வேண்டா வெறுப்பாகத் தான் அம்முவை அழைத்துச் செல்வதாக நினைத்தான் கமல். ஆனால் அவனால் இன்று இயல்பாக இருக்க முடியவில்லை. உண்மையாகவே புதுமணத் தம்பதியரைப் போல், அம்மு தன் இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், அவனுக்குள் ஒரு புதுவிதமான பரவசம்.
ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழி நெடுக அவளைத் திட்டிக்கொண்டே தான் வந்தான்.
"உன்கிட்ட படிச்சு படிச்சு சொல்லிவிட்டேனே டி.... நீ என் ரூமுக்கு வந்தது யாருக்கும் தெரியக் கூடாதுனு!!!! எல்லார் முன்னாடியும் லூசு மாதிரி 'என் ட்ரெஸ் எடுத்துகிறேன் கண்ணா'னு ஈஈஈனு இழிச்சிட்டு வந்து நிக்கிறே....
உனக்கு என்னை அசிங்கப்படுத்துறதுல அப்படி என்னடி சந்தோஷம்!!!! என்னை தப்பா நெனச்சாக் கூட பரவாயில்லே... வயசு பொண்ணு உன்னை தப்பா நெனச்சா உன் கதி என்னனு கொஞ்சமாச்சும் யோசிச்சேயா?
ஆண்டவன் புண்ணியம் என் குடும்பத்துல கோலி மூட்டி, ஊர் ஃபுல்லா தம்பட்டம் அடிக்கிற ஆளுங்க யாரும் இல்லே.... இல்லேனே இப்போவே என் மானம் சந்தி சிரிச்சிருக்கும்.... தெரு முனையத் தாண்டுறதுக்குள்ள உன்னையும் என்னையும் கை காமிச்சு பேசாத ஆளே இருந்திருக்கமாட்டாங்க..
இப்போ சொல்றது தான் நல்லா கேட்டுக்கோ! உன் ப்ரச்சனை சரியாகி உன் வீட்டுக்கு நீ போற வரைக்கும் என் பக்கம் தலைவெச்சுக் கூட படுக்காதே சொல்லிட்டேன்" என்று அதி தீவிரமாக சாலையில் கவனத்தை செலுத்தியபடி அவளை திட்டிக் கொண்டும் அறிவுரை வழங்கிக் கொண்டும் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளிடம் இருந்து தான் எந்த பதிலும் இல்லை. கமலின் மூளையில் மணி அடிக்கத் தொடங்கியது.... 'இவ ஒரு வார்த்தை கூடப் பேசாம அப்படியே அக்ஸப்ட் பண்றவ இல்லேயே! பின்னாடி உக்காந்திருக்காளா! இல்லே அப்போவே குதிச்சு ஓடிட்டாளா!' என்ற எண்ணம் தோன்றிட, மிரரை சரி செய்து பின்னால் அமர்ந்திருப்பவளைக் கண்டான்.
காதில் புளூ டூத் மாட்டியபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவனை இம்சிக்கப் பிறந்த ராட்சசி. எதேர்ச்சையாக அவளும் மிரரைப் பார்க்க அவன் முறைப்பது தெரியவே ஒரு காதில் இருந்த புளூடூத்தை எடுத்து அவன் காதில் வைத்தாள்.
நேற்று முன்னிரவில்
உன்னில் திலவு மடியில்
காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில்
அந்த ஈர நினைவில்
கன்று தவிப்பதேனோ
மனம்கலங்கிப் புலம்புகிறேன்
என்ற பாடல் இசைத்திட கமலின் முகம் கர்ணக்கொடூரமாகியது. ஆனால் பெண்ணவளோ அந்த வரிகளில் தன்னைத் தொலைத்து முன்னிரவு நடந்த நிகழ்வை அசைபோட்டுக் கொண்டிருந்தாள்.
கூந்தல் நெளிவில்
எழில் குலச்சரிவில்
கூந்தல் நெளிவில்
எழில் குலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி,
என் கர்வம் அழிந்ததடி....
என்று அடுத்த வரி இசைக்க இப்போது ஆடவன் மனம் காலையில் பெண்ணவளை கண்ணிமைக்கவும் மறந்து அங்கம் அங்கமாக ரசித்ததை நினைவுபடுத்திட, அதில் மீண்டும் ஒரு நொடி தொலைந்து தான் போனான். அதற்குள் அவள் கையோடு பிடித்திருந்த புளூ டூத்தை தட்டிவிட்டு,
"எடு டி கையா!" என்றான்.
அதற்கும் அவள் வருந்தினால் இல்லை.... கண்ணாடியில் தெரிந்த அவன் உருவத்தைக் கண்டு உதடு சுழித்து தன் காதில் வைத்து மீண்டும் பாட்டுக் கேட்கத் தொடங்கினாள்.
அதன் பின் கமல் பேசிய அனைத்தும் தன் மனதிற்குள்ளாகத் தான். 'இவகிட்ட பேசுறதும் செவிடன் காதுல சங்கு ஊதுறதும் ஒன்னு தான்' என்று புலம்பியபடி மருத்துவமனையின் முன் வந்து வண்டியை நிறுத்தினான்.
சேலை அணிந்திருந்ததால் ஒருபக்கமாக காலிட்டு அமர்ந்திருந்தவள் வாகனத்தைவிட்டு சட்டென இறங்கி கமலைக் கடந்து சென்றாள். வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தும் போதே ரிவர் வியூ மிரர் வழியாக ஒரு நபர் அம்முவையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட கமல் தன்னைக் கடந்து சென்றவளின் கையை சட்டென பிடித்து நிறுத்தினான்.
"என்ன கண்ணா?" என்றவளிடம் எந்த பதிலும் சொல்லாமல், சுற்றும் முற்றும் பார்த்தான். இப்போது யாரும் தென்படவில்லை.
"கண்ணா, என்னாச்சு?" லேசாக பயந்தபடி அவளும் பார்வையை சுழலவிட்டாள்.
அவளின் பயத்தை விரட்ட வேண்டி, "என்னை உன் புருஷேனு சொல்லி தானே இன்ட்ரோ கொடுக்கப் போறே!... அப்போ புதுசா கல்யாணம் ஆனவங்க மாதிரி ஜோடியா போக வேண்டாமா!" என்றவனை அதிசயத்திலும் அதிசயமாக நோக்கினாள் அம்மு.
"ம்ம்ம்.... கண்டிப்பா! நீயா என் கையப் பிடிச்சிக்கும் போது, நான் வேண்டாம்னா சொல்லுவேன்...." என்று அவன் நினைத்தது போலவே அவனோடு வாயாடுவதில் அவளது கவனம் சிதறியது. ம்கூம் சிதறியது போல் காட்டிக் கொண்டாள்.
பிடித்திருந்த அவள் கையை தன்னருகே இழுத்து நெருக்கமாக நிற்க வைத்துக் கொண்டு பக்கவாட்டு நிறுத்தியின் உதவியோடு வாகனத்தை நிறுத்திவிட்டு, பூட்டி சாவியை எடுத்தபடி மீண்டும் ரிவர் வியூ மிரரில் தன்னைத் தானே பார்த்துக் கொள்வது போல் எவரேனும் பின்னால் நிற்கிறார்களா என்று பார்த்தான். யாரும் இல்லை.... அம்முவின் கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தான்.
காத்திருப்பு அறைக்கு அவனை அழைத்துச் சென்றவள், அவன் கைகளில் இருந்து தன் கையை உருவிக் கொண்டு,
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேயாத் தெரிஞ்சுச்சாம்..... அந்த கதையா இருக்கு உன் பயம்..... என்னை யாராவது கொல்லனும் இருந்தா அது நடந்து தான் தீரும்... நீ என் கைய இருக்கமா பிடிச்சுக்கிட்டா மட்டும் எதுவும் நடக்காதா! தூரமா நின்னு துப்பாக்கில சுட்டா உன்னால என்ன செய்ய முடியும்! இன்னைக்கு இல்லேனாலும் இனி திரும்பவும் இந்த ஹாஸ்பிட்டலுக்கு தானே நான் வரனும்!?... தினமும் எய்ட் ஆர்ஸ் வெர்க் பண்ணனும்!?.... ம்ம்ம்? சோ என்னை பத்தி கவலைப் படாம நீ நீயாவே இரு கண்ணா... அது தான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது..." என்று கூறிவிட்டு,
"நான் டீனை பார்த்துட்டு வரேன்" என்று அவன் பதிலுக்கு கூட காத்திராமல் எழுந்து சென்றுவிட்டாள்.
'அவளை பத்தி கவலைப் படுறாங்கலாம்... வேற வேலை இல்லே பார்.... இப்போ மட்டும் நான் நானா இல்லாம எப்படி இருக்கேனாம்... எனக்கே அட்வைஸ் பண்ண வந்துட்டா' என்று அவளைத் திட்டயபடி மருத்துவமனையை நோட்டமிட்டான்.
'அவள் சொல்வது உண்மை தானே! இனி தினமும் இங்கே தான் இவள் வர வேண்டும்.... ஆபத்து இருக்கிறது என்று தெரிந்தும் இங்கே வேலை செய்ய வேண்டும் என்று என்ன கட்டாயம் இவளுக்கு!!! முடிந்தளவு அவள் தந்தையைப் பார்த்து பேசி இவளை அழைத்துச் செல்லக் கோரி கேட்க வேண்டும்!!! இல்லை என்றால் வேறு இடத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்று தனக்குள் நினைத்தபடி பார்வையை சுழற்றினான்.
தொலைதூரத்தில் ஒரு நபரின் பின்புறத்தைக் கண்டவன், அவன் சட்டையைக் கொண்டு அடையாளம் கண்டு கொண்டான். இந்த நபர் தான் வாகனம் நிறுத்தும் இடத்தில் அம்முவை நோட்டமிட்டது.
விரைந்து சென்று அந்த நபரை பின் தொடர்ந்தான் கமல். அடுத்த திருப்பத்தில் அந்நபர் காணாமல் போக, அருகில் இருக்கும் சில அறைகளை எட்டிப் பார்த்தான்... எங்கும் இல்லை...
'இவன் யாருனு எப்படி தெரிஞ்சுக்கிறது?' என்று யோசித்தபடி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்வையைச் செலுத்தினான். எதிர் புறத்தில் இருந்து அம்மு தான் ஒரு மருத்துவருடன் பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தாள்.
இருவரும் கமலை நெருங்கிட, உடன் வந்த மருத்துவர், "கன்க்ராட்ஸ் மிஸ்டர்..." என்று கூறி கைகுழுக்கினார். பதிலுக்கு நன்றி உரைத்து கைகுழுக்கிவிட்டு ஓரிண்டு வார்த்தைகள் பேசிவிட்டு இருவரும் புறப்பட்டனர்.
கமலின் கண்கள் இன்னமும் அடங்கவில்லை. சுற்றி சுற்றி நோட்டமிட்டுக் கொண்டு தான் இருந்தது. வண்டியை ஸ்டார்ட் செய்திட, "கண்ணா.... லீவ் சொன்னியா! என்ன சொன்னாங்க? என்ன ஏதுனு ஒரு வார்த்தை கூட கேக்கமாட்டேயா?" என்று அவன் பின்னால் ஏறி அமர்ந்தபடி வினவினாள் அம்மு.
"நான் ஏன் கேக்கனும்? உன்னை பத்தி கவலைப்பட நான் யாரு? நான் நானா இருக்கேன்!!!" என்று யாரோ போல் ஏதோ போல் கூறினான்.
அவனது கோபத்தை கண்ணாடியில் பார்த்தவளுக்கு தான் ஏகப்பட்ட குஷி... நமட்டு சிரிப்பு சிரித்தபடி, அவனது தோளில் கை வைத்து அதன் மேல் தன் தாடையை வைத்து அவன் காதருகே, ரகசியக் குரலில்,
"தாலி கட்டின பொண்டாட்டிய பாத்து புருஷன் கேக்குற கேள்வியா கண்ணா இது!!!" என்று ஆச்சரியமாக வினவுவது போல் வினவினாள்.
கமலோ அவளது பதிலில் சட்டென திரும்பி, ஓரப்பார்வையால் அவளை முறைக்க, அவளது இதழ்கள் மெல்லியதாக அவன் கன்னம் உரசியபடி நின்றிருந்தது. அதில் அதிர்ந்து இதழ்களோடு சேர்த்து கண்களையும் விரித்து ஒருவித இனம் புரியா நடுக்கத்தோடு மெதுவாக விலகினாள் அம்மு.
அதற்குள் கமலோ தன் இடக்கை கொண்டு கன்னம் தடவி, "ஏய் லூசு... என்னடி இது? நடு ரோட்ல..." என்று அவள் மேல் தவறில்லை, அவள் தெரிந்து எதுவும் செய்யவில்லை என்றும் புரிந்து கொள்ளாமல் அவளைத் திட்ட வாயெடுக்க, அம்முவின் பதிலில் வாயடைத்துப் போனான்.
"அப்போ வீட்ல வெச்சு தரேன்... அதுவும் என்னை மட்டுமே திட்டிக்கிட்டே இருக்குற இந்த வாய்க்கு"
'ஆத்தி இந்த இம்சை செஞ்சாலும் செய்யும்!' என்று தனக்குள்ளாகவே நினைத்து வேறு வழியில்லாமல் அமைதியடைந்து உந்துவண்டியை உயிர்ப்பித்து தனது கடை நோக்கி செலுத்தினான்.
அங்கேயும் அவளை அவசரப்படுத்திக் கொண்டே தான் இருந்தான் கமல். அதற்கு முக்கிய காரணம் பணியாட்கள் தமது ஓனர் இரண்டு நாட்களாக ஒரு பெண்ணை கூட்டிக் கொண்டு சுற்றுவதில் வந்த ஆர்வத்தில் அவர்கள் இருவரையும் குறுகுறுவென்று பார்ப்பதும், வெகு சிலரைத் தவிற பெரும்பான்மையோர், "யாரு ண்ணா இது? சொந்தக்காரவங்களா?" என்றும், உரிமையாக பலகும் சிலர் "அண்ணியா ண்ணா?" என்று அவனைத் தனியாக அழைத்து வினவுவதுமாக இருக்க, அதில் கமலுக்குள் சொல்ல முடியாது உணர்வு எழுந்தது. அவர்களுக்கெல்லாம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு அவளின் அருகே வந்தான்.
மருத்துவமனை அணிந்து செல்ல பருத்தி உடைகளும், சிறிய வேலைப்பாடுகள் செய்யப்பட்ட உடைகளும், வீட்டில் அணிந்து கொள்ள எளிமையான சுடிதார்களுமாக மொத்தம் பத்து பதினைந்து எடுத்து வைத்திருந்தாள் அம்மு.
"போலாமா?" என்று அருகே வந்து நின்றவனிடம், "இன்னும் கொஞ்சம் எடுக்கனும்" என்றிட அவனோ 'இன்னுமா ஒருவேளை கடையவே வீட்டுக்கு ஷிஃப்ட் பண்ணுறாளா!' என்று யோசித்தபடியே "இந்த பொண்ணுங்களுக்கு மட்டும் துணி மேலேயும் நகை மேலேயும் இருக்குற ஆசை அடங்கவே அடங்காது" என்று முனுமுனுத்தான்.
அம்முவோ அவன் புறம் முழுமையாகத் திரும்பி கைகளை கட்டிக் கொண்டு அவனை இதழ்களை வளைத்து சிரித்து, கண்களில் கேள்வியோடு பார்த்திட, அதன் பொருளை நன்கு அறிந்திருந்தவன், பெரிய கும்பிடாக போட்டு
"என் ட்ரெஸ்ல மட்டும் கை வெச்சிடாதே! உனக்கு புண்ணியமாப் போகும்.... இன்னும் எத்தனை வேணுமோ எடுத்துக்கோ" என்றான்.
அவனது செயலில் தோன்றிய சிரிப்பை அடக்கிக் கொண்டு, "நீ கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு... நான் மட்டும் போயி எடுத்துக்கிறேன்" என்றாள்.
கமலுக்கோ அம்முவின் வாய்த்துடுக்கை நினைத்து கொஞ்சம் அதிகமாகவே பயம் இருந்தது. தன்னிடம் இவள் யார் என்று கேட்டவர்களுக்கு "தூரத்து சொந்தம், அம்மாவின் உறவு, அப்பாவிற்கு தெரிந்த பெண்" என்று அப்படி இப்படி என்று பொய் கூறி மழுப்பிவிட்டான். இவன் அவள் அருகில் இல்லை என்றால் அவளிடம் கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்லி வைப்பாளோ என்ற பயம்.... அதனால் அவசரமாக அவளுக்கு மறுப்பு தெரிவித்தான்.
"இல்லே... இல்லே... நானும் வரேன் சீக்கிரம் எடுத்து முடி" என்று கூறிட பெண்ணவளோ அவனை பாவம் போல் பார்த்து வைத்தாள்.
அவள் எங்கே செல்கிறாள் என்று கூட பார்க்காமல் அவளைப் பின் தொடர்ந்தவன், ஒரு பெண்ணின் குரலில் சுற்றம் உணர்ந்தான்…
"என்ன ண்ணா எங்க செக்ஷன் வந்திருக்கிங்க? என்ன விஷயம்?" என்று அம்முவையும் கமலையும் மாற்றி மாற்றி பார்த்தபடி மெல்லிய வெட்கம் கலந்த சிரிப்போடு வினவிட, அப்போது தான் மேலே தொங்கவிடப் பட்டிருந்த பொம்மைகளைப் பார்த்து பெண்களுக்கான ப்ரத்யேக ஆடை செக்ஷ்ன் என்பதை அறிந்து அம்முவை முறைத்தான்.
அவளோ 'நான் சொன்னேன் நீ தான் கேக்கலே' என்று பார்வையால் உரைத்து தோள்குழுக்கி, 'நல்லா அனுபவி... இன்னும் எத்தனை கேள்விக்கு பதில் சொல்றேனு பாப்போம்' என்பது போல் லுக் விட்டுச் சென்றாள்.
தன்னிடம் கேள்வி கேட்ட பெண்ணிடம், "அவங்களுக்கு என்ன வேணும்னு கேட்டு பாத்து எடுத்துக் கொடுங்க... தெரிஞ்ச பொண்ணு தான். அவங்க எடுத்து முடிக்கவும் கீழே கூட்டிட்டு வந்திடுங்க" ஏதோ அதனைக் கூறுவதற்காகவே வந்தது போல் கூறி அங்கிருந்து சென்றுவிட்டான்.
சொல்லப் போனால் தானாக வந்து தலையைக் கொடுத்து வெட்டு என்று கூறி காத்திருந்தான். அவள் தனியாக வந்திருந்தால் கூட கஸ்டமர் என்று நினைத்து அதனுடையே முடித்து அனுப்பி வைத்திருந்துப்பார்கள். அவனே அழைத்து வந்துக் கூறிவிட்டுச் சென்றதன் விளைவு கொஞ்சம் கடுமையாகத் தான் இருந்தது.
கமல் பயந்தது போலவே அந்த பகுதியில் அம்முவை இருவர் மூவராக இணைந்து "கமல் ண்ணாக்கு வேண்டப்பட்ட பொண்ணா க்கா நீங்க? சொந்தக்காரங்களா?" என்று கேட்க, அதற்கு உண்மையை அப்படியே உண்மையாகக் கூறினால் அவள் அம்மு இல்லவே இல்லை என்றாகிவிடாதா!!!
"உங்க ஓனரு ஹார்ட்ல ஓட்டைய போட்டு அப்படியே நான் ஆட்டைய போட்டுட்டேன்.... அதை திருப்பி தர வரைக்கும் என்னை ஹவுஸ் அரஸ்ட் பண்ணி வெச்சிருக்காரு......" மற்றவர்கள் அவளைப் பார்த்து சிரிக்க,
"நீங்க நம்பலேயா.... சீரியஸ்லி... அவர் ஹார்ட் இப்போ என்கிட்ட இருக்கு... அந்த ப்ளேஸ் இப்போ காலியா இருக்குறதுனால தான் சிரிக்காம உம்முனு திரியிறாரு பாருங்க... 'என் ஹார்ட்டை கொடு'னு தினமும் ரெண்டு பேருக்கும் சண்டை... நான் தரவே முடியாதுனு சொல்லிட்டேன்" என்று சிரியாமல் கூறினாள்.
"ஒரு பொருள் வாங்கினா காசு கொடுத்தாகனும் இல்லே... அதே மதிப்புள்ள இன்னொரு பொருள் கொடுத்து தானே ஆகனும்... ஓனரு ஹார்ட் உங்ககிட்ட இருக்குன்னா... அதுக்கு பதிலா உங்க ஹார்டை குடுங்க...." என்றாள் ஒரு பெண் கேலிக் குரலில்...
"ஹாங்.... இது நல்ல ஐடியாவா இருக்கே! இந்த ஐடியாவை உங்க ஓனருகிட்ட சொல்லேன்.... என் ஹார்ட்டை வாங்கிக்க அவர் ரெடியா கேளு?" என்று கூறி அங்கிருந்த இன்டர்காம் மூலம் கமலுக்கு அழைப்பு விடுக்கச் சொன்னாள்.
முதலில் மறுத்த அந்த பெண் ஊழியர் அம்மு கொடுத்த தைரியத்தில் கமலுக்கு அழைத்தாள்.
"ஓனர் ண்ணா... அந்த அக்கா...." என்று அந்த பெண் ஆரம்பிக்க, பின்னாலிருந்து அம்முவின் குரல் அந்த பெண்ணை அதட்டியது, "ஏய் அக்கா இல்லே அண்ணி" என்று...
"ம்ம்ம்... அந்த அண்ணி திருடின உங்க ஹார்ட்டுக்கு பதிலா அவங்க ஹார்ட் தர்றாங்களாம்... வாங்கிக்கிறிங்களா?" என்றாள் அந்த பெண்...
கமலோ என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தான்.... 'அபி சொன்னது மாதிரி கூட்டத்துல வெச்சு தான் என்னை அசிங்கப்படுத்துவா போலயே! இன்னும் எத்தனை நாளைக்கு இவளை சமாளிக்கிறதுனு தெரியலேயே!' என்று அவன் மனம் கூப்பாடு போட்டது.
அவனது மனக்குமுறலை அம்முவின் குரல் கலைத்தது. "பதில் சொல்லுங்க ஓனர் சார்.... உங்க பதிலுக்காக எல்லாரும் வெய்ட்டிங்" என்றதும் கமலின் மனதில் பொறி தட்டியது. சட்டென அவள் இருக்கும் செக்ஷ்னின் கேமராவை க்ளிக் செய்து பார்க்க, கஸ்டமரை கவனிப்பவர்களைத் தவிர மற்ற அனைவரும் இன்டர்காமின் ஒலிப்பெருக்கியை உயர்பித்து அவனது பதிலுக்காக தொலைபேசி அருகில் குழுமி இருந்தனர்.

சீண்டல் தொடரும்.