சுடரை கட்டிக்கொண்டு அவளின் முதுகில் தலையை சாய்த்து கொண்டு வந்த கபிலனை கண்டு, பொறாமையில் அவர்களை பார்த்து கொண்டு இருந்தான்.
அகிலனை பார்த்ததும் கபிலன் இன்னும் கட்டி கொண்டு, “ஏய் சுடர் எனக்கு தூக்கம் வர மாதிரி இருக்கு, நீயே தூக்கிட்டு போயேன்!” என கெஞ்சலாக கேட்க, சரி இரு என்றவள் இவனை தூக்க ஆரம்பிக்கும் போது, வேகமாக வந்தான் அகிலன், “நீங்க இருங்க சுடர் அவன் வளர்ந்துட்டான் உங்களுக்கு தூக்க கஷ்டமா இருக்கும் நான் தூக்கிட்டு வரேன், நீங்க போங்க!” என்றான்.
அவளின் பிடியில் இருந்து தூக்கியவன் அவள் தலை மறையும் வரை, தூக்குவதை போல் நடித்தான், அவள் சென்றதும் அவனை நன்றாக கிள்ளி வைத்தான்.
“ஸ் ஹா டேய் எதுக்கு டா கிள்ளுன!”என்று அகிலனை பார்த்து மரியாதை இல்லாமல் பேசி அவன் கிள்ளிய இடத்தை தேய்த்து கொண்டே கேட்டான்.
“என்னது டேய் ஹா! என காதை திருகினான் அகிலன், என்னோட பொண்டாட்டியை தொட்ட, கையை உடைச்சிடுவேன் பார்த்துக்க” என்று சொல்லி காதில் இருந்து கையை எடுத்தான் அகிலன்.
“ஹலோ அவ என்னோட முறைப்பொண்ணு, அப்புறம் தான் உனக்கு பொண்டாட்டி, ஏதோ சின்ன பையனா இருக்கிறது தாளே, உனக்கு அவளை கொடுக்க வேண்டியதா போச்சி, நான் மட்டும் பெரியவனா இருந்து இருந்தா, அன்னைக்கு குடும்பத்தோட பொண்ணு கேட்டு வந்த போது எல்லோரையும் ஒரு வழி பண்ணி அனுப்பி வைச்சி இருப்பேன்” என்று சொன்னவன் காதை தேய்த்து கொண்டு வீட்டிற்குள் சென்றான்.
போகும் அவனை வாயை பிளந்து பார்த்தவன், “இந்த வயசுல எப்படி பேசுது!” என்று நினைத்தது கொண்டு இருக்கும் போது, மீண்டும் வெளியே வந்து, “ஹலோ இன்னும் அங்க நின்னுட்டு என்ன பண்றீங்க! பாம்பு பூரான் எல்லாம் வாக்கிங் போகுற நேரத்துல எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிகிட்டு சீக்கிரம் உள்ள வர வழியை பாருங்க!” என்றான்.
பாம்பு பூரான் என்றதும் பயந்து கொண்டு வேகமாக நடந்து(ஓடி) சென்று இருந்தான்,
முதல் முறையா வந்த புதுஜோடிக்கு விருந்து சாப்பாடு செய்து இருந்தாள் சாந்தா, அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவரவர் அறைக்கு சென்று இருந்தனர். புது இடத்தில் தூக்கம் வராமல் நெளிந்து கொண்டு இருந்தான் அகிலன்.
அவளோ இருவருக்கும் மதில் சுவரை தலையணையில் எழுப்பி விட்டு தூங்கி இருந்தாள்.
அப்படி இப்படி என்று புரண்டு படுத்தவனை ஒருவழியாக தூக்கம் அதிகாலையில் அணைத்து கொண்டது.
“வார விடுமுறையை மாமியார் வீட்டில் கழிக்க போயிருக்க போல, பயங்கர கவனிப்போ” என்று காயத்ரி அவனை சீண்டி கொண்டு இருந்தாள்,
“மாமா என்ன பார்க்க எப்ப வரீங்க!” என்று கொஞ்சும் குரலில் கேட்டாள் அந்த வாண்டு.
“உன்னோட மாமா உன்னை மறந்து ரொம்ப நாளாச்சு, போடி போய் விளையாடு” என்று அவளை அனுப்பி வைத்தாள்.
“இப்ப எதுக்கு அவ கிட்ட வம்பு இழுக்கிற, நான் எப்பவுமே என்னோட தங்கத்தை மறக்க மாட்டேன், காலங்காத்தால எதுக்கு போனை போட்ட, அதை சொல்லு” என எரிச்சலுடன் கேட்டான் அகில்.
“மாமியார் வீட்டுக்கு போனதும் எங்களை மறந்துட்டியா நினைச்சேன், வேற ஒண்ணும் இல்லை” என்று சொல்ல கடுப்பாகி போனை வைத்து விட்டான்.
“எருமை காலங்காத்தால எரிச்சலை கிளப்பிக்கிட்டு” என்று சிடுசிடுத்து எழுந்திருக்கும் போது அங்கே சுடர் காணாது கட்டிலில் இருந்து எழுந்தான்,
குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டு, “ஓ குளிக்கிறாங்க!” என்றவன் மீண்டும் அமைதியா படுத்துக்கொண்டான்.
அவள் கதவுதிறக்கும் சத்தம் கேட்டு, சட்டென்று கண்ணை மூடி கொண்டு தூங்குவது போல அவள் புறம் திரும்பி படுத்து கொண்டான் அகிலன்.
பச்சைவண்ணதில் பாவாடையும் அதிலே இளஞ்சிவப்பு நிறதில் மாங்காய் டிசைன் போட்ட பார்டர் என்று அதற்கு ஏற்றாற் போல் ஜாக்கெட் என்று அணிந்து வந்தவள் தாவணியை சுற்றி வந்தவள்,
அவனை பார்த்தும் அப்போது தான் இந்த ரூமில் அவனும் இருக்கிறான் என்று நினைவு வந்தவளாக மீண்டும் குளியலறை திரும்பி நடக்க, “அவர் தான் தூங்குகிறாரே!” என்று மீண்டும் திரும்பி வந்தாள்.
மடிப்பு எடுத்து ஒவ்வொன்றாக அடுக்கி, பின் போட சிரமபடுபவளை ஓர கண்ணால் பார்த்து ரசித்து கொண்டு இருந்தவனுக்கு உதவி செய்தால் என்ன! என்ற ஆர்வம் எழ, சட்டென்று அதை அடக்கி, மீண்டும் ரசிக்க ஆரம்பித்தவனுக்கு சொல்லமுடியாத அவஸ்தை வந்து ஒட்டி கொண்டது அவனுக்கு, இருந்தும் ஒன்னும் செய்ய முடியாதே என்று பெரும் மூச்சை எடுத்து விட,
இவனின் சத்தம் அவளை திடுக்கிட செய்தது, அப்போது தான் கண் விழிப்பது போல நெளிந்து எழுந்து “குட்மார்னிங் சுடர்!” என்றான்.
கையில் இருந்த தாவணி முனையை பிடித்து கொண்டே இருந்தவளை இவனின் குரலில் அப்படியே உறைந்து நின்றவளின் வெற்று இடை அவனின் கண்ணிற்கு விருந்தாகி போனது, நிமிடத்தில் நடந்த நிகழ்வு அவனை பித்தம் கொள்ள செய்தது என்றால், வெக்கம் என்றால் என்ன? என்று கேட்பவளை இன்று முதல் முறையாக உணர வைத்தது அந்த நொடி,
அவனை பார்த்தும் வேகமாக குளியலறை நோக்கி ஓட்டினாள் சுடர். “அவரை பார்த்ததும் உள்ளே போனவ எதுக்கு திரும்பவும் அவரு தூங்கும் போது என்ன நடந்திட போகுது, தாவணி கட்ட போனியே, பாரு இப்ப எப்படி அவரு முன்னாடி நின்னு இருக்க!” என்று சடுதியில் குங்குமமாக சிவந்த முகத்தை கண்ணாடியில் பார்த்து கேட்டு கொண்டு இருந்தாள் சுடர்.
அவளின் செயலில் சந்தோசத்தை அனுபவித்தவன், எழுந்து வெளியே வந்தான் அகிலன். “ஐயோ பிடிங்க பிடிங்க.. ஓடுது பிடிங்க” என்று கத்தி கொண்டு இருந்த சாந்தாவை பார்த்து கொண்டே வந்தவனை முறைத்து பார்த்தான் கபிலன்.
“இவர் பெரிய மைனர் இவருக்கு என்னோட சுடரை கட்டி வைச்சதே தப்பு, இதுல நாட்டுக்கோழி கொழம்புக் கேக்குதோ!” என்று சொன்னவனை “என்ன செய்யலாம் போனா போது சின்ன பையன் பார்த்தா, வாய் ரொம்ப நீளுது” என்று நினைத்தவன் சட்டென்று அவனது இடையில் இருந்த டவுசரை வேகமாக இழுத்து விட்டு இருந்தான்.
“டேய் என்னடா பண்ற, ஒரு
ஆம்பிளையா இருந்துட்டு இன்னொரு ஆம்பிளை டவுசர் இழுக்கிற, ச்சீ வெக்கமாக இல்ல!” என கோபமாக கேட்டான் கபிலன்.
“எனக்கு எதுக்குடா வெக்கம் இன்னொரு முறை என்னோட முறை பொண்ணு, நுரை பொண்ணு சொல்லி பாரு, சொல்ற அந்த வாயை கோணி தைக்கிற ஊசியால் தச்சிடுவேன் பார்த்துக்க” அதே கோபத்துடன் மிரட்டினான் அகில்.
“அய்யோ அப்பா இவரு மிரட்டினா நாங்க பயந்துடுவோமா!, அதுக்கு வேற ஆளை பாரு” அவனும் விடாது அவனிடம் மல்லுக்கு நின்றான்.
“ஒழுங்கா ஓடிடு இல்லை அப்புறம் ஜட்டில கையை வைச்சிடுவேன் பார்த்துக்க!” சொல்லியே கையை அவன் புறம் எடுத்து செல்ல,
“டவுசர் போட்டபடியே இன்னிக்கு தப்பிச்சிட்ட, இன்னொரு நாள் எனக்கு அமையும் போது உன்னை பார்த்துக்கிறேன்” என்று சொல்லி கொண்டே ஓடினான் கபிலன்.
“என்ன ஆச்சி சித்தி! எதுக்கு இப்படி கத்திகிட்டு இருக்கீங்க,” என கேட்டு கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்றவன், அங்கே ஆளுக்கு ஒரு
மூலையாக கோழியை பிடிக்கும் ஆட்களை பார்த்து கொண்டே நின்றான்.
“அது ஒன்னும் இல்லை மாப்பிள்ளை இன்னிக்கு உங்களுக்கு நாட்டுக்கோழி கொழம்பு செய்யலாம் சொல்லி, கோழியை மூடி வைச்சி இருந்தேன், இந்த கபிலன் வந்து திறந்து விட்டுடான், எப்பவும் எந்த வேலையும் செய்யாதவன், இன்னிக்கு தூங்கி எழுந்தும் கோழியை திறத்து விட்டுட்டான்”
என்றாள்.
“பரவலை விடுங்க ஒன்னும் பிரச்சனை இல்லை, வழக்கமாக செய்யுற சமையலே போதும்” என்று சொல்லி அனுப்பி வைத்தான் அவளை.
மீண்டும் சுடரின் அறைக்கு வந்தவன் சற்று முன் நடந்த நிகழ்வினை நினைத்து சிறு புன்னகை வந்து ஒட்டி கொண்டது அவனுக்கு,
கார்குழலின் ஈரத்தை துடைத்து கொண்டு இருந்தவளை நெருங்கி அந்த டவலை வாங்கி துடைத்து கொண்டு இருந்தவன், முதுகில் இருந்த முடியை அவளின் முன்புறம்
எடுத்துவிட்டு, ஜாக்கெட் மறைக்காமல் இருக்கும் அவளின் முதுகில் சின்னதாக ஒரு முத்தம் வைத்ததும் சட்டென்று அவன் புறம் திரும்பி, அவனை தீயென முறைத்து பார்த்தாள்.
அதில் சர்வமும் அடங்கி போய் “டா..டவல் அதை வாங்கலாம் வந்தேன்” என்று சொல்லி அவளின் ஈர டவலை எடுத்து கொண்டு குளியலறை நோக்கி ஓடியிருந்தான்.
“எப்படி சுடர் அவன் கைபட்டதும் அடங்கிப்போற, இது நல்லதுக்கு இல்ல!” என்று தனக்கு தானே கடிந்துகொண்டவள் வெளியே சென்று இருந்தாள்.
அவளின் பார்வையை எதிர்கொண்டவனின் உடல்முழுவதும் நடுக்கம் கொண்டு இருந்ததை, தண்ணீர் குடித்து சமன் செய்துகொண்டு இருந்தான் அகிலன்.
“ப்பா என்ன பார்வைடா அது! இப்படி எரிக்குது” என்று பேசியவன் குளித்து முடித்து ரெடியாகிவந்தவன், சுடரை தேடினான்.
“என்ன வீட்டுல யாரும் காணோம்! எங்கே போயிருக்காங்க!” கேட்டவனுக்கு வந்த பதிலோ, அவள் தற்காப்பு கலைசொல்லி கொடுக்கும் இடத்திற்கு சென்று இருக்கிறாள் என்று. அதில் குஷியானவனோ, “நானும் அங்கே போயிட்டு
வந்துடுறேன்” என்ற தகவலை மட்டும் கொடுத்து விட்டு, ஆசையாக கிளம்பி விட்டான், அவளை முதல் முறையாக பார்த்த, அன்றைய நாட்களை சுற்றி வர, உற்சாகம் கூடி போனது அவனுக்கு,
அகில் கார பார்த்தும் அவனுடன், வந்து ஒட்டி கொண்டு, “இங்க பாருங்க அண்ணா உங்களுக்கு பாதுகாப்பு தரவேண்டியது என்னோட பொறுப்பு!” என்று சொன்ன ரகுவை பார்த்த அகில், “நான் என்னோட பொண்டாட்டியை பார்க்க போறேன், அங்கே எனக்கு எதுக்கு பாதுகாப்பு!” என அவனை விநோதமாக பார்த்தான்.
“அதான் சொல்றேனே, அவ கிட்ட இருந்து, எங்க ஓனர் பத்திரமா காப்பாத்தி, நாளைக்கு காலேஜ் கூட்டிகிட்டு போறது தான், என்னோட முதல் முக்கிய வேலை!” என்றான்.
“ச்சீ வாயை மூடு, என்னோட சுடர் என்னோட காதல், அவளை வம்பு இழுக்கையில்லை என்றால் உனக்கு தூக்கம் வராதுல!,” காதல் பொங்க பேசியவனை, “நீயெல்லாம் பட்டா தான், சரிபட்டு வருவ!” என்று நினைத்தவன், காரில் பாட்டை ஒலிக்க செய்து கேட்டு கொண்டு வந்தான்,
இதே ஊரில் முதல் முறையாக அவளை பார்த்த அந்த நாள்களின் நினைவு தேனாக இனித்தது,
என்னை தாண்டி தான் போகனும், என்று சொல்லும் அளவிற்கு ஓங்கி உயர்ந்த மலைகள்!, திரும்பியும் ஒருமுறை என்னை பார்!. என்று ‘கண்களை அதிசியக்கும் அதன் தோற்றம், சிறிது நேரம் பயணத்தில் சாலையின் இரு புறமும்,பச்சை நிறத்தில் போர்வை போத்திய மாதிரி விளைந்து நிற்கும் பயிர்கள் நிறைந்த வயல்கள், குளங்களும் அதிலே பூத்து குலுங்கும் தாமரைக்களும், ஒரு தாமரையில் இருந்து மற்றோரு தாமரைக்கும் இடையில் துள்ளி குதிக்கும் மீன்களும், சமயம் பார்த்து அவற்றை வேட்டையாடும் மீன் கொத்திகளும்,
நானும் இந்த இடத்தில் தான் இருக்கிறேன்! என்று
தூரத்தே கேட்ட கிளிகளின் சத்தம்,என்னையும் பார்! என்று, அழைக்கும் வெண்மை நிற நாரைகளின் கூட்டமும்’ இவ்வளவும் தன்னுள் கொண்டாலும், இன்றைய பரபரப்பான வாழ்க்கை சுழலுக்கு ஏற்றவாறு வளர்ச்சி அடைந்து இருந்தது, அக்கிராமம்.
என்ன தான்! வளர்ச்சி அடைந்து இருந்தாலும், கட்டுபாடு நிறைந்த ஊர், ‘பிளாஸ்டிக் இல்லா கிராமம்’, இயற்கையை பாதுகாக்கும் ஊரின் ஒற்றுமை, இவற்றை கட்டிகாப்பது ஒருத்தி..
அவளின் முயற்சியில் ‘தமிழக அரசின் தூய்மை கிராமம்’ என்ற விருது மூன்று முறை பெற்று உள்ளது. அதற்கு அவள் எடுத்த மெனக்கெடல் கொஞ்சம் நஞ்சம் இல்லை,
இந்த விருது முதன் முதலில் பெறும் வரை அவள், சந்திக்காத இன்னல்களே இல்லை என்று சொல்லலாம்!, பிறகு அவளுக்கு இந்த ஊரே துணை,
அவள் பேச்சுக்கு மறுவார்த்தை இல்லை, பஞ்சாயத்து கூட்டத்தில்.
பஞ்சாயத்து தலைவர் அவளது தாய்மாமன் ஆயிற்றே, வளர்த்தவர் எட்டு அடி என்றாள், அவரால் வளர்ந்தவள் பதினாறு அடி.
சுடர்கொடி அவளின் பெயர், இருபத்தி இரண்டு வயது நிறைந்த பெண்ணவள், தான் படித்த
கல்லூரியிலே அலுவலக வேலை செய்துகொண்டு இருக்கிறாள்,
நிமிர்ந்த நடையும், கண்களில் உள்ள கூர்மையும், எதிரே நின்று
பேசுபவர் தான், அந்த பார்வையின் தாக்கம் தாளது தரையை பார்ப்பார்.
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இது எல்லாம் எந்த கடையில் விற்கும் என்று கேட்பவள்,
ஜாதி, மதம் என்ற பாகுபாடு பார்க்காமல் அனைவரையும் உறவு முறை வைத்து கூப்பிட கூடியவள்
‘தந்தை இல்லாதவள், தாய் மாமனின் அரவணைப்பில் வளர்ந்தவள்,மாமன் விருத்தாச்சலம்,அத்தை சாந்தா, அவர்களின் ஒரே மகன் ஆறாவது படிக்கும் கபிலன்.
எல்லோருமே ஒரே குடும்பமாய் வாழ்கின்றனர்.’
தற்காப்பு கலை முதல், தைரியமுட்டும் அனைத்து
செயல்பாடுகளில், அவளை சேர்த்து மெருகேற்றி உள்ளார் விருத்தாச்சலம்.
“ஊர் முழுக்க இவ என்னோட அடுத்த வாரிசு” என்று பெருமையோடும், கர்வத்தோடும் சொல்வார்.
சென்னையில் இருந்து, புறநகர் பகுதியில் உள்ளது. அரை மணி நேரம், பயணம் தான் இந்த கிராமத்தை அடைய,
இந்த இயற்கையில் தன்னையை தொலைத்தவன்,
“என்னடா இது! சென்னை பக்கத்துல இப்படி ஒரு கிராமம் நம்பவே! முடியவில்லை,
‘முதல்ல இங்க ஒரு இடம் வாங்கி வீடு கட்டணும்,’
அவன் சொல்லும் போது கூட நம்பல, ஏதோ பொறந்த ஊரை பெருசு படுத்தி சொல்றான் நினைச்சேன்,”
என்றவன் தனது மொபைலை எடுத்து தனது நண்பனுக்கு அழைப்பை விடுத்தவன்.
“டேய் மச்சான் உங்க ஊருக்கு வந்துட்டேன் டா,
ஆனா வழி தெரியல டா, டேய்… மச்சான் ஹலோ.. ஹலோ.. டேய் கேட்குதா?.”
ச்ச என்னது இது.! டவர் சுத்தமா கிடைக்கல, யாரையாவது தான் கேக்கணும்” என்றவன் காரினை சிறிது தூரம் ஓட்டி சென்றான் அகிலன்.
அகிலன் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவன், தந்தை செய்யும் பல தொழிலில் தன்னையும் ஈடுபடுத்தி கொண்டான்.இருந்தாலும் கல்லூரி நிர்வாகமே அவனக்கு முதன்மையாக இருக்க வேண்டும் என்று, அதற்காக தன்னை தயார் படுத்தி கொண்டு இருக்கிறான். அதற்கான நாளும் வந்து விட்டது.
இன்னும் இரண்டு நாட்களில் கல்லூரியின் மொத்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள போகிறான்.
சிறிய வயது என்றாலும், திறமை வாய்ந்தவன், ஆனால் கொஞ்சம் கூச்ச சுபாவமும், யாரிடமும் எளிதில் பேச தெரியாதவன், யாராவது பேசினாள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லி நகர்ந்து விடுவான்.
தன்னை நெருங்கி பழகியவர்களுக்கு மட்டுமே, முழுவதுமாக வெளிபடுத்துவான், பிடித்தவர்கள் என்ன வேண்டும் என்று கேட்கும் முன்னமே செய்து கொடுத்து முடித்து இன்ப அதிர்ச்சி கொடுப்பவன்.
‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று இருப்பவன், நண்பன் ஒருவன் திருமணத்திற்கு வருவதாக சொன்னவன், முக்கியமான வேலை அதே நாளில் இருப்பதால் முந்தைய நாளே அவனை தேடி, அவனது சொந்த ஊருக்கே வந்து விட்டான்.
காரை விட்டு இறங்கியவன், “என்னடா இது! எனக்கு வந்த சோதனை? யாராவது ஆம்பளைங்க இருந்தா நல்லா இருந்து இருக்கும்!,
சரி விடு அகிலா பயப்படாத!, உன்னால முடியும்” என்று தனக்கு தானே பேசி தைரியம் வரவழைத்து கொண்டு நடந்தான்.
சற்று தூரத்தில் பச்சை நிறத்தில் பாவாடையும், அதே நிறத்தில் பிளவுஸ், இவற்றை எடுத்து காண்பிக்கும் வகையில் இளஞ்சிவப்பு தாவணியும் உடுத்தி இருந்த பெண்ணை நோக்கி நடக்க ஆரம்பித்தது இருந்தான்.
‘கிட்ட நடக்க…நடக்க ஒருவித படபடப்பும்,நடுக்கமும் ஒட்டி கொண்டது அகிலனுக்கு’!.
இவனைத் பதர வைத்தவலோ, ‘பாவாடையை எடுத்து இடுப்பில் சொருகி, ஒரு கையில் நோட்டும், மறு கையில் பிளாக்கியை தடவி கொடுத்து கொண்டும் இருந்தாள்.