காவல் நிலையத்தில் எஸ்.ஐயின் முன்னிலையில் கமல் அமுதினியின் கழுத்தில் தாலி கட்டியிருந்தான். அப்படி அவசரமா கல்யாணம் பண்ற அளவுக்கு என்ன தான் நடந்துச்சுனு ஒரு குட்டி ஃபாளாஸ் பேக் பாத்துட்டு வரலாம் வாங்க....
இரவுப்பொழுதிலும் இடைவிடாத இறைச்சலாலோ அல்லது புதுஇடம் என்பதாலோ சரியாகத் தூக்கம் இல்லாமல் காலைப்பொழுதில் வெய்யோனின் கதிர்கள் சன்னல் வழியே உள்ளே நுழைந்து தன்னை எழுப்பும் வரை தூங்கிக்கொண்டிருந்தாள் அமுதினி.
"டேய் அம்மு.... இன்னுமா தூங்குறே... எழுந்திரி டா" என்று கனிவாக ஒலித்த தன் தந்தையின் குரலில் வழக்கம் போல் "ஃபைவ் மினிட்ஸ் டாட்" என்று கூறியப் பிறகு தான் அது அலார்ம் என்று உணர்ந்தாள் அமுதினி.
எழுந்து அமர்ந்து தன் தந்தையின் குரலை இன்னும் சற்று நேரம் கேட்டுவிட்டு, பின் நேரமாவதை உணர்ந்து எழுந்து குளிக்கச் சென்றாள். காலை உணவாக ரவா உப்புமா செய்து கொண்டு அன்னையின் கைபக்குவத்தை நினைத்துக் கொண்டே ருசித்து முடித்தாள்.
"டேய் கமல கண்ணா உன்னால தான் என் அம்மா அப்பாவையும் பிரிஞ்சு, நான் சந்தோஷமா வாழ்ந்த வீட்டைவிட்டு, ஓடியாடி விளையாண்ட ஊரைவிட்டு, உன்னைத் தவிர யாரும் இல்லாத இந்த ஊர்ல வந்து இருக்கேன்.... நீ மட்டும் எனக்கு கெடைக்கல மவனே மர்டர் பண்ணிடுவேன் பாத்துக்கோ..." என்று தன் தோழி சுனைனாவின் திருமணத்தில் மாப்பிள்ளையின் அருகே நின்றிருந்த தன் மனம் கவர் கள்வனைக் கண்டு புலம்பிவிட்டு, மறக்காமல் இறைவனிடமும் அதே புலம்பலை கோரிக்கையாக வைத்துவிட்டு வெளியேறிச் சென்றாள்.
படைக்கும் கடவுள் பிரம்மனும், காக்கும் கடவுள் விஷ்ணுவும் தங்கள் பணியை திறம்பட தவறில்லாமல் செய்து முடிக்க அவர்களால் படைக்கப்பட்ட அவர்களின் சேவகர்களே மருத்துவர்கள் என்று பூரித்து மனமாற தன் பணியைத் தொடங்கச் சென்றாள் அம்மு.
முதல் நாள் தன் அறப்பணியைத் தொடங்க சந்தோஷமான மனநிலையோடு மருத்துவமனை நுழைபவள் அன்று மாலையே அழிக்கும் கடவுள் சிவனும் அவரது பணிக்கு தன் துறையிலேயே அஸிஸ்டன்ட் வைத்திருப்பதை அறிந்து வேதனை நிறைந்த மனதோடு வெளியேறப் போகிறோம் என்று அறியாமல் போனாள்.
பெரிய மருத்துவமனை என்று பெயர் பெறாவிட்டாலும் கைராசியான மருத்துவர் என்ற பெயர் பெற்றிருந்தார் அந்த தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் மற்றும் டீன் Dr.சங்கர். உள்ளே நுழைந்தவள் வரவேற்பில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள, அங்கிருந்த பெண்மணியோ,
"Dr.சங்கர் சார் ஒரு ஆப்ரேஷன்ல இருக்காரு மேம், நான் ச்சீஃப் டாக்டர்கிட்ட சொல்றேன். அவர் உங்களை மீட் பண்ணுவார். டீன் வரவும் நீங்க அவரை மீட் பண்ணலாம். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க..." என்று கூறிட, காத்திருப்பு அறையில் சென்று அமர்ந்து கொண்டாள்.
சற்று நேரத்தில் ச்சீஃப் டாக்டர், Dr.போஸ் அழைப்பதாகக் கூறிட, அவரது அறையை நோக்கி சென்றாள்.
"குட் மார்னிங் டாக்டர்" என்றபடி உள்ளே நுழைந்தாள். அவளது பார்வை அறையை நோட்டமிட்டதோ இல்லேயோ டாக்டரை நன்றாக நோட்டமிட்டது... நாற்பது வயது மதிக்கத் தக்க நபர்... கண்களில் கனிவு, இதழ்களில் தெய்வீக சிரிப்பு, கைகளோ மிகவும் மிருதுவாக இருந்தது. சொல்லப் போனால் காலையில் தான் நினைத்ததற்கு இணையாக கடவுளின் மறு பிம்பமாக அமர்ந்திருந்தார்.
"வெரி குட் மார்னிங் மை டியர் யங் சைல்டு" என்று அவரும் பதிலுக்கு வாழ்த்திட, புத்துணர்வோடு தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு தன் பணி என்னவென கேட்டு அறிந்து கொண்டாள்.
மூளை சம்மந்தமான தனிப்பிரிவு படித்திருந்தமையால் கிடப்பில் கிடந்த சில கேஸ் பற்றிய ஃபைலைக் கொடுத்து அதனை டீப் ஸ்டடி செய்து ஸஜ்ஜஷன் சொல்லுமாறு கூறியிருந்தார் தலைமை மருத்துவர்.
அப்போது அவள் கண்ணில் பட்டது அந்த நோயாளியின் கோப்பு. அதில் இருந்த விவரங்கள் அனைத்தும் சுயநினைவு இழந்த ஒரு பருவப் பெண்ணின் மூளை மதிப்பீடுகள். கொஞ்சம் கடினமேயானாலும் குணப்படுத்த முடியும் என்று தோன்றிட அதனை மருத்துவரிடமும் தெரிவித்தாள்.
அவள் கூறியதைக் கேட்டவர் அவளை ஆழப்பார்வை பார்த்துவிட்டு, "அந்த கேஸ் வேண்டாம் பேபி... அடுத்த கேஸ் என்னனு பார்..." என்றிட, அம்முவிற்கோ கவனம் முழுதும் கண்முன் இருந்த அந்த கோப்பிலேயே இருக்க,
"டாக்டர் அந்த கேஸ் ஏன் வேண்டாம்னு சொல்றிங்க? அந்த பொண்ணுக்கு சின்ன வயசு தான்... சோ கண்டிப்பா ரெக்கவர் பண்ணலாம்..." என்று மறுமுறை கூறினாள்.
அந்த கோப்பை மட்டும் தனியாக எடுத்து தன்னுடைய கப்போர்டில் வைத்தபடி "இந்த கேஸ் முடிஞ்சிருச்சு... சோ அதை பத்தி பேசுறது வேஸ்ட்... நீ அடுத்ததைப் பார்..." என்றிட வேறு வழியில்லாமல் அடுத்ததை படித்துப் பார்த்தாள்.
சிறிது நேரத்தில் டீன் வந்துவிட்டதாகக் கூறிட, அம்மு டீனைச் சந்திக்கச் சென்றாள். அங்கே அவரது மேசையில் சற்று முன் வாசித்த அதே பெயரில் ஒரு ஃபைல் இருக்க, டீன் வருவதற்குள் அதனை ஒரு புறட்டு புறட்டினாள். அதே கேஸ் டீட்டெய்ல் தான்... ஆனால் ரிப்போர்ட் வேறு மாதிரியாக இருந்தது.
பேஷண்ட்டின் மூளை முழுமையாக செயலிழந்துவிட்டதாகவும், இனி பிழைப்பதற்கு 99% வாய்ப்பில்லை என்றும், பனிரெண்டு மணிநேரமாக செயற்கை சுவாசம் மட்டுமே அவரை உயிரோடு வைத்திருக்கிறது என்றும் இருக்க, அம்முவின் மூச்சு ஒருநொடி நின்று பின் இயல்பாகத் துடித்தது. அதுவும் அந்த பெண் பற்றிய உண்மையை யாரிடமேனும் சொல்ல வேண்டும் என்பதற்காக...
வந்த முதல் நாளே அந்த பேஷண்ட் பற்றி வேறு எந்த தகவலும் தெரியாத நிலையில் யாரிடம் சொல்வது என்று தெரியாமல் மனம் நொந்தது ஒருபுறம் என்றால், மருத்துவமனை ஏன் இரண்டு விதமான ரிப்போர்ட் தயார் செய்ய வேண்டும்!!! அதுவும் ஒருமணி நேர வித்தியாசத்தில், பரிசோதனை மதிப்பீடு எப்படி மாறும்!!! இவர்களாக மாற்றினார்கள் என்றால் எதற்காக!!! என்று பல யோசனைகள்.
அதற்குள் டீன் வந்துவிட, "வெல்கம் மிஸ் அமுதினி. நீங்க இங்கே ட்ரைனிங் வந்திருக்கிங்க! ஆம் ஐ கரெக்ட்?"
"எஸ் டாக்டர்"
"இந்த பீரியட்-அ ப்ராப்பரா யூஸ் பண்ணிக்கோங்க... எத்தனை விஷயம் தெரிஞ்சு வெச்சிருக்கோம்ன்றது முக்கியம் இல்லே. எவ்ளோ ஆழமா தெரிஞ்சு வெச்சிருகாகோம்ன்றது தான் முக்கியம்... எங்கே போனாலும் நீங்க கத்துக்கிட்டது கை கொடுக்குற மாதிரி ஆழமா கத்துக்கனும்..." என்று கூறிக் கொண்டிருக்கும் போதே செவிலியரை அழைத்திருந்தார்.
செவிலியர் உள்ளே நுழைய "இந்த பேஷண்ட் ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க. ஆர்கான் டொனேஷனுக்கு சம்மதம்னு அவங்க பேமிலிகிட்ட சைன் வாங்கிடுங்க..." என்று கூறி தன் முன்னே இருந்த ஃபைலை செவிலியரிடம் கொடுத்தார்.
"ஓகே மிஸ் அமுதினி. ஆல் தி பெஸ்ட். மீட் யூ ஸூன்." என்று கூறி அம்முவிற்கு விடை கொடுத்தார்.
அங்கிருந்து வெளியேறிய அமுதினியின் மனதிலோ தான் நினைத்தது சரியோ தவறோ முதலில் இந்த விஷயத்தை அந்த பேஷண்டின் சொந்தகாரர் எவரையேனும் சந்தித்து சொல்ல வேண்டும் என்று நினைத்தபடி, அந்த பேஷண்ட்டின் அறையைத் தேடிச் சென்றாள்.
அங்கே நோயாளியின் அறையினுள், ஆண் தாதிகள் இருவர் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது. "ண்ணா டாக்டர் பொருள் எடுக்கப்போறாராமே அப்படியா?" என்று ஒருவன் கேட்க,
மற்றொருவனோ "உனக்கு எதுக்கு ஊர் பேச்சு... வந்தமா வேலைய பாத்தோமா சம்பளம் வாங்கினோமானு இரு..."
"அதுக்கு இல்லே ண்ணா... இதுவும் ஒருவிதமான திருட்டு தானே... கைராசியான ஹாஸ்பிட்டல்னு பேர் போன நம்ம ஹாஸ்பிட்டல்லே இப்படியானு நம்ம முடியலே ண்ணா..." என்று மனம் கேட்காமல் மேலும் வினவினான்.
"இதோ பார் திரும்பவும் சொல்றேன்... தேவையில்லாத விஷயத்துல மூக்கை நொழச்சி தலைய பழி கொடுத்துக்காதே... நமக்கு எதுவும் தெரியாது... சொல்றதை செய்யிறோம் அவ்ளோ தான்!" என்று அறிவுரை வழங்கிட பெண்ணவளுக்கும் அனைத்தும் புரிந்துவிட்டது...
இருவரும் அந்த பேஷண்ட்டை இதர பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல அங்கே மறைவாக மற்றொரு அறையில் ஒழிந்து கொண்டாள் அமுதினி.
சற்று நேரத்தில் அந்த அறை வாசலில் ஒரு ஆண் அழுது கொண்டிருப்பதைக் கண்டவள் அவரிடம் விஷயத்தைக் கூறிவிட்டு Dr. போஸ் கொடுத்த பணியைத் தொடரச் சென்றாள். ஆனாலும் மனம் முழுதும் அந்த நோயாளி பற்றியே இருக்க, ஒரு மணிநேரம் கழித்து யாருக்கும் தெரியாமல் அறுவை சிகிச்சைப் பிரிவில் சென்று பார்த்தாள்.
அவள் வந்திருப்பதைக் கண்டு அந்த ஆண் அம்முவிடம், அவள் செய்த உதவிக்கும், தன் வருங்கால மனைவியை காப்பாற்றியதற்கும் நன்றி கூறி பேஷண்ட்டை இங்கிருந்து அழைத்துச்செல்ல உதவுமாறு வேண்டினான். அம்முவும் தன் தோழி சுனைனாவிற்கு அழைத்து விவரத்தைக் கூறி கமலின் குடும்பத்தில் யாரேனும் உதவி செய்யுமாறு கேட்டிட, கமலின் அண்ணன் பவன் உதவிக்கு வந்தான்.
இது போன்ற ப்ரச்சனைகளை முதன்முறை எதிர்க் கொண்டதால் அளவிற்கு அதிகமாகவே பயந்திருந்தாள் அம்மு. நன் தந்தையை நாடிய மனதை அடக்கிட அதுவோ அடங்காமல் கமலைத் தேடியது. கமலிடம் பேசினால் சற்று தைரியமாக இருக்கும் என்று நினைத்து அழைப்பு விடுக்க, அதுவோ ஏற்கப்படாமலேயே முழு அழைப்பும் அடித்து ஓய்ந்தது.
ஃபோனை வைத்துவிட்டு முகம் கழுவி வர ஓய்வு அறை சென்று வருவதற்குள் தன் மேசையில் சில பொருள்கள் கலைந்து கிடக்க இன்னும் கொஞ்சம் பயம் அதிகமாகிவிடவே, அங்கிருக்க அஞ்சி மதியமே தன் இல்லம் வந்து சேர்ந்தாள்.
மருத்துவமனையைவிட்டு வெளியேறிய நிமிடத்தில் இருந்து அவளால் நிம்மதியாக இருக்க முடியவில்லை... தான் காதலித்து படித்த இந்த படிப்பில் இத்தனை வியாபாரமா! என்று நினைத்து நினைத்தே நொந்து போனாள். பல இடங்களில் நடக்கும் அநியாயங்கள் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் பணியில் சேர்ந்த முதல் நாளே இது போன்ற விஷயத்தை நேரில் பார்த்ததில் அதிகமாகவே மனமுடைந்திருந்தாள்.
சிலநேரம் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை, 'நான் ஏன் அழ வேண்டும்! நான் இன்று ஒரு உயிரை காப்பாற்றி இருக்கேன்!' என்று நினைத்து உள்ளிழுத்துக் கொள்வாள்.
இப்படியே அமர்ந்திருந்தாள் கண்டதைத் தான் யோசிக்கத் தோன்றும் என்று நினைத்து குளித்து முடித்து வந்து உறங்க முற்பட்டாள். மீண்டும் மீண்டும் மூளை அதனையேத் தான் நினைவு படுத்தியது. Dr.போஸ் ஏன் அந்த பேஷண்ட் டீட்டெய்லை பத்திரப்படுத்த வேண்டும். அவர் பத்திரப்படுத்தினாரா! இல்லை மறைத்து வைத்தாரா! என்று அவரைப் பற்றி காலை தான் நினைத்து வைத்திருந்த எண்ணத்திற்கு மாறாக யோசித்தாள்.
சற்று நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, எழுந்து வந்த பார்த்தவள் அங்கே கமல் நிற்கவும் தானாக கைகள் அவனை அணைத்துக் கொண்டது.
தன் தோழி சுனைனாவின் திருமணத்தில் தான் முதன்முறையாக கமலைக் கண்டாள். ஏனோ அவனையும் அவன் குடும்பத்தையும் பிடித்துவிட, அன்றே தன் மனதை கமலிடம் வெளிப்படுத்தினாள் அம்மு. அன்று அவன் அலச்சியமாக தன்னை தவிர்த்து சென்றிருந்த போதும், அவனுக்காகவே இங்கே பணியில் சேர்ந்திருந்தாள்.
அன்று அந்த திருமணத்தில் சந்தித்ததற்கு பிறகு ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் இன்று தான் இருவரும் சந்திக்கின்றனர். கமலைக் கண்டவுடன் கொஞ்சம் தைரியமாகக் கூட உணர்ந்தாள் அம்மு.
தன்னை அணைத்திருப்பவளின் மனநிலையை சற்றும் உணர்ந்து கொள்ளாமல் அப்போதிருந்தே திட்டத் தொடங்கியிருந்தான் கமல். உனக்கெதற்கு இந்த வேலை... கண்டு கொள்ளாமல் சென்றிருக்க வேண்டியது தானே என்று.....
சுனைனா மூலம் இங்கே நடந்த அனைத்தையும் அறிந்து கொண்ட ராம், கமலை அழைத்து வெளியே அழைத்துச் செல்லும்படியும், தேடி வருபவர்களிடம் காதலர்கள் என்று கூறும்படியும் உரைத்தான்.
கமலும் வேறு வழி இல்லாமல் எங்கே செல்வது என்று தெரியாமல் தன் கடைக்கே அழைத்துச் சென்றான். அடியாட்கள் கடைக்கு தேடி வர இப்போது அம்முவை காப்பாற்ற நினைத்து காவல் நிலையம் அழைத்துச் சென்றான். அங்கே இருவரும் காதலிப்பதாக பொய் கூறிட, எஸ்.ஐ இப்போதே இருவருக்கும் திருமணம் செய்து வைக்க தான் தயார் என்றுவிட்டார்.
அம்மு தான் முதலில் மறுத்தாள், "சார் அதெல்லாம் வேண்டாம் சார்... பேர்ண்ட்ஸ் சம்மதம் இல்லாம கல்யாணம் செய்துக்க நாங்க தயார் இல்லே சார்... இப்போதைக்கு பேசி சமாதானம் மட்டும் செய்து வைங்க சார்" என்றாள்.
"ஏம்மா... என் முன்னாடி சரினு சொல்லிட்டு அந்த பக்கம் போனதும் திரும்ப உங்களை பிரிக்கமாட்டாங்கனு என்ன நம்பிக்கை.... அதுக்கு தான் சொல்றேன். ரெண்டு பேரும் மேஜர் தான். கல்யாணம் பண்ணிக்கோங்க, யாராலையும் பிரிக்க முடியாது. அப்பறமா உங்க பேரண்ட்ஸ்-ஐ சமாதானம் செய்துக்கோங்க..." என்றார் எஸ்.ஐ
"இல்லே சார் பேர்ண்ட்ஸ் முன்னிலைல தான் எங்க கல்யாணம் நடக்கனும்" என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே கமல் குறுக்கே வந்தான், "நான் ரெடி சார்... எங்களுக்கு கல்யாணம் செய்து வெச்சிருங்க" என்றான்.
"கமல்... ப்ளீஸ். இப்போ ப்ரச்சனை மட்டும் சரி செய்தா போதும்... அதுக்கு இவ்ளோ பெரிய முடிவு எடுக்க வேண்டாமே..."
கமல் அவளிடம் ரகசியம் போல் கூறினான். "இதோ பார்... இனி நீ அந்த வீட்டுல தனியா தங்கவும் முடியாது. வேற வீடு பார்த்து போனாலும் உன் மேல இருக்குற சந்தேகம் போற வரைக்கும் உன்னை ஃபாலோ பண்ண தான் செய்வாங்க. உன் அப்பாகிட்டேயும் போகமாட்டேனு சொல்லிட்டே... இப்போ இருக்குற ஒரே ஆப்ஷன் என் வீடு தான். அது தான் உனக்கு சேஃப்வும் கூட. இங்கே இவர் முன்னாடி ஒரு ட்ராமா தான். அப்பறம் வீட்டுக்கு போய்ட்டு அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாம்"
"அதுக்காக இவ்ளோ பெரிய டெஸிஷன் எடுக்கனுமா? நான் சம்மதிக்கமாட்டேன்..."
"சரி அப்போ உன் அப்பாகிட்ட பேசு, உன் வீட்டுக்கு போ..." என்று சத்தாமாகக் கூறிட, எஸ்.ஐ என்னவென்று விசாரித்தார்.
"அவங்த வீட்டுக்கு கால் பண்ணுங்க சார், அவங்க என்ன சொல்றாங்கனு கேட்டுட்டு அப்பறம் கல்யாணத்துக்கு சம்மதிக்கட்டும்" என்றான் கமல்.
எஸ்.ஐ நம்பர் கேட்கவும் வேறுவழியில்லாமல் கொடுத்தாள். மறுமுனையில் அழைப்பை ஏற்றது அவளது அன்னை தான்.
"மேடம் நான் மதுரை எஸ்.ஐ பேசுறேன். உங்க பொண்ணு லவ் மேட்டர் பத்தி பேசனும்" என்றிட,
"எங்க பொண்ணு செத்து மூனு நாள் ஆச்சு சார்" என்று கூறி அழைப்பை துண்டித்திட, பெண்ணவள் கண்கள் தானாக நீர் வடித்தது.
அதனைக் கண்டவன் "இப்போ இங்கே நம் கல்யாணம் நடக்கனும்" என்று கட்டளை விதிக்க, அம்முவிற்கும் அவனது கட்டளைக் குரலை மீறிட முடியாமலும், தன் மனவலிக்கு மருந்தாக அவன் அருகாமைத் தேவைப்படவே சம்மதித்தாள்.
கங்காதரன் காவல் நிலையம் நுழைய உள்ளே அம்முவின் கழுத்தில் கமல் திருமாங்கல்யம் பூட்டிக் கொண்டிருந்தான். கங்காதரனே இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
நடிக்க வந்தவரோ அதனை மறந்து உண்மையாகவே கத்தத் தொடங்கினார். "கமல்... என்ன காரியம் டா செய்து வெச்சிருக்கே!!" என்று கத்திட,
கமலோ 'அப்பா பயங்கரமா பெர்ஃபார்ம் பண்றாரே! இவர் நடிக்கிறார்னு சொன்னா எவனும் நம்பமாட்டான்... பின்றாரு போ' என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொண்டான்.
அதற்குள் எஸ்.ஐ-யோ "சார் நீங்க கங்கா ரெடிமேட்ஸ் கங்காதரன் தானே! என்ன சார் நீங்க? இன்னும் எந்த காலத்துல இருக்கேங்க? பையன் டாக்டர் பொண்ணை லவ் பண்ணினா சந்தோஷமா சேர்த்து வைக்கிறதை விட்டுட்டு இப்படி சராசரி அப்பனாட்டம் எதிர்ப்பு தெரிவிக்கிறிங்க? நீங்க உலகம் ஃபுல்லா தேடினாலும் இப்படி ஒரு குணமான பொண்ணு கெடைக்குமா சொல்லுங்க?" என்றிட,
"யோவ் போயா அந்த பக்கம்... நீ வேற நேரம் காலம் தெரியாம பேசிக்கிட்டு..." என்று எஸ்.ஐ யை நகர்த்திவிட்டு, அமுதினியிடம் வந்து
"ஏம்மா அவன் தான் அறிவு கெட்டத்தனமா ஏதேதோ செய்யிறான்னா, நீயும் யோசிக்காம எப்படி இதுக்கு சம்மதிச்சே?" என்று அவளுக்காக வருத்தப்பட்டார்.
"அது இல்லே அங்கிள்... நான் வேண்டாம்னு தான் சொன்னேன்..." என்று பேசத் தெரியாதவள் போல் அப்பாவியாய் கூறினாள்.
"உன் பேச்சை கேட்டு உன்னை அப்படியே நட்டாத்துல விட்டுட்டு போகச் சொல்றேயா?" என்று கடுப்படித்தான் கமல்.
"நீ பேசாதே டா... நீ என்கிட்ட என்னடா சொன்ன? இப்போ என்ன பண்ணி வெச்சிருக்க?" என்று மீண்டும் கங்காதரன் சத்தம் போட, எஸ்.ஐ அவராகவே ஒரு முடிவுக்கு வந்து உண்மையாகவே காதல் தகராறு என்று உறுதியே செய்துகொண்டார்.
கமல் தன் தந்தையைப் பார்த்து 'அப்போ அத்தனையும் நடிப்பு இல்லேயா! உண்மையான கோபமா? இத்தனை வர்ஷமா என் பசங்க மேல நம்பிக்கை இருக்குனு சொன்னதெல்லாம் பொய்யா?' என்று கேள்விக்கு ஏற்றார் போல் தலையை அசைத்து தன் தந்தையிடம் கண்களால் கேள்விகணைத் தொடுத்தான்.
"இவரு தில்லானா மோகனாம்பால் பத்மினி கண்ணாலேயே கேள்வி கேட்டா, நான் நாதஸ்வரம் வாசிச்சு பதில் சொல்லனும் பாரு..." என்று கோபத்திலும் கமலை கலாய்க்க,
கமலோ 'இவ முன்னாடி அசிங்கப்படுத்துறாறே... இவ்ளோ நேரம் என் இமேஜ்- ஐ எவ்ளோ கெத்தா மெய்ண்ட்டெய்ன் பண்ணி வெச்சிருந்தேன்.... ஒரே நிமிசத்துல சுக்கல் சுக்கலா நொறுக்கிட்டாரே....' என்று மனதிற்குள் புலம்பினான்.
அம்முவும் அவனைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை திருப்பிக்கொண்டு சிரிக்க, "சிரிக்காதே டி... பல்லை தட்டிடுவேன்" என்று அவள் காதுக்குள் ரகசியம் போல் மிரட்டினான்.
"உனக்கு இல்லாத உரிமையா கண்ணா... இப்போ தாலி கட்டி பொண்டாட்டியா வேற ஆக்கிட்டே... இனிமே நீ என்னை என்னனாலும் செய்யலாம்..." என்று அவள் பங்கிற்கு அவனை கடுப்பேற்றினாள்.
"தெரியும் டி உன்னை பத்தி... இவ்ளோ நேரம் வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் உள்ளுக்குள்ள குத்தாட்டம் போட்டிருந்துப்பேனு... எல்லாம் என் நேரம்..." என்று சிடுசிடுத்தான்.
"ஆடு தானா வந்து தலையக் கொடுக்கும் போது யாராச்சும் தலைவாழை விருந்து சாப்பிடமாட்டேன்னு சொல்லுவாங்களா கண்ணா!!!" என்று கமலைப் பார்த்து கண்ணடித்துக் கூறிட, அவனோ அவளை முறைத்துக் கொண்டாருந்தான்.

சீண்டல் தொடரும்.