• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 18

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அழைப்பு விடுப்பேன் என்று கூறிச் சென்றவன் அடுத்த ஒருமணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான். அது தெரியாத அம்முவோ வழமை போல் தனது பணிகளை முடித்துவிட்டு, அவனுக்கு குறுந்தகவல் அனுப்பினாள்.

"டேய் புருஷா... உன் பொண்டாட்டி உன் ஃபோன் கால்காக வொய்ட்டிங்.... ஏன் டா கால் பண்ணலே?" என்று கோப முகங்கள் சிலவற்றையும் அனுப்பி வைத்தாள்.

அது பார்க்கப்பட்டதற்கான அடையாளமான இரட்டை டிக்குகள் நீலமாக மாறாமல் சாம்பல் நிறத்தில் அப்படியே இருந்தது. அம்முவிற்கோ அவன் சொல்லாமல் சென்றிருந்தால் கூட அவனது அழைப்பை எதிர்பார்க்க மாட்டேனே என்று வாய்விட்டு புலம்பாத குறை தான் இருந்தது.

ஏதாவது முக்கிய வேலையில் இருப்பான் அதனால் தான் அழைத்திருக்கமாட்டான், நாமும் அவனை தொல்லை செய்ய வேண்டாம் என்று நினைத்து தான் அவளும் அவனுக்கு அழைப்பு விடுக்கவில்லை

மேலும் அரைமணி நேரம் கழித்து தேநீர் இடைவெளியில் சிற்றுண்டி சாலை சென்று ஒரு தேநீரோடு இரண்டு சமோசாக்களைப் பெற்றுக் கொண்டு தனியாக ஒரு மேசையில் சென்று அமர்ந்தாள். மீண்டும் கமலுக்கு தன் நலத்தை தெரிவித்துவிட்டு, மிஸ் யூ என்று குறுந்தகவல் அனுப்பி வைத்தாள். அதையும் அவன் பார்த்த மாதிரியே தெரியவில்லை.

மற்றொரு நாளாக இருந்திருந்தால் நிச்சயம் இதற்கு இவ்வளவு யோசித்திருக்கமாட்டாள். இன்று அவனது பேச்சில் இருந்த அழுத்தமும், அவளுக்காக துடித்த அவனது இதயமும் அவனைப் பற்றி சிந்திக்கத் தூண்டியது.

கண்ணாவைப் பார்த்தால் சும்மா வாய்வார்ததைக்காக கூறிவிட்டு பின் அது பற்றிய கவலையே இல்லாமல் திரிபவன் போல் தெரியவில்லையே! என்னவாயிற்று அவனுக்கு! என்று அவனை மட்டுமே தன் ஊன், உயிர், சிந்தனை மற்றும் செயல் என அனைத்திலும் நிறைத்துக் கொண்டிருந்தாள்.

என்னைத் துரத்துபவர்களால் கண்ணாவிற்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமா! முதலில் இன்னமுமா என்னை பின் தொடர்கிறார்கள்!! என்னை சந்தேகத்தின் பெயரில் துரத்துவதற்கே இத்தனை இன்னல்கள் வருகிறதே... உண்மை என்று ஊர்ஜிதமானால்....... சிந்தனைகள் தேவையற்ற கற்பனைகளாக விரிய, ச்சீ... என்ன இது முட்டாள் தனமான யோசனை... அப்படியெல்லாம் எதுவும் இருக்காது என்று தனது எண்ணப்போக்கிலேயே மூழ்கியிருந்தவளுக்கு அருகில் ஒரு உருவம் வந்து நின்றது மூளையில் ஏறவில்லை.

அவளது பார்வைக்காகவும், அருகில் அமரும் அனுமதிக்காகவும் காத்திருந்த அந்த உருவம், அவளிடம் எந்தவித அசைவும் இல்லை என்றவுடன் எதிரில் அமர்ந்தது.

"ஹல்லோ மிஸ்.அமுதினி" என்று அழைத்திட அவளது பார்வை தன் எதிரில் அமர்ந்ததிருந்தவனின் மேல் படிந்ததே ஒழிய அவன் என்ன கூறினான் என்ற கவனம் இல்லை.

அம்மு தன்னைத் திரும்பிப் பார்த்ததும் அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

"ஐம் ஜகன். ஜகன் தேவ்" என்று கை நீட்டினான். அவளும் மரியாதை நிமித்தமாக கை குலுக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

"ஐம் அமுதினி. நைஸ் டு மீட் யூ" என்றிட, எதிரில் இருந்தவனது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தெரிந்தது. முகத்தில் பற்கள் மட்டுமே தெரியும் அளவிற்கு ஈஈஈ என சிரித்த முகமாக பேசத் தொடங்கினான்.

"தெரியுமே! அதான் உங்க சர்டிபிகேட்ல மிஸ்.அமுதினி தியாகராஜன்னு இருந்ததை பாத்துட்டு தானே வந்து பேசுறேன்..." என்று மிஸ் என்றதை அழுத்திக் கூறினான்.

"பின்ன்ன்னாளில் ஏமாந்தா சங்கம் பொறுப்பாகாது..." என்று அவளும் சிரித்துக் கொண்டே கூறிட, தேவ்-வோ கண்களை விரித்து "கமிட்டடா!" என்றான்.

அதற்கு அம்மு வாய் திறந்து பதில் கூறிடவில்லை என்றபோதும் அவள் மனதிற்குள்ளும் மிஸஸ்.கமலகண்ணன் என்று கூறிக்கொள்ள ஆசை தான். இருந்து அவனது பேச்சில் தந்தையின் நினைவு வர, அதனை மறைத்து சிரிப்பை மட்டும் அவனுக்கு பதிலாகக் கொடுத்தாள்.

"இப்படி அசிங்கமா சிரிச்சு மழுப்புறதுக்கு பதிலா ஆமானு டைரக்டா சொல்லிருக்கலாம்..." என்று அவன் வருந்துவது போல் அவளை வாரினான்.

பதிலுக்கு முதலில் முறைத்தவள் பின் சிரித்துவிட்டு, "ஆமா... நீங்க? டாக்டர்னு சொல்லி கலாய்க்காதிங்க... எந்த டிப்பார்ட்மெண்ட்? நியூ ஜாயினியா? பாத்தா அப்படி தெரியலேயே!... என் சர்டிபிகேட் வரைக்கும் பாத்துட்டு வந்து பேசுறிங்கன்னா எதுவும் பெரிய பொஸிஷன்ல இருக்கிங்களா? ஆனா வாய்ப்பேச்சும் அப்படியெல்லாம் இல்லேனு சொல்லுதே! என்னை எப்படித் தெரியும்? இதுக்கு முன்னாடி வேற எங்கேயும் மீட் பண்ணிருக்கோமா?" என்று ஓட்டைப் பானையிலிருந்து ஒழுகிய தண்ணிரைப் போல் லொடலொடவென அடுக்கடுக்காய் கேள்விகளை மட்டுமே நிறைத்துக் கொண்டிருந்தாள். பதில் கூறுவதற்கு அவனுக்கு துளி அவகாசம் கூடத் தரவில்லை.

தேவ், அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பருகிக் கொண்டு, "ஹல்லோ கொஞ்சம் கேப் விடுங்க!" என்று கூறியபின் தான் அம்முவின் கேள்வி கணைகள் நின்றது.

"மொதோ என்ன கேட்டிங்க! டிப்பார்ட்மெண்ட்.... நானும் உங்க டிப்பார்ட்மெண்ட் தான். அடுத்து என்ன கேட்டிங்க!" என்று ஒரு நொடி யோசித்துவிட்டு, அவனே தொடர்ந்தான்.

"நியூ ஜாயினி தான் அப்பறம் என்னமோ கேட்டிங்களே!" என்று மீண்டும் ஒரு நொடி யோசனை அவனிடம், "உங்க சர்டிபிகேட்ஸ் டீன் உங்ககிட்டேயே கொடுக்க சொல்லி என்கிட்ட கொடுத்தாரு... அடுத்து என்னமோ கேட்டிங்களே! ஹாங் பெரிய பொஸிஷன்... உங்களை மாதிரி நாலு பேரை போட்டுத் தள்ளிட்டு அந்த இடத்தைப் பிடிச்சு தான் பெரிய ஆள் ஆகனும்... அடுத்து என்னமோ சொன்னிங்களே!" என்று அவன் யோசித்த அந்த ஒரு நொடி அம்முவிற்கு தன்னையும் விட ஒரு பெரிய காமெடி பீஸைக் கண்ட அதிர்ச்சி...

'இவன் எனக்கும் மேக்கொண்டு ஓட்ட வாயா இருப்பான் போலயே' என்று நினைத்து தலையில் கை வைத்து அமர்ந்தாள்.

அதனைக் கண்டவன், "ஹல்லோ என்ன இப்போவே இப்படி இடிஞ்சு விழுந்துட்டிங்க? கேள்வி கேக்குறது ரெம்ப ஈஸி... பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? அதுவும் ஒவ்வொரு கேள்வியா நியாபகம் வெச்சு அதுக்கு பதில் சொல்றது இருக்குறதுலேயே பெரிய கஷ்டம்...."

"சரி அப்போ ஒரே ஒரு கேள்வி கேக்குறேன்... உருப்படியா பதில் சொல்லுங்க..."

"ம்ம்ம்"

"இப்போ எதுக்கு இங்கே வந்திங்க?"

"யாரோ அமுதினியாம்.... அந்த புன்னிவான் வேற ஹாஸ்பிட்டல் போறதுனால எனக்கு இங்கே ட்ரைனிங் ஆப்ரச்சுனட்டி கொடுத்தாங்க... தேங்க்ஸ் சொல்லலாம்னு வந்தா அந்த காண்டு இங்கே உக்காந்து என்னை காண்டாக்குது..." என்றான் யாரையோ சொல்வது போல்...

தேவ் என்ன தான் நக்கலும், நையாண்டியுமாகப் பேசினாலும் அம்முவிற்கு அது எதுவும் இனித்திடவில்லை. அவளது எண்ணம் முழுவதும் கமலிடமே தான் இருந்தது. இருந்தும் சற்று நேரம் தேவ்வின் வருகையால் கமலைப் பற்றிய எண்ணங்களை சற்று ஒதுக்கி வைத்திருந்தாள்.

மேலும் கொஞ்ச நேரம் இருவரும் பேசிக் கொண்டிருக்க, தேவ் அம்முவின் மனதை சரியாகக் கணித்தான்.

"நீங்க எதுவும் மைண்ட் அப்செட்ல இருக்கிங்களா? அது தெரியாம நான் உங்களை தொல்லை பண்றேனா?"

"அப்படியெல்லாம் எதவும் இல்லே தேவ்... எனக்கு ஒரு முக்கியமான கால் வரவேண்டி இருக்கு... அதுக்கு தான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்... சாரி" என்று தன் கவனச் சிதறலுக்கும் சேர்த்து வருந்தி மன்னிப்பு வேண்டினாள்.

"ஓ.... ஓகே... நாம கொஞ்சம் ப்ரெண்ட்லியா பேசலாம்? இந்த வாங்க போங்க பிஸ்னஸ்லாம் இல்லாம?"

"எஸ் அஃப்கோஸ்..." என்று அவளும் அனுமதி வழங்கிட, "சோ நோ சாரி... நோ தேங்க்ஸ்... நோ மரியாதை" என்று கூறி மீண்டும் ஒருமுறை கைநீட்டினான்.

இவ்வளவு நேரம் அவனுடன் பேசியதில் அவனது வார்த்தைகளில் இருந்த கவனமும், கண்களில் தெரிந்த கண்ணியமும் அவனுடன் ஸ்நேகத்தை ஏற்படுத்தியது அம்முவிற்கு. அதனால் தயங்காமல் அவளும் கை குலுக்கினாள். சிரித்தபடி இருவரும் கையைப் பிரித்துக்கொள்ள சரியாக அவளது திறன்பேசி அதிர்ந்தது.

ஆனால் அழைத்ததோ அவள் எதிர்பார்த்த அவளவன் இல்லை… அவளவனது அண்ணன். பவனிடமிருந்து அழைப்பு என்றதும் புருவ மத்தியில் முடிச்சு விழ, மனம் பந்தையக் குதிரை போல் என்னவோ ஏதோ என்று நினைத்து தரிகெட்டு ஓடத் துடங்கியது.

தேவ் அவளது முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கொண்டே அவள் எதிர்பார்த்த அழைப்பு இல்லை என்று அறிந்து கொண்டான். இருந்தும் "அம்மு... என்னாச்சு? ஏன் இவ்ளோ டென்ஷன் எடுத்து பேசு" என்று நினைவூட்டினான்.

மறுபக்கம் பவன் என்ன சொன்னானோ சட்டென இருக்கையில் இருந்து எழுந்து "யாருக்கு? என்னாச்சு?"

"எல்லாரும் இங்கே தான் இருக்கோம் டென்ஷன் ஆகாம வா?" என்று பவன் மறுபக்கத்திலிருந்து தேற்றினான்.

அதற்குள் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்த தேவ்வை மறந்து அங்கிருந்து நான்கைந்து எட்டுகள் எடுத்து வைத்து நகர்ந்து சென்றிருந்தாள்...

அதில் தேவ்விற்கு சுர்ரென கோபம் தலைக்கு ஏற அவளையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். சிற்றுண்டிச் சாலை வாயில் வரை சென்றபின் தான் தேவ்வின் நினைவே வந்தது அம்முவிற்கு. திரும்பிப் பார்த்தவள்,

"சாரி தேவ்... நெக்ஸ்ட் டைம் மீட் பண்ணும் போது இன்னும் பேசலாம்... இங்கே தானே இருப்போம்... இப்போ நான் அர்ஜெண்ட்டா போகனும்... வெரி இம்பார்ட்டன்ட்... பைய்" என்று உரைத்துவிட்டு அப்போதும் அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.

தேவ்விற்கு சற்று குழப்பம் தான்... அவளுக்கு என்னாச்சு! என்று யோசித்தாலும், இறுதியாக தன்னைத் திரும்பிப் பார்த்து பேசியபோது அவளது கண்களில் கண்ணீர் தேங்கி நின்றிருந்ததோ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு. அது அவனுக்குள் பல யோசனைகளைத் தூண்டியது.

அம்மு பணிபுரியும் அதே மருத்துவமனையிலேயே ஆறாவது தளத்தில் ஓர் அறையின் வாசலில் பவன் நின்றிருந்தான். மின்தூக்கியில் இருந்து படபடப்போடு வெளியே வந்தவள் பவனைக் கண்டதும், விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

"என்னாச்சு அத்தான்?" என்று டென்ஷனாக வினவினாள். (அத்தான் என்ற அழைப்பு அமியிடம் இருந்து பழகியது தான்)

பவனோ சலிப்பாக "நீயே உள்ளே போயி பார்!" என்றான்.

அவசர கதியில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைய, அங்கே படுக்கையில் இடது முழங்காலில் பெரிய கட்டும், இடது கையில் தோள்பட்டையிலிருந்து முழங்கை வரை கட்டு போட்டு மார்போடு சேர்த்து கட்டப்படிருந்தது. முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை ஒருபுறம் முழுவதும் ப்ளாஸ்டரும் ஒட்டிப்பட்டு கமல் தான் படுத்திருந்தான். அவன் அருகில் விமலா கண்கள் கலங்கிய போதும், கண்ணீரை வெளியேற்றாமல் அடக்கிக் கொண்டு பேரனையும் மடியில் வைத்து அமர்ந்திருந்தார். மிதுன்யா பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தாள்.

அடிபட்டுப் படுத்திருந்தவனோ எந்த வித கவலையும் இன்றி கட்டுகள் போடப்படாத மற்றொரு காலை ஆட்டிக் கொண்டு ருத்தேஷைப் பார்த்து கொன்னை வைத்தபடி அவன் அன்னை வெட்டித் தரும் பழங்களை உண்டு கொண்டிருந்தான்.

இரண்டு வயது குழந்தையோ தன் அன்னையையும், சித்தப்பனையும் மாறி மாறி பார்த்து ஏமாற்றமடைந்தான்.

சீண்டல் தொடரும்.