• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீசன் (2) அசுரனின் குறிஞ்சி மலரே..28

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
வானதி தலைக்கு குளித்து விட்டு, தலையை உலர்த்தியபடி வீட்டின் பின்னால் இருந்த மாமரத்துக்கு கீழே அமர்ந்திருந்தாள்.

இன்று அவளுக்கு மூன்றாவது நாள் என்பதால், தலைக்கு கொஞ்சம் மஞ்சள் வைத்து, முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளித்திருந்தாள் என்பதால், காலைச் சூரியனின் ஒளி பட்டு அவளது மாநிறம் மஞ்சளோடு இணைந்து மினுமினுத்துக் கொண்டிருந்தது.

அந்த மூன்று நாட்களும் அவளை வீட்டை விட்டு எங்குமே கனகம் அனுப்பவில்லை என்பதால், பொன்னம்பலமும் அவரது மகளும் அவளை இன்னும் பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இனிமேல் அவர்கள் அவளை அடையாளம் கண்டு பார்த்தாலும் கூட, அருண்மொழியின் கோட்டைக்குள் வந்து விட்ட வானதியின் நிழலைக் கூட அவர்களால் தொட முடியாது என்பது தான் உண்மை.

தலையை துவட்டிக் கொண்டு காலைச் சூரியனின் வெளிச்சத்தை உள்வாங்கிக் கொண்டிருந்த வானதியின் எண்ணங்கள், நேற்றைய நாள் இரவில் போய் நின்று கொண்டது.

கனகம் வானதிக்கு இரவு உணவைக் கொடுத்து விட்டு, குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு தனது அறைக்குப் போய் விட்டார்.

இரவு உணவை உண்டதும் உறங்காமல், சில நிமிடங்கள் நடந்து விட்டு உறங்கலாமே என்ற எண்ணத்தில், வீட்டுக்குப் பின்னால் அமைக்கப் பட்டிருந்த ஒடுக்கமான நீளமான பாதையில் நடக்கத் தொடங்கி இருந்தாள் வானதி.

வயிற்று வலியின் காரணமாக அவளுக்கு உடனே தூக்கமும் வரவில்லை, அடிக்கொரு தரம் நேரத்தைப் பார்த்தவளுக்கு அது ஒன்பது மணி என்று காட்டி அவளை மேலும் மேலும் நடக்குமாறு பணித்தது.

அப்படியே நடந்து கொண்டிருந்தவளுக்கு, பூவைத் தேடி ஓடிப் போகும் வண்டு போல, அவளது மனதும் அருண்மொழியைப் பற்றிய எண்ணங்களுக்குள் ஓடிப் போக, அது அவளை மேலும் இம்சிக்கத் தொடங்கவே, அவளது நடை வேகத்தில் மெல்லப் பக்கத்தில் வந்திருந்த தூக்கம் தூரமாக ஓடிப் போனது.

"இதென்னடா.. எப்ப பாரு அந்த மனுஷனோட நினைப்பாவே இருக்குதே.. இந்த நேரம் என்ன செய்து கொண்டு இருப்பாரு.. நித்திரை ஆகி இருப்பாரோ.. எனக்கு அவரோட நினைப்பால நித்திரையே வருதில்லையே.. என்னில ரொம்பக் கோபமா இருக்கார் எண்டு தெரியுது.. எப்புடிச் சமாதானப் படுத்திறது எண்டு தான் தெரியேல்லை.. அந்தாளோட முகத்தைப் பாத்துப் பேசவே பயமாக் கிடக்குது.."
என முணுமுணுத்துக் கொண்டே திரும்பியவள், பின்னால் வந்த யாருடனோ மோதிக் கொண்டு கீழே விழப் போனாள்.

அவள் கீழே விழாமல் அந்தரத்தில் நிக்க, தான் விழவில்லை என்பதை உணர்ந்து மெல்லக் கண் விழித்துப் பார்த்தவளோ, தன்னைத் தாங்கியபடி நின்றிருந்தவனைக் கண்டதும் முகம் மலர்ந்து போனாள்.

"அருண்.."

"................"

"என்னில இன்னும் கோபமா உங்களுக்கு.."

"................"

"நான் உங்களை நிறைய நோகப் பண்ணீட்டன்.."

"................"

"ஏதாவது சொல்லுங்கோ.. என்னை ஏதும் திட்டவாச்சும் செய்யுங்கோ அருண்.. இப்புடி அமைதியா இருக்காதேங்கோ.."
என அவனது கைகளுக்குள் கிடந்தபடி வானதி சொல்லிக் கொண்டே போக, அருண்மொழியோ எந்த விதமான பதிலும் சொல்லாமல் அவளது முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த நீல விழிப் பார்வையில் மெல்ல நெளிந்தவள், அவனிடம் இருந்து விலகப் பார்க்க, வழமை போல அது தான் அவளால் முடியவில்லை.

அவனோ உடும்புப் பிடியாகப் பிடித்திருந்தான் வானதியை, அவளுக்கு அவனின் கரங்களில் இருந்து எழுந்து கொள்ளவே சிரமமாக இருந்ததோடு, அப்படியே அந்தரத்தில் கிடந்தவாறு அவனது முகத்தைப் பார்ப்பதும் கடினமாக இருந்தது.

இந்தப் போஸில் யாரேனும் தங்களைப் பார்த்து விட்டால் என்ன செய்வது என்கிற பதட்டத்தில், வானதி மீண்டும் அவனிடம் இருந்து விலக முயல, அவளை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு அவளது அறையினுள் புகுந்தவன், கதவைக் காலால் உதைத்து மூடினான்.

அவனது அந்தச் செய்கையில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தவள், சட்டென்று வேகமாக அவனிடம் இருந்து கீழே இறங்கி விட்டாள்.

இப்போது கதவை உள் பக்கமாகத் தாழ்ப்பாள் போட்டு விட்டு, அவளை நோக்கி வந்த அருண்மொழியோ வானதிக்கு உள்ளூர பயப் பந்தை உருள வைத்தான்.

அவன் கிட்ட வர வர அவள் பின்னால் போய்க் கொண்டிருந்தாள், முடிவில் அறைச் சுவரோடு மோதி நின்றவளது இரு பக்கமும் தன் கரங்களை வைத்து அவளுக்கு அணை கட்டியவன் அவளது விழிகளை விட்டு பார்வையை அப்புறம் இப்புறம் அசைக்கவேயில்லை.

மூச்சுக் காற்று தன் மேல் படுவது போல நின்றிருந்தவனைப் பிடித்துத் தள்ளக் கூடத் திராணியற்றவளாகி நின்றிருந்தவள், வயிற்று வலியால் வயிற்றை ஒற்றைக் கையால் பிடித்துக் கொள்ள, அவளது கண்களில் இருந்த அவனது பார்வை அவளது வயிற்றில் வந்து நிலைத்து நின்றது.

மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு அப்போது தான் புரிந்தது அவன் குடித்து விட்டு வந்திருக்கிறான் என்பது, அது அவளுக்கு கோபத்தைக் கொடுக்கவே, வலித்த வயிற்றைப் பிடித்துக் கொண்டபடியே அவனை முறைத்தாள்.

"குடிச்சனிங்களோ அருண்.. அப்பவும் நினைச்சனான் ஐயா இந்த நேரத்துல எல்லாம் என்னைத் தேடி வர மாட்டாரே.. இப்போ என்ன ஞானம் வந்தது ஒருவேளை என்னில இருக்கிற கோபம் போயிருக்குமோண்டு நினைச்சனான்.. பாத்தா ஆள் உள்ள ஊத்தீட்டு வந்திருக்கிறார்.. இனி நடந்தது நடக்கிறது ஒண்டுமே துரைக்கு ஞாபகத்துல இருக்காதே.."
என்று கொண்டே ஒற்றைக் கையால் அவனை விலக்க, அவளது கரத்தைத் தடுத்தவன், பக்கத்து டேபிளில் கிடந்த ஐஸ்கியூப் பையை எடுத்துக்கொண்டான்.

அவளை அப்படியே தரையில் அமர வைத்து, அவளது புடவைத் தலைப்பை விலக்கப் போனவனின் கரத்தைப் பதறிக் கொண்டு பிடித்தவள், அவனது கையில் இருந்ததை வாங்கி அப்படியே புடவைக்கு மேலாக வயிற்றில் வைத்துக் கொண்டாள்.

"குட் பேபி.."
என்று கொண்டே அவளது தோளில் சாய்ந்து கொண்டவனை, என்ன செய்ய என்பது போல மலைப்பாக அமர்ந்திருந்தாள் வானதி.

இப்போது வானதியின் தோளில் சாய்ந்திருப்பது சாதுவான அருண்மொழி, அவனோடு மனது விட்டு பேச முடியும், அவன் மார்பில் சாய்ந்து ஒரு மூச்சு அழ முடியும், பதிலுக்கு இந்த அருண்மொழி தன்னைத் தானே காயப்படுத்த மாட்டான்.

தன் தோளில் சாய்ந்திருந்தவனை, சிரமப் பட்டு நிமிர்த்தி உட்கார வைத்த வானதி, வாகாக அவனது மார்பில் தலைசாய்த்துக் கொண்டு, தன் மனதோடு இது நாள்வரை புதைத்த கஷ்டங்களை எல்லாம் கொட்டத் தொடங்கினாள்.

"அருண்.. எனக்கு உங்களை எவ்வளவு புடிக்கும் தெரியுமோ.. உங்களோட என்னைச் சேர விடாமல் செய்த அந்த நல்லூரானிட்டை எவ்வளவு நாள் சண்டை போட்டிருக்கிறன் தெரியுமோ.. ஒவ்வொரு நாளும் உங்களை நினைச்சு நினைச்சே கண்ணீரா வடிச்சிருக்கிறன்.. பிறகும் இன்னொருத்தனுக்கு கழுத்தை நீட்டீட்டன் எண்டிட்டு தான் மனசைக் கல்லாக்கீட்டு உங்களைப் பத்தின நினைவுகளை எல்லாம் அழிக்கப் பாடுபட்டு இருக்கிறன்.. ஆனா நானும் ஒரு மனுஷி தானே.. என்னால உங்களை மறக்கவே முடியேல்லை அருண்.. உங்களை இத்தினை வருஷம் கழிச்சுப் பாத்த உடன எனக்கு எப்புடி இருந்தது தெரியுமோ.. என்ரை கடவுளைக் கண்ட மாதிரி ஒரு உணர்வு.. ஆனா அது கூட தப்பு எண்டும் உங்களுக்கும் கல்யாணம் ஆகிக் குழந்தையள் இருக்கும் எண்டும் நினைச்சிட்டு நான் என்ரை மனசை வெளியால காட்டிக் கொள்ளேல்லை.. ஆனா நீங்கள் என்னை மறக்க முடியாமல் கலியாணமே செய்யேல்லை எண்டுற உண்மை தெரிஞ்ச அந்த நொடி எனக்கு எப்புடி இருந்தது எண்டு என்னாலயே சொல்ல முடியேல்லை அருண்.. அந்த நொடி எனக்கு வந்தது சந்தோஷமா கவலையா எது எண்டே என்னால சரியாக் கண்டு பிடிக்க முடியேல்லை.. ஆனா மனசோட ஒரு மூலையா நிம்மதியா இருந்தது எண்டுறது உண்மை.."
என்று கொண்டே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது‌.

"உங்களைப் பாக்கிற ஒவ்வொரு நிமிஷமும்.. எப்புடிப்பட்ட பொக்கிஷத்தை இழந்திட்டு நிக்கிறன் அப்புடினு தான் தோணுது அருண்.. உங்களைப் பாக்காமலே இருந்திருந்தா எப்புடியோ என்ரை பிள்ளையளுக்காக எண்டு சொல்லீட்டு என்ரை வாழ்க்கையை வாழ்ந்து இருப்பன்.. ஆனாத் திரும்ப உங்களைப் பாத்ததும் உங்களைப் பாக்கிற தூரத்துலயே நான் வாழ்ந்திட்டு செத்துப் போயிடோணும் எண்டு தான் நினைச்சனான் அருண்.. ஆனா என்ரை மனசாட்சி நான் சுயநலமா யோசிக்கிறன் எண்டு என்னைக் கொல்லாத நாள் இல்லை.. அது தான் நீங்கள் வேறை ஆரையாச்சும் கலியாணம் செய்யுங்கோ எண்டு வந்து நிண்டனான்.. ஆனா நீங்கள் உங்கடை கையை வெட்டின உடனேயே எனக்கு இதயமே நிண்டு போச்சுது அருண்.. போயும் போயும் இந்த விசரிக்காக நீங்கள் எந்த எல்லைக்கு எல்லாம் போறீங்கள் எண்டுறது எனக்கு எப்பவுமே பிரமிப்பு தான் அருண்.."

அந்தக் குடிபோதையிலும் அவளது கண்ணீரைக் கண்டு கொண்டவன்,
அவள் முகத்தை ஏந்தித் தன் உதடுகளால் அவள் கண்ணீரைத் துடைக்க முயல, வானதியால் அவனது அந்த ஸ்பரிசத்தை ஏனோ மறுக்க முடியவில்லை.

அவளைப் பொறுத்தவரை அவள் அருண்மொழியை நேசித்தாள் என்பது உண்மை, சந்தர்ப்ப வசத்தால் வேறு ஒருவனுக்கு கழுத்தை நீட்டி, குழந்தை ஒன்றைப் பெற்றுப் போட்டாலும் கூட, அந்தப் பாதையைக் கடந்து மீண்டும் விதி வசத்தால் அருண்மொழியிடம் வந்த பின்னர், அவளது பட்டுப் போன காதல் மீண்டும் துளிர் விட ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம்.

அதற்கும் மேலாக அவன் வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற பிடிவாதத்தில் வலம் வந்தவளுக்கு, பொன்னம்பலமும் கேமவர்ஷினியும் பேசிய போது கிடைத்த உண்மையால் அந்தப் பிடிவாதம் லேசாக ஆட்டம் கண்டு, இருவருடைய நிம்மதியையும் அழித்து வாழ்வதை விட, இருவருமே இணைந்து வாழ்ந்தால் என்ன என்கிற எண்ணம் தோன்றியே விட்டது.

அப்படி ஒரு எண்ணம் வந்த பின்னர் தான், அவளால் அருண்மொழியின் நெருக்கத்தையும் ஸ்பரிசத்தையும் எந்தச் சங்கடமான உணர்வும் இல்லாமல் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடிந்தது.

அவள் முகம் ஏந்தி கண்களில் முத்தம் வைத்தவன், அவளது உதடுகள் நோக்கிக் குனியவும், வானதியின் உடல் லேசாக இறுகிப் போக கண்கள் மூடி அவள் அதற்கும் அசையாமல் தான் அமர்ந்திருந்தாள்.

சில கணங்கள் அப்படியே கரைய, அவனிடம் இருந்து எந்த விதமான எதிர்வினையும் வராமல் போகவே, விழி மலர்த்திப் பார்த்தவள், முத்தம் வைக்காமல் தன் முகத்தையே பார்த்திருந்தவனது பார்வையில் நாணி, தன் முகத்தை அவன் மார்பிலேயே மறைத்துக் கொண்டாள்.

அவளது முகத்தை நிமிர்த்தி மூக்கோடு மூக்கு உரசியபடி, தன் உதட்டைக் காட்டியவன்
"நீயா குடுக்கணும் பேபீ.."
என்று சொல்ல, அவளது கன்னங்கள் சூடேறுவதை அவளால் கட்டுப் படுத்தவே முடியவில்லை.

என்ன விதமான உணர்வு இது, மனதுக்கு பிடித்தவனது நெருக்கம் கொடுத்த அந்த நாணத்தை மீண்டும் மறைக்க வழி தெரியாமல், பதிலுக்கு அவன் முகத்தை ஏந்தி நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தாள் வானதி.

அந்த அழுத்தமான முத்தமே சொல்லாமல் சொல்லியது, வானதி இனி ஒரு போதும் அருண்மொழியை அவளாக விட்டு விலகப் போவதில்லை என்பதை.