• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 16

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
இன்று அம்மு தன் பணியை புது மருத்துவமனையில் தொடர வேண்டும். எப்போதும் மருத்துவமனைக்கு பத்து நிமிடத்திற்கு முன்பாகவே சென்றிருக்க வேண்டும் என்று நினைப்பவள் அவள். இன்றோ பழைய மருத்துவமனை சென்று தன் பைல்லையும், பேப்பர்ஸ்ஸையும் பெற்றுக் கொண்டு புது மருத்துவமனை செல்ல வேண்டும் என்பதால் இன்னும் கொஞ்சம் வேகமாகவே தயாராக நினைத்திருந்தாள்.
அம்முவின் விதியோ! இல்லை மிதுனின் சதியோ! பாத்ரூமில் தண்ணீரும் வரவில்லை! சமாதானம் செய்யச் சென்ற பவனும் இன்னும் வரவில்லை!
இது எதுவும் தெரியாத அம்முவோ காலைத் தேநீரில் மூழ்கியிருந்த விமலாவிடம் சென்று நின்றாள்... "அத்தே பாத்ரூம்ல தண்ணி வரலே! நான் இன்னைக்கு சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போக நெனச்சிருந்தேன்... இப்போ என்ன பண்ணட்டும்?" என்று முகம் வாடி கொஞ்சி நின்றாள்.
விமலாவோ வாய்திறந்து எதுவும் சொல்ல முடியாமல் கடிகாரத்தைப் பார்த்தார்... அதுவோ ஆறிலிருந்து நகர்வதாக இல்லை... பின்பு மாடிப்படியருகே சென்று "டேய் பெரியவனே" என்று சத்தமிட பதிலேதும் வரவில்லை... பெருமூச்சு ஒன்றை விட்டுக்கொண்டு, அம்முவைப் பார்த்து
"ஒன்னு பண்ணு... சின்னவன் ரூம்ல தண்ணி வரும் இன்னைக்கு ஒரு நாளைக்கு அங்கே குளிச்சுக்கோ" என்றிட, அம்முவின் மனதிற்குள் சிறு குறுகுறுப்புத் தோன்றியது.
"கமல் ரூம்லேயா!" என்று இழுத்தாள்.
"அவன் ஏழு மணிக்கு தான் எழுந்துப்பான்... அதனால நீ அதுக்குள்ள குளிச்சிட்டு வந்திடு... சரியா?" என்றிட,
இருந்தாலும் தயங்கியபடி "அங்கே மட்டும் எப்படி தண்ணி வரும்!" என்று அதிமுக்கிய சந்தேகத்தை வினவினாள்.
"நம்ம வீட்ல கொஞ்சம் அடிக்கடி பெரிய....... பைப்... பைப் ப்ராப்ளம் பண்ணும்... அதை பவன் தான் சரி பண்ணுவான்... அது கமலுக்கு இடஞ்சலா இருக்குனு சொல்லி அவன் ரூம்க்கு தனியா சின்டெக்ஸ் வெச்சுகிட்டான்..."
"அப்போ பவன் மச்சான் சரி பண்ணினதும் நான் என் ரூம்லேயே குளிச்சுக்கிறேன்..."
"கெட்டது குடி...."
"ஏன் அத்தே?" என்று முகம் சுருக்கி வினவினாள்.
"உனக்கு நேரத்துக்கு ஹாஸ்பிட்டல் போகனும்னா இப்போ மரியாதையா சொன்னதைக் கேட்டு கமல் ரூம்ல குளி... இல்லேனா பவன் வெளியே வரவே எட்டு மணி ஆகிடும்... அதுக்கப்பறம் நீ எந்நேரம் ஹாஸ்பிட்டல் போறதுனு யோசிச்சுக்கோ" என்று கறாராகக் கூறினார்.
"எட்டு மணியா!!! அவ்ளோ நேரம் வெய்ட் பண்ண முடியாது! நான் கண்ணா ரூம்லேயே குளிச்சிட்டு வரேன்" என்று கூறி மனதோடு பல போராட்டங்கள் நிகழ்த்தியபடி அவனறை நோக்கி சென்றாள்.
அங்கே கமலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அடிபாதம் எடுத்து வைத்து நடக்கும் சத்தம் கூட கேட்காதபடி சென்று குளியலறை கதவையும் தாளிட்டுக் கொண்டாள்.
குளித்து முடிப்பதற்குள் பலவிதமான கற்பனைகள் அவள் மனதில்… சத்தம் கேட்டு அவன் குளியலறை கதவைத் தட்டுவானோ! ஒருவேளை குளித்து முடித்து வெளியே வரும் அரவம் கேட்டு தன்னை வம்பு வளர்த்தால்!! வாய் வம்பாக இருந்தால் கூட பரலாயில்லே, அன்றைக்கு போல் மெத்தையில் கிடத்தி தன் மேல் படர்ந்தால்!!! என்று அடுத்தடுத்து தோன்றிய கற்பனைக்கு அவளால் கடிவாளம் கட்டிட முடியவில்லை... முகமும் கூட மேலும் மேலும் சூடேறி சிவந்ததே ஒழிய கற்பனையும் தீர்ந்தபாடில்லை, நாணமும் ஒழிந்த பாடில்லை...
ஒருவழியாக குளித்து முடித்து உடையணிந்து கொண்டிருக்க, கமலின் நினைவில் தோன்றிய நடுக்கத்தில் சுடிதார் டாப் கை தவறி கீழே ஈரத்தில் விழுந்தது.... தன்னைத் தானே நொந்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அவள் தன் ப்ரத்யேக ஆடைகளுடன் மேலாடை மட்டும் தான் எடுத்து வந்திருந்தாள். இரவு உடையை மீண்டும் போட்டுக்கொள்ள பிடிக்காமல் தன்னையே கண்டித்துக் கொண்டிருந்தாள்.
'ஐயோ அம்மு! என்னடி இப்படி பண்ணிட்ட... இப்போ எப்படி வெளியே போவேன்... ஏன் ஹாஸ்டல்ல மேல சிம்மிசும், கீழே துண்டும் கட்டிக்கிட்டு வந்ததே இல்லேயா! அது லேடிஸ் ஹாஸ்டல் டி... ஆனா இங்கே எப்படி! அதுவும் இவன் ரூம்ல.... ஆனா இப்போ வேற வழியும் தான் இல்லேயே!' என்று தனக்குத் தானே கேள்வியும் கேட்டு பதிலும் கூறிக்கொண்டாள்.
நேரம் கடந்து கொண்டே செல்ல, இதற்கும் மேல் இங்கேயே நின்றிருந்தால் அவனே எழுந்து வந்து கதவைத் தட்டினாலும் தட்டிவிடுவான். அதன் பிறகு கற்பனையில் கண்டதெல்லாம் நேரில் நடந்தே தீர்ந்துவிடும் என்று நினைத்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குளியலறையைவிட்டு வெளியே வந்தாள்.
அறையின் வாசல் கதவை நோக்கிச் செல்லும் போது தான் 'ஐய்யய்யோ!!! இப்போ இப்படியே எப்படி வெளியே போறது!!!' என்ற எண்ணமே அவள் மூளையில் தோன்றியது. தலையில் கை வைத்தபடி கதவருகே நின்றிருந்தவள், ஆபத்துக்கு பாவம் இல்லே... கண்ணாவோட ட்ரெஸ்ஸை போட்டுக்கலாம்' என்று நினைத்து அவனது கப்போர்டைத் திறந்தாள்.
"ஏய் இம்ச... என் கப்போர்ட்ல என்னடி தேடுறே!" என்ற கமலின் சத்தத்தில் அவனைத் திரும்பிப் பார்க்கும் த்ராணியின்றி அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்.
அவளது உடையை பின்னாலிருந்து கண்டவனுக்கு பெரிதாக ஒன்றும் தோன்றிடவில்லை போல. ஆனால் அவள் தன் ஆடையை அணிந்து கொள்ளப் போகிறாள் என்பது புரிந்திட,
"ஏன்டி உனக்கு வேற வேலையே இல்லேயா? ஏன் டி எப்போ பார் என் ட்ரெஸ்ஸை எடுத்துப் போடுறே!" என்று கத்தினான். அப்போதும் அவள் அசையாமல் நிற்க,
"பதில் சொல்லுடி" என்றவன் பொறுமையற்று எழுந்து வந்து அவளை கை பிடித்துத் திருப்பி தன்னைக் காணச் செய்தான். அப்போது தான் குளித்து முடித்து வந்திருக்கிறாள் என்பது அவளை நெருங்கிய உடனேயே அறிந்து கொண்டான். பற்றாததற்கு அவள் முகத்தில் தெரிந்த பளபளப்பு...
பெண்ணவள் முகம் சிவந்து, நாணம் கொண்டு தலை கவிழ்ந்து மெது மெதுவாக தன் கைகளை தன் மார்புக்குக் குறுக்கே அரணாக்கி நின்றிருந்தாள். அவளின் முகச் சிவப்பைக் கண்டு அச்செங்கடலில் தன்னையே தொலைத்தது போல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான் அவளின் கண்ணன்.
அவளோ இரு கை கொண்டு தன் மேனி மறைத்திட தானாக அவனது பார்வை கள்ளப்பார்வையாக மாறியது. அவள் மேனியைத் தழுவிய தன் கண்களை அகற்றிட முடியாமல், தவித்தது ஒரு நொடி தான்.
உடலுள் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களை அடுத்த நொடியே தலைகோதுவது போல் நேர அவகாசம் எடுத்துத் கொண்டு தன்னை சமன் செய்தான்.
அவனின் ஒவ்வொரு செயலும் பெண்ணவளை இனிமையான அவஸ்த்தைக்கு ஆளாக்கியது. தன் முகம் கண்டு ப்ரமித்ததும், கள்ளப்பார்வையால் தன்னைத் தழுவியதும், இப்போது அவனுள்ளும் உண்டான அவஸ்த்தையை தலைகோதி சரி செய்வதும் என அவளும் கடைக் கண் பார்வையில் அவனைப் பார்த்து இனம் புரியா இன்பம் அடைந்தாள்.
அவளது நாணத்தில் தன் வசம் இழக்கத் தொடங்கியவன் ஒரு அடி முன்னால் வைத்து அவளை நெருங்கி நின்றான். நங்கையவளின் இதயத் துடிப்பு அதிவிரைவு ரயில் வண்டியைப் போல் அருகில் இருப்பவனுக்கும் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு இரட்டிப்பு வேகத்தில் இயங்கியது.
அதனை ரசித்தபடி தன் வலப்புற தேகத்தை முன்பக்கமாக அவள் மேல் சரிவது போல் நின்று வலது கையை அவளது இடையை நோக்கி நீட்டினான். தானாகவே அவளது உடல் கூச்சத்தில் நெளியத் தொடங்கியது, இடையில் அவன் கரம் படுவதற்கு முன்பே இடப்புறமாக நெளித்து நின்றாள். மானினியின் உதடுகள் கூட வரண்டு நடுக்கம் கொள்ளத் தொடங்கியது.
கமலோ தன் அமுலுவின் முகபாவனைகளை ரசித்தபடி பின்னால் கப்போர்டில் கை வைத்து கைக்கு சிக்கிய ஒரு டீ-ஷர்ட்டை எடுத்து அவள் முன் நீட்டினான்.
"சீக்கிரம் ட்ரெஸ்ஸை போட்டுட்டு இடத்தை காலி பண்ணு" என்ற அவனது அதிகாரக் குரலில் சட்டென நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
அம்முவிற்கு அவனது கூற்றில் சற்று அதிர்ச்சி தான். இங்கே என்னனென்னவெல்லாமோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்ததற்கு அவனது கைவிரல் நுனி கூட அவளைத் தீண்டிடவில்லை...
அம்முவின் அதிர்ச்சி நிறைந்த முகமே கூறியது அவளது ஏமாற்றத்தை. அதனைக் கண்டு நக்கலாக ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து டீ-ஷர்ட்டை அவள் முன்னால் தூக்கிப் பிடித்துக் காண்பித்தான்.
அவன் நீட்டிய டீ-ஷர்ட்டை பிடிங்கிக் கொண்டு நகர முற்பட்டவளை தடுத்து நிறுத்தி "இங்கேயே போட்டுக்கோ" என்றான்.
இப்போது வெட்கத்திற்கு பதிலாக ரோஷம் தோன்றிட, "தேவையில்லே" என்று கூறி நகர முற்பட்டாள்.
கைகளை மறித்து கப்போர்ட்டிற்குள்ளேயே அவளை லாக் செய்திருந்தான். அதற்கும் சலைக்காதவளாய் அவன் கையை தட்டிவிட்டு விலகிச் செல்ல முயன்றவளின் இடையை வளைத்துப் பிடித்து தன் முன்னால் மீண்டும் கப்போர்ட்டிற்குள் நிறுத்தினான் அவன்.
அவனது கை தன் இடை தொட்ட நொடி காற்றில் கரைந்து உடல் எடை குறைந்தது போல் மிகவும் லேசாக இருப்பது போல் உணர்ந்தாள். அந்த ஊதுபந்து போன்ற உடலைக் கூட கால்களால் தாங்கி நிற்க முடியாமல் துவழ்வது போலவும் இருந்தது அவளுக்கு... இருந்தாலும் உள்ளுக்குள் தோன்றிய உணர்வுகளை வெளிப்படுத்தாமல் நெற்றியை சுருக்கி முகத்தை உர்ரென வைத்துக் கொண்டாள்.
மூக்கு விடைக்க அவனை முறைத்துவிட்டு அவன் முன்னால் கைகளைத் தூக்கி பனியன் அணிய சங்கடப்பட்டுக் கொண்டு மறுபுறம் திரும்பி நின்று அவனக்கு முதுகு காண்பித்தபடி டீ-ஷர்ட்டை தலைவழியே தன் தேகம் தழுவச் செய்தாள்.
மேலாடை தன் மேனி காக்கும் பணியை செவ்வனே செய்ய கீழாடை கமலின் உபயத்தில் அதன் பணியை செய்யத் தவறியது... இடையில் கட்டியிருந்த பூத்துவாலை கமலின் கையில் அகப்பட்டுக் கொள்ள, கோபத்தில் அவன் புறம் திரும்பி அவனை முறைத்தாள்.
அதற்கெல்லாம் அசராது இப்போது கீழிலிருந்து மேலாக அவன் பார்வையை அவள் மேல் பாயவிட்டான். அதில் உடல் சிலிர்த்தவள் முழங்காலுக்கு சற்று மேல் வரை நீண்டிருந்த அவன் டீ-ஷர்ட்டை இன்னும் கொஞ்சம் கீழே இழுத்துப்பிடித்து இறக்கினாள். ஆனால் இன்னமும் முறைப்பதை நிறுத்தவில்லை...
"என்ன பாக்குறே! பேண்ட் போட வேண்டாமா?" என்று மயக்கும் குரலில் கேள்வியாய் நிறுத்தினான்.
"ஒன்னும் தேவையில்லே... என் டவலை கொடு டா... நான் அத்தைகிட்ட கேட்டு என் ட்ரஸ்ஸை எடுத்துக்கிறேன்..." என்றபடி கமலின் கையில் இருக்கும் பூத்துவாலையை பறிக்க முயன்றாள்.
"ஓஹோ.... அப்போ என் டீ-ஷர்டையும் கழட்டி கொடுத்துட்டு உன் அத்தைகிட்டேயே கேட்டுக்கோ" என்று நெற்றி சுருக்கி பொய் கோபமாய்க் கூறினான்.
எங்கே தன் அனுமதி இல்லாமல் தான் அணிந்திருக்கும் சட்டையை கழற்றிவிடுவானோ என்ற பயம் தொற்றிக் கொள்ள, அவனைத் தாக்கத் தொடங்கியிருந்தாள் அவனவள்.
"எனக்குத் தெரியும் டா... ப்ராடு.... நீ இப்படி தான் ஏதாவது செய்வேனு..." என்று கூறிக் கொண்டே அடிக்க, அவளின் அடியில் இருந்து தப்பிப்பதற்காக அவளது கையைப் பிடித்தான் கமல்...
பெண்ணவளின் பயமும் கூடியதே ஒழிய குறையவில்லை... இரண்டு கைகளும் அவனிடம் சிக்கிக்கொள்ள பற்கள் கொண்டு கடிக்க முற்பட்டாள்.
பின்பக்கம் நகர்ந்த கமல் பின்னால் இருந்த மெத்தையில் சரிய அவனுடன் இணைந்து அம்முவும் அவன்மேல் சரிந்தாள்.
இப்போது கடந்து சென்ற இந்த இறுதி நொடிவரை கமலுக்கு அவளைத் தீண்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. சீண்டி விளையாட மட்டுமே நினைத்திருந்தான். தன்னவளேயானாலும் அவளைத் தீண்டினால் அது வேறு விளையாட்டில் தான் சென்று நிற்கும் என்று முன்னமே தன்னைப் பற்றி அறிந்து தான் தன் விளையாட்டை சீண்டல்களோடு நிறுத்தியிருந்தான்.
ஆனால் பூக்குவியலாய் அவள் அவன் மேல் சரிந்திட அதுவும் அறைகுறை ஆடையோடு சரிந்திட, நல்லவனாய் தன்னை காட்டிக்கொள்ள முடியாமல் அவள் கைகளைப் பிடித்தபடியே அவளை கீழே உருட்டி அவள் மேல் ஏறி அமர்ந்தான். பிடித்திருந்த அவள் கைகள் இரண்டையும் அவளது தலைக்கு மேல் தூக்கிப் பிடித்து அடக்கியிருந்தான்.
"டேய் காட்டுப்பயலே... எந்திரி டா அந்த பக்கம்... உன் வெய்ட் என்னால தாங்க முடியலே. எப்போ பார் என் மேல ஏறி அமுக்கிகிட்டு... உன்னைவிட சின்னப் பொண்ணு எப்படி இவ்ளோ வெய்ட் தாங்குவானு கொஞ்சமாச்சும் மண்டேல மசாலா இருக்கா பார்!!! கையை விடுடா மொதே" என்று வழக்கம் போல் வாய் மூடாது திட்டிக்கொண்டே இருந்தாள்.
அவளின் இருகரங்களையும் தன் ஒற்றைக் கையால் அடக்கி, அவளது மென்னிதழ்களின் மேல் ஒற்றை விரலை வைத்து "ஸ்ஸ்ஸ்" என்றான்.
உடனே கேட்டுவிட்டால் அது தான் அம்மு இல்லேயே... தான் முதன்முதலாகக் கண்ட கமலையும், முதன்முறை பார்த்த நொடியிலிருந்த காதலிக்கத் தொடங்கிய கண்ணனாகிய கன்னிப் பெண்களின் கண்ணியவானையும் மட்டுமே கருத்தில் கொண்டு, இப்போதிருப்பவன் காதல் பித்தேறிய கள்வன், அமுதினியின் கணவன், அமுலுவின் காதலன், தன் மனம் கவர்ந்த கள்வன், அவனின் மெய்நிகர் உயிரானவள் தான் என்பதை மறந்து,
"நீ மொதோ என் மேல இருந்து எந்திரிடா பொறுக்கி" என்றது தான் தாமதம், ஆளுமையுடன் அவள் இதழ்களை ஆக்கிரமித்திருந்தான் ஒரு பொறுக்கியைப் போல...
அம்முவின் நிலைமையோ ஏதோ பனிப்புயலில் சிக்கிக் கொண்டது போல உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை குளிர்பரவ, இதழ்கள் மட்டும் சிக்கிமுக்கி கல்லின் உரசலில் ஏற்படும் நெருப்பாய் சுட்டது.
அவனிடம் இருந்து விலகத் துடித்து திமிறியவளின் மெய் அடங்கி, நயனங்களின் நர்த்தனம் நாணமாய் மிளிரும் வரை இதழ் முற்றுகையைத் தொடர்ந்தான் அவளது கண்ணன்.
பிரித்திட மனமின்றி தன் இதழ்களையும், பிரிந்திட மனமின்றி தன்னையும் அவளிடமிருந்து பிரித்து எடுத்து போதை ஏறிய பார்வையோடு அவளைக் கண்டு "தேங்கஸ்" என்றான்.
"வாய் கூட கழுவாம என் வாயையும் காவாய் ஆக்கிட்டியே டா பன்னி" என்றிட, மீண்டும் ஒருமுறை அவளது கீழிதழ்களை அசுர வேகத்தில் சுவைத்துவிட்டு, "வா சேர்ந்து போயி ப்ரெஷ் பண்ணலாம்..." என்றான் மெல்லிய சிரிப்போடு.
"உன்னை நம்பி ரூம்குள்ள வந்ததுக்கே எனக்கு இந்த கதி, இன்னும் பாத்ரூம்குள்ள வந்தேன் இருக்கிறதையும் உருகிடுவே" என்று தன் அறைகுறை ஆடையை சுட்டிக் காண்பித்துக் கூறினாள்.
"உன்னை யாருடி என் ரூம்குள்ள வர சொன்னது!! அதுவும் ஸ்விம் ஷூட் மாதிரி ஏதோ ஒரு ட்ரெஸை போட்டுகிட்டு" என்று வழக்கம் போல் சண்டையை தொடங்கி வைத்தான்.
"எனக்கு ஆசை பாரு... என்னை பார் என் அழகைப் பார்னு உன் முன்னாடி வந்து நிக்கிறதுக்கு... என் ரூம்ல தண்ணி வரலே... இந்த வீட்டு இளவரசர் ரூம்ல தான் தண்ணி வரும்னு அத்தை தான் சொன்னாங்க... ஹாஸ்பிட்டல் சீக்கிரம் கிளம்பனும்னு நெனச்சிருந்தேன்... உன்னால எல்லாம் ஸ்பாயில் ஆகிடுச்சு போ..." என்று புலம்பினாள்.
"சரி கிளம்பு... உன்னை டைம்க்கு டியூட்டில ஜாயின் பண்ண வைக்க வேண்டியது என் பொறுப்பு" என்று கூறி அவளுக்கு ஒரு பேண்ட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு குளியலறை நோக்கிச் சென்றான்.
அம்மு அவன் கொடுத்த பேண்ட்டை அணிந்து கொண்டு, மறக்காமல் தன்னுடைய உடைகளையும் எடுத்துக் கொண்டு பூனை போல் வெளியே தலையை மட்டும் நீட்டிப் பார்த்தாள். யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தனதறை நோக்கி ஓடினாள்.

கமலும் குளித்து தயாராகி அம்முவிடம் கூறியது போல் சரியான நேரத்திற்கு மருத்துவமனை அழைத்துச் சென்றிருந்தான், இன்றே கடைசி இம்மருத்துவமனை என்று நினைப்பில் பெரிய கல் விழப் போவது அறியாமல்...

சீண்டல் தொடரும்.