சுவரோடு சாய்ந்தபடி தன்னையே பார்த்திருந்தவளையே பார்த்திருந்தான் அருண்மொழி.
அவள் அவனை வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு சொன்ன போது வந்த கோபத்தில், அவன் தன் கையை வெட்டிய காயம் கொடுத்த மனத்தின் ரணம் இன்னும் ஆறவேயில்லை, அதற்குள் என்ன குண்டு போடப் போகிறாளோ என்பது போல அவன் நின்றிருந்தான்.
ஆனால் வானதியோ, அவனது நீலவிழிகளைப் பார்த்தபடியே அவனை நெருங்கி வந்து நின்று கொண்டாள், அவளது மூச்சுக் காற்று இப்போது அவனது மார்பில் பட்டு அவனது மனக் கொதிப்பை இன்னும் அதிகரிப்பது போல இருந்தது.
கை முஷ்டி இறுக நின்றிருந்தவனின் கையைப் பிடித்து, அவனது இறுக்கமாக இருந்த விரல்களை மெல்லத் தளர்த்தியபடியே அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள் வானதி.
அந்த முகத்தில் தோன்றும் ஒவ்வொரு உணர்வும், அவளை அடிப்படையாகக் கொண்டே தோன்றும், தோன்றி மறையும், இப்பேர்பட்ட அன்பு கிடைக்க தான் என்ன தான் செய்தேன் என்கிற கேள்வி அவளுக்கு அந்த நேரத்திலும் தோன்றாமல் இல்லை.
அருண்மொழியின் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த பார்வை, அழுந்த மூடிய உதடுகள், மெல்ல வெளியே துருத்திக் கொண்டு இருந்த கன்னத்து எலும்புகள் என எல்லாமே அவனது கோபத்தை அவளுக்கு அப்பட்டமாகப் பறைசாற்றியதோடு, அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவளுக்குத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது.
தன் இடது கையை அவனது மார்பில் வைத்து அழுத்தியவள், வலது கையால் அவன் கன்னம் பற்றி தன் முகம் பார்க்க வைத்தாள்.
இப்போது இருவரது பார்வையும் ஒரு நேர்கோட்டில் சந்திக்க, அருண்மொழியின் உயரத்துக்கு மெல்ல எம்பி உயர்ந்த வானதி, தன் கண்களை இறுக மூடியபடி அவனது உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
இறுகிப் போயிருந்தவனது உடல் மெல்ல இளக, மூடியிருந்த அவள் கண்களையே பார்த்தபடி, அவளது முதல் முத்தத்தை மெல்ல உள்வாங்கினான் அருண்மொழி.
சில நொடிகளில் அவனிடம் இருந்து விலகியவளோ, மீண்டும் அவன் முகம் நோக்கி
"என்னைக் கல்யாணம் கட்டிக்கிறீங்களா அருண்.."
என அவன் விழிகள் பார்த்துக் கேட்க, அந்த நொடி எப்படி உணர்ந்தான் என அருண்மொழிக்கே தெரியவில்லை என்பது தான் உண்மை.
"வானம் என்னடி சொல்றே.."
"என்னையக் கலியாணம் கட்டிக்கிறியளா எண்டு கேட்டனான்.."
"உண்மையாவா.."
"ஆமா..
"நிஜமாவா.."
"உண்மையாக.. நிஜமாக.. மெய்யாக சத்தியமாக.. வேறை எப்புடிச் சொல்லோணும்.."
"இதுக்குப் பின்னால வேறை ஏதாவது டிமாண்ட் இருக்குமோனு யோசனையா இருக்கே.."
என்றவனின் கன்னத்தை எட்டிப் பிடித்தவள்
"இப்ப தாலி கட்டினாக் கூட கழுத்தை நீட்ட நான் ரெடி தான்.."
என்று சொல்ல, அவளறியாமல் தன்னைக் கிள்ளிப் பார்த்துக் கொண்டான் அருண்மொழி.
அதைக் கண்டு கொண்ட வானதிக்கு ஒரே சிரிப்பாகப் போய் விட்டது, சட்டென்று அவன் கன்னத்தில் நறுக்கென்று கடித்து வைத்தாள், மெல்லிய புன்னைகையோடு அவளை அப்படியே தூக்கித் தட்டாமாலை சுற்றினான் அருண்மொழி.
"ஐயோ அருண்.. இறக்கி விடுங்கோ தலையைச் சுத்துது.."
"என்னை எப்புடிலாம் சுத்தல்ல விட்டடி நீ.."
"தப்பு தான் தப்பு தான்.. மன்னிச்சூ.."
"இனி மன்னிப்புங்கிற வார்த்தைக்கே இடமில்லை.. நேரடியா பணிஷ்மென்ட் தான்.."
"என்ன பணிஷ்மென்ட்.."
"தாலி கட்டி சட்டைப் பைக்குள்ளயே போட்டிட்டு சுத்துறது தான்.."
"ஆளை விடுங்கோ.."
என்று கொண்டு கீழே இறங்கி, ஓடப் பார்த்தவளை ஒரு எட்டில் பிடித்து இழுத்தவன், தன் கை வளைவுக்குள் அவளைக் கொண்டு வந்து, தன் இதழ்களால் அவள் இதழ்களை மூடினான்.
கணங்கள் வேகமாகக் கரைய, வானதியை மெல்ல விடுவித்த அருண்மொழி
"ஆக்சுவலி நான் நல்ல பையன்டீ.. என்னைக் கெடுத்ததே நீ தான்.. இனி ஸ்ரெயிட்டா வெடிங் தான்.."
என்று கொண்டே அவள் மூக்கோடு மூக்கு உரச, அழகாக முறுவலித்தாள் அவனின் வானதி.
"சரி வா.. ஐயாட்டையும் அம்மாட்டையும் சொல்லுவோம்.."
"ஐயானு கூப்பிடுறதுக்கு பதிலா அப்பானு சொல்லலாமே அருண்.."
"சொல்லலாம் தான்.. ஆனா கூப்பிட வருதில்லைடீ.."
"அதெல்லாம் வாயைத் திறந்தால் தன்னால வந்திட்டுப் போகப் போகுது.."
"நீ கூடவே நில்லு.."
"உங்க கூட நிக்கிறது மட்டும் தான் இனி என்னோட வேலை.."
"உன்னை என்னால புரிஞ்சிக்கவே முடியலைடீ.."
"ஏனாம்.."
"எடுத்தா மொட்டை வைச்சா குடுமி மாதிரியே பண்றே.."
"அதாவது தாங்கள் சொல்ல வருவது.."
"பாசம் வைச்சா ஒரேயடியா கொட்டி மூச்சு திணற வைக்கிறே.. பிரிஞ்சு போனா உன்னோட நிழலைக் கூடப் பாக்காத மாதிரி பண்றே.."
"என்ன செய்ய அருண்.. எனக்கு நாலு வார்த்தை நல்லதா சொல்லி வழி நடத்த பெரியவங்கனு ஆருமே இருக்கேல்லை.. எனக்குத் தோணுறதை லூசுத் தனமா செய்திட்டு உங்களையும் காயப் படுத்துட்டு இருந்திருக்கிறன்.. இதுக்கு மன்னிப்பே கிடையாது.."
"பாத்தியா உடன டவுன் ஆகிட்டே.. சும்மா சொன்னேன்டி.. ஃப்ரீயா விடு.. அதோட முடிஞ்சு போனதை நினைச்சுப் பாக்கவே நமக்கு இப்போ டைம் இல்லையே.."
என்று கொண்டு, வானதியோடு வெள்ளையத்தேவரையும் கனகத்தையும் பார்க்க விரைந்தான் அருண்மொழி.
குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்த பெரியவர்கள், இவர்கள் இருவரும் வந்ததை முதலில் கவனிக்கவில்லை, யாழ்மொழி தான் அருண்மொழியைக் கண்டதும் 'ப்பாஆ.. ப்பாஆ..' என்று தவ்விக் குதிக்க தொடங்கினாள், அப்போது தான் கனகம் வாசலைத் திரும்பிப் பார்த்தார்.
ஜோடியாக வந்த இருவரையும் பார்த்ததும் மனதுக்குள் சந்தோஷமாக இருந்தது அவருக்கு, பக்கத்தில் இருந்த கணவனை மெல்லச் சுரண்டி கண்ணால் வாசலை ஜாடை காட்டியவர் தலையைக் குனிந்து கொள்ள, அது அருண்மொழியின் நீல விழிகளுக்குத் தப்பவேயில்லை.
உள்ளே வந்த வானதியோ பெரியவர்கள் இருவரையும் பார்த்து "அம்மாவும் அப்பாவும் கொஞ்சம் எழும்பி நிக்கிறீங்களோ.."
என்று சொல்ல, ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவரும் எழுந்து நின்று கொண்டார்கள்.
அருகில் நின்றிருந்த அருண்மொழியின் கையை இறுகப்பற்றிக் கொண்டவள், தங்கள் இருவரையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா அப்பா என்று கொண்டு பெரியவர்கள் இருவரதும் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்ய, தானும் அவளோடு இணைந்து கொண்டான் அருண்மொழி.
அவர்கள் அப்படி விழுந்து கும்பிடவும், பதறிக் கொண்டு விலகப் பார்த்த கனகத்தின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் வானதி.
"ஐயோ என்ன பிள்ளை நீ.. இந்த மாதிரி ஆசிர்வாதம் எல்லாம் பிள்ளை குட்டி பெத்து நிறைவா வாழுறவை செய்ய வேணும்.. நான் இல்லை.."
என்றவரது வாய் மீது எழுந்து கையை வைத்து, அவர் அடுத்த வார்த்தை பேசாமல் தடுத்தாள் வானதி.
"ஆசிர்வாதம் செய்ய நல்ல மனசு மட்டும் இருந்தால் போதும் அம்மா.."
என்று கொண்டே அவரை இறுக அணைத்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.
வெள்ளையத்தேவரோ அருண்மொழியைத் தொட்டுத் தூக்கி விட்டு அடுத்தது என்ன செய்ய என்பது போல நின்றிருக்க, கனகத்தை அணைத்து முத்தமிட்ட வானதியை ஒரு பார்வை பார்த்த அருண்மொழி, என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென்று வெள்ளையத்தேவரைக் கட்டிக் கொண்டு அவரது கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்து
"ஐ லவ் யூ சோ மச் டாடி.."
என்று சொல்ல, அவரோ
"அடேய் வாயை மூடுடா.."
என்று பதறிக் கொண்டு சட்டென்று வானதியைப் பார்த்து விட்டு, சுற்றிவர நோட்டமிட்டார்.
இருவரையுமே பார்த்துக் கொண்டிருந்த வானதி என்னவென்பது போல், கேள்வியாகப் புருவங்களை உயர்த்தினாள்.
"என்ன சொல்லீரலாமா.."
என்று கொண்டே கனகத்தைப் பார்த்த அருண்மொழியைக் கண்களால் அடக்கிய அவர்
"தேவையத்த பேச்சை விட்டிட்டு.. கல்யாண வேலையளைப் பாருங்கப்பா.."
என்று கொண்டே குழந்தைகளிடம் திரும்பிக் கொள்ள
"நாளைக்கே ஒரு நல்ல நாள் இருக்கிறதா ஜோசியர் சொல்லி இருக்கிறார்.. கலியாணத்தை நாளைக்கு காலையிலயே சிம்பிளா முடிச்சிட்டு பிறகு ரிஷப்ஷன் போல வைச்சுக்கலாம்.."
என்று கொண்டே வெள்ளையத்தேவர் வேலைகளைக் கவனிக்க வெளியே போய் விட, அருண்மொழியின் பக்கம் வந்த கனகம் அவனை ஒரு பார்வை பார்த்தார்.
அந்தப் பார்வைக்கு என்னவென்பதைப் போல அவன் புருவங்களை உயர்த்த, அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்
"எதுக்கும் நாளைக்கு கல்யாணம் ஒழுங்காக முடியட்டும்.. அதுக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம்.."
என்று விட்டு அவர் போய்விட்டார்.
"என்ன அருண்.. அப்பாவும் அம்மாவும் ஏதவோ விசித்திரமா நடந்துக்கிற மாதிரிக் கிடக்குதே.."
"இருக்காதா பின்னே.. நீ எப்போ திரும்பவும் முருங்கை மரம் ஏறிவாய்னு அவங்களுக்கும் இருக்கும் தானே.."
"என்னது.."
"அது தான்டி.. திடீர்னு வந்து இது சரியில்லை முறையில்லை இந்தக் கலியாணம் வேண்டாம் அப்புடினு வசனம் பேசுவியோனு பயம்.. அது தான் கல்யாணம் முடியும் மட்டும் உன்னை நம்பத் தயங்குறாங்க.."
"அது தான்.. நான் சொல்லீட்டனே நீங்கள் இப்ப தாலியைக் கட்டினாக் கூட நான் கழுத்தை நீட்ட ரெடினு.."
"அதை நாளைக்கு மார்னிங் ஒப்பேற்றிக் காட்டி அவங்களை நம்ப வை.."
என்றவன் அலைபேசியில் யாரையோ அழைத்துப் பேச, அடுத்த அரைமணி நேரத்தில், அந்தப் பெரிய அறையில் புடவைக் கடையும் நகைக்கடையும் வந்து அமர்ந்து கொண்டன.
"என்ன இதெல்லாம் அருண்.."
"கல்யாணத்துக்கு வேண்டிய சாரி.. அப்புறம் ஜீவல்லரி எல்லாம் எடுத்துக்கோ.."
"இதெல்லாம் எதுக்கு இப்போ.."
"அப்போ கல்யாணம் பத்தி பேசினது எல்லாம் பொய்யா வானம்.."
"அச்சோ அப்புடி எல்லாம் இல்லை அருண்.."
"அப்போ உனக்கு பிடிச்சதை எடுத்து ப்ரூவ் பண்ணு.."
"அப்புடி எடுத்து தான் ப்ரூவ் பண்ணனுமோ.."
"வேறை வழி ஏதாவது சொல்லவா.."
என்று கொண்டே வானதியின் கண்களில் இருந்து அவனது பார்வை அவளது இதழ்களில் மெல்லப் படிய, அவனது பார்வையில் நெளிந்தவள் சட்டென்று பார்வையைத் தாழ்த்தி
"நான் சாரியையே எடுக்கிறனே.."
என்று சொல்ல, அவளது செயலில் உல்லாசமாகச் சிரித்தான் அருண்மொழி.
"பேபி.. இப்புடி செலக்ட் பண்றது கஷ்டம்னா.. ப்ரூவ் பண்ண வேறை வழி நிறைய இருக்குடி.."
"ஒண்ணுந் தேவையில்லை.. நீங்கள் உங்கடை திருவாயை மூடினாலே போதும்.."
"நிஜமாவா.."
என்று கொண்டே அவன் அவளருகே வர,
"சுத்தி வர ஆளுங்க இருக்கினம் அருண்.. கொஞ்சம் நேரம் சும்மா இருங்களேன்.."
என்று கொண்டே அவன் நெஞ்சில் கைவைத்து மெல்லத் தள்ளி விட்டவளின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அவளையே பார்த்தவன், அடுத்த நொடியே அங்கே இருந்தவர்களை வெள்ளையத்தேவரிடம் அனுப்பி விட்டான்.
அந்தப் பெரிய அறையில் இப்போது அவனும் அவளும் மட்டும் தான் அமர்ந்திருந்தார்கள், குனிந்த தலை நிமிராமல் இருந்த வானதிக்கு, சத்தம் செய்யாமல் எல்லோரும் வெளியே போனது தெரியவில்லை.
"ஆளுங்க இல்லைனா ஏதாவது போனஸ் கிடைக்குமா பேபி.."
"அடி வாங்கப் போறீங்கள் நீங்கள்.. வர வர சரியான மோசம்.."
"மோசமாக்கினதே நீதானேடி.."
"ஐயோ கடவுளே.. இப்ப உங்களுக்கு என்ன தான் வேணுமாம்.."
"கேட்டாக் குடுப்பியோ.."
என்று கொண்டே இன்னும் நெருக்கமாக வந்தவனை, மெல்லிய பதட்டத்தோடு பார்த்தவள், அப்போது தான் சுற்றுப்புறத்தைக் கவனித்தாள்.
"இவங்கள் எல்லாம் எப்போ போனாங்கள்.."
"நீ.. சுத்தி வர ஆளுங்க இருக்கினம் அருண்ணு சொல்லும் போதே போயிட்டாங்கள்.."
"ஓஹோ.."
"ம்ம்ஹும்.."
என்றவன் அவளையே இமைக்காமல் பார்க்க, அவன் கன்னத்தைப் பிடித்து இதழை ஒற்றி எடுத்தவள், ஓடியே போய்விட்டாள்.
"இதுக்கு பேரு கிஸ் இல்லைடீ.."
என்ற அருண்மொழியின் உல்லாச வார்த்தை மட்டும் அவளைத் தொடரத் தவறவில்லை.