• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 17

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
கமலும் தான் கூறியது போல் சரியான நேரத்திற்கு அவள் முன்னால் வேலை பார்த்த மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தான். நேரே தன்னுடைய பணி பற்றிய கோப்புகளைப் பெற்றுக்கொள்ள, Dr.சங்கரை பார்க்கச் சென்றாள்.

அதே சமயம் இரண்டு வாரம் வெளிநாட்டில் சிறப்பு அறுவை சிகிச்சைக்கு தலையை மருத்துவராகச் சென்றிருந்த Dr.போஸ் அன்று தான் தன் பணியைத் தொடர வந்திருந்தார். அவருக்கு அம்முவின் பணிமாற்றம் தெரியாததால் தனதறையில் அம்முவிற்காக காத்திருந்தார்.

Dr.சங்கரிடம் வாங்க வேண்டிய கையேழுத்துகளை வாங்கிக் கொண்டு விடைபெற்று வந்தவள், எதேர்ச்சையாக Dr.போஸின் அறையைக் கடக்கும் போது உள்ளே, ஒரு அறிக்கையை கையில் விரித்துப் பிடித்தபடி நின்றிருந்த போஸ்ஸைக் கண்டாள். முதல் நாள் அவர் முகத்தில் இருந்த கடவுளின் மறுஉருவம் இன்று ஏனோ வேறு விதமாகத் தோன்றியது.

அவரது சொட்டைத் தலைக்கு மேல் இரண்டு கொம்புகள் தெரிந்திட, அதனைக் குரூரமாகப் பார்த்தவளை இப்போது தலை நிமிர்த்தாமல் விழிகளை மட்டும் உயர்த்தி அவர் பார்த்தார். அவளைக் கண்டவுடன் ஒரு கோணல் சிரிப்பு வேறு அவர் முகத்தில்... இப்போதும் தன் கற்பனைக்குள் ஊறிக்கிடந்தவளுக்கு அவர் அச்சு அசல் அரக்கனைப் போல் தெரிந்திட, கண்களை விரித்து முகமெல்லாம் வியர்வைப் பூத்திருந்தபடி அவரைப் பார்த்தாள்.

அவளது பயத்தைக் கண்டு தன்னை இயல்பாக்கிக் கொண்டவர் அவளை உள்ளே அழைத்தார்.

"அமுதினி... உள்ளே வா... ஏன் வெளியவே நிக்கிறே!"

முகத்தில் துளிர்த்த வியர்வை முத்துக்களை தன் கைக்குட்டை கொண்டே துடைத்தபடி உள்ளே நுழைந்தாள்.

"எப்பவும் சீக்கிரம் வர்ர பொண்ணு இன்னைக்கு ஏன் லேட்?" என்று வினவிவிட்டு பதிலுக்கான ஆப்ஷனும் அவரே கொடுத்தார்.

"லேட் ஆனதுக்கு உன் மாமியார் காரணமா இல்லே உன் கணவரா?" என்று கேட்க பெண்ணவளுக்கோ 'வயதில் மூத்தவர் இப்படியெல்லாம் பேசுகிறாரே' என்ற முகச் சுழிப்பு தான் தோன்றியது. இவ்வளவு நேரம் இருந்த பயம் அறுவறுப்பாக மாறியிருந்தது.

ஆனாலும் அதனை முகத்தில் காண்பித்துக்கொள்ள முடியாத நிலை. வேலைக்கு என்று வெளியேறிவிட்டாலே அனைத்தையும் சகித்து தானே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது...

'என் கணவர் தான் காரணம் என்று சொன்னால் உன் குப்பைகள் நிறைந்த மூளை என்ன யோசிக்கும் என்று எனக்குத் தெரியும். இதே கேள்வியை உன் மகளிடம் கேட்பாயா?' என்று முகத்தில் அறைந்தார்போல் பதில் கொடுக்க அவளும் தயார் தான். ஆனாலும் இறுதிநாளில் ஏன் தேவையில்லாத குப்பையைக் கிளறிக் கொண்டு என்று பதில் கூறாமல் தன் வெறுப்பைக் காண்பித்தாள்.

அவளிடமிருந்து பெயரளவில் சிறு புன்னகை கூட வரவில்லை என்றவுடன் தன் காது வரை நீண்டிருந்த இதழ்களை குறுக்கிக் கொண்டு பெண்ணவளை ஒரு முழு பார்வை பார்த்தார். தோளில் இருந்த பையை இறக்கி வைக்காமல் நின்ற இடத்தில் அப்படியே நின்றிருக்க,

"இன்னைக்கும் லீவா மிஸஸ்.அமுதினி?" என்று எந்த வித நக்கலும், உள்ளர்த்தமும் இன்றி வினவினார்.

"இல்லே சார். இன்னேல இருந்து தர்மா ஹாஸ்பிட்டல்ல ட்ரைனிங்... அதான் டீனை பாத்துட்டு என் பேப்பர்ஸ்ல சைன் வாங்க வந்தேன்" என்றிட அவரது முகம் கடுகடுத்தது.

"யார் உனக்கு ட்ரைனிங் ப்ளேஸ் மாத்தினது?" என்று இதுவரை யாரிடமும் வெளிக்காட்டிடாத தன் கோபத்தை முதன்முறை அம்முவிடம் வெளிப்படுத்தினார்.

அவளது முகம் மீண்டும் ஒருநொடி பயத்தில் வியர்க்க, "டீன்.......தா..... " என்று இழுத்து முற்றுபெறாமல் இடையிலேயே நின்றது அவளது குரல்.

மறுமொழி எதுவும் பேசாமல் அவளது கரத்தைப் பிடித்து அங்கிருந்து டீனின் அறைக்கு இழுத்துச் சென்றார் அவர். உள்ளுக்குள் உதறல் எடுத்தபோதும், இவரால் என்ன செய்திட முடியும் இத்தனை பேர் முன்னிலையில் என்ற தைரியமும் தோன்றிட, அவரோடு இணைந்து சென்றாள்.

இப்போது வரை கமலுக்கு குறுந்தகவல் மூலம் மிரட்டல் வருவது தெரியாதவள், Dr.போஸ்-ஐ சற்று அசாதரமாகத் தான் நினைத்திருந்தாள்.

டீனின் அறையில் "யாரை கேட்டு அமுதினியின் ட்ரைனிங் ப்ளேஸ் மாத்தினிங்க?" என்று உறுமிட

சங்கரோ போஸின் கண்களைத் தவிர்த்து, "நான் இந்த ஹாஸ்பிட்டல் டீன்... யாரை கேக்கனும்?" என்று ஏதோ முக்கியமான அறிக்கியை சரி பார்ப்பது போல் பாவனை செய்தார்.

"அவளோட ட்ரைனர் நான்... என்கிட்ட சஜ்ஜஷன் கேட்டிருக்கனும்!"

"போஸ்.... மேலிடத்து ப்ரஷர்.... என்னை என்ன செய்ய சொல்றிங்க! அதுவும் இல்லாம நீங்க நாளைக்கு தானே வருவதா இருந்தது!"

"ஓஓஓ ... அப்போ திருட்டுத் தனமா எனக்கு தெரியாம என் ஜீனியரை கடத்தப் பாத்திருக்கிங்க அப்படித் தானே!" என்று உச்சக்கட்ட உருமலில் வினவிட, சங்கர் விடவிடத்துப் போனார்.

"Dr என்ன பேச்சிது? கடத்தல் அது இதுனு?" என்று போஸிடம் அவரும் தன் குரலை உயர்த்திப் பேசிவிட்டு, அம்முவைப் பார்த்து, "நீ கொஞ்ச நேரம் வெளியே வெய்ட் பண்ணு மா" என்றார்.

அம்மு என்ன நடக்கிறது! போஸ் டாக்டர் ஏன் டீனை அதிகாரம் செய்ய வேண்டும்! இப்போது தான் யார் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்! என்று பெரும் குழப்பத்தோடு போஸை ஏறிட்டாள். அவரது பார்வையும் 'காத்திரு' என்று கட்டளை விதிக்க, அமைதியாக வெளியே வந்து நின்று கொண்டாள்.

டீனிற்கும், தலைமை மருத்துவர் போஸிற்கும் வாக்குவாதம் தொடர்ந்தது. என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கடுமையான பேச்சு வார்த்தை, இறுதியில் டீன் சரி என்று தலையசைத்து கேட்டுக்கொள்ள, போஸ் அவ்வறையைவிட்டு வெளியே வந்து,

"இன்னும் ஒன் வீக் நீ இங்கே தான் இருக்கப் போறே. போ போயி உன் வேலையைப் பார்" என்று கட்டளையிட, அம்மு விழிகள் பிதுங்கி நின்றாள்.

அசையாமல் தன்னை பார்த்தபடி சிலையென நிற்பவளைக் கண்டு "என்ன?" என்று அதட்டினார்.

"என்...." என்று ஆரம்பிக்கும் போதே தொண்டை வரண்டிருந்தது. எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டு, "கண்ணா எனக்காக வெளியே வெய்ட் பண்றான்... நான் இன்ஃபார்ம் பண்ணனும் டாக்டர்" என்றாள்.

"ம்ம்.... ம்ம்... சீக்கிரம் சொல்லிட்டு வந்து ட்யூட்டியைப் பார்" என்று கட்டளையிட்டுச் சென்றார்.

அவர் அந்தப்பக்கம் நகர்ந்ததும், அம்மு டீனின் அறையை எட்டிப் பார்த்தாள். அவரோ ஃபோனில் யாரையோ சமாதானம் செய்ய முயற்சிப்பது தெரிந்தது. அங்கு நடப்பது அனைத்தும் விசித்திறமாகத் தெரிய இப்போது எதுவும் யோசிக்க முடியாமல் குழப்பம் படிந்த முகத்துடன் கமலின் முன் வந்து நின்றாள்.

"போலாமா?" என்று கேட்டபடி அவள் முகத்தைக் கூட பார்க்காமல் வண்டியில் ஏறி அமர்ந்தான்.

"கமல்" என்று அவளது வாடிய குரலில் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டவன் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான்.

"எனக்கு நெக்ஸ்ட் வீக் தான் ஹாஸ்பிட்டல் மாறனும்... இந்த வீக் இங்கே தான் வேலை... சோ நீ கடைக்கு கிளம்பு" என்றாள்.

"என்னாச்சு உனக்கு?"

"நத்திங் கமல். ஐ ம் ஆல்ரைட்"

"பின்னே உன் கண்ணா எங்கே காணாமல் போனான்?!! அதுவே சொல்லுதே நீ ஏதோ சரியில்லேனு..."

அவனிடம் கூறி அவனையும் கலங்கடிக்க நினைக்காமல், தன் வாய்மொழி, மெய்மொழி அனைத்தையும் மாற்றி கத்தத் தொடங்கினாள்.

"எல்லாம் உன்னால தான்... ஃபர்ஸ்ட் டேவே லேட்... அதான் அபசகுணம் மாதிரி அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்தே கால் பண்ணி நெக்ஸ்ட் வீக் வரட்டும்னு சொல்லிட்டாங்க"

கமலோ கொஞ்சமும் அசந்திடவில்லை. "லேட்டா!!! நீ பொய் சொல்றே... இங்கே வேற ஏதோ நடந்திருக்கு... இன்னைக்கு ஆஃப் ஆன் ஹவர்க்கு ஒரு டைம் கால் பண்றேன்... என்ன வேலைல இருந்தாலும் வழக்கம் போல எனக்கான பதிலை சொல்லிட்டு உன் வேலையைப் பார்... ஒன்னு மட்டும் நியாபகம் வெச்சுக்கோ... 'நாமலா தொரத்தி தொரத்தி வந்ததால வந்த காதல் தானே... நாம காணாமப் போனா அவன் காதலும் காணாமப் போயிடும்னு மட்டும் நினைச்சிடாதே... நீ தொலையிற உலகத்துக்கு உன்னைத் தேடி வரவும் தயங்கமாட்டேன். அது எமலோகமா இருந்தாலும் சரி!!!" என்று அழுத்தமாகக் கூறிச் சென்றான்.

அம்முவின் மனமோ அவனது வார்த்தைகளே போதும் போல என்று நினைக்கத் தோன்றியது. ஆனால் அவள் தன் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைத்தெல்லாம் கூறவில்லை. தனக்கே என்னவென்று புரியாத நிலையில் அவனிடம் கூறி அவனை ஏன் குழப்ப வேண்டும் என்று தான் சொல்லாமல் இருந்தாள். ஆனாலும் அவளது ஒற்றை அழைப்பில் அத்தனையும் கண்டு கொண்டானே! என்று கமலை மனதில் முழுவதுமாக நிறைத்துக் கொண்டு தன் பணியைத் தொடரச் சென்றாள்.

அம்முவிடம் பேசிவிட்டு கடைக்கு வந்து சேர்வதற்குள் அவனது புலனத்திற்கு மற்றொரு புது எண்ணிலிருந்து குறுந்தகவல் வந்திருந்தது.

"ஹாஸ்பிட்டல் மாத்திட்டா உன் பொண்டாட்டி உயிர் தப்பிடுவானு மனகணக்கு போட்டு வெச்சிருப்ப போலயே! ஆனா அது எல்லாம் தப்பு கணக்கா போச்சே தம்பி! அந்த ஹாஸ்பிட்டலேயும் என் ஆட்கள் இருக்காங்க... ஆனா என் கையாலேயே அவ கதைய முடிக்கிறேன்... அதுக்கு தான் இந்த ஒரு வாரம்" என்றிருக்க, கமலுக்கோ இப்போதே சென்று தன்னவளை அழைத்து வர வேண்டும் என்ற துடிப்பு எழுந்தது.

சீண்டல் தொடரும்