தான் அழைக்க அழைக்க நிற்காமல் சென்ற தங்கையின் உருவம் மறையும் மட்டும் அசையாமல் நின்றிருந்தாள் வெண்ணிலா, அவளது கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் தாரை தாரையாக ஓடிக் கொண்டே இருந்தது.
சகோதரிகள் இருவருக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்ட ஜனகன், மெல்ல வெண்ணிலாவின் பின்னால் சென்று நின்று கொண்டான்.
அவள் அழுவதை அவன் உணர்ந்தாலும் எவ்விதம் அவளை சமாதானம் செய்வது என தெரியாமல் அவன் அப்படியே நிற்க, ஏதோ ஓர் உந்துதலில் திரும்பிப் பார்த்த வெண்ணிலா அவனைக் கண்டதும் வாய்விட்டு அழுது கொண்டே அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் அவ்விதம் தன் மீது சாய்ந்து கொள்வாள் என்பதை எதிர்பாராத ஜனகன், ஒரு கணம் அப்படியே அதிர்ந்து நின்றாலும் கூட அடுத்த கணமே தன்னை சுதரித்துக்கொண்டு ஆறுதல் போல அவளது தலையை மெல்ல கோதி விட்டான்.
"என்னாச்சுடா.."
"நான் செய்றது சரி எண்டு நினைச்சுக் கொண்டு.. நதியின்ரை மனசைக் காயப் படுத்திட்டேன் ஜனா.."
"சரி இப்போவாச்சும் அது உனக்கு புரிஞ்சிட்டுது தானே.."
"நதி என்னை மன்னிக்கவே மாட்டாளோண்டு பயமா இருக்கு ஜனா.."
"அப்புடி எல்லாம் இல்லை நிலா.. அவளும் பாவம் தானே.. உங்களுக்குள்ள நடந்தது என்ன எண்டு எனக்கும் தெரியேல்லை.. ஆனா நீ உசிரோட இல்லை எண்டுற அந்த வலியை அவள் எவ்வளவு தூரம் அனுபவிச்சு இருப்பாள் எண்டு நினைச்சுப் பாரு.."
"இந்த மரமண்டைக்கு இப்பத் தான் எல்லாமே உறைக்குது ஜனா.. எனக்குத் தாலி கட்டின கேடு கெட்டது செய்த வேலையால நான் லூசுத்தனமா யோசிச்சு லூசுத்தனமா முடிவு எடுத்திட்டன்.."
"சரி சரி.. நடந்தது எல்லாம் போகட்டும் இனி நடக்கப் போறதைப் பத்தி யோசிப்பம்.. நீ முதல்ல டீ குடிச்சியோ.. உள்ள வா முதல்ல சூடா ஒரு டீ குடி எல்லாம் சரியாயிடும்.."
என்று கொண்டே அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்து விட, அவன் கைகளை இறுகப் பிடித்துக் கொண்ட வெண்ணிலாவோ
"நான் ஒண்டும் தப்பான பொண்ணு கிடையாது ஜனா.."
என மீண்டும் கண்கள் கலங்கச் சொன்னாள்.
அப்படியே அவளது விழிகளையே பார்த்திருந்தவனோ
"என்ரை நிலா எப்பேர்ப்பட்ட பொண்ணு எண்டது எனக்குத் தெரியாதோ.."
என்று சொல்ல, அவளது அழுகையோ இன்னும் கூடிப் போனது.
இருவருக்குமே இருவரையுமே மிகவும் பிடித்துப் போனது, ஆனால் தங்கள் விருப்பத்தைச் சொல்லிக் கொள்ள இருவருக்குமே தடையும் இருந்தது.
ஜனகனை பொறுத்தவரை, வெண்ணிலா தன் கணவனின் கொடுமைகளைத் தாங்கிக் கொள்ளாமல் தற்கொலை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த பெண், அப்படிப் பட்டவளை அடைக்கலமாக அழைத்து வந்துவிட்டு, அவளிடம் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் அப்படி இப்படி என வசனம் பேசினால் கண்டிப்பாக அவள் பயந்து போய் விடுவாள் தன் காதலை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று நினைத்துக் கொண்டான்.
வெண்ணிலாவைப் பொறுத்தவரை,
தான் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பெண், கணவனின் கொடுமைகளால் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து ஒரு ஆண்மகனின் வீட்டில் அடைக்கலமாக இருந்த பின்னர், அவனது செயல் நடத்தைகளில் ஈர்க்கப்பட்டு அவன் மீது காதல் வயப்பட்ட பின்னர் அவனிடம் தன் காதலைச் சொன்னால் எங்கே தன்னைத் தவறான பெண்ணாக நினைத்து விடுவானோ என்கிற தயக்கம் அவளுக்கு.
இருவரது காதலும் தயக்கமும் உள்ளேயே பூட்டிக் கிடந்ததால், அவனது நிலா என்ற அழைப்பை அவளும், அவளது ஜனா என்ற அழைப்பை அவனும் இது நாள் வரை கவனிக்கத் தவறி விட்டார்கள் என்றே சொல்லலாம்.
ஆனால் இன்றைய அவளது தோள் சாய்தல் படலமும், அவனது ஆற்றுப்படுத்தல் படலமும் இருவரது மனதையும் இருவருக்கும் தெளிவாகக் காட்டிக் கொள்ள ஒரு அடித்தளமாக அமைந்தது என்று தான் சொல்லலாம்.
அதன்படி தன் தயக்கம் துறந்து ஜனகன் தன் காதல் பற்றிப் பேச, அவளும் தன் தயக்கம் துறந்து அவன் மீதான நேசத்தை வெளிப்படுத்தினாள்.
"நிலா.. நான் உன்னை ஒண்டு கேப்பன் அதுக்கு உண்மையா உன்ரை மனசாட்சியைத் தொட்டுப் பதில் சொல்லுவியோ.."
"நான் உங்களிட்டை மட்டும் தான் உண்மையாப் பேசுறன் ஜனா.."
"சரி தான்.. இருந்தாலும் ஒரு தெளிவுக்காக கேட்டனான்.. உனக்குத் தாலி கட்டினவன் தேடி வந்து உன்னை வீட்டை வா அப்புடினு கூப்பிட்டால் நீ போயிடுவியோ.."
"சத்தியமாப் போக மாட்டன்.."
"ஏன்.."
"எனக்கு இங்க இருந்து போக மனமில்லை.."
"ஒரு வேளை அவன் திருந்தி வந்து கூப்பிட்டால்.."
"எப்புடி வந்து கூப்பிட்டாலும் நான் போக மாட்டன்.."
"காரணம் இந்த இடம் மட்டும் தானோ.."
"இல்லை.."
"அப்போ.."
"நீங்களும் தான்.."
"புரியலை.."
"உங்கடை நிழல்ல நான் நிம்மதியாத் தான் இருக்கிறன்.. அதனால எனக்கு எங்கயும் போக வேணும் எண்டு தோணேல்லை.."
"நாளைக்கு பின்ன எனக்கு கல்யாணம் ஆகிட்டா.."
"உங்களுக்குத் தொல்லை தராமல் தூரமாப் போயிடுவன்.."
எனும் போதே, அதுவரை நிறுத்தப் பட்டிருந்த கண்ணீர் குபுக்கென்று கீழே இறங்கியது அவளுக்கு.
அவளது மனநிலையை அதற்கு மேலும் கேள்வி கேட்டு காயப் படுத்த விரும்பாதவனோ, முடிவில்
"என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா நிலா.. உன்னை ராணி மாதிரி வைச்சுப் பாத்துப்பன் எண்டு வசனம் எல்லாம் பேச மாட்டேன்.. உன்னோட என்ரை மிச்ச வாழ்க்கையை வாழ விரும்புறன் அவ்வளவு தான்.."
எனக் கேட்டே விட்டான்.
அவனுக்கு எதிரே இருந்த கதிரையில் அமர்ந்திருந்த வெண்ணிலா, அப்படியே அவன் காலில் விழுந்து அவன் காலைக் கட்டிக் கொண்டு தன் கண்ணீரால் அவன் கால்களை நனைத்தாள்.
ஏதாவது பதில் சொல்லுவாள் என ஜனகன் எதிர்பார்த்திருக்க, அவள் அப்படிக் காலில் விழுவாள் என்பதை எதிர்பாராத அவன் தானும் கீழே அமர்ந்து, அவளைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டான்.
"உனக்கு நிஜமாவே என்னைப் பிடிச்சிருக்குதோ.."
"ம்ம்.. உங்களுக்கு என்னைப் பிடிக்குமா.."
"பிடிக்காமலோ இப்புடிக் கட்டிக் கொண்டு கிடக்கிறன்.."
"சட்ட ரீதியா என்ரை கல்யாணம் ரிஜிஸ்டர் ஆகலை ஜனா.."
"அப்போ இன்னும் நல்லதா போச்சுது.. அதெல்லாம் பாத்துக்கலாம் நீ ஃப்ரீயா விடு.. வா இப்போ உன்ரை தங்கச்சியைப் பாத்திட்டு வரலாம்.."
"இல்லை வேண்டாம்.. அவ என்னில செம கோபமா இருக்காள்.. ஒரு ரெண்டு நாள் போகட்டும் பாத்துக்கலாம்.."
"நிஜமாவா.."
"ம்ம்.."
"சரி உன்னோட விருப்பம்.. உள்ள வா டீ போட்டுக் குடிக்கலாம்.."
"அதெல்லாம் சரி தான்.. உங்கம்மா என்னைய ஏத்துப்பாங்களோ.."
"ஏத்துக்கலைனா என்ன செய்றதா உத்தேசம்.."
"என்ன செய்யோணும்.."
"வாயை மூடீட்டு எனக்கு கழுத்தை நீட்டோணும்.."
"ஓ.. ஆனா ஏன்.."
"ரொம்ப கஷ்டம்டா ஜனகன் உன்ரை வாழ்க்கை.."
"ஏன் அப்புடி.."
"சப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே.."
"ஏன் ஜனா உடம்புக்கு ஏதும் முடியலியோ.."
"இங்க பாரு என்ரை முகத்தைப் பாரு நிலா.. எப்பவுமே சீரியஸா இருக்கோணும் எண்டு இல்லை.. கொஞ்சமாச்சும் சிரிச்சுப் பேசு.. ஏதாவது ஜோக் சொன்னா சரி சரியா.."
"இப்போ நீங்கள் ஜோக் ஏதாவது சொன்னீங்களோ.."
"இல்லையா பின்னே.."
"மூடிட்டு போய் வேலையைப் பாருங்கோ.. கடுப்பைக் கிளப்பாம.."
"என்னடி பொசுக்குனு இப்புடிச் சொல்லீட்டாய்.."
"பின்ன என்னவாம்.. எனக்கே உள்ளூர பக்கு பக்குனு அடிக்குது.. நான் என்ன புதுப் பொண்ணா உடனே வாம்மா மருமகளேனு ஆராத்தி எடுத்துக் கூப்பிட.. ஏற்கனவே கல்யாணம்ங்கிற பேரில நரகத்தைப் பாத்து.. ஒரு குழந்தையைப் பெத்தவ.. அப்புடிப் பட்ட என்னை வீட்டு மருமகளா ஏத்துப்பாங்களா மாட்டாங்களானு மனசுக்குள்ள பதட்டம் இருக்காதோ சொல்லுங்கோ.. அப்புடி பதட்டம் இல்லாட்டிக்கு என்னை மனுஷஜாதினே சொல்ல மாட்டங்கள் புரியுதோ.."
"நல்லாவே புரியுது.. ஆனா எங்கம்மா கண்டிப்பா உன்னை ஏத்துப்பாங்க.."
"எப்புடி.."
"எங்கம்மாவும் எங்கப்பாவை ரெண்டாந் தாரமாத் தான் கட்டிக்கிட்டாங்க.. அதுலயும் கையில கைக்குழந்தையா இருந்த என்னோட தனியா நின்ன அம்மாவை எங்கப்பா காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.. அதனால உன்ரை வலி வேதனை அவங்களுக்கு புரியும்.."
"என்ன ஜனா சொல்றீங்கள்.."
"ஓம் நிலா.. எங்கம்மாவுக்கு முதல் கல்யாண வாழ்க்கை சரியா அமையலை.. நான் பிறந்து அஞ்சு மாசத்துலயே என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்திட்டாங்க அம்மா.. கைக்குழந்தையோட வேலை தேடி அலைஞ்ச அவாக்கு எங்கப்பா தான் வேலை போட்டு குடுத்து தங்க வீடும் குடுத்தாங்க.. பிறகு அப்பாவுக்கு அம்மாவைப் பிடிச்சுப் போச்சுது.. ரொம்ப கஷ்டப் பட்டு தான் அம்மாவை சம்மதம் சொல்ல வைச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.."
"கேக்கும் போதே புல்லரிக்குதுல்ல.. பொதுவா ஆண்கள் என்றாலே ஒரு தப்பான அபிப்ராயம் தான் என்ரை மனசுக்குள்ள இருந்தது.. ஆனா உங்களைப் பாத்த பிறகு தான் என்ரை எண்ணம் எவ்வளவு பிழை எண்டு எனக்கே புரிஞ்சது.. தவறு செய்ற ஆண்களை வைச்சுக் கொண்டு ஒட்டுமொத்த ஆண் வர்க்கத்தையே தப்பா நினைக்க கூடாது எண்டு.. உங்க அம்மாவோட கதையைக் கேட்ட இந்த நிமிஷம் புரிஞ்சு கொண்டன் ஜனா.."
"உன்னையும் தப்பு சொல்ல முடியாது தானே நிலா.. நீ பாத்து வந்த சமுதாயத்தில இருந்த ஆண்கள் உனக்கு அந்த மாதிரியான எண்ணத்தை உண்டு பண்ணீட்டாங்கள் அவ்வளவு தான்.."
"ம்ம்.."
"சரி சரி கண்டதையும் போட்டுக் குழப்பாமல் எழும்பி வா.. அம்மாட்டை ஆசிர்வாதம் வாங்கீட்டு வருவம்.."
என்று கொண்டே அவளது கைப் பிடித்து தன் தாயிடம் ஆசிர்வாதம் வாங்கப் போனான் ஜனகன்.
எல்லையில்லாத நிம்மதியோடு அவனது கையோடு தன் கையைக் கோர்த்து இறுகப் பிடித்துக் கொண்டாள் வெண்ணிலா.
அந்த நொடி தன் வாழ்வில் நடந்த துன்பம் துயரம் எல்லாம் அவளுக்கு முன் ஜென்மத்தில் நடந்த விடயமாகித் தூரமாகிப் போனதை உணர்ந்தாள் அவள்.
உள்ளே அமர்ந்து மகாபாரதம் படித்துக் கொண்டிருந்த ஜனகனின் தாய் மரகதத்தின் முன்னால், கரம் கோர்த்தபடி போய் நின்ற அந்த ஜோடியை நிமிர்ந்து பார்த்த அவர் மெல்ல முறுவலித்தபடி எழுந்து நின்றார்.
"அப்பாடா.. ஒரு வழியா நான் ஆசைப் பட்டது நடந்திட்டுது.. இப்பவாச்சும் அந்தக் கடவுள் கண்ணைத் திறந்தாரே அதுவே போதும்.."
என்று கொண்டே இருவரையும் சேர்த்து அணைத்துக் கொண்டு
"நீ வர்ரதுக்கு முன்னாடி வரை.. கல்யாணமே வேண்டாம்னு சுத்தீட்டுத் திரிஞ்சாம்மா இந்தப் பன்னாடை.. பெத்த மனசுக்கு எப்புடி இருக்கும் சொல்லு.. வைச்சிருக்கிறதே கறிவேப்பிலைக் கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு தான்.. அதாவது காலாகாலத்துல கலியாணத்தைக் கட்டி நமக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் குடுக்கும் எண்டு பாத்தா.. அது என்ரை தலையில டிசைன் டிசைனாக் குண்டு போட்டுக் கொண்டு திரிஞ்சுது.. இப்பத் தான் கொஞ்ச நாளா ஐயா வீட்டை வீட்டையே சுத்தீட்டுத் திரிய வெளுக்கிட்டாரு.. அப்ப தான் விசியம் எனக்கே விளங்கிச்சுது.. எது எப்புடியோ சீக்கிரமாக் கலியாணம் கட்டுற வழியைப் பாருங்கோ.. இன்னும் மூண்டு நாளுல ஒரு நல்ல நாள் வருது.. அதுல கூட முடிச்சிக்கலாம்.."
என மடைதிறந்த வெள்ளம் போலக் கொட்ட, மாமியார் ரூபத்தில் தன் முன்னால் தன் தாயைக் கண்டாள் வெண்ணிலா.