அம்மு தன் அண்ணனுக்குத் தெரியாமல் தான் புதிதாக சேரவிருந்த தர்மா மருத்துவமனைக்கு அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதில் அஞ்சலும் வந்திருந்தது வேலையில் சேர வேண்டிய தேதியுடன்.
தன் காதலுக்காக பேசினால் நிச்சயம் எதிர்ப்பு தான் பதிலாகக் கிடைக்கும் என்று தெரிந்து வேலை விஷயமாக மதுரை செல்வதாக ஆரம்பித்தாள். பழனிவேலிற்கு அவள் பேச்சை மறுத்துப் பேசாத தன் மகன் தியாகு மேல் தான் கோபம் எழுந்தது.
தந்தைக்கு பதிலாக அகிலன் மறுப்பு கூறவே, தன் மகனை அர்ச்சிக்கத் தொடங்கினார் பழனி.
"ஒரு அப்பனா நீ செய்ய வேண்டியதை உன் மகன் செய்யிறான். பொட்டபுள்ளைக்கு செல்லம் கொடுக்கலாம்... ஆனா இவ்ளோ செல்லம் கொடுக்கக் கூடாது தியாகு... உன் மக கிட்ட சொல்லிவை... இனி கல்யாணம் கட்டி புருஷன் வீட்டுக்குப் போற வரைக்கும் இந்த வீட்டு வாசலைத் தாண்டக் கூடாதுனு" என்றார்.
முதன்முறையாக தனக்காகவோ தன் தங்கைக்காகவோ தன் தந்தையை எதிர்த்துப் பேசாத தியாகு கூட, தன் மகளுக்கு எதிர்த்துப் பேசினார்.
"ஒரு அப்பனா என்ன செய்யனுமோ அதை தான் நான் செய்யிறேன் ப்பா... முக்கியமாக என் பொண்ணு விஷயத்துல... லெவந்த் சேர்ந்ததுலே இருந்து எட்டு வர்ஷமா வெளியே தங்கி படிக்கிறா... இதுநாள் வரைக்கும் அவளது நட்பு அளவறிந்து தான் இருந்திருக்கு... அவளுக்கும் ஆண் நண்பர்கள் இருக்காங்க... அது அகிலனுக்கும் தான் தெரியும்... நீ சொல்லு டா உன் தங்கச்சி ஃப்ரெண்ட்ஸே நீயும் தான் நேர்ல பார்த்து பேசியிருக்கே... எவனாவது ஒருத்தனாவது தப்பு சொல்ற மாதிரி இருந்திருக்கானுங்களா?" என்றிட அகிலனும் இல்லை என்று தான் தலையசைக்க வேண்டியிருந்தது.
"இப்பவும் அவ மனசுக்கு பிடிச்ச ஒருத்தனை பார்த்திருக்கா... அவனை பேரண்ட்ஸ் சம்மதத்தோட கல்யாணம் செய்துக்க நினைக்கிறா... அவ யாரை விரும்பியிருந்தாலும் உங்க பதில் ஜாதி மதம் சார்ந்ததாத் தான் இருந்திருக்கும். என் முடிவு அவ மனசு சம்பந்தப்பட்டதாத் தான் இருந்திருக்கும்..." என்றிட அவ்விடமே அப்படி ஒரு அமைதி.
அவரது முடிவு என்ற வார்த்தையிலேயே அனைவரது மொழிகளும் அடங்கிப் போகியிருந்தது. "அம்மு நான் உனக்கு சொல்றதுக்கு ஒன்னே ஒன்னு தான் இருக்கு... உன் கண்ணன் உன்னை புரிஞ்சுக்கிட்டு உன்னை ஏத்துக்கனும்... யார் சொல்லியும் ஏத்துக்கிட்டதாவும் இருக்கக் கூடாது... யார் தடுத்தும் மறுத்ததாவும் இருக்கக் கூடாது... அதை புரிஞ்சு நடந்துக்கோ... மத்தபடி நீ எந்த ஊருக்கு வேலைக்கு போனாலும் எனக்கு சம்மதம் தான்." என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.
தியாகுவின் உரத்த குரல் இது வரை அவ்வீட்டில் ஒலித்தது இல்லை. ஆனால் இப்போது அவரது குரலை மீறி நடக்கும் தைரியமும் யாருக்கும் இல்லை. அம்முவுமே அவரது வார்த்தையை மீறி அவள் கண்ணனைத் தேடிச் செல்லும் துணிவு இன்றித் தான் அமர்ந்திருந்தாள்.
உள்மனமோ 'தந்தையின் கூற்றிலும் நியாயம் இருக்கிறது தானே...' என்று சிந்திக்கத் தொடங்கியது. 'கமல் அவனது தந்தையின் சொல்லுக்காக நேற்று தன்னை தன் தந்தையுடன் அனுப்பி வைத்துவிட்டான். இதுவே நாளையும் தொடராது என்று என்ன உத்தரவாதம். அவன் அணியப் போகும் மஞ்சள் கயிறு மட்டும் தான் அவனைத் தடுக்கும் என்றால், மனதளவில் தந்தைக்காக தன்னை ஒதுக்கி தானே வைப்பான்...' என்ற எண்ணம் தோன்றிட, இரவு பல மணி நேர யோசனைக்குப் பிறகு விடிந்ததும் முதல் பணியாக, தன் திறன்பேசியை எடுத்து தர்மா மருத்துவமனைக்கு 'தான் அங்கே பணியில் சேர முடியாது' என்றும் அதற்கு மன்னிப்பு வேண்டியும் மின்னஞ்சல் செய்தாள்.
அம்முவிற்கு தன் மனதை கட்டுக்குள் வைத்திருக்கும் வலிமை இருந்த போதும் அது அனைத்தும் கமலைக் காணும் வரை தான். ஒருமுறை அவனையும் அவனது வாடிய முகத்தையும் கண்டுவிட்டாலே தன் உறுதிகள் அனைத்தும் துரும்பாக உதிர்ந்துவிடும் என்று அவளும் அறிந்த ஒன்றே. அதனாலேயே தான் மதுரை செல்வதை தவிர்க்க நினைத்து இந்த காரியத்தைச் செய்தாள்.
காலை உணவிற்குப் பிறகு மீண்டும் தன் ஊரிலேயே வேலை தேடும் பணியைத் தொடர்ந்தாள். இப்போதைக்கு வீட்டில் இல்லாமல் எங்கேனும் வெளியேறினால் கூட தன் மனதிற்கும் கொஞ்சம் மாற்றமாக இருக்கும் என்று கொஞ்சம் அவசரமாகவே பணி தேடும் பணியைச் செய்தாள்.
அதன் பலனாக ஒரே வாரத்தில் நாகர்கோவிலில் ஒரு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு கிடைக்க, வீட்டாரின் சம்மதத்தோடு அங்கே சென்று சேர்ந்தும் விட்டாள்.
********
பெருமளவில் ஒன்றும் வியாபாரம் இல்லை என்ற போதும், தலைக்கு மேல் வேலை குவிந்து கிடப்பதைப் போல் அதிகாலையே கடைக்கு வந்துவிட்டான் கமல். திறன்பேசி அதிர்வது கூட உரைக்காமல் ஏனோ தானோவென்று அமர்ந்திருந்தான்.
"ண்ணா... என்ன கனா கண்டுட்டு இருக்கிங்க... உங்க ஃபோன் தான் அப்போத்துல இருந்து அடிக்கிது பாருங்க..." என்று தன் அருகில் உள்ள பொம்மைக்கு உடைமாற்ற வந்த பெண் கூறிட, அப்போது தான் அதனை உணர்ந்தான்.
எடுத்துப் பார்க்க தெரியாத எண்ணிலிருந்து பலமுறை அழைப்பு வந்திருந்தது. ஏனோ இன்று அவனது நினைவுகள் தன்னவள் தன்னை முதன்முறையாக இப்படி பலமுறை அழைத்திருந்தது நினைவில் வந்தது.
கூடுதலாக அன்று அவள் ஆபத்தில் இருந்தது கூட நினைவில் வர, இன்றோ 'இனி அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை... அவள் அவளது தந்தை இல்லத்தில் பத்திரமாக இருக்கிறாள்' என்ற எண்ணமும் சேர்ந்தே வந்தது.
அதற்குள் மீண்டும் ஒருமுறை அழைப்பு வர, நூற்றில் ஒரு சதமாக தன் அமுலுவாகத் தான் இருக்குமோ! என்று மனம் ஆசைக்கொள்ளவும் செய்தது. இத்தனை நாள் அவளது குறுந்தகவல்களுக்கு எந்த பதிலும் அனுப்பாததால் வேறு எண்ணிலிருந்து அழைக்கிறாளோ என்ற ஆசை...
அவளாக இருந்தால் நன்றாக இருக்குமே! அவளது குரலையாவது கேட்கலாமே! என்ற ஏக்கம்... ஆனால் தனது இம்சை இம்சிக்க வேண்டும் என்று நினைத்தால் அவளது எண்ணிலிருந்தே அழைத்து அல்லவா தன்னை நிலைகுழையச் செய்வாள்... இப்படி தெரியாத எண்ணிலிருந்து எல்லாம் அழைக்கமாட்டாளே! என்று உண்மையும் இடித்துரைத்தது.
பலத்த யோசனையில் மீண்டும் அழைப்பு நின்றிருக்க, தன் சிந்தனைகளில் இருந்து வெளி வந்தவன் தானே அந்த எண்ணிற்கு அழைத்தான். அழைப்பு ஏற்கப்பட்ட நொடி தான் யார்? எவர்? என்பதைக் கூட அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தன் படபடப்பை இறக்கி வைத்தது மறுமுனை.
**********
"ராம்.... நாம இங்கே வந்ததுல இருந்து நீங்க இன்னும் ஒரு வார்த்தை கூட மாமாவை சமாதானம் செய்யப் பேசலே" என்று நினைவு படுத்தினாள் அவளது மனையாள்.
"நான் எதுக்கு தரு அவரை சமாதானம் செய்யனும்! எனக்கும் இப்போ இந்த வீட்டுக்குள்ள நடக்குற பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம்!" என்றான் அவன்.
"விளையாடாதிங்க ராம்... கமல் அம்மு இல்லாம ரொம்பவே கஷ்டபடுறான்... அத்தைக்கு அம்முவை திரும்ப அனுப்பிவெச்சுட்ட கோபம்... மாமா அவர் எடுத்த முடிவுல பிடிவாதமாக இருக்கார். நீங்க இதெல்லாம் தெரிஞ்சும் பேசாம இருக்கிங்க..." என்று புலம்பத் தொடங்கினாள்.
"இப்பவும் கேக்குறேன் நான் எதுக்கு உன் மாமாவே சமாதானம் செய்யனும்!" என்று இறுக்கமாக முகம் வைத்து வினவினான்.
அவனை பிரம்மிப்பாக பார்த்த நேத்ராவிடம், "உன் மாமா கேக்குறதுல என்ன தப்பு!!!... கமல் அம்மு கல்யாணத்துக்கு அப்பறம் நாம இந்த வீட்டுக்கு வரும்போது உனக்கு சரியான மரியாதை கிடைக்கலேனா என்னால எப்படி பார்த்துட்டு சும்மா இருக்க முடியும்... அவ்ளோ ஏன் இந்த கல்யாணத்துலேயே உன்னை அவங்க அசிங்கப்படுத்தலேனாலும் வேண்டா வெறுப்பாகத் தானே பார்ப்பாங்க... எல்லாத்தையும் சகிச்சுக்கிற தன்மை எனக்கில்லை... உன் மாமாவை சமாதானம் செய்ய வேண்டியது என் வேலையும் இல்லே.. காட் இட்?" என்று கூறி தன் மகளுடன் இணைந்து சதுரங்கம் விளையாடத் தொடங்கினான்.
இது அவனது குணம் அல்லவே! எவர் ஒருவர் தன்னையோ தன்னைச் சார்ந்தவர்களையோ ஏளனமாக நினைக்கிறார்களோ அவர்களின் முன்னிலையில் அவ்விடத்திலேயே தன் பணபலம், புஜபலம், ஆணவம் என எவ்வகையில் பதில் கொடுக்க முடியுமோ அவ்வழியில் பதில் கொடுப்பவனாயிற்றே!' என்று அவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தவள், இன்னமும் அவனது கூற்றை நம்ப முடியாமல் அவனை பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தாள்.
அப்போது தான் சதுரங்கம் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்த வெண்பா, "ப்பா... உங்க குயினுக்கு செக்மேட்" என்றிட,
அழகாக வெண்பற்கள் தெரிய சிரித்தவன், "ம்ம்ம்... என் குயினுக்கே செக்மேட்டா!!! இப்போ என்ன பன்றது!" என்று யோசிப்பது போல் இரு கை விரல்களையும் இணைத்து ஆள்காட்டி விரலை இதழில் வைத்து சிந்திப்பது போல் பாசாங்கு காட்டினான்.
மகளும் தன் தந்தையையே திணறித்துவிட்ட ஆனந்தத்தில், "ஐ ஹவ் ஆன் ஐடியா" என்றாள்.
"ம்ம்ம்... அப்படியா?" என்றிட தன் கயல்விழிகளை உருட்டி, இமைகளை விரித்து அவசரமாக மேலும் கீழும் தொடர்ந்து தலையை அசைத்து ஆம் என்றாள்.
"டெல் மி தாட்" என்று அவனும் ரகசியம் போல் கூறிட, இருவர் ஆடும் விளையாட்டில் ஒருவருக்கு ஒருவர் எதிரணி என்பதையெல்லாம் பொருட்படுத்தாது, தந்தையை வெற்றிக்காணச் செய்யும் ஆவலில் "இந்த கிங்-அ இங்கே குயினுக்கு முன்னாடி மூவ் பண்ணுங்க..." என்று ராஜாவை நகர்த்தினாள் செல்ல மகள்.
"பாப்பு.... செஸ்-ஐ பொருத்த வரைக்கும் த குயின் ஹாஸ் மோர் பவர் தென் த கிங்... சோ இந்த ராணி, ராஜா பின்னாடி ஒழிஞ்சுக்கத் தேவையில்லை" என்று கூறி எதிரி படைக்கு நடுவே நிறுத்தி "உன் கிங்-க்கு செக்மேட்" என்றான்.
மேலும் தன் மனையாளை ஓரக்கண்ணால் பார்த்து, "உன் தாத்தாவுக்கும்" என்று முனுமுனுத்தான். பெண்ணவளும் அவனது கூற்றில் தனக்கான செய்தி இருப்பதை உணர்ந்து, வழக்கம் போல் தன் பதியவனை திமிர் பார்வை பார்த்து அங்கிருந்து வெளியேறினாள்.
தன்னவள் வெளியேறியதும், சின்ன சிரிப்போடு திரும்பியவன், தன் எதிரே தன்னை முறைத்துக் கொண்டிருந்த தன் செல்ல மகளைக் கண்டு, சில பல கெஞ்சல்களோடு தன் ராணி முன்னேறிச் சென்ற மகிழ்ச்சியில், தன் சதுரங்க ராணியை பின்னால் நகர்த்தி மகளை வெற்றிக் காணச் செய்து அவளது மகிழ்ச்சியில் தானும் மகிழ்ந்தான்.
**********
வாரம் ஒருமுறை இல்லம் வருவதாகக் கூறி தான் அம்முவும் தன் பணியில் சேர்ந்திருந்தாள். வேலையில் சேர்ந்து ஒரு வாரம் கடந்திருக்க அன்றைய நாள் தன் இல்லம் திரும்பும் நாள். வீட்டிற்குள் நுழைந்திட அங்கே அவளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அவளுக்காக அவளது இல்லத்தில் காத்திருந்த நபரைக் கண்டு விழி விரித்து வாசலிலேயே நின்றுவிட்டாள் பெண்ணவள்.
"ஹாய் அம்மு"
இதழ் பிரிய மறுத்தது அம்முவிற்கு. தலையசைப்போடு அவனது வணக்கத்தை ஏற்றாள்.
"என்ன? அப்படியே ஷாக்காகி நின்னுட்டே! என்னை எதிர்பார்க்கலேயா?"
சின்ன சிரிப்பிலேயே ஆம் என்று உரைத்தாள்.
"ஹேய் என்னாச்சு உனக்கு? பேச்சு வரலேயா? இல்லே பேச பிடிக்கலேயா?"
இப்போது தான் வாய் திறந்தாள் பெண்ணவள். "ஹேய்... அப்படிலாம் இல்லே! என்ன இவ்ளோ தூரம்?"
"உன்னை பாக்க தான்"
அவனது பதிலில் அவள் கடுப்படைந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் மரியாதைக்காக, "ம்ம்ம்... என்னை நியாபகம் வெச்சு பாக்க வந்ததுக்கு தாங்கஸ். ட்டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணு... ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வரேன்." என்று விடை பெற்றுச் சென்றாள்.
'உன்னை மறக்கக் கூடிய காரியமா டி பண்ணி வெச்சிட்டு வந்திருக்கே! இனி நீ தான் டி எங்க டெஸ்ட் ரேட்!!!' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வன்மமாக சிரித்தபடி அவளையே வெறித்தான் அவன்.
"ஹலோ மிஸ்டர் யார் நீ? எங்க வீட்டுக்குள்ளேயே உக்காந்துகிட்டு யாரை இப்படி முறைச்சிகிட்டு இருக்கே!" என்றபடி உள்ளே நுழைந்தான் அகிலன்.
அகிலனின் கணீர் குரலில் வந்திருந்தவனுக்கு மனதிற்குள் ஒரு நொடி கிலி பரவ, அடுத்த நொடியே அதை மறைத்து இயல்பாகப் பேசினான்.
"நான் ஜகன் தேவ்..."
தேவ் அம்முவைத் தேடி வந்ததன் நோக்கம் என்னவாக இருக்கும்?
கமலுக்கு வந்த அழைப்பு யாருடையது?
நேத்ரா இனி என்ன முடிவேடுப்பாள்? நேத்ராவின் உபயத்திலாவது கமல் அம்முவைத் தேடி வருவானா?

சீண்டல் தொடரும்.