"பதில் சொல்லுங்க ஓனர் சார்.... உங்க பதிலுக்காக எல்லாரும் வெய்ட்டிங்" என்று கமலை சீண்டினால் அமுதினி. சட்டென அவள் இருக்கும் செக்ஷ்னின் கேமராவை க்ளிக் செய்து பார்க்க, கஸ்டமரை கவனிப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் இன்டர்காமின் ஒலிப்பெருக்கியை உயர்பித்து அவனது பதிலுக்காக தொலைபேசி அருகில் குழுமி இருந்தனர்.
அனைவரின் காதுபட அவளைத் திட்ட அவனுக்கு வாய் எழவில்லை. ரிசீவரை அதன் இடத்தில் பொறுத்திவிட்டு அவள் இருக்கும் தளம் நோக்கி விரைந்தான் கமல்.
அந்த கடையோ நல்ல விஷாலமான மூன்று அடுக்குத் தளம் கொண்டது. மூன்றாம் தளம் மொட்டைமாடி என்பதால், முதல் மற்றும் இரண்டாம் தளத்திற்கு மட்டும் மின்தூக்கி பொறுத்தப்பட்டிருந்தது. கமல் எப்போதும் அதனைப் பயன்படுத்தியதில்லை. எனவே பழக்கதோஷத்தில் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறிச் சென்றான்.
இங்கே அம்முவோ அழைப்பு துண்டிக்கப்படவும், "விடா முயற்சி விஸ்வரூப வெற்றி... டோன்ட் கிவ் அப். கால் ஹிஸ் ப்ரைவேட் நம்பர்...."
"அதுக்கு அவசியமே இல்லே.... அதோ அண்ணாவே வர்றாங்க" என்று போனை கையில் பிடித்திருந்த அந்தப் பெண் கூறிட, அவன் வந்த திசையைப் பார்த்தவள் அவனது முக இறுக்கத்தைக் கண்டு விழி பிதுங்கி,
"Oh god... Escape" என்று அங்கிருந்த கூட்டத்திற்கும் சேர்த்து எச்சரித்துவிட்டு ஓடத் தொடங்கினாள்.
"ஏ... அராத்து... ஓடாதே நில்லு... இன்னும் என்னென்ன டி சொல்லி வெச்சிருக்க என்னைப்பத்தி?" என்று உச்சக்கட்டக் கடுப்பில் கேட்டுக் கொண்டே அவளைத் துரத்தினான்.
அதற்குள் அம்மு மின்தூக்கியில் நுழைந்து கொள்ள, கதவுகள் இரண்டு இணையும் நேரம் பார்த்து கமல் நடுவே காலை வைக்க, மீண்டும் கதவுகள் திறந்து கொண்டது. ஒரே நேரத்தில் பத்து பதினைந்து நபர்கள் இணைந்து செல்லக் கூடிய அந்த மின்தூக்கியில் நடுநாயகமாக இரு கைகளையும் குறுக்கில் மடித்து வைத்து வழி மறித்து நின்று கொண்டான் கமல கண்ணன்.
பற்றா குறைக்கு தன் பாக்கெட்டில் இருத்த சாவிக்கொத்திலிருந்து மின்தூக்கிக்கான திறவுகோலை எடுத்து அதன் இடத்தில் பொறுத்தி பூட்டிவிட பெண்ணவள் சற்று அதிர்ந்து தான் போனாள்.
"மாட்னேயா?" என்றபடி அவளை நக்கலாக பார்த்து, கை சட்டையை மடக்கிவிட்டு தலை தூக்கி கெத்தாக நின்றான்.
வழக்கம் போல் அம்முவிற்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்க, 'இவன் இன்னைக்கு இருக்குற கடுப்புக்கு காது கிழியிற அளவுக்கு அட்வைஸ் கொடுத்தாலும் கொடுப்பான்... எப்படியோ காலைல புளூடூத்தை மாட்டி தப்பிச்சாச்சு... இப்போ அவனுக்கு முன்னே நாம முந்திக்கிவோம்' என்று நினைத்து அவனைக் கடுப்பேற்ற வேண்டியே, இளம்பிடியாளும் நக்கலாக சிரித்து கை கட்டி நின்றாள்.
"ஓய் என்ன திமிரா?" என்றான்.
"ஆங்...ஆஆஆங்... சரியா கேக்கலே.... இதோ வர்றேன்..." என்று பின்னால் தள்ளி நின்றிருந்தவள் இரண்டெட்டு வைத்து முன்னால் வந்தாள்.
கமலோ... பின்னந்தலை 'நங்'கென முட்டி ஏதோ ஒன்றில் முதுகு உரசி நின்றான். அப்போது தான், தான் பின்னால் நகர்ந்து கதவோடு பல்லியாய் ஒட்டிக்கொண்டு நிற்பதை உணர்ந்தான் கமல். 'அப்போ நாம தான் இவகிட்ட மாட்டிக்கிட்டோமா!!!' என்று அவன் திருதிருவென முழித்துக் கொண்டு மின்தூக்கியின் திறவுகோலை திறக்க முற்பட, அதற்குள் சாவி பெண்ணவளின் கைகளுக்குச் சென்றது.
கமலின் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச பயமும் அவன் பின்னால் நகர்ந்ததில் மொத்தமாய் துடைத்து எடுத்தது போல் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட, மேலும் கொஞ்சம் தைரியத்தைக் கூட்டிக் கொண்டு அவனை மெதுவாக நெருங்கினாள்.
'ஆத்தி!!! இவ என்னத்தையாச்சு செய்து வைக்கிறதுக்குள்ள கொஞ்சம் மிரட்டி வைப்போம்!' என முடிவெடுத்து, ஒற்றை விரல் உயர்த்தி
"இதோ பாரு... பொம்பளப் புள்ளையாச்சேனு பாக்குறேன்.... இல்லேனா நடக்குறதே வேற..." என்று அவன் முந்திக்கொண்டான்.
அம்முவோ அவன் அவளிடம் பேசிடவே இல்லை என்பது போல், ஏன்! அவளைத் தவிர அங்கே வேறு யாருமே இல்லை என்பது போல் கையிலிருந்த சாவி கொண்டு காது குடைந்து கொண்டிருந்தாள்.
"ஏய்... ராங்கி... சாவிய கொடு டி"
"ஒரே ஒரு டைம் என்னை பேர் சொல்லி கூப்பிடு... சாவி தரேன்..." என்று பேரம் பேசினாள்.
"அதெல்லாம் முடியாது போடி... குட்டி பிசாசு மாதிரி இருந்துகிட்டு பேரைப் பாரு அமுதினியாம்.... வாயத் திறந்தாலே பொய்..." என்று பின்னைய வார்த்தைகளை மட்டும் முனுமுனுத்தபடி கூறி முறுக்கிக் கொண்டான்.
"என் நேம்க்கு என்னடா கொறைச்சல்... என் அப்பா எவ்ளோ ஆசையா வெச்ச பேர்... நீ அமுதினினு லென்த்தா கூட சொல்ல வேண்டாம்... ஷார்ட்டா அம்முனு சொல்லு போதும்... எங்கே சொல்லு பாப்போம்... அம்....ம்ம்மு" என்று இதழ் குவித்து அவன் முகத்திற்கு நேரே கூறிக் காண்பித்தாள்.
அவள் பேசும் அழகில் திமிர் தெரிந்தாலும், தன் வாய்மொழி வார்த்தையாய் அவள் பெயரைக் கேட்க நினைக்கிறாள் என்று புரிந்திட, இறங்கிய குரலில் இறைஞ்சும் அம்முவைக் கண்டு கமல் இன்னும் கொஞ்சம் ஸ்வாரசியம் அடைந்தான்.
"ஆசையப் பாரு... மங்கிக்கு எல்லாம் நேம் இருக்குறதே அதிசயம்... அந்த நேம்மையும் சுருக்கி நிக் நேம் வெச்சு கூப்பிடனுமாம்.... போடி" என்று வழக்கம் போல் அவனது பாணியில் கூறினான்.
மேலும் அவனே தொடர்ந்தான். "இப்போ ஒழுங்கு மரியாதையா கீ-ய கொடுத்துடு.... இப்போவே வெளியே போயிட்டா ரெண்டு பேருக்கும் நல்லது. இல்லேனு வை.... பொம்பளப்புள்ள உன்னை தான் தப்பா பேசுவாங்க...."
"ஓஹோ.... நல்லா யோசி! என்னையா தப்பா பேசுவாங்க? வெளியே என்ன நடந்துச்சுனு மறந்துட்டேயா கண்ணா!!! இல்லே இப்போ நான் வெளியே போனா என்ன ரியாக்ட் பண்ணுவேன்னு உன்னால கெஸ் பண்ண முடியலேயா?" என்றிட கமல் மீண்டும் திருட்டு முழி முழித்துக் கொண்டு நின்றிருந்தான்.
கமலுக்கோ கற்பனை பலவாறாக விரிய அது அவன் கண்களிலேயேத் தெரிந்தது. வஞ்சியவள் அவன் முழி கொண்டே அதனையும் படித்துவிட்டு, கண்களை சுருக்கி, நாக்கு துருத்தி "ஆசையப் பாரு.... அந்த ஸீன் இங்கே லேது" என்று கூறி மின்தூக்கியை திறந்தாள்.
வெட்கப்பட்டுக்கொண்டே வெளியே வந்த அம்மு அந்த ஃபோன் கால் செய்த பெண்ணின் தோளில் தலை குனிந்து, "உங்க ஓனரு என் ஹார்ட்டை வாங்கிக்க சம்மதம் சொல்லிட்டாரு...." என்றாள்.
அங்கிருந்த நான்கைந்து பெண்களோ, "ண்ணா சூப்பர் ண்ணா!"
"கேட்டப்ப கூட சொல்லாம எங்ககிட்டேலாம் பொய் சொல்லி மறச்சிட்டிங்க பாத்திங்களா!"
"வாழ்த்துக்கள் ஓனர் ண்ணோவ்..."
"லவ் சக்ஸஸ் ஆனாதுக்கு போனஸ் கொடுங்க ஓனர் ண்ணா..."
என்று அவரவர் மனநிலைக்கு ஏற்றார் போல் அவர்களுக்குத் தெரிந்த முறையில் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
'இவளேலாம் ஃபோன்லேயே வெளுத்து வாங்கியிருக்கனும்..... எல்லார் முன்னாடியும் சொல்லாம தனியா கூப்பிட்டு சொல்லனும்னு நெனச்சது என்னோட முட்டாள் தனம்' என்று மனதிற்குள் அர்ச்சித்தவனின் முகம் உண்மையாகவே கோபத்தில் சிவந்தது.
சுற்றியிருப்பவர்களை ஒருமுறை முறைத்துவிட்டு, "அவ என்ன பொய் சொன்னாலும் அப்படியே நம்பிடுவிங்களா!!!"
"நான் என்ன பொய் சொன்னே கண்ணா... நான் சொன்ன அத்தனையும் நிஜம்..."
"எது டி நிஜம்? நானா என் மனசை தொலச்சிட்டு அதை தேடி உன் பின்னாடி அலஞ்சிட்டு இருக்கேன்!!! ஹாங்?"
"ஆமால!!! மன்னிச்சு மக்களே ஒரு சின்ன மிஸ் அண்டர்ஸ்டான்டிங் ஆகிடுச்சு... உங்க மனசுல திருத்தி எழுதிக்கோங்க... என் ஹார்ட் தான் ஓனர் சார்கிட்ட இருக்கு... எனக்கு அது அப்படியேலாம் திரும்பத் தர வேண்டாம்... அதுக்கு பதிலா அவர் ஹார்ட்டை கேட்டு வாங்கித் தாங்க போதும்..." என்று ஊழியர்களின் பேருதவி நாடி நின்றாள்.
"காசா? பணமா? ஹார்ட்டு தானே ங்கண்ணா... கொடுத்தா என்ன கொறஞ்சா போயிடுவிங்க?" என்று அப்போதும் அவர்களும் அவனைத் தான் வம்பு வளர்த்தனர்.
"ஐயோ பைங்கிளி... நீங்க மொதோ கஸ்டமரை கவனிங்க..." என்று போனஸ் கேட்ட குடும்பஸ்த்ரியை பார்த்து கூறிவிட்டு, "ஏய் நீ மொதோ கிளம்பு" என்று அம்முவின் கை பிடித்து இழுத்துச் சென்றான்.
பணம் செலுத்தும் இடத்தைக் கடக்கும் போது அவனது கையை தன் பலம் கொண்டு இழுத்து திருத்தினாள்.
"என்ன? ட்ரெஸ் எல்லாம் வீட்டுக்கு வந்திடும்... வா உன்னை அமி வீட்ல விட்டுட்டு நான் திரும்ப கடைக்கு வரனும்" என்று நின்ற இடத்திலேயே பறந்தான்.
அப்போதும் நகராமல் ஆணியடித்தார் போல் நின்றிருந்தவளை என்ன என்பது போல் நெற்றி சுருக்கிப் பார்த்தான்.
"நான் பே பண்ணனும்"
"எதுக்கு?"
"இது என்ன கேள்வி! நான் எடுத்த ட்ரெஸ்-க்கு தான் பே பண்ணனும்..."
"அம்மா தெளிவா உன்கிட்ட தானே சொன்னாங்க... நம்ம கடை தான் வேணுங்குறதை எடுத்துக்கோனு... பின்னே எதுக்கு நீ பே பண்ணனும்?" என்று எரிச்சலாக வினவினான்.
"ஆன்ட்டி சொன்னாங்க தான். ஆனா நான் பே பண்ற ஐடியால தான் கடைக்கு வந்தேன்"
"உன்கிட்ட காசு வாங்குற ஐடியால நான் உன்னை கூட்டிட்டு வரலே"
"இல்லே கமல் நான் பே பண்ணி தான் வாங்குவேன்.... இல்லேனா எதுவுமே எனக்கு வேண்டாம்..."
"எதுக்கு இப்போ இவ்ளோ அடம்பிடிக்கிறே!".
இப்படி காரணமே இல்லாமல் கோபம் கொள்ளும் கமல் அவனுக்கே புதிதாகத் தான் தெரிந்தான். அதுவும் ஒரு அரிவையவளின் ஆடை அலங்கார விவகாரத்தில் தலையிட்டு அது என் பொறுப்பு என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இந்த கமல் முற்றிலுமே புதியவன் தான்.
"உங்க ஃபேமிலில நான் யாரு? எனக்கு எதுக்கு நீங்க எல்லாரும் எல்லாம் செய்து தரனும்?"
நொடியும் தாமதிக்காமல் கமலிடம் இருந்து எதிர்கேள்வி வந்தது. "நீ காப்பாத்துனேயே ஒரு பொண்ணு... அந்த பொண்ணு உனக்கு என்ன வேணும்? நீ எதுக்கு உன் உயிருக்கு ஆபத்து வரும்னு தெரிஞ்சும் அந்த பொண்ணை காப்பாத்தனும்!!!" என்று அவனும் பதிலுக்கு கேள்வி எழுப்பிட அம்மு இப்போது வாயடைத்துப் போனாள்.
பெண்ணவள் அப்படி ஒரு கேள்வி கேட்டதன் முக்கிய நோக்கமே அவன் குடும்பத்தார் அவளை ஏற்றுக்கொண்டதை மறைமுகமாக அவனுக்கு உணர்த்தவும், அவனது மனதில் தன்னைப் பற்றி என்ன அபிப்பிராயம் இருக்கிறது என்று அறிந்து கொள்வதற்கும் தான். ஆனால் கமலோ எதிர்கேள்வி கேட்டு அவளை பேச்சற்ற சிலையாய் நிற்கச் செய்திருந்ததோடு மேலும் அவனே தொடர்ந்தான்.
"ஒருத்தவங்களுக்கு உதவி தேவைப்படும் போது அதை அவங்க வாயத் திறந்து கேக்குறதுக்கு முன்னாடியே செய்து கொடுக்குறது ஒரு மனிதாபிமானம் தான். அதுல என்ன மாதிரியான உறவு முறை இருக்குனு ஆராயக் கூடாது... நம் இனம் தானா? நம் மதமா? நம் சாதியா? அதிலும் நமக்கு நெருங்குன உறவா? தூரத்து உறவா?னு யோசிக்கிறவங்க ஓரறிவு ஜீவனைவிட மோசமானவங்க..."
இப்போது அம்மு பேசுவதற்கு அவனே பாய்ன்ட் எடுத்துக் கொடுத்திருந்தான்.
"உதவி தேவைப்படுறவங்களுக்கு, தேவைப்படுற உதவி செய்யனும் தான்.... எனக்கும் உதவி தேவை பட்டுச்சு... ஸ்டே பண்ண இடம் தேவைபட்டுச்சு... நீங்க கொடுத்திங்க தங்கியிருக்கேன்... கொஞ்ச நாள் சேஃபா வெளிய போயிட்டு வர என் கூடவே ஒரு ஆள் இருக்க வேண்டியதா இருக்கு.... சோ என்னை கூட்டிட்டு போறிங்க, வர்றிங்க அக்சப்ட் பண்ணிக்கிறேன்...
ஒருத்தருக்கு உதவி தேவைப்படும்போது இல்லேனு மறுப்பு சொல்றது ஒவ்ளோ பெரிய தப்போ அதே போலத் தான் தேவைக்கு அதிகமா உதவிய ஏத்துக்கிடுறது ஏமாத்துறதுக்கு சமம்...
இப்போ என்கிட்ட எனக்கு தேவையானதை வாங்கிக்கிற அளவுக்கு பணம் இருக்கு...... சோ நான் பே பண்ணி தான் வாங்குவேன்..." என்று அவளும் தீர்க்கமாக சொல்லி நின்றாள்.
மூக்கு விடைக்க அவளை முறைத்தாலும் கமலுக்கு அவள் கூற்றை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது. இறுதியில் அவளது ஆடைகளுக்கு பணம் செலுத்திவிட்டு உடைகளையும் எடுத்துக் கொண்டு தான் புறப்பட்டாள்.
அமியின் இல்லம் செல்ல அனைத்து வானரக் கூட்டமும் இவர்களுக்காகத் தான் காத்திருந்தது. அதன்பிறகு எப்போதும் போல் கேலி கிண்டல் நக்கல் நையாண்டி என்று அந்த இல்லமே ஜே ஜே என்றிருந்தது. மதிய உணவை முடித்துக் கொண்டு பவனும், கமலும் அவரவர் கடைக்குப் புறப்பட, கமலின் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது.
எடுத்துப் பார்த்தவன் தன் உந்துவண்டியைக் கூட உயிர்ப்பிக்க மறந்து திறன்பேசியைப் பார்த்தபடி அப்படியே நின்றிருந்தான். அருகில் இருத்த பவன் தன் அனுஜனை உலுக்கி,
"என்ன டா? கிளம்பலேயா?" என்று வினவிட, கமல் தன் திறன்பேசியை அவனிடம் காண்பித்தான்.
அதில் இருந்த செய்தி "கல்யாணம் ஆகிடுச்சாமே... வாழ்த்துக்கள்.... லீவ் போட்டு வீட்ல வெச்சுக்கிட்டா மட்டும் உன் மனைவிய காப்பாத்திட முடியும்னு நெனைக்கிறேயா? Be careful both of you"
"மனசை போட்டு குழப்பிக்காதே!இப்படி மெசேஜ் பண்றதே நீ வேற எதுவும் யோசிக்காம இந்த பர்ஷனை பத்தி மட்டும் திங்க் பண்ண வைக்கிறதுக்கா இருக்கலாம்... இனி நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா எங்கேயும் போக வேண்டாம்... அம்முகிட்ட எதுவும் சொல்லாதே" என்று பவன் கமலுக்கு எச்சரித்துவிட்டு அந்த குறுந்தகவலை தனது புலனத்திற்கு மாற்றிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டான்.
தன் ஷோரூமிற்கு வந்த சற்று நேரத்தில் கிரன் ப்ரோஸ் உடன் இந்த குறுந்தகவலை பகிர்ந்து கொண்டு குட்டி மீட்டிங்கை நடத்தினான். அதன் இறுதி முடிவை இரவு பேசிக் கொள்ளலாம் என்று ராம் கூறிட, அத்தோடு மீட்டிங் முடிவடைந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முக்கிய காரணகர்த்தாக்களான கமலும், அம்முவும் அந்த மீட்டிங்கில் இல்லை....
இரவு விமலா மற்றும் கங்காதரனைத் தவிர மற்ற அனைவரும் அமியின் இல்லத்தில் தங்கினர். அமியின் இல்லத்தில் அனைவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தபோதும் மாடியில் வடிவமைக்கப்பட்டிருந்த பெரிய கூடம் அனைவரும் மொத்தமாக தங்கிக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் பெரும்பாலும் இங்கே அனைவரும் வரும் நேரம் கூடத்தில் தான் உறங்குவர்.
அதற்கு ஏற்றார் போல் ஆரவ்-வும் மாமனாரின் இல்லத்தில் மாடி ஹாலில் ஹோம் தியேட்டர் மற்றும் ப்ரஜக்டர் செட் செய்திருந்தான். குழந்தைகளுக்கான படம் ஒன்றை போட்டுவிட, அவர்கள் ஐவரும் பெரியவர்களை எந்தத் தொல்லையும் செய்யாமல் அவர்கள் உலகில் ஐக்கியமாகினர்.
ராம் தான் முதலில் தங்கள் திட்டத்தை ஆரம்பித்து வைத்தான். "கொடைக்கானல் போலாமா?"
இதனைக் கேட்ட அடுத்த நொடியே கமலும், அம்முவும் ஒரு சேர அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கமலுக்கு இப்போதே பயப்பந்து உருளத் தொடங்கியது.... இவ அங்கே வந்தா ஓவரா ஆடுவாளே! இதுங்களும் எப்படா இவளை என் தலையில கட்டலாம்னு தான் துடிக்கிதுங்க.... என்ற சிந்தனை.
அம்முவிற்கோ 'சிக்குனான் டா மாப்ளே!' என்ற மொமெண்ட்.

சீண்டல் தொடரும்.