அந்தி சாயும் நேரம்..... தூங்காநகரின் மத்தியில் அமைந்திருந்த அந்த தனியார் குடியிருப்பு பகுதியில், ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தது ஒரு கும்பல்... அந்த வீட்டில் பெண்ணவள் ஒருத்தி மட்டும் தனியாக வசிப்பது வீட்டின் உள்ளே நுழைந்ததுமே அறிந்து கொள்ள முடிந்தது அந்த மர்ம நபர்களால்...
அவளது பட்டப்படிப்பு சான்றிதழ்களை எடுத்துப் பார்த்துவிட்டு, அதனை கையோடு எடுத்துக் கொண்டனர். மேலும் துழாவிட சில நிழற்படங்கள் கிடைத்து. அது ஏதோ ஒரு திருமணத்தின் போது எடுத்துக்கொள்ளப்பட்ட குடும்பப் புகைப்படம். அதனோடு இணைந்தார் போல் ஓர் இளைஞனின் படமும் இருந்தது. மர்மக் கூட்டம் இரண்டையும் எடுத்துக்கொண்டது.
அதே மதுரையின் மற்றுமொரு பெரும் நகரில் புகழ்பெற்ற அந்த பெரிய துணிக்கடையின் மொட்டை மாடியில், ஆணும், பெண்ணும் மட்டும் ஆளுக்கு ஒருபுறமாக நின்றிருந்தனர்.
புகைப்படத்தில் இருந்தவனோடு தான் இப்போது அந்த பெண், அவனது கடையின் மொட்டைமாடியில் நின்றிருக்கிறாள். எதிரில் இருப்பவனோ கட்டுக்கடங்காத கோபத்துடனும் நின்றிருந்தான்...
அவனது திறன்பேசிக்கு அழைப்பு வரவே எடுத்து பேசினான்.
"சொல்லு டா"
"ண்ணா... அந்த அக்காவோடு வீடு புகுந்துட்டானுங்க ண்ணா... நல்ல வேலை அந்த அக்காவே நீ கூட்டிட்டு போனே... இல்லேனு வை இன்னைக்கே அந்த அக்காவுக்கு சங்கு ஊதிருப்பானுங்க..." என்று தான் நேரில் கண்ட காட்சியை பீதியோடு கூறினான், மறுமுனையில் பேசியவன்.
"சரி, நீ கேர் ஃபுல்லா இரு... அவனுங்க கண்ணுல பட்டுடாதே..." என்று அவனுக்கு அமைதியாக பதில் கூறிவிட்டு, அழைப்பை துண்டித்தான் கமல் எனப்படும் கமல கண்ணன்.
பேசி முடித்த மறுகணமே அருகில் நின்றிருந்தவளின் மேல் சீற்றமாகப் பாய்ந்தான்,
"அறிவு இருக்கா டீ உனக்கு?"
"கொஞ்சம் விட்டிருந்தா செத்திருப்பே!"
"அவனுங்க கையில சிக்கிருந்தேனு வை... இன்னேரத்துக்கு கொன்னுட்டு வைகை ஆத்துல உன் சாம்பல கரச்சிருப்பானுங்க!"
"சோஷியல் சர்வீஸ் செய்யிறதுனா வேற எங்கேயாவது போய் செய்ய வேண்டி தானே! ஏன் என் கண்ணு முன்னாடி செய்து தொலைக்கிறே!!!"
"வந்த முதல் நாளே உன்னை யாருடி வம்பு வளத்துட்டு வரச் சொன்னது... வந்த வேலை முடிஞ்சா அமைதியா இடத்தை காலி செய்ய வேண்டியது தானே!!! உனக்கு எதுக்கு டீ ஊர் வம்பெல்லாம்?" என்று நினைத்து நினைத்து வார்த்தைகளைத் தேடித் தேடி திட்டிக் கொண்டிருந்தான் கமல்.
எதிரில் திட்டுவாங்கிக் கொண்டிருந்தவளோ "நான் என்ன தப்பு செய்தேன்னு என்னை இப்படி திட்டுறே கண்ணா!!" என்று சிணுங்கினாள் அனைவராலும் அம்மு என்று செல்லமாக அழைக்கப்படும் அமுதினி.
"இன்னொரு தடவை என்னை கண்ணானு சொன்னே அடிச்சு பல்ல ஒடச்சிடுவேன் பாத்துக்கோ..." என்று ஆக்ரோஷமாக அவளை நெருங்கி உச்சக்கட்ட கோபத்தில் உருமினான்.
பெண்ணவளோ அமைதியாக நிற்க, "இனி ஊர் ஃபுல்லா உன்னை தான் தேடுவானுங்க..."
என்ன செய்வது என்று தெரியாமல் தலையைக் கோதியபடி, தன் கடையின் மொட்டை மாடியில் இங்கும் அங்குமாக உலாத்திக் கொண்டிருந்தான்.
சற்றும் கோபம் குறையாமல், தன் திறன்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்புவிடுக்க, மறுமுனை அழைப்பை ஏற்ற அடுத்தநொடி "ஏய் முட்டபொம்மா... உன் ஃப்ரெண்ட் என்னை டார்ச்சர் பண்றதுக்குனே இங்கே வந்திருக்காளா?" என்று கத்த,
"அதை அவகிட்டேயே கேளேன் டா" என்று கூலாக பதில் வந்தது எதிர்முனையிலிருந்து...
"உன்னை...." என்று மீண்டும் டென்ஷன் ஆனவன் "வர்ற கோபத்துக்கு உங்க ரெண்டு பேரையும் நானே கொல்லப்போறேன் பார்..." என்று பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான்.
மறுமுனையில் "நீ மொதோ ஃபோனை அவகிட்ட கொடு..." என்று கட்டளை பிறப்பிக்கப்பட, மறுபேச்சின்றி கமல் அருகில் இருப்பவளிடம் தன் திறன்பேசியை நீட்டினான்.
"ஸ்னோ... சொல்லு ஸ்னோ" என பவ்வியமாக வினவினாள்.
"என்ன மேடம் பையன் ரெம்ப துள்ளுறான்... ப்ரச்சனை பெருசாகிடுச்சோ?" என்றாள் சுனைனா.
"அதெல்லாம் ஒன்னு இல்லே... சாருக்கு இப்போ என்னை லவ்வர்னு சொல்லிக்க விருப்பம் இல்லே... அதான் இந்த குதி குதிக்கிறார்" என்று அவளும் ஏகத்துக்கும் சந்தோஷமாகக் கூறினாள்.
தோழிகள் இருவரும் கிளுக்கென சிரித்துக் கொள்ள, கமலோ நேரில் நின்றவளை மட்டும் முறைத்துக் கொண்டிருந்தான். மறுமுனையில் பேசுபவளை முறைக்கத்தான் முடியுமா!!! முறைத்தால் தான் அவளும் சும்மா விட்டுவிடுவாளா என்ன!!!
"ஸ்னோ இங்கே இப்போ வரைக்கும் எந்த ப்ரச்சனையும் இல்லே..."
"இனியும் வராது... உங்களை தேடி யாரும் வந்தாங்கன்னா ராம் பையா சொன்ன மாதிரி லவ்வர்ஸ்னு சொல்லிக்கோங்க... நீ ஒன்னும் கவலைப்படதே" என்றாள் சுனோ.
"ம்ம்ம்.... எல்லாம் சால்வ் ஆகவும் நானே உனக்கு கால் பண்றேன்..." என்று கூறி சுனோவின் அழைப்பை துண்டித்துவிட்டு, அவனது திறன்பேசியில் தன் எண்ணை பதிவு செய்தாள் .
பேசி முடித்த பின்னரும் தன் ஃபோனில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகே வந்தவன், திறன்பேசியின் திரையில் 'Dr. Ammu' என்ற பெயருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதைக் கண்டான். 'என் ஃபோன்ல யார் அந்த அம்மு! இவளா?' என்று குழப்பமாக அவளைப் பார்த்தான்.
அவளது தோள் பையினுள் இருந்த அவளது மொபைல் சத்தம் எழுப்பிட அதனைத் கேட்டதும், தன் திறன்பேசியை அவளிடம் இருந்து பறித்து, "Doctor அம்மு!!! இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லே!" என்று சலிப்பாகக் கூறினான்.
"அது டாக்டர் இல்லே கண்ணா... டியர்..." என்று கண் சிமிட்டி, கன்னம் குழிய, கொஞ்சிப் பேசினாள்.
"அடியேய் உன்னை கொல்லாம விடமாட்டேன் டீ... நீ எனக்கு டியரா!!! இதுக்கே உன்னை சாவடிக்கிறேனா இல்லையா பார்...." என்று உருமியபடி கையை உயர்த்த, அவன் அடிக்க வருகிறான் என்றவுடன் அவனிடமிருந்து தப்பி அந்த மாடியை சுற்றி வந்தாள். கமலும் விடாமல் கத்திக்கொண்டே அவளைத் துரத்திக் கொண்டிருந்தான்.
அங்கே அடியாட்களோ அவளது அறையே இரண்டாக்கி ஏதேனும் தகவல் மற்றும் ஆதாரம் கிடைக்கிறதா? என்று தேடுகிறேன் என்ற பெயரில் அந்த அறையையே புறட்டிப்போட்டு தேடிக்கொண்டிருந்தனர். வேறு எந்த விவரமும் கிடைக்காமல் போக,
"தல... ஒரு பையனோட ஃபோட்டோ மட்டும் தான் கெடச்சது... அவகிட்ட வேற எந்த ப்ரூஃபோ தகவல் சொன்னதுக்கான தடயமோ எதுவும் கெடைக்கல... அந்த பையன் இந்த ஊரு தான். துணிக்கடை ஓனரு. அவனோட கடைக்கு போன ரெண்டு பேரையும் பிடிச்சிடலாம்..."
மறுமுனையில் என்ன பதில் வந்ததோ "ரெண்டு பேரையுமா?" என்று அதிர்ச்சியாக வினவினான்.
"சரி தல..." என்று ஃபோனை கட் செய்துவிட்டு, "டேய் வாங்க டா... ரெண்டு பேரையும் தல போட்டு தள்ள சொல்லிட்டாரு..." என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறியிருந்தனர்.
இங்கே கமல் அமுதினியிடம் பேச்சு கொடுத்தான். "உன் பேர் என்ன?"
"இன்னுமா தெரிஞ்சுக்காம இருக்கே!!!" என்று அதிசயித்துக் கேட்டவள், அவளே தொடர்ந்தாள்,
"நீ உண்மையாவே மனுஷன் தானா?"
"ஏன்?"
"உன்கிட்ட நான் ப்ரொப்போஸ் பண்ணி சிக்ஸ் மந்த்ஸ் ஆகுது... உன்னை ப்ரொப்போஸ் பண்ணின கையோட மதுரைல வேலைக்கு அப்ளை பண்ணி அது கெடச்சு, என் பேரண்ட்ஸ் கிட்ட நம்ம லவ்வ சொல்லி..."
"ஓய்....." என்று முறைத்தான்.
"சரி சரி... மொறைக்காதே... என் லவ்வை சொல்லி அதுக்கு நல்லா வாங்கிகட்டிக்கிட்டு கட்டுனா உன்னை தான் கட்டுவேனு வீட்டைவிட்டு வந்து இங்கே வேலையிலேயும் சேந்துட்டேன்... நான் எவ்ளோ ஃபாஸ்டா இருக்கேன்... நீ ஏன் இவ்ளோ ஸ்லோவா இருக்கே?"
"உன் அம்மா, அப்பா உன்னை தடுக்கலேயா? என்னை பத்தி தெரியாம நீ பாட்டுக்க வீட்டைவிட்டு வந்துட்டே!!!" என்று என்ன பெண்ணிவள் என்பது போல் பார்த்தான்...
அவளும் பதிலுக்கு அவனது பார்வையை எடைபோட்டபடி, "ஓ... தடுத்தாங்கலே... வீட்டைவிட்டு வெளியே போனே காலை ஒடச்சிடுவேன்னு சொன்னாங்க... என் பேச்சை மீறி போனா நீ என் பொண்ணே இல்லேனு சொல்லி உன்னை தலைமுழுகிடுவேனு என் அப்பா மிரட்டினார்." என்று சாதாரணமாகக் கூறினாள்.
'அப்படி சொல்லியும் என்ன தைரியத்தில் வீட்டைவிட்டு வந்தே!!!' என்ற சிந்தனையோடு விசித்திரமாகப் பார்த்து வைத்தான்.
"என்ன பாக்குறே படத்துல தான் அப்பாகள் எல்லாம் 'இதோ இருக்கு அமெரிக்கா... அவளை தேடி போ...'னு சொல்லுவாங்க... அதுவும் பசங்களோட காதலுக்கு மட்டும் தான். ஹீரோவும் கிட்டார் எடுத்துட்டு ஹீரோயினை தேடி கண்டுபிடிப்பார்... நிஜத்துல பொண்ணுங்க காதலிச்சா தொடப்பகட்டை பிஞ்சிடும்..."
"இப்போ என்ன பண்ணலாம்னு இருக்கே!!! நான் வேணுனா உன் அப்பாகிட்ட பேசட்டுமா?" என்று அவளுக்காக இறக்கப்பட்டு கேட்டான்.
பதறியடித்துக்கொண்டு "அய்யய்யோ.... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..." என்று அவசரமாகத் தடுத்தாள்.
இவ்வளவு நேரம் சோகமே உருவாய் கூறிக் கொண்டிருந்தவள், திடுதிப்பென வாய் திக்க, கண்களில் சுவாரசியம் கலந்த கலவரத்துடன் கூறிட அவனோ மொத்தமாகக் குழப்பம் அடைந்தான்.
"அவனுங்க கையில கெடச்சா கொன்னுடுவானுங்க... பின்னே எப்படி இங்கே இருப்ப!!!" என்று அதே குழப்பத்தோடு வினவினான்.
"நான் நாளைக்கு எப்பவும் போல ஹாஸ்பிட்டல் போறேன்... அங்கே போயி எப்படியாச்சும் சமாளிச்சிக்கிறேன்..."
"ஏய் லூசு... அதை இன்னைக்கே செய்திருந்தா கூட உன் மேல சந்தேகம் வராது... இன்னைக்கு ஃபுல்லா அவங்க கண்ணுல படாம இருந்துட்டு நாளைக்கு நேர்ல போயி சமாளிக்கிறேன்னு சொல்றே... எப்படி நம்புவானுங்க? கொஞ்சமாவது ப்ரைன்-ன யூஸ் பண்ணி யோசி.." என்று பல்லைக் கடித்துக் கொண்டு திட்டினான். அதற்குள் மீண்டும் அவனது கைபேசி அலரியது.
அங்கே ரவுடிகளை பின்தொடர்ந்த கமலின் கையாளோ கமலுக்கு அழைத்தான். "ண்ணா... அவனுங்க கடவீதிக்கு தான் வர்றானுங்க... கண்டுபிடிச்சுடானுங்கனு நெனைக்கிறேன்... நீ எதுக்கும் ரெடியா இரு..." என்று பதற்றமாக தகவல் தெரிவித்தான்.
கமலோ அந்த பெண்ணையும் அழைத்துக் கொண்டு, கடை கணக்கரிடம் சென்று "அண்ணா யாராவது தேடி வந்தா A2 போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கேன்னு சொல்லுங்க..." என்று கூறிவிட்டு தன் இருசக்கர வாகனத்தில் அவளோடு புறப்பட்டான்.
செல்லும் வழியிலேயே அவனது அண்ணன் பவனுக்கு அழைத்து விவரத்தை கூறி "கடை ஆளுங்களுக்கு எதுவும் ஆகாம பாத்துக்கோ" என்று எச்சரித்தான்.
"அவனுங்களுக்கு எப்படி டீ என்னை பத்தி தெரியும்!!" என்று டென்ஷன் குறையாமல் ஆச்சரியமாக பின்னால் அமர்ந்திருந்தவளிடம் வினவினான்.
"நானும் உன் கூட தானே இருக்கேன்... எனக்கு எப்படி தெரியும்!!!" என்றாள்.
அடுத்ததாக தன் தந்தைக்கு அழைத்து "A2 போலீஸ் ஸ்டேஷன் வந்திடுங்க... உள்ளே நுழைஞ்சதும் 'என்ன காரியம் டா பண்ணி வெச்சிருக்கேனு' என்னை திட்டுங்க... புரியுதா" என்றிட
அவன் தந்தை கங்காதரனோ "அப்படி என்னடா பண்ணப்போறே..."
"ரெண்டு பேரும் லவ் பண்றோம்... பேரண்ட்ஸ்க்கு பயந்து போலீஸ் ஸ்டேஷன்ல தஞ்சம் அடையிறோம்... அவ்ளோ தான்.
அந்த ரவுடிங்க மினிஸ்ட்ரியோடு கையாளுங்க... அதனால போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து தூக்குறதுக்கு கூட தயங்கமாட்டாங்க... அதுக்கு தான் இந்த ட்ராமா...
அதுவும் இல்லாம லவ்ல ப்ராப்ளம்... அதுனால தான் ஈவ்னிங் அந்த பொண்ணு ஹாஸ்பிட்டல்ல இல்லேனு சொன்னா கொஞ்சம் நம்புற மாதிரி இருக்கும்... மத்த எந்த ரீசன் சொன்னாலும் நம்ப மாட்டாங்க... நல்லா நியாபகம் வெச்சிக்கோங்க... என் லவ்வை அப்போஸ் பண்ணி பேசுறிங்க... புரியுதா?" என்று தந்தைக்கு பலமுறை நினைவு படுத்தினான். ஆனால் தாய் விமலாவை மறந்து போனான்.
கங்காதரன் காவல் நிலையம் நுழைய சரியாக ரவுடிகளும் வந்து சேர்ந்தனர். உள்ளே அம்முவின் கழுத்தில் கமல் திருமாங்கல்யம் பூட்டிக் கொண்டிருந்தான். கங்காதரனே இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

சீண்டல் தொடரும்