பலர் நிற்பது போல் நிழல் தெரிந்திட, அம்முவின் மனதில் முதலில் தோன்றியது தன் வீடு இருக்கும் கோலமும், அதனை இந்நிலைக்கு ஆக்கியவர்களின் முகமும் தான். வியர்வை வழிய சன்னல் அருகே சாய்ந்து நின்று தன் கைகளால் வாயை மூடிக் கொண்டு அழத் தொடங்கினாள்.
நிற்க முடியாமல் சரிந்து அமர்ந்தவள், படிகளில் யாரோ இறங்கி வரும் சத்தம் கேட்டு சர்வமும் அடங்கி ஒடுங்கிப் போனாள். படிக்கட்டுகளையே வெறித்துப் பார்த்தவளின் கண்களுக்கு குளுமை பரப்புவது போல் கருவிழிகள் இரண்டிலும் கமல் தென்பட,
"கண்ணா" என்ற இதழசைவோடு ஓடிச் சென்று அவனது நெஞ்சில் தஞ்சமடைந்தாள்.
அவளது நடுங்கிய தேகம் அவனையும் ஏதோ செய்ய, மறுப்பு கூறாமல் தள்ளி நிறுத்தாமல் அவள் தலைகோதி ஆசுவாசப்படுத்தினான்.
இன்னும் கதவு தட்டும் சத்தம் கேட்டபடியே தான் இருந்தது. அவனது அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வாசலை கைகாட்டினாள்.
கமலோ அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு படிகட்டுகளுக்குக் கீழே ஒழிந்து கொண்டு,
"உன்கிட்ட அந்த எஸ்.ஐ நம்பர் கொடுத்தார்ல. கால் பண்ணி அந்த ஆளை வர சொல்லு..."
"டேய் அப்போ நீ சண்டை போடமாட்டேயா? பின்னே என்ன டேஷ்க்கு டா ஹீரோ மாதிரி போஸ் கொடுத்து கட்டிபிடிச்சுட்டு நின்னே!!!"
"அடிங்க.... எவ்ளோ பெரிய கஷ்டத்துல இருந்தாலும், சோகத்துல இருந்தாலும் இந்த வாய் மட்டும் ஏன் டி குறையவே மாட்டேங்குது உனக்கு!!! மொதோ அந்த எஸ்.ஐக்கு ஃபோனைப் போடு டி" என்று வழக்கம் போல் அம்முவிடம் மட்டும் தன் கெத்தைக் காண்பித்தான்.
மறுபக்கம் எஸ்.ஐ அழைப்பை ஏற்று "ஹலோ" என்றவுடனேயே கமல் ஃபேனை பறித்துக் கொண்டான்.
"சார் நான் கமல கண்ணன் பேசுறேன் சார். அமுதினி வீட்டுக்கு நீங்க வர முடியுமா சார். யாரோ ரவுடிங்க வெளியே நின்று கதவை உடைக்கிறாங்க சார்."
எஸ்.ஐ சற்று நேரம் யோசித்துவிட்டு "நீ ஏன் அந்த பொண்ணு வீட்டுக்கு போனே! உங்களை உங்க வீட்ல எதுவும் சொன்னாங்களா?" என்று சந்தேகமாக வினவினார்.
"இல்லே சார்... நானும் அம்முவும் அவ திங்கஸ் காலி பண்ணி எடுத்துட்டு போக வந்தோம்... இங்கே வந்து பாத்தா அல்ரெடி எல்லா திங்கஸ்-உம் கலஞ்சி கெடக்கு... போதாதுனு இப்போ ரவுடிங்க மாதிரி ஐஞ்சாறு பேர் சேர்ந்து கதவை தட்டுறாங்க சார்.... நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்..." என்றான்.
மீண்டும் எஸ்.ஐயின் பக்கம் பலத்த யோசனை. "நீங்க பயப்படாதிங்க... நான் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி, அவரை வந்து பாக்க சொல்றேன்."
"ரெம்ப தாங்க்ஸ் சார்... கொஞ்சம் சீக்கரம் சார்...." என்று பவ்வியமாக பேசி முடித்தான்.
அம்முவோ தலையில் கை வைத்து அமர்ந்து "ஐயோ... உன்னை ஹீரோ லெவலுக்கு மாஸ்ஸா நெனச்சேனே... கடைசிலே இப்படி காமெடி பீஸ்ஸா இருக்கேயே டா!!!" என்று புலம்பிட,
கமலோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் காதுகளைத் தீட்டி வெளியே என்ன பேசுகிறார்கள் என்று உண்ணிப்பாக கவனிக்கத் தொடங்கினான்.
ரவுடிகளில் ஒருவன் மட்டும் ஜன்னல் அருகே வந்து நோட்டமிடுவது தெரிந்திட, இடது கையால் அம்முவை வளைத்துப் பிடித்து அவளது வாயை மூடி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
ஜன்னலின் அருகே நின்றிருந்த கமலின் வில்லன், அம்முவின் காதலுக்கு அவனுக்கே தெரியாமல் உதவி செய்த நல்லவன்
... மற்றொருவனைப் பார்த்து 'உள்ளே யாரும் இல்லை' என்று சைகை செய்தான்.
மிகவும் சன்னமான குரலில், "மாடி வழியா உள்ளே இறங்கு..." என்று கட்டளைக் குரல் வர, ஜன்னல் அருகே நின்றிருந்தவன் தலையசைத்துவிட்டு நகர்ந்தான்.
அம்மு ஒருநொடி உறைந்து போனாள். "கண்ணா... நீ இங்கேயிருந்து போ... நான் இவங்க கையாள சாகனும்னு இருந்தா, அது தான் என் தலையெழுத்துன்னா அதை யாரால மாத்தமுடியும்... நீ போ..." என்று அவனை விரட்டிவிட நினைத்தாள்.
அவளது புலம்பல் எதுவும் அவன் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவள் ஒருபுறம் பேசிக்கொண்டே இருக்க,
"உன் பேக்ல சர்ஜிக்கல் நைஃப் இருக்கா?" என்றான்.
அம்முவிற்கு பேச்சு எழவில்லை. திக்கி தினறி, "கண்ணா.... அத்... அது... ரெம்ப ஷார்ப்பா இருக்கும்... கையிலேயோ, கழுத்திலேயோ லைட்டா கீறினாக்கூட உயிர் போயிடும்.... அது வேண்டாம்.... நான் வேணுனா கிட்சன் நைஃப் எடுத்து தரட்டுமா?"
அவள் முகத்திற்கு நேரே திட்டுவது போல் கை நீட்டி, "உனக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லேயா டி!!! கொஞ்சம் விட்டா அவனுங்க நம்மலை மார்ச்சுவரிக்கே அனுப்பிடுவானுங்க.... நீ அவனுங்க உயிர் போயிடும்னு கவலைப்படுறே!!!" என்று அதட்டினான்.
"யாரா இருந்தாலும் அதுவும் உயிர் தானே கண்ணா... ஊருக்கு ரவுடியா இருந்தாலும் அம்மாவுக்கு புள்ள... அவனோட புள்ளைக்கு அப்பா இல்லேயா!!!." என்று வருந்தும் குரலில் கூறினாள்.
கமலோ 'உயிரை காப்பாற்றும் படிப்பு படித்திருக்கிறாய் அல்லவா அப்படித்தான் யோசிப்பாய்!!!' என்பது போல் ஓர் பார்வை பார்த்துவிட்டு கண்களால் நோட்டமிடத் தொடங்கினான்.
மேலும் அம்முவே தொடர்ந்தாள். "அதுவும் இல்லாம அந்த நைஃப் ரெம்ப சின்னது... அழுத்தி பிடிச்சேனா உன் கையிலேயே கிழிச்சிடும்...." என்று அவனையும் நினைத்து உரைக்க,
"காயம் பட்டுச்சுனா நீ வைத்தியம் பாரேன் டி... அதுக்கு தானே MBBS படிச்சே..." என்று கூறி அவனே எழுந்து சென்று அவளது பையைத் துளாவினான்.
அதில் பெப்பர் ஸ்ப்ரே, பாடி ஸ்ப்ரே, பெய்ன் கில்லர் ஸ்ப்ரே, சில மாத்திரை அட்டைகள், விக்ஸ், ஆன்டிஃப்ளூ(antiflu) மிட்டாய் மற்றும் சிறிய ப்ளாஸ்டர் முதல் பெரிய பேண்ட் எய்ட் ப்ளாஸ்டர் வரை விதவிதமாக அடுக்கி வைத்திருந்தாள். அவன் தேடிய சர்ஜிக்கல் நைஃப்-உம் இருந்தது. தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அவளிடம் வந்தான்.
பெப்பர் ஸ்ப்ரே டின்னை அவள் கையில் கொடுத்துவிட்டு,
"என்ன டி இது? பேக்ல மினி மெடிக்கல் ஷாப்பே வெச்சிருக்கே!!!" என்று அவளை கலாய்க்கவும் மறக்கவில்லை.
"ஹல்லோ மிஸ்டர். கமல கண்ணன், இந்த மினி மெடிக்கல் ஷாப் தான் இன்னைக்கு உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கு... அதுக்கு நீங்க நியாயப்படி எனக்கு தாங்க் பண்ணனும்..." என்று சிலுப்பிக் கொண்டாள்.
"நல்ல மரியாதை.... தாலி கழுத்துல இல்லேங்கவும் எப்படி பேசுறா பார்!!!" என்று கமல் தனக்குத் தானே புலம்பிட,
"தாலி கழுத்துல இருந்தாலும் அப்படித் தான் பேசுவேன்... போடா..... நான் என்ன உங்க கொள்ளுபாட்டியா? புருஷனை பேர் சொல்லக் கூடாதுனு சூசகமா பாட்டுபாடி காட்டுறதுக்கு!!!"
"ஐயோ ஆண்டவா..... இந்த பொண்ணுங்க வாய்பேச்சை குறைக்க எந்த மிஷினும் இல்லேயா!!!" என்று இறைவனோடு இயந்திரத் துணையைத் தேடினான்.
"வெள்ளக்கார துறை நீங்க கண்டுபிடிங்களேன்.... லண்டன் ரிட்டன்!!!" என்று உடனுக்குடனே பதிலுக்கு பதில் பேசினாள்.
"உன் பேச்சை கேக்குறதுக்கு...அந்த ரவுடிப்பசங்க எவ்வளவோ பெட்டர்.... நான் அவனுங்ககிட்டயே போறேன்.... போடி" என்று கூறி மெதுவாகப் படியேறினான்.
"ஏய்.... கண்ணா நில்லு தனியா போகாதே.... இரு நானும் வரேன்" என்று அவளும் பின் தொடர்ந்தாள்.
"இவ பெரிய வீரங்கனை... இவளை துணைக்கு கூட்டிட்டுப் போக!!!..."
"ஏன் என் வீரத்துக்கு என்ன? நானும் ஸ்கூல் டேஸ்ல கராத்தே கத்துக்கிட்டேன்.... தெரியுமா?"
"பார்த்தேனே உன் பராத்க்ரமத்தை.... ஹான்ட் பேக்ல ஒரு பொண்ணோட சேஃப்ட்டிக்கு என்னென்ன வேணுமோ எல்லாமே இருக்கு... ஆனாலும், கையில எதையும் எடுக்காம அழுத்துட்டு உக்காந்திருந்தேயே.... அதுலேயே தெரியுது!!! உன் தைரியம்" என்று அவனும் கலாய்த்தான்...
"அது ஏதோ என் அப்பாவை நெனச்சு கொஞ்சம் கவலைல இருந்தேன்... அதான் கொஞ்சம் கண்ணு வேர்த்துடுச்சு... மத்தபடி நான் தைரியமான பொண்ணு தான்..." என்று அவள் சொல்லி முடிக்க, மொட்டை மாடி வழியாக இறங்கி வந்த தடியன் அவள் முன்னே வந்து நின்றான்.
பயத்தில் கையிலிருந்த ஸ்ப்ரே பாட்டிலை உபயோகித்து அவனிடம் இருந்து தப்பித்தாள். அதனைக் கண்ட கமல் 'ஆஆஆவென' வாய் பிளந்து அம்முவைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
கமலின் வெறித்த பார்வையில் திருதிருவென முழித்தவள், தன்னை தானே விட்டுக்கொடுக்க விரும்பாமல், "என்ன பாக்குற... ஸ்ப்ரே பண்ணி வேஸ்ட் பண்ண வேண்டாமேனு தான்... அடிச்சேன்..." என்று பெரிய அறிவாளி போல் தலையைத் தூக்கி கூறினாள்.
கமலோ 'அய்யோ... அய்யோ... அய்யோ...' என்று தலையில் அடித்துக் கொண்டான். ஏனென்றால் டாக்டர் மேடம் ஸ்ப்ரேவை அப்படி பயன்படுத்தியிருந்தாள்.
திடுதிப்பென்று எதிரில் வந்து நின்ற தடியனைக் கண்டவுடன், மூளை செயலிழந்து, பயத்தில் கையில் இருந்த ஸ்ப்ரே டின்னைக் கொண்டு அவன் தலையில் நங்கு நங்கென்று அடித்தே அவனை மயங்கச் செய்திருந்தாள்.
கமல் அம்முவை பிரம்பிப்பாக பார்த்துக் கொண்டிருந்த போதே அவனது திறன்பேசி அழைக்க எடுத்துப் பார்த்தான். பவன் தான்,
"சொல்லு டா"
"டேய் எவனோ ஒருத்தன் மாடியேறி வர்றான் டா, பீ கேர் ஃபுல்"
"ஹான்.... நாங்க மாடில தான் இருக்கோம்... அந்த தடியனை இவ அடிச்சே சாவடிச்சுட்டா.... கொலகாரி..."
"டேய்!!! அந்த பொண்ணு அம்முவுக்கு ஒன்னும் இல்லேயே!!!"
"அவளுக்கு என்ன! நல்லா குத்துகல்லாட்டம் தான் இருக்கா..."
"இப்போ என்ன ப்ளான்? நான் வரட்டுமா?"
"இல்லே டா பவன்... நான் அந்த எஸ்.ஐக்கு போன் பண்ணி ஹெல்ப் கேட்டிருக்கேன்... நீங்க அங்கேயே இருங்க..."
"அந்த ஆளை ஏன் டா அழச்சே... திரும்பவும் அந்த ஆள் முன்னாடி நடிக்கனுமா?" என்று டென்ஷனாகக் கத்தினான்.
"இப்போ அவர் வர்றது தான் நல்லது... வீட்டை நேர்ல பாத்திருந்தா நீயே அந்த முடிவு தான் எடுத்திருப்பே... சரி நீங்க யாரும் எந்த காரணத்தைக் கொண்டும் காரைவிட்டு வெளியே வராதிங்க... புரியுதா!"
"சரி ஓகே டா... நீயும் கேர் ஃபுல்-ஆ இரு..." என்று கூறி இணைப்பைத் துண்டித்தான் பவன்.
காருக்குள் இருந்து அனைவரும் பவனை ஆர்வமாக பார்த்திட, கமலிடம் பேசியவற்றை கூறினான்.
அங்கே அம்மு கமலிடம், "உன் அண்ணா வந்திருக்காங்களா?" என்றாள்.
"அண்ணா மட்டும் இல்லே... மொத்த குடும்பமும் தான் வந்திருக்கு" என்று மெதுவாக கீழே வாசலில் ரவுடிகள் நிற்கிறார்களா என்று எட்டிப் பார்த்தபடி கூறினான்.
"எதுக்கு!!!!?...."
"உன்னை அழச்சிட்டு போகத் தான்."
"எங்கே?"
"ஹாங்... உன்னை உன் மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போறதுக்கு... கேள்வியைப் பார் கேள்விய!!! என் வீட்டுக்கு தான்...." என்று அவளுக்கு நக்கலாக பதிலுரைத்துவிட்டு
"கேள்வியா கேட்டு கொல்றா மனுஷனை...." என்று புலம்பித் தவித்தான்.
அம்முவோ சின்ன சிரிப்போடு மெல்லியதாக முகம் சிவந்தபடி கமலைப் பார்க்க, அப்போது தான் அவன் தான் கூறியதை உணர்ந்தான்.
கண்கள் நான்கும் கதைத்துக் கொள்ள ஆணவனோ, ஆணவப் பார்வையோடு, "என்ன லுக்கு...? கடுப்புல சொன்னது தான் அது... திரும்பவும் தாலி கட்டுவேன்னு மட்டும் நெனைக்காதே..." என்று வீராப்பாய்க் கூறினான்.
"நீ ஒரு முறை கட்டினதே போதும் கண்ணா... இன்னொரு முறை கட்டனும்னு தோனுச்சுனா என்னை கட்டிக்கோ!!!" என்று சிரித்துக் கொண்டே கூறி அவனை வம்பு செய்தாள்.
"நல்லா நாலு சாத்து சாத்துறேன்... வா" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
அதற்குள் இரண்டு ரவுடிகள் ஆளுக்கொரு பக்கமாக இரண்டு புறமும் சன்சேட்டில் ஏறிட, கமல் ஒருபக்க மதில் சுவரின் அருகே சென்று, அந்த ரவுடி மதிலில் ஏறிய நேரம் அவனது மூக்கில் குத்திட குருதி வடிந்தபடி மயங்கி சரிந்தான் ஒரு தடியன்.
அதற்குள் மற்றொருபுறம் ஏறியவன் அம்முவை நெருங்கிட, அவனை நோக்கி ஓடிவந்து நடுவில் கிடந்த பீப்பாயின் மேல் ஏறி ஏரில்(air) பறந்து முழங்காலை மடித்து ரவுடியின் நெஞ்சில் குதித்தான் கமல்.
அம்மு உற்சாக மிகுதியில் நாக்கை உள்புறம் மடக்கி, இரு விரல்களை அதன் மேல் வைத்து விசில் அடித்திட அந்த சத்தம் ஊரையே கூட்டியது.
கமல் விழுந்தடித்துக் கொண்டு அவளின் அருகே வந்து அவள் கையோடு சேர்த்து வாயையும் அடைத்தான்...
"பைத்தியகாரி... இப்போ எதுக்கு டீ இப்படி ஊரையே கூட்டுறே!!! டாக்டருக்கு படிச்சிட்டு ரவுடி மாதிரி பிகேவ் பண்ணுறே!!! என்ன பொண்ணு டி நீ!!!" என்று எதற்கெல்லாமோ சேர்த்து வைத்து திட்டினான்.
"கண்ணா அப்பப்போ இப்படி நியாபகப்படுத்திட்டே இரு... அப்பறம் மறந்திடுவேன்..." என்று அவள் அவனின் கோபத்தை சிறிதும் மதிக்காமல் கூறினாள்.
கமல் குழப்பமாக பார்த்தபடி "எதை!!! நீ பொண்ணுன்றதையா? இல்லே டாக்டர்ன்றதையா?" என்றான்
"ரெண்டையும் தான்..." என்றிட, அவளை நன்றாகவே முறைத்தான் கமல்.
மீதம் இருந்த இரண்டு ரவுடிகளும் கதவை உடைக்க முயற்சி செய்ய, சரியாக போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் ஒலிக்கத் தொடங்கியது. கமல் தடதடவென படிகளில் இறங்கி, கதவைத் திறக்கச் சென்றான்.
சைரன் சத்தத்தைக் கேட்டு ஓட்டமெடுக்க நினைத்த ரவுடிகளின் முன்னால் பவன் வந்து நிற்க, பின்னால் கதவைத் திறந்து கொண்டு கமல் வந்து நின்றான்.
ரவுடிகள் இனி தப்பிக்க முடியாது என்று தெரிந்ததும் அமைதியாய் போலீஸிடம் சரணடைந்தனர். இன்ஸ்பெக்டருடன் வந்திருந்த கான்ஸ்டபுல் மற்றவர்களை அழைத்து வர உள்ளே சென்றார்.
கமல் பவனைப் பார்த்து "நீ ஏன் டா இங்கே வந்தே? உன்னை தான் அங்கே அண்ணி, அப்பா, அம்மாக்கு துணையா இருனு தானே சொன்னேன்!!!" என்று காதிற்குள் கடிந்தான்.
"பின்னே அவனுங்க தப்பிக்க ட்ரை பண்ணும்போது வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றேயா?" என்று அவனும் பதிலுக்கு கடிந்தான்
அதற்குள் உள்ளிருந்தா கான்ஸ்டபுல் குரல் கொடுத்தார்.
"டேய்... அந்த பொண்ணை விட்டுடு..." என்று சத்தம் கேட்டிட,
பதறியடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர், கமல் மற்றும் பவன் மூவரும் உள்ளே விரைந்தனர்.

சீண்டல் தொடரும்