இல்லம் திரும்பும் வேளையிலும் கூட அம்முவின் மனதிற்குள் ஒரு பெரும் போராட்டம் நிகழ்ந்து கொண்டே தான் இருந்தது. இங்கோ கங்காதரன் மற்றும் விமலாவிற்கு கமலின் காதல் விவகாரம் தெரியவர, இருவரும் இணைந்து வரும் காட்சியைக் காண ஆவலாக இருந்தனர்.
ஆனால் அனைவரும் வந்து இறங்கிய நொடியிலிருந்தே அம்முவின் அமைதி விமலாவை வருத்தமடையச் செய்தது என்றால் கங்காதரனை குழப்பத்தில் ஆழ்த்தியது. கணவரின் குழப்பத்தை அறிந்திடாத விமலா,
"ஏங்க... நம்ம அம்மு எவ்ளோ அமைதியா இருக்கா பாருங்க! ஏற்கனவே இந்த கமல் பய ஓவரா பேசுவான்... இதுல மருமக இவ்ளோ அமைதியா இருந்தா இவன் அவளுக்கும் சேர்த்துல பேசுவான்..... ஹும்..." என்று பெருமூச்சு விட்டுக்கொள்ள,
"உன் மகன் வாய்க்கு அம்மு தான் சரி..." என்றார் கங்காதரன்.
"சும்மா சொல்லனும்னு ஏதாவது சொல்லாதிங்க... அம்மு இங்கே வந்த நாளேல இருந்து அமைதியா தான் இருக்கா..."
"உனக்கு உன் சின்ன மருமக பேசி கேக்கனும் அவ்ளோ தானே... இதோ இப்போ வீட்டுக்குள்ள போனதும் கேட்டுடலாம்...." என்று ஒரு மாதிரி தொனியில் கூறினார்.
அவருக்குமே பெருமூச்சு ஒன்று எடுத்துக் கொண்டால் பரவில்லையோ என்று தோன்றத் தான் செய்தது. அம்முவின் பேச்சை இதற்கு முன்பாகவே கேட்டவராயிற்றே!
முதல்முறை இல்லம் நுழைந்த போது செய்ய முடியாமல் போன ஆரத்தி அழைப்பை இன்று தன் மறுமகளை மட்டும் தனியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து தன் மனக்கவலையைத் தீர்த்துக் கொண்டார் விமலா. ஆனாலும் கமல் விடுவதாக இல்லே...
"அது என்ன அவளுக்கு மட்டும் ஸ்பெஷலா ஆரத்தி... நானும் நிப்பேன்" என்று அம்முவை இடித்துக் கொண்டு வந்து நின்றான்.
ஆலம் சுற்ற வந்த விமலாவோ "முறைப்படி கல்யாணம் ஆகட்டும் அப்பறம் உனக்கும் சேத்து சுத்துறேன்... இப்போ போடா அந்த பக்கம்" என்று பொய் கோபமாய் விரட்டிவிட்டார்.
ஆலம் சுற்றி முடிக்க விமலாவின் காலில் விழுந்து வணங்கினாள் அம்மு.
"என்னங்க... சேந்து நின்னு ஆசிர்வதாம் செய்யலாம்... நீங்களும் வாங்க" என்று கங்காதரனையும் உடன் அழைத்தார் விமலா.
அப்போதும் "அப்பா என்னையும் ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று மீண்டும் அம்முவை இடித்தபடி அன்னை தந்தையரின் காலில் விழுந்தான் கமல்.
இருக்காதா பின்னே! மற்றவர்கள் அவளையும் கமலையும் இணைத்து பேசினாலோ அல்லது அவளிடம் கமல் பற்றி வம்பு வளர்த்தாலோ மௌனம் எனும் போர்வையில் ஒழிந்துகொண்டு, புன்னகை எனும் மொழியில் பதில் கொடுப்பாளே ஒழிய வேறு எதுவும் பேசமாட்டாள். அதே நேரம் கமலிடமும் இப்போது வரை பேசிடவில்லை. அவளின் வாய்பூட்டை திறக்கவே, தான் கற்று வைத்திருந்த குரங்கு வித்தை அனைத்தையும் ஒவ்வொன்றாக இறக்கிப் பார்க்கிறான் கமல்.
அம்மு காலில் விழுந்து வணங்கிய அந்த குறுகிய கால அவகாசத்தில் கங்காதரன் தன் மனைவியிடம், "அம்முகிட்ட தனியா பேசும் போது கமலைப் பத்தி கொஞ்சம் பெறுமையா பேசு" என்று முனுமுனுத்தார்.
விமலாவோ எதற்கு கூறுகிறார் என்று புரியாவிட்டாலும் சரி என தலையசைத்தார்.
கீழே காலடியில் கிடந்த அம்மு நிமிரும் சாக்கில் கமலின் தலையில் தெரியாமல் இடிப்பது போல் முட்டினாள்.
அது ஏற்படுத்திய வலியில் ஒரு நொடி தன்னையும் மறந்து "ஸ்ஸ்ஸ் இம்ச... பக்கத்துல ஆள் இருக்கானு பாத்து எந்திரியேன் டி... இடுச்சுகிட்டே பார்" என்று தன் வலியோடு சேர்த்து அவளுக்கும் வலிக்குமே என்ற எண்ணத்தில் உரைத்தான்.
முழுதாக எழுந்து கொள்ளாமல் இடைவரை குனிந்திருந்த அம்முவோ, "பாத்ததுனால தான் இடிச்சேன்" என்று கூறி உதடு சுழித்துவிட்டு, விமலாவைப் பார்த்து புன்னகைத்தபடி எழுந்து நின்றாள்.
சுற்றியிருப்போருக்கு ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிந்தபோதும் கண்டுகொள்ளாதது போல் நின்றிருந்தனர்.
அடுத்து நிமிர்ந்த கமலோ தலையைத் தேய்த்துக் கொண்டே தன்னவளை ரசனையாகப் பார்த்தபடியே எழுந்து நின்றான். வந்து இறங்கியதிலிருந்து நடந்த அனைத்தையும் பவன் தன் திறன்பேசியில் உயிர்கொண்ட புகைப்படமாக்கி இருந்தான்.
அதன்பிறகு அனைவரும் ஒரு குளியலை போட்டுவிட்டு, துணிகளை அதன் இயந்திரத்தில் போட்டு எடுத்து மொட்டை மாடியில் காய வைப்பது என்று பெண்கள் தங்கள் வேலையில் மூழ்கினர். மிதுன்யா அவ்வீட்டு மருமகளாய் இரவு உணவு தயாரிக்கச் செல்ல, அங்கே விமலா அனைத்து வேலைகளையும் முன்னதாகவே முடித்து வைத்திருந்தார்.
உணவு பதார்த்தங்கள் மொட்டைமாடிக்கு எடுத்துச் செல்லப்பட, கங்காதரனும், விமலாவும் கீழேயே தங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டனர். பிள்ளைகளோடு அவர்கள் பண்ணும் சேட்டைகளைப் பார்ப்பதற்காக கங்காதரனும் விமலாவும் கூட மாடி வந்துவிட இறுதியில் பிள்ளைகளின் பொறுப்பு அவர்களதாகியது. பேரன் பேத்திகள் ஐவருடனும் மீண்டும் மழலைகள் ஆகினர் வயதில் முதிர்ந்த தம்பதியர் குழந்தைகள்.
நேத்ராவும், மிதுன்யாவும் ஆளுக்கு ஒரு தட்டில் பூரி மற்றும் எலும்பு குருமா எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு ஊட்டிவிட ஆரம்பிக்க, ஆண்களும் கூட குழந்தைகளாக மாறினர்.
கணக்கு வழக்கற்று பூரி உள்ளே சென்று கொண்டிருந்தது ஆண்களில் வயிற்றில்... அதிலும் கமலுக்கும் அபிக்கும் போட்டி தான். விமலாவிடம் இன்னும் பூரி கேட்டு கமல் கெ(கொ)ஞ்சிட, விமலா எழுந்து சென்றார்.
உதவிக்கு வருவதாகக் கூறிய அமியைத் தடுத்து சுனோவையும், அம்முவையும் அழைத்தார் அவர். "இவனுங்க பொண்டாட்டிங்கள வேலை வாங்கினா தான் இவனுங்க போட்டி போடுறதை நிறுத்துவானுங்க..." என்று விமலா சத்தம் கொடுத்துக் கொண்டே தான் சென்றார்.
அவரது கூற்றில் அம்முவும், சுனோவும் தன் இணைகளை முறைத்துக் கொண்டே தான் சென்றனர்.
விமலாவோ அம்முவிடம் தனியாகப் பேச நேரம் பார்த்து காத்திருந்தவர் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார்.
ஒரு ஈடு பூரி போட்டு எடுத்து சுனோவிடம் கொடுத்துவிட்டவர், அம்முவை தன்னோடு வைத்துக்கொண்டார்.
"இந்த கமல் பையனுக்கு கல்யாணமே ஆகாதுனு நெனச்சேன்... ஒரு பொண்ணையும் நிமிர்ந்து பாக்கமாட்டான்... பொண்ணு பாக்க போன இடத்துல கூட நீங்களும், அப்பாவும் பாத்தா போதும் ம்மானு சொல்லுவான்... இப்படித் தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடிக் கூட நம்ம மதுரை சிம்மக்கலேயே ஒரு வரன் வந்தது... மீனாட்சிம்மன் கோவில்ல வெச்சு பொண்ணு பாத்துட்டு பிடிச்சிருந்தா வீட்டுக்கு போயி பூ வெச்சிட்டு வந்திடலாம்னு நெனச்சிருந்தோம்... உள்ளூர் தானே ரெண்டு பேராப் போகாம, நாலு பேரா போயிட்டு வருவோம்னு நெனச்சு பவனைத் தவிர எல்லாருமா தான் போனோம்... பொண்ணெல்லாம் எங்களுக்கு பிடிச்சுகிடுச்சு... அந்த பொண்ணுகிட்ட நாலு வார்த்தை பேசிட்டு வாடானு சொன்னா அண்ணி பேசிட்டு வரட்டும்... வீட்ல அந்த பொண்ணு என்னை விட உங்ககூட தான் அதிக நேரம் இருக்கப் போகுது... அதனால நீங்களே பாத்து பேசி முடிச்சிடுங்கனு சொல்லிட்டான்... நீயே சொல்லும்மா! இப்படி பேசத் தெரியாத புள்ளைய வெச்சுகிட்டு என்ன தான் செய்யிறது!!!" என்று உண்மையாக நடந்த ஒன்றை அம்முவை வெறுப்பேற்ற வேண்டியே பெருமையாக மார்தட்டிக் கூறினார் விமலா.
ஏற்கனவே கமல் தன்னை ஆறு மாத காலமாக கண்டுகொள்ளாமல் விட்டதில் தோன்றும் மனப் பொறுமலைத் தீர்க்கும் வழி தெரியாமல் இருந்தவள், இப்போது இரண்டு மாதத்திற்கு முன்பு கூட பெண் பார்க்கச் சென்றிருக்கிறான் என்ற விடயமும் சேர்ந்து கொள்ள, 'மவனே நான் லவ் சொன்னதுக்கு அப்பறமும் கூட என் நியாபகம் துளியும் இல்லாம பொண்ணு பாக்கவா போனே!!! இன்னைக்கு நைட் உனக்கு சிவ பூஜை காத்திருக்கு... ரெடியா இரு... அதுக்கு முன்னாடி இப்போ இன்னொரு முக்கியமான வேலை பாக்கி இருக்கு....' என்று தன் மனதோடு பேசிக்கொண்டு,
"என்ன அத்தே சொல்றிங்க... கமல் பேசமாட்டாரா? அதுவும் பொண்ணுங்க கிட்ட!!! கமலைப் பத்தி தெரிஞ்ச யாரும் இதை நம்பமாட்டாங்க... எல்லாம் உங்க முன்னாடி வெறும் நடிப்பு அத்தே... அதை பாத்து ஏமாந்துடாதிங்க... கமலுக்கு எந்த நேரத்துல கமல கண்ணனு பேர் வெச்சிங்களோ தெரியலே! பேருக்கு ஏத்தா மாதிரி கோபிகையர்கள் கொஞ்சும் கோபாலன் தான்... இப்ப்ப்ப்ப்ப்போ கொடைக்கானல்ல கூட டூரிஸ்ட்டா வந்த ஃபாரினர்ஸ்க்கு கைட் வேலை பாக்காத குறை தான்.... தேடி தேடி போயி ஹெல்ப் பண்ணுறான்.... அதுவும் முக்கியமா பொண்ணுங்கன்னா போதும்... 'ஹாய் ப்யூட்டி... ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?' அப்படினு ஆண்டியா இருந்தாக்கூட விடாம தொறத்திட்டுப் போயி பேசுறான்.... ஏன் டா இப்படி மானத்தை வாங்குறேனு கேட்டா கடைசில என் மேல பலியே போட்டுட்டான்.... நீ ஏன் என்னை ஹஸ்பண்டா ஏத்துக்கலே... இன்னேரம் நம்ம கல்யாணம் நடந்தது நடந்த படி இருந்திருந்தா நான் ஏன் மத்த பொண்ணுங்க பின்னாடி சுத்தப் போறேன்? அப்படினு என்னையே மடக்கிட்டான்... நீங்களே சொல்லுங்க அத்தே!! ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்தா 'என்னையும் என் காதலையும் ஏத்துக்கோ'னு அழகா லவ்லியா சொன்னா தானே பிடிங்கும்... இப்படி கேட்டா யாருக்கு தான் பிடிக்கும்... இவனும் தான் இருக்கானே!... ஏதோ நானா இருக்கப்போயி சரி போனா போகுதுனு அவன் லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கிட்டேன்...." என்று முகத்தில் நவரசத்தையும் கொண்டு வந்து கண்களை இடத்திற்கு ஏற்றார் போல் விரித்தும் சுருக்கியும் மூச்சுவிடாமல் கூறி முடித்தாள்.
கேட்டுக் கொண்டிருந்த விமலாவிற்கும் கூட மூச்சுமுட்டியது.... அப்போதும் அம்முவின் வாய் அடங்கவில்லை...
"ஊருலேயே!! ஏன்? உலகத்துலேயே இவனை மாதிரி கேவலமா யாராளேயும் லவ் ப்ரொப்போஸ் பண்ணிருக்க முடியாது..." என்று கண்களை உருட்டி பார்ப்போரை நம்ப வைக்கும் அளவிற்கு சலிப்பாகக் கூறினாள்.
அடுத்த நொடியே தன் காதைத் திருக்கிக் கொண்டிருந்த விமலாவின் கையைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.... "ஆ... ஆஆஆ...ஆ அத்தே.... அத்தே.... என் செல்ல அத்தேல..... கொஞ்சம் மெதுவா திருகுங்க.... அத்தே"
"என் பையனை என்கிட்டேயே இவ்ளோ கொறை சொல்றியே! அப்போ ஊரெல்லாம் எவ்ளோ சொல்லிருப்பே... அதுக்கே உன்னை உண்டு இல்லேனு பண்ணுறேன் பார்..."
"நாம வேணுனா ஒரு டீலிங் பேசிக்கிவோமா! இந்த கைய மட்டும் கொஞ்சம் எடுங்க... டீல்... டீல் பேசலாஆஆஆ.." என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது காதைப் பிடித்து திருகியிருந்தார் விமலா...
"இப்படியே சொல்லு.... காதுலே இருந்த கையை எடுக்க நெனச்சே.... இன்னும் கொஞ்சம் சேர்த்து பிடிப்பேன்..." என்று பொய்க கோபமாய் மிரட்டினார்.
அம்முவிற்கும் அவர் திருகியது வலிக்கவில்லை என்றபோதும் இப்படி கத்தினால் விட்டுவிடுவார் என்று நினைத்தாள். அவளது வேலை பழிக்காமல் போகவே, வாடிய முகத்துடன்,
"சண்டை ஆரம்பிக்கிறவங்களுக்கு ஐஸ் க்ரீம்"
இப்போது உண்மையாகவே காதைத் திருகிட, "ஆவுச்.... அத்த்தத்த்தத்தேஏஏஏ" என்று உண்மையாகவே அவளும் கத்திவிட்டாள்.
"என் ஐடியாவையே என் பெரிய மருமகட்ட இருந்து சுட்டுட்டு வந்து எனக்கே சொல்றியா?"
"ஐயோ அத்தே.... நல்லா யோசிங்க... மிதுன் அக்காகிட்ட நீங்க என்ன டீல் சொன்னிங்க!!! சண்டை ஆரம்பிச்சவங்க அடுத்தவங்களுக்கு ஐஸ் க்ரீம் கொடுக்கனும்.... ஆனா நான் என்ன சொன்னேன், சண்டைய ஆரம்பிக்கிறவங்களுக்கு தான் ஐஸ் கிரீம்.... சோ இன்னைக்கு சண்டை நீங்க தான் ஆரம்பிச்சு இருக்கிங்க.... சோ உங்களுக்கு தான் ஐஸ்கிரீம்... ம்ம்ம்?"
"அடியேய்.... நானே சண்டை வரக் கூடாதுனு தான் மண்டையக் கொடஞ்சு திங்க் பண்ணி இந்த ஐடியாவே இம்ப்ளிமெண்ட் பண்ணிருக்கேன்.... இதுலே நீ என்னையே சண்டக்காரி ஆக்கிடுவே போல..." என்று முகத்தை உர்ரென வைத்திருந்த போதும் விளையாட்டாக மிரட்டினார்.
"வாடி என் ரத்தி அத்தினி கோத்திரி" என்று கூறிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் மிதுன்யா...
விமலாவும், அம்முவும் ஒரு சேர திரும்பிப் பார்க்க, "இப்படி ஒருத்தி தான் டி தங்கம் எனக்கு வேணும்.... எனக்கு இந்த 2k20 சீரியல் மாமியார்லாம் வேண்டாம் ப்பா... எப்போ பாரு மருமகளை தாங்கிகிட்டு.... 90's மாமியார் தான் கெத்து.... சும்மா வீடே ஜேஜேனு இருக்கும்... இங்கே தான் அதுக்கான வாய்ப்பே இல்லே.... அட்லீஸ்ட் ஓரகத்தி நீயாவது அப்படி இருக்கேயே!" என்று கூறி அம்முவோடு ஹைஃபை அடித்துக் கொண்டாள்.
இனி தன் பாடு திண்டாட்டம் தான் என்று அறிந்து கொண்ட விமலா "வீட்டுக்குள்ள சண்டை சத்தம் மட்டும் கேட்டுச்சு டைசனைக் கூட்டிட்டு வந்து நடுவீட்ல உக்கார வெச்சுருவேன்.... சொல்லிட்டேன்" என்று மிரட்டினார்.
இருவரும் சிரித்துக் கொள்ள மிதுன், "யாரு அத்தேம்மா? மைக் டைசனா? யாரு நல்ல ஃபைட்டருனு பாத்து அவார்ட் கொடுக்குறதுக்கா அத்தேம்மா?" என்று கேட்டு மீண்டும் சிரித்தாள்.
"ஆஹாங்.... அது தான் இல்லே டி என் பட்டு மறுமகளே... குற்றால வீட்டுல இருக்குற நாய் டி...." என்றார் விமலா. மிதுன்யா தான் அதனை நேரில் கண்டிருக்கிறாளே! சட்டென அடிவயிற்றில் அச்சம் பரவிட, "மம்மி" என்று கத்தியபடி தன் அத்தையை அணைத்துக் கொண்டாள்.
"ம்ம்ம்.... அப்படி வா வழிக்கு... யாரு சண்டைய ஆரம்பிக்கிறாங்களோ அவங்களை அட்டாக் பண்ண சொல்லி டைசனுக்கு ட்ரைனிங் கொடுத்து கூட்டிட்டு வருவேன்"
மிதுன்யா அப்படியே பல்டியடித்தாள். "சும்மா ஜாலிக்கு தான் அத்தேம்மா... எனக்கும் அம்முவே ரெம்ப பிடிச்சிருக்கு... செல்ல சண்டை மட்டும் போட்டுக்கலாம்... பட் நோ டைசன்" என்று அன்புக் கட்டளையிட, அதில் மூவருக்குள்ளும் மனதளவில் இன்னும் கொஞ்சம் நெருக்கம் உண்டானது.
மீதம் இருந்த வேலைகளை மூவருமாக முடித்துக் கொண்டு மீண்டும் மாடிக்குச் செல்ல, மருமகள்களுடன் சிரித்து பேசியபடி வந்த விமலாவைக் கண்ட கங்காதரன், "பெண்கள் கூட்டணி சேந்தாச்சு.... உன் வசிய மருந்தை சின்ன மருமகளுக்கும் வெச்சுட்ட போலயே!!!" என்று வஞ்சப் புகழ்ச்சி பாடினார்.
"ஆமா ஆமா.... வசியம் வெக்கிறாங்க.... ஏதோ நான் வசியம் செய்ததை பார்த்த அனுபவம் மாதிரி பேசுறிங்க" என்று யாருக்கும் தெரியாமல் கணவரை நொடித்துக் கொண்டார்....
அவருமே எவர் காதிலும் விழாதபடி "இல்லேயா பின்னே! நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் உன் மாமியாரையும் இப்படி பேசியே வசியம் பண்ணித் தானே உன் கைக்குள்ள போட்டுக்கிட்டே... அன்னைக்கு மயங்கினவன் தான், முப்பத்தி மூனு வர்ஷம் ஆச்சு... இன்னும் தெளியலேயே" என்று வம்பு வளர்க்க, பதிலுக்கு விமலாவோ பார்வையாலேயே "போதும் போங்க...என்னை வம்பு பண்ணலேனா உங்களுக்கு தூக்கமே வராதே" என்று கண்டித்துவிட்டு, வெண்பாவை நோக்கிச் சென்றார்.
தம்பதியர்களின் அரட்டை முற்று பெற வேண்டிய நேரமும் வர அமியும் ஆரவ்வும் தங்கள் மகள் யாழியுடன் அமியின் இல்லம் சென்றனர். மறுநாள் வாரணாசி செல்லவிருப்பதால் அங்கிருந்தே விமானநிலையம் வந்துவிடுவதாகக் கூறிச் சென்றனர்.
ஒரு ஜோடி கழன்று கொண்டதற்கே பேச்சின் சுவாரசியம் குறைந்திருந்தது... பற்றாகுறைக்கு பவனின் மகன் ருத்தேஷ், யாழியைக் கேட்டு அழத் தொடங்கிட, மிதுன்யா அவனுக்கு பால் புகட்டினால் உறங்கிவிடுவான் என்று கூறி ஒன்பது மணிபோல் அனைவருக்கும் பால் காய்ச்ச அடுமனை நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து நேத்ராவும் அடுமனை நுழைய மீதம் இருந்த வேலைகளை இருவருமாக செய்து முடித்திருந்தனர்.
ருத்தேஷ், வெண்மதி மற்றும் வேந்தன் மூவரும் தங்கள் மைமி தாத்தாவோடு உறங்கச் செல்ல, வெண்பா வழக்கம் போல் ராமுடன் மொட்டை மாடியிலேயே உறங்கினாள். மற்றவர்களும் மொட்டைமாடியில் கடையை விரித்திட அன்றைய இரவு அனைவருக்குமே மனநிறைவான இரவாக முடிந்திருந்தது.
அம்முவிற்கு மட்டும் கமலுடனான கணக்கு ஒன்று பாக்கி இருத்தது. அதனை இன்னொரு நாள் தீர்த்துக் கொள்ளலாம் என்று தன்னை அமைதிபடுத்திக் கொண்டாள்.

சீண்டல் தொடரும்.