தப்பு செய்து பிடிபட்ட குழந்தை போல இருந்தது வெண்ணிலாவின் செய்கை, ஆனால் அவை எல்லாவற்றையும் பார்க்கும் மனநிலையில் வானதி இருக்கவில்லை.
அவளால் அப்போது கூட தன் அக்காள் தன் முன்னால் உயிருடன் நிற்கிறாள் என்பதை ஏற்றுக் கொள்வது கடினமாக இருந்தது, கடினமாக இருந்தது என்பதை விட அதிகமான சந்தோஷத்தால் அந்த சந்தோஷத்தை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
நிமிடங்கள் கரையத் தொடங்கிய பின்னர் தான் வானதிக்கும் வெண்ணிலா மீது தனக்கிருந்த கோபத்தை மீண்டும் நினைவு கொள்ள முடிந்தது.
கோபத்தை வெளிக் காட்டுவதற்கு முன்னால் தன் தமக்கையின் முகத்தை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தாள் வானதி.
வெண்ணிலா கூட அங்கே அந்த நேரத்தில் வானதி தன் முன்னால் வந்து நிற்பாள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், ஆனாலும் அவளைக் கண்ட சந்தோசம் அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
அதோடு அந்தச் சந்தோஷத்தைத் தாண்டியும் ஏதோ ஒரு கவலை அவள் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது.
ஆனால் வானதியோ அவை எல்லாவற்றையும் கண்டுகொள்ளும் மனநிலையில் இருக்கவில்லை, அவளுக்கு வெண்ணிலாவிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன என்பதோடு தன் மனதில் இது நாள் வரை இருந்த ஆதங்கத்தையும் கொட்ட வேண்டியிருந்தது.
"சொல்லக்கா ஏன் இந்த நாடகம்.. உன்ரை கடிதத்தை படிச்சிட்டு நீ செத்துப் போயிட்டாய் எண்ட செய்தியை கேட்டதுக்குப் பிறகு நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்.. எதுவா இருந்தாலும் என்னட்டை ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் தானே.. நீ கூட என்னை ஒரு கீழ்த்தரமான பொம்பிளை எண்டு தானே நினைச்சுட்டாய்.. உன் மனசுல என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாம நான் பாட்டுக்கு லூசு மாதிரி அந்த வீட்டில சுத்தி வந்து இருக்கிறன்.. எனக்கு உன்ரை புருஷன் என்னோட தரக்குறைவா நடக்கப் பாத்தவன் எண்டதையும் விட வலிச்சது என்ன தெரியுமோ.. நீ என்னை அந்த மாதிரி நினைச்சுட்டாய் எண்டது தான்.. ஒரு நிமிஷம் ஒரே நிமிஷம் நீ விட்டு தந்தாலும் இல்லாட்டிக்கு ஒன்று உயிரை மாய்ச்சுக் கொள்ற மாதிரி போனாலும் கூட.. நான் உன்ரை புருஷனைத் திரும்பக் கல்யாணம் கட்டிக் கொள்ளுவன் எண்டு நீ எப்புடி நினைச்சனீ.. அந்தளவுக்கோ நான் அலைஞ்சு திரியிற ஆள்.."
எனக் கேட்டுக் கொண்டே போன வானதியின் குரலுக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அப்படியே பிரமை பிடித்தவள் போல நின்றிருந்தாள் வெண்ணிலா.
"உன்ன மாதிரி கோழைத்தனமா ஒரு முடிவு எடுத்து.. ஆரோடையும் மனசு விட்டுப் பேசாமல் என்ரை பாட்டுக்கு ஒரு முடிவு எடுத்ததால தான் என்ரை வாழ்க்கையும் நாசமாப் போய்க் கிடக்குது.. ஆனா நான் ஆரையும் மட்டமா யோசிச்சு முடிவு எடுக்கேல்லை அக்கா.. என்னட்டை வந்து வாடி நதி ரெண்டு பேரும் எங்கையாவது தூரமாப் போய்ப் பிழைச்சுக் கொள்ளுவம் எண்டாவது கேட்டியா.. இல்லாட்டிக்கு என்னைக் கட்டின பரதேசி உனக்கு எப்புடி டார்ச்சர் குடுக்குது வா ரெண்டு பேரும் பொலிஸ் டேஷனுக்கு போவம் எண்டாவது கேட்டியா.. உன்ரை புருஷனோட நான் எப்புடிக் குடும்பம் நடத்துவன் எண்டு நீ நினைச்சனீ.. அதுக்குப் பதிலா எனக்கு சோத்துல விஷம் வைச்சுக் குடுத்து இருக்கலாமே நீ.."
என வானதி முடிக்கவும்
"ஐயோ நதீ.. அக்காவை மன்னிச்சிரடி.."
என்று கொண்டே அவளது காலில் அப்படியே விழுந்து விட்டாள் வெண்ணிலா.
விழுந்த வேகத்தில் அவளது நெற்றி பக்கத்தில் கிடந்த கல்லில் மோதிக் கொள்ள, கல்லின் கூர்முனை குத்தி நெற்றியில் இருந்து இரத்தம் வடிந்தது வெண்ணிலாவுக்கு.
தான் பேசிய பேச்சுக்கு குறைந்தபட்சம் வெண்ணிலா கண்ணீர் மட்டும் தான் விடுவாள் என வானதி நினைத்திருக்க, வெண்ணிலா தன் காலில் விழுவாள் என்பதை வானதி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.
"ஐயோ அக்கா.."
என்று பதறிக்கொண்டு அவளை தூக்கி விட, அவளது நெற்றியின் ஓரம் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது இன்னும் வானதியை பதட்டத்துக்குள்ளாகியது.
"சாரிக்கா.. நான் உன்ரை மனசைக் காயப்படுத்தோணும் எண்டு சொல்லேல்லை.. என்ரை மனசில இத்தனை நாள் வரை இருந்த ஆதங்கத்தைத் தான் உன்னட்டைக் கொட்டித் தீர்த்தனான்.. நீ கூட ஒரு அஞ்சு நிமிஷங்கள் தனிமையில இருந்து யோசிச்சுப் பார் என்ரை வாதம் உனக்கும் சரியாத்தான் படும்.. என்ரை ஆதங்கம் எல்லாம் இதைப் பத்தி நீ என்னட்டை ஒரு வார்த்தையாச்சும் மனசு விட்டுப் பேசி இருக்கலாம் எண்டதுதான்.."
"இப்ப சொல்லேக்குள்ள தான் நதி எனக்கு உன்ரை மனசு விளங்குது.. உன்ரை குணம் தெரியாமல் நான்தான் லூசுத்தனமா முடிவு எடுத்துட்டன்.. இந்தக்காவை மன்னிச்சிடுடி தங்கம்.."
"எனக்கு கோபம் ஆறவே மாட்டன் எண்டுது அக்கா.. நான் தான் ஏதவோ பாவம் செய்திட்டன் சரி நீ என்னைப் பத்தி தப்பா முடிவெடுத்திட்டாய் எண்டு வைச்சாலும்.. நீ பெத்த பிள்ளை என்ன பாவம் செஞ்சது சொல்லு.."
"அதுதானே நதி நான் முட்டாள்தனமா முடிவு எடுத்துட்டன்.. என்ரை பிள்ளையை நீ உன்ரை பிள்ளை மாதிரிப் பாப்பாய் எண்டுற நம்பிக்கை எனக்கு இருந்தது.."
"உன்ரை நம்பிக்கையைத் தூக்கிக் கிடப்புல போடு.. இனி நீயே ஆசைப்பட்டாக் கூட ராஜேந்தனை உன்னட்டைத் தூக்கிக் குடுக்கவே மாட்டனக்கா.. ஏனெண்டால் அவன் தான் என்ரை உலகம்.. நான் பெத்தது கூட அவனுக்கே பிறகு தான்.. அதோட நீ கூட ஒரு தடவை கூட என்னை வந்து பாக்க வேணும் எண்டு யோசிக்கேல்லை தானே.."
"எல்லாத்துக்கும் சேத்து என்னை மன்னிச்சிரு நதி.."
"போதும் அக்கா போதும்.. மன்னிப்பு எண்டு எவ்வளவு சிம்பிளாக் கேக்கிறாய்.. நீ செஞ்ச வேலையால நான் பட்ட வேதனையை சங்கடத்தை உன்னால இல்லை எண்டு ஆக்க முடியுமோ.. இன்னும் சொல்லப்போனால் நீ கடல்ல விழுந்து ஒரேயடியா இல்லை எண்டு தெரிஞ்ச உடன நானும் தற்கொலை செய்யத்தான் போனனான்.. ஆனா பிள்ளையள் ரெண்டுக்காகவும் தான் நான் உயிரோட இருக்கிறன் தெரியுமோ.."
"நதீ.."
"இப்ப கூட.. நானா இங்க வந்த இடத்தில தான் உன்னைக் கண்டனான்.. மற்றபடி நீயாத் தேடி வந்து எனக்கு எந்த விளக்கமும் குடுக்கேல்லைத் தானே.."
"ஐயோ நான் எப்புடி விளங்கப் படுத்துவன் உனக்கு.."
"நீ ஒண்டுமே விளங்கப்படுத்த வேண்டாம்.. நீ இருந்த மாதிரி சந்தோஷமாவே இரு.. நான் வந்ததையோ உன்னைப் பாத்ததையோ மறந்து போயிடு.. அது ஒண்டும் உனக்குக் கஷ்டம் இல்லைத் தானே.. ஏனெண்டால் என்னையும் நீ பெத்த என்ரை பிள்ளையையும் மறந்து இவ்வளவு காலம் இருந்தனீ தானே.. இனியும் நீ இருக்க என்ன குறை.. நீ நிம்மதியா இரு நான் போட்டு வாறன்.."
என்ற வானதி, வெண்ணிலா அழுதபடியே அழைக்க அழைக்க நின்று திரும்பிக் கூடப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து விட்டாள்.
வந்தவள் கொஞ்ச நேரம் கூட தாமதிக்காமல், ஜனகனிடம் போய்
"நான் பிறகு உங்களோட கதைக்கிறன் அண்ணா.. இப்ப நான் வீட்டை போறன் எனக்கு மனசு கொஞ்சம் சரியில்லை.."
என்று விட்டு காரில் ஏறி வந்து விட்டாள்.
ஏற்கனவே தமக்கையை உயிரோடு பார்த்த சந்தோசம், அவள் தன்னை தவறாக புரிந்து கொண்டு ஒரு கடிதம் எழுதி விட்டு இறந்து விட்டது போல நம்ப வைத்து வீட்டை விட்டுப் போன கவலை, என மனது ஒரு நிலையில் இல்லாமல் உள்ளே வந்த வானதியை முழுக்க முழுக்க வெறுப்புணர்வோடு எதிர் கொண்டாள் கேமவர்ஷினி.
வானதி இருந்த மனநிலையில் அவள் முதலில் கேமவர்ஷினியைக் கண்டு கொள்ளவில்லை, அவள் கையைக் குறுக்கே நீட்டிய பின்னர் தான் வானதிக்கு சுற்றுப்புறம் புரிந்தது.
"என்ன வேணும் உங்களுக்கு.."
"எனக்கு என்ரை ஆரு வேணும்.."
"ஆரு அந்த ஆரு அதை ஏன் என்னட்டை வந்து கேக்குறியள்.."
"ஏய் என்னடி கொழுப்பா.. ஆருவை உனக்கு தெரியாதா.."
"உங்கடை பிரச்சினை தான் என்ன.. சும்மா போனவளை நிப்பாட்டி வைச்சு ஆரு மோரு எண்டு கொண்டு நிக்கிறியள்.."
"சரி நான் நேரடியா விஷயத்துக்கே வாறன்.. அருண்மொழி எனக்கு வேணும் நீ அவரை விட்டுத் தூரமாப் போயிரு.."
"ஓ.. ஆனா அவரை விட்டு நான் தூரமாப் போனா அவரு உங்களுக்குக் கிடைச்சிருவாரா.."
"நீ போனாக் கண்டிப்பாக் கிடைப்பாரு.."
"இவ்வளவு காலமும் தூரமாத் தானே போயிருந்தனான்.. அப்போ அவரு ஏன் உங்களுக்குக் கிடைக்கேல்லை.."
"என்னடீ.. அவரு உன்னையே நினைச்சுட்டு இருக்காரேங்கிற திமிரா.."
"எனக்கு பெயர் இருக்குது மிஸ் கேமவர்ஷினி.. என்னை டி போட்டு பேசுற உரிமையை நான் உங்களுக்கு குடுக்கேல்லை எண்டு நினைக்கிறன்.."
"வேலைக்கார கழிசடைக்கு மரியாதை ஒரு கேடா.. உனக்கெல்லாம் ஆருவை நினைச்சுப் பாக்கவே தகுதி இல்லை புரிஞ்சுதா.. நீயா வந்த வழியைப் பாத்துக் கொண்டு ஓடிப் போயிரு.. இல்லைன்னா இருந்த தடயம் கூட இல்லாமல் உன்னையும் உன்ரை பிள்ளையளையும் அழிச்சுப் போடுவன்.. "
எனக் கேமவர்ஷினி எகத்தாளமாக சொல்ல, அவ்வளவு தான் அது வரை பொறுமை பொறுமை என நின்றிருந்த வானதியின் பொறுமை பொசுக்கென்று பறந்து போய் விட
"வழியை விட்டு நில்லுடி வெங்காயம்.. என்ரை பிள்ளையளிந்தை அப்பனைத் தாண்டி அவங்களோட நிழலைக் கூட உன்னால தொட முடியாதுடி"
என்று கொண்டே விலகிப் போனவள், அங்கே நின்று மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
"இந்தா பாரு நேத்துவரை எப்புடியோ தெரியாது.. ஆனா இப்போ இந்த நிமிஷம் சொல்றன் நல்லாக் கோட்டுக்கோ.. என்ரை அருண் எனக்கு மட்டும் தான் சொந்தம்.. அவரோட குழந்தையளுக்கு நான் மட்டும் தான் அம்மா.. வீண் கனவு கண்டு நேரத்தை வேஸ்ட் பண்ணாம வந்த வழியைப் பாத்துப் போயிரு.. எனக்கு ஏக்கனவே உன்னில கொலைவெறியே இருக்கு.. நீ முன்ன செஞ்ச கேவலமான வேலையளுக்கு ம் அப்புடினு சொன்னாலே போதும்.. என்ரை அருண் உனக்குன்னு குந்தக் குடிசை கூட இல்லாம ஆக்கீருவாரு.. ஆனா நான் அப்புடி செய்ய மாட்டேன்.. ஏன்னா நான் கேமவர்ஷினி கிடையாது.. நான் அருண்மொழியோட வானதி.. அவரு என்ரை கழுத்தில தாலி கட்டத் தான் போறாரு அதை நீ பாத்து வேகத் தான் போறாய்.. இது நடக்குதா இல்லையானு பாரு.."
எனும் போதே வானதிக்கு கண்கள் கலங்கி விட்டது.
தன் அருணைத் தான் எப்படி எல்லாம் மனது நோக வைத்திருப்பேன் என்கிற எண்ணமே அவளது அழுகையை வெடிக்கச் செய்யப் போதுமானதாக இருந்தது, அப்போதே முடிவு செய்து விட்டாள் அருண் கையால் தாலி வாங்கிக் கொண்டு அவனோடு நீண்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று.
ஆனாலும் கேமவர்ஷினியின் முன்னால் தன் அழுகையைக் காட்டக் கூடாது என்கிற வைராக்கியத்திலும், அருண்மொழியின் மார்பில் சாய்ந்து ஒரு மூச்சு அழ வேண்டும் என்கிற ஏக்கத்திலும், அவனைத் தேடிக் கொண்டு ஓடிப் போனாள் வானதி.
அப்போது தான் அவன் தன் பெற்றோரது திதி விஷயம் பற்றிப் பெரியவர்களோடு பேசிக் கொண்டிருந்தான்.