• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சீண்டல் 8

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
சுனைனாவிற்கும், அபிக்கும் தனி அறை இல்லாமல் போக, சுனோ தன் தோழி அம்முவுடன் தங்கிக் கொள்வதாகக் கூறி அபியை கமலின் அறைக்கு அனுப்பி வைத்தாள்.

அம்முவின் அறைக்குள் நுழைந்த சுனைனாவைக் கண்டு,

"ஹேய் சுனோ.... ஏன் டி நீங்க வர்றிங்கனு எனக்கு ஒரு மெசேஜ் பண்றதுக்கு என்ன? இப்போ அவன் என்னை எப்படியெல்லாம் கடிச்சு கொதறப் போறான்னு தெரியலே!!" என்று நகத்தைக் கடித்தபடி பதறினாள் அம்மு.

"பார்றா!!! அந்த கமலுக்கெல்லாம் பயப்படுற ஆளா நீ!!! அத்தனை பேர் முன்னாடியும் தைரியமா பேசிட்டு இங்கே தனியா பாக்கும் போது பயப்படுற மாதிரி நடிக்கிறேயா!!!" என்று நக்கல் பேசினாள் சுனோ.

"ஐயோ சுனோ ப்ராமிஸ்ஸா நான் யாரையும் கவனிக்கலே... ரூம்க்குள்ள அவன் மட்டும் தானே இருக்கப் போறான்னு நெனச்சு, வந்ததும் வராததுமா என் ஓட்ட வாயை தொறந்துட்டேன்.... அப்பறம் தான் உள்ளே இருந்த கூட்டத்தையே கவனிச்சேன்.

நின்னு நிதானமா பார்த்திருந்தேன், அவ்ளோ தான் என்னை அங்கேயே கடிச்சு கொதறிடுப்பான் உன் ஃப்ரெண்டு... அதுவும் இல்லாம பதட்டத்துல எதுக்கு வந்தேன்ற உண்மைய வேற உலறிக் கொட்டி இப்போ இன்னும் வசமா அவன்கிட்ட மாட்டிக்கிட்டேன்....." என்று உண்மையாகவே பதறினாள்.

"சரி விடு... அதான் நாங்கெல்லாம் இருக்கோம்ல... நீ தனியா அவன்கிட்ட மாட்டிக்காம பாத்துக்கிறோம்..." என்று தோழிக்கு தைரியம் சொல்லிவிட்டு, மெல்ல அவள் காதருகே,

"ஆமா உன் ட்ரெஸ் எப்படி அங்கே போச்சு!!! அவன் ட்ரெஸ் எதுக்கு நீ போட்டிருக்கே!" என்று சந்தேகமாக வினவினாள்.

"பாத்தியா! பாத்தியா!.... நீயே இப்படி சந்தேகமா கேக்குறியே! நான்லாம் வெறும் வாய் மட்டும் தான்.... அவன் என்பக்கத்துல வந்ததும் எப்படி அல்லுவுட்டுச்சு தெரியுமா!!? அதையெல்லாம் மூஞ்சில காட்டிக்காம மறச்சு, அவன் ரூம்ல இருந்து வெளியே வர்றதுக்கு நான் என்ன பாடுபட்டேன்னு எனக்கு தான் தெரியும்!!!" என்று ஆரம்பித்து அனைத்தையும் கூறினாள்.

சுனோ "ஐயே.... அவ்ளோ தானா!! வேற எதுவுமே நடக்கலேயா!!!" என்று தலையில் கை வைத்து, "அவன் தான் லவ் மேட்டர்ல தத்தினு பாத்தா நீ அதுக்கும் மேல இருப்ப போலயே!" என்று புலம்பினாள்.

மேலும், "நீ எல்லாம் என் ப்ரெண்டா டி! என்கூட சுத்திட்டு இவ்ளோ பேக்கா இருக்கியே டி..." சுனோ தன்போக்கில் புலம்பிக்கொண்டே இருக்க, அம்மு அவளிடமிருந்து தப்பிப்பதற்காகவே தான் இன்றைக்கு மருத்துவமனை செல்ல வேண்டும் என்று கூறி குளியலறை புகுந்து கொண்டாள்.

ஏழு மணிக்கு மேல் அனைவரும் தாமதமாகவே எழுந்து வர, கங்காதரன் மற்றும் விமலா அனைவரிடமும் நலம் விசாரித்தபடி உணவு மேசையில் அமர்ந்து குடும்ப நபர்களின் நலவிசாரிப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

இருப்பதிலேயே கடைசியாக எழுந்து வந்தது கமல் தான். முகம் கூட கழுவாமல் பல் மட்டும் துலக்கிவிட்டு காபி கேட்டு வந்து அமர்ந்தான். அவனின் சிவந்த கண்களே கூறியது, சரியாகத் தூங்கவில்லை என்று.

"ஏன் டா கண்ணெல்லாம் சிவந்திருக்கு? சரியா தூங்கலேயா?" என்று விமலா தாய்பாசத்தோடு கேட்டார்.

சுனோவின் மூலம் இளவட்டங்கள் அனைவருக்கும் விஷயம் தெரிந்திருக்க, ஒருவரை ஒருவர் பார்த்து வாய் மூடி சிரித்துக் கொண்டனர்.

அபி மட்டும் சும்மா இருக்க மாட்டாமல், "அதுக்கெல்லாம் நேரமே இருந்திருக்காது... என்ன கமல்?" என்று வம்பு வளர்க்கவே அவ்வாறு கூறினான்...

அதில் கடுப்படைந்த கமல், "சுனோ அபிக்கு என் ரூமே வசதியா இருக்காம்... முக்கியமா உன் தொல்லை இல்லாம நிம்மதியா தூங்கினானாம்..." என்றது தான் தாமதம், கமலின் சட்டையைப் பிடித்திருந்தான் அபி.

"சண்டாளா உன்னை வம்பு பண்ணதுக்கு அவகிட்டேயா டா கோர்த்துவிடுவே? இனி ஊருக்கு போனக் கூட என்னை ரூம்முக்குள்ள விடமாட்டா டா" என்று கமலின் காதில் புலம்பினான்.

இளவல்கள் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் கொண்டாட்டத்திற்கு தடையாக இருக்க விரும்பாமல், கங்காதரனும் விமலாவும் எழுந்து நீள்சாய்விருக்கை சென்று அமர்ந்து கொண்டனர்.

அவர்கள் நகர்ந்து செல்ல, சரியாக அபியின் மணவாட்டி இடுப்பில் கை வைத்தபடி அவன் அருகே வந்து நின்றாள். "அப்படியா அபி மச்சான்!!" என்று அளவிற்கு அதிகமாக மரியாதை கொடுத்தக் கேட்டாள்.

"ஹிஹிஹி... என்னை பத்தி உனக்குத் தெரியாதா டா குட்டிம்மா!!? நான் அப்படிலாம் சொல்லிருப்பேனா!!! கமலுக்கு எப்பவுமோ விளையாட்டு தான்..." என்று வலிந்தான் அபி.

"ம்ம்ம்... அது" என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றாள் சுனோ.

சுனோ அந்த பக்கம் தூரமாகச் சென்றதும், "டேய் கமலு... உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு... நியாபகம் வெச்சுக்கோ... எனக்கு ஒரு ச்சான்ஸ் கிடைக்கும்ல... அப்போ கவனிச்சிக்கிறேன் உன்னை..." என்றான் அபி.

"அதையும் தான் பாப்போம் டா... என் பொண்டாட்டியை எப்படி சமாளிக்கனும்னு எனக்குத் தெரியும்..." என்று வாய்ச்சண்டை விளையாட்டாய் நீண்டு கொண்டிருந்தது.

"பாக்கலாமா? பாக்கலாமா?... உன் பொண்டாட்டியும், எம்பொண்டாட்டியும் எதுல ஒத்து போகுதுங்களோ இல்லேயோ, குடும்பத்து முன்னாடி அசிங்கப்படுத்துறதுவ அவ்ளோ ஒத்தும... நியாபகம் வெச்சுக்கோ..."

"கல்யாணம் ஆன பசங்க மாதிரியா டா நடந்துக்கிறிங்க... இன்னும் சின்ன பசங்க மாதிரி சண்டை போட்டுட்டு!!!" என்றான் பவன்.

"டேய் அண்ணா அவன் தான் டா மொதோ ஆரம்பிச்சான்." என்றான் கமல்.

"அதுக்காக நீ என் பொண்டாட்டிகிட்டே போட்டுக் கொடுப்பேயா!!!"

"பதிலுக்கு தான் நீயும் என் பொண்டாட்டிகிட்டே போட்டுக் கொடுப்பேன்னு சொன்னேல... அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு போ..." என்று கமலும் பதிலுக்கு பதில் பேசினான்.

"இந்த வாய் மட்டும் இல்லேனா உன்னேலாம் எப்பவோ நாய் கவ்விட்டு போயிருக்கும்..." என்று திட்டியபடி அங்கே வந்த நேத்ரா அவன் முன் குழம்பியை வைத்துவிட்டு,

"இவரு லவ் பண்ணலேயாம்... அதனால மேடம் தாலிய கழட்டி வெச்சுட்டாங்களாம்... இப்போ அவங்க பொண்டாட்டிங்க இல்லேயாம்... இவரு புருஷருங்க இல்லேயாம்... ஆனா சொல்லும் போது மட்டும் 'என் பொண்டாட்டி என் பொண்டாட்டி'னு வாய்கிழிய சொல்லுவாராம்..." என்று மேலும் கொஞ்சம் திட்டினாள்.

நேத்ராவின் நக்கல் பேச்சில் அனைவரும் சொல்லி வைத்தார் போல் கிளுக்கென சிரிக்க, கமலோ அனைவரையும் மீண்டும் முறைத்தான்.

ஆனாலும் நேத்ரா கூறியபின் தான் கமல் தன் வார்த்தைகளை தானே உணர்ந்தான். 'எப்படி அவளை அப்படி சொன்னேன்!!! ஒருவேளை தாலி கட்டிட்டேன், கல்யாணம் ஆகிடுச்சுன்னு இந்த அபி பையன் சொல்லி சொல்லியே என் மனசுல பதிய வெச்சுட்டானோ!!! திஸ் இஸ் வெரி டேஞ்சரஸ் டு மீ! கடவுளே எந்த தீய சக்தியும் மனசுக்குள்ள புகுந்துடாம நீ தான் என்னை காப்பாத்தனும்...' என்று அவரசமாக அப்ளிகேஷன் போட்டான்.

ஆனாலும் கடவுள் அவன் பக்கம் நிற்கவில்லையே... அவனுக்கு முன்னதாகவே ஒருத்தி ஆறு மாதங்களாக தினம் தினம் அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருக்கிறாளே!!! பின்னே எப்படி அவன் பக்கம் நிற்பார்.

அதன் முதல் அடையாளமாய், அடித்தளமாய் அப்போதே ஒரு சம்பவமும் நடந்தது. அம்மு மருத்துவமனை செல்லத் தயாராகி படியில் இறங்கி வந்துக் கொண்டிருந்தாள்.

அறக்கு நிற சில்க் காட்டன் சேலையில், பின்னலிட்ட ஜடையை முன்னால் தொங்கவிட்டபடி, அவள் இறங்கி வர, இடை தட்டிய ஜடையோ, அவளது இடையில் தம்புர மீட்டியபடி இங்கும் அங்கும் அசைந்து கொண்டிருந்தது.

சேலைக்குப் பொருத்தமான, அறக்கு நிற சிறிய அளவிளான, குந்தன்நகை ஒற்றை குண்டுமணி தொங்கட்டானும், கழுத்தில் அதே வடிவமைப்பில் ஒற்றை சங்கிலியும், 'கையில் வளையல் கானம் பாட' என்பது போல், நான்கைந்தாக ஒன்றோடு ஒன்று உரசியபடி அவளது நடைக்கு ஏற்றார் போல் இசைத்தது.

சின்னஞ்சிறிய அறக்கு நிற கோபுரப் பொட்டும், மையிட்ட கருவிழிகளும், மினுமினுவென இதழ்பூச்சின் உபயத்தில் மின்னிய இதழ்களும் என அங்கம் அங்கமாக பார்த்து ரசிக்கும் பேரழகியாக வந்து நின்றாள் அம்மு.

தான் என்ன வேண்டிக் கொண்டோம் என்பது கூட மறந்துவிட, கண்களைக் கூட சிமிட்டாமல் இவ்வளவு நேரம் பார்த்தவன், அம்மு உணவுமேசை வந்த நின்ற நொடியிலிருந்து, அவளைக் கண்டு கொள்ளாதது போல் காட்டிக் கொண்டாலும், அவனது பார்வை நொடிக்கொருமுறை அவளைத் தழுவி தன் கண்களுக்குள் அவள் பிம்பத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.

"குட் மார்னிங் அங்கிள், குட் மார்னிங் ஆன்ட்டி..." என்று மரியாதைக்காக கூறிவிட்டு மற்றவர்களைப் பார்த்து ஒரு தலையசைப்போடு நின்றிருந்தாள் அம்மு.

அம்முவைக் கண்டவுடன் அனைவரும் கமலைக் கண்டும், அவன் சைட் அடிப்பதைக் கண்டும் இதழ் மூடி சிரித்திட, கமல் அம்முவை முறைக்கத் தொடங்கினான்.

கங்காதரன் அம்முவிடம் "ஹாஸ்பிட்டல் போகப்போறியா ம்மா?" என்றார்.

"ஆமா அங்கிள்"

"நான் சொல்லலாமா கூடாதுனு தெரியலே... ஒரு வாரம் லீவ் போடேன் ம்மா... கொஞ்சம் எல்லா ப்ரச்சனையும் அடங்கட்டும்... அதுவும் இல்லாம உனக்கு விருப்பம்னா இவங்கலோட நீயும் அமி வீட்டுக்கு போயிட்டு வாயேன்..." என்றார்.

அம்முவிற்கு தான் பேரதிர்ச்சி... கங்காதரன் இன்றே அவளுடன் சகஜமாக பேசுவதே அவளுக்கு முதல் அதிர்ச்சி, அதிலும் அவள் மேல் அக்கரையாக விடுப்பு எடுத்துக்கொள்ள செல்வதோடு, இவர்களோடு வெளியே சென்று வா என்கிறாரே! என்று.

பற்றாகுறைக்கு துடுக்குத்தனம் நிறைந்த மைண்ட்வாய்ஸோ 'மார்னிங் பையன் மட்டும் தனியா அடி வாங்கினான்னு இப்போ உன்னையும் கோர்த்துவிட பாக்குறார் பாரேன்!!!' என்று நேரம் காலம் தெரியாமல் கவுன்டர் கொடுத்துக் கொண்டிருந்தது.

"பரவாயில்லே அங்கிள்... அவங்க போயிட்டு வரட்டும்..." என்றாள் பவ்வியமாக,

அப்போது மிதுன், "எல்லாரும் தானே போறோம்... நீயும் வா" என்றிட, அதன்பின் சுனோவும் அம்முவை வற்புறுத்தவே சம்மதம் தெரிவித்தாள்.

கமல் குழம்பி அருந்தியபடியே, "உனக்கு ட்ரெஸ் எடுக்க வேண்டி இருந்தா சுனோ கூட நம்ம கடைக்கு போயிட்டு வா" என்றான்.

அம்மு அனைவரையும் சங்கடமாகப் பார்த்துவிட்டு, "ம்ம்ம்" என்று கூறி தன் தோள்பையுடன், ஸ்டெத் மற்றும் வெள்ளை மேலாடையை அறையில் வைக்கச் சென்றுவிட்டாள்.

'என்ன ஆச்சரியமா இருக்கு, சொன்னதும் பதில் பேசாம முக்கியமா திட்டாம 'சரி'னு சொல்லிட்டுப் போறா!!!' என்று கமல் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,

"அம்முவுக்கு என்னென்ன வேணும்னு பார்த்து செய்து கொடுக்குற அளவுக்கு மனசு மாறிடுச்சே..." என்று சுனோ ஆரம்பித்து வைக்க,

"என்ன இருந்தாலும், அவளும் பெண் தானே! அவளுக்கும் வாய் திறந்து கேட்க சங்கடமாத் தானே இருக்கும்" என்று மழுப்பினான் கமல்.

"அவளும் பொண்ணுன்றதுனாலேயே, இல்லே பொண்டாட்டி...ம்ம்ம்" என்ற அபியின் வாயை அருகில் இருந்த வறுக்கி கொண்டு அடைத்தான் கமல்.

காலை உணவை முடித்துக் கொண்டு சுனோவும், அம்முவும் கடைக் கிளம்ப, ராம் சுனோவை நிறுத்தி வைத்து சற்று நேரம் பேசிக்கொண்டிருக்க, அதற்குள் கமலும் தயாராகி கீழே வந்து கொண்டிருந்தான். ராமோ பேச்சு வாக்கில் சொல்வது போல்,

"கமல், அம்முவை நீயே கூட்டிட்டு போயிட்டு வா" என்றிட,

"ஏது!!! நானா!!!" என்று அரண்டு போனான் கமல். அதில் அம்மு அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள்.

"நாங்க அமி வீட்டு போகனும்ல டா, சோ நீ அம்மு கூட போயி, வேணுங்கிறதை எடுத்துட்டு அவங்களை அமி வீட்ல கொண்டு வந்து விட்டுடு... சரியா!"

"புரிஞ்சிடுச்சு.... நல்லா புரிஞ்சிடுச்சு... நீங்கெல்லாம் உடனே ஏன் கிளம்பி வந்திங்கனு இப்போ நல்லாவே புரிஞ்சிடுச்சு..." என்று அவன் என்னவென்றே கூறாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்க,

மிதுன்யா அம்முவின் அருகே சென்று, "நீ இப்படியே வேடிக்கை பார்த்துட்டு நின்னேனா பையன் உன் வழிக்கு வரமாட்டான்... இங்கே எல்லாரும் நீயும் அவனும் சேரனும்னு தான் நினைக்கிறாங்க... சோ நீ என்ன செய்தாலும் உன்னை தப்பா நெனச்சுக்க மாட்டாங்க... அவங்க முன்னாடி கூச்சப்படாம உன் ஸ்டைல்ல அவனை கூட்டிட்டுப்போ..."

அம்முவிற்கு சற்று தைரியம் வர, நேரே கமலின் அருகே சென்றாள். "என்னை உன்னால கூட்டிட்டு போக முடியுமா? முடியாதா?" என்றாள் அதிகாரமாய்.

"முடியாது போடி..."

"அப்போ ஓகே என் பொட்டி படுக்கைய எடுத்துட்டு வந்து உன் ரூம்லயே தங்கிக்கிறேன்... நைட் யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா வந்து ட்ரெஸ் மாத்தத் தேவையில்லே பார்..." என்று அவனிடம் சாதாரணமாகக் கூறினாள்.

இங்கே நடந்த உரையாடல் தெரியாமல், வந்து நின்ற விமலா அவர் பங்கிற்கு, "கமல் நீ தான் அம்முவை கூட்டிட்டு போகப் போறியா?" என்று அவனிடம் கேள்வி கேட்டதோடு சரி... பதில் எதிர்பார்க்கவில்லை. அதற்குள் அம்முவிடம் திரும்பி,

"அப்படியே ஹாஸ்பிட்டல் போயி ஒருவாரம் லீவ் சொல்லிட்டு, உனக்கு வேணுங்குற எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கோ... நம்ம கடை தான் சங்கடப் படாதே... சரியா?" என்று வழியனுப்பி வைத்தார்.

வேண்டா வெறுப்பாகத் தான் அழைத்துச் செல்வதாக நினைத்தான் கமல். ஆனால் அவனால் இன்று இயல்பாக இருக்க முடியவில்லை. உண்மையாகவே புதுமணத் தம்பதியரைப் போல், மனைவி தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், அவனுக்குள் ஒரு புதுவிதமான பரவசம்.

சீண்டல் தொடரும்.