சீண்டாமல் சொல்லாதே!!!
ஊடலில் வந்த சொந்தம் கதையின் இரண்டாம் பாகம் இது.
ஊடலில் வந்த சொந்தம் 'மீண்டும் ஒரு வாசிப்பு' பக்கத்தில் முழுகதை இருக்கிறது. அதனை படிக்கவில்லை என்றாலும் கதை புரியும் என்று நினைக்கிறேன்.
கதாபாத்திரங்கள் கொஞ்சம் அதிகம் தான். முடிந்தால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
கங்காதரன்-விமலா
கமலகண்ணன்- நாயகன் (கங்காதரனின் இரண்டாம் மகன்)
அமுதினி- நாயகி
வளர்ப்பு மகள்
சிவநேத்ரா-ராம்கிரன் (முதல் கதையின் நாயகன் மற்றும் நாயகி)
வெண்பாவில், வெண்மதி, வேதவேந்தன். மூன்று குழந்தைகள். மதி மற்றும் வேந்தன் இரட்டைப் பிறவி...
மூத்த மகன்
பவன்கல்யாண்-மிதுன்யா
மகன்- ருத்தேஷ். (மிதுன்யா ராம்கிரனின் அத்தை மகள்)
ராம்கிரனின் உடன்பிறப்புகள் ஆரவ்கிரன்- அம்ரிதா
(யாழிசை-மகள்)
அபினவ்கிரன்- சுனைனா
(புதுமண தம்பதியர்)
சுனைனா அமுதினியின் உயிர் தோழி......
மீதிய கதைல பாத்துக்கலாம் பா... இதுக்கு நாக்கு தள்ளுது....
சீண்டல் டீஸர்
"அறிவு இருக்கா டீ உனக்கு?"
"கொஞ்சம் விட்டிருந்தா செத்திருப்பே!"
"அவனுங்க கையில சிக்கிருந்தேனு வை... இன்னேரத்துக்கு கொன்னுட்டு வைகை ஆத்துல உன் சாம்பல கரச்சிருப்பானுங்க!"
"சமூக சேவை செய்யிறதுனா வேற எங்கேயாவது போய் செய்ய வேண்டி தானே! ஏன் என் கண்ணு முன்னாடி செய்து தொலைக்கிறே!!!"
"வந்த முதல் நாளே உன்னை யாருடி வம்பு வளத்துட்டு வரச் சொன்னது... வந்த வேலை முடிஞ்சா அமைதியா இடத்தை காலி செய்ய வேண்டியது தானே!!! உனக்கு எதுக்கு டீ ஊர் வம்பெல்லாம்?" என்று நினைத்து நினைத்து வார்த்தைகளைத் தேடித் தேடி திட்டிக் கொண்டிருந்தான் கமல்.
எதிரில் திட்டுவாங்கிக் கொண்டிருந்தவளோ "நான் என்ன தப்பு செய்தேன்னு என்னை இப்படி திட்டுறே கண்ணா!!" என்று சிணுங்கினாள்.
"இன்னொரு தடவை என்னை கண்ணானு சொன்னே கொன்னுடுவேன்" என்று ஆக்ரோஷமாக அவளை நெருங்கி உச்சக்கட்ட கோபத்தில் உருமினான்.
பெண்ணவளோ அமைதியாக நிற்க, "இப்போ ஊர் ஃபுல்லா உன்னை தான் தேடுறானுங்க..."
என்ன செய்வது என்று தெரியாமல் தலையைக் கோதியபடி, தன் கடையின் மொட்டை மாடியில் இங்கும் அங்குமாக உலாத்திக் கொண்டிருந்தான்.
சற்றும் கோபம் குறையாமல், தன் திறன்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்புவிடுக்க, மறுமுனை அழைப்பை ஏற்ற அடுத்தநொடி "ஏய் முட்டபொம்மா... உன் ஃப்ரெண்ட் என்னை டார்ச்சர் பண்றதுக்குனே இங்கே வந்திருக்காளா?" என்று கத்த,
"அதை அவகிட்டேயே கேளேன் டா" என்று கூலாக பதில் வந்தது எதிர்முனையிலிருந்து...
"உன்னை...." என்று மீண்டும் டென்ஷன் ஆனவன் "வர்ற கோபத்துக்கு உங்க ரெண்டு பேரையும் நானே கொல்லப்போறேன் பார்..." என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான்.
மறுமுனையில் "நீ மொதோ ஃபோனை அவகிட்ட கொடு..." என்று கட்டளை பிறப்பிக்கப்பட, மறுபேச்சின்றி கமல் அருகில் இருப்பவளிடம் தன் திறன்பேசியை நீட்டினான்.
"சுனோ..."
"என்ன மேடம் பையன் ரெம்ப துள்ளுறான்... ப்ரச்சனை பெருசாகிடுச்சோ?" என்றாள் சுனோ.
"அதெல்லாம் ஒன்னு இல்லே... சாருக்கு இப்போ என்னை லவ்வர்னு சொல்லிக்க விருப்பம் இல்லே... அதான் இந்த குதி குதிக்கிறார்" என்று அவளும் ஏகத்துக்கும் சந்தோஷமாகக் கூறினாள்.
தோழிகள் இருவரும் சிரித்துக் கொள்ள, கமலோ நேரில் நின்றவளை மட்டும் முறைத்துக் கொண்டிருந்தான். மறுமுனையில் பேசுபவளை முறைக்கத்தான் முடியுமா!!! முறைத்தால் தான் அவளும் சும்மா விட்டுவிடுவாளா என்ன!!!
"சுனோ இங்கே இப்போ வரைக்கும் எந்த ப்ரச்சனையும் இல்லே... நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சால்வ் ஆகவும் நானே உனக்கு கால் பண்றேன்..." என்று கூறி சுனோவின் அழைப்பை துண்டித்துவிட்டு, அவனது திறன்பேசியில் தன் எண்ணை பதிவு செய்தாள்.
பேசி முடித்த பின்னரும் தன் ஃபோனில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகே வந்தவன், திறன்பேசியின் திரையில் 'Dr. Ammu' என்ற பெயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். 'என் ஃபோன்ல யார் அந்த அம்மு! இவளா?' என்று குழப்பமாக அவளைப் பார்த்தான்.
அவளது தோள் பையினுள் இருந்த மொபைல் அழைப்பு சத்தம் கேட்டதும், தன் திறன்பேசியை அவளிடம் இருந்து பறித்து, "Doctor அம்மு!!! இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லே!" என்று சலிப்பாகக் கூறினான்.
"அது டாக்டர் இல்லே கண்ணா... டியர்..." என்று கண் சிமிட்டி, கன்னம் குழிய, கொஞ்சிப் பேசினாள்.
"அடியேய் உன்னை கொல்லாம விடமாட்டேன் டீ... நீ எனக்கு டியரா!!! இதுக்கே உன்னை சாவடிக்கிறேனா இல்லையா பார்...." என்று உருமியபடி கையை உயர்த்த, அவன் அடிக்க வருகிறான் என்றவுடன் அவனிடமிருந்து தப்பி அந்த மாடியை சுற்றி வந்தாள். கமலும் விடாமல் கத்திக்கொண்டே அவளைத் துரத்திக் கொண்டிருந்தான்.
அதே மதுரையில் மற்றொரு பக்கம் அவளைத் தேடி அவளது இல்லம் சென்ற அடியாட்கள் வீட்டை இரண்டாக்கி அவளைப் பற்றிய தகவல் மற்றும் ஆதாரம் எதுவும் கிடைக்கிறதா? என்று அவளது அறையை புறட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தனர்.
யாரவள்? அப்படி என்ன செய்தாள்? இனி வரும் பதிவில் பார்க்கலாம்...

சீண்டல் தொடரும்.