கங்காதரனின் சொல்லுக்கிணங்கி விமலா திரும்பிப் பார்க்க அங்கே கமல் மற்றும் அம்மு இருவரும், மூவர் அமரும் இருக்கையிலும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
விமலாவோ கண்களை விரித்து "டேய் கமல கண்ணா யாருடா இந்த பொண்ணு?" என்று அதிர்ச்சி பாதி மகிழ்ச்சி பாதியாக வினவினார்.
"உங்க மருமக புள்ள ம்மா..." என்று வழக்கம் போல் முந்திக்கொண்டார் எஸ்.ஐ...
சரியாக அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்த மிதுன், 'யாருடா அது என்னை பத்தி பேசுறது!' என்பது போல் கண்களை சுழலவிட்டாள். கமலின் அருகே அமர்ந்திருப்பவளைக் கண்டு
"நீ சுனோ ப்ரெண்டு தானே! நீ இங்கே..... எப்படி?" என்று கமலை ஏற இறங்க பார்த்துக்கொண்டே வினவினாள்.
அதற்குள் விமலா கமலை நெருங்கிச் சென்று, "நீயுமா டா சொல்லாமக் கொள்ளாம கல்யாணம் செய்துக்கிட்டே!!! எல்லாம் இந்த மனுஷனைச் சொல்லனும்... புள்ளைகங்களை ரெம்ப கண்டிக்கக் கூடாதுனு சொல்லி சொல்லி இப்போ எங்கே வந்து நிக்கிது பார். ஊரெல்லாம் பொண்ணு தேடுனேன்... நானே பொண்ணு பாத்து என் பையனுக்கு கல்யாணம் செய்து வைக்கனும்னு ஆசைப்பட்டேனே... கடைசில இப்படி பண்ணிட்டியே டா..." என்று ஏற்ற இறக்கத்தோடு தன் ஆதங்கத்தை பல்லைக் கடித்துக் கொண்டே வெளிப்படுத்தினார்.
எஸ்.ஐ அடுத்த அறிவுரை சொற்பொழிவிற்கு தன் மனதிற்குள்ளேயே ஒத்திகை பார்க்க, விமலா யாரும் பேசுவதற்கு நூலளவும் கூட இடம் கொடுக்காமல் மீண்டும் தொடர்ந்தார்.
"நான் இல்லாத நேரமா பாத்து இப்படி நட்டநடு ஹால் வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டானே!!! இந்த சாந்தா எங்கே போனா!!" என்று கத்தினார்.
அவருக்கோ ஆரத்தி எடுத்தார்களா இல்லையா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம். ஆக பணிப்பெண்ணைத் தேடினார் விமலா.
மனைவியின் சொற்களை சரியாக கனித்த கங்காதரன், எஸ்.ஐ யின் புரிதலையும் கச்சிதமாகக் கனித்து அவரது அறிவுரையை இன்னும் காணலேயே என்று கண்களை மூடியபடியே யோசித்துக் கொண்டிருக்க, கணீரென ஒழித்தது சப் இன்ஸ்பெக்டரின் குரல்.
"உங்க வீட்டுகாரர் பெரிய மனசு பண்ணி ரெண்டு பேரையும் ஏத்துகிட்டார் ம்மா... நீங்களும் ஏத்துக்கோங்க..." என்று அடுத்து ஏதோ கூற வருவதற்கு முன்,
"பெரிய மனசு பண்ணியா!!!" என்று அதிசயித்து வினவியதோடு தன்னவரை திருட்டு முழி முழித்தபடி திரும்பிப் பார்த்தார் விமலா. நல்லவேலை அவரது குரல் எஸ்.ஐயின் காதில் விழவில்லை. அதற்குள் கங்காதரன் தன் பேரனை இருக்கையில் அமர்த்திவிட்டு எழுந்து நின்று,
"விமலா... மொதோ ரெண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணுவோம்... அப்பறம் மத்ததை பார்க்கலாம்..." என்று விமலாவின் பேச்சுக்கு முட்டுக்கட்டையிட்டு நிறுத்திட, கணவனைப் பற்றி நன்கு அறிந்திருந்த விமலாவும், அமைதியடைந்தார்.
ஆனாலும் வாய் மூடவில்லை கங்காதரனின் அருகே வந்து, "என்னங்க!!! இந்த பையனும் இப்படி பண்ணிட்டானேங்க!!!" என்று முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கூறினார்.
விமலாவை பார்வையால் அடக்கியவர், மிதுன்யாவைப் பார்த்து, "மிதும்மா போயி பூஜையறையில விபூதி தட்டு எடுத்துட்டு வா, அப்படியே பவனுக்கு விஷயத்தை சொல்லி வீட்டுக்கு வரசொல்லு..." என்றிட, அவளும் "சரிங்க மாமா" என்றபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
ஆனால் அதற்கு முன்பாகவே கமல் பவனுக்கு புலன குறுந்தகவல் வழியே விஷயத்தைச் சேர்ப்பித்திருந்தான்.
அதனால் தமயனின் வருகையை எதிர்பார்த்தபடி, தன் அன்னை தந்தையின் மனநிலையையும் உணர்ந்து, , எஸ்.ஐயின் அருகே வந்து "ரெம்ப தேங்க்ஸ் சார்... எங்களை சேத்து வெச்சதுக்கு... என் அப்பாவும், அம்மாவும் எங்களை வாழ்த்துற அளவுக்கு வந்துட்டாங்க... இனி எங்க வாழ்க்கை கண்டிப்பா நல்லா இருக்கும்..." என்று கூறி எப்போது கிளம்புகிறாய் என்ற கேள்வியை மறைமுகமாக முன் வைத்தான்.
எஸ்.ஐ கமலையும் அவனது பெற்றோர்களையும் ஓர் ஆழப்பார்வை பார்த்துவிட்டு "ம்ம்ம்" என்று கூறி எழுந்து நிற்க, சரியாக பவன் உள்ளே நுழைந்தான்.
வந்ததும், வராததுமாக நேரே சென்று கமலை கட்டியணைத்து "கன்ங்கிராட்ஸ் டா" என்று கூறிவிட்டு, தன் தந்தையைப் பார்த்து,
"தேங்க்ஸ் ப்பா... எங்கே நீங்க ரெண்டு பேரையும் வீட்டுக்குள்ளேயே அல்லோவ் பண்ணமாட்டிங்களோனு பயந்துட்டேன்..." என்று நடிப்பில் நடிகர் திலகத்தையே மிஞ்சிவிடும் வேகத்தில் இருந்தவன் தன் மனைவியை மறந்து போனான்.
திருநீறு தட்டோடு வந்து நின்ற மிதுன், பவனைக் கண்டு 'ப்ராடு...... நல்ல அண்ணன், நல்ல தம்பி... இவர் தப்பு செய்தா அவன் துணையா இருக்கான். அவன் தப்பு செய்தா இவர் துணையா நிக்கிரார்!!!... அப்படியே ராமன், லக்ஷ்மண்னு நெனப்பு!!!... இருக்கட்டும்... ரூம்க்கு வரட்டும்... பொய் பேசுற வாயிலேயே சூடு வெக்கிறேன்...' என்று தன்னவனுக்கு தன் பங்கு அர்ச்சனையில் பாதியை தன் மனதிற்குள்ளேயே நிகழ்த்தியிருந்தாள்.
எஸ்.ஐயும் ஓரளவு அனைவரையும் நம்பினார். அவர் கண் முன்னாலேயே கங்காதரன், இருவரையும் ஆசிர்வதித்து விபூதி பூசிவிட்ட பின்னரே அவ்விடம் விட்டு நகர்ந்தார்... கிளம்புவதற்கு முன்பும்,
"எம்மா பொண்ணு... உன்னை யாராவது ஏதாவது வருத்தினா, வீட்டைவிட்டு விரட்டினா என்கிட்ட சொல்லு. நான் பாத்துக்கிறேன்...." என்று அழுத்தமாக இரண்டு முறை கூறிவிட்டு தான் வெளியேறினார்.
எஸ்.ஐ வெளியேறிய மறுநிமிடம் வீடு தலைகீழாக மாறியிருந்தது. பவன் கமலின் சட்டையை பிடிக்காத குறையாக,
"உன்னை யாருடா ஸ்டேஷன் கூட்டிட்டு போக சொன்னது? தேவையில்லாத வேலை பார்த்து வெச்சிருக்கே!!!" என்று குரலை உயர்த்தாமல் கத்தினான்.
கங்காதரனோ கமலை திட்டுவதற்கு பதிலாக பவனை அடக்கினார். "பவன்... முடிந்ததை பேசி பயனில்லை... அமைதியா இரு..." என்றுவிட்டு, அம்முவைப் பார்த்து
"நீ இப்போ என்ன செய்யிறதா இருக்கே?" என்று வினவினார்.
இவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை மாறி, இறுகிய முகத்துடன் வினவியவரைக் காண அம்முவின் மனதில் பயம் தோன்றியது, வார்த்தைகள் வராமல் திக்கினாள்.
"த்த்... த்தெரியலே அங்கிள்... நா... நான்... நான் இங்கிருந்து போகட்டுமா?"
"நீ கமலை விரும்புறேயா?" என்ற அவரது கேள்வியில் மொத்த குடும்பமும் அதிர்ந்து நின்றது.
விமலாவிற்கோ இது என்ன கேள்வி!!! ரெண்டு பேரும் விரும்பி தானே கல்யாணம் செய்துகிட்டாங்க! என்ற யோசனை.
கமலுக்கு அப்பா எப்படி கண்டுபிடித்தார் என்று நினைத்த போதும், ஸ்டேஷன்ல இவ தான் ஓவரா பெர்ஃபாமென்ட்ஸ் கொடுத்தாளே.... அதுலேயே கண்டுபிடித்திருப்பார் என்று சரியாக ஊகித்தான்.
பவன் மற்றும் மிதுன் இருவரும், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தான் இப்படி ஆகியிருக்கும் என்று நினைத்திருக்க, கங்காதரன் கேள்வியில் சற்று அதிர்ச்சியே...
அம்முவிற்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல், அவ்விடத்தில் பொய் சொல்லவும் விரும்பாமல் தலை குனிந்து நின்றாள்.
"அதெல்லாம் இல்லே ப்பா... ஏதோ அந்த எஸ்.ஐ கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காக சொன்ன பொய் தான் அது..." என்று கமல் எடுத்துக் கொடுக்க,
"அதை அந்த பொண்ணு சொல்லட்டும்..." என்று கமலை தன் கடும் சொல் கொண்டு அமைதியடையச் செய்துவிட்டு "
"நீ சொல்லுமா?" என்று அம்முவைப் பார்த்து கூறியவரின் வார்த்தைகளில் இருந்த கனிவு முகத்தில் இல்லை.
கல்லென இறுகி இருந்த முகத்தைக் கண்டு விமலாவே ஒரு நொடி அஞ்சி, அவரது கேள்விக்கு விடை தேடும் பொருட்டு அம்முவின் அருகே சென்றார்...
அம்முவின் தலை கோதி அன்பான குரலில் "நீ சுனோ ஃப்ரெண்டுனு என் மருமக சொன்னாளே! உன் பேர் என்னம்மா?" என்றார்.
"அம்மு.... சாரி... அமுதினி ஆண்ட்டி..."
"சுனோ ஃப்ரெண்டுனா உனக்கு எங்க எல்லாரையும் மொதோவே தெரியுமா?" என்று அதே அன்பே உருவான குரலில் வினவினார்.
"தெரியும் ஆன்ட்டி..."
"அப்போ அவர் சொல்ற மாதிரி நீயும் கமலும்.......!!!!" என்று மீதியை அவளே முடிக்கட்டும் என்று நிறுத்தினார்.
ஆனால் அம்மு வாய் திறந்து எதுவும் சொல்லாமல் நிற்க, "இதுக்கு மேல கேட்க எதுவும் இல்லே விமலா.... இனி நாம அவங்களுக்குத் தேவையில்லே... அவங்கவங்களுக்கு தேவையானதை அவங்களே செய்துக்கிற அளவுக்கு பெரியாள் ஆகிட்டாங்க..." என்று வலியோடு கூறியவர், லோ-ப்ரஷர் காரணமாக தலைசுற்றல் ஏற்பட, அப்படியே பின்னால் இருக்கையில் சரிந்தார்.
விமலா ஒருபுறம் பதறியபடி கங்காதரனை நெருங்க, கமலும், பவனும் ஆளுக்கு ஒருபுறமாக தந்தையை தாங்கியபடி அவரை இருக்கையில் அமர்த்தினர்.
மிதுன்யா விரைந்து அடுக்களை சென்று ஒரு செம்பில் தண்ணீரும், ஒருபிடி சர்க்கரையும் எடுத்து வந்தாள்.
மிதுன்யா கொடுத்த தண்ணீரை அறுந்திவிட்டு, கொஞ்சம் சக்கரையை வாயில் போட்டுக் கொண்டார்.
அம்மு கங்காதரனின் எதிரே வந்து மண்டியிட்டு அமர்ந்து, "அங்கில் நான் கமலை விரும்புறது உண்மை தான். அதுவும் நான் மட்டும் தான்... ஒன் சைட் லவ்... ஆனா இந்த சிட்டுவேஷன எனக்கு ஃபேவரா யூஸ் பண்ணிக்க நெனைக்கலே... சோ நான் போயிடுறேன்.
எனக்கு கமலை பிடிச்சதுக்கு முக்கிய காரணம் நீங்க தான் அங்கில். நீங்க கமல் மேல வெச்சிருந்த நம்பிக்கை. இப்பவும் நான் கமலை விரும்புறேனானு தான் நீங்க கேட்டிங்களே ஒழிய கமல்கிட்ட, அவர் என்னை விரும்புறாரானோ இல்லே ஆன்ட்டி கேட்ட மாதிரி ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விரும்புரிங்களானோ கேட்களே.... அதுவே சொல்லுதே!!!.. உங்களுக்கு உங்க பையன் மேல எவ்ளோ நம்பிக்கைனு
ஒரு பொண்ணா இருந்துட்டு நீங்க கேட்கும் போது ஆமானு சொல்ல ஒரு மாதிரியா இருந்தது. அதான் பதில் சொல்லலே... அதுக்கு மொதோ என்னை... ஐ ஆம் சாரி..." என்று கூறி திரும்பி நடந்தாள்.
கழுத்தில் உள்ள மஞ்சள் கயிறு நினைவில் வர மீண்டும் திரும்பி நின்று கமலைப் பார்த்தபடி அதனை கழற்ற முற்பட, கமல் கைகளை இறுக மூடி தன்னையும் தன் உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு தன் குடும்பத்தாரின் முன்னிலையில் எதுவும் சொல்ல முடியாமல் மறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
பெண்ணவளோ வலியோடு கமலை பார்த்தபடியே கழற்றி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள். அவளது செயல் அனைவருக்கும் மேலும் அதிர்ச்சியைத் தான் கொடுத்தது.
கமலும் தனக்குள் அவ்வலியை உணர்ந்தானோ என்னவோ, ஒருநொடி இதயம் இருந்த இடம் இரும்பு குண்டை சுமப்பது போல் கணத்துப் போக, கையாளாகாத் தனத்தோடு எழுந்து தனதறைக்குச் சென்றுவிட்டான்.
கமலின் வாடிய முகம் கண்ட அன்னை மனம், பவனிடம் என்னவென்று விசாரிக்க, பவன் அந்த பெண்நோயாளி காப்பாற்றப்பட்டது வரை அனைத்தையும் கூறினான்.
"ஆனா கமல் இந்த பொண்ணை கல்யாணம் செய்தா தான் காப்பாத்த முடியும்ன்ற தாட்-க்கு எப்படி வந்தான்னு தெரியலே ம்மா... அம்முவும் நம்ம கமலை விரும்புறது எனக்கு இப்போ தான் தெரியும்." என்று கூறிட,
விமலாவோ "பாவம் ங்க அந்த பொண்ணு..." என்று அம்முவிற்காக வருந்திட,
"அந்த பொண்ணு பேசி, நீ கேட்கலேனு சொல்லு" என்று ஆரம்பித்த கங்காதரன் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறினார்.
"இப்போவும் அம்மு பாவம்னு தான் நான் சொல்லுவேன்... எனக்கென்னவோ அந்த பொண்ணு சொன்னதுல பாதி உண்மை தான்னு தோனுது." என்று கூறியபடி விமலா எழுந்து சென்று அம்மு அவிழ்த்து வைத்த மஞ்சள் கயிற்றை எடுத்துக்கொண்டு பூஜையறை சென்றார்.
கடவுளின் முன்னிலையில் அதனை வைத்து, "தெரிஞ்சோ தெரியாமலோ என் பையன் கையாள அந்த பொண்ணு தாலி வாங்கிட்டா.... அவளையே இந்த வீட்டு சின்ன மருமகளா நீ தான் கூட்டிட்டு வரனும்" என்று மனதார வேண்டிக்கொண்டு மனசஞ்சளம் நீங்க சற்று நேரம் அங்கே அமர்ந்திருந்தார்.
ருத்தேஷ் பசியில் சிணுங்கிட, மிதுன்யா இரவு உணவு தயாரிக்கச் சென்றாள். பவனும் புத்துணர்வு செய்து கொள்ள தனது அறைக்குச் சென்றான்.
அறைக்குள் நுழைந்ததிலிருந்து தன் தம்பியின் செயல்களே அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. 'ஏன் இப்படி செய்தான்!' என்று யோசித்தபடி படுத்திருந்தான்.
சற்று நேரத்தில் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மிதுன் பவனை வெறிக்க வெறிக்க பார்த்தாள்.
"மொறைக்காதே டீ... நானும் உன்னை மாதிரி தான் யோசிச்சுட்டு இருக்கேன்..."
"அது எப்படி டா அண்ணன் தம்பி ரெண்டு பேரும் தப்பு செய்துட்டு இப்படி செய்திருக்கக் கூடாது. இது தப்புனு யோசிப்பிங்க!!! ஒரு பொண்ணோட மனசை புரிஞ்சுக்கவே மாட்டேங்களா!" என்று தன் ஆதங்கத்தை கொட்டினாள்.
"ஏய் போண்டா... எனக்கு எப்படி டி தெரியும் அவன் திடுதிப்புனு அம்முவை கல்யாணம் செய்துப்பான்னு..."
"எனக்காவது என் குடும்பம் துணையா இருந்தது பவன். அந்த பொண்ணு அம்முவுக்கு யார் துணையும் இல்லே. அவளை எப்படியோ போனு விட்டிருக்கக் கூடாது பவன்." என்று கூறி அறையின் வாசல் வரை சென்றவள், "சாப்பிட வா" என்று திரும்பிக்கூடப் பார்க்காமல் கூறிச் சென்றாள்.
கமல் உணவுமேசை வரை வந்தவன், "எனக்கு பசிக்கலே" என்று கூறி தட்டை கவிழ்த்து வைத்தான். அதற்காக அங்கிருந்து எழுந்து செல்லவும் இல்லை. மற்ற மூவரும் கட்டாயத்தின் பேரில் ஏதோ உண்டனர்.
கமலின் அமைதி கண்டு பொறுமையிழந்த மிதுன், மெதுவாக அவன் அருகே சென்று சன்னமான குரலில் "செய்யிறதையும் செய்துட்டு சாரி கேட்க இவ்ளோ யோசிக்கிறே... பேசத் தானே வந்தே... கொட்டிக்க வரலே தானே.... பின்னே ஏன் இன்னும் யோசிச்சுட்டே இருக்க?... சட்டுனு சொல்ல வந்ததை சொல்லு" என்று கமலின் யோசனைக் கண்டு அவனை பேசத் தூண்டினாள்.
கமல் என்ன தான் தப்பு செய்திருந்தாலும், மிதுன்யாவும் அந்த குடும்பத்தினரைப் போல் அதில் ஏதேனும் காரணம் இருக்குமோ என்று யோசிப்பதும் உண்டு... 'நீ சரியான ஃப்ராடு... என்னை கடத்திட்டு வந்து உங்க அண்ணனுக்கு கட்டிவெச்சவன் தானே நீ!!!' என்று எப்போதும் திட்டிக் கொண்டே இருந்தாலும், அவனும் நல்லவன் தான் என்ற எண்ணம் அவளுக்கும் உண்டு.
"ம்ம் அண்ணி." என்று பதில் கூறிவிட்டு "அப்பா நான் அம்முவை கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்"
"உன் மனைவியாவா?"
"அது தான் இல்லேனு ஆகிடுச்சே... அவளோட ஸேஃப்டி-க்காக அவளை நம்ம வீட்ல தங்க வைக்கலாம்னு நெனைக்கிறேன். நீங்க ஓகே சொன்னா இங்கே கூட்டிட்டு வர்றேன்..."
"நோ-னு சொன்னா?"
"நான் அங்கே போய் தங்கிக்கிறேன்... ஜஸ்ட் அ செக்யூரிட்டியா" என்று சட்டென வந்தது அவன் பதில்.
கங்காதரன் மறுப்பேதும் சொல்லாமல் "நானும் வரேன்... சேர்ந்தே போய் கூட்டிட்டு வரலாம்" என்றிட, விமலா ஆளுக்கு முன்னதாக "ம்ம்ம்..." என்று தலையாட்டியபடி எழுந்து நின்றார்.
கங்காதரனின் இல்லத்தில் இருந்து வெளியேறிய அம்மு ஆட்டோ ஒன்றில் ஏறி தன் இல்லம் செல்ல, ரவுடிகளில் ஒருவன் அதனைப் பார்த்து, இன்னொருவனுக்கு அழைத்து அவள் தனியாகச் செல்வதாகக் கூறினான். விஷயம் சொன்ன கையோடு அவளைப் பின்தொடரவும் செய்தான்.
தன் இல்லம் நுழைந்த அம்மு பொருட்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்தும், எதுவும் செய்யத் தோன்றாமல், நேரே சென்று ஒற்றை சாய்விருக்கையில் அமர்ந்து முழங்காலை மடித்து கைகள் வைத்து கட்டிக்கொண்டு அதில் தலை சாய்த்து படுத்துக்கொண்டாள்.
கண்ணீர் கோடுகள் தாறுமாறாய் தடம் பதித்து அவள் முகத்தையே விகாரமாக்கியிருந்தது. உண்ணத் தோன்றாமல், எதையும் எடுத்து அடுக்கத் தோன்றாமல் "அப்பா... அப்பா..." என்று அழைத்தபடி கண்களை மூடிபடுத்துக்கிடந்தாள்.
சற்று நேரத்தில் அது புலம்பலாக மாறியது, "சாரி ப்பா... நான் உங்ககிட்டயே வந்திடுறேன் ப்பா..."
அதனையும் கலைக்கவே கதவு தட்டப்படும் சத்தம் இடியென முழங்கிட அதில் அதிர்ந்து நிமிர்ந்து அமர்ந்தாள் பெண்ணவள். கதவு தட்டும் சத்தம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்திட, மெதுவாக சன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் அம்மு.
பலர் நிற்பது போல் நிழல் தெரிந்திட, அம்முவின் மனதில் முதலில் தோன்றியது தன் வீடு இருக்கும் கோலமும், அதனை இந்நிலைக்கு ஆக்கியவர்களின் முகமும் தான். வியர்வை வழிய சன்னல் அருகே சாய்ந்து நின்று தன் கைகளால் வாயை மூடிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

சீண்டல் தொடரும்.