம்.. நாளைக்கு என் கூட நயினாதீவு கோவிலுக்கு வா.. அப்போ பேசிக்கலாம்.."

"நாளைக்கா.."

"ம்ம் நாளைக்குத் தான்.. ஏன் வர மாட்டியோ.."

"இல்லை வருவன்.."

"பிறகென்ன.. நாளைக்குக் கோவில்ல கதைப்பம்.."

"அம்மாவும் வருவாவோ.."

"இல்லை.."

"அப்போ.."

"என்ன அப்போ.."

"அம்மா வராட்டிக்கு அப்பா வாராரோ.."

"மம்மியும் வரேல்லை டாடியும் வரேல்லை.. நானும் நீயும் மட்டும் தான்.."

"தனியாவோ.."

"இதுல என்ன தனி.. அது தான் நான் வாரனே.."

"ம்ம்.."

"என்ன கதைக்கிற விதத்தைப் பாத்தால் என்னோட தனியா வர விருப்பம் இல்லைப் போல.."

"அச்சோ அப்புடி எல்லாம் இல்லை.."

"அப்போ வா.."

"ம்ம் வாரன்.."

"விடிய சீக்கிரமாவே போலாம்.."

"ம்ம்.."

"சரி என்ன ரொம்ப நேரமா யோசிச்சுக் கொண்டு இருந்த மாதிரி இருந்துச்சே.. என்ன விசியம்.."

"அது ஒண்டும் இல்லையே.."

"இல்லையே ஏதவோ இருக்கிற மாதிரி இருக்கே.. யாரும் ஏதும் சொன்னாங்களா.."

"உண்மையாவே ஒண்டும் இல்லை..".

"ஒண்டும் இல்லாமல் இருந்தால் சரி தான்.."

"நீங்கள் எப்போ இனி போறீங்கள்.."

"அது நீ சொல்லப் போற பதில்ல தான் இருக்கு.."

"என்னது புரியேல்லை.."

"ஒரு ரெண்டு மூணு நாளாகும்.."

"ஓ சரி சரி.."

"சரி வீட்டுக்கு போகலாம்.. அம்மாவோட சொந்தக்காரர் நாளைக்கு இரவு வரப் போகினம் எண்டு சொல்லிச்சினம்.. எப்ப வருகினமோ தெரியேல்லை.."

"எங்க இருந்து வரப் போகினம்.."

"அவை அநுராதபுரம் தான்.."

"நீங்கள் கட்டிக் கொண்டு இருக்கிற வீட்டுக்குப் பக்கமோ.."

"அந்த வீட்டுல இருந்து ஒரு ஒருமணி நேரப் பயணம் அவங்க வீட்டுக்குப் போக.."

"ஓ.."

"ம்ம்.. சரி வா.."

"அவங்க இங்க வந்து என்னைப் பாத்திட்டு ஒண்டும் சொல்ல மாட்டினமோ.."

"அவை என்ன சொல்லப் போகினம்.. வந்தவை விருந்து சாப்பிட்டுட்டு போக வேண்டியது தானே.. பிறகு உன்னைப் பாத்து அவை என்ன சொல்லுறது.."

"அது.."

"இங்க பாரு வானம்.. முதல்ல அடுத்தவை என்ன சொல்லுவினம் ஏது சொல்லுவினம் எண்டு யோசிக்கிறதை முதல்ல நிப்பாட்டு.. அது நமக்குத் தேவையும் இல்லை.."

"முயற்சி செய்றன்.."

"செய்றன் இல்லை செய்தே ஆகோணும்.."

"ம்ம் சரி.."

"சரி வா போவம்.. மம்மி புதுசா ஒரு டிஷ் செய்து கொண்டு இருந்தாங்க.. வா போய் எப்புடி டேஸ்ட்னு பாப்போம்.."

"என்ன டிஷ்.. இனிப்பா காரமா.."

"இனிப்புனு தான் நினைக்கிறன்.."

"இனிப்போ.."

"ஏன் வேண்டாமோ.."

"அப்புடி இல்லை.. ஒரே இனிப்பு இனிப்பாச் சாப்பிட்டு அலுப்பாப் போச்சு.. ஏதாவது காரமாச் சாப்பிடோணும் மாதிரிக் கிடக்குது.."

"காரம் தானே.. ஏதவோ காரச் சுண்டல்னும் செய்றாங்க.. வா போய்ப் பார்ப்போம்.."
என்று கொண்டு வானதியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்க, இப்படிக் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பதை யாரும் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று கேட்க நினைத்தவள், அவன் குணம் அறிந்து கப்சிப்பென்று வாயைப் பொத்திக் கொண்டு நடக்கத் தொடங்கினாள்.

அங்கே வீட்டினுள் நுழைந்து சமையல் கட்டினுள் நுழையும் வரை கூட, அவளது கையை அவன் விடவேயில்லை.

"அம்மா என்ன ஸ்பெஷல்.. வாசம் வாசல் வரை தூக்கியடிக்குது.."

"கௌபி தாளிக்கிறன்.. பிள்ளைக்கு நல்ல விருப்பம்.. உனக்கு கௌபி துவையல்.."

"எப்புடி மம்மி ஒரே நேரத்துல நிறைய சமையல் செய்ய முடியுது.. அலுப்பா இல்லையா.."

"உங்களுக்காக விதம் விதமாச் சமையல் செய்றது தான் எனக்கு சந்தோஷமே.. பிறகு அது எப்புடி அலுப்பா இருக்கும்.."

"அம்மாக்கள் எண்டாலே அப்புடித் தான் போலயே.."

"இல்லை மொழி.. அன்பு பாசம் இருந்தாலே யார் வேணாலும் யாருக்கு வேணாலும் அலுப்பு பாக்காமல் சமைக்கலாம்.. அதுக்கு அம்மாவா இருக்கோணும் எண்டில்லை.."

"இருந்தாலும் மற்றவையை விடவும் அம்மாக்கள் மட்டும் ஸ்பெஷல்.."

"என்னவோ போ.. சீக்கிரமா முகம் கழுவீட்டு சாப்பிட வாங்கோ.. நானும் டார்லிங்கும் ஷாப்பிங் போகப் போறோம்.."

"அப்போ நாங்க.."

"நீங்கள் தனியாப் போக வேண்டியது தானே.. நான் இண்டைக்கு என்ரை டார்லிங்கோட ஊர் சுத்தப் போறன்.. நீங்கள் ரெண்டு பேரும் உங்கடை பாட்டுல சுத்துங்கோ.."

"ஓஹோ.."

"பாவம் என்ரை டார்லிங்.. வந்ததுக்கு அந்த மனுஷனை ஒரு இடமும் கூட்டிக் கொண்டு போகேல்லை.."
என்று சொன்ன அம்புஜத்தின் தோளை அணைத்து
"தாராளமாக உங்களின் டார்லிங்கோட நீங்கள் ஊர் சுத்தலாம்.. நாங்கள் தொந்தரவே செய்ய மாட்டோம்.."
என்று சொன்ன வானதியின் மூக்கைச் செல்லமாகப் பிடித்து ஆட்டி விட்டு, அம்புஜம் போய் விட, வானதியையே பார்த்திருந்தான் அருண்மொழி.

"என்ன இவரோட பார்வையே கொஞ்ச நாளாச் சரியில்லையே.. என்னவா இருக்கும்.."
எனத் தலையைச் சொறிந்தபடி வானதி மெல்ல அங்கிருந்து நழுவினாள்.