• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 21

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
"அப்போ என்ன சொல்ல வர்றே!!! அந்த மெசஜ்சர் நமக்கு ஹெல்ப் பண்றான்னு சொல்றேயா?"

"இருக்கலாம்..."

"ஆனா எப்படி டா? அம்முவையும் உன்னையும் சேத்து கொல்லுவேன்னு மிரட்டினவன் நமக்கு எப்படி டா ஹெல்ப் பண்ணுவான்..."

"இல்லே பவன். 'அவ சாகப் போறா...' முடிஞ்சா காப்பாத்திக்கோனு தானே ஒவ்வொரு தடவையும் மெசேஜ் வந்தது."

"இருக்கலாம்.... ஆனாலும் நாம அலட்சியமா இருக்க முடியாது கமல்... இப்போ அந்த மெசென்ஜர் நமக்கு என்ன பண்ணினான்றது முக்கியம் இல்லே... அவன் யாருன்றது தான். அது தெரிஞ்சுட்டா விடைய அவன்கிட்டேயே கேட்டுடலாம்..."

"ம்ம்ம்.... இப்போ இந்த மூனு பேர்ல தேவ்வை விட்டுடு... மத்த ரெண்டு பேரா இருக்க ச்சான்ஸ் நிறையா இருக்கு"

"ஏன்? தேவ் அம்முவுக்காக கைய ஒடிச்சிக்கிட்டாற்றதுனால அவன் மேல நம்பிக்கை வந்திடுச்சா!" என்று பவன் கமலின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாமல் வாதாடினான்.

அதற்குள் அம்முவும், தேவ்வும் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வர, கமல் தேவ்வைப் பார்த்தபடியே,

"அப்படினு இல்லே... அவனுக்கு வேற வேலை ஒன்னு இருக்கு... சரி டா, டாக்டரை மீட் பண்ணிட்டு வெளிய வந்துட்டாங்க... நான் அப்பறம் பேசுறேன்" என்று செவிமடலிலிருந்து திறன்பேசியை நகர்த்தியவன் திடீரென நினைவு வந்தவனாய்,

"டேய் அண்ணா.... நான் வீட்டுக்கு போறதுக்குள்ள அண்ணிய சமதானம் செஞ்சு வை .. இவளுக்கு என்னாச்சோனு டென்ஷன்ல அண்ணி அழைச்சதைக் கூட கவனிக்காம வந்துட்டேன்..."

"பண்ண முடியாது போடா... இன்னைக்கு அவ கையால அர்ச்சனை வாங்கு..."

"அண்ணா பையா.... ஐ ஆம் யுவர் தம்பி டா"

"அதுனால தான் முடியாது டா"

"ண்ணா.... இந்த கட்டு போட்ட கையோட திரியிற தம்பிய பாத்தா உங்களுக் பாவமா இல்லைங்களாங் ண்ணா!" என்று தளபதி குரலில் கெஞ்சிட,

"இன்னம் எத்தனே மாடுலேஷன் மாத்தி கேட்டாலும் என்னாலே முடியாது" என்று பவனும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியைப் போல் பதில் கூறினான்.

"டேய் பவனு... எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா.... மை டியரு ப்ரதரு... ஹெல்ப் மீ டா" என்று தன் சொந்தகுரலில், தனக்கே உரிய தனிப்பட்ட பாணியில் கெஞ்சினான்.

"போயி விழுந்து கை, காலை ஒடிச்சிக்கும் போது இந்த அண்ணன் நியாபகம் வரலேல... அனுபவி" என்று கூறி அழைப்பைத் துண்டித்திருந்தான் பவன்.

பவனிற்கு உருகி வடிந்தெல்லாம் தன் பாசத்தை காண்பிக்கத் தெரியாது... எப்போதும் அடாவடி தான். மிதுனிடம் கூட தன் காதலை அப்படித் தான் வெளிப்படுத்தியிருந்தான். அதே நேரம் அவன் அடங்கிப் போவதும் மிதுன்யா ஒருத்திக்கு மட்டும் தான்.

கமலின் மேல் அதீத அன்பு கொண்டவனால் அவனது உடல் காயத்தைப் பார்த்து அமைதியாக இருக்க முடியவில்லை. இருந்தும் அவனது காதல் அவனுக்கு பெரிது என்று நினைத்து தான் பொறுமை காத்தான்.

இப்போது கமலாக வந்து வாயைக் கொடுக்கவே அனுபவி என்று ஒற்றை வார்த்தையில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டான். இருந்தும் அடுத்ததாக தன்னவளுக்கு அழைத்து தம்பிக்கு வக்காலத்து வாங்கி அவளிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளவும் தயாராகிக் கொண்டிருக்கிறான்.

இங்கே மருத்துவர் அறையிலிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த கமலிடம் இருவரும் நெருங்கும் போது அவன் இறுதியாக கெஞ்சிக் கொண்டிருந்ததது தான் இருவரது செவிகளிலும் விழுந்திருந்ததது. அதனைக் கொண்டு அம்மு கமலிடம்,

"என்னாச்சு கண்ணா? மிதுன் க்கா கோபமா இருக்காங்களா? நீ என்ன செஞ்ச?" என்று கொஞ்சம் கலவரமாக வினவினாள்.

"அதை விடு... அண்ணிய பவன் பாத்துப்பான்... இப்போ டிரைவர் கார் எடுத்துட்டு வருவாரு, நீ அவர் கூட வீட்டுக்கு போ... நான் தேவ்-ஐ அவர் வீட்ல விட்டுட்டு வரேன்."

"உங்களுக்கு சிரமம் வேண்டாம் கமல்... நான் என் ஃப்ரெண்டை வர சொல்லி போயிக்கிறேன்... என் பைக் வேற இருக்கே.... நீங்க கிளம்புங்க... நான் என் ஃப்ரெண்டு கூட போயிக்கிறேன்." என்றான் தேவ்.

"எங்களுக்காக இவ்ளோ ரிஸ்க் எடுத்த உன்னை எப்படி அப்படியே விட்டுட்டு போறது... அட்லீஸ்ட் உன் ப்ரெண்ட் வர வரைக்குமாவது வெய்ட் பண்றோம்" என்று கமல் கூறிடவே முவருமாக இணைந்து அருகில் இருந்த கஃபே கார்னர் சென்றனர்.

அங்கே ஹாட் க்ரீம் கஃபே, கோல்டு கஃபே, க்ரீன் டீ என ஆளுக்கு ஒன்றை ஆர்டர் செய்துகொண்டு ஒரு மேசையில் அமர்ந்தனர்.

"நீங்க ரெண்டு பேரும் உருகுறதைப் பாத்தா லவ்வர்ஸ் மாதிரி தெரியுது! ஒரே வீட்ல எப்படி! ரிலேட்டிவ்ஸ்ஸா?"" என்று தேவ் இருவரையும் பார்த்து வினவினான்.

அவனது கேள்வியில் தேவ்விற்கு நேர் எதிரே அமர்ந்திருந்த அம்மு கண்களில் மின்னல் மின்னிட, கமலைப் பார்த்தாள்.

தேவ்வின் அருகே அமர்ந்திருந்த கமலோ யாரையோ ஏதோ கேட்பது போல் அமர்ந்திருந்தான்.

அவனுக்கு இன்னமும் அம்முவின் மேல் இருந்த கோபம் போகவில்லை. 'ஹஸ்பண்ட் அன்ட் வைஃப் என்று சொல்லிக்கொள்ள முடியாத அளவிற்கு தாலியை கழற்றி வைத்துவிட்டாளே! என்ற கோபம். எனவே தேவ்வின் கேள்வியை காதில் கூட வாங்காதது போல் அமர்ந்திருக்க, அம்முவின் குறும்பு தேவ்விடம் வெளிப்பட்டது.

"ஏது? ல்வ்வா!!! இவனையா!!! மனுஷி திரும்பிப் பார்ப்பாளா இந்த உர்ரான்கொட்டான் மூஞ்சிய!"

"ஓய்.... என்ன திமிரா! திரும்பி பாக்க முடியாதுனா போடி.... உன்னை யாரும் என் மூஞ்சிய பாக்க சொல்லி கட்டாயப்படுத்தலே!" என்று கமலும் அவளைப் பற்றி அறிந்திருந்த போதும் கடுப்படித்தான்.

"நீ கட்டாயப்படுத்தினாலும் நான்லாம் உன்னை பாக்கமாட்டேன்." என்று திமிராகக் கூறினாள்.

"அப்பறம் எதுக்கு டி உங்க ஊர்ல இருந்து இங்கே வந்தே! அங்கேயே இருந்திருக்க வேண்டி தானே! வந்து என் உயிரை வாங்குறதும் இல்லாம சொல் பேச்சு எதுவும் கேக்குறது இல்லே" என்று மீண்டும் ஆதியிலிருந்து ஆரம்பித்து சண்டையிட்டான்.

"நான் என் கெரியருக்காக தான் வந்தேன்... உனக்காக ஒன்னும் வரலே... அதுவுமில்லாம நான் எதுக்கு டா உன் பேச்சை கேக்கனும்!!! உன் பேச்சையெல்லாம் மனுஷன் கேப்பானா! போடா"

"ஓஹோ... அப்போ இவ்ளோ நேரமா கேட்டுட்டு இருந்த தேவ்வை கொரங்குனு சொல்றேயா?"

"டேய்... அவ சொல்லலேனாலும் நீ சொல்ல வெச்சிடுவ போல! உங்களுக்குள்ள என்ன இருந்தா எனக்கென்ன! ரெண்டு பேரும் ஆணியே புடுங்க வேண்டாம்... கம்முனு இருங்க"

"அது எப்படி தேவ் சும்மா விட முடியும்? உன்னை கொரங்குனு சொல்லிருக்கான்... விட்டா சிம்பான்சி, தோவாங்கு, கொரில்லா, மங்கூஸ்னு அடுக்கிகிட்டே போவான் போல...." என்று தேவ்வை இன்னும் கொஞ்சம் டேமேஜ் செய்துவிட்டு சப்போர்ட் செய்கிறேன் என்ற பெயரில் கமலுடன் மள்ளுக்கு சென்றாள்.

"இதோ பார் கண்ணா... நீ எப்படி தேவ்வை தேவாங்குனு சொல்லலாம்"

"நான் எப்போ டி தேவாங்குனு சொன்னேன்..."

"பின்னே நானா சொன்னேன்!!!"

"நான் கொரங்குனு தான் சொன்னே... நீ தான் தேவாங்கு, சிம்பான்சி, கொரில்லானு சொன்ன..."

"ஓ... அப்போ தேவ்வை பார்த்தா நடமாடும் மினி ஜூ மாதிரி தெரியுதுனு சொல்லுவே போலயே!!!"

இருவரின் வாய்ச்சண்டையைக் கண்ட தேவ்வின் முகம் உண்மையாகவே தேவாங்கைப் போல் மாறிக் கொண்டிருந்தது. அவனுக்குள் மூண்ட கோபத்திற்கு நிச்சயம் தன் முன்னே இருந்த ஹாட் காஃபியை அம்முவின் முகத்தில் ஊற்றியிருப்பான், அவள் இன்னும் கொஞ்சம் பேசியிருந்தால்....

ஆனால் அதற்குள் தேவ்வின் தோழன் என்று சொல்லிக் கொண்டு டக்கின் செய்து ஸ்கூல் பாய் போல் ஒருவன் வந்த நிற்க, அம்முவின் பேச்சும் நின்றது. கமலும் அவனை விசித்திரமாகப் பார்த்து வைத்தான். வந்தவனை மரியாதை நிமித்தமாகக் கூட அறிமுகம் செய்து வைக்க நினைக்கவில்லை தேவ்.

"ரெண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுட்டு இருங்க... நான் கெளம்புறேன்... எனிவே தாங்கஸ் ஃபார் த காஃபி கமல்... என்னை உன் ஃப்ரெண்டா நெனச்சா அம்மு விஷயமா எந்த ஹெல்ப்னாலும், எப்பானாலும் தயங்காம கேளு" என்று சிரித்து கமலுடன் கை குழுக்கி நகர்ந்தான்.

சென்றவனை மீண்டும் அழைத்தான் கமல். "தேவ்... உன் ப்ரெண்டை இன்ட்ரோ கொடுக்காம போரயே!"

ஒரு நொடி சிந்தித்த தேவ் மறு நொடியே "அதைவிட முக்கியமான வேலையா நீங்க ரெண்டு பேரும் தான் சண்டை போட்டுட்டு இருந்திங்களே! இட்ஸ் ஓகே... ஹீ இஸ் வெங்கட்... ஒன்லி ஜெமினி டிவி" என்று அறிமுகம் செய்து வைத்தான்.

அவன் அறிமுகப்படுத்திய விதமே 'இவன்கிட்ட நீ என்ன பெரிதாக பேசிவிடப் போகிறாய்!' என்ற த்வனியில் இருந்தது. அதன் பிறகு தான் கமல் வம்படியாக வெங்கட்-ஐ நிறுத்தி வைத்து சில நலவிசாரிப்புகள் நடத்தினான்.

வெறும் நலவிசாரிப்பு மட்டும் தான்.... அதற்குள் தேவ், "ஓகே கமல்... இவன் இங்கே தான் இருப்பான்... இன்னொரு பாத்து பேசலாம்... எனக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.... பைய்" என்றிட, சிரித்த முகமாக இன்னொரு முறை நன்றி உரைத்து தேவ்வை வழியனுப்பி வைக்க,

"இவ்ளோ நேரம் திட்டுறதையும் திட்டிட்டு, இப்போ கிளம்பினதும் தேங்க்ஸ்ஸா... நான் நல்லா பண்ணினனோ இல்லேயோ!!! நீங்க ரெண்டு பேரும் ரெம்ப நல்லா பண்றிங்க... பாத்து பத்திரமா இருங்க..." என்று அவனும் பதிலுக்கு நக்கலடித்துவிட்டு, இறுதியாக எச்சரித்தும் சென்றான்.

அம்முவும், கமலும் மறக்காமல் அனைவருக்கும் பனிக்கூழ் வாங்கிக் கொண்டு இல்லம் திரும்ப, பவன் முதற்கொண்டு மொத்த குடும்பமும் கூடத்தில் தான் கூடியிருந்தது.

உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக விமலா இருவரையும் நெருங்கி "உனக்கு ஒன்னும் அடிபடலேயே மா?" என்று உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்வையாலேயே வறுடியபடி வினவினார்.

ஏனோ அந்த குரல் அம்முவின் உயிர் வரை சென்று தீண்டியது போல் தோன்றிட, தன் கண்கள் பனித்ததை மற்றவரிடம் இருந்து பெரும் ப்ராயத்தனப்பட்டு மறைத்து, "இல்லே அத்தே" என்றாள்.

"கமல் இவ்ளோ ரிஸ்க் எடுத்து அம்முவை கண்டிப்பா வேலைக்கு அனுப்பனுமா?" என்று மிதுன் தன் வாதத்தை ஆரம்பித்து வைத்தாள்.

"ஆமாடா கமல். இவ்ளோ கஷ்டபட்டு அம்மு அந்த ஹாஸ்பிட்டல் தான் போகனும்னு இல்லே..." என்று மகனிடம் உரைத்த கங்காதரன், மருமகளிடம் "நீ ஒரு க்ளீனிக் தனியா ரன் பண்ணிடுவேயா ம்மா?" என்றார்.

தன்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுக்கத் தயாராக இருக்கும் மாமனாரை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் அம்மு.

"இல்லே மாமா... அதுக்கு முன்னாடி கொஞ்சமாச்சும் எக்ஸ்பீரியன்ஸ் வேணும் மாமா..." என்று தயங்கி தயங்கி கூறினாள்.

"அப்போ ஒன்னு செய்... இந்த வேலை வேண்டாம்... மொதோ உனக்கும் கமலுக்கும் கல்யாணத்தை முடிப்போம்... அப்பறம் ஒரு சிக்ஸ் மந்த்ஸ் கழிச்சு நீ எந்த ஹாஸ்பிட்டல் விரும்புறேயோ அங்கே ட்ரைனிங்கோ இல்லே டைரக்ட் ஜாப்-போ வாங்கித் தர வேண்டியது என் பொறுப்பு... என்ன சொல்றே!" என்று வினவினார்.

கல்யாணம் என்றதும் கமல் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் தன் தந்தையை நெருங்கி "ஐஐஐஐ.... இந்த ஐடியா நல்லா இருக்கே... இப்போ தான் உருப்படியா ஒரு ஐடியா சொல்லிருக்கிங்க... ஐ லவ் யூ ச்சோ மச் டாடி" என்று கொஞ்சினான்.

ஒட்டு மொத்தமாக மொத்த குடும்பமும் தலையில் அடித்துக்கொண்டு, வாய்க்கு வந்த வார்த்தையை முணுமுணுக்க, அதை எல்லாம் கண்டு கொள்ளாத கமலோ, நொடியில் தந்தையை திட்டத் தொடங்கினான்.

"அட போப்பா.... நீ வேற.... அதுலேயும் ஒரு வில்லிய வீட்டுக்குள்ள சோறு போட்டு வளத்துட்டு இருக்கான்.... இவ அப்பே" என்று தன் வாய்த்துடுக்கு காரணமாய் மரியாதை இல்லாமல் உரைத்துவிட்டு, அம்முவின் உறத்த விழி பார்வையில் திருதிருவென முழித்துக் கொண்டு மாற்றிக் கூறினான்.

"இருக்காரு.... இவ அப்பாரு...." என்று தலையை பலமாக ஆட்டி கண்களால் இப்போ ஓகே வா? என்றான்.

நொந்து போன விமலா "டேய் கமல கண்ணா உன்னைலாம் யாருடா கல்யாணம் பண்ணிக்க சொன்னா? பேசாம சாமியார போயிடு..." என்று கடுப்பாக உரைத்தார்.

"ம்மோவ்... என்ன இருந்தாலும் நம்ம கலாச்சாரம்னு ஒன்னு இருக்குள்ள... ஒருவனுக்கு ஒருத்தினு சொல்லி வளத்துப்புட்டு இப்போ குஜாலா இருக்க சொல்றே!!! நான்லாம் ஃபாரின்ல படிச்சப்ப கூட நம்ம கலாச்சாரத்தை ஃபாலோவ் பண்ணினேன் பாத்துக்கோ..."

மிதுன்யா நின்ற நிலையிலேயே கன்னத்தில் கை வைத்து "அங்கே எத்தன லவ்வை பிரிச்சு வெச்சு எத்தனை சாபத்தை வாங்கினேயோ தெரியலே! உன் லவ்வுல ஏடாகூடமா சிக்கல் வருது" என்று போலியாக வருந்தினாள்.

"அதிலேயும் முதல் சாபம் நீயா தான் இருப்பே!" என்று பவன் தன் மனையாளை கடுப்பேற்ற வேண்டியே வம்பு வளர்த்தான்.

ஆனால் மிதுனோ "அஃப்கோர்ஸ்... இவன் மட்டும் தலையிடாம இருந்திருந்தா நான் என் ராம் மச்சானை கல்யாணம் செய்திருப்பேன்" என்றிட பவன் தான் கடைசியில் கடுப்பாகி நின்றான்.

"அய்யோ அண்ணி நல்ல டாப்பிக் போயிட்டு இருக்கும் போது அருந்த பழைய டேப் ரக்கார்டரை ஏன் ஓட விடுறிங்க?" என்றது தான் தாமதம், மிதுனின் மூக்கிலிருந்து புயலே வீசியது.

"கமல் போதும் உன் விளையாட்டு" என்று கங்காதரன் குரல் கொடுக்க, மிதுன்யாவோ 'அப்பறமா கவனிச்சிக்கிறேன் டா உன்னை...' என்று சைகை செய்துவிட்டு அமைதி அடைந்தாள்.

"அம்மு நீ சொல்லு ம்மா? உன் அப்பா பேரென்ன ம்மா? எங்கே இருக்காங்க?"

அம்முவோ வார்த்தைகள் வராமல் சண்டித்தனம் செய்த தன் திருவாயை இதழ்கள் நடுங்க விரித்தவள், "அப்பா...." என்று இழுத்து நிறுத்தியவள், "எங்க ஃபேமிலியும் ரெம்ப பெரிய ஃபேமிலி தான் மாமா.... தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தே, மாமா அப்பறம் என் அண்ணே எல்லாரையும் நான் மிஸ் பண்ணுவேன்னு சொல்றதைவிட, என்னை தான் எல்லாரும் ரெம்ப மிஸ் பண்ணுவாங்க..." என்றவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கி நிற்க, கமல் அவளை நெருங்கினான்.

அவனது நெருக்கம் தன்னை இன்னுமே கலங்க வைக்கும் என்று உணர்ந்தவன் கண்களாலேயே அவனுக்கு தடை விதித்து, "நான் நாளைக்கு காலைல கண்டிப்பா உங்ககிட்ட என் ஃபேமிலி பத்தி சொல்றேன் மாமா... ப்ளீஸ்" என்று அங்கிருந்து செல்ல அனுமதி வேண்டுவது போல் கூறினாள்.

கங்காதரனும் அவள் உணர்ச்சிவயம் அடைவதைக் கண்டு "சரி மா... எல்லா கோபத்துக்கும் ஒரு காரணம் இருப்பது போல ஒரு சமாதானமும் இருக்கும்... காலம் அதை கண்டிப்பா ஏற்படுத்தி கொடுக்கும்... கவலைப்படாம இரு... இந்த மாமா உன் குடும்பத்தை உன் முன்னாடி நிறுத்துவேன்... உன் விருப்பப்படி உன் குடும்பத்தோட தலைமைல தான் உங்க கல்யாணம் நடக்கும்..." என்று தந்தையாய் மகளுக்கு நம்பிக்கையூட்டினார்.

கமலின் நெருக்கத்தை விட அவரது வார்த்தைகளே அம்முவை அதிகமாக கவலை கொள்ளச் செய்தது. அன்பு மனம் கொண்டவர்களை ஏமாற்றுவது போல் ஒரு உணர்வு அவளுக்கு. இப்போதைக்கு தனிமை தேவைப்படவே நன்றி நழுவி அங்கிருந்து விலகி தனதறை நோக்கிச் சென்றாள்.

அறைக்குள் நுழைந்தவள் வழக்கமாக நேரே குளியலறை புகுந்து தன் கைப்பை, முதற்கொண்டு அலசி துவைத்து தலை குளித்து அதன்பின் தான் மற்ற வேலைகளைப் பார்ப்பாள். இன்றோ எதுவும் செய்ய இயலாமல், 'இன்னும் எத்தனை நாளைக்கு தான் தள்ளிப் போட முடியும்! மற்றவர்கள் ஏற்றுக் கொண்டாலும், உற்றவன் ஏற்றுக்கொள்வானா!' என்ற சந்தேகம் வலுவடையவே பால்கனி சென்று நின்று கொண்டாள்.

அரைமணிநேரம் கழிந்தது கூடத் தெரியாமல் ஆகாயத்தை பார்த்தபடி அங்கேயே தன் பொழுதைக் கழித்தவள், கதவு தட்டும் ஓசையில் திடுக்கிட்டு யாரென்று வினவிட, கமலிடம் இருந்து பதில் வந்தது நான் தானென்று. மீண்டும் ஏதோ குற்ற உணர்வில், அவனை தவிர்க்க எண்ணி,

"நான் குளிச்சிட்டு இருக்கேன் கமல்... ஒரு டென் மினிட்ஸ்ல வந்திடுறேன்..." என்று கூறி அவசரமாக குளியலறை புகுந்தவளை கமலின் குரல் தடுத்து நிறுத்தியிருந்தது.

"கையில ப்ளாஸ்டர் பிரிஞ்சு ரத்தம் வருது அமுலு... கொஞ்சம் சீக்கிரம் வந்து என்னனு பாரேன்!" என்றிட விழுந்தடித்துக்கொண்டு விரைந்து வந்து கதவைத் திறந்தாள்.

"என்னாச்சு கண்ணா! எப்படி பிரிஞ்சது?" என்று வினவியபடி அவன் கையை இழுத்து திருப்பிப் பார்க்க பதற்றத்தில் ஒன்றும் தெரியவில்லை அவளுக்கு. கமலின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே நுழைய அவனும் அவளுடன் இணைந்து அறைக்குள் நுழைந்தான்.

"என்னாச்சு உனக்கு?" என்றவனது குரல் மாற்றத்தையோ, முக மாற்றத்தையோ உணர்ந்திடாதவளின் கவனம் முழுதும் அவனது கையில் தான் இருந்தது. தன் அலமாரியில் வைத்திருந்த முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு ஒற்றை சாய்விருக்கையில் அமர்ந்திருந்தவனின் காலடியில் அமர்ந்தாள்.

மீண்டும் அவன் கையை பிடித்து இழுத்து தன் தோளில் வைத்து தன்னை பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு காயத்தைப் பார்த்தாள். தேவ் கட்டிவிட்டிருத்த ப்ளாஸ்டர் நன்றாகத் தான் ஒட்டியிருந்தது;

"ஒன்னும் ப்ரச்சனை இல்லையே கண்ணா! பின்னே ஏன் அப்படி சொன்னே!" என்று கேட்டபடி அப்போது தான் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனது கண்கள் அவளை ஆராய்ந்தபடி இருக்க, "என்னாச்சு டி? என்கிட்ட இருந்து எதை மறைக்கப் பாக்கறே அமுலு? என்னை ஏன் அவாய்ட் பண்ணுறே?" என்று வினவினான் அவளது கண்ணன்.

தான் மாட்டிக்கொண்டதை மேலும் உறுதி செய்யும் விதமாக, "அப்படியெல்லாம் ஒன்னும் இல்லே கமல்" என்று அவசரமாக மறுத்தாள்.

அம்முவின் கன்னத்தை தன் கைகளில் தாங்கியபடி, "உன் அழைப்பு கமலுக்கும் கண்ணாவுக்கும் நடுல கெடந்து தவிக்கிது... குளிக்கிறேன்னு சொன்னவ அதை மறந்து உடுத்துன உடையோட இன்னமும் திரியிறே! இப்போ சொல்லு... என்னை பாக்க விரும்பாம தானே குளிக்கிறேன்னு பொய் சொன்னே?" என்றான் அவளை சரியாக கண்டறிந்து....

பெண்ணவளின் கண்கள் தானாக ஊற்றெடுக்க, "எப்பவும் என்னை விட்டு பிரியமாட்டேல கண்ணா?" என்றாள்.

சற்றும் யோசியாமல் அவள் கேட்ட வாக்குறுதியை கொடுத்திட அவனால் முடியவில்லை. அவனைப் பொறுத்தவரை அவளது இல்லத்தில் என்ன சூழ்நிலை என்று தெரியாமல் எந்த வாக்குறுதியும் அவன் கொடுக்க விரும்பவில்லை... ஆனால் ஒன்றை மட்டும் அவள் மனதில் பதித்தான்.

"எனக்கு பக்கம் பக்கமா டயலாக் பேசி, கவிதை எழுதிலாம் காதலிக்க தெரியாது... மொத்தமா நீ எனக்கு கிடைக்கலேனா நான் வெறும் நடைபிணம் தான். எனக்கு என் குடும்பத்து மேலேயும் அதீத காதல் இருக்கு... ஆனா உன் மேல இருக்குற காதலை இதுக்கு மேல எடுத்து சொல்ல எனக்கு தெரியலே டி! இத்தனை வர்ஷம் இதே வீட்ல சந்தோஷமா இருந்த என்னால இனி ஒரு நிமிஷம் நீ இல்லாம இருக்க முடியாது டி." என்று அவள் கண்களை பார்த்து கூறினான்.

அதில் தெளிய வேண்டிய அவள் மனதோ மேலும் கொஞ்சம் கூடுதளாக குழப்பமுற்றது. அவன் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள். கமலுக்குமே அவள் இன்னும் தெளியவில்லை என்பது புரிந்திட,

"அமுலு... நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பாக்குறே? எனக்கு புரியலே மா!" என்றான்.

"கண்ணா.... மாமா சொன்ன மாதிரி கோபம் எல்லாம் சமாதானம் ஆனபின்னாடி என் அப்பாகிட்ட பேசலாமே!" என்றாள்.

"பேசாம எப்படி டி சமாதானம் பண்ண முடியும்! நீ எதுவும் கவலை படாதே... அப்பா பேசுற விதமா பேசி சரிகட்டிருவாங்க... வாய தொறந்தாலே டஜன் டஜனா பொய் சொல்ற என் இனிய இம்சையா இப்படி பயப்படுறா!!! கேக்கவே ஆச்சரியமா இருக்கு!" என்று அதிசயித்தான்.

அவனது கேலி பேச்சில் தன்னை சற்று மீட்டுக் கொணர்ந்தவள், "சோலோவா எவ்ளோ ப்ராப்ளம்னாலும் ஃபேஸ் பண்ணிடுவேன்... ஆனா ரெண்டு ஃபேமிலியும் நேருக்கு நேர் பாத்துக்க போறாங்க... யாரை தான் என்னால சமாதானம் செய்ய முடியும்!!!"

"நடக்குற படி நடக்கட்டும்... இப்போவே தேவையில்லாம கவலைபட்டுட்டு இருக்காதே... போ... போயி குளி" என்று அவளை எழுப்பி நிறுத்தினான்.

கமல் நிறுத்தி வைத்தபடி அசையாமல் அப்படியே நின்றவளின் அருகே எழுந்து நின்ற கமல், அவள் காதில்

"எதுவும் ஹெல்ப் வேணுமா?" என்றான் அதிதீவிர குரலில்.

தன் மன சஞ்சலத்தில் மூழ்கி கிடந்தவளுக்கு அது ஒரு உணர்வையும் ஏற்படுத்திடவில்லை. இடவலமாக தலையசைத்துவிட்டு, மீண்டும் அப்படியே நின்றிருந்தாள்.

ஒற்றை கையால் அவளது இடை வளைத்து தூக்கிப்பிடித்தவன் அப்படியே குளியலறை நோக்கிச் செல்ல, அவனுக்கு வலிக்குமோ என்று பதறி தன்னை விடுவிக்க முயற்சித்தாள்.

"கண்ணா என்ன இது! இறக்கி விடு" என்றவளின் குரலை கொஞ்சம் கூட பொருட்படுத்தாது காரியத்தில் கண்ணாய் இருந்தான் காளையவன்.

உள்ளே இறக்கிவிட்டு, அவளது ஆடையை மேலே உயர்த்த முயற்சிக்க, பெண்ணவளுக்கே உண்டான பாதுகாப்புணர்வு விழித்துக்கொள்ள, "டேய் பொறுக்கி... என்ன காரியம் டா பண்ணுறே! உன்னை" என்று பல்லை கடித்துக் கொண்டு அவனது தோள்பட்டையில் சுளீர் சுளீரென அடிக்கத் தொடங்கினாள்.

"அடியேய் இம்ச... கல்யாணத்துக்கு அப்பறமும் கூட உன்னை வெச்சுகிட்டு என்பாடு திண்டாட்டம் தான் டி... தத்தி..." என்று திட்டியபடி அங்கிருந்து வெளியேறினான் மீண்டும் தன் வீராதி வீர அமுலுவைக் கண்ட சந்தோஷத்தோடு...