"டேய்... அந்த பொண்ணை விட்டுடு..." என்று சத்தம் கேட்டிட,
பதறியடித்துக் கொண்டு இன்ஸ்பெக்டர், கமல் மற்றும் பவன் மூவரும் உள்ளே விரைந்தனர். அவர்கள் உள்ளே விரைந்து ஓடுவதை சற்று தொலைவில் நின்றிருந்த காரில் இருந்து பவனின் குடும்பம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே அவர்களும் என்னவோ ஏதோ என்று விரைந்தனர்.
மாடியில் அம்முவின் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான், அவள் கையால் அடிவாங்கிய தடியன்.
கமலும், பவனும் ஒருவருக்கு ஒருவர் கண்காண்பித்துக் கொள்ள, பவன் அந்த ரவுடியை முறைத்தபடியே அடிமேல் அடி வைத்து அவனை நெருங்கினான்.
"கிட்ட வராதே... இன்னு ஒரு அடி முன்னாடி வந்தே.... இவ சங்க அறுத்து போட்டுட்டு போயிட்டே இருப்பேன்..." என்று அந்த ரவுடி சன்னமான குரலில் மிரட்டினான்.
அதற்கும் பவன் சற்றும் அசராமல் நக்கலாக சிரித்தபடி அவனை நெருங்கினான்.
"என்ன!!! செய்ய மாட்டேன்னு நெனைக்கிறேயா!" என்று அம்முவின் கழுத்தை அழுத்தினான்.
அதற்குள் கமல் பவனிடம், "பவன் வேண்டாம்... சொன்னா கேளு" என்று குறுக்கே புகுந்து அவனை தடுப்பது போல் தடுக்க, பவனும் கமலை தள்ளிவிடுவது போல் பக்கவாட்டில் இரண்டு முறை தள்ளிவிட்டான்.
"டேய்... என்ன ரெண்டு பேரும் ஆட்டம் காமிச்சிட்டு இருக்கிங்க... ஒரே சொருகு..." என்று கூறியபடி கத்தியை திருப்பிப் பிடித்து, அம்முவின் வயிற்றை குறிவைக்க, அதற்குள் பவன் கமலை பலமாக அந்த ரவுடியின் மேல் தள்ளிவிட்டான்...
கமலும் தூக்கியிருந்த ரவுடியின் கையை தாவிப்பிடித்து முறுக்கி பின் பக்கம் கொண்டு சென்று தரையில் தள்ளி கோபம் குறையும் மட்டும் அந்த ரவுடியை அடி அடியென அடித்தான்.
இன்ஸ்பெக்டர் கமலை தடுத்து நிறுத்தி அந்த ரவுடியோடு சேர்த்து மற்றவர்களையும் தன் வாகனத்தில் ஏற்றினார்.
இங்கே மிதுன்யா அம்முவை அணைத்தபடி உள்ளே அழைத்துச் சென்று தண்ணீர் பருகக் கொடுத்தாள். அவர்களைத் தொடர்ந்து கங்காதரனும், விமலாவும் ருத்துவுடன் உள்ளே வந்தனர். வீடு இருந்த கோலம் இப்போது இங்கே வரவில்லை என்றால், அம்முவின் நிலையும் இது தான் என்று இடித்துரைத்தது.
தண்ணீர் கோப்பையை கைகள் நடுங்கியபடி வாங்கி அருந்திய அம்முவை மிதுன்யா அணைத்துக் கொண்டு,
"ஒன்னு இல்லே டா... எல்லாம் சரியாகிடுச்சு... அவ்ளோ தான்.." என்று ஆருதலாகப் பேசினாள்.
போலீஸிடம் சில விவரங்களை கூறிவிட்டு கமலும், பவனும் உள்ளே வந்தனர்.
மிதுன்யா சிதறிக் கிடந்தவற்றை எடுத்து வைக்க முற்பட, கமல் தடுத்தான்.
"அண்ணி... எதையும் தொடாதிங்க... இங்கே நடந்தது எதுவும் தெரியாத மாதிரி இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லிருக்கோம்... போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்லெய்ண்ட் கொடுக்க சொல்லிருக்காரு... சோ நீங்க யாரும் எதையும் தொடாதிங்க...." என்று கூறினான்.
"இந்த கிரிமினல் மைண்ட்க்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லே..." என்று மிதுன் கூறிட, கமலின் பெற்றோர் முதல் கொண்டு வாய் மூடி, வந்த சிரிப்பை அடக்கினர்.
"என்னை கேலி பேசாறதுனா எல்லாரும் ஒன்னு சேர்ந்துப்பிங்களே!" என்று கமலும் பொய்க்கோபமாய் கூறிவிட்டு, அம்முவைப் பார்த்து
"ரெஸ்ட் எடுத்தது போதும்... வா போலீஸ் ஸ்டேஷன் போகனும்." என்று அழைத்தான்.
"மறுபடியுமா!!! மொதோ இருந்தா!!" என்று அம்மு அதிர்ச்சியாக வினவினாள்.
"இது உன் வீடு தானே... நீ தான் கம்ப்ளைண்ட் கொடுக்கனும்... சீக்கிரம் வா" என்று அம்முவை விரட்டினான். மற்றவர்கள் முன்னிலையில் கமலை கலாய்க்க விரும்பாமல் சரி என்று தலையசைப்போடு விட்டாள்.
"அப்போ நீங்க கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு நம்ம வீட்டுக்கு வந்திருங்க" என்று கங்காதரன் கமலிடம் கூறிவிட்டு,
அம்முவிடம் "ப்ரச்சனை சரியாகுற வரைக்கும் நீ இங்கே இருக்க வேண்டாம் ம்மா... நம்ம வீட்ல தங்கிக்கோ... அதுக்குள்ள உங்க அப்பா, அம்மாவைப் பார்த்து பேசி சமாதானம் செய்யப் பாக்குறேன்..." என்றிட,
விரக்தியாக புன்னகைத்தபடி "தேங்க்ஸ் அங்கில்..." என்றாள்.
அம்முவும் கமலும் மட்டும் மீண்டும் ஸ்டேஷன் சென்று கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு, கான்ஸ்டபுலுடன் மீண்டும் வீட்டிற்கு வந்து அவளது வெள்ளை கோர்ட், ஸ்டெத் மற்றும் சில அத்தியாவசிய தேவைகளை மட்டும் எடுத்துக்கொண்டு கமலின் இல்லம் வந்தனர்.
வரும் வழியில் அம்மு அமைதியாக வர, "என்ன அதிசயமா இருக்கு!!! அமைதியா வர்றே!" என்று ஆரம்பித்து வைத்தான் கமல்.
அப்போதும் அம்மு அமைதியாகவே "ஒன்னு இல்லே" என்றாள்.
"என்னாச்சு? என் வீட்ல எல்லாரும் எப்படி நடந்துப்பாங்கனு யோசிக்கிறேயா?"
"குறிப்பா உங்க அப்பா!" என்று அமைதியாகவே பதிலளித்தாள்.
"எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு... போக போக புரிஞ்சிப்பே... ஆனா யாரையும் தப்பா நெனச்சிடாதே... ஓகே வா" என்றான்.
வந்ததில் இருந்து இப்போது தான் அவளிடம் அமைதியாகப் பேசுகிறான்... இல்லை என்றால், சரிக்கு சரி மல்லுகட்டு தான். அவளும் தான் அவன் கூறியதை முதல்முறையாக ஆமோதிக்கிறாள்.
அங்கே மிதுன்யாவோ இவர்கள் வருவதற்கு முன்பே இருவருக்கும் இரவுணவுக்கு சட்டினி அறைத்து வைத்ததோடு, அனைவருக்கும் பால் காய்ச்சி அறைக்குச் சென்று கொடுத்துவிட்டு, அப்படியே ருத்துவையும் உறங்க வைத்துவிட்டு மீண்டும் அடுக்கலை நுழைந்தாள். கொஞ்சமாக மீந்திருந்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு இருவருக்குமாக காத்திருந்தாள்.
கமல் உள்ளே நுழைந்ததுமே "அண்ணி பசிக்கிது...." என்று அடுக்கலையில் இருந்த மிதுன்யாவிற்கு சத்தம் கொடுக்க, அவளோ தண்ணீர் ஊற்றி வைத்த சாதத்தோடு வந்தாள். அதனைக் கண்டு அதிர்ந்து "அண்ணிஈஈஈ...." என்று பதறினான்.
"அப்போவே சாப்பிட சொன்னதுக்கு வேண்டாம்னு சொன்னேல... நல்லா வேணும் உனக்கு... இது தான் வீட்ல இருக்கு..." என்று முறைத்துக் கொண்டே கூறினாள்.
அவளை பாவம் போல் பார்த்தான் கமல். "நடிக்காதே டா... கண்ணை நோண்டி எடுத்திடுவேன்..." என்று தோசைக் கரண்டியை அவன் முன் நீட்டினாள் மிதுன். அவனும் அமைதியாக முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு உணவு மேசையில் அமர்ந்தான்.
அது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அம்மு கமலை பாவம் போல் பார்த்தாள்.
"நீ வா அம்மு... உனக்கு தோசை ரெடி" என்று அம்முவை அழைத்து கமலுக்கு எதிரே அமர வைத்தாள்.
"அக்கா... நான் வேணுனா அதை சாப்பிடுறேன்.... தோசையை அவனுக்... சாரி அவருக்கு வைங்க" என்று பவ்வியமாக உரைத்தாள்.
"நீ இந்த வீட்டு விருந்தாளி... உனக்கு பழசு வெச்சா நல்லாயிருக்காது... நீ தோசையை சாப்பிடு..." என்று அவளை உண்ணக் கோரிவிட்டு தோசை வார்க்கச் சென்றாள்.
கமல் அம்முவின் தட்டிலிருக்கும் தோசையை பிடிங்கித் தின்க, கத்துவதற்கு வாய் திறந்தவளை,
"கத்தினே கொன்னுடுவேன்..." என்று மிரட்டி முழு தோசையை இரண்டே கவலத்தில் விழுங்கினான். அவன் உண்ணும் விதத்திலேயே அவனது பசி அறிந்து அவளும் அமைதியானாள்.
மிதுன் தோசை எடுத்து வரும்போது மட்டும் தன் தட்டில் இருப்பதை சாப்பிடுவது போல் பாசாங்கு செய்தான்.
நான்காம் தோசை எடுத்து வரும்போது, "அம்மு கொஞ்சம் பொறுமையாவே சாப்பிடு... நீ பசி ஆறுகிறவரை நான் தோசை ஊத்துறேன்... அவசர அவசரமா சாப்பிட்டு விக்கிக்கப் போகுது... இவன் கண்ணு பட்டுச்சுனாலே நெஞ்சு அடச்சிக்கும்..." என்று கமலை பார்த்து முறைத்தபடி கூறினாள் மிதுன்.
கமலோ ஈஈஈஈ என இழித்து வைத்தான். பதிலுக்கு முகத்தை சுழித்து கொன்னை வைத்துவிட்டுச் சென்றாள் மிதுன்.
தோசையில் வயிற்றை நிறைத்தவன், சாதத்தை மீதம் வைத்து "அண்ணி எனக்கு போதும்.." என்று கூறி கை கழுவிக் கொண்டு தனதறைக்குச் சென்றுவிட்டான்...
அவன் எழுந்து சென்றபின் நான்கு தோசைகளை வார்த்து எடுத்து வந்தாள் மிதுன்யா... கடைசி தோசை உண்டு கொண்டிருந்த அம்முவின் அருகே வந்து அமர்ந்த மிதுன்யா, "கமல் எத்தனை தோசை சாப்பிட்டான்?" என்றாள்.
"இ... இல்லியே... அவர் சாப்பிடல.. நான் தான் சாப்டேன்..."
"அவன் உன்கிட்ட பிடிங்கி சாப்பிட்டது எனக்கும் தெரியும்... சரியா சாப்பிட்டானா இல்லே கம்மியா சாப்பிட்டானானு தெரிஞ்சுக்கிடத் தான் கேக்குறேன்.... சொல்லு..." என்றிட
"ஆறு" என்று பதில் கூறிவிட்டு, "உங்க குடும்பத்துல எல்லாருமே இப்படி தானா?.." என்றவளின் கேள்வியையும் தாண்டி கண்கள் அரைமெண்டல் என்ற கேலி நிறைந்திருக்க,
அவளை முறைத்துப் பார்த்தாள் மிதுன். "சாரி..." என்று அம்மு உரைக்க, "நீயும் இந்த குடும்பத்துல ஒரு ஆளா ஆனா தான் அதை புரிஞ்சுக்க முடியும்..." என்று சிரித்தபடியே கூறிவிட்டு அதற்கு விளக்கமும் கொடுத்தாள்.
"மாமாவுக்கு உன்னையும், உன் குடும்பத்தையும், எப்படி ஃபேஸ் பண்றதுனு தான் கவலை." என்று ஆரம்பித்து தன் கல்யாணம் நடந்த கதையைக் கூறினாள்.
"கமல், தான் செய்த தவறை உணர்ந்து அவனே அதை சரி செய்யனும்... அதான் மாமாவோட எதிர்பார்ப்பு... நீ போறேன்னு சொல்லும்போதே கமல் உன்னை தடுப்பான்னு நெனச்சாரு... ஆனா அவன் அமைதியா இருக்கவும் மாமாவும் உன்னை தடுக்கலே... என்னோட கோபமும் அது தான். கமல் உன்னை தடுத்திருக்கனும்... ஆனாலும் அவனைப் பத்திதான் எனக்கும் தெரியுமே... எப்படியும் உன்னைத் தேடி வருவான்னு நெனச்சேன்..." என்றாள்.
அனைத்தையும் கவனித்த அம்முவின் மனதில் பெரும் குழப்பம் எழுந்தது. குழப்பம் என்பதை விட சந்தேகம் என்று சொல்லலாம்.... ஆனால் அதை கேட்கலாமா கூடாதா என்று யோசித்தபடி உண்டு முடித்துவிட்டு, மிதுன்யாவோடு இணைந்து அடுப்பு மேட்டை சுத்தம் செய்துவிட்டு, இருவருமாக பாத்திரம் தேய்த்து விட்டு உறங்கச் சென்றனர்.
"இங்கே உனக்கு எந்த பயமும் தேவையில்லே... ஹாஸ்பிட்டல்ல ஏதாவது ப்ராப்ளம் வந்தாலும் மாமா, பவன், கமல் யாருகிட்ட சொன்னாலும் உனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க... சரியா? இப்போ நிம்மதியா தூங்கு..."
"ம்ம்ம்... அக்கா எனக்கு ஒரு சந்தேகம்!!" என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.
"என்ன?"
"இல்லே.... கமல் தன் தப்பை தானே சரி செய்யனும்னு சொன்னிங்கல்ல... கமல் என்னை ஏத்துகிட்டா எல்லாரும் என்னை ஏத்துப்பிங்க... அதுல எந்த சந்தேகமும் இல்லே... ஆனா ஒருவேளை கமல் என் அம்மாகிட்ட பேசி என்னை அங்கே அனுப்பி வெச்சிட்டா, அதுக்கும் எல்லாரும் சம்மதம் சொல்லிடுவிங்களா? எனக்கு யாரும் சப்போர்ட் பண்ணமாட்டிங்களா?"
"ச்சீ... இதென்ன கேள்வி... சந்தேகமே வேண்டாம்... கண்டிப்பா அனுப்பி வெச்சிடுவோம்..." என்றிட அம்மு 'ஹான்' என்று வாய்பிளந்தாள்.
அவளது முக பாவனையில் சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டே எதுவுமே தெரியாதது போல் "இப்போ போய் தூங்கு... எதையும் யோசிக்காதே சரியா!!" என்று அவளது அறைக்கு அனுப்பி வைத்தாள்.
நடுநிசியில் கமலின் அறையில் தொலதொல மேல் சட்டையும், கால்களை விட பெரிதான கால்சட்டையும் அணிந்திருந்த ஒரு உருவம் இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருந்து. தலையணையை எடுத்து கமலின் அருகே நெருங்கிய அந்த உருவம், அவனை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்க, ஏதோ ஒரு உள்ளுணர்வில் கமல் சட்டென எழுந்து அமர்ந்தான். அவனிடம் இதனை எதிர்பார்த்திடாத அந்த உருவம் அவனை தாக்கத் தொடங்கியது.

சீண்டல் தொடரும்.