வானதிக்கு நிஜமாகவே தலை வலிப்பதைப் போல இருந்தது, தான் இந்த வீட்டை விட்டு அடியோடு போனாலன்றி அருண் தன் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பில்லை என்றே அவள் நினைத்தாள்.
எப்படி இங்கே இருந்து வெளியேறுவது எனக் கடந்த இரண்டு தினங்களாகத் தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தவளுக்கு, எந்த ஐடியாவுமே வருவதாகவே தெரியவில்லை.
சொந்த ஊரைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியேறும் ஐடியாவைத் தூக்கிப் போட்டவள், இப்போது படு தீவிரமாக வேறொரு ஐடியாவை யோசனை செய்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் தான் அவளுக்கு அந்த ஐடியாவே வந்தது.
இந்த வீட்டை விட்டு வெளியே போனால் நிச்சயம் தனக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அவளுக்கு நன்கு தெரியும், அதோடு தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என அவள் வெளியேறிப் போயிருப்பாள் தான், ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகப் போய்விடுமே என்றும் யோசனை செய்தாள்.
இதற்கு நடுவில் அருண்மொழியைத் திருமணத்திற்கும் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ன செய்யலாம் எனும் போது தான், எப்போதும் போல அவளது மூளை கோணலாக வேலை செய்தது.
தன் மூளையில் தோன்றிய கோணல் வேலையை அமுல் படுத்த வேண்டி, அவள் அருணைத் தேடிக் கொண்டு போனாள்.
அவள் அறையினுள் நுழைந்தது கூடத் தெரியாமல் தன்னை மறந்து இருந்தவனைப் பார்க்கப் பார்க்க வானதிக்கு கடுப்பு கடுப்பாக வந்தது. அதென்ன என்னைக் கூடக் கவனிக்காமல் அப்படி ஒரு இருக்கை அவருக்கு, என மனதினுள் குமைந்தபடி வேகமாக வந்து அவன் முன்னால் தொம்மென நின்றாள்.
அவன் தான் தன் பிஸிநெஸ் வேலைகள் எல்லாவற்றையும் ஜனகனின் பொறுப்பில் தள்ளி விட்டு, தன் குழந்தைகளோடு ஐக்கியமாகி விட்டிருந்தானே. அவன் தன் காதலைப் பற்றியோ காதலியைப் பற்றியே நினைப்பதற்கு நேரம் இல்லை என்று சொல்ல முடியாது, அவள் மீது எப்போதும் அவனது ஒரு கண் இருந்து கொண்டே தான் இருந்தது, ஆனாலும் பொறுப்பாக அப்பனாக தன் ஆசைகளை மூட்டை கட்டி வைத்திருந்தான்.
குழந்தைகளோடு இணைந்து பாம்பும் ஏணியும் விளையாடிக் கொண்டிருந்தவன், தொம்மென்று வந்து நின்றவளை உடனே நிமிர்ந்து பார்க்கவில்லை. அத்தனை சுவாரஸ்யமாக குழந்தைகளின் ஒவ்வொரு அசைவையும் அவன் இரசிப்பதில் மூழ்கி விட்டிருந்தான்.
கால் கடுக்க நின்றிருந்தவளுக்கு, அவன் தன்னைக் கவனிக்கவில்லை என்றால் தனக்கு ஏன் கோபம் வர வேண்டும் என்ற கேள்வி ஏனோ அப்போது வரவில்லை.
"என்னடீ நின்னிட்டே தூக்கமோ.."
"அப்போ உங்களுக்கு நான் வந்தது தெரியும் அப்புடி தானே.."
"வந்தது தெரியும்.. ரொம்ப நேரமா நின்னுட்டே இருக்கியே கால் வலிக்கலை.."
"ரொம்ப தான் கரிசனம்.."
"இல்லையா பின்னே.. உன் காலில் வலி வந்தால் கண்ணம்மா என் கண்ணில் உதிரம் கொட்டுதடீ.."
"கொட்டும் கொட்டும்.. உங்கடை கண்ணில தானே நல்லாக் கொட்டும்.."
"ரொம்ப சூடா இருக்கிற மாதிரி இருக்கே.. இப்புடி உக்காரு இந்த விளையாட்டு நல்லா இருக்கு.."
"எனக்கு தலை வலிக்குது.."
"தைலம் ஏதும் தேய்ச்சியோ.."
"தேய்ச்சாலும் போக மாட்டேங்குது.."
"கண்ணா.. அம்மாக்கு தலைவலியாமே.. உங்கம்மா தலை வலிச்சா என்னடா செய்வா.."
என ராஜேந்திரனைப் பார்த்து அருண்மொழி கேட்க, வானதி வேகமாக வெளியே செல்லத் திரும்பினாள்.
அதே வேகத்தில் எழுந்து கொண்டவன், அவளது கையைப் பிடித்தபடி
"உனக்கு ரொம்பத்தான்டி கோபம் வருது.."
என்று கொண்டே அவளது நெற்றியில் தன் நெற்றியால் முட்ட, எப்போதும் போல அவனைத் தள்ளி விட்டு வெளியே ஓடி வந்தாள் வானதி.
"ஐயோ கடவுளே.. நான் என்ன நினைச்சுட்டு உள்ள போறன்.. அப்புறம் என்ன நினைச்சுட்டு வெளிய வாறேன்.. தலையைப் பிய்ச்சுட்டு பைத்தியக்காரி ஆகாமல் இருந்தால் சரி தான்.."
என முணுமுணுத்தவள் அருகே
"நான் தான்டி பைத்தியக்காரன் மாதிரி உம்பின்னாடி சுத்துறேன்.. உனக்கென்ன வந்தது.."
என்று கொண்டு வந்த அருண்மொழி, யாழ்மொழியைத் தூக்கி அவளது கையில் கொடுத்து விட்டு, ராஜேந்திரனைத் தூக்கிக் கொண்டு வெளியே போனான்.
அவன் போன திக்கையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளுக்கு, வெளியே இருந்து
"எப்பவுமே நின்னிட்டு தூங்குறதே உனக்கு வேலையாப் போச்சு வானம்.. சீக்கிரமா வா தலைவலினு சொன்னேல்லே.. காத்தாட நடந்திட்டு வரலாம்.."
என அருண்மொழியின் குரல் கேட்டது.
அவளுக்குமே மூச்சு முட்டுவது போல இருக்கவே, கொஞ்ச நேரம் எங்காவது நடந்து விட்டு வந்தால் நன்றாக இருக்கும் போல தோன்ற, குழந்தையைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
அங்கே அவளுக்கு முன்பாக தந்தையும் மகனும், மூன்று திபெத்திய நாய்கள் புடைசூழ வெளியே உலாத்தச் செல்ல தயாராக நின்றிருந்தார்கள்.
நாய்களைப் பார்த்ததுமே பயத்தில் கால்கள் பின்னிக் கொள்ள அப்படியே உறைந்து போய் நின்றவள் அருகே, ராஜேந்திரன் ஓடி வந்தான்.
"அம்மாச்சி.. வாங்கோ போதாம்.."
என்றபடி தாயின் சேலைத் தலைப்பை பிடித்து அவன் இழுக்க, அவளோ அருண்மொழியைப் பார்த்து முறைத்தாள்.
அவன் எங்கே இவளின் முறைப்பைப் பார்த்தான், அவன் தான் தன் செல்லப் பிராணிகளோடு செல்லங் கொஞ்சிக் கொண்டு இருந்தானே, அது தான் அவளுக்கு மேலும் மேலும் கடுப்பைக் கிளப்பிக் கொண்டிருந்தது.
நாய்கள் மூன்றையும் தனித்தனியாகப் பிணைத்திருந்த சங்கிலிகளை ஒற்றைக் கையில் சேர்த்துப் பிடித்த அருண்மொழி, வானதியின் பக்கத்தில் வந்து யாழ்மொழியைத் தன்னோடு அணைத்துத் தூக்கிக் கொண்டான்.
குழந்தையும் தந்தையோடு தாவிப் பாய்ந்து கழுத்தை இறுகக் கட்டிக் கொள்ள, அவனுக்கு உடம்பெல்லாம் வழமை போல பூரித்துப் போனது. மெல்லிய புன்னகையோடு,
ராஜேந்திரனைப் பார்த்து
"கண்ணா.. அம்மாவைக் கூட்டீட்டு வாங்க.."
என்று கொண்டே அருண்மொழி முன்னால் நடக்க, தன் கையையும் சேலையையும் பிடித்து இழுத்த மகனை அதட்ட முடியாமல், நடக்க சிரமப்பட்ட கால்களை வலுக்கட்டாயமாக எட்டிப் போட்டு, பலியாடு போல அவர்களுக்குப் பின்னால் போனாள் வானதி.
வீட்டின் அந்த பிரமாண்டமான கதவை தாண்டி இடது பக்கம் சிறிது தூரம் சென்று, பின்னர் வலது பக்கமாக திரும்பி கிழக்குப் பக்கத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான் அருண்மொழி.
அவன் போன பாதை ஒரு ஒற்றையடி மண்பாதை, பாதையின் இரண்டு பக்கங்களுமே அடர்ந்த மரங்களோடு பற்றைகளும் செடிகளும் கொடிகளுமே படர்ந்து கிடந்தன.
"என்னடா இது காத்தாட நடக்க ஆசைப் பட்டு வந்தது ஒரு குத்தமா.. இதென்ன ஒரே பத்தைக் காடாக் கிடக்கு.. சுத்தமாக் காத்தே வரலியே.."
என முணுமுணுத்துக் கொண்டே வந்தவள், சட்டென்று நின்ற அருண்மொழியோடு மோதிக் கொண்டு நின்றாள்.
"ஹேய் வானம் பார்த்து.."
"பாத்திருந்தா நான் ஏன் மோதப் போறேன்.."
"அதுவும் சரி தான்.. இடம் எப்புடி இருக்குனு பார்த்திட்டு அசந்து போய் நிற்கப் போறாய்.."
"எது இந்த இடத்தைப் பாத்திட்டு நான் அசந்து போய் நிக்கப் போறன்.. காத்தே வர மாட்டேங்குது சுத்தி நிக்கிற மரங்கள்ல ஏறி உக்காந்து நாமளாப் பிடிச்சு ஆட்டினாத் தான் மரம் அசைஞ்சு கொஞ்சனூண்டு காத்து வரும் போலக் கிடக்கு.."
"இந்த இடம் இல்லடீ.. இதுக்குள்ள இருக்கிற இடம்.."
"இதுக்குள்ள வேறை ஒரு இடம் இருக்கா.. ஏதாவது இலந்தை மரத்துக்கு கீழ இல்லாட்டிக்கு ஈச்சம் மரத்துக்கு கீழ கூட்டிக் கொண்டு போய் மரத்தை சுத்திக் காட்டப் போறீங்களோ.."
என்றவளைப் பார்த்து லேசாகச் சிரித்தவனின் சிரிப்பில் மனம் லேசாகக் கிறங்குவது போல இருக்கவே, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்
"பெரிய புன்னகை மன்னன் அப்புடீனு நினைப்பு.."
என முணுமுணுத்துக் கொண்டே முகத்தைத் திருப்பிக் கொண்டாள் வானதி.
அவளது முணுமுணுப்பு அவனது காதில் தெள்ளத் தெளிவாக விழவே, அவனது புன்னகை இன்னும் விரிந்து கொள்ள, பாதையின் முடிவில் ஒரு மூலையாக இருந்த அந்தப் பெரிய கிளையை மெல்ல விலக்கியவன், அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவன் அறியாமல் அவன் செய்யும் ஒவ்வொரு செயலையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தவளோ, அவன் விலக்கிய கிளை வழியே உள்ளே தெரிந்த காட்சியில் லேசாகப் பிரமித்துப் போனாள்.
அவன் உள்ளே வா என்பது போல சைகை செய்யவே, மெல்ல அடுத்து தெரிந்த பாதையினுள் நுழைய, அவள் பின்னோடு நுழைந்தவன், விலக்கிய கிளையை பழையபடி விட, அந்தப் பக்கம் ஒற்றையடி மண்பாதை இருந்ததே தெரியவில்லை. அந்தளவிற்கு புதரில் மண்டிக் கிடந்த செடி கொடிகள் அந்த இடத்தை மறைத்து வைத்திருக்க, அந்தக் கிளை மட்டுமே இந்த இடத்திற்கு கதவு போல இருந்தது.
உள்ளே இன்னும் கொஞ்ச தூரம் அதே மண்பாதை நீண்டு கிடக்க அதன் முடிவில் ஏதோ பரந்த வெளி போல தென்பட்டது.
அதற்கு முன்பாக இந்த மண்பாதையின் இரண்டு பக்கங்களிலும் தேவையற்ற புதர்கள் மண்டிக் கிடக்கவில்லை. ஏதோ வாசம் தரும் பூக்களை மலர விட்டபடி பூங் கொடிகள் தான் பற்றிப் படர்ந்து இருந்தன.
மல்லிகை மொட்டுக்களையும் அதன் இலைகளையும் வைத்து, மல்லிகைக்
கொடியை இனங் கண்டு கொண்டவளுக்கு, மற்றைய பூங் கொடிகளின் பெயர் தெரியவில்லை. ஆனாலும் பார்ப்பதற்கும் சுவாசிப்பதற்கும் அத்தனை அற்புதமாக இருந்தது அந்த இடம்.
அந்த இடத்தின் அழகில் மயங்கி, சில நிமிடங்கள் அப்படியே சிலையென நின்றவளது காதோரமாக இருந்த முடிச்சுருளை மெல்ல ஊதி விட்ட அருண்மொழி,
"நிஜமாவே அசந்திட்டாய் தானே.."
எனச் சொல்ல, அவளுக்கு அப்போது தான் சுரணையே வந்தது.
அந்த இடத்தின் அழகே மங்கிப் போகும் அளவுக்கு, தான் அவனை வேறு பெண்ணைத் திருமணம் செய்ய சம்மதம் சொல்ல வைக்க வேண்டிப் போட்ட ஐடியா, அவளுக்கு நினைவில் வந்து தொலைக்க, சட்டென இறுகிப் போனாள் அவள்.
"என்ன வானம்.. இவ்வளவு நேரமும் உன்னோட முகத்துல அப்புடி லைட் பத்திக்கிட்டு இருந்திச்சே.. இப்போ என்னாச்சு இந்த இடம் உனக்கு பிடிச்சிருக்கு தானே.."
என அவள் காதோரம் அவன் கேட்க,
அவளோ
"வீட்டுக்கு போலாம் வாங்க.."
என பட்டுக் கத்தரித்தாற் போல சொல்ல, புருவங்கள் சுருங்க அவளையே பார்த்திருந்தவன், யாழ்மொழியை கீழே இறக்கி விட்டு, அவளது கையைப் பிடித்தபடி நின்றிருந்த ராஜேந்திரனைப் பிடித்து தன்னருகே நிறுத்திக் கொண்டான்.
"இப்போ தானே வந்தோம்.. அதுக்குள்ள எதுக்கு வீட்டுக்கு.."
"எனக்கு இங்க நிக்க பிடிக்கலை.. அதோட நான் உங்களோட ரொம்ப முக்கியமா பேசோணும்.."
"ஓ.. ஆனா இங்க கூட பேசிக்கலாம்.."
"இல்லை.."
என்று கொண்டு மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தவள், அப்போது தான் அதைக் கவனித்தாள்.
அருண்மொழி கையில் பிடித்திருந்த நாய்களை கை விட்டிருந்தான், அந்த மூன்றும் பக்கத்தில் நின்றிருந்த மூவரையும் விட்டு, தங்களுக்கு முன்னால் நின்றிருந்தவளைப் பார்த்து லேசாக உறுமத் தொடங்கியிருந்தன.
அவற்றின் உறுமல் சத்தத்தைக் கேட்டு, யாழ்மொழி கைகொட்டி சிரிக்க, ராஜேந்திரனோ தன் பக்கம் நின்றிருந்த நாயின் தலையை வருடிக் கொடுக்க, அருண்மொழியோ விஷமச் சிரிப்போடு நின்றிருந்தான்.