மாலைச் சூரியன் தனது மஞ்சள் கதிர்களை, காணும் இடம் யாவிலும் பாய்ச்சிக் கொண்டிருக்க, சாளரத்தின் வழியே ஊடுருவிக் கொண்டிருந்த அந்தக் கதிர்களையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள் வானதி.
ஒருக்களித்துப் படுத்திருந்தவளது வயிற்றோடு சாய்ந்து கொண்டு, தந்தை வாங்கிக் கொடுத்த பொம்மைக் கப்பலோடு விளையாடிக் கொண்டிருந்தாள் குழந்தை யாழ்மொழி.
அந்த நேரத்தில் தான் ராஜேந்திரனைத் தூக்கிக் கொண்டு அந்த அறையினுள் நுழைந்தான் அருண்மொழி.
கனகம் தான் வருகிறார் என்பது போல, மெல்ல எழுந்து அமர்ந்தவள், குழந்தையைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டு வாசல் பக்கம் பார்த்தாள்.
அங்கே அருண்மொழியைக் கண்டதும் சூரியனைக் கண்ட தாமரை போல அப்படிப் பிரகாசமாகிப் போனது அவளது முகம், ஆனால் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனது முகத்திலோ எதுவிதமான உணர்ச்சிகளுமே இல்லை.
அருண்மொழியைக் கண்டதுமே, தாயின் மடியில் இருந்து
"பாஆ.."
என்றபடி தாவித் தாவிக் குதித்தபடி தன் பிஞ்சுக் கரங்களை நீட்டினாள் யாழ்மொழி.
குழந்தையின் செய்கையில் மெல்லிய புன்னகை ஒன்று அவனது முகத்தில் தோன்றிச் சடுதியில் மறைய, ராஜேந்திரனைக் கட்டிலில் அமர்த்தி விட்டு, மகளை அணைத்துத் தூக்கிக் கொண்டான்.
மகளைத் தூக்கும் போது தன் கைகள் வானதியின் மேல் உரசாமல் அவன் கவனமாகப் பார்த்துத் தூக்கவும், அதை அவள் கவனிக்கத் தவறவில்லை.
தூக்கிய குழந்தையை மடியில் அமர்த்திக் கொண்டு, பக்கத்தில் இருந்த கதிரையில் அவன் அமரவும், கையில் வேர்க்கொம்பு குத்திப் போட்ட தேநீரோடு உள்ளே ஆஜரானார் கனகம்.
உள்ளே அதிசயமாக அருண்மொழியைப் பார்த்ததும்
"ராசா.. நீங்கள் எப்ப வந்த.. இருங்கோ உங்களுக்கும் ஏதாவது குடிக்க கொண்டு வாரன்.."
என்று கொண்டே கனகம் மீண்டும் வெளியே போகத் திரும்பவும், ஒற்றைத் தலையசைப்பில் அவரைத் தடுத்தான்.
கனகத்துக்கும் இருவரது பழைய கதை தெரியும் என்பதால், அவருக்கு இருவரதும் அந்தத் தனிமை தவறாகத் தெரியவில்லை, அதோடு அவர் தானே இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கிறார்.
கையில் வைத்திருந்த வேர்க்கொம்பு தேநீரை வானதியிடம் கொடுத்தவர், இருவருக்கும் தனிமை கொடுக்க வேண்டி வெளிய செல்லப் போக, அதையும் ஒரு தலையசைப்பில் போக வேண்டாம் என்பது போலத் தடுத்து விட்டான் அவன்.
கவனமாக வானதியின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தபடி, தான் கேட்க நினைத்த கேள்விகளை எல்லாம் கனகத்திடமே கேட்டு வைத்தான்.
"என்னாச்சு.."
"பிள்ளைக்கு வயித்துக் குத்து.."
"ஹாஸ்பிடல்கு போயிட்டு வர வேண்டியது தானே.."
"இதுக்கு அங்க எல்லாம் போகத் தேவையில்லை ராசா.."
"ஏன் அப்புடி.."
"இது வழமையா வார பிரச்சினை தான்.."
"புரியலை.."
"பிள்ளைக்கு சுகமில்லாமல் வந்திட்டு.."
"ஓ.. பீரியட்ஸ் பெயினா.."
"ஓம் ஓம் அது தான்.."
"ஐஸ் கியூப் வைக்க சொல்லுங்க.. கொஞ்சம் பெட்டரா இருக்கும்.."
"ஓம் ஓம்.. அது தான் இனி வைக்கோணும்.. நீங்கள் கதைச்சுக் கொண்டு இருங்கோ நான் எடுத்திட்டு வர்ரன்.."
என்று கொண்டு மீண்டும் வெளியே செல்லப் போனவரின் கையைப் பிடித்துத் தடுத்தவன்
"நீங்க இருங்க.. நான் போய் எடுத்திட்டு வர்ரேன்.."
என்று விட்டு குழந்தையோடு வெளியே போய் விட்டான்.
அருண்மொழியின் அந்தப் பாராமுகம் வானதிக்குக் கவலையாக இருந்தாலும், அதிலும் தன் மீதான அக்கறை இருப்பதைப் புரிந்து கொண்டதுமே உள்ளூரச் சந்தோஷமாகத் தான் இருந்தது.
போனவன் போன வேகத்திலேயே ஐஸ்கியூப் பையுடன் வந்து சேர்ந்தான்.
அவன் கொண்டு வந்து கொடுத்த பையை, அவனுக்கு முன்னால் எப்படி வைப்பது என்பது போல, சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தவளுக்கு, அவன் அங்கேயே அமர்ந்து கொள்ள மேலும் ஐயோடா என்றாகிப் போனது.
தான் அவன் கொடுத்ததை வயிற்றில் வைக்காத வரை அவன் அங்கிருந்து போகப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டவள், அவனைப் பார்த்துக் கொண்டே, தன் புடவைத் தலைப்பை மெல்ல விலக்கி, அந்த ஐஸ் கியூப்பை வைத்துக் கொண்டாள்.
அவளையே பார்த்திருந்தவனும் அதற்கு பிறகே எழுந்து வெளியே சென்றான், போகும் போது குழந்தைகளையும் தூக்கிச் செல்ல மறக்கவில்லை.
யாழ்மொழியைத் தூக்கி வைத்திருந்த கையில் வெட்டுக் காயம் இருந்த போதும், குழந்தையின் அழுத்தத்தில் அதில் வலி ஏற்பட்ட போதும் கூட அருண்மொழி அதைப் பொருட்படுத்தவில்லை.
குழந்தைகளோடு தன் வீட்டுக்கு வந்தவனை வெள்ளையத்தேவர் எதிர்கொண்டார்.
"பொன்னம்பலத்தாரும் மகளும் வந்து உள்ள இருக்கினம்.."
"இப்போவா.."
"ஓம்.. நான் வரச் சொல்லிச் சொல்லேல்லை.. அவை தான் தங்கடை மருமகனைப் பாக்க யாரு தங்களைத் தடுக்கிறது எண்டு சொல்லீட்டு வந்து உள்ள இருக்கினம்.."
"ஓ.."
"என்ன செய்ய.."
"வீடு தேடி வந்தவங்களை என்ன செய்ய.. இருக்கட்டும் நான் போய்ப் பாக்கிறன்.."
"குழந்தையளைக் கூட்டீட்டு போகட்டுமோ.."
"நோ அவங்க என் கூடவே இருக்கட்டும்.."
"உங்கடை விருப்பம்.."
என்று கொண்டே வெள்ளையத்தேவர் போய் விட, குழந்தைகளோடு தன் வீட்டினுள் நுழைந்தான் அருண்மொழி.
அந்தப் பெரிய வரவேற்பறையில் வாசல் பக்கமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள் பொன்னம்பலமும், கேமவர்ஷினியும்.
உள்ளே வரும் அருண்மொழியைப் பார்க்கவென்றே வாசலையே அடிக்கொரு தரம் பார்த்த வண்ணம் இருந்த கேமவர்ஷினி, இரண்டு குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு என்ட்ரி ஆனவனைப் பார்த்ததும், லேசாகப் புருவங்கள் நெரியத் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
"அப்பா.. அங்க பாருங்களேன்.."
"எங்க பிள்ளை.."
"அங்க வாசலைப் பாருங்கோ.."
"வாசல்ல என்ன.."
என்பது போலப் பார்த்தவர், அருண்மொழியின் கைகளில் இருந்த குழந்தைகளைப் பார்த்ததும் தானும் மகளைத் தான் திரும்பிப் பார்த்தார்.
"யாரு பிள்ளை அது.."
"ஆ என்னைக் கேளுங்கோ.. நானே உங்களைப் பாக்கிறன்.."
"யாரும் சொந்தக்காரர்டை பிள்ளையளா இருக்கும் எண்டு நினைக்கிறன்.."
"நல்லா நினைச்சியள்.. நீங்கள் தானே சொன்னீங்கள் ஆருக்கு எங்களை விட்டால் சொந்தக்காரர் யாருமே இல்லை எண்டு.. இப்ப இப்புடிச் சொல்லுறீங்கள்.."
என்று கேமவர்ஷினி விளக்கம் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அருண்மொழி அவர்களுக்கு முன்னால் வந்து அமர்ந்து கொண்டான்.
அவன் வந்ததைப் பார்த்ததும் பவ்வியமாக எழுந்து நின்று கொண்ட பொன்னம்பலத்தை அமருமாறு சைகை செய்தவன், யாழ்மொழியை மடியிலும், ராஜேந்திரனைப் பக்கத்திலும் அமர்த்தி இறுகப் பிடித்துக் கொண்டான்.
"எப்புடித் தம்பி இருக்கிறீங்கள்.."
"குட்.. நீங்கள்.."
"எங்களுக்கு என்ன உங்கடை தயவால நல்லா இருக்கிறம்.."
"இடமெல்லாம் வசதியா இருக்குதா.."
"அதுக்கென்ன ஒரு குறையும் இல்லாமல்.. இங்கேயே ஒட்டிக் கொண்டு இருக்கணும் போல அவ்வளவு வசதியா இருக்குது.."
"ம்ம்.."
"தம்பி.. இவங்க யாரு.."
"எவங்க.."
"மடியில இருக்கிற குட்டிப் பொண்ணு.. அப்புறம் பக்கத்துல இருக்கிற பையன்.."
"இவ என்னோட டாட்டர்.. அப்புறம் இது என்னோட ஷண்.."
என அருண்மொழி சாதாரணமாக சொல்ல, தந்தையும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்து முழித்தார்கள்.
அவன் சொன்ன பதில் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து, முதலில் வெளி வந்தாள் கேமவர்ஷினி.
"என்ன ஆரு சொல்றீங்கள்.."
"என்ன சொல்றேன்.."
"உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.. அப்புறம் எப்புடி.."
"கல்யாணம் பண்ணிக்காம குழந்தை பெத்துக்க முடியாதா என்ன.."
"அப்போ நிஜமாவே இவங்க உங்களுக்கு பிறந்த குழந்தைங்களா ஆரு.."
"யா.. எனக்காக என்னோட காதலி பெத்துக் கொடுத்த குழந்தைங்க.."
என அருண்மொழி சொல்லி முடிக்கவும், கேமவர்ஷினி பொன்னம்பலத்தை முறைக்கவும் சரியாக இருந்தது.
கோபத்தை அப்படியே முகத்தில் அப்பட்டமாகக் காட்டிய தன் மகள், அங்கிருந்து வேகமாக எழுந்து செல்ல முயற்சிக்கவும், சட்டென்று அவளது கரத்தை இறுகப் பற்றிக் கொண்ட பொன்னம்பலம்
"உங்களோட காதலியைப் பாக்கிற பாக்கியமாவது எங்களுக்கு கிடைக்குமா தம்பி.."
என நயமாகக் கேட்க, அவரை ஒரு பார்வை பார்த்தவனோ
"அதை அவ தான் முடிவு பண்ணனும்.. சோ நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நாம பிறகு சந்திச்சுக்கலாம்.."
என்று கொண்டே, குழந்தைகளோடு தன்னறைக்குப் போய் விட்டான்.
அவன் உள்ளே போனதும் தந்தையைப் பிலுபிலுவெனப் பிடித்துக் கொண்டாள் கேமவர்ஷினி.
"எல்லாம் உங்களால வந்தது.. ஆருவுக்கு பக்கத்துல ஒரு ஆளை எப்பவுமே விட்டு வைச்சுருங்கனு சொன்னனே கேட்டீங்களா.."
"இரு பிள்ளை அவசரப் படாதே.. இன்னும் ஒண்டும் குடி முழுகிப் போகேல்லை.."
"என்னது.. இன்னும் ஒண்டும் குடி முழுகிப் போகேல்லையோ.. நீங்கள் சுயநினைவுல தான் இருக்கிறீங்களோ.."
"நான் நல்ல சுய நினைவுல தான் இருக்கிறன்.. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை என்றதே பெரிய விஷயம்.. அதை வைச்சே.."
"அதை வைச்சே அல்வா கிண்டச் சொல்லுறீங்களோ.."
"இரு பிள்ளை.. நீ சரியான பதட்டத்துல இருக்கிறாய் எண்டு நினைக்கிறன்.."
"பதட்டத்துல இருக்கிறனோ சரியான கடுப்புல இருக்கிறன்.. இப்புடி ஆகும் எண்டு தெரிஞ்சு இருந்தால்.. இங்கேயே நான் தங்கி இருந்து ஏதாவது செஞ்சிருப்பனே.."
"இனியும் அவனை நீ கல்யாணம் செய்து கொள்ளலாம் பிள்ளை.."
"கல்யாணம் செய்திட்டு.. அந்த ரெண்டு சாத்தான் குட்டியளுக்கும் ஆயா வேலை பாக்க சொல்லுறீங்களோ.. இனி ஆருவை நான் கட்டுறதா இருந்தால் அவரு அந்தக் குழந்தையளை விட்டிட்டு தான் வரோணும் சொல்லீட்டன்.."
என்றவளது பேச்சு, ஏதோ தான் அருண்மொழிக்கு வாழ்க்கைப் பிச்சை போடக் காத்திருக்கிறேன் என்பது போல இருந்தது.
"அதெல்லாம் பாத்துக் கொள்ளலாம் பிள்ளை.. முதல்ல அவன்ரை அந்தக் காதலி யாருனு கண்டு பிடிக்கோணும்.."
"அது தான் அப்பா.. முதல் இருந்த பொண்ணை விடவும் வேறை யாரோ பொண்ணு ஆருவோட வாழ்க்கையில வந்து இருக்கிறாள் எண்டு நினைக்கிறன்.."
என்றவளுக்கு எள்ளளவு கூட வானதி திரும்பி அவனின் இருப்பிடத்திற்கு வந்திருப்பாள் என்கிற எண்ணம் எழவேயில்லை.
"ஓம் போல.."
"அந்தக் காதலி யாருனு கண்டுபிடிச்சு.. அவளை முதல்ல தூக்கிற வழியைப் பாருங்கப்பா.."
"சரி பிள்ளை.."
"எனக்கு அதை நினைக்க நினைக்கச் சரியான தலையிடியா இருக்குது அப்பா.. அவ யாருன்னு தெரிஞ்சு கொள்ளோணும்.. அவ என்ன என்னை விடவா அழகா இருப்பா.. இந்த ஆருக்கு எப்பவுமே மட்டமான டேஸ்டு தான்.. அவங்க ஆத்தாளை மாதிரி தான் யாரையும் பாத்துக் குப்புற விழுந்து இருப்பான் லூசுப்பயல்.. சீக்கிரமா அந்தப் பொண்ணு யாருனு கண்டுபிடியுங்கோ சொல்லீட்டன்.."
"என்ரை அடுத்த வேலையே அது தானே.. நீ பொறுத்து இருந்து பாரு.."
"உங்களுக்கு வாய்ச்சவடால் தான்.. அப்புடிப் பொறுத்து இருந்து எல்லாம் பாக்க ஏலாது.. சும்மா சொல்லீட்டே இருக்காமல் அதைச் செய்து முடியுங்கோ.."
என்று கொண்டே விருட்டென எழுந்து சென்ற மகளை, சமாதானம் செய்யும் வழி தெரியாமல் தொடர்ந்து தானும் எழுந்து சென்றார் பொன்னம்பலம்.
அறையினுள் நுழைந்த அருண்மொழியோ, வழமை போலக் குழந்தைகளை தன் மேல் போட்டுக் கொண்டு தூங்கத் தொடங்கினான்.
குழந்தைகள் கூட, தந்தையை இறுகக் கட்டிக் கொண்டு சமத்தாகத் தூங்க, அதுவரை இறுகிப் போயிருந்த அவனது மனதும் உடலும் குழந்தைகளது ஸ்பரிசத்தினால் மெல்ல மெல்ல இளகத் தொடங்கியிருந்தது.