• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீசன் (2) அசுரனின் குறிஞ்சி மலரே..37

Oct 31, 2021
323
15
63
29
Sri Lanka Jaffna
அருண்மொழி மற்றும் வானதியின் திருமணம் போலவே மிக மிக எளிமையாகத் தான் வெண்ணிலா மற்றும் ஜனகனின் திருமணமும் நடைபெற்றது.

வெண்ணிலாவின் கழுத்தில் ஜனகன் தாலி கட்டிய அந்த நேரம், தன் கணவன் தோளில் தன் முகத்தை மறைத்து, தன் அழுகையை நிறுத்த முயன்று கொண்டிருந்த வானதியின் தலையை மெல்லக் கோதியபடி
"அப்புறமா வீட்டுல போய் அழுறதுக்கு சான்ஸ் குடுக்கிறேன் பேபி.. இப்போ கண்ணைத் துடைச்சிக்கோ.."
என அருண்மொழி சொல்ல, சிரித்துக் கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவளோ, செல்லமாக அவன் தோளில் மெல்லக் குத்தினாள்.

அந்த நேரத்தில் அருண்மொழி அந்தக் கேள்வியைக் கேட்டான், அவனுக்கும் உள்ளூர அது தொடர்பான கலக்கம் இருந்தது என்பது உண்மை.

"ஏன் வானம்.. உங்கக்கா நம்ம ராஜேந்தனை கேட்க மாட்டாங்களா.."

"இல்லை அருண் கேக்க மாட்டா.."

"எப்புடி அப்புடி உறுதியா சொல்றாய்.."

"ஏற்கனவே இது தொடர்பா நாங்கள் கதைச்சு முடிச்சிட்டம் அருண்.."
என்ற வானதி நடந்து முடிந்ததை சொன்னாள்.

வெண்ணிலா குழந்தைகள் இருவரோடும் அமர்ந்திருந்த நேரம், அருகில் வந்து அமர்ந்து கொண்ட வானதி, தன் தமக்கையையே பார்த்திருந்தாள்.

"என்ன நதி.. என்ன விஷயம்.."

"அக்கா.. ராஜேந்தனை என்னட்டை இருந்து வாங்கீடுவியோ.."

"அந்த மாதிரியான ஒரு பாவத்தை நான் செய்யவே மாட்டன் நதி.."

"அக்கா.."

"ஓம் நதி.. என்னைப் பொறுத்தவரை இது எனக்கு மறுபிறப்பு.. அதோட ராஜேந்தன் உனக்காக பிறந்த குழந்தை அவன் உனக்கு மட்டும் தான் சொந்தம்.. அவனுக்கு நான் பெரியம்மா மட்டும் தான்.. அவன் கூட என்னை அப்புடித் தான் கூப்பிடுறான்.."

"அக்கா ரொம்ப நன்றிக்கா.."

"நன்றி எல்லாம் சொல்லி என்னைச் சங்கடப் படுத்தாத நதி.. உன்னை மாதிரியான அம்மாவா இருக்கத்தான் எனக்கும் ஆசை.."

"அதுக்கென்னக்கா டசினாப் பெத்துக்கோ.. நான் வேணுமெண்டால் அருண் மூலமா அண்ணாகிட்டே பரிந்துரை செய்யவா.."

"போடி இவளே.."
என்று கொண்டே வெண்ணிலா முகத்தை மறைத்துக் கொண்டாள்.

நடந்த விஷயத்தை அருணிடம் சொல்லி முடிக்கவும்
"அதென்னடி என் மூலமா உங்கண்ணாக்கு பரிந்துரை.."
என அவன் விளக்கம் கேட்க,
"ஒண்டுமில்லை சும்மா.."
என்று விட்டு வானதி நழுவிக் கொள்ள,
"இனி ஜனாவை என்னை பாஸ்னு சொல்லி கூப்பிட வேணாம்னு சொல்லுடீ.."
என அருண்மொழி சொல்ல, அதைக் கேட்டு மெல்ல முறுவலித்தான் ஜனகன்.

அந்த நேரத்தில் தான் அது நடந்தது, அவர்கள் இருந்த கோவில் மண்டபத்துக்குள் யாரோ திபுதிபுவென நுழைந்தார்கள்.

என்னவென பார்ப்பதற்குள் செல்வபதி, மஞ்சுளா, பொன்னம்பலம் மற்றும் கேமவர்ஷினி என முன்னால் வந்து நின்று கொண்டார்கள்.

அதிலும் செல்வபதி ஆடிய ஆட்டத்திலும் அவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியிலும், அர்ச்சகரே நடுநடுங்கிப் போனார் என்று சொல்லலாம், பாவம் அவருக்கு அது டம்மி துப்பாக்கி என்பது தெரியாது.

"யாரோட பொண்டாட்டிக்கு யாரு தாலி கட்டுறது.. அவள்ரை பேரில இருக்கிற சொத்தை ஆட்டையைப் போடுற பிளானோ.. மிஸ்டர் அருண்மொழி உன்னைப் பத்தி நான் என்னவோ நினைச்சன்.. ஆனா நீ கலியாணமாகி பிள்ளை பெத்தவளை கட்டினதும் இல்லாமல் என்ரை பொண்டாட்டிக்கு வேறை கள்ளக் கலியாணம் செய்றியோ.. இல்லாட்டால் அவளையும் வைச்சிருக்கிற பிளானோ.."
என இழுக்கவும் அவன் கன்னத்தில் இடியென ஒரு கரம் இறங்கியது.

யாரடா அது செல்வபதியை அடித்தது என்று பார்த்தால், க்ஷாட்சாத் வெண்ணிலாவே தான்.

இந்த வெண்ணிலா முன்னைய கோழை கிடையாது, இது புது வெண்ணிலா ஜனகனின் அன்பிலும் பண்பிலும் புதிதாக பூத்த வெண்ணிலா.

"யாருக்கு யாரு பொண்டாட்டி.. நான் மிஸஸ் ஜனகன்.. வந்த வழியை பாத்து திரும்பிப் போயிடுங்க இல்லைன்னா.."

"இல்லைன்னா என்னடி செய்வே.. பொட்டைக் கழுதைக்கு திமிராடி.."

"யாருடா பொட்டைக் கழுதை.. காசு காசுனு பேயா பறக்கிற நீயெல்லாம் வந்து நிண்டு வியாக்கியானம் கதைக்கிற அளவுக்கு இங்க யாரும் தரம் தாழ்ந்து போயிடேல்லை.."
என்று கொண்டே செல்வபதியை திட்டி விட்டு, பொன்னம்பலத்தின் பக்கம் திரும்பினாள் வெண்ணிலா.

"ஐயா பெரியவரே.. நீங்கள் இன்னுமா இந்த ஆளை நம்பிக் கொண்டு பின்னாலேயே சுத்துறியள்.. வெளிப்படையா சொல்லோணும் எண்டால் இது ஒரு பொம்பிளைப் பொறுக்கி.. உங்கடை பொண்ணைத் தூக்கிட்டு போய் தப்பு வேலை செய்யிறதுக்கு கூட ஏதாவது பிளான் போட்டிருக்கும் தெரியுமோ.."
என அவரை அவள் உசுப்பி விட, கேமவர்ஷினி சட்டென்று செல்வபதியை பார்த்தாள்.

ஏனெனில் அவளிடமும் அவன் வழிந்து குழைந்திருக்கிறான், வெண்ணிலா ஒரு தீக்குச்சியைத் தட்டிப் போட அது மெல்லப் பற்றி எரியத் தொடங்கியது.

மஞ்சுளாவின் பக்கம் திரும்பி
"உங்களுக்கும் பொண்ணுங்க இருக்காங்கனு நினைக்கிறேன்.."
என அவள் முடிக்கவும் அவரது முகமும் பதட்டத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட செல்வபதி
"நம்மளோட கூட்டணியை உடைக்க அவ பிளான் பண்றா.. யாரும் அவளை நம்பிடாதீங்க.. முதல்ல இவங்களை எல்லாம் இல்லாம பண்ணீட்டு வர்ர சொத்துல பாதி பாதிங்கிறது தானே நம்ம டீல்.."
என சுத்தி நின்றவர்களது பதட்டத்தைப் போக்கி சொத்து பற்றிய ஆசையை தூண்ட, இப்போது சொத்தாசை அவர்களது மனதில் பற்றி எரியத் தொடங்கியது.

அத்தனைக்கும் அருண்மொழி அமைதியாகவே நின்றிருந்தான். இவர்களது ஆட்டம் எவ்வளவு தூரம் செல்கிறது பார்ப்போம் என்பது போல இருந்தது அவனது பார்வை.

"என்ன அருண்மொழி அவ்வளவு தானா உன்னோட வீரம் எல்லாம்.. போட்டிப் பாம்பு மாதிரி அடங்கிப் போய் நிக்கிறே.. டேய் ஆளுங்களை விட்டு அக்காளையும் தங்காளையும் தூக்குங்கடா.."
என்று கொக்கரித்த செல்வபதிக்கு தெரியாது, அந்த மண்டபம் பொலிஸ் கண்காணிப்பில் உள்ளது என்பது.

வெண்ணிலாவின் பக்கத்தில் போனவனுக்கு ஜனகன் ஒரு குத்து விட, அவன் சுழன்று போய் செல்வபதியின் காலில் விழுந்தான்.

கேமவர்ஷியோ அருண்மொழியின் பக்கத்தில் போய்
"ஆரு.. போயும் போயும் உவளைக் கல்யாணம் செஞ்சு இருக்கீங்களே.. இப்ப கூட ஒண்ணும் கெட்டுப் போகேல்லை.. அவ கழுத்துல இருக்கிற தாலியைக் கழட்டி என்னோட கழுத்துல கட்டுங்களேன்.. உங்களை அன்பா பாத்துப்பேன்.."
என்று சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்த அருண்மொழி
"அன்புன்னா என்ன கேமவர்ஷினி.."
என அழுத்தமாகக் கேட்டான்.

அவனது அழுத்தப் பார்வையில் பதில் சொல்ல முடியாமல் அவள் திணற
"அன்புன்னா.. நம்மளைத் தாண்டி மத்தவங்க மேல கருணையா இருக்கிறதும் அடக்கம் தெரியுமா.."
என்றவனைத் தொடர்ந்து
"தெரியுமே.."
என கேமவர்ஷினி சட்டென்று சொன்னாள்.

ஒரு ஏளனச் சிரிப்போடு
"அப்போ நீயும் உங்கப்பாவும் கருணையோட தான் நடந்துக்கிட்டிங்களோ.."
என்றவன் ஒரு இடைவெளி விட்டு
"எங்க அப்பா அம்மாகிட்டே.."
என்று கேட்க, அவன் முகத்தை நிமிர்ந்து ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் கேமவர்ஷினி.

"என்ன இன்னும் புரியலியா.. எங்கப்பாம்மா மேல உனக்கு அன்பு இருந்திருந்தா கருணை இருந்திருந்தா.. அவங்களைக் கொல்லத் துணிஞ்சிருப்பீங்களா நீங்கள்.."
என்றவனது வார்த்தைகளில் அதிர்ந்து போய் நின்று விட்டார்கள் பொன்னம்பலமும் கேமவர்ஷினியும்.

"நீங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து அவங்களைக் கடல்ல தள்ளி விட்டது.. எனக்குத் தெரியாதுனு நினைச்சா அது உங்களோட முட்டாள்தனம்.. என்ன இப்புடியே பார்த்திட்டு நிக்கிறதா உத்தேசமா.. செய்ததை ஒத்துக்கிற தைரியம் இல்லையோ.. இப்புடி ஒரு கொடூரத்தை செய்திட்டு.. எப்படி உங்களால தேனொழுக நடிக்க முடியுது.. ஆஸ்கார் விருது இல்லாட்டிக்கும் கூட ஆசிய விருதுக்காவது பரிந்துரை செய்ய வேணும் உங்களுக்கு.."
என்ற அருண்மொழியை தந்தையும் மகளும் வெறித்துப் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.

"என்ன இப்புடியே நிக்கிற உத்தேசமோ.. செய்த கூத்துக்கு கூழ் குடுக்க பொலிஸ் மாமா வெளியால வெயிட்டிங்.. நடையைக் கட்டுங்கோ.."
என்றபடி பக்கத்தில் வந்து நின்றான் ஜனகன்.

தங்கள் குட்டு வெளிப்பட்டதும் இனி நடித்துப் பிரயோசனம் இல்லை என்பதை உணர்ந்த பொன்னம்பலம் ஆங்காரமாகப் பேசினார்.

"ஓமடா அப்புடித் தான்.. உங்கம்மாப்பாவை நான் தான் என்ரை ரெண்டு கையாலயும் கடலுக்க தள்ளி விட்டனான்.. அது மட்டுமோ இங்க நிக்கிறாளே உன்ரை தர்மபத்தினி அவளையும் கூட நாங்கள் மிரட்டினதால தான் அவ வேறை கல்யாணமே செய்தாள் தெரியுமோ.. ஆனா நீ அவளையே திரும்பக் கல்யாணம் செஞ்சு எங்கடை ஆசையில மண்ணை அள்ளிப் போட்டாலும் கூட.. ஒரு வகையில நீ தோத்திட்டே.. எப்புடி சொல்லு.."
என்ற பொன்னம்பலத்தை, அதையும் நீயே சொல்லித் தொலை என்பது போல நின்றிருந்தான் அருண்மொழி.

"உன்ரை கோட்டை கொத்தளம் எண்டுவியே.. உன்னால உங்கப்பாம்மாவைக் காப்பாத்த முடியேல்லை தானே.. அதுவே உனக்கு பெரிய அடி தானே.. என்ன தான் நீ உன்ரை காதலியை மனைவியா அடைஞ்சாலும் உங்கம்மாப்பாவை இனி பாக்க முடியுமோ.. அவங்க உடம்பைக் கூடக் கிரியை பண்ணி எரிக்க உன்னால முடியாமப் போச்சுதோ.. ஜென்மத்துக்கும் மீள முடியாதே.. அதே காணும் எனக்கு நான் நிம்மதியா சிறைக்கு போக ரெடி.."

"எங்கப்பாம்மாவை கடலுக்க தள்ளி விட்டதில என்னவொரு ஆனந்தம் உங்களுக்கு.."

"இருக்காதா பின்னே.. எம் பொண்ணை தன்ரை மகனுக்கு கட்டி வைச்சு சொத்து முழுக்கலுக்கும் அவளை ராணி ஆக்காமல் அதென்ன தெருவில போறவளை மருமகளாக்கிற எண்ணம்.. அது தான் போட்டு தள்ளீட்டன்.."

"என்ன செய்து என்ன பிரயோஜனம்.. இங்க பாருங்களேன் நான் நினைச்ச மாதிரி.. என்னோட வானதியைக் கல்யாணமே செஞ்சிக்கிட்டேனே.."

"கட்டினா மட்டும் சரியோ.. அவ வயித்தில உன்னோட வாரிசு உருவாகாமல் பண்றனா இல்லையா பாரு.."

"ஒரு பிரயோசனமும் இல்லை.. அவ இப்போ ரெண்டு மாசம் முழுகாம இருக்கா.. என்ன புரியலியோ அவ வயித்துல என்னோட குழந்தை வந்து ரெண்டு மாதங்கள் ஆகி விட்டது மிஸ்டர் பொன்னம்பலம்.. இனி நீங்கள் என்ன செய்து என்ன.."
என்று கொண்டே மனைவியைத் தோளோடு இழுத்து அணைக்க
"அடப்பாவி.. என்னமா புளுகுது பாரன்.. நான் ரெண்டு மாசம் முழுகாம இருக்கிறனோ.. இதுல என்ன பெருமை.. கேக்கிறவங்கள் என்னைத் தான் தப்பா நினைக்க போறாங்கள்.. கலியாணம் ஆகி முழுசா ஒரு கிழமை கூட ஆகேல்லை அதுக்குள்ள எப்புடி ரெண்டு மாசம்.. தப்பா தெரியேல்லை.."
என்று கொண்டு அவன் காதுக்குள் கிசுகிசுத்தபடி அவனை யாரும் அறியாமல் கிள்ளி வைத்தாள் வானதி.

விரிந்த புன்னகையோடு அவள் கன்னம் பிடித்து ஆட்டியபடி
"பாருங்க எம் பொண்டாட்டி முகத்தை பாருங்க.. தாய்மையோட பூரிப்பு எப்புடி மின்னுது பாருங்கோ.."
என்று சொன்ன அருண்மொழியை வெட்டவோ குத்தவோ என்பது போல பார்த்தார்கள் கேமவர்ஷினியும், செல்வபதியும்.

விடாமல் தொடர்ந்தான் அருண்மொழி
"செல்வபதி நீ பேசாமல் கேமவர்ஷினியைக் கட்டிக்கோயேன்.. ஏன்னா எங்க ஜோடி மேல கண்ணு வைச்ச ஜோடி நீங்க தானே.. அப்போ நீங்க சேருறது தானே முறை.."
என அவன் முடிக்கவும், கேமவர்ஷினியை மொய்த்தன செல்வபதியின் கண்கள்.

அதைக் கண்டதும் இதற்கு மேலும் இங்கே நின்றால், கம்பி எண்ண வேண்டி வரும் என்றதோடு, செல்வபதியின் பார்வையில் கடுப்பாகிப் போய் அவள் வெளியே போய் விட, பின்னோடே மஞ்சுளாவும் போய் விட, பொன்னம்பலத்தையும் செல்வபதியையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தான் ஜனகன்.

அவர்கள் வெளியே போவதையே பார்த்தபடி, மனைவியை இறுக்கமாக தோளோடு அணைத்துக் கொண்டான் அருண்மொழி, அவளோ அந்த அணைப்புக்குள் இருந்தபடியே அவனை முறைத்தாள்.