• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடர் 19

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
மகேந்திரன் சந்தோசமாக இருப்பதை அவர் வாயாலே கேட்ட பிறகு, அவரை எப்படியாவது நிம்மதி இல்லாமல் அலைவதை பார்த்துவிட வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்தாள் சுடர்.

அடிபட்ட வேங்கையின் உறுமல் போலவே அவளின் எண்ணங்கள் அலைந்து கொண்டு இருந்தது, “எப்படி எப்படி!” அவனை பழிவாங்குவது என்று மனதிலே கத்தியவள் எப்போது தூங்கினாள் என்று தெரியாமல் தூங்கி போனாள், காலையில் அகிலனுக்கு முன்னாலே எழுந்து கொள்பவள் அவன் குளித்து முடித்து கிட்ட தட்ட காலேஜ் செல்ல சாப்பிட வேண்டியது தான் பாக்கி என மொத்தமாக ரெடியாகிய பின்னரே எழுப்பலாமா வேண்டாமா தயங்கியே அவளை எழுப்பினான், அப்போது தான் அவளுடனே ஒன்றாக காரில் செல்லும் போது அவளை பார்த்து கொண்டும் ஏதாவது பேசவும் முடியும் அதற்காகவே அவளை வேற வழியே இல்லாமல் எழுப்பினான். “சுடர் சுடர் எழுந்திருக்க! ரொம்பவே லேட் ஆகிடுச்சு” என்று மெதுவாக எழுப்பி பார்த்தவன், அவள் எழுந்து கொள்வது போல தெரியவில்லை என்றதும் அவளை தொட்டு உலுக்கி “சுடர் எழுந்திருங்க நேரம் ஆச்சி நீங்க காலேஜ்க்கு வரலையா!” என்று கேட்டவனை விழித்திறந்து பார்த்தாள், சிறிது நேரம் அவனையே பார்த்தவள் அவனது தொடுகையை உணர்ந்ததும் அதைத் அவனிடம் வெளிப்படுத்தாமல் ரசித்தவள் கண்விழித்து அவனை பார்த்து “கொஞ்சம் நேரத்துல ரெடியாகிட்டு வந்துடுறேன்!” என்று சொன்னவள் குளியலறை நோக்கி நடக்க,

“டவலை கொண்டு போக மறந்துடாதீங்க!” குறும்பாக பேசி சிரித்தவனை முறைத்து பார்த்து விட்டு அவன் சொல்லியது போலவே டவலை மறந்து தான் போனாள், திரும்பி வந்து டவலை எடுத்ததும் வாய் விட்டே சிரித்தான். அவள் அவனை கண்டு கொள்ளாது நேராக குளியலறை சென்று கதவடைத்து கொண்டாள், அவள் சென்ற திசையை பார்த்து சிரித்தவன் “ஐய்யோ எவ்வளவு அழகு கோவமா பார்க்கும் போதே இப்படி கொல்றீங்க! சுடர், அப்படியே சிரித்து பேசினா எப்படி இருக்கும் ப்பா!” என்று சொன்னவன் கண்ணாடியை பார்த்து தலையை உலுக்கி சிரித்தான்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு “ஹான் உள்ளே வாங்க” என்று சொன்னவனிடம் காபியை கொடுத்த சகு, “மெத்தையில் இருந்த துணிகளை துவைக்க எடுத்திட்டு போகவா” என்று கேட்டு நின்றாள்.

“எடுத்துட்டு போங்க அக்கா” என்று அவன் சொன்னதும், மெத்தையில் இருந்த பெட்கவர், தலையணை கவர் என்று அனைத்தையும் எடுக்கும் போது ஒரு புகைப்படம் பார்த்தாள், “தம்பி இது தலையணையில் அடியில் இருந்தது” என சொல்லி அவன் கையில் கொடுத்து விட்டு கிளம்பிவிட்டாள்.

அவனோ போனில் “செல்வா வந்திட்டியா! என்று தீவிரமாக பேசி கொண்டு இருக்க, சகு சொன்னது எதுவும் தலையில் ஏறவில்லை போலும், சிறியதாக தலை அசைத்தவன் அவள் கொடுத்ததை திருப்பியும் பார்க்காமல், அப்படியே தனது அலமாரியில் வைத்து விட்டு வெளியே வந்து பேசி கொண்டு இருந்தான்,

குளித்து முடித்து வந்தவளும் அவசர அவசரமாக தயாராகி கீழே வந்து “போகலாம்” என்று சுற்றி யார் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் அகிலனை மட்டும் பார்த்து சொன்னாள். அவனோ அவளை பார்த்து “போகலாம் அதுக்கு முன்னாடி சாப்பிட்டு போகலாம்” என்று அவளை அமர சொல்லியவன் தனது அருகில் அமர்ந்து சாப்பிடும் ஆணை காட்டி “இவன் பேரு செல்வம் என்னோட ஃப்ரெண்ட் நம்ம கல்யாணத்து வர முடியாமல் போனதால், இப்ப வந்து இருக்கான்” சொன்னதும் இருவரும் புன்னகையாக தலையை அசைத்து கொண்டனர். சாப்பிட்டு முடித்ததும் இருவருக்கும் வாங்கிய பரிசு பொருளை அவனே பிரித்து இருவர் கையிலும் கொடுத்து விட்டு வீடியோ எடுக்க போனை ஆன் செய்து “ம்ம் இரண்டு பேரும் போட்டு விடுங்க!” என்று அவன் சொல்ல, சுடர் என்று எழுதிய மோதிரம் அவளிடமும், அகிலன் என்று எழுதிய மோதிரம் இவனிடமும் கொடுத்து இருந்ததை இருவரும் ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தனர், அகிலன் மோதிர விரலில் இருந்த மோதிரத்தை கழற்றி சுடரிடம் தனது கையை நீட்டினான், அவள் பெயரை வருடி பார்த்தவள் அகிலன் கையில் போட்டு விட்டாள். அவள் மோதிரத்தை போட்டு விட்டதும் அதை பார்த்து கொண்டு இருக்க, “டேய் மச்சான் சீக்கிரம் போட்டு விடுடா சிஸ்டர் வெயிட்டிங்” என்றான் செல்வா.

அவனோ ஒருபடி முன்னே சென்று, சுடரின் முன்னால் ஒரு கால் முட்டி போட்டு அவளின் கையை தர சொல்லி தனது கையை நீட்டினான் அவளும் தனது கையை நீட்ட அகிலன் என்று அவனது பெயரை எழுதிய மோதிரத்தை போடும் போது இருவர் மேலும் பூக்கள் விழுந்து கொண்டு இருந்தது, அந்த நிமிடத்தை இருவரும் ரசித்து கொண்டும், அதை அனுபவித்து கொண்டும் தான் இருந்தார்கள்.

பூக்களை தூவிய நபரை திரும்பி பார்த்தனர் இருவரும், வேறு யாரும் இல்லை அவனின் பெற்றோரும் சகுவும் தான், இருவரை பார்த்து சிரித்தவள் அடுத்து இருந்த தனது மாமனாரை பார்த்ததும் இத்தனை நேரம் இருந்த சந்தோசம் முழுவதுமாக வடிந்து விட, பொய்யாக அவரை பார்த்து சிரித்து வைத்தாள். செல்வத்தை ஓடி சென்று கட்டி கொண்டவனோ “டேய் மச்சான் எனக்கு கிடைத்த வெட்டிங் கிஃப்ட் ல இது தான் தி பெஸ்ட்” என்று அவள் போட்ட மோதிரத்தை தொட்டு பார்த்தான், “ஏய் அப்புறம் அந்த வீடியோ எனக்கு அனுப்பி வை” என்று சொன்னவன் “செல்வத்தின் காதின் அருகே அம்மா உன்னிடம் பேசணும் சொன்னாங்க அவங்க கிட்ட பேசிட்டு கிளம்பு நாங்க கிளம்புறோம்” என்று சொன்னவன் சுடருடன் கிளம்பி விட்டான், அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில் மகேந்திரனும் கிளம்பி விட,

எல்லோரும் கிளம்பிய பிறகு “ஹலோ அம்மா நான் செல்வம் உங்க பையனுக்கு ஃப்ரெண்ட் மட்டும் தானே தெரியும், நீங்க ஒருத்தரை கண்டு பிடிக்கணும் சொல்லி இருந்தீங்க தானே! அவங்களை கண்டு பிடிக்க சொல்லி அந்த வேலையை எனக்கு கொடுத்து இருக்கான், நீங்க சொல்வதை பொறுத்து தான் அவங்க தேட எனக்கு உதவியா இருக்கும்” என்று செல்வம் சொன்னதும்,

“சரி சொல்றேன்” என்று சொன்னவள் சகுவை அழைத்து “நீ எங்களுக்கு ஒரு டீ எடுத்துட்டு வா அந்த ரூமில் இருக்கிறோம்” என்று லைப்ரரியை காட்டி சொன்னாள்,

அவரின் பின்னாலே சென்றவன் அமைதியாக அமர்ந்து கொண்டு இருந்த கல்யாணி திடீரென அழுகவும் பதறி எழுந்து வந்து “அம்மா என்னாச்சி எதுக்கு அழுக்கீறிங்க!” என்று சொன்னவன் வெளியே வந்து தண்ணிரை கேக்க தண்ணீரோடு டீயை கொடுத்து அனுப்பினாள் சகு.

சிலமணி நேரம் பேசியவர்களில் முதலில் வெளியே வந்தது என்னவோ செல்வா தான் நேராக சகுவிடம் வந்தவன் “அம்மா ரொம்ப டிஸ்டர்ப் ஹா இருக்காங்க அவங்களை யாரும் தொந்தரவு பண்ணாமல் பார்த்துக்குங்க” என்று சொன்னவன் கிளம்பி விட, கல்யாணி இருந்த அறையை திறந்து பார்க்க, மேஜையில் தலையை வைத்து படுத்தவள் கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த சகுவோ பதறி அவளிடம் செல்ல முற்பட செல்வம் சொல்லியது வந்து போகவே அமைதியாக கதவை மூடி விட்டு சென்று விட்டாள்.

தனது காரை இயக்கியவன் கல்யாணி இவ்வளவு நேரமும் பேசியதை ஒலிக்க விட்டு வண்டியை ஓட்டி கொண்டு இருந்தான், வழக்கமாக தன்னிடம் வருபவர் சொல்வதை எழுதியோ அல்லது ஆடியோ ரெக்கார்ட் செய்து, சந்தேகம் எழும் போது திருப்பி ஒருமுறை நினைவு கூறவே இப்படி ஒரு வழக்கம் கொண்டு இருந்தான் செல்வம். அப்படி தான் கல்யாணி பேசும் போது அவளை பேசவிட்டு பதிவு செய்து கொண்டே கேட்டு கொண்டு இருந்தான்.

“எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு ம(றை)றுக்கபட்ட ஒரு வெளிவராத முகம் இருக்க தான் செய்யுது!” என்று சொன்னவன் தனது அலுவலகம் வந்து, அகி கொடுத்த புகைபடத்தை பார்த்து “நீங்க பாவம் தான்!” என்று சொன்னவன் பெரு மூச்சோடு அவர்களை கண்டு பிடிக்க என்ன வழி என்று யோசித்து கொண்டு இருந்தான்.


சுடரை பார்த்து “இந்த மோதிரம் நல்லா இருக்கு இல்ல!” என்று ஆசையாக சொல்லியவனை பார்த்து 'ம்ம்' என்று மெல்லியதாக சிரித்து தலையை அசைத்தாள். அவனிடம் பேச்சு கொடுக்க விரும்பாமல் கையில் இருந்த ஃபைல் எடுத்து தீவிரமாக பார்ப்பது போல அதையே பார்த்து கொண்டு இருந்தவள் கவனம் முழுக்கவும் மகேந்திரனை சுற்றி தான் இருந்தது, இவள் இப்படி தான் என்று தெரிந்து கொண்டவன் தானே!, அவன் சுடர் ஃபைல் பார்க்க ஆரம்பித்ததும் பாட்டு பாடி கொண்டு இருந்ததை கூட ஆஃப் செய்து விட்டு, வழக்கம் போல் அவளை பார்த்து ரசிப்பதும் ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுவதும் என்று தனது வேலையை பார்த்து கொண்டு இருந்தான்.

அவன் பார்க்காத போது ஓர கண்ணால் அவனை பார்த்து ரசிப்பதும், அவன் தலை இவள் பக்கம் லேசாக திரும்பும் போது ஃபைல் பார்த்து கொண்டும் வந்தாள். தன்னையும் மீறி அவனின் மேல் உருவாகும் காதலை கட்டுபடுத்த முடியாமல் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தாள். காலேஜ் வந்ததும் வழக்கமாக சொல்லும் நன்றியை சொல்லிவிட்டு அவள் கிளம்ப, அவளையும் அவள் அணிவித்த மோதிரத்தையும் தொட்டு பார்த்து தனது அலுவலகம் சென்றான்.

தனது அறைக்கு வந்தவள் தேடியது என்னவோ தீபாவை தான், அவள் தானே இவளின் ஒரே வடிகால் மனம் திறந்து பேச கடவுளா அனுப்பிய ஒரு ஜீவன் இவள் தானே! அலுவலக அறையின் கதவை திறந்தவள் விழிகள் அறையை சுற்றி சுழல விட்டவள், அலமாரியில் இருந்து ஒரு ஃபைலை எடுக்கும் தீபாவை கண்டதும் இதோ வந்து விடுவேன் என்று கண்ணீர் குளம் கட்டி நின்றது. அவளை பார்த்ததும் ஓடி சென்றவள் அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு செல்ல,

“ஹே இருடி இந்த ஃபைல் என்னோட டேபிளில் வைச்சிட்டு வரேன்” என்று சொன்னவள் வார்த்தை தான் காற்றில் காணாமல் போனது, அவளை இழுத்து கொண்டு வந்தவள் கிரவுண்டில் இருக்கும் ஒரு மரத்தடியின் பெஞ்சில் அவளை அமர வைத்து அவள் மடி மீது தலையை வைத்து கொண்டாள்,

“ஹே என்னடி ஆச்சி எதுக்கு இப்படி சோகமா படுத்துட்டு இருக்க!” என்று அவளை எழுப்ப அவளோ மூக்கை உறிஞ்சி கொண்டே எழுந்து கொண்டாள். “என்னடி சுடர் அழுதியா! எதுக்குடி?, நீ அழுகிற அளவுக்கு அப்படி எதுமே நடக்கலையே! உனக்கு பிடித்த மாதிரி தானே உங்களுடைய வெட்டிங் பார்ட்டியில் நடந்தது அப்புறம் எதுக்கு இந்த அழுகை” என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டு கேட்டாள் தீபா.
 
  • Like
Reactions: shasri

சுப்புலட்சுமி

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 4, 2025
70
50
18
Chennai
so cute moment 😍 waiting for the fb
இப்போதைக்கு சுடர் அவனை காலேஜில் பார்த்தது தான் வரும் பழிவாங்க காரணமான கதை கொஞ்ச நாள் கழித்து தான் வரும்🙏♥️