பொன்னம்பலமும் கேமவர்ஷினியும் வந்திருந்த செய்தியை ஜனகன் அருண்மொழியிடம் தெரிவிக்க, எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல், அவர்களை பண்ணை வீட்டில் தங்க வைக்குமாறு சொல்லிவிட்டுத் தன் அறைக் கதவைத் தாழிடப் போனான் அருண்மொழி.
அப்போதுதான் அவனை தேடிக் கொண்டு கனகலட்சுமியும் வந்து சேர்ந்தார்.
அவர் வந்து குழந்தைகளை கேட்டதும் வேண்டா வெறுப்பாக தான் குழந்தைகளை அவரோடு அனுப்பி வைத்தான் அவன். மிக முக்கியமாக அவன் குழந்தைகளை அனுப்பி வைத்ததன் காரணம் தன் கோபம் தன் குழந்தைகளை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பது தான்.
குழந்தைகளைக் கனகத்திடம் கொடுத்து அனுப்பி விட்டு, அறையின் உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் கதவைத் தாழிட்டு விட்டு, தன் கட்டிலில் விழுந்து படுத்து விட்டான்.
பொன்னம்பலமும் ஹேமவர்ஷினியும் வந்த உடனேயே அருண்மொழியைப் பார்ப்பதற்கு தான் முயற்சி செய்தார்கள், ஆனாலும் வெள்ளையத்தேவர் அதற்கு அனுமதி கொடுக்கவே இல்லை.
அருண்மொழி முக்கியமான ஒரு மீட்டிங்கில் இருக்கிறான் என்றும் அவனை இப்போது சந்திக்க முடியாது என்றும் அவனை சந்திக்கும் நேரத்தை பின்னர் சொல்வதாகவும் கூறி, அவர்கள் இருவரையும் வெளியே இருந்த இன்னொரு பண்ணை விட்டில் தங்க வைத்தார்.
"என்னப்பா இந்த வீட்டுல உங்கட மருமகனை சந்திக்கிறதுக்கு கூட யாரோ ஒருத்தன் தான் பர்மிஷன் தர வேண்டி இருக்கு இது உங்களுக்கு அவமானமா இல்ல.."
"இதுக்கெல்லாம் அவமானம் பார்த்து அந்த ஆளோட மல்லுக்கு நின்டால் வந்த வேகத்துல வெளியில போக வேண்டியது தான்.."
"என்னப்பா இப்புடிச் சொல்லுறீங்கள்.."
"வேற எப்புடி பிள்ளை சொல்லோணும்.. நமக்கு காரியம் ஆகோணும்.."
"இப்புடியே தான் காரியம் ஆகோணும் காரியம் ஆகோணும் எண்டு சொல்லிக் கொண்டே திரியிறியள்.. ஆனால் இத்தனை வருஷமா ஒண்டும் ஆன பாட்டைத் தான் காணேல்லை.."
"இப்ப கண்டிப்பா ஆகும் பிள்ளை.. எனக்கு அந்த நம்பிக்கை வந்திட்டுது.."
"அது என்ன இப்ப அப்புடி ஒரு நம்பிக்கை வந்திருக்குது.."
"இப்ப ஏன் அப்புடி ஒரு நம்பிக்கை வந்தது என்டால்.. இப்ப அருண்மொழிக்குத் துணையாக யாருமே இல்லை.. இது நமக்கான ஒரு சாதகமான தருணம்.. இந்த நேரம் நீ இந்த வீட்டுக்குள்ள புகுந்தால் கண்டிப்பா விஷயம் சக்ஸஸ் ஆகும்.. அதுக்காகத்தான் அம்புஜத்துக்கும் அவளிந்தை மனுசனுக்கும் திதி நடக்க ஒரு கிழமை இருக்கும் போது நான் இங்க வந்து டேரா போட்டு இருக்கிறன்.."
"நீங்கள் சொல்லுற மாதிரி கண்டிப்பா நடக்குமோ.."
"நடக்கும் பிள்ளை ஏனெண்டால் உண்மையாவே அருண்மொழிக்குத் துணை எண்டு இப்ப யாருமே இல்லை.."
"அப்போ அந்த நரைச்ச முடிக்காரர் யாருப்பா.."
"அது தான் பிள்ளை.. இவன் எப்போ புகுந்தான்னு தெரியலியே.. அருண்மொழியைப் பாக்க கூட அவன் தான் தலையாட்டிச் சம்மதம் சொல்லுறான்.. அதுக்கு பிறகு தான் நம்மளால அவனைப் பாக்கவே முடியுது.."
"சரி விடுங்கப்பா.. அந்தாளிந்தை ஆட்டமும் எத்தினை நாளைக்கு எண்டு பாப்பம்.. உதெல்லாம் ஆரு என்ரை கழுத்துல தாலி கட்டுற வரைக்கும் தான்.."
"அதெல்லாம் சரிதான் பிள்ளை.. ஆனால் அருண்மொழி யாரோ ஒரு பொண்ணை நேசிச்சவன் எண்டும்.. அவன் நேசிச்ச பொண்ணு வேறை யாரையோ கல்யாணம் கட்டிக்கொண்டு போயிட்டாள் எண்டும் அதனால தான் அவன் கல்யாணமே கட்டாமல் இருக்கிறான் எண்டும் ஒரு கதை அடிபடுகுது.."
"அந்த யாரோ ஒரு பொண்ணு யாருண்ணு தெரியுமோ.."
"யாரு பிள்ளை அந்தப் பொண்ணு.. நீ கேக்குற தினுசைப் பாத்தா உனக்குத் தெரியும் போல இருக்குதே.."
"நாம முதல் நல்லூருக்கு போயிருந்த நேரம்.. அந்த வீட்டில கறுப்பா ஒரு பொண்ணு ஓடியாடித் திரிஞ்சிட்டு இருந்தாளே அவளைத்தான் என்னோட ஆரு காதலிச்சு இருக்கிறான்.."
"உண்மையாவோ பிள்ளை.. அது தான் அந்த நேரம் நீ அவளைப் பிளாக்மெயில் பண்ணச் சொல்லிச் சொன்னனீயோ.."
"ஓம் அப்பா.. நான் தான் ஆள் செட் பண்ணி அவளை பிளாக்மெயில் பண்ணினான்.. ஆளும் உடனேயே பயந்து போய் வேறை ஆளையும் கட்டீட்டுது.."
எனக் கேமவர்ஷி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, ஜனகன் அங்கு வந்து விட்டான்.
"யாரை அப்பாவும் மகளுமாப் பிளாக்மெயில் பண்ணச் சொல்லிச் சொன்னீங்கள்.."
என்று கொண்டே வந்தவனுக்கு, விளக்கம் சொல்லி மழுப்பத் தெரியாமல் இருவருமே திருதிருவென முழிக்க, அவனோ சாதாரணமாக உள்ளே வந்து அவர்களுக்கான அறையைக் காட்டி விட்டுப் போயே விட்டான்.
அதற்குப் பிறகு தகப்பனும் மகளும் எதையும் பேசிக் கொள்ளாமல் தங்கள் அறைக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டு விட்டார்கள்.
அறைக்குள் புகுந்து தாழிட்டவர்களின், தாழிட்ட கதவையே வெறித்தபடி நெடு நேரமாக நின்றிருந்தாள் வானதி. அவர்கள் பேசியது அத்தனையும் அவளது காதுவழி சென்று இதயத்தைத் துளையிட்டுக் கொண்டிருந்தது.
வேகமாகத் தன் அறையை விட்டு வெளியே வந்த வானதி, நேராக அருண் மொழியின் வீட்டை நோக்கித்தான் நடக்கத் தொடங்கியிருந்தாள்.
குழந்தைகள் இருவரும் கனகலட்சுமியுடன் இருந்ததனால் எப்படியும் அவளை இப்போதைக்கு தேட மாட்டார்கள், அதற்குள் ஒரு எட்டு அருண்மொழியைப் பார்த்து விட்டு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் அவள் வேகவேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். அப்போது தான் எதேச்சையாக பொன்னம்பலம் இருந்த பண்ணை வீட்டுப் பக்கத்தில் இருந்து அவர்கள் பேசிய பேச்சுத் தெள்ளத் தெளிவாக அவளுக்குக் கேட்டுத் தொலைத்தது.
கண்களை மூடித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் அப்போது ஒரு முடிவு எடுத்தாள், அதன் பிறகு ஒரு விதமான தைரியத்தில் அவனது அறை வாசல் வரை வந்து விட்டாள், அதற்கு பிறகு அறைக்கதவை தட்டலாமா வேண்டாமா என்பதே அவளுக்கு பெரிய தயக்கமாகிப் போனது.
சில நொடிகள் அந்த வாசலுக்கு முன்னாலேயே அங்கும் இங்குமாக நடந்தவள், தன்னைக் கொஞ்சமே கொஞ்சம் தைரியப்படுத்திக் கொண்டு அந்தக் கதவை மெல்லத் தட்டினாள், தான் தட்டிய ஓசை தனக்கே கேட்கவில்லை என்பதை புரிந்து கொண்டவள் அதற்குப் பின்னர் கொஞ்சம் வேகமாக ஓங்கித் தட்டினாள்.
அறையின் உள்ளே படுத்திருந்த அருண்மொழிக்கு முதலில் கதவை தட்டும் ஓசை கேட்கவே இல்லை, பிறகுதான் கதவை யாரோ ஓங்கி தட்டும் ஓசை அவனுக்கு கேட்டது.
தன் தனிமைக்கு குறுக்கே வந்தது யார் என்கின்ற கடுப்பில் வேகமாக வந்து, அவன் கதவை திறக்கவும் அடுத்த தட்டு தட்டுவதற்காக வானதி கையை ஓங்கவும் சரியாக இருந்தது.
அவன் கதவைத் திறந்த வேகத்தில் இவள் கையை ஓங்கிய வேகத்தில் இவளது கை அவனது மார்பில் வேகமாக பதிய, தன்னிச்சை போல அவளது கரத்தை இறுக்கமாகப் பிடித்தபடி அப்படியே அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் அருண்மொழி.
அவள் தன்னைத் தேடிக் கொண்டு அந்த நேரத்தில் அங்கே வருவாள் என்பதை அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்பது, அவனது நீலவிழிகள் அவளைப் பார்த்த தோரணையிலேயே தெரிந்து போனது.
சில கணங்கள் அவளை அப்படியே பார்த்துக் கொண்டே நின்றிருந்தவன் மெல்ல அவளது கையை விடுவித்து விட்டு உள்ளே போய்விட்டான்.
அவன் கதவை மூடாமல் சென்ற தோரணையிலேயே தான் உள்ளே போகலாம் என்பதைப் புரிந்து கொண்ட வானதி, அவன் பின்னோடு சென்று மெல்லத் தயங்கிப் பின்னர் வேகமாக கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.
கதவு தாழிடும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவன், உள்ளே வந்து அவள்தான் கதவைத் தாழிடுகிறாள் என்பது புரிந்ததும் எதுவும் பேசாமல் அப்படியே போய்க் கட்டிலில் அமர்ந்து விட்டான்.
தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவனையே பார்த்தபடி அவனை மெல்ல நெருங்கியவளுக்கு அவனை யாருக்கும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போய் விட்டது.
அவள் தன்னை நெருங்கி வருவதை உணர்ந்தவன், உடல் இறுகிப் போய்த் தான் அமர்ந்திருந்தான்.
நெருங்கி வருபவள், தன் நாடி பிடித்து தன் முகம் பார்த்து, தன்னை வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி மீண்டும் சொல்வாளாக இருந்தால், தான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் முடிவாக முடிவெடுத்து இருந்ததால் தான் அவன் அவ் விதம் இறுகிப் போய் அமர்ந்து இருந்தான்.
ஆனால் அவனை நெருங்கி வந்தவளோ, அவன் கன்னம் பற்றித் தன் முகம் பார்க்க வைத்தாள்.
அவள் தொடுகையில் இளகிப் போனவனோ அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்துத் தான் போனான்.
"அருண்.."
"............."
"அருண்.."
"............."
"என்னைப் பாருங்கோ அருண்.."
"............."
"நான் உங்களிட்டை முன் வைச்ச கோரிக்கை எவ்வளவு தூரத்துக்கு உங்களைக் காயப் படுத்தி இருக்கும் எண்டுறது எனக்கு விளங்கீட்டுது அருண்.. இனிமேல் அந்த மாதிரி நான் உங்களைக் கேக்கவே மாட்டேன்.. என்னை மன்னிச்சிருங்கோ.."
என்றவளை நம்பாத பார்வை பார்த்த அருண்மொழி, அவள் கரத்தை மெல்ல விலக்கி விட்டு எழுந்து விட்டான்.
அவனது பார்வையின் அர்த்தமும் விலகலின் அர்த்தமும் புரிந்தவளுக்கு, தான் அவனைச் சமாதானம் செய்து விளக்கம் கொடுக்க வேண்டிய தேவைப்பாடும் புரிந்து போனது.
சாளரத்தின் கம்பியை அவன் பிடித்திருந்த தினுஷிலேயே அவனது கோபம் வானதிக்கு புரிந்தது, அவ்வளவு கோபத்திலும் தன்னைக் காயப் படுத்தி விடக் கூடாது என்று அவன் வெகு சிரமப்பட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முயல்கிறான் என்பதுவும் அவளுக்கு புரிந்து போனது.
அவனை விடவும் மோசமான நிலையில் தான் வானதியும் அப்போது இருந்தாள்.
தகப்பனும் மகளும் சேர்ந்து தன் வாழ்க்கையில் எப்படி எல்லாம் விளையாடி இருக்கிறார்கள் என்பதை அவர்கள் வாய் வழியே கேட்டதும், அவளுக்குச் சிரிப்பதா அழுவதா என்பதே புரியவில்லை.
காது வழி கேட்ட விஷயத்துக்கே மனம் இப்படித் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறதே, இன்னும் அவர்கள் என்னென்ன கிருமினல் வேலைகள் பார்த்து வைத்தார்களோ என்ற எண்ணத்துக்கு விடை தெரிய வரும் போது, மனம் எப்படித் தவிக்கும் என்றே அவளுக்கு மலைப்பாக இருந்தது.
மீண்டும் கண்களை மூடித் தன்னை ஒருநிலைப் படுத்திக் கொண்டவள், அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
கண்கள் வழி புகுந்த அவனுருவம், எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்தை இழந்து விட்டு நிக்கிறேன் என்று அவளை வதைத்தே கொன்றது.
அது போக அவனை இறுக்கக் கட்டிக் கொண்டு ஓவென்று கத்தி அழ வேண்டும் போலவும் அவளுக்கு உள்ளூர தோன்றிக் கொண்டே இருந்தது, தான் அழுவது அவனுக்குப் பிடிக்காது என்பதைப் புரிந்து கொண்டவள், தன்னை நிதானப்படுத்திக் கொள்ள முடியாமல் அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி வந்து விட்டாள்.
கதவு திறக்கப்பட்ட ஓசையுடன் அறையில் நிலவிய நிசப்தமும் அவள் வெளியே போய் விட்டாள் என்பதை அருண்மொழிக்குச் சொல்லாமல் சொல்ல, அவள் போனதில் வந்த கோபத்தில் தன் வலது கை முஷ்டியை வேகமாக ஓங்கிச் சுவற்றில் குத்தினான் அவன்.